Saturday, August 23, 2025

கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - (குலசேகரமுடையார்) - பிரதோஷக்குழு யாத்ரா 17.8.2025

#கல்லிடைக்குறிச்சி - 
குலசேகரமுடையார் ஆலயம்

17.8.25 #கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - குலசேகரமுடையார்
அம்பாள் = தர்மசவர்த்தினி (அறம் வளர்த்த நாயகி)

திருநெல்வேலி - பாபநாசம் பிரதான சாலையில் ஆலயம் உள்ளது.

ராஜகோபுரம் - காட்சி கோபுரமாக அமைத்துள்ளனர்.

நீண்ட முன் மண்டபம். கொடிமரம், நந்தி உடையது.

சுவாமி கருவரை முன் வினாயகர், மற்றும் முருகர் உள்ளனர்.

அம்பாள் தனி கருவரையில்

பிரகாரத்தில் சன்டிகேஸ்வரர் நாகர் முதலிய சன்னதிகள் உள்ளன.

சிறப்பான பூசை வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

#பிரதோஷக்குழுயாத்ரா 

17.8.25 தரிசனம்.

#என்றும்_அன்புடன் 

#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 

#சுப்ராம்

கல்லிடைக்குறிச்சி மானேந்தியப்பர் - வடிவாம்பிகை ஆலயம் - பிரதோஷக்குழு யாத்ரா - 17.8.25

17.8.25 #கல்லிடைக்குறிச்சி

 மானேந்தியப்பர் - வடிவாம்பிகை ஆலயம்

கிழக்குப் பார்த்த ஆலயம் 3 நிலை ராஜகோபுரம், முன்மண்டபத்துடன் உள்ள ஆலயம்.

உள் நீண்ட மண்டபத்தில் கொடி மரம், நந்தி அமைந்துள்ளது.

உள் பிரகார நுழைவில் விநாயகர், சுப்பிரமணியர் துவாரபாலகர்கள்.

உள்பிரகாரத்தில் சுவாமி தன் கருவரை முன்மன்டபத்துடன் கிழக்கு நோக்கியும்,

அம்பாள் தெற்கு நோக்கிய கருவரையிலும் இருந்து அருள் தருகிறார்கள்.

தனி பள்ளியரை, நடராஜர் சன்னதிகள் உள்ளன.

உள் பிரகாரத்தில், சன்டிகேஸ்வரர் மற்றும் நாகர்கள் உள்ளனர்.

மிகப்பழமையான ஆலயம்.

கன்னுவ மகரிஷி வணங்கியது. புனரப்பை செய்து, பராமரித்து, பூசைகள் நடத்தி வருகின்றனர்.

பள்ளியரை பூசை சிறப்பு. மாலை 7.30 அளவில் துவங்குகிறது.

தரிசிக்க வேண்டிய ஆலயம்.
#கல்லிடைக்குறிச்சி 

#பிரதோஷக்குழுயாத்ரா 

17.8.25 தரிசனம்
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 

#சுப்ராம்

அந்தாளநல்லூர் - ஆகாயதலம் முன்றீஸ்வரமுடையார் - மரகதாம்பிகை17.8.2025 - பிரதோஷக்குழு யாத்ரா 17.8 2025

#அந்தாளநல்லூர் - 

ஆகாயதலம் முன்றீஸ்வரமுடையார் - மரகதாம்பிகை
17.8.2025

பஞ்ச குருதலங்களில் இது ஆகாய தலம்.

இரண்டு பிரகாரங்கள் உடைய கற்றளி

சுவாமி முன் மண்டபத்துடன் உள்ள தனி கருவரையில் உள்ளார்.

பிரகாரத்தில் உள்ள தட்சினாமூர்த்தி - பாதம் ஆகாயம் நோக்கி அமைந்துள்ளது.

வேறு எங்கும் காண முடியாதது.

பிரகார மண்டபங்களில், சனீஸ்வரர், லிங்கங்கள் தனித்தனியாக உள்ளன.

அடியார்கள் பராமரிப்பில் இந்த ஆலயம் உள்ளது. உடனடியாக சீர் செய்யப்பட வேண்டிய பழமையான ஆலயம்.

மிக அருகில் திருப்புடைமருதூர், முதலிய முக்கிய தலங்கள் உள்ளன.

#பிரதோஷக்குழுயாத்ரா 

17.8.25 

#என்றும்_அன்புடன் 

#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 

#சுப்ராம்

கன்னியாகுமரி - பிரதோஷக்குழு யாத்ரா 16.8.2025

கன்னியாகுமரி 16.8.25
16.8.2025 மீள் தரிசனம்

கிழக்கு பார்த்த கருவரை சன்னதியில் பகவதி அம்மன் நின்ற கோலம். மூக்குத்தி வெளிச்சம் கவனிக்கத் தக்கது. அம்மன் நின்ற கோலத்தில் தவம் புரிவதாக புராணம்.

பகவதி அம்மன் கிழக்கு நோக்கியவாறு அலங்காரத்துடன் சிறப்பு

3 பிரகாரங்கள்.
உள் பிரகாரத்தில்... விநாயகர், சூரியன், தியாக சௌந்தர்யம்மன், பால சௌந்தரியம்மன் உள்ளனர்.
ஆலயம் - கடல் சுற்றி 11 தீர்த்தங்கள் உள்ளன.
வைகாசி - விசாகம் - பிரம்மோட்சவம்
அன்னையே பிரதானம்.

முழுவதும் கற்றளி .

பைபொருட்கள் ரூ 20/- கொடுத்து Token பெற்றுக் கொள்ளலாம். ஆலயம் உள் பகுதியில் வசதி உள்ளது. செருப்பு ஆலய வெளியில் போட்டுவிட்டு உள்ளே செல்ல வேண்டும்.

காலையில் 7-9.30 வரை சிறப்பு ஹோமம் நடைபெற்ற போது பொது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

ரூ20/- சிறப்பு தரிசன வரிசையும் உள்ளது.

பக்தர்கள் கூட்டம் அதிகம்.

பல மாநில மக்கள் வந்து தரிசனம் பெறுகிறார்கள். 

பிரதோஷக்குழுயாத்ரா
சுப்ராம்.

16.8.25
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

திருப்புடைமருதூர் கோமதி அம்மன் சமேத நாறும்பூநாதர் ஆலயம். - பிரதோஷக்குழு யாத்ரா 17.8.2025

#திருப்புடைமருதூர்

17.08.25 மீள் தரிசனம்

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள #திருப்புடைமருதூர் மிகப்புராணத்தலம்.

கோமதி அம்மன் சமேத நாறும்பூநாதர் ஆலயம்.

தல சிறப்பு

முன்னொரு சமயம்…. ‘காசிக்கு நிகரான தலத்தைக் காட்டுமாறு சிவனாரிடம் தேவர்கள் வேண்டினர். தேவர்களின் கையில் ஒரு பிரம்ம தண்டத்தைக் கொடுத்து அதைக் கீழே போடச் சொல்ல, தேவர்களும் போட்டனர். அது, தாமிரபரணி ஆற்றில் விழுந்தது. “இந்த பிரம்ம தண்டம் எங்கு கரை ஒதுங்குகிறதோ, அதுதான் காசிக்கு நிகரானது” என சொன்னாராம். அதே போல, அத்தண்டம், தட்சிண காசியான திருப்புடைமருதூர் ஆற்றங்கரையோரம் ஒதுங்க, அங்கு பிரம்ம தண்டத்துக்குப் பூஜை செய்து சிவனருளைப் பெற்றனர்.

ஆலயத்தில் சூரியன் அருகில் பிரம்மதண்டம் பிரதிஷ்டை தனி சன்னதியில் உள்ளது.

பிற்காலத்தில் களக்காடு பகுதியை ஆட்சி செய்த வீரமார்த்தாண்டவர்ம மன்னன், மருதமரங்கள் நிறைந்த வனமாக இருந்த இப்பகுதிக்கு வேட்டையாட வந்தான். அப்போது ஒரு மானைக் கண்டு அதனை வீழ்த்த அம்பு எய்தார். அப்போது அந்த மான், ஒரு மருதமரத்தின் அடியில் சென்று மறைந்தது. மானை, மீட்க அந்த மரத்தை வெட்டும்படி உத்தரவிட்டார் மன்னர். அதன்படி கோடாரியால் மரத்தை வெட்ட ரத்தம் பீறிட்டது. அங்கு வெட்டுபட்ட நிலையில் லிங்கத்திருமேனியாய் சிவனாரைக் கண்ட மன்னர் மனமுருகி வேண்டி, அந்த இடத்திலேயே ஆலயம் எழுப்பினார்.

சிவபக்தரான கருவூர் சித்தர், பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து விட்டு வந்தவர், தாமிரபரணியில் வடக்குக்கரை வழியாக வந்த போது மறுக்கரையில் இக்கோயிலைக் கண்டார். ஆனால், ஆற்றைக் கடக்க முடியாதபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இங்குக் கோயில் கொண்டுள்ள இறைவனின் பெயர் அறியாத கருவூர் சித்தர், அப்பகுதியிலிருந்து வந்த மலர்களின் மணத்தை முகந்து, “நாறும்பூவின் (மணக்கும் பூக்களின்) நடுவில் வீற்றிருக்கும் இறைவனே உன்னை தரிசிக்க அருள் புரிவாயா?” என இறைவனின் திருநாமத்தைச் சத்தமாகச் சொல்லி அழைத்து, “பரம்பொருளே.. உன்னை தரிசிக்க எனக்கு பாக்கியம் கிட்டவில்லையா? ஆற்றை, கடக்க முடியாதபடி வெள்ளமாகச் செல்கிறதே.. நான் சொல்லுவது உனக்கு கேட்கவில்லையா? உன் காதுகளில் விழவில்லையா?”என இருகரம் கூப்பிக் கேட்க, இறைவன் தனது திருமேனியை இடப்பக்கம் சரித்து செவிமடுத்துக் கேட்டாராம்.

வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும்படி சித்தர் வேண்டிக் கேட்க, வெள்ளம் குறைந்து கருவூர் சித்தர், நாறும்பூ நாதரை தரிசனம் செய்ததாகவும், ”தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளையும் செவி மடித்துக் கேட்க வேண்டும்” எனவேண்டியதாகவும் சொல்கிறது தலபுராணம்.

இதனால் இன்றும் சாய்ந்த நிலையிலேயே பக்தர்களுக்கு ஈசன் காட்சி கொடுக்கிறார். நாறும்பூ நாதரின் தலையில் வெட்டுப்பட்ட தடம் இருக்கிறது. காயத்தை ஆற்றும் விதத்தில் தினமும் சந்தனாதி தைலம் பூசிய பின்னரே அபிஷேகம் நடைபெறுகிறது. சுவாமிக்கு முன் வலதுபுறத்தில் பிரம்ம தண்டம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சுமார் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது இத்தலம். நீலக் கல்லில் உச்சி முதல் பாதம் வரை ருத்திராட்ச திருமேனியான கோமதி அம்பாள், அருளே வடிவாகக் காட்சியளிக்கிறார். பிரம்ம ஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்ட இந்திரன், தன் தோஷம் நீங்க இங்குள்ள தாமிரபரணி தீர்த்தக்கட்டத்தில் நீராடி நாறும்பூ நாதரை வழிபட்டதாக புராணம் கூறுகிறது. மருதபுரம், சுந்தரவனம், புடார்ச்சுனம், தட்சிணகாசி, சுரேந்திரபுரி என்ற பெயர்களும் இதற்கு உண்டு.

வசிஸ்டர், ஆதிமனுவுடன் இணைந்து இத்தல இறைவனின் திருமேனி மீது ’லேபனம்’ என்ற கஸ்தூரி மஞ்சள், புனுகு, சந்தனம் ஆகிய நறுமணக் கலவையைச் சாத்தி பூஜித்தனர். இதனால், இத்தல இறைவன் ‘லேபன சுந்தரர்’ என்றும் போற்றப்படுகிறார். இங்குள்ள நடராஜர் சிலை ஓம் வடிவ திருவாசியுடன் அமைந்துள்ளது. இங்குள்ள யோக தெட்சிணாமூர்த்தி இரு கால்களையும் மடக்கி அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார்.

இக்கோயிலின் கோபுரம் ஐந்து நிலைகளையும், பதினோரு கலசங்களையும் கொண்டுள்ளது. கோபுரத்தின் தளங்களில் மியூரல்- டெம்பரா வகைச் சுவரோவியங்கள் காணப்படுகிறது. இந்த ஓவியங்களில் திருவிளையாடற்புராணம், கந்த புராணம், பெரிய புராணம் தொடர்பான ஓவியங்களும் சீன நாட்டு வணிகர்களின் உருவங்களும் இடம் பெற்றுள்ளன. பாண்டியர்களால் கட்டப்பட்ட கருவறை, சோழர்கள், விஜயநகரப் பேரரசர்கள், நாயக்கர்களால் செய்யப்பட்ட திருப்பணிகள் என மிகப்பெரும் கோயிலாக காட்சியளிக்கிறது. தல விருட்சமான மருதமரம், தற்போது படித்துறையில் காய்ந்த நிலையில் உள்ளது. இம்மரத்தின் கீழ் சிவலிங்கமும், லிங்கத்தைக் கைகூப்பி வணங்கிய இந்திரனும் வடிக்கப்பட்டுள்ளார்கள். இங்குள்ள தாமிரபரணியில்தான் ராமநதியும், கடனாநதியும் கலக்கிறது.

ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீசைலத்தை ’உத்திரகாசி’ எனவும், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை ‘மத்திய காசி’ எனவும், திருப்புடைமருதூரை ‘தட்சிணகாசி’ என, இந்த மூன்று தலங்களின் விருட்சங்கள் மருதமரம் என்பதால் இவற்றை காசிக்கு இணையாக ஒப்பிடுகிறார்கள் பக்தர்கள்.

தலைசாய்த்து செவி மடுத்துக் கு றைகளைக் கேட்டு வரமளிக்கும் நாறும்பூநாதருக்கு வெள்ளை வஸ்திரம், வெண் தாமரை மலர் மாலை சாற்றி சுத்த அன்னம் நைவேத்யம் செய்து வழிபட்டால், எந்த வேண்டுதலானாலும் நிறைவேறும் என்கிறார்கள்.

.... இணையத்திலிருந்து .... நன்றி🙏

பல்வேறு சிறப்புகள் பெற்ற மிகவும் பெரிய ஆலயம் சிதைந்த நிலையில் இருந்ததை, உச்சநீதிபதி திரு ரெத்தினவேல் பாண்டியன் அவர்கள் முன்முயற்சியுடன், பல்வேறு ஆன்மீக பெரியவர்கள், மற்றும் ஆன்மீக அமைப்புகளும் இணைந்து ஆலயத்தை சீர்படுத்தி குடமுழுக்கு நடத்தி, பராமரித்து வருகிறார்கள்.

மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருஷ்ட்சம் என எல்லாமே சிறப்பு வாய்ந்த ஆலயம்.

5 பிரகாரங்கள் கொண்டது. 

உள்பிரகாரத்தில், கன்னி விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், 63 நாயன்மார்கள், அகத்தியர், சனீஸ்வரர், சரஸ்வதி, சகஸ்ரலிங்கம், மற்றும் நடராஜர் சன்னதிகள் உள்ளன.

தலவிருட்சம் - மருதமரம் தலமரம் 1200 வருடங்கள் பழமையான பாகம் தனி சன்னதியாக ஆலயம் பின்புறம் நதி ஓரம் வணங்கப்பட்டு வருகிறது.

பிரம்மஹத்தி தோஷம் நீங்க பிரம்மன், மருதமரம் அருகில் தவம் செய்து சிவன் அருள் பெற்றார்.

பிரம்மன் புதல்வர் சுயம்புமானு , சரஸ்வதி, திருமகள் , பூமிதேவி வழிபட்ட தலம்.

தைபூசம் பிரம்மோட்சவம். மிகவும் முக்கிய நாள் கொண்டாடப்படுகிறது.

நாள்தோறும் 6 காலம்

தாமிரபரணி உத்திரவாகினியாக இணை ஆறு கலந்து பிரவாகம். நீராடல் சிறப்பு.

வாழ்வில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய நெல்லை மாவட்டத்தலங்களின் ஒன்று.

#பிரதோஷக்குழுயாத்ரா 
17.8.25 மீள் தரிசனம்

#என்றும்_அன்புடன் 

#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#சுப்ராம்

அரிகேசவநல்லூர்அரியநாதர் - பெரியநாயகி அம்மன், ஆலயம் பிரதோஷக்குழுயாத்ரா 17.8. 25

#அரிகேசவநல்லூர்

அரியநாதர் - பெரியநாயகி அம்மன், ஆலயம்
பிரதோஷக்குழுயாத்ரா
17.8.20 25தரிசனம்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ளது.
பஞ்சகுரு ஸ்தலங்களில் ஒன்று.
- இது குபேரதலம்

சுமார் 1600 ஆண்டுகள் பழமையானது.

கிழக்குநோக்கிய ஆலயங்கள்

சுவாமி அம்பாள் தனித்தனி ஆலயமாக அருகருகே அமைந்துள்ளது.

ராஜகோபுரம் இல்லை.

 முன்புறம் கல் மண்டபம் மற்றும் ஒரு அழகிய கற்குளம் அமைந்துள்ளது.

சுவாமி ஆலயம் அடுத்து இடது முன் புறம் அம்மன் பெரியநாயகி ஆலயம் தனியாக உள்ளது.

மிகப்பெரியவளாகமாக இருந்து பின் புனரமைக்கப்பட்ட வழிபாட்டுத்தலம்.

சிறப்பு பூசை பரிகாரம் முதலிய சிறப்புகள் நடைபெற்று வருகின்றன.

நல்ல பராமரிப்பில் உள்ள ஆலயம்.

சுவாமி கிழக்குப் பார்த்தும் அம்பாள் தனி ஆலயமாக கிழக்குப் பார்த்தும் தனித்தனி ஆலயமாக உள்ளது. 

முழுவதும் கற்றளி

சுவாமி ஆலயம் கருவரை பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி கால் மடக்கிய நிலையில் கம்பீரமான அமைப்பில் சிறப்பாக உள்ளார். 

எதிர்புறத்தில் சப்தமாதர்கள். மற்றும் கோஷ்ட்ட தெய்வங்கள்

வெளிப்பிரகாரத்தில் தென்புறம்

ஜேஷ்ட்டா தேவி - மகன் மாத்தியுடன் தனி சன்னதியுடன், மகன்கள் மாந்தியுடன் பக்தர்கள் வேண்டுதலுக்கு அருள் தருகிறார்.

மாந்தி பரிகார பூசை வழிபாடுகள் நடைபெறுகின்றன.

ஆலய வடபுறம் தனியா குபேரன் சன்னதி.

குபேரன் வழிபாடு செய்து சிறப்பு பெற்ற வரலாறு.

குபேரனுக்கு தனி சிறப்பு. தீபாவளி அன்று மிகவும் சிறப்பு பூசைகள் உண்டு.

பிரார்த்தனை வழிபாடுகளுடன் ஆலயம் சிறப்பாக உள்ளது.
#பிரதோஷக்குழுயாத்ரா 

 17.8.2025 தரிசனம்

#என்றும்_அன்புடன் 

#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#சுப்ராம்

வீரவநல்லூர் - பூமிநாதர் - மரகதாம்பிகை அம்மன் திருக்கோவில். பிரதோஷக்குழுயாத்ரா 17.8.25

#வீரவநல்லூர் - பூமிநாதர் - மரகதாம்பிகை அம்மன் திருக்கோவில்.
பிரதோஷக்குழுயாத்ரா 
17.8.25
17.8.25 தரிசனம்

மிகப் பழமையான சிவாலயம். எழுநிலை ராஜகோபுரம் அழிபட்டு, பின் சிறிய காட்சி கோபுரத்துடன் தற்போது காணப்படுகிறது. 

முக மண்டபம் பெரியது, நடராஜர் சபை, அலங்கர மண்டபத்துடன் கற்றளியாக உள்ளது.

உள் கோபுரம் பிரகாரம் சுவாமி கருவரை கிழக்கு நோக்கியும், அம்பாள் தனி கருவரையும் உள்ளது.

சிதலமடைந்து விட்டிருந்த பெரிய ஆலயம் தற்போது முழுவதுமாக மீட்டு பரமரிப்பும், பூசை நடைமுறைகளும் நடைபெற்று வருகிறது.

தலவிருட்சம் - புன்னைமரம்

இரண்டு பிரகாரங்கள் 

- கன்னி விநாயகர், முருகன், நாயன்மார்கள், சப்த கன்னியார், சூரியன், வைரவர், கலைமகள், காசிவிசுவநாதர் மற்றும் நவகிரகங்கள் உள்ளனர்.

உள் வெளி பிரகாரம், உள்ளடக்கிய சுற்று சுவர் உள்ளது.

புதிய தேர்கள் செய்யப்பட்டு ஆலயம் முன்பு உள்ளது.

ஆலயம் முன்புறம் பெரிய கற்குளம் தெப்ப மண்டபத்துடன் உள்ளது.

தேர் - தெப்பம் , திருக்கல்யாணம் முதலிய திருவிழாக்கள் சிறப்பாக நடை பெறுகிறது.

பூமிநாதர் பல்வேறு புராணங்களிலும், அரசர்களாலும் போற்றப்பட்டு வணங்கப்படுகிறார்.

எமன் சம்காரத்தால் எமன் கொடியாக மாறி இத்தலத்தில் கிடக்க, பூமி பாரம்தாங்க முடியாமல், பூமாதேவி இத்தலத்தில் சிவனை வழிபட்டு எமன் உயிர் பெற்றார். பூமாதேவிக்கும் அருள் கிட்டியது.

அதிவீர பாண்டிய மன்னன் கட்டிய ஆலயம் அதனால், இவ்வூர் அதி வீர நல்லூர் என்ற பெயர் பெற்றது.

   பூமி பிரச்சனைகள், குழந்தை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள். 

திருமண தடைகள் நீக்கம் முதலிய விஷயமாக தீர்த்து நல்லருள் பெற இவ்வாலயம் தொழுவீர்.

மார்கழி திருவாதிரை பிரம்மோட்சவம், ஐப்பசி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
#பிரதோஷக்குழுயாத்ரா 
17.8.25

#என்றும்_அன்புடன் 

#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#சுப்ராம்

அம்பாசமுத்திரம் - அகத்தீஸ்வரர் ஆலயம்17.08.25 அகத்தீஸ்வரர் - லோபமுத்திரை ஆலயம். பிரதோஷக்குழு யாத்ரா 17.8.25

#அம்பாசமுத்திரம் - அகத்தீஸ்வரர் ஆலயம்
17.08.25 அகத்தீஸ்வரர் - லோபமுத்திரை ஆலயம். தரிசனம். 

அம்பாசமுத்திரத்தில் பிரதான சாலையில் உள்ளது.

 கிழக்கு ராஜகோபுரத்துடன். வடக்குபுறம் காட்சிக் கோபுரம் உள்ளது.

கருவரையில் கிழக்கு நோக்கிய அகத்தியர், தெற்குப்பார்த்த சன்னதியில் லோபமுத்திரை. முழுவதும் கற்கோவில்

பிரகாரத்தில், தெட்சினாமூர்த்தி, சண்டிஸ்வரர், தனி நடராஜர் சன்னதி உள்ளது. விநாயர், சுப்பிரமணியர் பிரகாரத்தில்.

செங்குந்த முதலியார் பாத்தியப்பட்டது.

17.08.25 தரிசனம்.

#சுப்ராம்

இணையத்திலிருந்து .....

*அம்பாசமுத்திரம் அகத்தீசுவரர் சுவாமி கோவில் - அகத்தியர் பெருமான் தனி கோயில்*

*அன்னமிடுதல் உற்சவம் - அன்னப் படையலில் பதியும் அகத்தியரின்‌ பிரம்படி தடமும், காலடிச் சுவடும் தெரியும் அரிய காட்சி*

கருவறையில் அகத்தீசுவரரும், தெற்கு நோக்கிய கருவறையில் அகத்தியரின் மனைவி லோப முத்தரை அம்பாளும் அருள்கின்றனர். மூன்றடி உயர திருமேனியராய் நின்ற கோலத்தில் அருள்கிறார் அகத்தீசுவரர். வலக் கரம் சின்முத்திரை காட்ட, இடது கரத்தில் சுவடியை ஏந்தியிருக்கிறார்.

லோப முத்தரை அம்பாள் தனது கையில் மலர் ஏந்தி அருள்பாலிக்கிறாள்.

இந்தக் கோவிலில் பங்குனி 29-ம் நாள், பக்தர்கள் அகத்தியருக்குப் படையலிடுகின்றனர்.`அந்த அன்னப் படையலில், அகத்தியரின்‌ வாக்குப்படி அவரது காலடிச் சுவடும், பிரம்படி தடமும் பதிந்திருப்பது, இத்தலத்தில் நடைபெறும் அதிசய நிகழ்ச்சியாகும்.

சிவபெருமான் பார்வதி திருமணத்தைக் காண அகில உலகமும் கைலாயத்தில் கூடிய போது சிவபெருமான், உலகைச் சமன்படுத்த, அகத்தியரை தென்புலத்துக்கு அனுப்பினார்.

அம்பாசமுத்திரம் எனும் தலத்தை அடைந்த குறுமுனிவர், அங்கே ஒரு புளிய மரத்தடியில் தியானத்தில் ஆழ்ந்தார்.

அப்போது சிவ பக்தர்கள் பலரும் அகத்தியரை தரிசிக்க வந்தனர். தியானம் கலைந்த அகத்தியர், அவர்களுக்கு ஆசி வழங்கினார். மேலும் பக்தர்களில் ஒருவரிடம் 'எமக்குப் பசி எடுக்கிறது. அமுது அளித்து பசி தணிப்பீரா?' எனக் கேட்டார்.

அகத்திய முனிவருக்கு அன்னமிடுவது பெரும் பாக்கியம் எனக் கருதிய அந்த அன்பரும், தம் இருப்பிடத்துக்குச் சென்று அன்னம் தயார் செய்து எடுத்து வந்தார்.

ஆனால் அவர் வருவதற்குச் சற்று காலதாமதம் ஆகிவிட்டது. அகத்தியர் அந்த இடத்தில் இருந்து நகர்ந்துவிட்டார். அன்பர் மிகவும் மனம் கலங்கினார். அகத்தியரை மனதார துதித்து வழிபட்டார்.

அப்போது அவர் முன் தோன்றிய அகத்தியர், 'வருந்தாதே! தற்போது நேரமாகிவிட்டதால் நான் இங்கிருந்து புறப்பட வேண்டும். பங்குனி மாதம் வேடர் வடிவில் வருவேன்; நீ இடும் அன்னத்தைப் புசிப்பேன். அதற்கு அடையாளமாகப் படைக்கப் படும் அன்னத்தின்மீது என்னுடைய காலடிச் சுவடும், பிரம்படிச் சுவடும் தெரியும்!' எனக் கூறி மறைந்தார். அகத்தியர் தாம் வாக்களித்தபடி, பக்தர்கள் படைத்த அன்னத்தில் திருநடனமிட்டுப் பிரம்படிச் சுவடும் கால்சுவடும் காட்டி அருளினார்.

 இவ்வாறு அவர் அருள்புரிந்த இடத் தில், அகத்தியருக்கு அழகிய ஆலயம் அமைத்தனர் பக்தர்கள். 

தமிழகத்தில் அகத்தியருக்காக அமைந்த கோயில்களில் தனிச் சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது இந்த ஆலயம். 

ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் அன்னமிடுதல் உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெறுகிறது. பங்குனி 29-ம் நாள், பக்தர்கள் அகத்தியருக்குப் படையலிடுகின்றனர். '`அந்த அன்னப் படையலில், அகத்தியரின்‌ பிரம்படி தடமும், காலடிச் சுவடும் பதிந்திருப்பதைக் நாம் தரிசிக்கலாம். பின்னர் அந்த படையல் உணவு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

 இந்தத் தலத்துக்கு வந்து அகத்தியரைத் தியானித்து, `ஓம் அகஸ்தீஸாய நம!' என்ற மந்திரத்தை உச்சரித்து, நாம் உண்ண வேண்டிய மருந்தை உட்கொண்டால் நோய் விரைவில் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 தோல் நோய், சுவாசக் கோளாறு, நரம்புப் பிரச்னைகள், மனநோய் பாதிப்பு ஆகிய பிரச்னைகளால் அவதிப்பட்ட அன்பர்கள் பலரும் இங்கு வந்து அகத்தியரை வழிபட்டு நலம் பெற்று உள்ளார்கள்.
#பிரதோஷக்குழுயாத்ரா 

நன்றி🙏

#சுப்ராம்

17.08.25

#என்றும்_அன்புடன் 

#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

அம்பாசமுத்திரம் காசிபநாதர் மரகதவல்லியம்மன் ஆலயம். பிரதோஷக்குழு யாத்ரா 17.8.2025

#அம்பாசமுத்திரம் 
காசிபநாதர் மரகதவல்லியம்மன் ஆலயம்.
அம்பாசமுத்திரம் 

காசிபநாதர் மரகதவல்லியம்மன் ஆலயம்.

தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள, மிக பழமையான ஆலயம்.

- கிழக்குப் பார்த்த ஆலயம் 7 நிலை ராஜகோபுரம்.

-சப்தரிஷிகளில் ஒருவரான காஷிபமுனிவர் யாக நெருப்பிலிருந்து தோன்றிய லிங்கம் - காசிப லிங்கம்.
- நெல்லிமரம் - தலவிருட்சம்
- இரண்டு பிரகாரங்கள்
உள்பிரகாரத்தில் கோகில விநாயகர், முருகப்பெருமான், விசுவநாதர், விசாலட்சி, உள்ளனர்.

- 1000 வருடத்திற்கு முன் உள்ள கல்வெட்டுகள் உண்டு.

- நடராஜர் புனுகு சபாபதி - தைப்பூசம் வியக்கிழமையுடன் வரும் நாளில் புனுகு காப்பு சாற்றப்படும்.

- ஐப்பசி உத்திரம் நட்சத்திரத்தில் திருக்கல்யாணம் - நடைபெறுகிறது.
- பங்குனி பிரம்மோட்சவம் நடைபெறுகிறது.

- தலபுராணம் - அரிகேசநல்லூர் அரிகரமையர் அவர்களால் 20 சருக்கம் 1221 திருவிருத்தம் கொண்டது.
- தவறு செய்த அர்ச்சகர், சுவாமியால் சுட்டெரிக்கப்பட்டதும், தவம் செய்த அந்தனாரல் வேண்டி சுவாமி அதை ஏற்று அர்ச்சகரை உயிர்ப்பித்தார். இதனால் இறைவர் எரித்தாட் கொண்டார் என்று வணங்கப்படுகிறார்.

- அம்பாள் மரகதாம்பாள் கருணைக் கடலாய் அருளை வாரி வழங்குவதால் இவ்வூருக்கு அம்பாசமுத்திரம் என்ற பெயர்.

- கொடுக்கல், வாங்கல் பிரச்சனைகளுக்கு இவ்வாலயம் சென்று வழிபட்டால் இறை அருளால் தீர்க்கப்படுகிறது.

-மிகப்பழமையான ஆலயம் -புணரமைக்கப்பட்டு, திருக்குட நீராட்டு நடைபெறவேண்டி திருப்பணிகள் நடந்து கொண்டுள்ளது.

-தாமிரபரணி ஆறு ஆலயத்தின் அருகில் உள்ளது. ஏராமானோர் நீராடி ஆலயம் வணங்குகிறார்கள்.

17.8.25 Sunday அன்று தரிசனம்
#சுப்ராம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 
#நெல்லை

சிவசைலம் - சிவசைலநாதர் கோவில்ஸ்ரீ சிவசைலநாதர் - ஸ்ரீ பரமகல்யாணி ஆலயம் பிரதோஷக்குழு யாத்ரா 17.8.25

#சிவசைலம்
17.8.25 ல் மீள் தரிசனம்:
சிவசைலம் - சிவசைலநாதர் கோவில்
ஸ்ரீ சிவசைலநாதர் - ஸ்ரீ பரமகல்யாணி மிகவும் புகழ்வாய்ந்த புராதான ஆலயம்.

சுவாமி அம்பாள் தனித்தனி சன்னதிகளில் மேற்கு நோக்கிய அருட்பார்வைகள்

🛕திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் வழியாகத் தென்காசி செல்லும் சாலையில் ஆழ்வார்குறிச்சியின் மேற்கே ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
 (நெல்லைக்கு மேற்கே சுமார் 57 கி.மீ)
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கடனா நதிக்கரையில் அமைந்துள்ளது.

தேவார வைப்புத்தலம்.

🔱சடைமுடியோடு காட்சியளிக்கும் சிவபெருமான்

 இக்கோவிலின் புராணப் பெயர் 'அத்தீச்சுவரம்' ஆகும்.இறைவன் திருநாமம் சிவசைலநாதர். இறைவியின் திருநாமம் பரமகல்யாணி. இத்தலம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

 இத்தலத்தில் உறையும் மூலவர் சிவசைலநாதரை நான்கு திசைகளில் இருந்தும் வழிபடலாம். மேற்கு திசையில் கருவறை வாயில் வழியாகவும், மற்ற மூன்று திசைகளில் சுற்றுச்சுவரில் உள்ள சாளரங்களின் வழியாகவும் சுவாமியை தரிசிக்கலாம். இப்படி கருவறையின் மூன்று சுற்று சுவர்களிலும் சாளரம் உள்ள சிவாவயத்தை காண்பது அரிது.

சிவசைலம் திருக்கோவிலை கட்டியவன் சுதர்சன பாண்டிய மன்னன். ஒர் நாள் சிவசைலநாதரை தரிசிக்க சுதர்சன பாண்டிய மன்னன் கோவிலுக்கு வர, அப்போது கடனை ஆற்றில் வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடியது.

 இதனால் மன்னன் ஆற்றை கடந்து கோவிலுக்கு செல்ல முடியவில்லை. அதற்குள் இருட்டி விடவே அர்த்தசாம வழிபாடு முடிந்து கோவில் நடை சாத்தப்படுகிறது. எனவே மன்னனுக்கு, சுவாமிக்கு சாற்றிய பூ மாலை மற்றும் பிரசாதங்களை அர்ச்சகர் கொண்டு வந்து தருகிறார். அதனை பெற்று மகிழ்ந்த மன்னன் மாலையை கண்களில் ஒற்றிக் கொள்ள முற்பட்ட போது அதில் பெண்ணின் நீள தலை முடி ஒன்று இருப்பதை கண்டு சினம் கொள்கிறார். சுவாமிக்கு சாற்றிய மாலையில் கூந்தல் முடி எப்படி வந்தது என ஆவேசமாக கேட்க, செய்வதறியாத அர்ச்சகர் அது சிவசைலநாதரின் தலையில் உள்ள சடைமுடியே என கூறிவிடுகிறார். என்ன சுவாமியின் தலையில் சடைமுடியா? அந்த அதிசயத்தை நாளை எனக்கும் காட்ட வேண்டும் எனக் கூறி சென்று விடுகிறார்.

 மறுநாள் கோவில் திறக்கப்பட மீண்டும் மன்னன் தன் படைகளுடன் திருக்கோவிலுக்கு வருகிறார். தான் கூறிய பொய்யை நினைத்து பயந்து சிவசைலநாதரிடம் மன்னிப்பு கேட்டு தன்னை காத்து அருளும் படி அர்ச்சகர் மனதினுள் வேண்டிக் கொண்டே, மன்னன் முன்னிலையில் சுவாமி மீது சாத்தப்பட்டிருந்த நாகாபரணத்தை விலக்கி காட்டிட, சிவசைலநாத லிங்கத் திருமேனி சடை முடியோடு காட்சியளித்ததாம்

இதனைக் கண்டு அதிசயித்த மன்னன் சிவபெருமானை போற்றி துதித்து, அர்ச்சகருக்கும் வெகுமதி வழங்கி சிறப்பு செய்தான்.

எமனை நடுங்க வைத்து நமக்கெல்லாம் நல்ல அருள்பாலிக்கும் நாயகனை நாம் நான்கு திசைகளிலிருந்தும் தரிசிக்கக் கூடியதும் இத்தலத்தின் பெருமைகளில் குறிப்பிடத்தக்கது

 சிவசைலநாதர் சுயம்பு மூர்த்தி ஆவார். இவர் கருவறையில் சற்றே சாய்ந்த லிங்கத் திருமேனியாய் மேற்கு திசை நோக்கி காட்சியளிக்கிறார். இவர் அர்ச்சகரை காக்க சடைமுடியோடு காட்சியளித்ததால், இன்றும் இந்த லிங்கத் திருமேனியின் பின்புறம் சடைமுடிகளின் ரேகைகள் உள்ளன. இதனை நாம் பிரகார சுற்றுச்சுவரில் உள்ள சாளரம் வழியாக தரிசிக்கலாம்

🔱வீதி உலாவிற்கு தங்க கைக்கடிகாரம் அணிந்து வரும் அம்பிகை

இத்தலத்தில் அம்பிகைக்கு தனி சன்னதி கட்ட ஏற்பாடாகி கொண்டிருந்த வேளையில், சிவசைலத்திற்கு அருகே ஆழ்வார்குறிச்சிக்கு அருகில் உள்ள சிநேகபுரி (தற்போதைய ஆம்பூர்) என்னும் ஊரில் வாழ்ந்த அந்தணர் ஒருவரின் கனவில் தோன்றி அந்த ஊரில் உள்ள கிணறு ஒன்றில் அம்மையின் திருமேனி ஒன்று நான்கு கரங்களுடன் ஜலவாசமாக இருந்து வருவதாகவும், அந்த அம்பாள் திருமேனியை எடுத்து சிவசைலத்தில் கட்டப்படும் கோவிலுக்குள் பரமகல்யாணி என்ற பெயர் சூட்டி பிரதிஷ்டிக்கும் படி கூறியருள்கிறார் சிவபெருமான். 

அந்த அந்தணரும் தான் கண்ட கனவை ஊர் மக்களுக்கும், மன்னனுக்கும் தெரியப்படுத்தி, அந்த குறிப்பிட்ட கிணற்றில் தேடிட சிவபெருமான் கூறியது போலவே ஒரு நான்கு கரங்கள் கொண்ட அழகிய அம்மையின் திருவுருவ சிலை கிடைக்க பெற்றது. அந்த அம்மையின் திருவுருவை மங்கள வாத்தியங்கள் முழங்க அங்கிருந்து எடுத்து வந்து சிவசைலம் கோவிலில் பிரதிஷ்டை செய்ததாகவும் வரலாறு கூறுகிறது.

இங்குள்ள அம்பிகை நான்கு கரங்கள் கொண்டு அழகே உருவாக புன்முறுவல் பூத்த முகத்தவளாய் அளவில் சற்றே பெரிய உருவில் காட்சித் தருகிறாள். பாண்டிய நாட்டில் பிரசித்தி பெற்ற அநேக கோவிலின் அம்பிகைகள் இருகரம் கொண்டவர்களாக காட்சியளிக்க, இங்கு அம்பிகை பரமகல்யாணி, நான்கு கரங்கள் கொண்டு மேற்கு நோக்கி காட்சியளிப்பது சிறப்பம்சம் ஆகும்.

 இங்குள்ள உற்சவர் பரமகல்யாணி அம்பிகையும் நான்கு கரங்கள் கொண்டு காட்சியளிக்கிறாள்.

உற்சவர் பரமகல்யாணி அம்பிகைக்கு தங்கக் கை கடிகாரம் ஆபரணமாக அணிவிக்கப்படுவது சிறப்பம்சம்.

இக்கோயிலில் திருக்கல்யாணம் விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். இங்கு அருள்பாலிக்கும் கல்யாணி அம்மன் ஆழ்வார்குறிச்சி அடுத்துள்ள ஆம்பூரில் உள்ள கிணற்றில் பிறந்ததால் திருக்கல்யாணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பே ஆம்பூர் சென்று விடுவார்.

பின்பு கைலாசநாதர் ஆம்பூர் சென்று அங்குள்ள ஸ்ரீனிவாசன் பெருமாள் கோயில் வைத்து சீர்வரிசையுடன் திருக்கல்யாண வைபோகம் நடைபெறும். பின்பு அம்பாள் சுவாமியுடன் ஊர்வலமாக சிவசைலம் செல்வது பக்தர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது இக்கோயில்.

🔱இந்த கோயிலின் மற்றொரு சிறப்பம்சம் எழுந்து நிற்கும் நிலையில் உள்ள நந்திகேஸ்வரர். இந்த நந்திகேஸ்வரர் இந்திர சபையின் தலைமை சிற்பி மயனால் உருவாக்கப்பட்டதாக ஐதீகம்.

🛕தலபுராணம்:
புராணப்பெயர் அத்தீஸ்வரம்
திருமறைக்காலத்தில் திருக்கைலாயத்தில் அன்னை பார்வதிக்கும் பரமேஷ்வரனுக்கும் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தைப் பார்ப்பதற்காக முனிவர்களும், ரிஷிகளும், ஞானிகளும் வடக்கே சென்றதால் பூ உலகம் வடக்கே தாழ்ந்து தெற்கே உயர்ந்தது.

அதனால் உலகத்தில் சமன் செய்வதற்காக அகத்தியர் மற்றும் அத்திரி போற்ற முனிவர்களை தெற்கு அனுப்பினார் சிவபெருமான். அவ்வாறு அனுப்பப்பட்ட அத்திரி முனிவர் சுயம்புலிங்க தரிசனம் காண விரும்பினார். அவருடைய ஆசையை நிறைவேற்றும் வகையில் அகத்திய முனிவர், மேற்குத் தொடர்ச்சி மலையில் திரிகூட பர்வதம் சென்று தவம் செய்தால் சுயம்புலிங்க தரிசனம் கிடைக்கும் என்று கூறினார்.

அகத்திய முனிவரின் ஆலோசனையின்படி அத்திரி முனிவர், தன் துணைவியார் அனுசியா தேவி மற்றும் சீடர்கள் கோரற்றகள், தாந்த்ரீகர் முதலாளோடு திரிகூட பருவதம் வந்து தவம் செய்யத் தொடங்கினார்.

ஒருமுறை பௌர்ணமி தினத்தன்று பூஜை செய்வதற்குக் கடம்ப மலர்களைப் பறிப்பதற்காகக் கடம்பவனம் சென்று முனிவரின் சீடர்கள், அப்போது ஒரு பாறையின் மீது பசுக்கள் தாமாகவே பால் சொரிந்து செல்வதைக் கண்டு சீடர்கள் அந்தப் பாறையின் அருகில் சென்று பார்த்தனர்.

அப்போது ஒரு சிறிய சுயம்பு லிங்கத்தை அவர்கள் பார்த்து அத்திரி முனிவரிடம் தங்கள் கண்டதைத் தெரிவித்தனர். இதனை அடுத்து அத்திரி முனிவர் தனது துணைவியாருடன் வந்து சுயம்பு லிங்கத்தைக் கண்டு தரிசித்த தலம் இந்த சிவசைல நாதர் கோயில் என்று புராணங்கள் கூறுகின்றன.சிவசைலத்தில் அமைந்திருக்கும் சிவபெருமான் பூமிக்கு மேலே ஒரு பாகமும், பூமிக்குக் கீழே 15 பாகமும் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக்கோயில் செந்தமிழ் பாண்டியனால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

( தகவல்கள்:இணையத்திலிருந்து.... நன்றி🙏)

ஆலயம் நல்ல பராமரிப்பில் உள்ளது.

ஆலயம் அருகில் உள்ள மேற்கு மலைத்தொடர் - பொதிகை மலை) காட்சி மிகவும் அற்புதமாக இருக்கும்.

ஆலயம் பெரிய மரங்கள், சோலைகளில் அமைதியாக இருக்கும். அருமையான சூழல் கொண்டது.
#பிரதோஷக்குழுயாத்ரா 

17.8.25 மீள் தரிசனம்
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#சுப்ராம்

விக்கிரமசிங்கபுரம் - பாபநாசம்17.8.25அருள்மிகுஶ்ரீ வழியடிமை கொண்ட நாயகி சமேத ஶ்ரீ சிவந்தியப்பர் சுவாமி திருக்கோயில்,விக்கிரமசிங்கபுரம், பிரதோஷக்குழு யாத்ரா 2025

#விக்கிரமசிங்கபுரம்
விக்கிரமசிங்கபுரம் - பாபநாசம்
17.8.25
அருள்மிகு
ஶ்ரீ வழியடிமை கொண்ட நாயகி சமேத ஶ்ரீ சிவந்தியப்பர் சுவாமி திருக்கோயில்,
விக்கிரமசிங்கபுரம்,
அம்பாசமுத்திரம் (பாபநாசம்) வட்டம்,
திருநெல்வேலி மாவட்டம்.

சமீப காலத்தில் சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ள
இந்த பழமையான திருத்தலத்தில்
நம் இனிய ஈசன்,
ஸ்ரீ சிவந்தியப்பராக அருட்காட்சியளித்திட,
நம் பராசக்தி
ஸ்ரீ வழியடிமை கொண்ட நாயகி எனும் வித்தியாசமான திருப்பெயருடன்
நின்ற கோலத்தில் அழகுத்திருக்காட்சியளிக்கிறாள்.

(தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் இவளை உளமார பற்றிக்கொண்டால்,
வாழும் காலம் சிறப்பாகவும், வாழ்கைக்கு பிறகு மீண்டும் பிறப்பற்ற முக்திநிலையடையவும்
வழிகாட்டியாக இருப்பாள் என்பதின் பொருள்தான் ஸ்ரீவழியடிமை எனும் திருப்பெயராம்.
இந்த அம்பிகையை
"மார்க்க சம்ரக்ஷணி" என்றும் அழைப்பர்)

ஒரு வரலாற்று நிகழ்வின்படி;
தான் அரசாளும் நிர்வாகமும்,
தன் நாட்டு மக்களின் நலமும் சிறக்க வேண்டி,
சிவபெருமானின்மீது அதீத பக்தி கொண்டிருந்த
சிவந்தியப்ப நாயக்கர் என்ற குறுநில மன்னரால் 1625-ஆம் ஆண்டு கட்டப்பட்ட சிவாலயமாம். அதனாலேயே,
அம்மன்னரின் பெயரை
இறைவனுக்கு சூட்டியுள்ளனராம்..

ஸ்ரீ நடராஜர் தலைப்பாகை அணிந்து (நம்ம கொங்கு மண்டலத்து உருமாலைக்கட்டு போல) காட்சியளிப்பது
மற்றுமொரு தலச்சிறப்பாகும்.

(காண்பதற்கு அரியானா திருக்காட்சியாக,
ஆறு திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுடன் எம்பெருமான் முருகன்
நடுநாயகமாக வீற்றிருக்க ஸ்ரீவள்ளியும், தெய்வானையும்,
வலது பக்கமும்,
இடது பக்கமுமாக இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தபடி அருள்பாலிப்பது தலச்சிறப்புக்களில் ஒன்றாகும்)

உள்ளூர் மக்களைத் தவிர, வெளியூர் பக்தர்களால் அதிகம் அறியப்படாத பழமைவாய்ந்த தலங்களுள் ஒன்றான இத்திருக்கோவிலின்
அருகே உள்ள
பிரசித்தி பெற்ற
பாபநாசம் ஆலய இறைவன் போன்றே, இத்தல சிவந்தியப்பரும் சிறப்புவாய்ந்தவராக விளங்குவதால், பாபநாச கோவில் திருவிழாக்கள் அனைத்தும்,
இங்கும் சிறப்புற நடைபெறுமாம்.

நலமும், வளமும் சிறக்க
நடைபெறும் பிரதோஷ வழிபாடு தலவிசேஷம்.

சித்திரைத்தேர் திருவிழா தலபிரசித்தம்).
- இணையத்திலிருந்து ....
நன்றி🙏
ஆலயம் கிழக்குநோக்கி ராஜகோபுரத்துடன் மிக சிறப்பான உள் அமைப்புகளுடன் நிறைந்து விளங்குகிறது.
நல்ல பராமரிப்பில் உள்ளது.

சுவாமி முன்புறம் முககவசத்துடனும் உள்ளார் கிழக்கு நோக்கிய கருவரை, அம்பாள் தெற்கு நோக்கிய அழகிய அமைப்பு உள்னர்.
#பிரதோஷக்குழுயாத்ரா 
17.8.25
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

பாபநாசம் - பாபவிநாசகர் ஆலயம் - பிரதோஷக்குழு யாத்ரா 17.8.25

#பாபநாசம்
பாபநாசம். மீள் தரிசனம் 17.8.25

தாமிரபரணி உற்பத்தியாகி, முதன்முதலாக சமதளம் வரும் இடம்.

அகத்தியமா முனிக்கு சிவன் திருமண காட்சி கொடுத்த இடம்.

80 அடி உயரம் 7 அடுக்கு இராஜகோபுரம் கிழக்குப் பார்த்த ஆலயம்.

சுவாமி பாபவிநாசகர் சுயம்பு மூர்த்தி.

அம்பாள் உலகம்மன் கிழக்குப் பார்த்த தனி ஆலயம் சுவாமிக்கு வலது புறம் அமைந்துள்ளது.
இரண்டு பிரகாரங்கள்
உள்பிரகாரத்தில் நடராஜர், அகத்தியர், சுரதேவர், நாயன்மார்கள், கல்யாணசுந்தரர், உலகம்மை, முக்காள லிங்கர், ஆறுமுகம், சனிஸ்வரர், நவகிரகம், புனுகு சபாபதி உள்ளனர்.

வெளி பிரகாரத்தில், விநாயகர், அய்யனார் சன்னதிகள்.
பாண்டிய மன்னர் விக்கிரமசிங்கர் எழுப்பிய ஆலயம் என்பதால் இவ்வூருக்கு விக்கிரமசிங்கபுரம் என்றும் பெயர்.

தேவார வைப்புத் தலம். மற்றும் திருப்புகழ் தலம்.

கர்ப்பகிரக சுற்றுச் சுவர் மிக அழகிய அமைப்பில் தெய்வ சிற்பங்கள் ஏராளமாக உள்ளன.
ரிஷிகள், காளி, ஊர்த்துவ தாண்டவம், பிட்ஷாடனர், நிறுத்த கணபதி, திரிபுரசம்ஹாரம், திருமால், ஏகபாதமூர்த்தி, பிரம்மன், சுப்பிரமணியர், சங்குமாலையில் தேவி என பல நுணுக்கமான சிற்பங்கள் உள்ளன.

6 கால பூசை

ஆலய துண்களிலும் நிறைய சிற்பங்கள் உண்டு.

சூரியன் தலம்

ஆலயத்தில் எதிரில் தாமிரபரணி நதி தீர்த்தக்கட்டம் மிகவும் புனிதமான இடம்.

இங்கிருந்து மலைமேல் உள்ள அகத்தியர் அருவி முதலிய அருவிகளுக்குச் செல்ல வசதிகள் உண்டு.

உலகம்மன் சன்னதியில் மஞ்சள் இடித்து வழிபடும் முறை உண்டு.

பிரார்த்தனை ஸ்தலமாக உள்ளது.

தங்குவதற்கு தர்ம ஸ்தபனங்கள் தற்போது நிறைய.இடவசதி அமைத்துள்ளனர். தனியார் விடுதிகளும் உண்டு.
#பிரதோஷக்குழுயாத்ரா 

17.8.2025

#என்றும்_அன்புடன் 

#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 

#சுப்ராம்

திருக்குற்றாலம்பராசக்தி உடனுறை குற்றாலீஸ்வரர் ஆலயம் குற்றாலம் பிரதோஷக்குழு யாத்ரா 16.8.2025

#திருக்குற்றாலம்
பராசக்தி உடனுறை குற்றாலீஸ்வரர் ஆலயம்
#குற்றாலம்
சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல் மிக பழமை வாய்ந்த,பாண்டியநாட்டு தலங்களில் 13 வது தலமாக விளங்கும்

திருக்கயிலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடக்கிறது. இதை தரிசிக்க பிரம்மா, விஷ்ணு, முப்பத்துமுக்கோடி தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோர் வந்துள்ளனர். இதனால் பூமியின் வடதிசை தாழ்ந்து, தென் திசை உயர ஆரம்பிக்கிறது. இதை சமப்படுத்த சிவன் அகத்தியரை அழைத்து,""நீ ஒருவன் மட்டும் தென்திசை சென்றால் போதும், உலகம் சமநிலைக்கு வந்துவிடும். அத்துடன் இதுநாள் வரை குற்றாலத்தில் விஷ்ணுவாக அருள்பாலித்து வந்த என்னை, சிவலிங்கமாக்கி மகுடாகமப்படி பூஜை செய்தால் எங்களது திருமணத்தை இங்கிருந்தபடியே தரிசிக்கலாம்,'' எனக்கூறி அனுப்பிவைக்கிறார்.

சிவனின் கட்டளைப்படி அகத்தியர் குற்றாலம் வந்து, விஷ்ணு வடிவில் அருள்பாலிக்கும் சிவனை தரிசிக்க செல்கிறார். ஆனால் அங்கிருந்த துவாரபாலகர்கள் சைவ சமயத்தை சேர்ந்த அகத்தியரை கோயிலுக்குள் விடவில்லை. இதனால் வருத்தமடைந்த அவர் இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள இலஞ்சிக்குமாரர் கோயிலுக்குச் சென்றார். அங்கு வெண்மணலில் லிங்கம் பிடித்து, சிவனை வழிபட்டார்.

தான் குற்றாலத்தில், சிவதரிசனம் செய்ய அருளும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த முருகன், ""அகத்தியரே! தாங்கள் சிவக்கோலத்தை கலைத்துவிட்டு, வைணவக்கோலத்துடன் கோயிலுக்குள் சென்று பெருமாளை சிவலிங்கமாக்கி வழிபாடு செய்யுங்கள்,''என யோசனை கூறுகிறார்.

முருகனின் யோசனைப்படி அகத்தியரும் நெற்றியில் திருமண் இட்டு, கழுத்தில் துளசி மாலை அணிந்து கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்கிறார். உடனே திருமாலின் கையில் சங்கு இருந்த இடத்தில் மான், துளசி இருந்த இடத்தில் சந்திரன், பொட்டு இருந்த இடத்தில் நெற்றிக்கண், ரத்தினம் இருந்த இடத்தில் பாம்பு என அனைத்தும் மாறியது.

அத்துடன் உயரமாயிருந்த திருமாலின் தலையில் கைவைத்து, திருமேனி குறுக குறுக என சிவனை வேண்டி பிரார்த்தனை செய்ய, நெடிய திருமால் குறுகிய சிவனாக மாறி விடுகிறார். அந்த இடத்திலேயே அகத்தியருக்கு திருமண காட்சி கிடைக்கிறது. இன்றும் கூட இத்தலத்தில் பகலில் தேவர்களும், இரவில் அகத்தியரும் பூஜை செய்வதாக கூறப்படுகிறது. அகத்தியர் தன் கைவிரல்களால் சிவலிங்கத்தில் தலையில் வைத்து அழுத்தியதால் இன்றும் கூட லிங்கத்தின் மேல்பகுதியில் விரல்களின் தடம் இருப்பதை காணலாம்.

இலஞ்சியில் அகத்தியர் பூஜித்த சிவன், "இருவாலுக நாயகர்' என்ற பெயரில் அருளுகிறார். குற்றாலநாதரை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள், முதலில் இந்த சிவனை தரிசித்துவிட்டு இங்கு வருவது விசேஷ பலனைத் தரும். இக்கோயில் திருமால் தலமாக இருந்தபோது, சங்கு வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. தற்போதும் இக்கோயில் சங்கின் வடிவில் இருப்பதைக் காணலாம். திருக்குற்றால மலையிலுள்ள செண்பகாதேவி, கோயிலுக்குச் செல்லும் வழியில், அருவியின் மேற்பரப்பில் இருந்து இந்த வடிவத்தை பார்க்கலாம்.

மகாலட்சுமியின் அம்சமான சங்கு, ஆற்றலின் வடிவமாகும். இதன் ஒலி, சக்தியைத் தருவதாகும். எனவேதான், சிவபூஜையில் சங்கு ஒலிக்கும் வழக்கம் உண்டு. இதன் அடிப்படையிலும், இக்கோயில் சங்கின் அமைப்பில் அமைந்திருப்பதாகச் சொல்வர். இங்கு 8 கால பூஜையிலும், சிவன் சன்னதியில் சங்கு ஊதுகின்றதலமாக திகழும்

திருஞானசம்பந்தர், பட்டினத்தார், அருணகிரிநாதர் மற்றும் மாணிக்கவாசகரால் பதிகம் பாடப் பெற்ற தலமாகவும் விளங்கும்

... இணையத்திலிருந்து 🙏

#திருக்குற்றாலம்

மீள் தரிசனம் 16.8.25

குற்றாலநாதர், திரிகூடநாதர் - சுயம்பு லிங்கம்
கடல் மட்டத்திலிருந்து 5000 அடி உயரம்.

கிழக்குப் பார்த்த ஆலயம், சங்கு அமைப்பில் உள்ளது. 

அம்பாள் தனி சன்னதி
உள்பிரகாரத்தில் - வல்லப கனபதி, முருகர், தட்சிணாமூர்த்தி, சப்த கன்னியர், பஞ்சபூத லிங்கங்கள், அகத்தியர், ஆனந்தக் கூத்தர், 63 நாயன்மார்கள் முதலிய சன்னதி.

முழுவதும் கற்றளி . ஆலயத்தின் உள்பிரகாரத்தில் குறிப்பிட்ட இடத்திலிருந்து , விநாயகர், லிங்கம், , கோபுரம், மலை, அருவி ஆகிய பஞ்ச தரிசனம் செய்யலாம். 

தனி ஆலயமாக சித்திரசபை 1 கி.மீ. தூரத்தில் உள்ளது.
திருமுறை தலம் 13வது பாண்டி தலம்
சம்பந்தர் 2 பதிகம், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் பாடியது
கபிலர், பட்டினத்தார். திருப்புகழ் பாடல் பெருமையுடையது.
திரிகூடராசப்பகவி பாடியது.

86 கல்வெட்டுக்கள் உண்டு

மிகப் பழமையான ஆலயம்.

அர்த்தஜாமம் பள்ளியரை பூசை இரவு 8.00 மணி அளவில் நடைபெறுகிறது. (16.8.25 அன்று தரிசனம் கிடைக்கப்பெற்றது)

#பிரதோஷக்குழுயாத்ரா 

#சுப்ராம்

#என்றும்_அன்புடன் 

#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

தென்காசிதென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம் - பிரதோஷக்குழு யாத்ரா 16.8.25

#தென்காசி
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம்

மீள் தரிசனம் 16.8.2025

கிழக்குப் பார்த்த ஆலயம்.

மிகப்பெரிய ராஜகோபுரம்178 அடி 9 நிலை கொண்டது.

 உள் நுழைவில் காற்று வீசும் முறை மாற்றம் வியக்கதக்கது.

ஶ்ரீகாசிவிஸ்வநாதர், - சுயம்புலிங்கம்.
 ஸ்ரீ உலகம்மை

தல விருட்சம் - சென்பகம்

சுவாமி, அம்பாள், பாலகுமரன் நடுவில் தனித் தனி ஆலய சன்னதிகள் அனைத்தும் கிழக்கு நோக்கியது. சோமஸ்கந்தர் அமைப்பில் உள்ள ஆலயம்.

மிகப்பெரிய ஆலயம். முழுவதும் கற்றளி

உள்பிரகாரத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், சகஸ்ரலிங்கம், பைரவர், சூரியன், 4வர், 64 நாயன்மார்கள், சுரதேவர், விநாயகர், ஆறுமுகர், நடராஜர், முதலிய சன்னதிகள் உள்ளன.

வடக்கு பிரகாரத்தில் சகஸ்ரலிங்கம் கிழக்குப் பார்த்த தனி ஆலயம். 

பைரவர் தனி சன்னதி தெற்கு பார்த்தது.

உலகப்புகழ் பெற்ற சிற்பங்கள் அமைந்துள்ளது.
அகோவீரபத்திரர், அக்னி வீரபத்திரர், மன்மதன், காளிதேவி, சகாதேவன், துவாரபாலகர்கள், கர்ணன், மகாதாண்டவர், ரதிதேவி, மதனகோபாலன், தமிழனங்கு, முதலிய அழகிய சிற்பங்கள் உள்ளன.  

கருவறையில் உள்ள காசி விஸ்வநாதர் நீண்ட தூரத்திலிருந்து தரிசிக்கும் அமைப்பு.

6 கால பூசை. ஆனி அனுஷம் பிரும்மோட்சவம்.
ஐப்பசி உத்திரம் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

அவசியம் தரிசிக்க வேண்டிய சிறப்பு வாய்ந்த ஆலயம்.

#பிரதோஷக்குழுயாத்ரா 

16.8.2025

#என்றும்_அன்புடன் 

#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

சுசீந்தரம் -பிரதோஷக்குழு யாத்ரா 16.8.2025

#சுசீந்தரம் 
சுசீந்தரம் 
16.8.25 மீள் தரிசனம்.

தாணுமாலையன் - அறம் வளர்த்த நாயகி ஆலயம்.

கிழக்குப் பார்த்த 7 நிலை ராஜ கோபுரம்.
134 அடி

கொடி மரம் தெற்கு பகுதியில் மும்மூர்த்தி சன்னதி .
தாணு, மால், அயன் மூவரும் லிங்கவடிவில் கொன்றை மரத்தடியில் காட்சி தருகிறார்.

சிவன், பெருமாள், அம்மன் தனித்தனி சன்னதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

ஆலய தென் பிரகாரத்தில் சிறிய பாறை மேல் அமைந்துள்ள கைலாசநாதர் தனி சன்னதி அமைப்புடன்.

ஆலய வடமேற்கு மூலையில் ராமர், சீதா சன்னதி.

வடகிழக்கு மூலையில் மிக உயர்ந்த 18 அடி உயரத்துடன் மேற்கு நோக்கி நின்று காட்சி தரும் ஸ்ரீ ஆஞ்சனேயர் மிகவும் விஷேம்.

உள் பிரகாரத்தில் பரசிராம விநாயகர், முருகன், கைலாசநாதர், பள்ளி கொண்ட பெருமாள், பஞ்சபாண்டவர்கள், நீலகண்ட விநாயகர், இந்திர காந்த விநாயகர், காலபைரவர் தனி சன்னதிகள்.

மாக்காளை எனப்படும் 12 அடி உயர நந்தி சிறப்பு.
அலங்கார மண்டபத்தில், சங்கீத தூன்கள் 

மார்கழி, சித்திரை விழா சிறப்பு.

#பிரதோஷக்குழுயாத்ரா 
16.8.2025 மீள் தரிசனம்

# சுப்ராம்

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 

#என்றும்_அன்புடன் 

#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - (குலசேகரமுடையார்) - பிரதோஷக்குழு யாத்ரா 17.8.2025

#கல்லிடைக்குறிச்சி -  குலசேகரமுடையார் ஆலயம் 17.8.25 #கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - குலசேகரமுடையார் அம்பாள் = தர்மசவர்த்தினி (அறம...