Friday, December 30, 2022

பயண_அனுபவக்_குறிப்புகள்🕊️#மகாராஷ்ட்ரா#திரயம்பகேஸ்வரர் ஜோதிர்லிங்கம்14/15/10.2022. பதிவு....1

#பயண_அனுபவக்_குறிப்புகள்🕊️
#மகாராஷ்ட்ரா
#திரயம்பகேஸ்வரர் ஜோதிர்லிங்கம்
14/15/10.2022. 
பதிவு....1
🛕திரியம்பகேசுவரம் என்னும் திரியம்பகேசுவரர் திருக்கோயில், (Trimbakeshwar Shiva Temple) 

🛕திரயம்பகேஸ்வரர் சிவன் ஆலயம், பாரதத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில், நாசிக் மாவட்டத்தில், திரியம்பக் என்னும் நகரில் உள்ளது. இது தொன்மையான சிவன் கோயில் ஆகும். 

🛕இது பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. 

🏵️ அமைவிடம்: 

🕉️நாசிக் நகரில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மற்றும் தானேவிலிருந்து 157 கி.மீ தூரம் உள்ளது. நாசிக் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 39 கி.மீ. தூரத்தில் உள்ளது. 

🕉️🏔️ கோதாவரியின் மூன்று மூலங்கள் பிரம்மகிரி மலையிலிருந்து தோன்றின.

🕉️பிரமகிரி மலை சுமார் 3000 அடி உயரமுள்ளது. இதன் அடிவாரத்தில்தான் திரியம்பகேஷ்வர் ஆலயம் உள்ளது. 

🕉️இந்த ஆலயம், பிரம்மகிரி, நீலகிரி, மற்றும் காலகிரி என்ற மூன்று மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. 

🕉️கோதாவிரி நதிக் கரையில் உள்ளது. 
சிறப்புகள்: 

🛐வழிபட்டவர்கள் : பிரம்மன் விஷ்ணு ருத்திரன் ஆகிய மும்மூர்த்திகள், கௌதம முனிவர் மற்றும் பலர்.       

🛐படைக்கும் தெய்வம் பிரம்மன், காக்கும் தெய்வம் திருமால், அழிக்கும் தெய்வம் ருத்திரன் ஆகிய மூன்று மூர்த்திகளும் படைத்து காத்து அழித்து மூன்று தொழிலும் புரியும் கடவுளான பரமேசுவரனை ஒன்றாக வந்து பூசை செய்து வழிபட்டதால் திரியம்பகேசுவரம் எனப்பட்டது. 

🛐மும்மூர்த்திகளுக்கு அருள் புரிந்த ஈசனுக்கு திரியம்பகேசுவரர் என்று அருள் நாமம். 

🛐கோடி லிங்கார்ச்சனை செய்து பூஜித்த கௌதம முனிவருக்கு அருள் புரிந்த கங்காதரர் திருமுடியிலுள்ள கங்கை நீரைத் தெளித்துக் கோதாவிரியை உற்பத்தி செய்து அருளியதால் திரியம்பகேசுவரருக்கு கௌதமேசுவரர் என்று திருநாமம். 

🛐பகீரதன், கௌதமர் முதலியவர்களின் வாழ்க்கை அவர்கள் வாழ்ந்த காலத்தில் மட்டும் அல்லாமல் தொடர்ந்து யுகம் யுகமாக மக்கள் எல்லோருக்கும் பயன்படும் மகத்தான தொண்டினால் பொது நலம் காத்து சமுதாயம் முழுவதையும் சிறப்பாக்கும் சீரிய வாழ்க்கையாக விளங்கியது. 

🛐ஸ்கந்தபுராணம், பத்மபுராணம் மற்றும் ஜோதிர்லிங்க ஸ்லோகம் இவற்றில், இத்தலத்தின் பெருமைகள் கூறப்பட்டுள்ளது. 

🛐கெளதம முனிவர், கோரக்கநாதர், மற்றும் தியானேஷ்வர் முதலிய முனிவர்கள் இத்தலத்தில் வாழ்ந்து பல அற்புதங்கள் செய்துள்ளனர்.

ஆலய அமைப்பு : 

🛕தற்போதுள்ள ஆலயம், மூன்றாவது பெஷாவ் பாலாஜி பைஜிராவ் (1740 - 1761) என்பவரால் கட்டப்பட்டுள்ளது. இதன் பிறகு அகல்யாபாய் ஹோல்கர் 1789 ல் புனரமைப்பு செய்தார்கள். ஆலயம் கிழக்கு நோக்கிய கருவரை அமைப்பு. 

🛕ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. வடக்குப் புறத்தில் ஆலயம் உள்ள சாலையில் பொதுக்கடைகள் உள்ள கடைத்தெரு இருக்கிறது. 

🛕கிழக்கு புறம் வாசல் வழியில் பொது தரிசனம் வழி உள்ளது. வழியில் காலனிகள், மற்றும் பொருள்கள் வைக்கத் தனி இடம் உள்ளது.

🛕ஆலயம் உள்ளே செல்ல வடக்கு பக்கம் வாசல் பகுதியும் உள்ளது. இதை வெளியேறும் வழியாகவும், ஆலய சிப்பந்திகள் உள்ளே செல்லும் தனி வழியாகவும், பாதுகாவலர்கள் அலுவலக அறையுடன் உள்ளது. 

🛕ஆலயம் தென்புறம் ஒரு பெரிய ஏரி (குளம்) ஒன்றும் உள்ளது. 

🛕ஆலயம் வட மேற்கு பகுதியில் 500 மீட்டர் தூரத்தில் புராதானமான, Kushavarta Kund மற்றும், Shri Ganga Godawari Temple ம் அமைந்துள்ளன. 

🛕அர்ச்சகர்கள் தவிர வேறு யாரும் கர்பகிருகத்திற்குள் நுழைய முடியாது. பெரும்பாலான வட நாட்டுக் கோயில்கள் வேத விதிப்படி பிராணப் பிரதிஷ்டை மட்டுமே செய்யப்பட்ட காரணத்தால் காலையில் பக்தர்கள் எல்லோரும் பூ, நீர், மற்றும் பிற பூசைப் பொருட்களுடன் சென்று தாங்களே தொட்டு வழிபட முடியும். ஆனால் திரியம்பகேசுவரமும் குஜராத்தில் உள்ள சோமநாதர் திருக்கோயிலும் ஆகம விதிப்படி அமைந்த கோயில்கள், ஆதலால் சுத்தமாக தூய்மையாக மடியாக உள்ள, பூசை முறை தெரிந்த அர்ச்சகர்கள் மட்டுமே இறைவனைத் தீண்டிப் பூஜிக்க முடியும். ஒரிசா உட்பட வடநாட்டுக் கோயில்களுக்குத் தென்னாட்டுக் கோயில்கள் போன்று இராஜ கோபுரங்கள் இல்லை. 

🛕பல வடநாட்டுக் கோயில்கள் எல்லாமே தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் போன்ற அமைப்பு உள்ளவையே. 

🛕தற்போது கிழக்குப் பகுதியில், ஆலயம் உள்ளே, புதியதாக, பக்தர்கள் தரிசிக்க q வரிசை Hall 3 அமைக்கப்பட்டு, அவைகளில், பக்தர்களுக்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 

🛕கிழக்குப் புறத்தில், ஆலயம் முன்பு நுழைவு மண்டபம் பழமையான கல்வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. மண்டப வாயில் கருங்கல் நிலையால் செய்யப்பட்டு மிக அழகாக உள்ளது. 

🛕முழு கருங்கல் கோயிலும் அதன் அழகிய கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு பெயர் பெற்றது. 

🛕சிற்ப வேலைப் பாடுகள் உடைய தூண்களும் மண்டபங்களும் கொண்டு கருங்கல்லால் ஆன திரியம்பகேசுவரர் திருக் கோயில் தென்னாட்டு ஆகம விதிப்படி அமைந்த கோயில். 

🛕ஆலயக் கருவறை முன்மண்டபத்தில் அழகிய உயரமான கற்சிற்பங்கள் அமைந்துள்ளது. 

🛕நந்தி மண்டபம் : கருவரையின் கிழக்குப் புறத்தில் உள்ள நந்தி மண்டபத்தில், அழகிய உயரமான மிக அழகிய வெள்ளை நிற பளிங்குக்கல் நந்தி அருமையான கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நந்தியின் மேல் சிற்ப அற்புதங்கள் வியக்கவைக்கும். 

🛕கருவறையின் கூரையே விமானம் கோபுரம் போன்று மேலே உயர்ந்து செல்கின்றது. 

🛕இராஜகோபுரம் கிடையாது. கருவரை மேல் நீண்ட உயரமான கோபுரம் முழுவதும் கற்றளியால் (கருப்பு வண்ணத்தில்) மிக நேர்த்தியாகவும், அற்புதமாகவும், அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு நோக்கிய 3 முகமண்டபங்கள், ஒரு பெரிய மகாமண்டபம், மற்றும் கருவரையுடன் இணைந்து அமைந்துள்ளது. 

கருவரை.. 
♻️லிங்கம் இருக்கவேண்டிய இடத்தில் உரல் போன்று பள்ளமாக உள்ளது. இந்தப் பள்ளத்தில் மும்மூர்த்திகளைக் குறிக்கும் மூன்று சிறு லிங்கங்கள் உள்ளன. 
♻️ இவற்றை பிரம்மா, விஷ்ணு, உருத்திரனாக கருதுகின்றனர். 
♻️மூவருக்கும் அருள் புரிந்த மும்மூர்த்தி நாயகன் எழுந்தருளியுள்ள கருவறை தாழ்வாக உள்ளது. 
♻️மேலேயுள்ள மண்டபத்திலிருந்து தரிசனம் செய்ய வேண்டும். 
♻️மும்மூர்த்தி பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஆவுடையார் உரல் போல் நடுவே பள்ளமாக உள்ளது. 
♻️மூவரும் குளம் உண்டாக்கித் தாமரை மலர்களால் சிவ பரம்பொருளை அர்ச்சித்து வழிபட்டனர். 
♻️மும்மூர்த்திகள் அர்ச்சனை செய்த தாமரை மொட்டுகளின் அடையாளம் இதில் அமைந்துள்ளது.   

♻️நாள்தோறும் இந்த ஆவுடையார் குழிமேல் ஒருமுகம் கொண்ட வெள்ளிக்கவசமோ அல்லது மூன்றுமுகம் கொண்ட கவசமோ சாத்தப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. சிறப்பு நாட்களில் ஐந்து முகத் தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது.
♻️மேலும், வைரம் மரகதம் மற்றும் பல விலையுயர்ந்த கற்களை கொண்ட பாண்டவர் காலத்தில் செய்யப்பட்ட கிரீடம் ஒவ்வொரு திங்கள்கிழமைகளிலும், மாலையில் (4-5 PM) காணலாம்.

🛕கருவரை உட்புறம் சதுரமாக இருந்தாலும், வெளிப்புறம் பல கோணங்களைக் கொண்டுள்ளது. 

🛕ஆலயம் முழுதும் பல்வேறு அழகிய அற்புத சிற்ப வேலைகள் கொண்டுள்ளது. 

🛕ஆலய கருவரைச் சுற்று சுவரில் உள்ள பைரவர், விஷ்ணு, மகிஷாசுரமர்த்தினி சிலைகள் மிகவும் அற்புதம். பல்வேறு மிருகங்கள், குறிப்பாக யானைகள் சிலைகள் சிறிய அமைப்பாக இருந்தாலும் மிகவும் கலை நயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. 

🛕கோமுகம், அருகில் கல்வேலைப்பாடுகள் மிகச் சிறப்பாக உள்ளது. 

🛕ஆலயத்தின் உள் பகுதியில் தென்மேற்கு மூலையில் தீர்த்தக்குளம் ஒன்று கருங்கற்கள் கட்டுமானத்தில் பாதுகாப்புடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

🛕இந்த தீர்த்தம் அமிர்தவர்ஷினி என்று அழைக்கப்படுகிறது. பில்வ தீர்த்தம், விசுவநாதர் தீர்த்தம், முகுந்ததீர்த்தம் என்று 3 வித தீர்த்தங்கள் அடங்கியது. 

🛕இந்த திரயம்பகேஷ்வர் ஆலயம் திரயம்பகேஷ்வர் ஆலய டிரஷ்ட்டால் நிர்வாகம் செய்யப்படுகிறது. 

#பயனஅனுபவக்குறிப்புகள்🕊️ 

🌸நாங்கள் 14.10.2022 அன்று காலையில், மகாராஷ்ட்ராவில் மும்பை அருகில் உள்ள, மும்பை செம்பூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், தரிசித்துவிட்டு வழியில் எங்கள் சுற்றுலா ஏற்பாட்டாளர்களால், தயாரிக்கப்பட்ட மதிய உணவு எடுத்துக் கொண்டோம். மாலை 5 மணி அளவில் திரிம்பாக் வந்து சேர்ந்தோம். 

🌸நாங்கள் தங்குவதற்கு ஸ்ரீ கஜானன் மகாராஜ் நிறுவனம், என்ற பொது அறக்கட்டளை சார்ந்த விடுதியில் அறைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தனியாக சமையல் கூடம் மற்றும் உணவு உண்ணும் கூடம் உள்ளது. அறைகள் சுத்தமாகவும், கட்டுப்பாடுகளுடனும் இருந்தன. 

🌸மிகப்பெரிய வளாகம். மிகத் தூய்மையாகவும், புனிதமாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

🌸தனித்தனிக் கட்டிடங்கள். ஒரு பெரிய ஆலயம் ஸ்ரீ கஜானன் மகாராஜ் சுவாமிக்கு கட்டப்பட்டுள்ளது. 

🌸தூய்மையும், பக்தியும், கட்டுப்பாட்டுடன் பின்பற்ற வைக்கப்பட்டுள்ளது. சிறந்த பராமரிப்புடன் அமைந்துள்ளன. 

🌸இங்கு வந்து பொருட்களை வைத்து விட்டு, இங்கிருந்து, 1 கி.மீ. தூரத்தில் உள்ள திரயம்பகேஸ்வரர் ஆலயம், மற்றும் கெளதம முனிவரால் அமைக்கப்பட்ட கோதாவரி நதிநீர் தீர்த்தக்கட்டம் சென்றோம். இந்த வளாகத்தின் வாசலில் Auto பிடித்தும் செல்லலாம். நாங்கள் நடந்து சென்றோம். 

🌸சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு முறையும், 15.03.2021 ல் ஒரு முறையும் திரயம்பகேஸ்வரர் ஆலயம் சென்று, தரிசனம் செய்த பாக்கியம் பெற்றிருக்கிறேன். 

🌸இது எமக்கு மூன்றாவது முறையாக சந்தர்ப்பம் இறையருளால் வாய்ந்துள்ளது. 

🌸ஜோதிர்லிங்க ஆலயத்திற்கு வட மேற்கு பகுதியில் 500 மீட்டர் தூரத்தில் புராதானமான, Kushavarta Kund மற்றும், Shri Ganga Godawari Temple ம் அமைந்துள்ள, குஷாவர்த்தா தீர்த்த குண்டம்..(Kushavarta Kund) மற்றும் ஸ்ரீ கங்கா கெளரி ஆலயமும், அருகில் உள்ள சிவாலயமும் சென்றோம். 

🌸நாங்கள் 14.10.2022 அன்று மாலை 5.30 மணி அளவில் இந்த தீர்த்த குண்டம் சென்றோம். 

🌸நாங்கள் ஏற்கனவே வந்த போது, இங்கு நீராடி பின் திரயம்பகேஸ்வரரை தரிசித்தோம். 

🌸14.10.2022 அன்று தீர்த்த குண்டம் முழு நீரையும் வெளியேற்றி, குளம் முழுவதையும் தூய்மை பணிசெய்து கொண்டிருந்தார்கள். எனவே, குளத்தை ஒரு முறை சுற்றிவிட்டு அருகில் உள்ள ஆலயங்களை தரிசித்து விட்டு, திரயம்பகேஸ்வரர் ஜோதிர் லிங்கம் ஆலயம் சென்று தரிசனம் செய்தோம். 

🌸நாங்கள் சென்றிருந்த நாளில் ஊரிலும், ஆலயங்களிலும், மக்கள் கூட்டம் மிகக் குறைவு. இதனால், எந்தவித பரபரப்புமின்றி ஆலயம், தரிசனம் செய்ய முடிந்தது. 

🌸இதன் பிறகு, வடக்கு பிரகாரத்தை ஒட்டியுள்ள கடைத்தெரு பகுதியில் சிலர் பொருட்கள் வாங்கினார்கள். இந்த சாலையில், ஒரு அழகான சிவாஜி மகராஜ் சிலை அமைத்துள்ளனர்.

🌸பொதுவாகவே, மகாராஷ்ட்ரா பகுதி முழுவதும், எல்லாமுக்கிய இடங்களிலும், பாரதத்தின் ஒப்பற்ற வீரரான சிவாஜி மகாராஜா அவர்களின் சிலையை வைத்து, அவரைப் போற்றும் வகையில் நன்றியும், மரியாதையும் தருவது, நமக்கும் பெருமையாகவும், இம்மக்களின் அளவற்ற தேச உணர்வும் பிரமிக்கவைக்கிறது. 

🌸பிறகு, நாங்கள் தங்கியிருந்த, ஸ்ரீ கஜானன் மகாராஜ் கட்டிட வளாகம் சென்றோம். அருகில் Auto கிடைக்கிறது. நாங்கள் நடந்தே இருப்பிட வளாகம் வந்து அடைந்தோம்.

🌸வளாகத்தில் உள்ள ஸ்ரீ கஜானன் மகாராஜ் ஆலயம் உட்பட அனைத்து இடங்களையும் பார்த்து விட்டு, எங்களுக்காக சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சமைத்து வைத்திருந்த உணவுகளை உண்டு, எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைகளில் தங்கிக்கொண்டோம். 

🌸14.10.2022 அன்று இரவே குஷாவர்த்தா தீர்த்த குண்டம் முழுதும், தூய்மை செய்யப்பட்டு, பூசை செய்து புதிய நீர் விட்டிருந்தார்கள். 

🌸எனவே,15.10.2022 அன்று விடியற்காலையில் எழுந்து, மீண்டும் இந்த தீர்த்தக்குளத்தில் நீராடி, மீண்டும் ஒரு முறை ஜோதிர்லிங்க ஆலயம் சென்று தரிசித்தோம். 

🚍15.10.2022 காலை உணவு முடித்துக் கொண்டு நாசிக் புறப்பட்டோம். 

கோதாவரி / குஷாவர்த்தா தீர்த்த குண்டம்..
(Kushavarta Kund) 

🏞️ஜோதிர்லிங்க ஆலயத்தின் அருகில் வடமேற்கில், இந்தப் புனிதநீர்தீர்த்த குளம் உள்ளது; இது, அன்னியர்கள் படையெடுப்பால், சிதலமடைந்துவிட்டிருந்தது. இதை இந்தூர் ராஜா (Shrimant Sardar Raosaheb Parnerkar who was the Fadnavis of Indore State) புனரமைப்பு செய்துள்ளார். தற்போதுள்ள ஆலயம் பேஷ்வா பாலாதி பாஜிராவ் என்பவர் புணரமைத்ததாக குறிப்புகள் உள்ளது.

🏞️இந்த ஆலயத்தின், புனித குளம் 92 அடி அகலமும் 98 அடி நீளம் உள்ளதாக அமைந்துள்ளது. 

🏞️குளத்தில் அழகிய நீண்ட கருங்கல் படிகள். முழு சுற்றில் நீண்ட பிரகார மண்டபம். 

🏞️குளத்தின் கிழக்குப் பகுதியில் புனித ஸ்தல விருட்சம். தென்புறம் ஒரு சிறிய நேர்த்தியாக வடிவமைப்புடன், முழுவதும் கற்றளியான ஒரு ஆலயம். கருவரையின் உட்புறம் சற்று ஆழத்தில் ஒரு சிறிய சிவலிங்கம் அமைந்துள்ளது. வழிபாட்டில் உள்ளது. 

🏞️வடக்குப்புறத்தில் கங்கா கோதாவரி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திலேயே, டிரஸ்ட் அலுவலகம் இணைந்துள்ளது. நடுவில், கிழக்குப் பார்த்து கங்கா மாதா, கோதாவரி மாதா சிறிய சிலைகள் உள்ளது. இந்த ஆலயம், மண்டப அமைப்பு. 

🏞️குளக்கரை பிரகாரம் முழுவதும், கங்காதேவி, ஜலேஸ்வரர், ராமேஸ்வரர், கெளதமேஸ்வரர், கேதாரநாதர், ராமர், கிருஷ்னர், பரசுராமர், மற்றும் லெட்சுமிநாராயணர் கடவுளர்கள் சிற்பங்கள். 

🏞️குளக்கரை பிரகாரம் முழுவதும் பிரார்த்தனை வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மேலும் சில மகான்கள், புனிதர்கள் சமாதிகளும் அருகில் உள்ளது. 

🏞️நீராடிய பின், பிரகார மண்டபத்தில் உடைமாற்றிக் கொள்கிறார்கள். பூசைகளும் செய்து வழிபடுகிறார்கள். தர்பனம், முதலிய சடங்குகள், பிரார்த்தனைகளும் இந்த வளாகத்தில் செய்கிறார்கள்.

⚛️கோதாவரி /குஷாவர்த்தா தீர்த்த குண்டம்..(Kushavarta Kund) தீர்த்த புராண வரலாறு : 

🌼முந்தைய ஊழிக் காலத்திய மும்மூர்த்திகள் போன்றே இந்த ஊழிக் காலத்து மும்மூர்த்திகள் பரபிரும்மத்தை வழிபட்டு வரம் பெற்ற திரியம்பகேசுவரத்தில் கௌதம முனிவர் நாள்தோறும் புனிதக் குளத்தில் நீராடித் திரியம்பகேசுவரரை வழிபட்டும் வேள்விகள் புரிந்தும் தவம் செய்தும் தூய வாழ்வு வாழ்ந்தார். 

🌼கௌத்தம் (கோ+உத்தம்) என்றால் பசுவே சிறந்தது என்று பொருள். கன்று ஈனும் தாய்ப் பசுவை வலம் வந்து அகல்யையைத் திருமணம் செய்து கொண்ட முனிவர் கௌத்தமர் ஆனார். இது தமிழில் கௌதமர் என்று ஆயிற்று.  

🌼நாட்டில் மழையின்றி வறட்சி உண்டாகி நீர் நிலைகள் வறண்ட போதும் கௌதம முனிவரின் ஆசிரமத்திலும் திரியம்பகேஸ்வரத்திலும் நீர் வற்றாமல் இருந்ததால் முனிவர்கள் பலரும் அங்கு குடியேறினர். 

🌼ஆசிரமத்தில் மட்டும், நீர் நிறைந்திருந்தது. அனைத்து மகரிஷிகளும் தீர்த்தம் எடுத்து அனுஷ்டானம் செய்தது மட்டுமல்லாமல் அனைவருக்கும் அன்ன ஆகாரமும் கிடைத்தது.  

🏵️இவர் பக்தியை சோதிக்க எண்ணிய தேவர்கள் எல்லாம் சேர்ந்து, ஒரு பசு மாட்டை இவர் தோட்டத்தில் மேயவிடுகிறார்கள். ஸ்வாமியின் நிவேதனத்திற்காக போடப்பட்டிருக்கிற அந்த விசேஷமான தானியங்களை பசுமாடு சாப்பிடுகிறது. கௌதம மகரிஷி, கீழே இருக்கும் ஒரு குஷஸ் (தர்பை) எறிந்து விரட்டினார். மேலே பட்டதும் பசுமாடு கீழே விழுந்து இறந்தது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இதனால் ஏற்பட்ட கோஹத்தி தோஷத்தினால், அனைத்து கலைகளையும் இழந்தார். ரிஷிகள் இவர் ஆசிரமத்தில் உணவருந்த மறுத்தனர். 

🌼கௌதமர், மற்ற ரிஷிகளிடம் பாவத்திலிருந்து மீள வழியை காட்டுமாறு வேண்ட, பிரம்மகிரியை 11 முறை பிரதக்ஷணம் பண்ணி, கங்கையைக் கொண்டு வந்து ஏழு கோடி பார்த்திபலிங்கத்தை பூஜை செய்ய வேண்டும் என்றனர். 

🌼அவ்வாறே, கெளதம முனிவரும் பிரம்மகிரி மலையில் பல ஆண்டுகள் கடும் தவம் செய்தார். 11 முறை பிரம்மகிரியை பிரதக்ஷணம் செய்தார். 7 கோடி பார்த்திபலிங்கம் (மண்ணினால் செய்யப்பட்ட லிங்கம்) பிடித்து, மஹாமந்திரங்களால் சிவலிங்கங்களை பிரதிஷ்டை பண்ணுகிறார். ஸ்வாமி அனுக்கிரஹம் செய்கிறார். கோஹத்தி நிவர்த்தி ஆனது. 

🌼இருப்பினும், கங்காஸ்நானம் செய்யணுமே. ஆனால் கங்கை சிவனை விட்டுப் பிரிய தயாரில்லை. சிவன் பிரம்மகிரியின் உச்சியில் "தாண்டவநிருத்யா" ஆடி தன் ஜடாவை தட்டினார். அஞ்சிய கங்கை, பிரம்மகிரியில் தோன்றினாள். கௌதமர் அவளை புகழ்ந்தாலும், மலையின் பல்வேறு இடங்களில் தோன்றித் தோன்றி மறைந்தாள். கௌதமரால் நீரில் குளிக்க முடியவில்லை. அவை கங்காதுவார், வராஹ தீர்த்தம், ராம லக்ஷ்மண தீர்த்தம், கங்கா சாகர் தீர்த்தம் என்று பல வேறு தீர்த்தங்களை உருவாக்கி கொண்டிருந்ததால், 'கௌதமர் ஒரு மந்திரித்த தர்பையால் (குஷஸ்) நதியை சூழ கட்டளையிட்டார். அந்த ஓட்டம் அங்கேயே நின்றதால் "குஷாவர்த்தா" என்று அழைக்கப்படுகிறது. 

🌼இப்படித்தான் கங்காதேவி பிரம்மகிரியிலிருந்து உத்பவமாகி, கௌதம தீர்த்தத்தில் விழுந்து, கர்ப்ப கிரகத்தில் போய் பிரசன்னமாகி ஸ்வாமியை பூஜை பண்ணி வெளியே வருகிறாள். அதனால் இவளுக்கு கோதாவரி என்கிற திருநாமம். கெளதமர் தீர்த்தமாடி ஈஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கி அருள் பெற்றார். 

🌼கௌதமரின் பெயராலே கௌதமி என்றும், கோதாவரி எனும் திருநாமத்தோடு நதி உற்பத்தியாகி, பாரத தேசத்தின் 2வது நீளமான பெரு நதியாக உருவாயிற்று. 
🌼இங்கு, 12 வருடங்களுக்கு ஒரு முறை, குருபகவான் சிம்ம ராசியில் பிரவேசிக்கக்கூடிய காலத்தில், கும்பமேளா சிறப்பாக நடைபெறுகிறது. 

🛕அருகில் உள்ள ஆலயங்கள்:🛕

🏔️நிலாம்பிகா / தத்தாத்ரதேயர் / மதம்பா ஆலயம் : 

நீல்மலை என்ற மலையின் மேல் உள்ள ஆலயத்தில் பரசுராமரர் தவம் இருந்த இடம். இந்த இடத்தில் ஸ்ரீ நீலாம்பிகை, தத்தாத்ரேயர், மதம்பா முனிவர்கள் உள்ள ஆலயம் உள்ளது. 

🏔️அஞ்சனகிரி:
திரயம்பகேஷ்வரரிலிருந்து சுமார் 7 கி.மீ.தூரத்தில் உள்ள மலையில் தான் ஸ்ரீஅனுமார் பிறந்ததாக நம்புகிறார்கள்.
அந்த மலை அஞ்சனகிரி என்று அழைக்கிறார்கள். தனிப்பாதை உள்ளது. மலையின் மீது சிறிய ஆலயம் உள்ளது. 

- தகவல்கள்..சில ... வலைதளங்களிலிருந்தும்....  
நன்றி🙏 

🛐பயணங்கள் தொடரும்.... 
நன்றி🙇🏼‍♂️🙏 

#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
14/15.10.2022
#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️
#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாராஷ்ட்ரா
#திரயம்பகேஷ்வரர் #திரயம்பகேஸ்வரர்.
மேலும் படங்கள்
திரயம்பகேஸ்வரர் 15.10.2022

பதிவு:3 மேலும் படங்கள்
https://m.facebook.com/story.php?story_fbid=8641205009288013&id=100001957991710

பதிவு ..2. படங்கள்

https://m.facebook.com/story.php?story_fbid=8641098475965333&id=100001957991710

Wednesday, December 14, 2022

பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️#மகாராஷ்ட்ரா#MUMBAI #மும்பை #செம்பூர்சுப்பிரமணியசுவாமிஆலயம்14.10.2022

பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
#மகாராஷ்ட்ரா
#MUMBAI  #மும்பை 
#செம்பூர்சுப்பிரமணியசுவாமிஆலயம்
14.10.2022

🛕#செம்பூர்சுப்பிரமணியசுவாமிஆலயம்
14.10.2022

🛐நாங்கள் 13.10.2022 அன்று மும்பை பெருநகரத்தில் உள்ள குறிப்பிட்ட சில இடங்களை சுற்றுப் பார்த்து விட்டு இரவு  மும்பை ஆந்திரா மகாசபா ஜிம்கானா என்ற இடத்தில் தங்கினோம்.

🕉️14.10.2022 காலையில் உணவுமுடித்துக் கொண்டு ஜோதிர்லிங்க தரிசனப் பயணத்தைத் தொடங்கினோம்.  அடுத்து நாங்கள் சென்ற இடம் 
மும்பையின் புறநகரில் உள்ள செம்பூர் என்ற இடத்திற்கு சென்றோம். 

🕉️அங்குள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயம் தரிசனம் செய்தோம். 
தரிசனம் 14.10.2022 வெள்ளி காலை 9.மணி அளவில் காலை பூசையில் கலந்துகொள்ளும் பாக்கியம் கிடைத்தது.

🛐மும்பை பெருநகருக்கு வடக்கில் உள்ளது செம்பூர், மும்பையின் மாதுங்கா என்ற பகுதியில் உள்ளது.

☸️இந்தப் பகுதியை MINI MADRAS
என்று அழைக்கிறார்கள். தமிழ்நாட்டைச் சார்ந்த பகுதி மக்கள் இங்கு அதிகம் வசிக்கின்றனர்.

🛐மிக நல்ல ஆன்மீக பற்றுடையவர்களால், இங்கு ஒரு அருமையான ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.

🛐இந்த ஆலயம் உருவாக மூலக்காரணமாக இருந்தவர், காலஞ்சென்ற ஸ்ரீ T.V. லெட்சுமனன் அவர்கள்.  அன்னாரின் பெரும் முயற்சியால், காஞ்சி சங்கர மடத்தின் உதவியும், மற்றும் தென்னிந்திய பஜன் சமாஜ், அரசின் உதவிகள், மற்றும், ஏராளமான அன்பர்கள் முயற்சியால் இவ்வாலயம்  உருவாக்கப்பட்டுள்ளது.

🕉️இந்தப் பகுதியில் எந்த இடத்தில் ஆலயம் கட்டப்படவேண்டும் என்று  பூமி சாஸ்த்திரத்தின்படி பிரசன்ன விதிகண்டு இடம் தேர்வு செய்யப்பட்டு, ஆகம சாஸ்திரப்படி  ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.

⚛️இவ்வாலயம் கட்ட ஏராளமானோர்கள் உதவி செய்துள்ளனர்.

🛐குறிப்பாக, திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் தனி அக்கரையுடன் இவ்வாலய பணிகளுக்காக அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டும்,  பொருள் உதவிக்கும் உதவியுள்ளார்கள். சுவாமிகள் முன்னிலையில்1973 ல் பாலாலயம் செய்யப்பட்டது.

☸️4.5 அடி உயரம் உள்ள முருகன் சிலைக்காக  கிரேனட் கல், தமிழ்நாட்டில் உள்ள  மைலத்திலிருந்து வரவழைக்கப்பட்டும், மிகப் புகழ்வாய்ந்த, சுவாமிமலை சிற்பி குமரேச ஸ்தபதி அவர்களால் செய்யப்பட்டது. பஞ்சலோக உட்சவமூர்த்தி சிலைகளும் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

 🛐தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 50 சிற்பிகள் வரவழைக்கப்பட்டு முழு ஆலயமும் கட்டப்பட்டது இதற்காக, சுமார் 800 டன் கற்கள் மகாபலிபுரத்திலிருந்து மும்பைக்கு கொண்டுவரப்பட்டது.

🛐புனித ஜெகத்குரு  சங்கராச்சாரியா ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் வழிகாட்டுதலின்படி இவ்வாலயத்தின் அணைத்துப் பகுதிகளும் அவர்களின் ஆசீர்வாதம் பெறப்பட்டு, ஆலயம் நிர்மாணம் செய்து,  1980ல் முதல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 

🕉️இந்த ஆலயம் புராதானத்தையும், புதுமை தொழில்நுட்பத்தையும் முறையாகக் கொண்ட அமைப்பு உடையது.

🕉️ஆலயம் நுழைவில் கீழ்தளத்தில் துவார கணபதி, மற்றும் வலதுபுறம் ஆஞ்சனேயர் சன்னதிகள் உள்ளன.  ஆலய முன் பக்கத்தில் உள்ள  நீண்ட பெரிய சுவற்றில் வடக்குப்புறம் பெருமாள், தென்புறம் அம்மன் சுதை வடிவங்கள்.

⚛️இரண்டு அடுக்கு மாடி உயரம் கொண்டது. 108 படிகள் அமைந்துள்ளது.
மின்தூக்கியும் உண்டு.

🕉️படிகள் தோரும் முருகன் பல்வேறு சிலை, புராணங்கள் சுதை வடிவில் உள்ளது.

⚛️108 படிகளில் புராணக்கதைகளை 3D சிற்பமாக அழகிய முறையில் அமைந்துள்ளனர்.

🕉️ஆலய அலுவலகம் மற்ற சமையல் அறைகள் முதல் அடுக்கில் உள்ளன.

🕉️இரண்டாவது அடுக்குக்கு மேல் ஆலயம்

🛐 முழு கற்றளியில் கருவரை அமைக்கப்பட்டுள்ளது. 
மேற்கு நோக்கிய மூலவர்  ஸ்ரீ சுப்பிரமணியர், வள்ளி தெய்வாணையுடன், கொடிமரம், மயில்,  இடதுபுரம் தனி ஸ்ரீ விநாயகர், வலதுபுறம் ஸ்ரீஅய்யப்பன், வடகிழக்குப் பகுதியில் 
ஸ்ரீ குருவாயூரப்பன், வட கிழக்கில் துர்க்காதேவி சன்னதிகள்.

☸️தனி நவகிரகம் அமைப்பு.  பெரிய (வாகன) மண்டபம் கருவரைகள் பின்புறம்
அமைத்துள்ளார்கள்.

⚛️மிகுந்த பொருட்சிலவில் அமைக்கப்பட்டுள்ளது. மிக அற்புதமாகவும், மிகவும் மிகத்தூய்மையாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

🕉️தமிழர் ப(மி)குதியாக இருப்பதால், பக்தர்கள் விழாக்கள் சிறப்புடன் உள்ளதாக கூறுகிறார்கள்.

⚛️ஆலயம் மிகத் தூய்மையாகவும், பக்தி உணர்வுடனும் உள்ளது.

🛐இந்தப் பகுதியில் ஏராளமான தமிழர்கள் உள்ளதால், பக்தர்கள் முறையாக வந்து வழிபட்டு செல்கிறார்கள். 

🛐ஆலயம் தனி நிர்வாகக்குழுவின் மூலம் சிறப்பான கட்டுப்பாட்டுடன் நடைபெற்று வருகிறது.

🕉️அன்றாட பூசைகள் மட்டுமல்லாது,   கந்தர் சஷ்ட்டி, தைபூசம், பங்குனி உத்திரம் முதலிய முக்கிய விழாக்கள் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

🛐மும்பை செல்லும் தமிழர்கள் அவசியம் தரிசனம் செய்ய வேண்டிய ஆலயமாக உள்ளது. ஸ்ரீ செம்பூர் முருகன் ஆலயம்.

🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼‍♂️🙏

#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
14.10.2022

#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️
#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாராஷ்ட்ரா
#மும்பை #MUMBAI
🛕#செம்பூர்சுப்பிரமணியசுவாமிஆலயம்
☸️🛐🕉️⚛️☸️🛐🕉️⚛️☸️🛐🕉️⚛️☸️🛐🕉️⚛️☸️🛐

Tuesday, December 13, 2022

பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️#மகாராஷ்ட்ரா#MUMBAI #மும்பை #ClTY_TOUR -#ஸ்ரீசித்திவிநாயகர்ஆலயம்பதிவு - 4 13.10.2022

#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️
#மகாராஷ்ட்ரா
#MUMBAI #மும்பை 
#ClTY_TOUR -
#ஸ்ரீசித்திவிநாயகர்ஆலயம்
பதிவு - 4
13.10.2022

4.🛕#ஸ்ரீசித்திவிநாயகர்ஆலயம்.

🛕மும்பை பெருநகரில் உள்ள புகழ்பெற்ற சித்தி விநாயகர் ஆலயம் சென்றோம்.

🛕பிரதான வீதியை ஒட்டியே ஆலயம் அமைந்துள்ளது. ஒரு பெரிய சாலையின் மறுபுறம் நுழைவுப் பாதை உள்ளது. பாதுகாவலர்கள் உள்ளார்கள். விநாயகர் ஆலயம் ஒரு பெரிய வளாகம் உள்ளடங்கியது.

🛕கட்டுப்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உண்டு.

🛕Booja, Donation வாங்க தனியான Counters உள்ளன.

🛕நுழைவு ப்பாதை Gate 1 மூலம் உள்ளே செல்லவேண்டும். 

🛕இரும்புக் குழாய்கள் வைத்து தடுப்பு வரிசைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 

🛕ஆலயத்தில் பெரிய சுற்று மண்டபம் உள்ளது.  

🛕நடுவில் கருவரை அமைந்துள்ளது.
மூலவர் கருவரை முன்புறம் சிறிய வெள்ளி மூஞ்சூறு வாகனம் உள்ளது.

🛕கருவரை 3 பகுதிகளாக தங்க வேலைப்பாடுகளுடன் அழகிய முறையில் ஜொலிக்கின்றது. நடுவில் சிறிய அளவில் ஸ்ரீ சித்தி விநாயகர். ஒரு புறம் சிறிய சிவலிங்கம், மறுபக்கம் உற்சவர். எல்லாம் தங்க கவசத்தில் அமைத்துள்ளனர்.

🛕வரிசையில் நின்று மிக அருகில் சென்று தரிசிக்க வேண்டும். விரைவு தரிசனம் என்று ஒரு இடமும் உள்ளது. 
இது கருவரைக்கு முன்புறம் சற்று தொலைவில் இருந்து கொண்டு தரிசிக்க முடியும்.

🛕ஆலய உள் வளாகத்திலேயே, ஒரு சிறிய ஆஞ்சனேயர், சிறிய மண்டபத்தில் இருக்கிறது. இதையும் வணங்கி விட்டு Exit Gate 2 மூலம் வெளியில் வரலாம்.

🛕ஆலயத்தின் முன்புறம் உள்ள இடங்களில் சிறுசிறு கடைகள் உண்டு. 

🛕நுழைவுவாயில் பிரதான வீதியை ஒட்டியே உள்ளது. எப்போதும், பரபரப்பும், அதிக வாகனப் போக்குவரத்துகளும் சாலையில் உள்ளது.

🚘தனி வாகன நிறுத்தும் இடம் இல்லை.

🏨மும்பையில் உள்ள இந்த இடங்களை மட்டும் பார்த்து விட்டு, மாலையில் நாங்கள் மும்பை ஆந்திரா மகாசபா ஜிம்கானா என்ற இடத்திற்கு சென்று இரவு தங்கினோம். 

🏬மாலையில் West Dadar Railway station அருகில் உள்ள கடைத்தெருவிற்க சென்று சிலர் துணிவகைகள் சில வாங்கி வந்தார்கள். 

🚍அடுத்த நாள் 14.12.2022 காலை உணவு முடித்து, மும்பை பெருநகரிலிருந்து புறப்பட்டோம் .

🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼‍♂️🙏

#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
13.10.2022
#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️
#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாராஷ்ட்ரா
#மும்பை #MUMBAI
#ClTY_TOUR 
#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️

பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️#மகாராஷ்ட்ரா#MUMBAI #மும்பை #ClTY_TOUR #gatewayofindiamumbai பதிவு - 3 13.10.20223. #GATEWAYOFINDIA

#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️
#மகாராஷ்ட்ரா
#MUMBAI  #மும்பை 
#ClTY_TOUR  #gatewayofindiamumbai 
பதிவு - 1
13.10.2022

3. #GATEWAYOFINDIA

🌁மும்பை பெருநகரின் பிராதான வீதிகள் பலவற்றைக் கடந்து அரபிக்கடல் கரையில் உள்ள GATEWAY OF INDIA சென்று பார்த்துவந்தோம்.

🌁16 ஆம் நூற்றாண்டின் குஜராத்தி கட்டிடக்கலை கூறுகளால் ஈர்க்கப்பட்டு, இந்தோ-இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்ட நினைவுச்சின்னத்திற்கு மார்ச் 1913 இல் அடிக்கல் நாட்டப்பட்டது. நினைவுச்சின்னத்தின்  வடிவமைப்பு இறுதி செய்து செய்யப்பட்டு 1914 இல் மட்டுமே அனுமதிக்கப்பட்டது, மேலும் கட்டுமானம் 1924 இல் நிறைவடைந்தது.  நினைவுச்சின்னத்தின் ஒரு நினைவு வளைவு அமைப்பு.

 🌁இது தாஜ்மஹால் அரண்மனை மற்றும் டவர் ஹோட்டலுக்கு எதிரே ஒரு கோணத்தில் நீர்முனையில் அமைந்துள்ளது. அரேபிய கடலைக் காணும் வகையில் அமைந்துள்ளது.

🌉இந்த நுழைவாயில் உள்ளூர்வாசிகள், தெரு வியாபாரிகள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் கூடும் இடமாகவும் உள்ளது.

🏞️நுழைவாயிலில் ஐந்து ஜெட்டிகள் உள்ளன, அவற்றில் இரண்டு வணிக படகு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

🔥2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளான இடமாக கேட்வே இருந்தது, அப்போது முன்னால் நிறுத்தப்பட்டிருந்த டாக்ஸியில் வெடிகுண்டு வெடித்தது. 

🌁2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, நுழைவாயிலுக்கு எதிரே உள்ள தாஜ் ஹோட்டல் மற்றும் அதன் அருகாமையில் உள்ள மற்ற இடங்களைத் தொடர்ந்து மக்கள் அதன் வளாகத்தில் குவிந்ததால் நுழைவாயிலுக்கான அணுகல் தடைசெய்யப்பட்டது. 

🏗️பிப்ரவரி 2019 இல், மாநில கவர்னர் வழங்கிய வழிகாட்டுதலைத் தொடர்ந்து, மார்ச் 2019 இல், மகாராஷ்டிரா மாநில அரசு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இருப்பிடத்தை மேம்படுத்த நான்கு-படி திட்டத்தை முன்மொழிந்தது.

🏗️கேட்வே வளைவு 26 மீட்டர் (85 அடி) உயரம் கொண்டது, அதன் மையக் குவிமாடம் 15 மீட்டர் (49 அடி) விட்டம் கொண்டது.

🏗️இந்த நினைவுச்சின்னம் மஞ்சள் பசால்ட் மற்றும் வலுவூட்டப்பட்ட கான்கிரீட்டால் கட்டப்பட்டுள்ளது.

🏗️துளையிடப்பட்ட திரைகள் குவாலியரில் இருந்து கொண்டு வரப்பட்ட போது கற்கள் உள்நாட்டில் பெறப்பட்டன.

🌉இந்த நினைவுச்சின்னம் மும்பை துறைமுகத்தை நோக்கி உள்ளது.

🏛️நுழைவாயிலின் அமைப்பில் நான்கு கோபுரங்கள் உள்ளன, மேலும் அரபிக்கடலுக்குச் செல்லும் நுழைவாயிலின் வளைவின் பின்னால் கட்டப்பட்ட படிகள் உள்ளன.

🏛️நினைவுச்சின்னம் சிக்கலான கல்வேலைகளைக் கொண்டுள்ளது (ஜாலி வேலை என்றும் அழைக்கப்படுகிறது).

 🏛️ஸ்காட்டிஷ் கட்டிடக்கலைஞரான ஜார்ஜ் விட்டெட், குஜராத்தின் 16 ஆம் நூற்றாண்டின் கட்டிடக்கலை கூறுகளுடன் உள்நாட்டு கட்டிடக்கலை கூறுகளை இணைத்தார்.

🏛️துறைமுகத்தின் முன்பகுதி நகரின் மையப்பகுதி வரை செல்லும் ஒரு எஸ்பிளனேடை உருவாக்குவதற்காக மறுசீரமைக்கப்பட்டது. வளைவின் இருபுறமும் 600 பேர் அமரும் வகையில் பெரிய அரங்குகள் உள்ளன.

🏛️கட்டுமானத்திற்கான செலவு ₹21 லட்சம் (அமெரிக்க $26,000), அப்போதைய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

🏛️நிதி பற்றாக்குறையால், அணுகு சாலை அமைக்கப்படவில்லை. எனவே, கேட்வே அதற்குச் செல்லும் சாலைக்கு ஒரு கோணத்தில் நிற்கிறது.

🏛️பிப்ரவரி 2019 இல், சீகேட் டெக்னாலஜி மற்றும் CyArk ஆகியவை டிஜிட்டல் ஸ்கேனிங் மற்றும் நினைவுச்சின்னத்தை காப்பகப்படுத்துவதன் மூலம் நுழைவாயிலை டிஜிட்டல் முறையில் பதிவுசெய்து பாதுகாக்கும் பணியை மேற்கொண்டன. இது பாரம்பரிய நினைவுச் சின்னங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பதற்கான CyArk இன் சர்வதேச திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

 🏛️டெரஸ்ட்ரியல் லேசர் ஸ்கேனிங் (லிடார்), ட்ரோன்கள் மற்றும் போட்டோகிராமெட்ரி பயிற்சிகள் மூலம் நடத்தப்படும் வான்வழி ஆய்வுகள் இதில் அடங்கும்.

 ⛲வரைபடங்கள் மற்றும் முப்பரிமாண மாதிரிகள் எந்த எதிர்கால புனரமைப்பு வேலைகளையும் தெரிவிக்கும்.

🏛️1903 இல் கட்டப்பட்ட தாஜ்மஹால் அரண்மனை மற்றும் டவர் ஹோட்டலுக்கு எதிரே, கேட்வே ஒரு கோணத்தில் நிற்கிறது.

🏛️நுழைவாயிலின் மைதானத்தில், நினைவுச்சின்னத்திற்கு எதிரே, 17 ஆம் நூற்றாண்டில் மராட்டிய சாம்ராஜ்யத்தை நிறுவ முகலாயப் பேரரசுக்கு எதிராகப் போராடிய மராட்டிய வீரசிவாஜி மகாராஜி யின் சிலை உள்ளது.
26 ஜனவரி 1961 அன்று இந்திய குடியரசு தினத்தன்று இந்த சிலை திறக்கப்பட்டது.
இது அதன் இடத்தில் இருந்த கிங்-பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ் வெண்கல சிலையை மாற்றப்பட்டது.
🏛️நுழைவாயிலில் உள்ள மற்றுமொரு சிலை, இந்தியத் துறவியான சுவாமி விவேகானந்தரின் சிலை ஆகும்.

⛲சுற்றுலா பயணிகளின் மிக முக்கிய இடமாக விரும்பப்படுகிறது.
அணைவரும் புகைப்படங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். 

🛥️இங்கிருந்து அரபிக்கடலில் உள்ள எலிபெண்டா தீவு என்ற இடத்திற்கு செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.

🪆இவ்வளாகத்திலேயே சுற்றுலா அலுவலகம் ஒன்றும் உள்ளது. அனைத்து விபரங்கள், மற்றும் சுற்றுலா இடங்களுக்கு செல்ல வாகன வசதிகள் ஏற்பாடுகள் செய்து தரப்படுகின்றன.

🪢மும்பையின் மிக முக்கிய சுற்றுலா இடங்களில் முதன்மையாக உள்ளது. 

🏟️இதன் அருகில் பல அருங்காட்சியகம், முதலிய  பழமையான இடங்கள், மும்பையின் வரலாற்றின் சிறப்பு வாய்ந்த கட்டிடங்கள் ஏராளமாக உள்ளது.

🏜️அதிக பாதுகாப்பு, மற்றும் கட்டுப்பாடுகள் நிறைந்த இடங்களில் இதுவும் ஒன்று.
தூய்மை பராமரிக்க பெருமுயற்சி எடுத்துள்ளார்கள்.

பல தகவல்கள்.... வலைதளங்களிலிருந்து .....
நன்றிகளுடன்.....🙏🏻

🛐பயணங்கள் தொடரும்....

நன்றி🙇🏼‍♂️🙏

#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
13.10.2022
#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️
#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாராஷ்ட்ரா
#மும்பை #MUMBAI
#GATEWAYOFINDIA
#gatewayofindiamumbai
#ClTY_TOUR 
#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️

Monday, December 12, 2022

#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️#மகாராஷ்ட்ரா#MUMBAI #மும்பை #ClTY_TOUR பதிவு - 2 13.10.20222. மகாலெட்சுமி ஆலயம்.

#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️
#மகாராஷ்ட்ரா
#MUMBAI #மும்பை 
#ClTY_TOUR 
பதிவு - 2
13.10.2022
2. மகாலெட்சுமி ஆலயம்.
🛕அடுத்து நாங்கள் மகாலெட்சுமி ஆலயம் அழைத்துச் செல்லப்பட்டோம்.

🛕மகாலெட்சுமி ஆலயம் மும்பையின் பிரதான சாலையில் உள்ள
சுவாமிநாராயணன் (மகாலட்சுமி) ஆலயம் அருகில் இறங்கி சிறிய சாலையில் செல்லவேண்டும். அங்குள்ள மகாலெட்சுமி ஆலயம் மிகவும் புகழ் பெற்றதும், நம்பிக்கையானதும் ஏராளமான பக்தர்கள் கூட்டத்தை ஈர்க்கும் ஆலயமாகவும் விளங்குகிறது.

🛕சிறிய சாலையில், வழக்கம் போல, சிறுசிறு கடைகள் தாண்டி சென்றால், ஆலயம் முகப்பு வளைவு தாண்டி,
சுமார் 20 படிகள் ஏறி செல்லவேண்டும்.

🛕ஆலயம் வளாகம், பெரிய முன்மண்டபம், அடுத்து உள்ள சற்று சிறிய உள் மண்டபத்தின் உட்புறம் சிறிய கருவரையில், அருள்தரும் மகாலட்சுமி -மலர்களாளும், நகைகளாலும் அலங்கரிக்கப்பட்டு மிக அழகாக காட்சியளிக்கிறார். சிறிய உருவம். முகம் மட்டுமே நன்றாகத் தெரிகிறது.

🛕ஆலய வளாகம் முழுதும் இரும்புக்குழாய் மூலம் வரிசை ஏற்பாடுகள் செய்யப்பட்டு இரண்டு வழிகளில் சென்று சாமி தரிசனம் செய்து கொண்டு திரும்ப வர வேண்டும். 

🛕முழு வளாகமும் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்துள்ளார்கள். 

🛕பக்தர்கள் கூட்டம் மிக அதிகம் இல்லையென்றாலும், மக்கள் வந்து சென்று வணங்கிக் கொண்டு சென்றுகொண்டிருக்கிறார்கள். 

🛕மிகவும் சக்திவாய்ந்தது என்றும், பிரார்த்தனைத் தலம் என்றும் அறிய முடிகிறது.

🛕இங்கு Security Checking செய்து உள்ளே அனுப்பி வைக்கின்றனர். உள்ளே செல்ல படி ஏறி வணங்கிவிட்டு திரும்ப அதே வழியில் வர வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகம். 

🛕குறுகிய பகுதியாக இருப்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமானால், சுவாமிதரிசனம் காலதாமதமாகலாம்.

🛕நாங்கள் சென்ற போது அதிக கூட்டம் இல்லை. எனவே, உடன் அம்பாள் தரிசனம் செய்து கீழே இறங்கி வந்தோம்.

🛕வழியில் இரண்டு மிகப்பழமையான ஆலய சன்னதிகள் இருந்தன.
அவற்றையும் தரிசித்து விட்டு பிரதான சாலையில் எங்கள் பேருந்தை அடைந்தோம். 

🛕நேரம் இருப்பவர்கள், அருகில் உள்ள சுவாமிநாராயண் ஆலயங்களையும், மற்ற சிறுசிறு ஆலயங்களையும் தரிசிக்கலாம்.

🛕இங்கு தனியாக வாகனம் நிறுத்தும்
இடம் எதும் கிடையாது. மிகவும் பரபரப்பான பகுதி. நமது வாகனத்தை வேறு இடங்களில் நிறுத்தி நாம் புறப்படும் நேரத்தில், வந்து நம்மை அழைத்துச் செல்ல வேண்டும். காலதாமதம் செய்ய முடியாது. காவல் கட்டுப்பாடுகள் மிக அதிகம்.

🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼‍♂️
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
13.10.2022
#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️

#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாராஷ்ட்ரா
#மும்பை #MUMBAI

#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️#மகாராஷ்ட்ரா#MUMBAI #மும்பை #ClTY_TOUR #ஜூகுபீச் பதிவு - 1 - 13.10.2022

#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️
#மகாராஷ்ட்ரா
#MUMBAI #மும்பை 
#ClTY_TOUR #ஜூகுபீச்
பதிவு - 1
13.10.2022
#ஜூகுபீச்
13.10.2022 அன்று காலை உணவு முடித்துக் கொண்டு, எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனிப்பேருந்தில் ஏறி மும்பை பெருநகரங்களின் ஊடே சில இடங்களைப் பார்த்து வந்தோம்.

1. ஜூகு பீச்
2. மகாலெட்சுமி ஆலயம்
3. கேட் வே ஆப் இந்தியா
4. சித்திவிநாயகர் ஆலயம்.

இவைகள் அணைத்துமே, பெருநகரத்தில் இருந்ததால், இவற்றையெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு, மீண்டும் நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு 13.10.2022 அன்று மாலை வந்துசேர்ந்தோம்.

நாங்கள் மும்பை மாநகரத்தின் தாதர் என்ற பகுதியில் தங்கி இருந்தோம். முதலில் இங்கிருந்து நகரின் இன்னொரு பகுதியில் உள்ள ஜுகு கடற்கரைக்கு சென்றோம்.

1.ஜுகு கடற்கரை மும்பை:

 🌊அரபிக்கடற்கரையில் உள்ளது.
 இது சுமார் 6 கி.மீ.தூரம் நீண்டது. சென்னை மெரினாவைப் போன்று முழுதும் மனல் வெளி கிடையாது, கரடு முரடான கற்கள் நிறைந்துள்ளது.
மும்பையின் சுற்றுலா இடங்களில் இதுவும் ஒன்று. 

🌊19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கடற்கரையில் 2 முதல் 3 மீட்டர் உயரத்தில் 
நீண்ட மனல் திட்டாக குவிந்து ஒரு தீவுபோல் இருந்து, அந்த இடங்கள் வளர, வளர கடற்கரை உருவாகிவிட்டதாகக் அறிவியலார் கூற்று.

🏖️RDடாடா அவர்களால், இந்த இடத்தில் விமானப் போக்குவரத்திற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டவுடன், இன்னும் அதிக வளர்ச்சியடைந்துவிட்டது என்று கூறுகிறார்கள்.

🏖️வாரக் கடைசியிலும், விடுமுறை நாட்களிலும் அதிக மக்கள் கூடுகிறார்கள்.
தின்பண்டங்கள் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான கடைகள் ஏராளமாக உள்ளன.

🏖️கடலில் ஒரு கப்பல் நிறுத்தப்பட்டு பெரிய TVயில் விளம்பரம் செய்யப்படுகிறது - விளம்பர வர்த்தகம் !

✈️கடற்கரையின், மறுபுறத்தில் மும்பை விமான நிலையம் அமைந்துள்ளதால், அதிலிருந்து விமானங்கள் அடிக்கடி புறப்பட்டு செல்லும் காட்சிகள். மிகவும் ரசிக்கத்தக்கவாறு உள்ளது.

🏖️திரைப்படங்கள் அதிகம் எடுக்கும் இடமாக விளங்குகிறது.

☃️வினாயகர் சதுர்த்தியில் பெருங்கூட்டமாக மக்கள் வந்து மன் வினாயகரைக் கரைக்கும் நிகழ்வு குறிப்பிடத்தக்கதாக கூறுகிறார்கள். 

🏞️தற்போது, நாங்கள் சென்ற பகுதியில், பலரும் பாராட்டத்தக்க வகையில்மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள சத்ரபதி சிவாஜியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

🍁சுதந்திர எழுச்சி போராட்ட காலங்களில், மகாத்மா காந்தி பலமுறை இங்கு வந்து இருந்தார் என்பதால், ஒரு காந்தி சிலையும், ஒரு பள்ளிக்கூடத்திற்கும், ஒரு சிறிய தெருவிற்கும், அவரது பெயர் அவரது நினைவாக வைக்கப்பட்டுள்ளது.

🌷1970ல் பக்தவேதாந்த சுவாமி அவர்களால், ஹரே கிருஷ்ணா பக்தி இயக்கம் துவங்கப்பட்டது. அவர்களால் ஒரு ISKCON ஆலயமும் கட்டப்பட்டுள்ளது.

💥1990ல் மும்பையில் அன்னிய மதத் தீவிரவாதிகளால் இந்த பகுதியில் குண்டுகள் வைக்கப்பட்டு கண்டெடுக்கப்பட்டது. 

🚍அருகில் பிரதான சாலையை ஒட்டி, விமான நிலைய இடத்தில் பெரிய வாகனங்கள் நிறுத்தும் இடம் வசதி உள்ளதால், இங்கு பேருந்து நிறுத்தப்பட்டு, நாங்கள் கடற்கரைக்கு சென்று பார்த்து
விட்டு வந்தோம். 

🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼‍♂️🙏

#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
14.10.2022

#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️

#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாராஷ்ட்ரா
#மும்பை #MUMBAI
#ClTY_TOUR #ஜூகுபீச்

Sunday, December 11, 2022

பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️#மகாராஷ்ட்ரா#MUMBAI #மும்பை #ClTY_TOUR பதிவு - 1 🌼13.10.2022

#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️
#மகாராஷ்ட்ரா
#MUMBAI  #மும்பை 
#ClTY_TOUR 
பதிவு - 1
13.10.2022

நாங்கள் 12.10.2022 அன்று மத்தியப்பிரதேசம் உஜ்ஜியினியிலிருந்து புறப்பட்டு 13.10.2022 காலையில் மும்பை வந்து அடைந்தோம்.  ரயில்வே நிலையத்திலிருந்து மும்பை ஆந்திரா மகாசபா ஜிம்கானா என்ற இடத்தில் சென்று தங்கினோம். கீழ்தளத்தில், பெரிய Hall இருந்தது. அதில் தங்கிக் கொள்ள வைத்தார்கள். மேல்தளங்களில், தனி ரூம்கள் உள்ளன. Room காலி இடம் இருந்தால் மட்டும் அனுமதிக்கின்றார்கள். தனிக்  கட்டணம் என்கிறார்கள். எல்லோருக்கும் Hallலில் தான் இடம் வசதி செய்யப்பட்டு இருந்தது. Bed pillow  தனியாக pay செய்து வசதி செய்து கொண்டோம். 

💥மும்பை மாநகர் பற்றிய அனுபவக் குறிப்புகள்:

🌇எங்கெங்கு நோக்கினும் உயரமான மாடிக்  கட்டிங்கள், வான் வெளியில் வளர்ந்த கட்டிடங்களில் வசிப்பவர்கள் தாம் அதிகமாக உள்ளர்கள்.

🌆உலக பணக்காரர்களின் வரிசைகளில் உள்ள பெரும் பணம் படைத்தவர்கள் அதிகம் வாழுமிடங்கள் இங்குள்ளன.

🌇மிகக் குறைந்த வசதிகள் நிறைந்த நெருக்கடி மிகுந்த வசிப்பிடங்களை சேரிகள் என்று கூறுகிறார்கள். ஆசியாவின் மிகப் பெரிய சேரிப்பகுதியும் இங்குள்ளது என்று சில வசிப்பிடங்கள் உள்ள இடத்தை சுட்டிக் காட்டினார்கள்.

🌇பெரும்பாலும் பாரதத்தின் அனைத்து தொழில் மற்றும், மத்திய, மாநில அரசுகளின் கட்டிடங்கள், அனைத்து சமூக குடியிருப்புகள், பழமையானது முதல், நவீன வகை பொருள்கள் மற்றும் சேவை அடிப்படையில் வளரும் திட்ட அலுவலகங்கள் அனைத்தும் இந்த குறுகிய தீபகர்ப்ப இயற்கை அமைப்புடன் உள்ள பகுதியாகிய மும்பையில் இருக்கிறது. 

🌁அகண்ட பாரத பூமியில்  இவை அனைத்தையும் திட்டமிட்டு பரவலாக அமைத்து  வளர்த்தால் இவ்வளவு நெருக்கடிகளையும் களையலாம் என்ற எண்ணங்கள்  வலுப்பெறுகிறது.

 🏗️பூமியில் இருந்து வானத்தை நோக்கியே அதிக கட்டிடங்கள் வளருகிறது என்பதை நேரில் உணர்கிறோம்.

🏙️எங்கும் பரபரப்பான வாகனங்கள் போக்குவரத்துகள், நெருக்கடியான சாலைகள்.  சில இடங்களில் கடல்கரையை மனல் தரைகளாக மாற்றி அதில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.  கடலில் ஓரத்தில் சாலைகள் அகலப்படுத்துதல், போக்குவரத்து மேம்பாட்டிற்காக, ஒருபுறத்திலிருந்து மறுபுறத்திற்கு செல்லும் வகையில், கடல்மீது போடப்பட்டுள்ள பிரம்மாண்டமான பாலங்கள் நம்மை புதிய செயற்கை உலகிற்கு அழைத்து செல்கிறது.

🏙️இந்த அதீத வளர்ச்சிகளே மும்பையின் மதிப்புக்கும் பெருமைக்கும் காரணமாக உள்ளது.
 
🌆பொதுவாக பெருநகர வாழ்க்கை முறைகள் இயந்திரத்தனமாகவே இருக்கும் என்பர்கள். இங்கு அதற்கான காரணம் நன்றாகத் தெரிகிறது. அப்பேர்பட்ட சமூக வாழ்க்கையை விரும்பியோ, விரும்பாமலோ, மனிதர்கள் ஏற்றுக்கொண்டு இயங்குகிறார்கள் என்பதே நிதர்சனம்.

#மும்பை: சில பொதுக்குறிப்புகள்: 

💥மும்பை பெருநகரின் விரைவான வளர்ச்சி:

🏙️மும்பை எல்லா வகையிலும் அதிகாரம், செல்வம், கவர்ச்சி மற்றும் புகழ் ஆகியவற்றால் இயக்கப்படும் ஒரு மெகா- நகர்.

🏙️மும்பை சால்சேட் எனப்படும் ஒரு தீவின் தென்மேற்கில் உள்ள ஒரு குறுகிய தீபகற்பத்தில் உள்ளது. இதன் மேற்கில் அரபிக் கடலும், கிழக்கில் தானே கடற்கழியும், வடக்கே வசை கடற்கழி ஆகியவை அமைந்துள்ளன.

🏙️மும்பையின் புறநகர் மாவட்டம் தீபகற்பத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளது. நவி மும்பை என்னும் பகுதி, தானே கடற்வழிக்கு கிழக்கே உள்ளது மற்றும் தானே வசை கடற்கழிக்கு வடக்கே உள்ளது.

🏙️மும்பை இரண்டு தனித்துவமான பகுதிகளாக மும்பை நகர மாவட்டம் மற்றும் மும்பை புறநகர் மாவட்டம் என அமைந்துள்ளது. இது மகாராட்டிரத்தின் இரண்டு தனி மாவட்டங்களாக உள்ளது.
நகர மாவட்டப் பகுதி பொதுவாக தீவு நகரம் அல்லது தெற்கு மும்பை என்றும் குறிப்பிடப்படுகிறது

🏢இது வலுவான வரலாற்று இணைப்புகள், அற்புதமான பிரிட்டிஷ் கட்டிடக்கலை, அருங்காட்சியகங்கள், கடற்கரைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக பாலிவுட் ஆதிக்கம் செலுத்தும் நட்சத்திரங்களின் உண்மையான விண்மீன்களைக் கொண்ட நகரம்.

🏢முன்பு,  ஏழு தீவுகள் கொண்ட மீன்பிடி காலனிகளின் சமூகங்களின் தாயகமாக மும்பை இருந்தது.

🏢பல நூற்றாண்டுகளாக, தீவுகள் போர்த்துகீசியர்களிடமும், பின்னர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு, தொடர்ச்சியான உள்நாட்டுப் பேரரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தன.

🏢 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பம்பாய் பெரிய சாலைகள் மற்றும் இரயில் பாதைகளை நிர்மாணிப்பதன் மூலம் மறுவடிவமைக்கப்பட்டது, மறுசீரமைப்பு திட்டம் பம்பாயை அரபிக்கடலில் ஒரு பெரிய துறைமுகமாக மாற்றியது. 

🏙️19 ஆம் நூற்றாண்டில், அரபிக்கடலில் ஒரு பெரிய துறைமுகமாக மாறியது பம்பாய்.  அதன் பொருளாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சியால் பாரதத்தின் குறிப்பிடத்தக்க பெருநகரில்  ஒன்றாக வளர்த்தெடுக்கபட்டது. 

🏙️20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பம்பாய் இந்திய விடுதலை இயக்கத்திற்கான வலுவான தளமாக மாறியது.

🏙️ 1947 இல் இந்தியா விடுதலை அடைந்தவுடன், நகரம் பம்பாய் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 

🏢1960 இல், சன்யுக்தா மகாராஷ்டிரா இயக்கத்தைத் தொடர்ந்து, பம்பாயைத் தலைநகராகக் கொண்டு புதிய மகாராஷ்டிரா மாநிலம் உருவாக்கப்பட்டது.

 🏢இந்த நகரம் 1996 இல் மும்பை என மறுபெயரிடப்பட்டது. இந்த குறுகிய கால வளர்ச்சியில், நகரம் இந்தியாவின் வணிக மற்றும் பொழுதுபோக்கு தலைநகராக மாறியுள்ளது.

🍁 சமூக இயற்கை சார் வளர்ச்சி சூழல்கள்:

🏞️மும்பை நகர்ப்புறம் தீபகற்ப வடிவத்தில் உள்ளது, (ஏழு தீவுகளை இணைக்கும் நிலம் நிறைந்த பகுதி) தாழ்வான பகுதியாகவும் உள்ளது. இதன் புறநகர்ப் பகுதி உயரமான இடத்தில் உள்ளது, கடந்த சில தசாப்தங்களாக, புறநகர் பகுதியில் புதிய முறைசாரா குடியிருப்புகள் உருவாக்கப்பட்டது, மக்கள் தொகையின் விரைவான அதிகரிப்பு முதலியவை, முறையற்ற கழிவு மேலாண்மை மற்றும் வடிகால் நெரிசல் ஆகியவை ஏற்படுத்தியது.

🏞️இப்பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீரின் கணிசமான அளவு குடிசைகள் மற்றும் உயரமான கட்டிடங்கள் கொண்ட தாழ்வான நகர்ப்புற பகுதிகளை நோக்கி பாய்கிறது.  இதன் விளைவாக, மோசமாகக் கட்டப்பட்ட சேரிகள் வெள்ளத்தால், அடித்துச் செல்லப்படுகின்றன அல்லது இடிந்து பெரும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

 🏞️மேலும் வெள்ளத்திற்குப் பின்பு நீர் தேங்கும் நிலை நீண்ட காலத்திற்கு நீடிக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல், வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள், மும்பையில் பலர் பயன்படுத்தப்படும் பொது போக்குவரத்தான தொடருந்து பாதைகளில் அடைப்பும் ஏற்படுகிறது ,  கடந்த சில காலங்களாக, மும்பையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
 
🏞️மும்பையில் வெள்ள பாதிப்பைக் குறைக்கும் செயல்பாட்டுக்கான திட்டங்களை மகாராஷ்டிர அரசு மேற்கொண்டு வருகிறது.

💥பொருளாதார வளர்ச்சிகள்

🌁பல முக்கிய இந்திய நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பெருநிறுவன தலைமையகங்கள் உள்ளன. இது இந்தியாவின் சில முதன்மையான அறிவியல் மற்றும் அணுசக்தி நிறுவனங்களின் அமைவிடமாகவும் உள்ளது. இந்த நகரம் பாலிவுட் மற்றும் மராத்தி திரைப்படத் தொழில்களின் அமைவிடமாகவும் உள்ளது. மும்பையின் வணிக வாய்ப்புகள் இந்தியா முழுவதிலும் இருந்து வரும் புலம்பெயர்ந்தோரை ஈர்க்கின்றது.

🌉மும்பை இந்தியாவின் வர்த்தக தலைநகரமாகவும், உலகளாவிய நிதி மையமாகவும் உருவாகியுள்ளது.  பல தசாப்தங்களாக இது இந்தியாவின் முக்கிய நிதிச் சேவைகளின் அமைவிடமாக, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தனியார் முதலீடு ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்துகிறது.

🏢உலகின் முதல் பத்து வர்த்தக மையங்களில் ஒன்றாக உள்ளது.

🏢உலகின் எந்த நகரத்திலும் இல்லாத வகையில் மும்பையில் எட்டு மிகப்பெரிய பில்லியனர்கள் உள்ளனர்.

🏢 2008 இல் மும்பையின் பில்லியனர்கள் உலகின் எந்த நகரத்திலும் இல்லாத சராசரி அளவு சொத்துக்களைக் கொண்டிருந்தனர்.

- சில தகவல்கள் - வலைதளங்களிலிருந்து....  
நன்றி🙏

🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼‍♂️🙏

என்றும் அன்புடன்
சுப்ராம்.அருணாசலம்_காரைக்கால்

#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️

#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாராஷ்ட்ரா
#மும்பை #MUMBAI

#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️

Friday, December 2, 2022

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️#உஜ்ஜியினிஆலயங்கள்💫பதிவு. 7 12.10.2022 12.SANDIPANI ஆஷ்ரமம்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
பதிவு. 7
12.10.2022

12.SANDIPANI ஆஷ்ரமம்.

🛖சந்திப்பானி என்னும் முனிவர் ஆஷ்ரமத்தில் கிருஷ்ணரும், பலராமரும், சுதாமாவும் படித்தனர்.

🛖இந்த இடத்தில், சாந்திப முனிவரின் பெயரால் ஆஷ்ரமம் அமைத்துள்ளது. உஜ்ஜியினியிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் உள்ள முக்கிய இடம்.

✨ஸ்ரீ கிருஷ்ணா சுதாமா பல்ராம் வித்யா ஸ்தலம் என்றும்
✨ஸ்ரீ குண்டேஷ்வர் மஹாதேவ் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

வரலாறு :

🛐சாந்திபனி முனிவர் காசியை சேர்ந்த தவமுனிவர். கும்பமேளாவிற்காக,  அவந்தி வந்து மகாகாளர் தரிசனம் பெற்றார். 

🛐இவர் அங்கு சென்று இருந்த போது, அங்கு மழை இல்லாததால், கடுமையான வரட்சியில், மக்கள் துன்பத்தில் வாடியதால், சாந்திபனி முனிவரிடம், வரட்சி போக்க வேண்டும் என்றவேண்டுகோள் வைத்தனர்.

🛐முனிவரும், சிவனை நோக்கி கடும்தவம் மேற்கொண்டார். இவரின் கடும் முயற்சியில் இறைவர் தோன்றினார்.
மக்கள் சுபிட்சத்தை அடைய அருள்பெற வேண்டினார். சிவபெருமானும் அவ்வாறு அருளினார். மேலும், இங்கிருந்து தவச்சாலை அமைத்துச் கொண்டு தொடர்ந்து தவம் செய்து வரவும்  அருள் செய்தார்.

🛐தினமும் அபிஷேத்திற்கு கங்கை நீர் வேண்டும் என்று வேண்டவே, அங்கு கோமதி குண்டம் என்ற தடாகம் ஏற்படுத்தி அருளினார்.

 🛐துவாபர் யுகத்தில், கன்சனைக் கொன்ற பிறகு, கிருஷ்ணரும் பலராமும் தங்கள் படிப்பைத் தொடங்க விரும்ப, வாசுதேவர், முனிவர் சாந்திபனியின் ஆசிரமத்திற்கு கல்வி பயில அனுப்பிவைத்தார்.  

🛐பகவான் கிருஷ்ணர் இங்கு வந்து, தனது குருவிடமிருந்து  16 வித்யாப்பியாசங்களையும் 64 கலைகளையும் கற்றல்களையும் பெற்றார். சாந்தி பானி முனிவர் குருதட்சிணை யாதும் வேண்டாம் என்றார்.

🛐அனைத்து தேவர்களும் தெய்வங்களும் வானத்திலிருந்து மலர்களைப் பொழிந்து குருவை வாழ்த்தினர். 
குரு சாந்திபனி, மற்றும் அனைத்து தெய்வங்களும் ஆசிரமத்தில் நின்று கொண்டிருந்ததைக் கண்டு, தேவாதிதேவர்களும் மகான்களும் இருந்தார்கள். 

🛐குரு சாந்திபனி குருதக்ஷிணையை நிராகரித்தார், ஆனால் ஸ்ரீ கிருஷ்ணரின் தீவிர வேண்டுகோளின் பேரில், ரிஷிபத்னி தனது இறந்த மகனை குருதக்க்ஷிணையாக கேட்டார், பின்னர் ஸ்ரீ கிருஷ்ணர் சௌராஷ்டிரா (குஜராத்) பிரபாஸ் தீர்த்தத்தில் ஷங்காசுரனை  போரிட்டு அவரை மீட்டு,  குருவின் மகனை பாதாளலோகத்திலிருந்து அழைத்து  வந்து, குருமாதாவிடம் அறிமுகப்படுத்தி, குருதக்ஷிணை கொடுத்தார்.

🌟இங்கு தொல் பொருள் கட்டிடங்கள் சில உள்ளன. மிகப்பெரிய வளாகத்தில் உள்ள ஆலயம். இங்குள்ள இடங்கள்.
1.ஸ்ரீ குண்டேஷ்வர் மகாதேவ் கோயில்:
2.ஸ்ரீசாந்தி பானி வழிபட்ட சிவன் 
3. கோமதி குண்டம்
4. கோமதி குண்ட வடகரையில் உள்ள 64 கலை காட்சி.
5. ஸ்ரீகிருஷ்ணர் பயின்ற 16 வித்யாப்யாச விளக்கங்கள் ஓவியக் கூடம்.
6. ஸ்ரீசாந்தி பாணி ஆலய கண்காட்சிக் கூடம்.

 🛕1.ஸ்ரீ குண்டேஷ்வர் மகாதேவ் கோயில்:

ஒற்றை உயர கருவரை கோபுரமும், முன்மண்டபமும் அமைந்துள்ளது.
கருவரையின் நடுவில், தரைப்பகுதியில் சிறிய சிவலிங்கம், 
கருவறையின் உள் சுவற்றில் ஸ்ரீபாலாஜி, ஸ்ரீ வாமனர், ஸ்ரீ நாராயணர் சிலைகளும், ஒரு விநாயகரும் அமைத்துள்ளனர்.
மிகவும் பழமையான நந்தியின் தனித்துவமான சிலைகள் உள்ளன.

♨️புராதான பாறை ஒன்றும் குண்டேஷ்வர் மகாதேவ் கோயிலில் உள்ளது.

♨️வரலாற்று சம்பவங்கள் அனைத்திற்கும் ஆதாரமாக குந்தேஷ்வர் மகாதேவ் கோவிலில் உள்ளதாக கூறுகிறார்கள். 

♨️பகவான் ஸ்ரீ குண்டேஷ்வர் மஹாதேவ், சுதாம கிருஷ்ணா-குரு சாந்திபனி காடி, பல்ராம் மிகவும் பழமையான அதிசய சிலைகள், தனித்துவமான நிற்கும் நந்திகனா, அதிசய செல்வக் கடவுள் குபேர், கடவுள் விஷ்ணு மற்றும் வாமன் தேவ் மற்றும் பிற கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் அமைந்துள்ளன. கோயிலின் கூரையின் கட்டிடக்கலையும் ஸ்ரீயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது.

2.🛕ஸ்ரீசாந்தி பானி வழிபட்ட சிவன் 

♨️சாந்திபனி வழிபட்ட சிவலிங்கம் அமைந்த இன்னொரு ஆலயமும் ஒற்றை உயரக் கோபுரத்துடன் சிறிய முன்மண்டபத்துடன் வளாகத்தின் ஒரு பகுதியில் உள்ளது. இதன் கருவரை சற்று அகலமாக உள்ளது. உள்ளே சென்று அபிஷேகம் செய்யலாம்.

♨️முனிவர் ஆலயத்தில் தற்போதும், பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது

🥏3.கோமதி குண்டம்.

🥏ஆலய வளாகத்தின் ஒரு பகுதியில்  உள்ளது. பாதுகாப்பான கட்டுமானத்துடன் பராமரித்து வருகிறார்கள்.

🥏முனிவருக்காக, கிருஷ்ணர், கோமதி நதியிருந்து  நீர் வரவழைத்த இடம். கோமதி குண்டம் எனப்படுகிறது. 

🥏கோமதி ஆற்றிலிருந்து ஸ்ரீ கிருஷ்ணரால் உருவாக்கப்பட்ட புராதான குளம் கோமதி குண்டம்  இந்த இடம் சிறப்பான பராமரிப்பில் உள்ளது.

4.கோமதி குண்ட வடகரையில் உள்ள 64 கலை காட்சி.

♨️கோமதி குண்டம் என்ற சிறப்புவாய்ந்த குளத்தின் கரையில், 64 கலைகளையும், விளக்கும் சிறப்பு கண்காட்சி வளாகம் அமைத்துள்ளனர்.

5. ஸ்ரீகிருஷ்ணர் பயின்ற 16 வித்யாப்யாச விளக்கங்கள் ஓவியங்கள் கூடம்.

🛖முனிவர் செய்த போதனைகளை மிக அருமையான பழமையான மிக ஆகிய ஓவிய  காட்சிகளுடன் கூடிய தனி வளாகம் ஒன்றும் உருவாக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருக்கிறது.  இந்த ஓவியங்களை புகைப்படம் எடுக்க அனுமதியில்லை.

6.. ஸ்ரீசாந்தி பாணி ஆலய கண்காட்சிக் கூடம்.

🛖ஆலய வளாகத்தின் இன்னொரு பகுதியில் சிறிய ஆஸ்ரமம் மண்டபம் அமைந்துள்ளது. 
அதன் உள்ளே  ஸ்ரீசாந்திப முனிவர் சிலை அமைக்கப்பட்டு கருவரை அமைப்பில் வழிபாடு நடைபெருகிறது.
அதன் உட்புறம் மிக பிரமாண்டமான, கண்காட்சியில், புராதான  வரலாறுகள் நிறைந்த, ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

💥சாந்திபானிஆஸ்ரமம் முழுதும் பார்க்க நுழைவுக் கட்டணம் ஏதும் இல்லை.

🌀எல்லா இடங்களுக்கும் சேர்த்து Share Auto per person Rs.250 கொடுத்தோம்.

🌼இந்த ஆலயங்களைத் தரிசித்துவிட்டு அன்று மதியம் Hotel வந்து  மதிய உணவு எடுத்துக் கொண்டு உஜ்ஜியினியிலிருந்து 12.10.2022 மாலை மும்பை புறப்பட்டோம்.

🚞இரவில் ரயிலில் உணவு மற்றும் பயணம்.
இத்துடன் மத்தியப் பிரதேச மாநில  தலங்களை முடித்து கொண்டோம். மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பைக்கு 13.10.2022 அன்று காலை சென்று அடைந்தோம்.

🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼‍♂️🙏

#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்_காரைக்கால் 
12.10.2022

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫

#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாகாளேஸ்வரர் #உஜ்ஜியினிஆலயங்கள்
#ஜோதிர்லிங்கம்
#உஜ்ஜியினி , #மத்தியப்பிரதேசம்
🛕#மகாகாலேஸ்வரர்ஆலயம்

Thursday, December 1, 2022

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️#உஜ்ஜியினிஆலயங்கள்💫பதிவு : 6 12.10.202211.#மங்களநாத்மந்தீர்

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
பதிவு : 6       
12.10.2022

11.#மங்களநாத்மந்தீர்

♨️மங்களநாத் ஆலயம் : மிகப்பெரிய அழகிய வளாகத்தில் உள்ள ஆலயம்.
செவ்வாய் ஸ்தலம்.

♨️இந்த ஆலயம் உள்ள இடம் ஒரு உயரமான பகுதியாகும், ஆலயத்தின் அருகில் சிப்ரா நதி ஒடுகிறது. 

♨️வெளிப்புர நுழைவுவாயில் மிகவும் அகலமானது. இவ்வாலய வளாகம் மிகப்பெரியது.

 ♨️தொல்பொருள் துறையினரின் பாதுகாப்பில் உள்ளது. 

♨️இந்த இடத்தில் தான், செவ்வாய் உருவாகினார் என்று நம்பப்படுகிறது.
இந்த இடத்திலிருந்து செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு அல்லது தூரம் கணிக்கப்பட்டு இது செவ்வாய் கிரகத்தின் இடமாக முன்னோர்களின் வானிலை வல்லுனர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதனால் இந்த ஆலயம் மங்கள் நாத் என்ற செவ்வாய் ஸ்தலமாக பக்தர்கள் வந்து பரிகாரங்கள் செய்து நன்மை அடைகின்றனர். 

♨️இந்தப் பரிகாரங்கள் செய்வதற்காக, ஆலயங்கள் உட்புறம், சுற்றிலும், முறையாக இடங்களை ஒருங்கிணைத்து, ஆலயம் அமைத்துள்ளனர்.

♨️இந்த ஆலயம், தற்போது இரு தளங்களை கொண்டிருக்கிறது. ஆலயப்பகுதி உள்நுழைவில், ஒரு சிறிய வெள்ளை பளிங்கு விநாயகர் சன்னதி உள்ளது.

♨️பிரார்த்தனைத் தலம் என்பதால், கீழ் தளத்தில் யாகம்/ஹோமம் செய்யப்படுகிறது. இதற்கு உரிய கட்டணங்கள் நிர்வாக கமிட்டியால் முடிவு செய்து எழுதி வைத்துள்ளார்கள். மேல் தளம் செல்ல அழகிய அமைப்பில் படிகள் உள்ளன

♨️மேல் அடுக்குத்தளத்தின் நடுவில், ஸ்ரீமங்கள் நாதர் கருவரை உள்ளது. மிகப்பெரிய வட்ட வடிவமான அமைப்பில் ஆலயம் உள்ளது.

♨️மேல் தளத்தில், சுவாமி ஸ்ரீமங்களநாயகர் சிறிய லிங்க வடிவத்தில் கருவறையில் உள்ளார். கருவரை வரை இரும்பு குழாய் வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளது. இரு பகுதியாக  சென்று வணங்கலாம்.

♨️சுவாமிக்கு முன்பாக, நடுவில் உலோகத்தால் கவசம் செய்யப்பட்ட நடுத்தர உயரத்தில் ஒரு ஆடு (செவ்வாயின் வாகனம்) சுவாமியை நோக்கி உள்ளது.

♨️மங்கள் நாதர் கருவரை சுற்றுப் பிரகாரத்தில்,  ஒரு சன்னதியில்  ஸ்ரீ அன்னை புவனேஸ்வரி (பிரித்விமாதா) உள்ளார். அவருக்கு முன்னதாக ஒரு லிங்கம் உள்ளது.

♨️ ஏராளமான பக்தர்கள் செவ்வாய்க்கு பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

♨️உஜ்ஜையினியில் உள்ள மிக முக்கிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.

பயணங்கள் தொடர்கிறது.....
நன்றிகள்.

12.10.2022
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫

#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்_காரைக்கால் 

#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாகாளேஸ்வரர் #உஜ்ஜியினிஆலயங்கள்
#ஜோதிர்லிங்கம்
#உஜ்ஜியினி , #மத்தியப்பிரதேசம்
🛕#மகாகாலேஸ்வரர்ஆலயம்


Wednesday, November 30, 2022

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️#உஜ்ஜியினிஆலயங்கள்💫பதிவு - 5 - ஸ்ரீகாலபைரவர் கோயில்12.10.2022

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
12.10.2022
பதிவு - 5

10.🛕ஸ்ரீகாலபைரவர் கோயில்12.10.2022

🔮உஜ்ஜியினின் மிக மிக முக்கிய ஆலயங்களில் இதுவும் ஒன்று.
🔮ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இம்முறையும், முதல்முறை சென்றபோதும், அதிக கூட்டம் இல்லை.

🔮நாங்கள் இரண்டாவது முறை, 10.3.2021ல் சிவராத்திரி சமயத்தில் சென்றபோது மிகவும்  அதிக கூட்டம் இருந்தது. 

🔮வெளிப்புறம் கோட்டை வாயில் போன்று நுழைவு வாயில் தாண்டினால் உள்ளே பெரிய உயரமான மாடக்கோவில் போன்ற மண்டபமும், கருவரையில் காலபைரவர் அருள்புரிகிறார்.

🔮 இவர் மது குடிப்பதாக ஐதீகம். எனவே, பலர் மது பாட்டில்களை தட்டில் அர்ச்சனை பொருள் போல் வைத்து வழிபடுகிறார்கள்.
( பாட்டிலை பிரித்து, ஒரு தட்டில் வைத்து சுவாமி வாயருகில் காண்பித்து ஆராதனை செய்தார்கள்).
🔮இதன்அருகில் ஒரு சிறிய சிவலிங்கமும், நந்தியும் கொண்ட ஒரு சிவ ஆலயமும் உள்ளது.

🔮இந்த ஆலய வளாகத்திலேயே தனியாக தத்தாத்ரேயர் ஆலயமும்  இணைந்து உள்ளது.

🔮உயரமான, பெரிய கல்விளக்குத்தூன் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மாலையில் இவ்விளக்குகள் ஏற்றப்படும்

🔮பொதுவாக இங்குள்ள எல்லா ஆலயங்களிலும், உயரமான கல்தூன் விளக்குகள் ஆலயம் நுழைந்தவுடன் வைத்துள்ளார்கள். மாலையில் பூசைக்கு முன் இவ்விளக்குகள் ஏற்றப்பட்டு அற்புதமாக உள்ளன.

🔮ஆலய வாசலில் ஏராளமான சிறு கடைகள் உண்டு. மூங்கிலில் சிறப்பாக பூன் போட்டு கருப்பு வண்ணத்துடன் (அல்லது காய்ச்சபட்டிருக்கலாம்) செய்யப்பட்ட அளவான கம்புவிற்கிறார்கள். (Rs.100). முன்புறம் ஏராளமான சிறு கடைகள். சிறு வியாபாரக் கூடங்கள் உள்ளன. 

🔮தனி வாகன நிறுத்தும் தனி வளாகம் உடையது.

மீள் தரிசனம்.
12.10.2022
🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼‍♂️🙏

#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்_காரைக்கால் 

#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாகாளேஸ்வரர் #உஜ்ஜியினிஆலயங்கள்
#ஜோதிர்லிங்கம்
#உஜ்ஜியினி , #மத்தியப்பிரதேசம்
🛕#மகாகாலேஸ்வரர்ஆலயம் 

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02tjAfyjWkUhuR3yQxjKSgkpUbmisfSo1MqHfpywoWKbE77gx4VgaidvUQ518FDkeHl&id=100001957991710



Monday, November 28, 2022

உஜ்ஜியினிஆலயங்கள்💫12.10.2022 பதிவு. 4 Shaktipeeth Shri Gadhkalika Mata Temple,

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
12.10.2022
பதிவு. 4
9. Shaktipeeth Shri Gadhkalika Mata Temple, 

#GADHKALIKADEVIMANDIR
#காட்காளிகாமாதாஆலயம்.
 (பிரார்த்தனை ஸ்தலம்)

🛐ஸ்ரீ கட்கலிகா ஆலயம் என்று பாரம்பரியமாக அறியப்படுகிறது.

🛐காலத்தினால் அழியா காவியம் படைத்த கவிச்சக்கரவர்த்தி காளிதாசர். விக்ரமாதித்யனின் நவரத்தினத்தின் முக்கிய ரத்தினங்களில் ஒன்றான காவியமான  சகுந்தலம் படைத்தவர் மகாகவி காளிதாசர், இவர் வணங்கி அருள் பெற்றதலம். மிகவும் புராதானமான ஆலயம். 

🛐கவி காளிதாசர் விக்கிரமாதித்திய அரசவையில் பெரும் புலவராக இருந்தவர். சாகுந்தலம், மேகதூதம், முதலிய நூல்கள் இயற்றிய பாரதத்தின் புகழ் பெற்ற கவிஞர்.

🛐கருவரை மண்டபத்தையும், கருவரையையும் நோக்கி காளியின் வாகனமான அழகிய ஒரு சிங்கம் சிலை வைத்து சிறிய மண்டபத்துடன் உள்ளது.

🛐இவ்வாலயம் சிதைந்துவிட்டிருந்து மீட்டு புதிய அமைப்பில் கட்டி வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. சிறிய ஆலயம்.

 🔮ஒரு பெரிய உயரமான மண்டபமும், ஒரு கருவறையும் உள்ளது. கருவறையில் காளிமாதாவின் பெரிய முக உருவம் உள்ளது. உயரமான சற்றுப் பெரிய முன்மண்டபத்தில் இருந்து தரிசனம் செய்யலாம்.  

🔮ஒரே சுற்றுப் பிரகாரம். உயரமான  கல்விளக்குத் தூன் ஒன்றுள்ளது.

🛐செங்கற்கள் மற்றும் கிமு முதல் நூற்றாண்டின் ஏராளமான பகுதிகள். கோயிலின் அடித்தளத்தில் இருந்து மீட்கப்பட்டது. பேரரசர் ஹர்ஷவர்தன் இந்த கோவிலை புதுப்பித்துள்ளார்.

🛐சங்க (Shung)காலம், கிமு முதல் நூற்றாண்டு, குப்தர் காலம், நான்காம் நூற்றாண்டு மற்றும் பர்மர் காலம், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் சிலைகள் மற்றும் அடித்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 🛐ஏழாம் நூற்றாண்டில் பேரரசர் ஹர்ஷவர்தன் இந்த கோவிலை புதுப்பிக்கின்றார். பர்மர் ஆட்சி பத்தாம் நூற்றாண்டில் செய்யப்பட்ட கற்கோவில் பகுதிகள் மறுசீரமைப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

🛐20 ஆம் நூற்றாண்டில், பாரம்பரிய பூசாரி ஸ்ரீ சித்நாத்ஜி மகராஜ் விக்ரம் சம்வத் 1944 இல் புதுப்பித்தார்.

🛐ஆலயத்தினைப் பற்றிய குறிப்பு விபரங்களும் தனியே எழுதி வைத்துள்ளனர். ஏராளமான பக்தர்கள் வந்து வணங்கி அருள் பெற்று செல்கின்றனர். 

🛐உஜ்ஜியினில் தரிசிக்க வேண்டிய முக்கிய இடங்களில் இதுவும் ஒன்று.

இதன் அருகில் உள்ள மற்ற இரண்டு ஆலயங்கள்:
Shree Vaibhav Mahalakshmi mandir

🛐இந்த ஆலயம் மகாலெட்சுமியை மூலவராகக் கொண்டது. பெரிய உருவத்தில் அமைந்தது. இந்த ஆலயமும், காளி ஆலயம் மிக அருகில் உள்ளது.

Sri Sethiman Ganesh temple
🛐இது சீதா, ராமரால் பிரதிஸ்டை செய்யப்பட்ட கணபதி ஆலயம். ஷிப்ரா நதி அருகில் உள்ளது. காளி ஆலயம் அருகில் இருக்கிறது. சிறிய ஆலயம். கணபதி மூலவர்.

மீள் தரிசனம்.

12.10.2022
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫

🛐பயணங்கள் தொடரும்....

நன்றி🙇🏼‍♂️🙏

#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்_காரைக்கால் 

#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாகாளேஸ்வரர் #உஜ்ஜியினிஆலயங்கள்
#ஜோதிர்லிங்கம்
#உஜ்ஜியினி , #மத்தியப்பிரதேசம்
🛕#மகாகாலேஸ்வரர்ஆலயம்

Saturday, November 26, 2022

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ #உஜ்ஜியினிஆலயங்கள்💫பதிவு - 3 #Bhartriharicaves - பர்த்திரிஹரிகுகைகள்

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
பதிவு - 3

8. #Bhartriharicaves#பர்த்திரிஹரிகுகைகள் :
12.10.2022
✨BHATRIHARI CAVES: 'சிப்ராநதியின் ஓரத்தில் இரண்டு குகை ஆலயங்கள் உள்ளன.

✨விக்கிரமாதித்திய ராஜாவின் மூத்த சகோதரர். பர்த்திரிஹரி என்பவர். இவர் மகாராஜாவாக இருந்தவர். இவரின் குருநாதர் குருகோரக்ஷ்நாத் என்பவரால் ஞானம் பெற்றவர். 

 பர்த்திரிஹரி மகாராஜா தன் அரசு பதவியை துறந்து துறவியாகி இங்குள்ள குகையில் 12 ஆண்டுகள் இருந்து கொண்டு கடும் தவம் செய்து முனிவர் ஆனார். 

இவர் யோகம், மற்றும், அஷ்ட்டமாசித்து எனப்படும் முனிவர்களின் நிலை அடைந்தவர்.

இவர் பல சமஸ்கிருத நூல்களைப் படைத்துள்ளார்.
 
✨நுழைவுப்பகுதியின் முன்மன்டபத்தில் ஒரு ஆஞ்சனேயர் சன்னதி உள்ளது. அதை அடுத்து குகைக் கோவில்கள் செல்ல, ஒரு கோபுரநுழைவுவாயில், தமிழ்நாட்டு கோபுர அமைப்பில் உள்ளது.

இதை அடுத்து சிறு குகைகளின் மன்டபம், அடுத்துள்ளது. குகைப் பகுதிகள்.
 
✨இரண்டு தனித்தனி குகைகள்.
குகைக்குள் செல்ல மிக சிறிய பாதை
மிகவும் குனிந்து, செல்லவேண்டும்.

வயதானவர்கள் நிதானித்தும், கவனமாகவும் உள்ளே செல்வது நல்லது.

✨முதல் குகை நுழைவுப்பாதையில் உள்ளே சென்றால், ஒரு பெரிய மண்டபம் அதன் உட்பகுதிகளில் சிறு சிறு அறைகள் அவற்றில் காலபைரவர், சிவலிங்கங்கள் உள்ளன.

 ஒரு சிறிய குறுகிய பாதையில் சென்றால் இன்னும் குறுகிய நுழைவு படியில் இறங்க மிகவும் குனிந்து நுழைந்து செல்ல வேண்டியது உள்ளது. உள்ளே சென்றதும், உட்புறபகுதிகளிலும், ஒரு சிறிய மன்டபமும், அடுத்தடுத்து குகை அறைகளும் உள்ளன. 

ஒரு குகை அறையில் ஆதேஷ் என்ற முனிவர் என்றும், இன்னொரு குகை அறையில், மகாயோகி மத்ஸ்யேந்திரநாத் என்பவரின் திருவுருவசிலையும் உள்ளது.

மகாயோகி மத்ஸ்யேந்திரநாத் இவரே பர்த்திரிஹரி மகாராஜாவாகும்.

✨இரண்டாவது குகை கோபிசந்குகை:
எனப்படுகிறது இங்கும் முதல் குகை போல ஒரு மண்டபம், ஒரு நீண்ட வழிமுடிவில் குகை அறைகளில், மகாகாளி, சிவலிங்கம் உள்ளது.

✨ஒவ்வொரு குகைகளாக உள் சென்று வர வேண்டும். மிகவும் , வயதானவர்கள், உடல் முடியாதவர்கள், இந்த குகைப்பகுதிக்கு உள்ளே சென்று பார்க்க விரும்புவதில்லை. உள்ளே நுழைந்து உட்படிகளில் இறங்க அவர்கள் உடல்நிலை காரணமாக ஒத்துழைக்க முடிவதில்லை எனவே, வெளியில் நின்றுவிடுகிறார்கள். 

இந்த குகைப் பகுதிகளைக் கடந்துவந்தால், அடுத்து, மேல்புறத்தில் பெரிய வளாகம் உள்ளது.
 
✨இந்த வளாகத்தின் ஒரு பகுதியில்,
குரு கோரக்ஷ்நாத் கோவில் அமைந்துள்ளது.
12.10.2022

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
குரு கோரக்ஷ்நாத் கோவில்:

✨பர்த்திரிஹரி முனிவரின் குருநாதரான குருகோரக்ஷ்நாத் அவர்களுக்கான ஆலயம். இது சற்று பெரிய ஆலயம் . பெரிய மண்டபத்துடன் கூடிய, உயர்கோபுர கருவரை அமைப்பில் உள்ளது. 

✨குரு கோரக்ஷ்நாத் கோவில் 12/02/2009 ல் இவ்வாலயம் புனரமைப்பு செய்து பிரதிஷ்டை செய்துள்ளனர்.

இதற்கு ஒரு அழகிய பெரிய முன்மண்டபமும் அதையடுத்து உள்பகுதியில், பல்வேறு முனிவர்கள், ரிஷிகள் பளிங்கு சிலைகளும் உள்ளனர், கருவரை மண்டபமும் உள்ளது. கருவரையில், முனிவர் கோரக்ஷநாதர் உள்ளார்.  

✨ஆலயம் வெளியில் ஒரு பெரிய கோசாலையும் உள்ளது. தனியார் Trust மூலம் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. 

✨உஜ்ஜியினியின் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்று.
தரிசனம் : ஏற்கனவே ஒரு முறையும் 10.03.2021 சிவராத்திரி அன்றும், மற்றும் 12.10.2022ல் தரிசனம் அமைந்தது.

12.10.2022
🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼‍♂️🙏

#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்_காரைக்கால் 

பதிவு : 2 - உஜ்ஜியின் ஆலயங்கள்: LINK
https://m.facebook.com/story.php?story_fbid=8455635961178253&id=100001957991710

#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாகாளேஸ்வரர் #உஜ்ஜியினிஆலயங்கள்
#ஜோதிர்லிங்கம்
#உஜ்ஜியினி , #மத்தியப்பிரதேசம்
🛕#மகாகாலேஸ்வரர்ஆலயம்

Friday, November 25, 2022

உஜ்ஜியின் ஆலயங்கள் - பதிவு - 2 - ஹர்சித்தி மாதா, ராம் Temple, விக்கிரமாதித்தியர் ஆலயம்

உஜ்ஜியின் ஆலயங்கள் - பதிவு - 2

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
பதிவு - 2

5. ஹரஸித்தி மாதா கோயில் (உச்சினி மாகாளி):
12.10.2022

🌺மகாகாளேஸ்வரர் ஆலயத்திலிருந்து சுமார் 1 கிமீ. மேற்குப் புறத்தில் உள்ளது. பிரதான ஆலயம் தரிசித்து விட்டு நடந்தே வரலாம், சாலை நடுவில்  ஒரு சிங்கம் உருவ பெரிய சிலை வைக்கப்பட்டுள்ளது.

 அதிலிருந்து வடக்கில் பிரியும் சாலையில் 50 அடி தொலைவில் கிழக்குப் பார்த்து அமைந்துள்ள ஆலயம். இது ஒரு முக்கிய ஆலயம். 

சக்தி பீடத்தில் ஒன்று. பார்வதிதேவியின் முழங்கை வீழ்ந்த இடம். 

இராஜகோபுரம் இல்லாவிட்டாலும், உள்நுழைவுப் பகுதி வாசல் பகுதியில் அழகிய சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

சாலையிலிருந்து, சுமார் 10 படிகள் ஏறினால் பெரிய வெளி மன்டபம்.
இரண்டு கல்தூன்கள். ஆலய வளாக உள் முன் பகுதியில்,  அமைந்துள்ள. 

 ஹரசித்தி மாதா ஆலயம் 6 அடி உயரம் உடையது.  ஒரு சிறியமுன்மண்டபம், அடுத்துள்ள கருவரையில் அம்பாள் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் வகையில் அமைப்புள்ளது. முன்புறம் அழகிய ஒரு சிங்கம் உள்ளது. கருவரை உயரக் கோபுர அமைப்பில் உள்ளது. கருவரை மண்டபம்  சுற்றி வரலாம்.

🛕கார்கோடேஸ்வரர் ஆலயம் :

💥ஒரு கார்கோடேஸ்வரர் சிவன் ஆலயம் தனியே அம்பாள் ஆலய சன்னதியை, ஒட்டியவாறு இடது புறத்தில் இணைந்து உள்ளது. இது ஒரு முன்மண்டபம் அதில் ஒரு அழகிய சிறிய நந்தி. கிழக்குப் பார்த்த கருவரையில் சிவன் உள்ளார். 

🛕பாதாள காளி / பைரவி சன்னதி:

🌟விக்கிரமாதித்தன் தலையை வெட்டி பலி கொடுக்க முற்பட்ட இடம் என்கிறார்கள். பாதாள பைரவி சன்னதி, இவ்வாலய ஈசான பகுதியில் உள்ளது.  
பாதாள காளியை /பைரைவியை பக்தர்கள் தரிசனம் செய்ய மேல்பகுதியில் உள்ள  சிறிய மன்டபத்தின்  3 சிறு துளைகள் மூலம் மட்டுமே வணங்க முடியும்.  கீழே சென்று பூசை செய்ய தனிபடிகள் அமைப்பு உள்ளது. பக்தர்கள் உள்ளே இறங்க அனுமதி கிடையாது.
 விக்கிரமாதித்த மகாராஜா வணங்கி அருள் பெற்ற இடம்.

💥மேலும் ஈசானத்தில் தனியாக ஒரு சிறிய விநாயகர் மேற்கு நோக்கிய சன்னதியும் உள்ளது. 

💥ஆலய வளாகத்தின் முன் பகுதியில், சுமார் 30 அடி உயரத்திற்கு கல்தூண்கள் இரண்டு அமைந்துள்ளது.  மாலையில் இரண்டு கல்விளக்குத் தூண்களிலும்  விளக்குகள் ஏற்றப்படும் காட்சி அற்புதம்.

💥சிறிய ஆலயமாக இருந்தாலும் தூய்மையாகப் பராமரிக்கின்றனர்.
முன்பதிவு 
https://m.facebook.com/story.php?story_fbid=5428428250565721&id=100001957991710

💥உஜ்ஜியினியின் மிக முக்கியமான ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும்.
12.10.2022
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫

6. Shri Ram Mandir, Patidar Samaj
Shree Rudreshwar Mahadev
12.10.2022

🍀உஜ்ஜினியின் முக்கிய ஆலயங்களில் ஒன்றான, ஹர்சித்தி மாதா ஆலயம் அருகில் வடக்குப்புறத்தில் பெரிய ஒரு ராம் மந்தீர்  உள்ளது.  அதன் அருகில் சிறிய ருத்திரேஸ்வரர் ஆலயம் உள்ளதும் சிறப்பு.

SRI RAM TEMPLE

🍀ஷிப்ரா நதி செல்லும் வழியில் அருகில் உள்ள ராம் மந்திர். மிகப் பெரிய கட்டிடத்தில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் ராம லெட்சுமண சீதா பளிங்கு உருவங்கள், மற்றும்  பல் வேறு சுவாமி உருவங்கள் வைக்கப்பட்டு Patidar Samaj என்பவர்களால் பராமரிப்பில் உள்ளது.
🍀ஹரிசித்தி மந்திர், விக்கிரமாதித்யர், ஆலயங்கள் வரிசையில் மிக அருகில் உள்ளது.

🌺வீதி முனையில் மிகப்பழமையான சிறிய லிங்க வடிவத்தில் ஸ்ரீ ருத்ரேஸ்வர மகாதேவர் மிகச்சிறு ஆலயம் ஒன்றும் அமைந்துள்ளது.

12.10.2022
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫

7. #விக்ரமாதித்யர்ஆலயம்

🌸பாரதம் மறக்கமுடியாத இந்து அரசர்களில் இவரும் ஒருவர், வீரம், தயாளம், மதிநுட்பம் உடைய அரசர்.
உஜ்ஜயினியை மிகச்சிறப்பாக ஆண்ட புகழ் பெற்ற அரசர் விக்கிரமாதித்தியர்.

 🔥தன் தலையை பக்தியால் வெட்டிக்கொண்டவர். விக்ரமாதித்தியர் அரசர் சிலைகள் உள்ள ஆலயங்கள் இரண்டு உள்ளன. ஒன்று, மிகப்பழைய ஆலயம். 

🌼ஸ்ரீ ஹரிசித்தி மாதாவை பிரதானமாக வழிபட்ட விக்ரமாதித்தியருக்காக
ஹரிசித்தி மாதா ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் பிரியும் நேர் பாதையில் செல்ல வேண்டும்.  

🌼ஒரு பெரிய கட்டிடத்தில் (ஆலய அமைப்பில்) மிகப்பெரிய விக்கிரமாதித்த அரசர் அரசவையில் உள்ளது போல் அமைத்துள்ளார்கள். அரச சபையில் இருந்த அனைத்து பட்டி, மந்திரிகள், 32 பதுமைகள், எல்லோரும் அவர் கீழ் அமர்ந்து சபை நடத்துவது போல உள்ளது. நாம் அச்சிறிய சாலையில் நின்றே தரிசிக்க வேண்டும். வேதாளம், விக்கிரமாதித்தன் கதை, 32 பதுமைகள் எல்லாம் நினைவுக்கு வந்தது.

🌼நவீனமான மற்றொரு ஆலயம்;
ருத்ர சாகர ஏரியில் ஒன்று புதியதாக அமைக்கப்பட்டுள்ளது.  பிரம்மாண்டமான சிம்மாசனத்தில் அமர்ந்த பெரிய விக்கிரமாதித்திய அரசர் சிலை அற்புதமாக காட்சியளிக்கிறது. 
ஆன்மீக  சுற்றுலா வருகையை அதிகப்படுத்தும் விதமாக இந்த ஏரியினை அழகுபடுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

12.10.2022
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
பதிவு - 1 LINK.
https://m.facebook.com/story.php?story_fbid=8444319635643219&id=100001957991710

🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼‍♂️🙏

என்றும் அன்புடன்
சுப்ராம்.அருணாசலம்_காரைக்கால்

#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாகாளேஸ்வரர் #உஜ்ஜியினிஆலயங்கள்
#ஜோதிர்லிங்கம்
#உஜ்ஜியினி , #மத்தியப்பிரதேசம்
🛕#மகாகாலேஸ்வரர்ஆலயம்

Tuesday, November 22, 2022

உஜ்ஜியினி ஆலயங்கள். 1 பயன அனுபவக்குறிப்புகள் 12.10.2022

#உஜ்ஜியினிஆலயங்கள்💫
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

#உஜ்ஜியினிஆலயங்கள்
♻️ உஜ்ஜியினி பெருநகரம் சார்ந்துள்ள கோயில்கள்: 

💥உஜ்ஜியினி,  பாரதத்தின் முக்கிய ஆன்மீக பெருநகரம்; ஏராளமான  புராதானமான ஆலயங்கள் நிறைந்த அற்புத தலம்.  ஜோதிர்லிங்கம் உள்ள மகாகாளேஸ்வரர் ஆலயம் பெரிய வளாகப் பகுதி, ருத்தர சாகர் ஏரிக்கரையில் உள்ளது. சுற்றிலும் சில முக்கிய புராதான ஆலயங்களும், புதிய ஆன்மீக ஆலயக் கட்டிடங்களும்,  கட்டப்பட்டுள்ளது.
மூன்று முறை உஜ்ஜயினி சென்றுள்ளோம்.
ஒவ்வொரு முறையும் பல பல மாறுதல்கள் காணுகிறோம்.

⛳சுற்றுப்புறத்திலும், ஷிப்ரா நதிக்கரையிலும், உஜ்ஜியினியின் புறநகர் பகுதிகளிலும் நிறைய ஆன்மீக ஆலயங்கள் மற்றும் புராதான இடங்கள் உள்ளன. இவற்றில் சில குறிப்பிட்ட ஆலயங்கள், ஆன்மீக இடங்களை 12.10.2022 அன்று சென்று தரிசித்து வந்தோம். 

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫

1🛐ஸ்ரீ பாத கணபதி ஆலயம்:
12.10.2022
🌟மகாகாளேஸ்வரர் புனித ஆலயத்தின் வடக்குப்புறம் உள்ள ஸ்ரீபாத கணபதி என்ற படா கணபதி ஆலயம், புராதானமானது. பிரதான சாலையின் ஓரத்தில் உள்ளது. நுழைவில் சிறிய மன்டபம் உள்ளது. இதன் உள் நுழைந்ததும் மிகப் பெரிய உருவத்தில் கணபதி உள்ளார்.

🌟ஆலயத்தின் உட்பகுதியில் பஞ்சமுக ஹனுமான் உலோகத்தால் அமைக்கப்பட்டு நடுநாயகமாக ஒரு சிறிய மண்டபத்தில் உள்ளார்.

🌟இடைவெளியில் ஒரு தொட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள அம்மன் வைத்து அதை அசைத்தும், தொட்டும் வழிபாடு நடைபெறுகிறது. 

🌟இவ்வாலயம், மகாகாளேஸ்வரர் ஆலயம் அருகில் உள்ளது. இதுவும் பிரார்த்தனை ஆலயம் போன்று வழிபடுகிறார்கள்.
முதலில், இவரை  தரிசித்து விட்டே, மகாகாளேஸ்வரர் தரிசிக்க வேண்டும் என்று சிலர் கூறுவார்கள்.

(10.3.2021 ல் தரிசித்த அனுபவக் குறிப்புகள்:
https://m.facebook.com/story.php?story_fbid=5409904815751398&id=100001957991710)

12.10.2022
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫

2.🛕பாரதமாத ஆலயம்:
12.10.2022

🌟மகாகாளேஸ்வரர் ஆலய முன்புறம், தென்கிழக்குப்பகுதியில் ஒரு பாரதமாத ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இது சுமார் 20 படிகள் உயரத்தில் மிகப்பெரிய முன்மண்டபம் மற்றும், உள்மன்டபம் கொண்டது. அடுத்துள்ள கருவரையில் பிரமிக்க வைக்கும் பாரதமாத சிலை கையில் கொடியுடன் பின்புறம் சீறிப் பாயும் சிங்கம் ஒன்றுடன், மிக அற்புதமாக உள்ளது.

🌟இதன் புறச்சுற்றுப் பாதை, பால்கனி அமைப்பில்உள்ள பகுதியும் உள்ளது.
இதிலிருந்து ருத்ரசாகர் எரியின் அழகிய அமைப்பும், ஏரி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆன்மீக பூங்கா பகுதிகளையும், உஜ்ஜியினி நகரம், ஆலய வளாகம் அனைத்தையும் காணலாம்.
 
🌟முன்புறம் ஆலய நுழைவுப்படிகளின் நடுவில் பாரததேசம் இயற்கையான நில அமைப்புடன் (3Dயில்) வடிவமைக்கப்பட்டு, அதில் பாரத நதிகளை வடிவமைத்தும் அனைவரையும் கவரும் வகையில், கருத்துடன் நல்ல அமைப்பில் உள்ளது. 

🌟பாரதமாதா ஆலயம் மிகப்பெரிய வளாகத்தில் அமைந்துள்ளது, அருகில் தங்கும் இடங்கள், Car Parking வசதிகளும் உள்ளன.
10.3.2021 ல் தரிசித்த அனுபவக் குறிப்புகள்:
https://m.facebook.com/story.php?story_fbid=5419530171455529&id=100001957991710


12.10.2022
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫

3. 🏞️ருத்திர சாகர் ஏரி வளாகம்-ஆன்மீக பூங்கா:
12.10.2022

⚛️ஆலய மேற்குப் பகுதியில் உள்ள உஜ்ஜியின் ஏரி, அல்லது மகாகாளேஸ்வரர் ஏரி என்ற ருத்திர சாகர் ஏரி,  மற்றும் ஏரி வளாகம், பகுதிகளைச் சிறந்த ஆன்மீகப் பூங்காவாக தற்போது மாற்றப்பட்டுள்ளது. 

 ⚛️ஏரியின் கரைப்பகுதிகளை மிக சிறந்த ஆன்மீக பூங்காவாக மாற்றி, நமது பெருமைக்கு உரிய பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடிஜி அவர்களால் நாங்கள் உஜ்ஜியின் சென்ற 10.10.2022 அன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. 

☸️இதில், மிகப்பெரிய சிவன், விநாயகர், சுப்பிரமணியர், முதலிய  பல்வேறு  கடவுளர்களின் மற்றும் சப்தரிஷிகளின் பிரமாண்டமான சிலைகள், மற்றும் பல்வேறு இறை உணர்வு கட்டிடங்களும், சிவபுராண காட்சி சிற்பங்களும் அமைக்கப்பட்டு மிக அற்புத ஆன்மீக பூங்காவாகவடிவமைக்கப்பட்டு உள்ளது. அனைவரும் கான வேண்டிய அற்புத பூங்கா. 

☸️ஏரியின் நடுவில் விக்கிரமாதித்திய மகாராஜா சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும், மிகப்பெரிய சிலையும் உள்ளது.

12.10.2022
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫

4.ராம்தீர்த்தக் கட்டம் (RAM GHAT), 
ஷிப்ரா நதிக்கரை: 
12.10.2022🌼மகாகாளேஸ்வரர் ஆலயப்பகுதியை அடுத்து இருக்கும்  மிகப்பெரிய ருத்ரசாகார் என்ற ஏரி பகுதி உள்ளது. இதை அடுத்து சுமார் 1 கி.மீ. தூரத்தில்தான் ஷிப்ரா நதி உள்ளது.

🌼பொதுவாக  உஜ்ஜியினியின் பெரும்பகுதியில் ஷிப்ரா நதி உள்ளது.

🌼ஷிப்ரா நதிக்கரையில் உள்ள ஸ்தான கட்டடங்கள் பல உண்டு.  

🌼சிப்ரா நதி புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று.புராதானமானது. 

🌼தேவாமிர்தம் சிந்திய இடங்களில் இதுவும் ஒன்று.

🌼பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்  கும்பமேளா விழாவின் போது ஏராளமான லட்சக்கணக்காண பக்தர்கள் பாரதம் முழுதும் இருந்து இங்கு வந்து நீராடுகிறார்கள். 

🌼பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக நீளமான படித்துறைகள் இருபுறமும் உள்ளன.  பெரிய சிறிய ஆலயங்கள் இருகரைகளிலும் உள்ளது. 

🌼தினம்  மாலையில் ஆர்த்தி வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. பக்தர்கள் பிரார்த்தனைகள் செய்யவும், பூசை செய்யவும் பண்டாக்கள் உதவுகிறார்கள். 
🌼எல்லா பொழுதிலும் மனிதர்கள் நடமாட்டம் உள்ளது. இங்கு நீராடி வழிபடுதல் மிகவும் புனிதமானது. 
( ஏற்கனவே ஒரு முறையும், மற்றும் 10.3.2021 அன்றுசென்ற போதும், காலையில் சென்று நீராடி வந்தோம்.)

10.3.2021 ல் தரிசித்த அனுபவக் குறிப்புகள்:
https://m.facebook.com/story.php?story_fbid=5404498276292052&id=100001957991710

🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼‍♂️🙏
12.10.2022
என்றும் அன்புடன்
சுப்ராம்.அருணாசலம்_காரைக்கால்

#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாகாளேஸ்வரர் #உஜ்ஜியினிஆலயங்கள்
#ஜோதிர்லிங்கம்
#உஜ்ஜியினி , #மத்தியப்பிரதேசம்
🛕#மகாகாலேஸ்வரர்ஆலயம்


Thursday, November 17, 2022

ஜோதிர்லிங்கதரிசனம்#மகாகாளேஸ்வரர் #ஜோதிர்லிங்கம் #உஜ்ஜியினி #மத்தியப்பிரதேசம்

#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாகாளேஸ்வரர்  #ஜோதிர்லிங்கம் #உஜ்ஜியினி #மத்தியப்பிரதேசம்

🛕#மகாகாலேஸ்வரர்ஆலயம் 
#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️
12.10.2022 
⛳ #உஜ்ஜைன்

🌟மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாரதத்தின் மிக முக்கியமான தலம்.

🌟புனிதமான ஷிப்ரா நதி இவ்வூரில் உள்ளது. கரையெல்லாம் பல பல கோவில்கள் உண்டு.  

🌟பல புராண, புராதான ஆலயங்கள் நிறைந்த ஊர். 

🌟சுமார் 84 புராதான லிங்கங்கள் உஜ்ஜியினியில் உள்ளதாக புரான வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அடையாளம் செய்துள்ளனர்.

🌟ஏழு மோட்ச நகரங்களுள் இதுவும் ஒன்று. அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சி, அவந்திகை, துவாரகை. தலங்கள்.

🌟சுதார்வா என்ற ஜைன அரசன் தான் அவந்திகை என்ற இந்த நகருக்கு உஜ்ஜயினி என்று பெயர் வைத்தார்.

🌟முக்கிய தீர்த்தமாகிய சிப்ரா நதியில் மூழ்கி நீராடி மகாகாளரை வணங்க வேண்டும். 

🌟காளிமாதா தரிசனம் செய்ய வேண்டும்.

🌟தேவாமிர்தம் சிந்திய இடங்களில் இதுவும் ஒன்று.

🌟12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளவிழா நடைபெறுவது.

🌟இங்குதான் கிருஷ்ணர், பலராமர், சுதாமர் சாந்தீப முனிவரிடம் கல்வி பயின்றனர்.

🌟இது ஒரு தேவார வைப்புத்தலமாகவும் உள்ளது.

🌟சிவனைக் குறிக்கும் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கத்தைக் கொண்டுள்ள புகழ் பெற்ற சிவன் கோயில் உள்ள இடம் ஆகும்.

💥#மகாகாளேஸ்வரர் - ஜோதிர்லிங்கம்
🔱ஜோதிர்லிங்கம் தோன்றியது குறித்த தகவல். 
💥புராண காலத்தில் அவந்தியின் அருகில் இருந்த இரத்தின மாலை என்ற மலைக்காட்டில் ஒரு சாபத்தால் வேதாளமாக மாறிய தூசனன் என்பவன் இருந்தான். அவன் அவ்வப்போது நகருக்கு வந்து சூறையாடி மக்களுக்கு பெரும் துன்பத்தை இழைத்துவந்தான். 

அப்போது அவந்தி நகரில் வாழ்ந்துவந்த அந்தணரான விலாசனை நகர மக்கள் அணுகி வேதாளத்திடம் இருந்து தங்களைக் காக்குமாறு வேண்டினர். அவரும் அதற்கு சம்மதித்து வேதவிற்பன்னர்களையும்,  துறவிகளையும் அழைத்து வந்து பெரும் வேள்வி ஒன்றை செய்தனர். 

வேள்வியின் முடிவில் வேள்வி குண்டத் தரைவெடித்து அதிலிருந்து  ஒரு சிவலிங்கம்  தோன்றியது. அந்த லிங்கத்தை இரண்டாக பிளந்துகொண்டு ஆவேசத்துடன் மாகாளர் தோன்றி வேதாளத்தை அழித்தார். அதன்பிறகு மக்கள் மாகாளரை அங்கேயே தங்கி தங்களைக் காக்குமாறு வேண்டினர். மாகாளரும் ஆவேசம் தணிந்தார்.

பிளந்த லிங்கம் ஒன்றுசேர மாகாளர் ஜோதிவடிவில் அதில் கலந்து ஜோதிர்லிங்கமானார். 
⚛️ ஆலய வரலாறு:
1234-5ல் உஜ்ஜைனைத் தாக்கியபோது இக் கோயில் வளாகம் சுல்தான் ஷம்ஸ்-உத்-தின் இலுட்மிஷ் அவர்களால் அழிக்கப்பட்டது. படையெடுப்பின் போது திருடப்பட்ட ஜலதரியுடன் (லிங்கத்தின் கீழ் இருக்கும் ஒரு அமைப்பு) கூடிய ஜோதிர்லிங்கம் அகற்றப்பட்டு அருகிலுள்ள ‘கோட்டீர்த்த குந்தா’ என்கிற இக் கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு குளத்தில் வீசப்பட்டதாக நம்பப்படுகிறது.
தற்போதைய கட்டமைப்பு மராட்டிய ஜெனரல் ரனோஜி ஷிண்டே என்பவரால் 1734 இல் கட்டப்பட்டது. மகாத்ஜி ஷிண்டே (1730–12 பிப்ரவரி 1794) மற்றும் தௌலத் ராவ் ஷிண்டேவின் மனைவி பைசா பாய் உள்ளிட்ட அவரது வம்சத்தின் மற்ற உறுப்பினர்களால் இக்கோயிலுக்கு புனரமைப்பு வசதிகள் மற்றும் மேலாண்மை செய்யப்பட்டது. (1827-1863).

 ஜெயாஜிராவ் ஷிண்டேவின் காலத்தில் (1886 வரை), அப்போதைய குவாலியர் மாநிலத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் இந்த கோவிலில் நடத்தப்பட்டன.

உஜ்ஜைனின் நிர்வாகப் பொறுப்பு, முதலாம் பேஷ்வா பாஜிராவிடமிருந்து  அவரின் உண்மையுள்ள தளபதி ரனோஜி ஷிண்டேவுக்கு சென்றது. ரனோஜியின் திவான் சுகதானகர் ராம்சந்திர பாபா ஷெனாவி ஆவார். அவர் மிகவும் செல்வந்தராக இருந்தார், அவர் தனது செல்வத்தை மத நோக்கங்களுக்காக முதலீடு செய்ய முடிவு செய்தார். இதுதொடர்பாக, அவர் பதினெட்டாம் நூற்றாண்டின் 4 முதல் 5 தசாப்தங்களில் உஜ்ஜைனில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஸ்வரர் கோயிலை மீண்டும் கட்டினார்.
சுதந்திரத்திற்குப் பிறகு இக்கோயிலின் தேவஸ்தான அமைப்பு, உஜ்ஜைன் நகராட்சி நிறுவனத்தால் மாற்றப்பட்டது. தற்போது, இந்த அமைப்பு, உஜ்ஜைன் மாகாணத்தின் ஆட்சியாளர் அலுவலகத்தின் கீழ் உள்ளது.

⛳ஆலயஅமைப்பு :

🛕இது இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனில் உள்ள சிப்ரா ஆற்றங்கரையில் அமைந்துள்ள மூன்று அடுக்குகள் கொண்ட கோயிலாகும்.

🛕 சடங்குகள் மூலம் சக்தி கொடுக்கப்பட்டு நிறுவப்படும் படிமங்கள் போலன்றி, இங்குள்ள முதன்மைக் கடவுளான, சிவனின் லிங்க வடிவம் தன்னுள்ளேயே சக்தியோட்டத்தை உள்வாங்கித் தானாகத் தோன்றியதாகக் நம்பப்படுகிறது.

 🛕மகாகாலேஸ்வரருடைய சிலை தெற்குப் பார்த்தபடி இருக்கும் தட்சிணாமூர்த்தி வடிவம் ஆகும். தந்திர மரபுகளில் கூறப்பட்டிருக்கும் இந்தத் தனித்துவமான அம்சம் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இங்கு மட்டுமே காணப்படுகின்றது.
🛕மாகாளர் கோயிலானது உயர்ந்த மதிலால் சூழப்பட்ட பெரிய இடத்தில் அமைந்துள்ளது. ஆலயம் மிகப்பெரிய வளாகம்.  கருவறைக்கு மேல் அமைந்துள்ள சிகரம் அல்லது விமானம் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
🛕 இக்கோயிலின் மூலத்தானமானது மூன்று அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது. தரைமட்டத்துக்கு கீழேயும் ஒரு கருவறை அமைந்துள்ளது. அதற்கு படிக்கட்டுகள்வழியாக சென்று தரிசிக்கவேண்டும். முதன்மைக் கருவறையானது பெரிதாக வட்டவடிவில் உள்ளது. அதில் மாகாளர் பெரிய லிங்க வடிவில் காட்சியளிக்கிறார்.
🛕மகாகாலேஸ்வரர் கருவறைக்கு மேலுள்ள அடுத்த கருவறையில் ஓங்காரேஸ்வரர் லிங்கம் நிறுவப்பட்டுள்ளது. மேலே செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கடுத்த மூன்றாவது தளத்தில் நாகசந்திரேஸ்வரர் சிலை உள்ளது. அங்கு வணங்குவதற்கு நாகபஞ்சமியன்று மட்டுமே அடியார்கள் அநுமதிக்கப்படுகிறார்கள்.
🛕 கருவறைக்கு மேற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய திசைகளில் பரிவார தெய்வங்களாக பிள்ளையார், பார்வதி, கார்த்திகேயன் பைரவர் மற்றும் நவகிரகங்கள், ஆகிய கடவுளர் உள்ளனர். தென்புறம் ஒரு  அழகிய பளிங்குக்கல் நந்தி சிலையும் உண்டு.

#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️
12.10.2022 
🛕இன்று காலையில் உஜ்ஜியின் சென்று மகாகாலேஸ்வரர் ஆலயம் தரிசனம் செய்தோம்.
🛕ஏற்கனவே இரண்டு முறை  2021ல் சிவராத்திரி அன்றும்,  இவ்வாலயம் உட்பட உஜ்ஜியினியில் உள்ள சில முக்கிய ஆலயங்களை தரிசித்து இருந்தோம்.  ஒவ்வொரு முறையும் நிறைய முன்னேற்றங்கள், பராமரிப்புகள் ஏற்பட்டு வருதையும், பல்வேறு மாற்றங்களையும் காணுகிறோம். 
🛕 பொதுவாக, மத்திய பிரதேச மாநிலத்தின் மிகவும் புகழ் பெற்ற முக்கிய ஆலயமாகவும், பக்தர்கள் பெரும் அளவில் கூடும் ஆலயமாகவும், உள்ளது.

🛕மகாகாளேஸ்வரருக்கு மிகவும் சிறப்பான முறையில் பூசைகளும் வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. இவ்வாலயத்தில், இரவில் நடத்தப்படும் விபூதி அபிஷேக பூசை மிகவும் விஷேசமானது.  ஆலயமும் புதிய பொலிவுடன் உள்ளது.

🛕 மகாகாளேஸ்வரர் ஆலயம் 3 அடுக்கு ஆலயம். கீழ்பகுதியில், மகாகாளேஸ்வரர், நடு பகுதியில் ஒங்காளேஸ்வரர், மேல் பகுதியில் நாகநாதர் என்ற  நாகசந்திரேஸ்வரர்  உள்ளார்கள்.
🛕மகாகாளேஸ்வரர் தரிசிக்க மிக நீண்ட Q வரிசை உண்டு, ஆலயம் பக்தர்களால் பெருங்கூட்டமாக நிறைந்திருந்தாலும், தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
🛕பாதுகாப்பிற்காக இரும்பு குழாய்களால் கொண்டு, அமைக்கப்பட்ட வரிசைமுறை, உள்ளதால் உள்நுழைந்து மகாகாளேஸ்வரர் தரிசனம் செய்து வெளிவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
🛕முதலில், ஆலய வளாக தென்புறம் சென்று அங்குள்ள ஆலயம் உள்நுழைவு பாதைப்பகுதிக்கு சென்றால் சாய்தளப்பாதை இருக்கும். அதன்  வழியே  சற்று அடிப்பகுதிக் சென்று, மகாகாளேஸ்வரர் தரிசனம் செய்ய வேண்டிய தனி வழியில் செல்லவேண்டும். 
🛕 இது கருவரைப் பகுதியின் தென்புறம் உள்ள பெரிய உள் மண்பத்திற்குள் செல்லும். பக்தர்கள் இந்த மண்டபத்திலிருந்து கொண்டு, ஸ்ரீ மகாகாளேஸ்வரரை நன்றாக தரிசிக்கலாம்.
🛕சுவாமியின் கருவரை தென்புறம் பார்த்து அமைந்துள்ளது, சிவலிங்கம் மிகப்பெரியது வழுவழுவழுப்பாக உள்ளது. அபிஷேகம் செய்வதும், விதவிதமான அலங்காரங்கள் செய்யப்படுவதும் பிரமிப்பாய் உள்ளது.

🛕  முன்புறம் அழகிய வெள்ளைக் கருங்கல்லால் ஆன நந்தி ஒன்றும் சுவாமி கருவரை நோக்கிய வண்ணம் உள்ளார்.
🛕சில ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் எல்லோரும் மண்டபத்தில் அமர்ந்து நெடு நேரம் அபிஷேக பூசை அலங்காரங்கள் செய்வதை கண்டுவிட்டு, பிறகு, சுவாமியை கருவரையில் சென்று அருகில் இருந்து தொட்டு அபிஷேகம் செய்ய வாய்ப்புக் கிடைத்தது.  
🛕தற்காலத்தில், பல்வேறு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு நெறிப்படுத்தப்படுவதால், தரிசிக்கச் செல்லும் அனைத்து பக்தர்களையும் கருவரை உள்ளே சென்று வழிபாடு செய்ய அனுமதிப்பதில்லை. தனி பூசை வழிபாட்டுக்  கட்டணம் வசூலிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.
🛕முக்கியமான ஆலயமாக இருப்பதால் மிகப்பெரிய பாதுகாப்பு வசதிகள்  கட்டிடத்தில் உள்ளது. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து மக்கள் கூட்டம், சாரி சாரியாக வந்து வழிபடுகிறார்கள். 

🛕இவருக்கு பால் அபிஷேகம், செய்தும், விதவிதமான அலங்காரங்கள் செய்தும் ஆர்த்தி வழிபாடு நடைபெறுகிறது.  சிறப்பு வழிபாடு செய்பவர்கள் தனி பணம் கட்டி கருவரை உள்ளே சென்று தொட்டும் வணங்குகிறார்கள்.
 
🛕பல நிமிடங்கள் தொடர்ந்து பூசை செய்தும், ஆர்த்தி செய்கிறார்கள்.
மக்கள் குரல் ஒலி எழுப்பியும், கைகளைத் தட்டியும் ஒலி எழுப்புவது வித்தியாசமான வழிபாடு.  கைப்பேசி அனுமதிக்கப்படுவதால் எல்லோரும் கைப்பேசியில் புகைப்படம் எடுப்பதும் மற்ற ஆலய தரிசனங்களிலிருந்து, வித்தியாசமாகத் தோன்றுகிறது.

🛕ஆலயம் உள் செல்லவும், வெளியில் வரவும் தனித்தனி பாதைகள்.

🛕இருப்பினும், நாம் வரிசையில் செல்லும்போது கருவறையை நேரடியாகப் பார்க்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
🛕இது மட்டுமல்லாமல், பல இடங்களில் கருவரையை CCT மூலம் நேரடியாகவே புகைப்படம் எடுத்து, பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி பெட்டிகளின் மூலம் நேரடி யாகக் காணும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது' மிகச்சிறப்பு.
சிவராத்திரியில் பிரமிக்கவைக்கும் வகையில், மிகப்பெருங்கூட்டமும், மிகுந்த பாதுகாப்பும், மற்ற வசதிகளும்  செய்யப்பட்டிருந்தது. 

🛕ஆலயம் வளாகம் சுற்றிலும், தொலைக்காட்சிகள் பல இடங்களில் வைக்கப்பட்டு இருந்தன. அதன் முன் விடியவிடிய பக்தர்கள் கூட்டம்.
ஆலயம் வளாகம் முழுதும் சிறப்பு அலங்காரங்கள்.

🛕ஆலய தரிசனம் சிவராத்திரி சமயத்தில் பல லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவதால், உஜ்ஜியினியின் பாதைகளில் போக்குவரத்து மாற்றங்கள். கடும் நெருக்கடி. எல்லா இடங்களிலும், மக்கள் கூட்டம் மிக மிக அதிகம், 10.03.2021ல் நாங்கள் அனுபவத்தோம்.

🛕இம்முறை, பாரத பிரதமர் வருகை தந்திருந்ததால், ஆலயமும், உஜ்ஜியினியும் மிகச்சிறப்பான முறையில் மலர் அலங்காரம், மின் அலங்காரம் மிக அருமையாக இருந்திருந்தது.
🛕கருவரை கீழ்பகுதியில் உள்ள  ஜோதிர்லிங்கமான  ஸ்ரீ மகாகாளேஸ்வரர் தரிசனம் முடிந்ததும், ஆலயம் மேல்புறம் வந்து நடு கருவறையில் உள்ள ஸ்ரீ ஓம்காரேஸ்வர் தரிசனம் செய்தோம்.
இந்தக் கருவரையின் முன் ஒரு பெரிய கற்றுன்களால் கட்டப்பெற்றுள்ள முன்மண்டபமும், முன் மண்டபத்தில் ஒரு அழகிய நந்தியும் உள்ளது.

🛕மகாகாளேஸ்வரர், பாதாள கருவரையில் உள்ளார்; இவரை தரிசித்தபின் கருவரை மேல் பகுதி வந்து, கூட்டம் நெரிசல் இல்லாமல் ஆலய வளாகத்தில் உள்ள மற்ற சன்னதிகளை தரிசித்தோம்.

🛕 இந்த மூலவர் கருவறையை உள்ளிட்டு வலம் வந்தோம், இந்த மூலக்கருவரைப் பகுதியின் பின்புறத்தில், ஒரு 'பாதாள ' லிங்கம், ஸ்ரீ த்ரிவிஷ்டப்ரஸ்வர் மஹாதேவ் ஆலயம் என்ற மிகப் புராதானமான சிறு சன்னதி உள்ளது.  தவிர, மூலவர் புறப்பகுதிகளிலும், புராதானமான சில சிவலிங்கமூர்த்திகளும், விநாயகர், பெருமாள்,  பைரவர், ஹனுமார், முதலிய தெய்வ சன்னதிகளும் உள்ளன.

🛕இந்த வளாகத்தில்  வடபுறம் சில புராதான சன்னதிகளும், தலவிருட்சமும், ஆலய அலுவலகக் கட்டிடங்களும் உள்ளன. ஆலய வளாகத்தில், ஆலயம் சம்பந்தமான, அர்ச்சனை, பூசைக் கட்டண  அறைகள் உண்டு.  பிரசாதப் பொருட்கள் விற்பனைகளும் நடைபெறுகின்றன.

🛕மூலவர் ஆலயத்தின் முன்புறம் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.

🛕தென் பகுதியில் தனியாக அஷ்ட்டலிங்கள், வைத்தும், நவகிரக பரிகாரலிங்கங்களும்  அமைத்து, பூசைகளும், நடைபெறுகின்றன.

🛕இது அல்லாமல், ஆலய வளாக உட்பகுதியிலே, தென் மேற்குப் பகுதியில்  இரண்டு ஆலயங்கள் ஸ்ரீஅனாதி கல்பேஷ்வரர், ஸ்ரீ காலேஸ்வரர்,  உள்ளன.
இவைகளும், கற்றளிகளால் முன்மண்டபத்துடன் கூடிய உயர அமைப்புக் கோபுர அமைப்புடன் உள்ளது.
மேலும், சிறு சிறு சன்னதிகளில் பல்வேறு ரிஷிகள், முனிவர்கள் வழிபட்ட லிங்கங்களும் உள்ளன.

🛕ஆலய வளாக உட்புறம் பக்தர்கள் அதிகமாக பரவலாக  வழிபாட்டில் இருக்கிறார்கள்.  இருப்பினும், ஆலயம் தூய்மையான பராமரிப்பும், பாதுகாப்பும் கொண்டதாக  விளங்குகிறது.

🛕ஆலயம் முழுதும் தரிசனம் செய்துவிட்டு, ஆலயமேல்புறம் வழியாக வெளியேறும் வழி அமைக்கப்பட்டு உள்ளது. ஆலயப் பகுதி உயரம் இதிலிருந்து இறங்க சாய்தளம் அமைத்துள்ளனர். அதன் வழியாக வெளியே வந்தோம்.

🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼‍♂️🙏

#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#பயண_அனுபவக்_குறிப்புகள் 

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 

#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாகாளேஸ்வரர் #உஜ்ஜியினிஆலயங்கள்
#ஜோதிர்லிங்கம்
#உஜ்ஜியினி , #மத்தியப்பிரதேசம்
🛕#மகாகாலேஸ்வரர்ஆலயம்



KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...