Wednesday, September 24, 2025

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி -பிரதோஷக்குழுயாத்ரா 14.9.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி

திருஆவினன்குடி - குழந்தைவேலாயுத சுவாமி
திரு என்ற இலக்குமி தேவியும், ஆ என்ற காமதேனுவும், இனன் என்ற சூரிய பகவானும், இத்தலத்து முருகப்பெருமானை வழிபட்டமையால் திருஆஇனன்குடி என்று பெயா் பெற்றதாக சொல்லப்படுகிறது.

சங்க காலத்தில் இந்த ஊர் திருவாவினன்குடி என்றே அழைக்கப்பட்டதாகவும், மாம்பழத்திற்காக கோபம் கொண்டு வந்தமர்ந்த முருகப்பெருமானை சிவனும், பார்வதியும், இத்திருத்தலத்திற்கு வந்து ஞானப் "பழம் நீ" என்று முருகனுக்கு சூட்டிய பெயரே, நாளடைவில் மருவி பழநி என்று ஊர் பெயர் வர காரணமானதாக தல புராணம் கூறுகின்றது.

அமைவிடம்

இத்திருத்தலம் பழநி மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில், பழநி மலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் வடகிழக்கு திசையில் சரவணப் பொய்கை உள்ளது. இத்தலத்தில் உள்ள பெருமானை வழிபட்ட பின்னரே, மலைக்கோவிலுக்கு சென்று தண்டாயுதபாணித் தெய்வத்தை வழிபடுவது மரபு.

மூன்றாம் படைவீடு விளக்கம்

மூன்றாம் படைவீடு என்பது பழநி மலைக்கோவிலா அல்லது திருவாவினன்குடி திருத்தலமா என்பதில் பலருக்கும் மிகப்பெரிய சந்தேகம் உள்ளது.

திருவாவினன்குடி கோவிலையே நக்கீரர் பெருமான், திருமுருகாற்றுப்படையிலே முருகனின் மூன்றாம் படைவீடாக

"தாஇல் கொள்கை மடந்தையொடு சில்நாள் ஆவி னன்குடி அசைதலும் உரியன்: அதாஅன்று"

அதாவது, குற்றம் இல்லாத கோட்பாடுடன், யாவர்க்கும் நன்மையே விளைவிக்கும் உயர்ந்த கொள்கை உடைய தன் துணைவியோடு சிலகாலம் ஆவினன்குடியில் தங்கியிருப்பதற்கு உரிமை உடையவன் என்று போற்றி பாடியுள்ளார் என்பதாக சொல்லப்படுகிறது.

கோபம் கொண்டு வந்து அமர்ந்த இடமான பழநி மலைக்கோவிலில் தண்டாயுதபாணித் தெய்வமாகவும், திருவாவினன்குடி திருத்தலத்தில் மயில் மீது அமர்ந்த குழந்தை வேலாயுத சுவாமியாகவும் காட்சியளிக்கிறார். சங்க காலத்தில் இந்த இரண்டு திருத்தலங்களையும் சேர்த்தே இந்த ஊரின் பெயர் திருவாவினன்குடி என்று இருந்ததாக புராணங்கள் சொல்கின்றன.

ஆக நக்கீரர் பெருமகனார் பாடிய திருத்தலம் பழநி மலைக்கோவில் மற்றும் திருவாவினன்குடி கோவில் இரண்டையும் உள்ளடக்கிய ஒரு தலமாகவே கொள்ளலாம். எனவே மலைக்கோவில் மற்றும் திருவாவினன்குடி திருத்தலம் இரண்டையுமே மூன்றாம் படைவீடாகக் கொள்ள வேண்டும்.

ஆனால் சிலகாலம் முன்பு வரை இக்கோவிலின் சன்னதிக்கு வெளியே மூன்றாம் படைவீடு என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் அப்பெயர்ப்பலகை நீக்கப்பட்டுவிட்டது. இன்றும் பழநி மலை அடிவாரத்தில் படிக்கட்டு நடைபாதை முடிந்து வெளியே வரும் இடத்தில் அரசாங்கத்தால் மூன்றாம் படைவீடு திருவாவினன்குடி செல்லும் வழி என்று வழிகாட்டும் பலகை வைக்கப்பட்டுள்ளது

அறுபடை வீடுகளில் சிறப்பாக கொண்டாடப்படும் பங்குனி உத்திரத் திருவிழா, திருவாவினன்குடி திருத்தலத்திலே கொடியேற்றத்துடன், திருக்கல்யாணம் மற்றும் தேர் வடம் பிடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தால் நடத்தப்படுகின்றன

பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோவிலை நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் மறு கட்டுமானம் செய்தும், புதிதாக மண்டபங்கள், பிரகாரம், ராஜ கோபுரம் அமைத்தும் பெரிய கற்றளியாக எழுப்பியுள்ளனர். 1919 சூன் 26 இல் குடமுழுக்கு இடம்பெற்றது.

அருணகிரியால் திருப்புகழ்பாடப்பெற்றதலம்

பழனி மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் முதலில் திருஆவினன்குடி கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.

இது பழமையான கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு முன்பே தோன்றியதாக நம்பப்படுகிறது.

இங்குள்ள முருகப்பெருமான் குழந்தை வேலாயுதசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

 பழனி மலைக்கோயிலின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

சங்க காலத்தில் இந்த ஊர் திருஆவினன்குடி என்று அழைக்கப்பட்டது.

 அகத்தியர் இங்கு தவம் செய்து முருகனிடம் தமிழ் இலக்கணம் கற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த தகவல்கள் திருஆவினன்குடி கோயிலின் முக்கியத்துவத்தையும் வரலாற்று சிறப்பையும் விளக்குகின்றன.

நன்றி 🙏வலைதளம்🌐
#மீள் தரிசனம் 14.09.25 #சுப்ராம்தரிசனம்
#பிரதோஷக்குழுயாத்ரா 14.9.25
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மிகபாரதம்அகிலத்தின்சிகரம்

பழனி - தண்டாயுதபானி சுவாமி ஆலயம் - பிரதோஷக்குழு யாத்ரா 14.9.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

பழனி - தண்டாயுதபானி சுவாமி
பழனி
பழனி தண்டாயுதபாணி சுவாமி ஆலயம்.
14.9.25 ல் மீண்டும் தரிசிக்க வாய்ப்பு.
Cell phone, Bag , காலனிகள் வைக்க இடவசதி அடிவாரத்தில் உள்ளது.
ரோப்கார் மிகவும் கூட்டம் என்றார்கள்; நாங்கள் மலை ரயில் மூலம் சென்றோம்.
மலைரயில் முதியோருக்கு 50/-
பொதுமக்கள் 10 /- பொதுமக்கள் சிறப்பு 60/- 3 வித கட்டண விகிதம்..
1 மணி நேரம் காத்திருப்பு (முதியோர்)
மதியம் 2.30 - 3.30 காத்திருந்து மலைரயில் மூலம் 4.30 அடைந்தோம்.
மலை மீது எங்கும் கூட்டம் மிகவும் குறைவு.
உடனடியாக தரிசனம்.
சுவாமி தரிசனம் முடித்து படிவழி இறங்கி
ஆவினன்குடி சென்று தரிசனம்.
மலைப்பாதை, மற்றும் முழுவதும் சுத்தமாக காணப்படுகிறது. நிறைய வசதிகள் செய்து வருகிறார்கள்.
மலைப்பகுதி முழுதும் இலவச பேட்டரி கார் வசதி பக்தர்களுக்கு மிகவும் உபயோகமாக உள்ளது. நன்றி🙏
14.09.2025 ஞாயிறு
#சுப்ராம்தரிசனம்
#பிரதோஷக்குழுயாத்ரா 14.9.25

கடத்தூர் - குருவன் வலசு - கொங்கனேஸ்வரர்கொங்கனேஸ்வரர் ஆலயம் - குருவன் வலசு, கடத்தூர் (அருகில்) - பிரதோஷக்குழு யாத்ரா 14.9.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

கடத்தூர் - குருவன் வலசு - கொங்கனேஸ்வரர்
கொங்கனேஸ்வரர் ஆலயம் - குருவன் வலசு, கடத்தூர் (அருகில்)

கொங்கு மண்டலம் வரலாற்று சிறப்பு, கலை, பண்பாடு, நாகரிகம், இறையுணர்வு ஆகியவற்றைக் தன்னகத்தே கொண்ட வளம் கொழிக்கும் பழம் பெருமை வாய்ந்த பகுதியாகும். வைணவத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் நெல்லை மாவட்டத்தில் ஒன்பது இடங்களில் பெருமாளுக்கென அமைக்கப்பட்ட கோவில்கள் நவதிருப்பதி என அழைக்கப்படுகிறது. அதே போல்
கொங்கு மண்டலத்தில் சைவத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அமராவதி ஆற்றின் கரையோரம் கொழுமம் முதல் கரூர் வரை 11 சிவாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பயண அனுபவ குறிப்புகள்:
கடத்தூரில் உள்ள கொங்கனேஸ்வரர் 
ஆலயம் கிழக்குநோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது.

அமராவதி ஆறு அருகில் உள்ளது.
மிகவும் சிதலமடைந்து விட்டது.

கருவரை மட்டுமே மீதி உள்ளது. கற்றளியாக இருந்திருந்த ஆலயம், பெரிய வளாகத்தில் பெரிய ஆலயமாக இருந்திருக்க வேண்டும்.

ஆலயம் மீட்டெடுக்க / பராமரிக்க பக்தர்கள் பொதுமக்கள் உதவி அவசியம் தேவை. மிகப் பழமையான ஆலயம். சிதலமடைந்து விட்டாலும், குருக்களின் முயற்சியால் ஒரு காலம் நடைபெறுகிறது.

உள்ளூர் பக்தர்களும், சிவாலய மீட்பவர்களும் இணைந்து விட்டால், இந்த புராதான ஆலயத்தை மீட்டு விடலாம்.
இறையருள் துணையிருக்க வேண்டினோம்.

14.09.25 ஞாயிறு
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம் தொழுவது சாலவும் நன்று 
#ஆன்மிகபாரதம்அகிலத்தின்சிகரம்

கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோயில். - பிரதோஷக் குழு யாத்ரா 14.9.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

கடத்தூர் - அர்ச்சுனேஸ்வரர் ஆலயம்

கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோயில்.

திருப்பூர் மாவட்டம்  
 உடுமலைப் பேட்டையில் இருந்து சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவிலும்,
மடத்துக்குளம் / கணியூருக்கு அருகில் உள்ள கடத்தூர் என்னும் சிறிய ஊரில் அமராவதி ஆற்றங்கரையில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற 
பழனி திருத்தலம் அருகில் உள்ளது. 

உடுமலைப்பேட்டையிலிருந்து பேருந்துகளில் இந்தக் கோவிலுக்கு எளிதாக வந்து சேரலாம். 

கொங்கு மண்டலம் வரலாற்று சிறப்பு, கலை, பண்பாடு, நாகரிகம், இறையுணர்வு ஆகியவற்றைக் தன்னகத்தே கொண்ட வளம் கொழிக்கும் பழம் பெருமை வாய்ந்த பகுதியாகும். வைணவத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் நெல்லை மாவட்டத்தில் ஒன்பது இடங்களில் பெருமாளுக்கென அமைக்கப்பட்ட கோவில்கள் நவதிருப்பதி என அழைக்கப்படுகிறது. அதே போல் 

கொங்கு மண்டலத்தில் சைவத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அமராவதி ஆற்றின் கரையோரம் கொழுமம் முதல் கரூர் வரை 11 சிவாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 இவற்றில் கொழுமம் தாண்டேஸ்வரர் ஆலயம், காசிவிஸ்வநாதர் ஆலயம், கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 

இந்த அர்ஜூனேஸ்வரர் சிவன் கோவில் அர்ஜூனேஸ்வரர் சிவன் கோவில் கிபி 10ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட ஒரு பழமையான சிவன் கோயிலாகும். 

அர்ச்சுனன் தனது வில்லால் இறைவனை வழிபட்டதாகவும், அர்ச்சுனனுக்கு இறைவன் அருள் புரிந்ததாகவும் நம்பப்படுகிறது. 

வருடத்தின் சில நாட்களில், சூரிய ஒளி நேரடியாக கருவறைக்குள் விழும் அற்புதம் இங்கு நிகழ்கிறது. 
சூரிய ஒளி விழும் அதிசயம் ஆண்டு முழுவதும் அதிகாலையில் சூரிய ஒளி கோவில் அருகில் உள்ள அமராவதி ஆற்றின் நீரில் பட்டு பிரதிபலித்து சுயம்புவாய் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ள அர்ச்சுனேஸ்வரர் மீது படுவது சிறப்பம்சமாகும். சூரியன் திசை மாறும் காலங்களான உத்திராயணம், தட்சிணாயணம் காலங்களிலும் கூட சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. சோழர் கால கட்டிடக்கலையின் சிறப்பம்சமாகும்.

 மேலும் ஆற்று நீரில் படும் சூரிய ஒளி ஆற்றங் கரையைக் கடந்து மூன்று நிலை கோபுரம், நந்திதேவர், அர்த்தமண்டபம், மகாமண்டபம் வசந்த மண்டபம் கருவறை என சுமார் 200 அடிக்கும் மேலாக பயணம் செய்து சிவலிங்கத்தின் மீது விழுவது அதிசயிக்கத்தக்க நிகழ்வாகும். அதிகாலையில் சூரிய பகவான் தன்கிரகணங்களை அர்ச்சுனேஸ்வரர் மீது செலுத்தி வழிபடுவதால் இவ்விறைவனை வழிபடுவோருக்கு நிழல் கிரகங்களான ராகு, கேதுவின் தோஷங்கள் மற்றும் காலசர்ப்ப தோஷமும் நீங்குவதாக ஐதீகம். அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாத காலங்கள் தவிர மற்ற காலங்களில் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழும் அதிசயத்தை காண முடிகிறது. இந்த அதிசய நிகழ்வை காண சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மட்டுமல்லாமல் நெடுந்தொலைவில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கோயில் நேரம்
காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் நடைதிறந்திருக்கும். விஷேச தினங்களில் நடைதிறப்பு நேரம் மாறுபடும்.

பஞ்சபாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டு மறைந்து வாழ்ந்த காலத்தில், சிவ பூஜை செய்ய வேண்டி சுயம்புவாய் எழுந்தருளியவர் அர்ச்சுனேஸ்வரர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமான் சுயம்பு லிங்கமாக தோன்றி, விக்கிரம சோழனை ஆட்கொண்ட இடத்தில் இந்தத் திருக்கோவில் அமைந்துள்ளது. சோழர்களின் கட்டிட கலையை பறைசாற்றும் வகையில் முற்றிலும் கல்லால் கட்டப்பட்டுள்ளது. விக்கிரம சோழன் மட்டுமல்லாது பொதுமக்களின் பங்களிப்போடு இந்த கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இதனை இங்கு காணப்படும் கல்வெட்டுகள் உறுதிபடுத்துகின்றன.

இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமான் மகிழ்ச்சியை அளிப்பதால் ‘மருதீசர்’ எனவும், பாவவினை என்னும் நோயை நீக்க மருந்தாகத் தோன்றியதால் ‘மருந்தீசர்’ என்றும், அர்ச்சுனன் வழிபட்டதால் ‘அர்ச்சுனேஸ்வரர்’ என்றும் பல்வேறு நாமங்களில் அழைக்கப்படுகிறார்

தல வரலாறு : அமராவதி ஆற்றங் கரையில் அமைந்துள்ள 11 சிவமூர்த்த தலங்களில், கடத்தூர் மட்டுமே சுயம்பு திருமேனியை கொண்டது.

 பஞ்சபாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டு மறைந்து வாழ்ந்த காலத்தில், சிவ பூஜை செய்ய வேண்டி சுயம்புவாய் எழுந்தருளியவர் அர்ச்சுனேஸ்வரர். 

பல ஆண்டுகளுக்கு பிறகு காரைத்தொழுவில் இருந்து இந்தப் பகுதி வழியாக இடையர் ஒருவர் பால் கொண்டு சென்றார். அப்போது குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் கால் இடறி ஒரு குடம்பால் சிந்தியது. தினமும் இந்த நிகழ்வு தொடர்ந்ததால் மன்னன் விக்கிரம சோழனின் உத்தரவுப்படி அங்கிருந்த மூங்கில் புதர்கள், மருத மரம் ஆகியவற்றை அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது சுயம்புவாக இருந்த சிவலிங்கத்தின் மீது வெட்டுப்பட்டு, ரத்தம் பீறிட்டு வெளிவந்தது. அது அருகில் இருந்த அமராவதி ஆற்றில் கலந்து ஓடியது. செய்தியறிந்து மன்னர் விக்கிரம சோழன் வந்து, தன் கைவிரல் மோதிரத்தால் ரத்தம் வடியும் இடத்தில் அழுத்த ரத்தம் நின்றதாம். இதையடுத்து அந்த இடத்தில் அர்ச்சுனேஸ்வரர் ஆலயத்தை விக்கிரம சோழன் அமைத்ததாக கூறப்படுகிறது. இன்றளவும் இங்குள்ள சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் வெட்டுப்பட்ட காயத்தின் தழும்பு போன்ற அமைப்பை காண முடியும்.

சோழர் படைத்தளபதி நாகதோஷத்தால் பாம்பு கடித்து அவதிப்பட்ட போது, இங்குள்ள அம்மன் புற்றாக தோன்றி அருள்புரிந்ததாகவும், குலோத்துங்க சோழன் மகளுக்கு மாங்கல்ய தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்ட போது, அர்ச்சுனேஸ்வரர் தோஷம் நீக்கி அருள்புரிந்ததாகவும். கர்ண பரம்பரை மற்றும் தல வரலாற்று செய்திகள் கூறுகின்றன.
திருமணத் தடை நீங்கும் தலமாக இந்தக் கோயில் பார்க்கப்படுகிறது. 

 ஒவ்வொரு வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வளர்பிறை, பஞ்சமிதிதி மற்றும் பவுர்ணமி திதியன்றும் திருமணத்தடை நீங்க இத்திருக்கோவிலில் பரிகார பூஜைகள் நடைபெறுகிறது. இதில் மாங்கல்ய தோஷம் நீங்க வேண்டி பெண்கள் கலந்து கொண்டு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். இதனால் இத்திருத்தலம் திருமணத்தடைகள் நீக்கும் ‘தென் திருமணஞ்சேரி’ என்று அழைக்கப்படுகிறது. 

கொங்கு சோழனான மூன்றாம் விக்கிரம சோழன் ஆட்சிக்காலத்தில், திரிபுவன சிங்கன் என்பவருக்கு ‘பிரமேகம்’ என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட சர்க்கரை நோய் ஏற்பட்டது. அவர் கடத்தூர் மருந்தீஸ்வரரை வணங்கி வேண்டியதால் சர்க்கரை நோய் நீங்கி நலம் அடைந்தார். எனவே இறைவனுக்கு அமுது செய்ய நிலம் தானமாக வழங்கியதாகவும் இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.

திருக்கோவில் அமைப்பு :
இக்கோயிலில் அர்ச்சுனேஸ்வரர், கோமதி அம்மமாள் சன்னதிகளும், விநாயகர், சுப்பிரமணியர், காலபைரவர், சனீஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கல்வெட்டு நிறைய உள்ளது. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் ஏழு கோபுரங்கள் உள்ளன. அர்ச்சுனேஸ்வரர் கோவில் முழுவதும் கல்லினால் கட்டப்பட்டது. சமசதுர வடிவிலான கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், வசந்த மண்டபம் என 90 அடி நீளம் கொண்டது. 

அர்ச்சுனேஸ்வரர் கோவிலின் தெற்கு திசையில் இறைவனது வலது பக்கத்தில் கிழக்கு நோக்கி கோமதி அம்மன் சன்னிதி தனியாக அமைந்துள்ளது. மேலும் இரு திருச்சுற்றுகள், இரு திருமுற்றங்கள், இரு திருவமுது மடங்கள், இரு வாசல்கள் என அமைந்துள்ளது இந்த கோவிலின் சிறப்பம்சமாகும்.

பொதுவாக சிவன் கோவிலில் இறைவனுக்கு இடது புறமாக அம்மன் சன்னிதி அமைவது மரபு. ஆனால் கடத்தூரில் அர்ச்சுனேஸ்வரர் ஆலயத்துக்கு வலது புறமாக 4 அடி உயரத்திருமேனி கொண்டு, தனி சன்னிதியில் கோமதி அம்மன் அருள்பாலிக்கிறார். எனவே காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சியைப் போன்று கடத்தூர் கோமதியம்மனும் தனிச்சிறப்பு பெற்றவராய் திகழ்கின்றார். 

சைவம், வைணவம் பேதம் இன்றி கருவறையின் மேற்கு கோஷ்டத்தில் இறைவனின் முதுகுப்பகுதியில் விஷ்ணு சன்னிதி அமைந்துள்ளது. திருக்கோவில் திருச்சுற்றில் வலம்புரி விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. வாயிலின் முன்புறம் 4½ அடி உயர பலிபீடமும், 3½ அடி நீளம் 3 அடி உயரம் கொண்ட நந்திதேவர் சிலையும் அமைந்துள்ளது. 

சுவாமி சன்னிதியின் தெற்கு தேவ கோட்டத்தில் வெள்ளை நிறம் பளிங்குக் கல்லால் ஆன தட்சிணாமூர்த்தி சிலை உள்ளது. இந்த பளிங்கு திருமேனியானது காசியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறுகின்றனர்.

பொதுவாக சுயம்புலிங்கம் உள்ள கோவில்களில் நவக் கிரக சன்னிதி இருப்பதில்லை. இருப்பினும் இந்த திருக்கோவிலில் கோமதியம்மனின் தவத்தினை கண்ட சனிபகவான் தானும் தவமியற்றி வழிபட்டு வந்ததாக வரலாற்று செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே பக்தர்கள் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி காலங்கள் மற்றும் ராகு, கேதுகளின் தோஷ காலங்கள் உள்ளிட்ட இடர்பாடுகள் நிறைந்த காலங்களில் இங்கு தவமியற்றி நிற்கும் சனிபகவான், கால பைரவர் ஆகியோரை வணங்கி, பின் கோமதியம்மனை வணங்கி அர்ச்சுனேஸ்வரரை வழிபட்டால் துன்பம் நீங்கி இன்பம் பெருகும்.

இக்கோயிலில் சிவாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி, சித்திரை, ஐப்பசி மாதம் திருவிழா நடைபெறுகிறது

இத்திருக்கோவிலில் மகாசிவராத்திரி, பிரதோஷம், ஐப்பசி அன்னாபிஷேகம், ஆடிப்பூரம், பவுர்ணமி, அமாவாசை மற்றும் தேய்பிறை அஷ்டமி, பைரவர் பூஜை ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் பக்தர்களால் ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாப்த பூர்த்தி ஆகியவையும் இங்கு கொண்டாடப்படுகிறது. திருமணத்தடை, குழந்தைப்பேறின்மை, காலசர்ப்ப தோஷம் மற்றும் சகல தோஷங்களுக்குமான பரிகாரத்தலமாக இத்திருக் கோவில் உள்ளது.

பயண அனுபவ குறிப்புகள்:

ஆலயம் கிழக்குநோக்கியவாறு ராஜகோபுரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
எதிரில் அமராவதி ஆறு உள்ளது.

ஆற்றுக்கரைக்கும், ஆலயத்திற்கும் இடை பகுதியில் வாகனங்கள் நிறுத்த வசதிகள் உண்டு. கழிப்பறை வசதிகள் செய்துள்ளனர். வேறு எந்தவித கடைகள், வீடுகள் அதிகம் இல்லை.

 கடத்தூர் பஸ் நிறுத்தம் முதல் 700 மீட்டர் நடந்தோ, வாகனங்களில் தான் வர முடியும்.
மிகவும் மன அமைதி தரும் இடமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரார்த்தனைத்தலமாக விளங்குவதால் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
குருக்கள் மிகவும் விபரம் சொல்கிறார்கள்.
கொங்குமண்டலத்தில் உள்ள புராண ஆலயங்களில் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம்.

இதை தரிசித்து மிக அருகில் உள்ள கடத்தூரில் - குருவன் வலசில் உள்ள கொங்கனேஸ்வரர் புராதான ஆலயம் சென்றோம்.

14.09.25 ஞாயிறு.
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
# ஆலயம் தொழுவது சாலவும் நன்று 
# ஆன்மீக பாரதம் அகிலத்தின் சிகரம்
பிரதோஷக்குழு யாத்ரா - 14.9.25

திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில் -பிரதோஷக்குழுயாத்ரா 14.9.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

திருமூர்த்திமலை - அமணலிங்கேஸ்வரர்
திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திருமூர்த்திமலை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.

இ்த்திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும் இத்திருக்கோயில் ஆற்றங்கரையின் ஓரத்தில் அமைந்த திருக்கோயிலாகும்

 திருப்பூர் மாவட்டம் முழுவதும் பரவலாக உடுமலைப்பேட்டை வட்டத்தில் அதிக அளவில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு திருமூர்த்தி, கஞ்சிமலையப்பன் என்று பெயரிட்டு அழைக்கப்படுவதிலிருந்து இத்தலத்தின் பெருமையை அறியலாம்.

 இத்தகைய சீரும் சிறப்பும் மிக்க இத்திருக்கோயில் உடுமலைப்பேட்டைக்குத் தெற்கே 21 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆறுபடை வீடுகளில் சிறந்து விளங்கும் பழனி என்னும் திருவாவினன்குடி திருத்தலத்திலிருந்து தென்மேற்கு 45 கிலோ மீட்டர் தொலைவிலும் ஆனைமலைத் தொடர்ச்சியில் அழகுற அமைந்துள்ளது. 

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கிறார்கள். இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

இயற்கை அன்னை எழில் நடனம் புரியும் மேற்குத்தொடர்ச்சி மலைச் சாரலில் தோன்றி சலசலத்து ஓடிவரும் தோணிநதி என்னும் பாலாற்றங்கரையில் சிவலிங்கத் தோற்றத்தில் அமைந்துள்ள ஒரு குன்றில் அருங்காட்சியளிக்கிறார்கள்.

 திருமூர்த்திகளான அயன்,அரன்,அரி ஆகியோர் இங்கு எழுந்தருளியுள்ள கடவுளர்கள் மும்மூர்த்திகளாகும். ஆனாலும் பெரிதும் பேசப்படுவது அமணலிங்கேஸ்வரர் தான்..இங்கு பிரம்மா சிவன் விஷ்னு ஒருங்கிணைந்து அருள்பாலித்து வருகிறார்கள் இத்திருக்கோயில் சுற்றுலா இணைந்த வழிபாட்டுத்தலமாக திகழ்கிறது.

 நதித்தீரங்களையே தமது அருள்பாலிக்கும் இடமாகக் கொண்டவன் பரமேஸ்வரன். ஆகவே இங்கு பாய்ந்தோடிவரும் தோணி நதிக்கரையில் கோவில் கொண்டதால் அந்த சர்வேஸ்வரன் நாமமே மேலோங்கி விட்டதென கொள்ளலாம்.

 இங்கு எழுந்தருளியிருக்கும் கடவுள் அமலலிங்கம் என்று முன்னர் வழங்கப்பட்டு வந்தது . பின்னர் அமணலிங்கம் என்று திரிந்து பட்டதாகக் கூறுகின்றனர். அமணலிங்கம் என்றால் அழகிய லிங்கம் என்று பொருள்படும் . அமணன் என்றால் குற்றமற்றவன் என்பது பொருள். இயல்பாகவே குற்றங்களிலிருந்து நீங்கிய இறைவனே அமணலிங்கமாகும். எனவே ஆன்மாவினின்றும் ஆணவம், கன்மம் மாயை என்னும் மும்மலங்களையும் விட்டொழித்து வெற்றி பெற விழைவோர் அனைவரும் அருள்மிகு அமணலிங்கேஸ்வரரைத் தொழுதால் மும்மலங்கள் நீங்கி முக்தி பேரடையலாம்.
 இத்தகு சிறப்புடைய மூர்த்தி இங்கு குன்றமே லிங்கமாக காட்சி வழங்கி அருளுவது கண்கூடு. 

தற்போது தளி என்றழைக்கப்படும் சிற்றூர் அக்காலத்தில் தளி பாளயப்பட்டாக விளங்கியது. அப்பாளையப் பட்டினை நிர்வகித்து வந்த அரண்மனைக்கு தெற்கே திருமூர்த்தி மலையில் எழுந்தருளி உள்ளதால் இவ்விறைவனை பாமர மக்கள் தெற்கு சாமி என்றும் போற்றி வழிபடுகின்றனர்.

 திருமூர்த்தம் என்றால் ஆக்குதல், காத்தல், அழித்தல் என்ற முத்தெய்வங்களையும் குறிக்கும். இம்முத்தொழில் புரிய மூவரும் எழுந்தருளி அருளாட்சி புரியும் ஒப்பற்ற திருத்தலமே திருமூர்த்திமலையாகும்.

கோயில் அமைப்பு
இக்கோயிலில் அமணலிங்கேஸ்வரர் சன்னதியும், விநாயகர், முருகர் உபசன்னதிகளும் உள்ளன. மேலும் ஆலய பின்புறம் சப்தகன்னியர் உள்ளனர்.

 இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

இக்கோயிலில் சிவாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் மகா சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. 
ஆடி , தை- அம்மாவாசை திருவிழாவாக நடைபெறுகிறது.

பயண அனுபவக் குறிப்புகள் :
பிரதான கருவரையில், 
அ/மி. அமணலிங்கேஸ்வரர் மற்றும், பிர்மா, விஷ்ணு குடவரைக் குன்றில் வடிக்கப்பட்டுள்ளது. மூவருக்கும் முன்னால், அழகிய உற்சவர்கள் . அதற்கு
அபிஷேகம். பூசைகள் செய்கிறார்கள்.
சுப்ரமணியர், விநாயகர், தனி சன்னதிகள் மற்றும் நவகிரகம் அமைக்கப்பட்டுள்ளது.
நீண்ட முன் மண்டபம் உள்ளது.

ஆலயம் ஒட்டி 8 கால் மண்டபம் ஒன்று தனியே உள்ளது.

கல் விளக்குத்தூன் ஒரு வட்ட மண்டப அமைப்பில் பல்வேறு தெய்வ சிலைகள் அற்புதமாக வடிக்கப்பட்டு, பாதுகாப்புக்காக இரும்பு கம்பி வேலியும் போடப்பட்டு இருக்கிறது.

மேல் பகுதியில் அன்னதானக்கூடம், தியான மண்டபம் ஒன்றும், அலுவலகத்திற்கு என்று ஒரு கட்டிடமும் உள்ளது.
இந்த வளாகம் முழுதுமே கற்பாறைகள் கொண்டதும், சரிவாகவும் உள்ளது.

ஆலய பின்புறத்திலிருந்து வரும் நதியின் நீரோட்டம் ஆலயம் ஒரு பகுதி முழுவதும் தவழ்ந்து பெருகி ஓடுகிறது நதியில் குளித்து ஆலயம் சென்று வணங்கலாம். 

நதியை கடந்து செல்ல சிறிய பாலம் உள்ளது; அதன் வழியே சென்று 1 கி.மீ தூரத்தில் மலை அடிவாரத்தில் உள்ள திருமூர்த்தி அருவியில் குளித்து வரலாம்.

மொத்த வளாகத்தையும் ஒரு சிறிய சாலையின் வழியே அடைய வேண்டியது உள்ளது. வழியெங்கும் ஆலய மற்றும் பல்வேறு சிறு கடைகள்.

இவை அனைத்தும் மலைகளின் பின்னனியில் இருப்பதால், மிக ரம்மியமான சூழல் உருவாகியுள்ளது.
எங்கும் ஏராளமான குரங்குகள் இருப்பதால், உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சிறந்த ஆன்மீக சுற்றுலா தலமாக விளங்குகிறது 
14.9.2025 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#பிரதோஷக்குழுயாத்ரா 14.9.25
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

ஆனைமலை - அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில் - கொங்குநாட்டுத்தலங்கள் - பிரதோஷக்குழு யாத்ரா 14.9.25

ஆனைமலை - அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில்,

ஆனைமலை - அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில்,  

தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் மாவட்டத்தின் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் அமைந்துள்ளது. இந்த ஆலயம், ஆழியாறு சங்கமிக்கும் ஆனைமலைக் குன்றின் அடியில் அமைந்துள்ளது. மற்றும் பல பக்தர்களால் சக்தி வாய்ந்த அம்மன் கோயிலாகப் போற்றப்படுகிறது. 

கோயம்புத்தூர் - ஆனைமலை, - பொள்ளாச்சிக்கு தென்மேற்கே சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ளது. 

கோவில் சிறப்பு:

இந்தக் கோயில், ஆனைமலைக் குன்றின் அடிவாரத்தில் ஆழியாறு சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது.

அம்மன் கோயில் அமைந்துள்ள பகுதி, ஒரு காலத்தில் மயானப் பகுதியாக இருந்ததாகவும், அதன் காரணமாகவே அம்மன் "மாசாணி" என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

பக்தர்களின் நம்பிக்கை:

மாசாணி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் என்றும், பக்தர்களின் கவலைகளையும், பயங்களையும் நீக்கி நல்வாழ்வை அருளும் தெய்வம் என்றும் நம்பப்படுகிறது.

பல பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை அம்மனிடம் சமர்ப்பித்து, மன அமைதியையும், நல்வாழ்வையும் பெற இங்கு வருகிறார்கள். 

பயண அனுபவ குறிப்புகள்.

14.09.25 காலையில் ஆலயம் சென்றோம்.

இந்தப் பகுதி முழுவதுமே, ஆலயப்பகுதி போலவே உள்ளது.

வாகனங்கள் ஆலயத்தின் இரண்டு புறங்களில் நல்ல வசதியாக நிறுத்த முடியும்.

ஏராளமான சிறு கடைகள் உண்டு. வளாகம் முழுதுமே கடைகளும், பக்தர்கள் மட்டுமே.பக்தர்கள் வசதியை முன்னிட்டு தனியாக குளியல் கழிவறைகள் பெரிய மண்டபத்துடன் கட்டியுள்ளார்கள்.

ஆலயம் முன்புறம் நிறைய இடம் உள்ளது.

7 நிலை ராஜகோபுரத்துடன் இணைக்கப்பட்ட மிகப்பெரிய மண்டப வளாகத்தில் 

வடக்கு நோக்கிய கருவரை மண்டபத்தில்

சயன கோலத்தில் மாசானி அம்மன். உள்ளங்கால் பாதம் தரிசனம் செய்யலாம்.

சிறிய அளவில் உற்சவர் சிலை முன்புறம் உள்ளது. இந்த அம்மனுக்கு மட்டும் , அபிஷேகம் நடைபெறுகிறது.

மண்டபத்தின் இருபக்கங்களிலும் (பொதுவழி, சிறப்பு வரி) வரிசை கம்பிகள் வழியாக உள்ளே சென்று அம்மன் தரிசனம் செய்ய வேண்டும்.

மிளகாய் அறைத்து பூசூம் இடம் அம்மன் முன்புறம் கிழக்குப் பகுதியிலேயே உள்ளது தனி வரிசை. கட்டணவரிகளும் உண்டு.

ஆலயம் பின்புறம் ஆறு ஓடுகிறது.

ஆற்றின் கரை ஓரத்தில் ஆற்றுவிநாயகர் ஆலயத்தில் சிவன், பெருமான், அனுமான் முதலிய சன்னதிகள் தனித்தனியாக உண்டு.

சிறு பொருட்கள், விளையாட்டு, ஆலய பூசை சாமான்கள் கடை ஏராளமாக உள்ளது.

மீள் தரிசனம். ஏற்கனவே வந்த போது இருந்த அமைப்பு முழுதும் மாற்றம்.

விரிவுபடுத்தப்பட்ட மண்டபங்கள், பக்தர்கள் தங்குமிடங்கள் என்று 

வளர்ந்து வருகிறது.

14.09.2025 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

துடியலூர் - விருந்தீஸ்வரர் ஆலயம் கோவை - பிரதோஷக்குழு யாத்ரா 13.9.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

துடியலூர் - விருந்தீஸ்வரர் ஆலயம்
கோவை

துடியலூர் - விருந்தீஸ்வரர், விஸ்வநாயகியம்மன் ஆலயம்.

சுவாமி, சன்னதி அடுத்து, சுப்ரமணியர், அம்பாள், லெட்சுமி நாராயணர் சன்னதிகள் தனித்தனியாக உள்ளன.
அனைத்தும் கிழக்கு நோக்கியது.

தவிர, வீர ஆஞ்சநேயர், கால பைரவர், நவகிரகம், சனிஸ்வரர் சன்னதிகளும் தனித்தனியே உண்டு.

சுந்தரமூர்த்தி நாயனார் பசிபினியுடன் இவ்வாலயம் வந்து இறைவனை தரிசிக்க வந்தபோது, வேடன் வடிவில், சுவாமி அம்பாள் வந்து, அங்குள்ள முருங்கை மரத்தின் இலை பறித்து சமைத்து விருந்து அளித்ததால், சுவாமிக்கு இந்த பெயர். என்பது கல்வெட்டில் காணப்படுகிறது.

இரவு 8 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.
நல்ல பராமரிப்பில் உள்ள ஆலயம்

பிரதான சாலையில் நுழைவு வாயில் வழியில் உங்க சிறிய பாதையில், உள் நுழைந்து, ஆலய வளாகம் வந்தால், ஆலயம் முன் பகுதியில் . வாகன நிறுத்தும் பெரிய வளாகம் உண்டு.

13.9.25 #சுப்ராம்ஆலயதரிசனம்
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

தேக்கம்பட்டி - வனபத்ரகாளியம்மன் ஆலயம் - பிரதோஷக்குழு யாத்ரா - 13.09.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

தேக்கம்பட்டி - வனபத்ரகாளியம்மன் ஆலயம்

தேக்கம்பட்டி -
அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில்

வேண்டிய காரியம் நன்றாக முடிந்தால், இந்த கோவிலில் பெண்கள் தாலியை உண்டியலில் போட்டு விடுவர். தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை நேர்த்திக்கடன்களாக இத்தலத்து பக்தர்கள் வழங்குவது வழக்கமாக உள்ளது.

மூலவர் – வனபத்ர காளியம்மன் தல விருட்சம் – தொரத்திமரம் தீர்த்தம் –   
  பவானி தீர்த்தம்

 பழமை – 500-1000 வருடங்களுக்கு முன்பு காலம் சொல்ல முடியாத காலத்தில் கட்டப்பட்டது இந்த வனபத்ர காளியம்மன் கோயில். 

சாகா வரம் பெற்ற மகிசாசூரனை அழிக்க அம்பாள் சிவனை நினைத்து வழிபட்டுப் பூசை செய்து சூரனை அழித்ததாள். அம்பாள் சிவனை நினைத்து இந்த வனத்தில் தியானம் செய்ததால், இங்குள்ள அம்மன் வனபத்ரகாளியம்மன் என்று பெயர் பெற்றது. 

ஆரவல்லி சூரவல்லி கதையோடும் இக்கோயில் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
மந்திரம், சூன்யம் ஆகியவற்றால் கொடிய ஆட்சி செய்த ஆரவல்லி, சூரவல்லி ஆகியோரை அடக்க பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் சென்று சிறைப்பட்டு, பின்னர் கிருஷ்ணன் அவனைக் காப்பாற்றினார். பின்பு, பாண்டவர்கள், அப்பெண்களை அடக்க, தங்களின் தங்கை மகன் அல்லிமுத்துவை அனுப்பி வைத்தனர். அவன் இங்குள்ள அம்மனை வழிபட்டுச் சென்று, ஆரவல்லியின் பெண்கள் சாம்ராச்சியத்தைத் தவிடுபொடியாக்க, அவர்கள் பயந்து போய் ஆரவல்லியின் மகளை அல்லி முத்துவுக்கு திருமணம் செய்து கொடுத்து, அவள் மூலம் நஞ்சு கொடுத்துக் கொன்றனர். இதையறிந்த அபிமன்யு, வானுலகம் சென்று அல்லிமுத்துவின் உயிரை மீட்டு வந்தான். நடந்த விசயங்களைக் கேள்விபட்ட அல்லிமுத்து, வெகுண்டெழுந்து, ஆரவல்லியை அடக்கப் புறப்பட்டுச் சென்றான். வழியில் வனபத்ரகாளியம்மனை வழிபட்டு, அவள் அருள் பெற்று ஆரவல்லியின் சாம்ராச்சியத்தை அழித்தான். இவை வரலாறாகப் பேசப்படுகிறது.

பூப்போடுதல் : புதிதாகத் தொழில் துவங்கும் நபர்கள், திருமணம் பற்றிக் கேட்கும் நபர்கள், சுவாமி முன்பு பூ போட்டு கேட்பது வழக்கம். சிவப்பு, வெள்ளைப் பூக்களை தனித்தனி பொட்டலங்களில் போட்டு, அவற்றை அம்பாளின் காலடியில் வைத்து, ஏதவது ஒன்றை எடுத்துப் பார்க்கும்போது, மனதில் எந்த பூவை நினைக்கிறோமோ அந்தப் பூ வந்து விட்டால் அம்பாள் உத்தரவு தந்து விட்டதாக ஐதீகம்.

 இது இக்கோயிலில் மிகவும் சிறப்பு. 15 ஆயிரம் கிடா வெட்டு : வனபத்திரகாளியம்மன் என்றாலே கிடாவெட்டுதல் தான் நினைவிற்கு வரும். அம்மனுக்கு உகந்த ஆடு பலியிடுதல் ஞாயிறு, செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நடக்கும். ஒரு வரத்திற்குள் சுமார் 300 லிருந்து 400 கிடா வரை வெட்டப்படுகிறது. ஒரு ஆண்டிற்கு சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிடாய் வெட்டுகின்றனர்.

அம்மன் சுயம்புவாக முளைத்துள்ளது, குண்டமிறங்கல் எனும் தீமிதிக்கும் நேர்த்திக்கடன் இத்தலத்தில் சிறப்பு.

 திருவிழா: ஆடிக்குண்டம் ஜூலை 15 நாள் திருவிழா. அன்னையிடம் முறைப்படி அனுமதி பெற்று, ஆடி முதல் செவ்வாய் பூச்சாட்டி, 2 ஆம் செவ்வாய் திருபூக்குண்டம் அமைத்து, 3 ம் செவ்வாய் மறுபூஜை செய்து விழா கொண்டாடப்படும். 36 அடி நீளமுள்ள திருக்குண்டம் அமைக்கப்படும். இதில் தீக்கங்குகள் உருவாக்கி பக்தர்கள் இறங்கி நடப்பார்கள். இத்திருவிழாவின் போது 2 லட்சம் பக்தர்கள் பங்குபெறுவது கண்கொள்ளாக்காட்சி.

 இவை தவிர வாரத்தின் செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மேலும் தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் இக்கோயிலில் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
இது தவிர அம்மனிடம் குழந்தை வரம் வேண்டி வணங்கி தொரத்தி மரத்தில் கல்லை கட்டிவிட்டு வழிபட்டால் தங்கள் பிரார்த்தனை நிறைவேறுகிறது. செய்வினை, பில்லிசூன்யம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக்கோயிலுக்கு ஒருமுறை வந்து அம்மனை மனமுருக வேண்டிக்கொண்டால் அத்தகைய கோளாறுகள் நீங்குகிறது என்பது இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் அனுபவத்தில் கண்ட உண்மை என்கிறார்கள். 

வேண்டிய காரியம் நன்றாக முடிந்தால், பெண்கள் தாலியை உண்டியலில் போட்டு விடுவர். தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை நேர்த்திக்கடன்களாக இத்தலத்து பக்தர்கள் வழங்குவது வழக்கமாக உள்ளது. 

இது தவிர கிடா வெட்டுதல்தான் இங்கு தனிச் சிறப்பு. அம்மனுக்கு உகந்த ஆடு பலியிடுதல் ஞாயிறு, செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நடக்கும். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 இரவு மணி வரை திறந்திருக்கும்.

மேலும் சில குறிப்புகள்:
ஆலயம் பெரியவளாகத்தில் அமைந்துள்ளது.
ராஜேகோபுர , பிரகார மண்டபங்கள் திருப்பணி வேலைகள் நடந்து வருகின்றன.
கருவரை முன் மண்டபம் மிகப் பெரிது, அகலம் பொது தரிசனம் ஒரு புறம், சிறப்பு தரிசனம் தனி வழி

ஆலயம் எதிரே பகாசுரன் மற்று புராண சிலைகள் பெரிய அளவில் உள்ளது.
தீக்குண்டம் மற்றும் ஆலய வளாகம் பெரிய அளவில் உள்ளது.

நாங்கள் சென்ற 13.9.25 சனிக்கிழமை மாலைப்பொழுது பக்தர்கள் கூட்டம் மிகக்குறைவு.

13.9.25 சனிக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#பிரதோஷக்குழுயாத்ரா
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

குருந்தமலை - குழந்தைவேலாயுத சுவாமி - கொங்குநாட்டுத்தலங்கள். பிரதோஷக் குழு யாத்ரா - 13.09.25

குருந்தமலை - குழந்தைவேலாயுத சுவாமி

கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மருதூர் எனும் ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமமான குருந்தமலையில் இக் கோயில் அமைந்துள்ளது.

 கோயம்புத்தூர்-மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் (தேசிய நெடுஞ்சாலை 67) காரமடை வரை சென்று அங்கிருந்து இக்கோயிலுக்குச் செல்லலாம். மேட்டுப்பாளையத்திலிருந்தும் இக் கோயிலுக்குச் செல்லலாம்.

கோயில் அமைப்பு
குருந்தமலை அடிவாரத்தில் ஐந்துநிலை இராஜகோபுரத்துடன் கூடிய நுழைவாயிலைத் தொடர்ந்து மலையேறிச் செல்ல நன்கமைக்கப்பட்ட படிக்கட்டுகள் தொடங்குகின்றன.

 படிக்கட்டுகளின் இருபுறமும் இராஜகம்பீர விநாயகர் சன்னிதி, கன்னிமார் சன்னிதி, நாகர் சன்னிதி, பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னிதி, இடும்பன், கடம்பன், வீரவாகு-மூவரின் சன்னிதிகள் உள்ளன. அவற்றைத் தாண்டியதும் படிக்கட்டுகளின் ஒருபுறம் காசிவிசுவநாதர் சன்னிதி விசாலாட்சியம்மனுக்குத் தனி சன்னிதியுடனும் மறுபுறம் தீபத்தூண் மற்றும் இராஜநாகலிங்க சன்னிதியும் அமைந்துள்ளது.

 இவ்விருவர் சன்னிதிகளைச் சுற்றி சூரியன், பஞ்சாட்சர கணபதி, பஞ்சலிங்கம் சன்னிதி, வள்ளி-தேவானை உடனுறை சண்முகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், நவக்கிரக, காலபைரவர், சந்திரன் ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன.

காசிவிசுவநாதர் சன்னிதி தாண்டி மேலே குழந்தை வேலாயுதசாமி சன்னிதி இராஜகோபுரத்துடன் சுற்றுப் பிரகாரத்துடன் அமைந்துள்ளது. கருவறையில் மூலவர் குழந்தை வேலாயுதசாமி மேற்கு நோக்கியுள்ளார்.🌐

கோயில் வரலாறு
தல பெருமை கொங்கு நாட்டில் புகழ்பெற்ற வணிகர் சமுதாயம் 500ஆம் செட்டியார்கள் சுமார் 750 ஆண்டுகளுக்கு முன் இந்த கதை நடந்தாகக் கூறப்படுகிறது.500 ஆம் செட்டியார் சிலர் மிளகு ,இலவங்கம் கிராம்பு இவற்றை சேரநாட்டில் வாங்கி, அட்டபாடி ,குருந்தமலை ,பெள்ளாதி , சத்தியமங்கலம் வழியாக மைசூர் சென்று வணிகம் செய்தனர், அவ்வாறு ,ஒருதடவை பொதிமாடுகளில் மிளகு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்தபோது குருந்தமலை அடிவாரத்தில் தங்கி இருக்கிறார்கள் .

 அப்பொழுது ஒரு சிறுவன் அங்கு வந்து இவைகள் என்னமூட்டைகள் என்று கேட்க ,வணிகர்கள் தவிட்டு மூட்டைகள் என்று கூறினாராம் ,சிறுவனும் ,ஓ தவிட்டு மூட்டைகளா என்று கேட்டுவிட்டுச் சென்றுவிட்டானாம். மறுநாள் வணிகர்கள்.மூட்டைகளைப் பிரித்துப்பார்த்தபோது அவை தவிட்டு மூட்டைகளாக இருந்தன .செட்டியார்கள் வருந்தி இது குருந்தைக்குமரனின் விளையாட்டு என்று உணர்ந்தனர்.

குருந்தமலை வந்து வணிகர்கள் வணங்கி வேண்டினர்.முருகன் மன்னித்து ,மீண்டும் அவற்றை மிளகு மூட்டைகளாக ஆகினான் ,செட்டியார்கள் குழுவின் தலைவராக இருந்த கங்காதரன் செட்டியார் குருந்தமலை முருகனுக்கே தம்மை முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொண்டார்

.மலையில் திருக்கோயில் அர்த்தமண்டபம்,சிவாலயம் முதலிய திருப்பணிகள் செய்துள்ளார். தம்முடைய ஒரே மகனுக்கும் குழந்தை வேல் என்று பெயர் சூட்டினார். பின்னர்,திருக்கோயிலுக்கு மேற்கில் உள்ள குகையில் இறங்கி சமாதி அடைந்துவிட்டாராம்.

ஆலயத்தில் தேர் திருவிழா பிரசித்தம்
கீழ் பகுதியில் அனுமன் சன்னதி உள்ளது அப்பகுதியில் இரண்டு மூன்று சுனைகள் உள்ளன.

உயரமான மலைக்குன்று சாலைகள் சிறப்பு. வாகனங்களில் சென்று ஆலயத்தை அடையலாம். சுமார் 100 படிகள் வசதியாக ஏறி தரிசனம் செய்யலாம். முதியோர்களும் ஏறிதரிசனம் செய்யலாம்.

மேல் பகுயிலிருந்து கீழ் புறநகர் பகுதிகள், இயற்கை அமைப்பும் சிறப்பு. குளியல் கழிவறைகள் ஏற்பாடு செய்யப்ட்டுள்ளது..மிகவும் அமைதியான மன உணர்வு.

13.09.25 சனிக்கிழமை
#சுப்ராம்ஆலயதரிசனம்
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 13.09.25

காரமடை - நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம் - பிரதோஷ க்குழு யாத்ரா 13.9.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

காரமடை - நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்

காரமடை நஞ்சுண்டேஸ்வரர் இந்த கோவிலின் மூலவராகவும், லோகநாயகி தாயார் மூலஸ்தானமாகவும், வில்வம் தல விருட்சமாகவும் உள்ளது. 

இக்கோயில் விஷக்கடியை குணப்படுத்தும் ஒரு சிவலிங்கத்திற்கு பெயர் போனது.

கோயிலைச் சுற்றி ஒரு கிரானைட் சுவர் உள்ளது, அதன் அனைத்து சன்னதிகளையும் உள்ளடக்கியது. கோயிலில் (ஐந்து நிலை) கருவரை கோபுரம் சிறப்பு வாய்ந்த கல்வெட்டுகளால் உள்ளது. 

நுழைவாயில் கோபுரம் உள்ளது.
கோயிலின் கருவறை ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. 

லிங்க வடிவில் உள்ள நஞ்சுண்டேஸ்வரரின் உருவம் கருவறையில் வைக்கப்பட்டுள்ளது. இது கிரானைட்டால் ஆனது மற்றும் சிவப்பு நிறத்தில் தெரிகிறது. கோயிலின் வடக்குப் பகுதியில் நஞ்சுண்டேஸ்வரரின் துணைவியார் உலகநாயகியின் உருவம் உள்ளது.

நஞ்சுண்டேஸ்வரரின் கருவறைக்கு மேலே உள்ள விமானம் , வட இந்திய கோயில்களில் உள்ளதைப் போன்றது, சுழல் அமைப்புடன் உள்ளது.

சந்திரசேகரரின் உலோக உருவம் தனித்துவமானது, கங்கையின் முழு உருவமும் சிவன் பிறையுடன் மட்டுமே காட்சியளிக்கும் மற்ற கோயில்களைப் போலல்லாமல் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சன்னதியில் விநாயகர் , சுப்பிரமணியர் , வீரபத்ரர் ,
ரிஷபந்திகா , பழனி ஆண்டவர், மகிஷாசுரமர்த்தினி , ஆஞ்சநேயர் மற்றும் நடராஜர் ஆகியோரின் உருவங்களும் சுவர்களில் உள்ளன. 

ஒரு சிற்பத்தில் சிவன் வேட்டைக்காரனாகவும், பார்வதி நடனக் கலைஞராகவும் சித்தரிக்கப்படுகிறார். விநாயகர் சிலை ஒரு காலை வளைத்தும், காளியின் உருவம் நடனமாடும் தோரணையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. மீனிலிருந்து மச்சவல்லப்பன் வெளிப்படுவதையும், வாள் ஏந்திய சிப்பாய் மற்றும் ஒரு ஆடு சிவனை வணங்குவதையும் சித்தரிக்கும் சிற்பங்கள் உள்ளன. பசு, ஆடு, யானை, அன்னம், மீன், பாம்பு , யாளி , குதிரை, பன்றி, புலி மற்றும் காளை போன்ற உயிருள்ள உயிரினங்களின் சிற்பங்களும் உள்ளன. 

மீனாட்சி அம்மன் கோயிலைப் போலவே , நஞ்சுண்டேஸ்வரரின் கருவறையைக் காக்கும் ஆறு 6 அடி (1.8 மீ) யானைகள் உள்ளன. யானைகளின் இருபுறமும் ரிஷபருடன், பாலசுப்பிரமணியர், காளி, பிரம்மா மற்றும் லட்சுமி நாராயணரின் மினியேச்சர் சிற்பங்கள் உள்ளன. சுப்பிரமணியரின் உருவம் பன்னிரண்டு கைகளுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது🌐

சிவன் சன்னதி அடுத்து அம்பாள் அடுத்து விநாயகர் அனைத்தும் கிழக்கு நோக்கிய அமைந்துள்ளது. முன்புறம் ஒரு நீண்ட மண்டபம் உள்ளது.

ஆலய முன்புறம் கல் விளக்குத் தூன் உள்ளது.

அருகில் பெரிய பெருமாள் ஆலயம் உண்டு. அரங்கநாதர்.

தென்புறம் உள்ள விநாயகர் ஆலயம் 14.9.25 அன்று கும்பாபிஷேம்

சிவன் ஆலயம் முன்புறம் தனி ராஜகோபுரம் இல்லை..

திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

13.09.25 சனிக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 13.09.2025

குமரன் குன்று - சுப்பிரமணிய சுவாமி ஆலயம், பிரதோஷக்குழு யாத்ரா 13.0925 - கொங்குநாட்டுத்தலங்கள்

குமரன் குன்று - சுப்பிரமணிய சுவாமி ஆலயம்

அன்னியூர் - மேட்டுப்பாளையம் சாலையில் சாலையின் தென்புறம் 1 கி.மீ. சிறிய குன்று, வாகனங்களில் மேல ஆலயம் வரை செல்லலாம்.

கிழக்குப் பார்த்த ஆலயம்.

3 அடுக்குகளில் பெரிய அகலமான மண்டபங்கள் உள்ளன. வீரபாகுமற்றும் அருணகிரிநாதர் சிறிய சன்னதிகளும் முன்மண்டபத்தில் உள்ளார்கள்.

அகலமான முன்மண்டபங்கள் அழகான படிக்கட்டுகள்.
மேல் மண்டபத்தில்
முருகன் ஆலயம். சிறிய குன்றின் மீது தனி கருவரையில், ஆலய மூலவர், கல்யாண சுப்ரமணிய சுவாமி வள்ளிதெய்வானையுடன் உள்ளார்
அடுத்து தென்புறம் வைத்தியநாதர் வடபுறம் தையல் நாயகி தனி தனி சன்னதிகளில் உள்ளனர்.
சிறிய அளவிலானுக்குன்றில், இயற்கை யாகக் கிடைத்த தண்டபாணி சிலையை கண்ட எடுத்து, ஆலயம் அமைத்து வழிபட்டார்கள்.
சித்திரை மாதம் முதல் நாளில் சூரிய பூசை
தைப்பூசத்தில் ரத உற்சவம்

கல்யாண பிரார்த்தனைத்தலமாக வணங்கப்பட்டு வருகிறது.

பஞசதரு விநாயகர்
ஆலயம் வடக்குப் புறத்தில் 5 மரங்கள் வில்வம், வேம்பு, அரசன், காட்டுமல்லி, காரை மரங்கள் கொண்ட பஞ்ச தரு விநாயகர் இடம் சற்று இரக்கத்தில் உள்ளது. படிகள் அமைக்கப்பட்டுள்ளது அங்கு ஒரு விநாயகர் - பஞ்ச தரு விநாயகர் - அமைக்கப்பட்டுள்ளது.
மிகவும் விஷேசம்

ஆலயம் அமைதியான சூழலில் சுற்றுப்புற சூழ்நிலை அழகுடன் உள்ளதே மன அமைதி தரும்
நல்ல பராமரிப்பில் உள்ளது. முன்வெளி மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.

அன்னூர் ஆலயம் தரிசித்து இந்த ஆலயம் வந்து தரிசித்தோம்.

13.09.25 சனிக்கிழமை
#சுப்ராம்தரிசனம்.
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 13.9.25

அன்னியூர் - மன்னீஸ்வரர் - பிரதோஷக்குழு யாத்ரா 13.9.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

அன்னியூர் - மன்னீஸ்வரர்
இக்கோயிலின் மூலவராக மன்னீசுவரர் உள்ளார். இவர் அன்னீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். அன்னி என்ற வேடனுக்கு அருள் புரிந்ததால் அன்னீசுவரர் என்றும், பாவச் செயலைச் செய்த அவனை மன்னித்ததால் மன்னீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

இறைவி அருந்தவச்செல்வி ஆவார். 

வள்ளி வனமாக இருந்த இந்தப் பகுதியில் 

அன்னி என்ற வேடன் காட்டில் கிழங்கு வெட்ட முயன்ற போது, லிங்கம் வெட்டுப்பட்டு, ரத்தம் வர, சேர மன்னன் செய்தி அறிந்து மீட்க முயல, அசரீ ஒலித்து பறவை ரூபத்தில் காட்சியளித்ததாக புராணம்.  

சேரரும், ஆலயம் அமைக்க, கொங்கு சோழர்களாலும் மேம்படுத்தப்பட்டது.

ஆலயத்தில் முன் உள்ள கல்தூனில் புராண காட்சி

21 முறை ஆலயம் சுற்றி வந்தால், 21 தலைமுறை புன்னியம் என்பதால், ஆலயத்தில் சுவாமி வணங்கி சுற்றி வருகிறார்கள்.

வன்னி இக்கோயிலின் தல மரமாகும்.

 கோயிலின் தல தீர்த்தமாக அமராவதி உள்ளது. மார்கழியில் பிரமோற்சவம், சித்திரைப் பிறப்பு, வைகாசி பூசை, மகாசிவராத்திரி உள்ளிட்ட பல விழாக்கள் நடைபெறுகின்றன. அமாவாசையில் சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன.🌐

கோயில் அமைப்பு

இக்கோயிலில் மூலவர் மன்னீஸ்வரர் சுயம்புவாக, மேற்கு நோக்கிய நிலையில் உள்ளார். அருந்தவச்செல்வி தனி சன்னதியில் மேற்கு நோக்கி உள்ளார். விமானம் கைலாச விமானமாக உள்ளது. திருச்சுற்றில் பைரவர், குரு பெரிய அமைப்பு, நடராஜர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், ஆஞ்சநேயர், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், நீலகண்ட நாயனார் ஆகியோர் உள்ளனர். வன்னி மரத்தின் கீழுள்ள சர்ப்பராசர் சன்னதியில் ஏழு நாகங்கள் உள்ளன.

இங்கு பஞ்ச லிங்கங்களும் உள்ளன.

இங்குக் கோயில் கோசாலை, கோயில் தேர், கோயில் கல்வெட்டு உள்ளன. இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.🌐

பூசைகள்

மார்கழி மாதம் தேர்த்திருவிழா 1 நாள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் மஹாசிவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் தேர்த்திருவிழா 1 நாள் தேரோட்டம் நடைபெறுகிறது.🌐

அருகில் கரிவரதராஜ பெருமாள் ஆலயம் உள்ளது.

13.09.2025 சனிக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 13.5.25

அன்னூர் - கரிவரதராஜப் பெருமாள்கரிவரதராஜ பெருமாள் ஆலயம்.அன்னியூர் - அன்னூர் - பிரதோஷக் குழு யாத்ரா 13.9.25

அன்னூர் - கரிவரதராஜப் பெருமாள்
கரிவரதராஜ பெருமாள் ஆலயம்.

அன்னியூர் - அன்னூர்

புகழ்வாய்ந்த தேவர வைப்புத்தலம் அருகில் அமைந்துள்ளது.

கிழக்குப் பார்த்த சன்னதி. ஆலயம் நுழைவு வடக்கில், வாகன நிறுத்தம், அருகில் புகழ்பெற்ற மன்னீஸ்வரர் சிவ ஆலயம் உள்ளது.

தூய்மையாகவும், நல்ல முறையிலும் பராமரிப்பிலும் உள்ளது.
(படங்கள் - சிவ ஆலயம்)

13.09.25 #சுப்ராம்தரிசனம்
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#சுப்ராம்தரிசனம் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#பிரதோஷக்குழுயாத்ரா 13.09.25
கொங்குநாட்டுத்தலங்கள்


கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் பிரதோஷக்குழுயாத்ரா 13.09.2025#சுப்ராம்தரிசனம்# கொங்குநாட்டுத்தலங்கள்

கோவில் பாளையம் - காலகாலேஸ்வரர்

கோவில்பாளையம் - காலகாலேஸ்வரர்
அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில் கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், சர்க்கார்சாமக்குளம் கிராமம், கோயில்பாளையத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் 13ம் நூற்றாண்டை சார்ந்ததாக கருதப்படுகிறது. இத்திருக்கோயிலின் மூலவர் அருள்மிகு காலகாலேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.திருக்கடவூரில் மார்கண்டேயர் உயிரைபறிக்க எமதர்மராஜன் முயன்றபோது சிவபெருமானால் தன் சக்தியை இழந்த எமதர்மராஜன் (காலன்) இத்திருக்கோயிலில் காலகாலேஸ்வரரை வழிபட்ட பின்பு இழந்த சக்தியை மீண்டும் பெற்றார். ஆயுள் ஹோமம், உக்ரஹர சாந்தி, சஷ்டியப்தபூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம்) போன்ற ஹோமங்கள் இத்திருக்கோயிலில் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு குருபெயர்ச்சி அன்றும் குரு இலட்ச்சார்ச்சனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.🛕

இது ஒரு சிவன் கோவில் ஆகும். இங்கு சிவன் காலகாலேசுவரராக எழுந்தருளியுள்ளார். இக்கோவிலின் அம்மன் கருணாகரவல்லி (பார்வதி). கொடிமரத்திற்கு அடுத்து வரும் நுழைவாயிலுக்குள் சென்றதும் இடப்புறம் சந்திரனுக்கும் வலப்புறம் சூரியனுக்கும் சிறியதாய் தனிச் சன்னிதிகள் உள்ளன. அடுத்து பலிபீடமும் நந்திதேவரும் உள்ளனர்.🌐

சுவாமி சன்னிதிக்கு இடப்புறம் அமைந்துள்ள கருணாகரவல்லி அம்மன் சன்னிதியின் முன்பகுதியில் இடப்புறம் பூதேவி, ஸ்ரீதேவியுடன் பெருமாளும் வலப்புறம் துர்க்கையும் உள்ளனர். சுவாமி சன்னிதிக்கும் அம்மன் சன்னிதிக்கும் இடையில் வள்ளி தெய்வானையுடன் முருகன் கால சுப்பிரமணியர் என்ற பெயருடன் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். சுவாமி சன்னிதியின் வெளிச்சுற்றுச் சுவரின் பின்புறத்தில் சண்டிகேசுவரருக்கு எதிரில் பிரம்மாவும் உள்ளார். இத்திருக்கோயில் உள்ளே கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. சிவன் கோவிலில் விஷ்ணு, பிரம்மா இருவரும் வழிபடப்படுவது இக்கோவிலின் சிறப்பு.

தட்சினாமூர்த்தி மிகப்பெரிய அமைப்பு

கோவில் பிரகாரத்தில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு நாயன்மார்களின் திருவுருங்களும் தனியிடத்தில் அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது.🌐

தலவரலாறு
விசுவாமித்திரர் தவம் செய்து விசுவாமித்திர முனிவராக மாறிய கௌசிக மன்னர் இத்திருத்தலத்தில் யாகம் செய்ததால் கௌசிகபுரி எனும் பெயர் பெற்றது. யாகம் செய்த இடம் ’திருநீற்றுமேடு’ என்று வழங்கப்படுகின்றது.🌐

எமதேவர்

திருக்கடையூரில் மார்க்கண்டேயரையும் சிவபெருமானையும் அவமதித்ததற்குப் பரிகாரமாக சிவபெருமான் எமதேவனை கொங்கு நாட்டின் கோவில்பாளையத்தில் வழிபடக்கூற, அவ்வாறே இங்கு வந்து தமது தண்டத்தினால் பூமியை அழுத்தி தீர்த்தம் ஏற்படுத்தி, அதனை பயன்படுத்தி மண்ணைக்குழைத்து சிவலிங்கத் திருமேனி செய்து வழிபட்டு பலன் பெற்றார் எமதேவர். தரிசனமளித்த சிவபெருமானிடம் எமதேவர் திருக்கடையூரில் தரிசிப்போருக்குத் தரும் பலனை இத்தலத்தில் தரிசிப்போருக்கும் தர வேண்டினார்.சிவபெருமானும் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதால் அன்றுமுதல் திருக்கடையூருக்கு இணையான திருத்தலமாக வழிபடப்படுகின்றது.🌐

கரிகால் சோழன்

காரணமின்றி ஓர் இளம் பன்றியைக் கொன்ற பாவம் தீர நாரதர் அறிவுரைப்படி இத்திருத்தலத்தில் வழிபட்டு பன்றியைக் கொன்ற பாவத்திலிருந்து விமோசனம் பெற்றார் மன்னர் கரிகாற் சோழன்.🌐

கரிகால் சோழர் வில், அம்புடன் கூடிய நஞ்சுண்டேஸ்வர சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து திருக்கோயிலைப் புனர்நிர்மாணம் செய்தார்🌐
சிறப்பு
திருக்கடையூர் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் சக்தி கொண்ட திருத்தலமாகப் பெருமை பெற்றாற்போல இத்திருத்தலம் திருக்கடையூருக்கு இணையாகக் கூறப்படுகின்றது.🌐

மேலும் சில குறிப்புகள்:
ஆலயம் முன்புறம் கல்தீபத்தூன் மண்டபம் உள்ளது.
3 நிலை ராஜகோபுரம் உள்ளது.
சுவாமி, முருகன், அம்பாள் தனித்த சன்னதிகள் அனைவரும் கிழக்குநோக்கிய அமைப்பு.
சுவாமி கருவரை சன்னதிக்கு முன்பு பெரிய நீண்ட மண்டபம் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றது.

பிரார்த்தனை தலமாக விளங்குவதால் அதற்குரிய பூசை முறைகளுக்கு குருக்கள்கள் இருப்பதால் கூட்டம் இருந்து கொண்டே உள்ளது.

ஆலய முன் பகுதியில் இடது புறம் அ/மி. வன்னியப் பெருமான் ஆலயமும், இடது புரத்தில் பொற்கொடியம்மன் ஆலயமும் இணைந்துள்ளன.

13.09.25 சனிக்கிழமை
#சுப்ராம்

13.09.25 சனிக்கிழமை
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 13.09.2025
#சுப்ராம்தரிசனம்
# கொங்குநாட்டுத்தலங்கள்

மருதமலை - பிரதோஷக்குழு யாத்ரா -கொங்குநாட்டுத்தலங்கள் - 13.9.25

மருதமலை
மருதமலைக்கு நீங்க வந்து பாருங்கள்....

முருகன் தலம்
7வது படை வீடாகக் கருதப்படுகிறது.

அடிவாரத்தில் இருந்து படிகள் அமைக்கப்பட்டுள்ள நல்ல வழி உள்ளது.

ஆலயம் சார்பாக பேருந்து Rs.10/-
தூய்மையாகப்பராமரிக்கப்படுகிறது.

ஆதிமூலவர் சன்னதி,
பாம்பாட்டி சித்தர் குகை உள்ளது.
மூலவர் பாலசுப்பிரமணியர் தனி கருவரை.
தென்புறம் சிவன் தனி சன்னதி,
வடக்கு புறம் முருகர் சன்னதிக்கு முன்புறம் பெருமாள் தனி சன்னதி,

மலை அடிவாரத்தில் இருந்து ஆலயம் செல்ல வாகனங்கள் காலை 7 மணி முதல் அனுமதி. மலைக் கோவில் சிற்றுந்துகள் மூலமாக ஆலயம் அடையலாம்.

நடந்து செல்பவர்களுக்கு நல்ல படிக்கட்டுகளுடன் கூடிய பாதை உள்ளது.

மேலே வாகனம் நிறுத்துமிடம், கழிவரை வசதிகள் உள்ளன. வேறு சிறுகடைகள் ஏதும் இல்லை.

ஆதிமூல நாதர் தனி ஆலயம் தரிசித்து, தலமரம் பின் முருகர் ஆலயம். நீண்ட முன்மன்டபங்கள்.

 பொது சிறப்பு ரூ 50 வழி தரிசனம் செய்யலாம்.

அமைதியான அழகான மலை. ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். விசேஷ நாட்களில் மிக அதிக கூட்டம். உள்ளது.

மீள் தரிசனம்.
13.09.2025 #சுப்ராம் தரிசனம்
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
# பிரதோஷக்குழு யாத்ரா 
# கொங்குநாட்டுத்தலங்கள்

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி -பிரதோஷக்குழுயாத்ரா 14.9.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி திருஆவினன்குடி - குழந்தைவேலாயுத சுவாமி திரு என்ற இலக்குமி தேவியும், ஆ என்ற காமதேனுவும், இனன் என்ற சூ...