Sunday, December 11, 2022

பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️#மகாராஷ்ட்ரா#MUMBAI #மும்பை #ClTY_TOUR பதிவு - 1 🌼13.10.2022

#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️
#மகாராஷ்ட்ரா
#MUMBAI  #மும்பை 
#ClTY_TOUR 
பதிவு - 1
13.10.2022

நாங்கள் 12.10.2022 அன்று மத்தியப்பிரதேசம் உஜ்ஜியினியிலிருந்து புறப்பட்டு 13.10.2022 காலையில் மும்பை வந்து அடைந்தோம்.  ரயில்வே நிலையத்திலிருந்து மும்பை ஆந்திரா மகாசபா ஜிம்கானா என்ற இடத்தில் சென்று தங்கினோம். கீழ்தளத்தில், பெரிய Hall இருந்தது. அதில் தங்கிக் கொள்ள வைத்தார்கள். மேல்தளங்களில், தனி ரூம்கள் உள்ளன. Room காலி இடம் இருந்தால் மட்டும் அனுமதிக்கின்றார்கள். தனிக்  கட்டணம் என்கிறார்கள். எல்லோருக்கும் Hallலில் தான் இடம் வசதி செய்யப்பட்டு இருந்தது. Bed pillow  தனியாக pay செய்து வசதி செய்து கொண்டோம். 

💥மும்பை மாநகர் பற்றிய அனுபவக் குறிப்புகள்:

🌇எங்கெங்கு நோக்கினும் உயரமான மாடிக்  கட்டிங்கள், வான் வெளியில் வளர்ந்த கட்டிடங்களில் வசிப்பவர்கள் தாம் அதிகமாக உள்ளர்கள்.

🌆உலக பணக்காரர்களின் வரிசைகளில் உள்ள பெரும் பணம் படைத்தவர்கள் அதிகம் வாழுமிடங்கள் இங்குள்ளன.

🌇மிகக் குறைந்த வசதிகள் நிறைந்த நெருக்கடி மிகுந்த வசிப்பிடங்களை சேரிகள் என்று கூறுகிறார்கள். ஆசியாவின் மிகப் பெரிய சேரிப்பகுதியும் இங்குள்ளது என்று சில வசிப்பிடங்கள் உள்ள இடத்தை சுட்டிக் காட்டினார்கள்.

🌇பெரும்பாலும் பாரதத்தின் அனைத்து தொழில் மற்றும், மத்திய, மாநில அரசுகளின் கட்டிடங்கள், அனைத்து சமூக குடியிருப்புகள், பழமையானது முதல், நவீன வகை பொருள்கள் மற்றும் சேவை அடிப்படையில் வளரும் திட்ட அலுவலகங்கள் அனைத்தும் இந்த குறுகிய தீபகர்ப்ப இயற்கை அமைப்புடன் உள்ள பகுதியாகிய மும்பையில் இருக்கிறது. 

🌁அகண்ட பாரத பூமியில்  இவை அனைத்தையும் திட்டமிட்டு பரவலாக அமைத்து  வளர்த்தால் இவ்வளவு நெருக்கடிகளையும் களையலாம் என்ற எண்ணங்கள்  வலுப்பெறுகிறது.

 🏗️பூமியில் இருந்து வானத்தை நோக்கியே அதிக கட்டிடங்கள் வளருகிறது என்பதை நேரில் உணர்கிறோம்.

🏙️எங்கும் பரபரப்பான வாகனங்கள் போக்குவரத்துகள், நெருக்கடியான சாலைகள்.  சில இடங்களில் கடல்கரையை மனல் தரைகளாக மாற்றி அதில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.  கடலில் ஓரத்தில் சாலைகள் அகலப்படுத்துதல், போக்குவரத்து மேம்பாட்டிற்காக, ஒருபுறத்திலிருந்து மறுபுறத்திற்கு செல்லும் வகையில், கடல்மீது போடப்பட்டுள்ள பிரம்மாண்டமான பாலங்கள் நம்மை புதிய செயற்கை உலகிற்கு அழைத்து செல்கிறது.

🏙️இந்த அதீத வளர்ச்சிகளே மும்பையின் மதிப்புக்கும் பெருமைக்கும் காரணமாக உள்ளது.
 
🌆பொதுவாக பெருநகர வாழ்க்கை முறைகள் இயந்திரத்தனமாகவே இருக்கும் என்பர்கள். இங்கு அதற்கான காரணம் நன்றாகத் தெரிகிறது. அப்பேர்பட்ட சமூக வாழ்க்கையை விரும்பியோ, விரும்பாமலோ, மனிதர்கள் ஏற்றுக்கொண்டு இயங்குகிறார்கள் என்பதே நிதர்சனம்.

#மும்பை: சில பொதுக்குறிப்புகள்: 

💥மும்பை பெருநகரின் விரைவான வளர்ச்சி:

🏙️மும்பை எல்லா வகையிலும் அதிகாரம், செல்வம், கவர்ச்சி மற்றும் புகழ் ஆகியவற்றால் இயக்கப்படும் ஒரு மெகா- நகர்.

🏙️மும்பை சால்சேட் எனப்படும் ஒரு தீவின் தென்மேற்கில் உள்ள ஒரு குறுகிய தீபகற்பத்தில் உள்ளது. இதன் மேற்கில் அரபிக் கடலும், கிழக்கில் தானே கடற்கழியும், வடக்கே வசை கடற்கழி ஆகியவை அமைந்துள்ளன.

🏙️மும்பையின் புறநகர் மாவட்டம் தீபகற்பத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளது. நவி மும்பை என்னும் பகுதி, தானே கடற்வழிக்கு கிழக்கே உள்ளது மற்றும் தானே வசை கடற்கழிக்கு வடக்கே உள்ளது.

🏙️மும்பை இரண்டு தனித்துவமான பகுதிகளாக மும்பை நகர மாவட்டம் மற்றும் மும்பை புறநகர் மாவட்டம் என அமைந்துள்ளது. இது மகாராட்டிரத்தின் இரண்டு தனி மாவட்டங்களாக உள்ளது.
நகர மாவட்டப் பகுதி பொதுவாக தீவு நகரம் அல்லது தெற்கு மும்பை என்றும் குறிப்பிடப்படுகிறது

🏢இது வலுவான வரலாற்று இணைப்புகள், அற்புதமான பிரிட்டிஷ் கட்டிடக்கலை, அருங்காட்சியகங்கள், கடற்கரைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக பாலிவுட் ஆதிக்கம் செலுத்தும் நட்சத்திரங்களின் உண்மையான விண்மீன்களைக் கொண்ட நகரம்.

🏢முன்பு,  ஏழு தீவுகள் கொண்ட மீன்பிடி காலனிகளின் சமூகங்களின் தாயகமாக மும்பை இருந்தது.

🏢பல நூற்றாண்டுகளாக, தீவுகள் போர்த்துகீசியர்களிடமும், பின்னர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு, தொடர்ச்சியான உள்நாட்டுப் பேரரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தன.

🏢 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பம்பாய் பெரிய சாலைகள் மற்றும் இரயில் பாதைகளை நிர்மாணிப்பதன் மூலம் மறுவடிவமைக்கப்பட்டது, மறுசீரமைப்பு திட்டம் பம்பாயை அரபிக்கடலில் ஒரு பெரிய துறைமுகமாக மாற்றியது. 

🏙️19 ஆம் நூற்றாண்டில், அரபிக்கடலில் ஒரு பெரிய துறைமுகமாக மாறியது பம்பாய்.  அதன் பொருளாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சியால் பாரதத்தின் குறிப்பிடத்தக்க பெருநகரில்  ஒன்றாக வளர்த்தெடுக்கபட்டது. 

🏙️20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பம்பாய் இந்திய விடுதலை இயக்கத்திற்கான வலுவான தளமாக மாறியது.

🏙️ 1947 இல் இந்தியா விடுதலை அடைந்தவுடன், நகரம் பம்பாய் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 

🏢1960 இல், சன்யுக்தா மகாராஷ்டிரா இயக்கத்தைத் தொடர்ந்து, பம்பாயைத் தலைநகராகக் கொண்டு புதிய மகாராஷ்டிரா மாநிலம் உருவாக்கப்பட்டது.

 🏢இந்த நகரம் 1996 இல் மும்பை என மறுபெயரிடப்பட்டது. இந்த குறுகிய கால வளர்ச்சியில், நகரம் இந்தியாவின் வணிக மற்றும் பொழுதுபோக்கு தலைநகராக மாறியுள்ளது.

🍁 சமூக இயற்கை சார் வளர்ச்சி சூழல்கள்:

🏞️மும்பை நகர்ப்புறம் தீபகற்ப வடிவத்தில் உள்ளது, (ஏழு தீவுகளை இணைக்கும் நிலம் நிறைந்த பகுதி) தாழ்வான பகுதியாகவும் உள்ளது. இதன் புறநகர்ப் பகுதி உயரமான இடத்தில் உள்ளது, கடந்த சில தசாப்தங்களாக, புறநகர் பகுதியில் புதிய முறைசாரா குடியிருப்புகள் உருவாக்கப்பட்டது, மக்கள் தொகையின் விரைவான அதிகரிப்பு முதலியவை, முறையற்ற கழிவு மேலாண்மை மற்றும் வடிகால் நெரிசல் ஆகியவை ஏற்படுத்தியது.

🏞️இப்பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீரின் கணிசமான அளவு குடிசைகள் மற்றும் உயரமான கட்டிடங்கள் கொண்ட தாழ்வான நகர்ப்புற பகுதிகளை நோக்கி பாய்கிறது.  இதன் விளைவாக, மோசமாகக் கட்டப்பட்ட சேரிகள் வெள்ளத்தால், அடித்துச் செல்லப்படுகின்றன அல்லது இடிந்து பெரும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

 🏞️மேலும் வெள்ளத்திற்குப் பின்பு நீர் தேங்கும் நிலை நீண்ட காலத்திற்கு நீடிக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல், வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள், மும்பையில் பலர் பயன்படுத்தப்படும் பொது போக்குவரத்தான தொடருந்து பாதைகளில் அடைப்பும் ஏற்படுகிறது ,  கடந்த சில காலங்களாக, மும்பையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
 
🏞️மும்பையில் வெள்ள பாதிப்பைக் குறைக்கும் செயல்பாட்டுக்கான திட்டங்களை மகாராஷ்டிர அரசு மேற்கொண்டு வருகிறது.

💥பொருளாதார வளர்ச்சிகள்

🌁பல முக்கிய இந்திய நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பெருநிறுவன தலைமையகங்கள் உள்ளன. இது இந்தியாவின் சில முதன்மையான அறிவியல் மற்றும் அணுசக்தி நிறுவனங்களின் அமைவிடமாகவும் உள்ளது. இந்த நகரம் பாலிவுட் மற்றும் மராத்தி திரைப்படத் தொழில்களின் அமைவிடமாகவும் உள்ளது. மும்பையின் வணிக வாய்ப்புகள் இந்தியா முழுவதிலும் இருந்து வரும் புலம்பெயர்ந்தோரை ஈர்க்கின்றது.

🌉மும்பை இந்தியாவின் வர்த்தக தலைநகரமாகவும், உலகளாவிய நிதி மையமாகவும் உருவாகியுள்ளது.  பல தசாப்தங்களாக இது இந்தியாவின் முக்கிய நிதிச் சேவைகளின் அமைவிடமாக, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தனியார் முதலீடு ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்துகிறது.

🏢உலகின் முதல் பத்து வர்த்தக மையங்களில் ஒன்றாக உள்ளது.

🏢உலகின் எந்த நகரத்திலும் இல்லாத வகையில் மும்பையில் எட்டு மிகப்பெரிய பில்லியனர்கள் உள்ளனர்.

🏢 2008 இல் மும்பையின் பில்லியனர்கள் உலகின் எந்த நகரத்திலும் இல்லாத சராசரி அளவு சொத்துக்களைக் கொண்டிருந்தனர்.

- சில தகவல்கள் - வலைதளங்களிலிருந்து....  
நன்றி🙏

🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼‍♂️🙏

என்றும் அன்புடன்
சுப்ராம்.அருணாசலம்_காரைக்கால்

#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️

#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாராஷ்ட்ரா
#மும்பை #MUMBAI

#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...