விக்கிரமசிங்கபுரம் - பாபநாசம்
17.8.25
அருள்மிகு
ஶ்ரீ வழியடிமை கொண்ட நாயகி சமேத ஶ்ரீ சிவந்தியப்பர் சுவாமி திருக்கோயில்,
விக்கிரமசிங்கபுரம்,
அம்பாசமுத்திரம் (பாபநாசம்) வட்டம்,
திருநெல்வேலி மாவட்டம்.
சமீப காலத்தில் சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ள
இந்த பழமையான திருத்தலத்தில்
நம் இனிய ஈசன்,
ஸ்ரீ சிவந்தியப்பராக அருட்காட்சியளித்திட,
நம் பராசக்தி
ஸ்ரீ வழியடிமை கொண்ட நாயகி எனும் வித்தியாசமான திருப்பெயருடன்
நின்ற கோலத்தில் அழகுத்திருக்காட்சியளிக்கிறாள்.
(தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் இவளை உளமார பற்றிக்கொண்டால்,
வாழும் காலம் சிறப்பாகவும், வாழ்கைக்கு பிறகு மீண்டும் பிறப்பற்ற முக்திநிலையடையவும்
வழிகாட்டியாக இருப்பாள் என்பதின் பொருள்தான் ஸ்ரீவழியடிமை எனும் திருப்பெயராம்.
இந்த அம்பிகையை
"மார்க்க சம்ரக்ஷணி" என்றும் அழைப்பர்)
ஒரு வரலாற்று நிகழ்வின்படி;
தான் அரசாளும் நிர்வாகமும்,
தன் நாட்டு மக்களின் நலமும் சிறக்க வேண்டி,
சிவபெருமானின்மீது அதீத பக்தி கொண்டிருந்த
சிவந்தியப்ப நாயக்கர் என்ற குறுநில மன்னரால் 1625-ஆம் ஆண்டு கட்டப்பட்ட சிவாலயமாம். அதனாலேயே,
அம்மன்னரின் பெயரை
இறைவனுக்கு சூட்டியுள்ளனராம்..
ஸ்ரீ நடராஜர் தலைப்பாகை அணிந்து (நம்ம கொங்கு மண்டலத்து உருமாலைக்கட்டு போல) காட்சியளிப்பது
மற்றுமொரு தலச்சிறப்பாகும்.
(காண்பதற்கு அரியானா திருக்காட்சியாக,
ஆறு திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுடன் எம்பெருமான் முருகன்
நடுநாயகமாக வீற்றிருக்க ஸ்ரீவள்ளியும், தெய்வானையும்,
வலது பக்கமும்,
இடது பக்கமுமாக இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தபடி அருள்பாலிப்பது தலச்சிறப்புக்களில் ஒன்றாகும்)
உள்ளூர் மக்களைத் தவிர, வெளியூர் பக்தர்களால் அதிகம் அறியப்படாத பழமைவாய்ந்த தலங்களுள் ஒன்றான இத்திருக்கோவிலின்
அருகே உள்ள
பிரசித்தி பெற்ற
பாபநாசம் ஆலய இறைவன் போன்றே, இத்தல சிவந்தியப்பரும் சிறப்புவாய்ந்தவராக விளங்குவதால், பாபநாச கோவில் திருவிழாக்கள் அனைத்தும்,
இங்கும் சிறப்புற நடைபெறுமாம்.
நலமும், வளமும் சிறக்க
நடைபெறும் பிரதோஷ வழிபாடு தலவிசேஷம்.
சித்திரைத்தேர் திருவிழா தலபிரசித்தம்).
- இணையத்திலிருந்து ....
நன்றி🙏
ஆலயம் கிழக்குநோக்கி ராஜகோபுரத்துடன் மிக சிறப்பான உள் அமைப்புகளுடன் நிறைந்து விளங்குகிறது.
நல்ல பராமரிப்பில் உள்ளது.
சுவாமி முன்புறம் முககவசத்துடனும் உள்ளார் கிழக்கு நோக்கிய கருவரை, அம்பாள் தெற்கு நோக்கிய அழகிய அமைப்பு உள்னர்.
#பிரதோஷக்குழுயாத்ரா
17.8.25
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment