Wednesday, December 14, 2022

பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️#மகாராஷ்ட்ரா#MUMBAI #மும்பை #செம்பூர்சுப்பிரமணியசுவாமிஆலயம்14.10.2022

பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
#மகாராஷ்ட்ரா
#MUMBAI  #மும்பை 
#செம்பூர்சுப்பிரமணியசுவாமிஆலயம்
14.10.2022

🛕#செம்பூர்சுப்பிரமணியசுவாமிஆலயம்
14.10.2022

🛐நாங்கள் 13.10.2022 அன்று மும்பை பெருநகரத்தில் உள்ள குறிப்பிட்ட சில இடங்களை சுற்றுப் பார்த்து விட்டு இரவு  மும்பை ஆந்திரா மகாசபா ஜிம்கானா என்ற இடத்தில் தங்கினோம்.

🕉️14.10.2022 காலையில் உணவுமுடித்துக் கொண்டு ஜோதிர்லிங்க தரிசனப் பயணத்தைத் தொடங்கினோம்.  அடுத்து நாங்கள் சென்ற இடம் 
மும்பையின் புறநகரில் உள்ள செம்பூர் என்ற இடத்திற்கு சென்றோம். 

🕉️அங்குள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயம் தரிசனம் செய்தோம். 
தரிசனம் 14.10.2022 வெள்ளி காலை 9.மணி அளவில் காலை பூசையில் கலந்துகொள்ளும் பாக்கியம் கிடைத்தது.

🛐மும்பை பெருநகருக்கு வடக்கில் உள்ளது செம்பூர், மும்பையின் மாதுங்கா என்ற பகுதியில் உள்ளது.

☸️இந்தப் பகுதியை MINI MADRAS
என்று அழைக்கிறார்கள். தமிழ்நாட்டைச் சார்ந்த பகுதி மக்கள் இங்கு அதிகம் வசிக்கின்றனர்.

🛐மிக நல்ல ஆன்மீக பற்றுடையவர்களால், இங்கு ஒரு அருமையான ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.

🛐இந்த ஆலயம் உருவாக மூலக்காரணமாக இருந்தவர், காலஞ்சென்ற ஸ்ரீ T.V. லெட்சுமனன் அவர்கள்.  அன்னாரின் பெரும் முயற்சியால், காஞ்சி சங்கர மடத்தின் உதவியும், மற்றும் தென்னிந்திய பஜன் சமாஜ், அரசின் உதவிகள், மற்றும், ஏராளமான அன்பர்கள் முயற்சியால் இவ்வாலயம்  உருவாக்கப்பட்டுள்ளது.

🕉️இந்தப் பகுதியில் எந்த இடத்தில் ஆலயம் கட்டப்படவேண்டும் என்று  பூமி சாஸ்த்திரத்தின்படி பிரசன்ன விதிகண்டு இடம் தேர்வு செய்யப்பட்டு, ஆகம சாஸ்திரப்படி  ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.

⚛️இவ்வாலயம் கட்ட ஏராளமானோர்கள் உதவி செய்துள்ளனர்.

🛐குறிப்பாக, திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் தனி அக்கரையுடன் இவ்வாலய பணிகளுக்காக அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டும்,  பொருள் உதவிக்கும் உதவியுள்ளார்கள். சுவாமிகள் முன்னிலையில்1973 ல் பாலாலயம் செய்யப்பட்டது.

☸️4.5 அடி உயரம் உள்ள முருகன் சிலைக்காக  கிரேனட் கல், தமிழ்நாட்டில் உள்ள  மைலத்திலிருந்து வரவழைக்கப்பட்டும், மிகப் புகழ்வாய்ந்த, சுவாமிமலை சிற்பி குமரேச ஸ்தபதி அவர்களால் செய்யப்பட்டது. பஞ்சலோக உட்சவமூர்த்தி சிலைகளும் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

 🛐தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 50 சிற்பிகள் வரவழைக்கப்பட்டு முழு ஆலயமும் கட்டப்பட்டது இதற்காக, சுமார் 800 டன் கற்கள் மகாபலிபுரத்திலிருந்து மும்பைக்கு கொண்டுவரப்பட்டது.

🛐புனித ஜெகத்குரு  சங்கராச்சாரியா ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் வழிகாட்டுதலின்படி இவ்வாலயத்தின் அணைத்துப் பகுதிகளும் அவர்களின் ஆசீர்வாதம் பெறப்பட்டு, ஆலயம் நிர்மாணம் செய்து,  1980ல் முதல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 

🕉️இந்த ஆலயம் புராதானத்தையும், புதுமை தொழில்நுட்பத்தையும் முறையாகக் கொண்ட அமைப்பு உடையது.

🕉️ஆலயம் நுழைவில் கீழ்தளத்தில் துவார கணபதி, மற்றும் வலதுபுறம் ஆஞ்சனேயர் சன்னதிகள் உள்ளன.  ஆலய முன் பக்கத்தில் உள்ள  நீண்ட பெரிய சுவற்றில் வடக்குப்புறம் பெருமாள், தென்புறம் அம்மன் சுதை வடிவங்கள்.

⚛️இரண்டு அடுக்கு மாடி உயரம் கொண்டது. 108 படிகள் அமைந்துள்ளது.
மின்தூக்கியும் உண்டு.

🕉️படிகள் தோரும் முருகன் பல்வேறு சிலை, புராணங்கள் சுதை வடிவில் உள்ளது.

⚛️108 படிகளில் புராணக்கதைகளை 3D சிற்பமாக அழகிய முறையில் அமைந்துள்ளனர்.

🕉️ஆலய அலுவலகம் மற்ற சமையல் அறைகள் முதல் அடுக்கில் உள்ளன.

🕉️இரண்டாவது அடுக்குக்கு மேல் ஆலயம்

🛐 முழு கற்றளியில் கருவரை அமைக்கப்பட்டுள்ளது. 
மேற்கு நோக்கிய மூலவர்  ஸ்ரீ சுப்பிரமணியர், வள்ளி தெய்வாணையுடன், கொடிமரம், மயில்,  இடதுபுரம் தனி ஸ்ரீ விநாயகர், வலதுபுறம் ஸ்ரீஅய்யப்பன், வடகிழக்குப் பகுதியில் 
ஸ்ரீ குருவாயூரப்பன், வட கிழக்கில் துர்க்காதேவி சன்னதிகள்.

☸️தனி நவகிரகம் அமைப்பு.  பெரிய (வாகன) மண்டபம் கருவரைகள் பின்புறம்
அமைத்துள்ளார்கள்.

⚛️மிகுந்த பொருட்சிலவில் அமைக்கப்பட்டுள்ளது. மிக அற்புதமாகவும், மிகவும் மிகத்தூய்மையாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

🕉️தமிழர் ப(மி)குதியாக இருப்பதால், பக்தர்கள் விழாக்கள் சிறப்புடன் உள்ளதாக கூறுகிறார்கள்.

⚛️ஆலயம் மிகத் தூய்மையாகவும், பக்தி உணர்வுடனும் உள்ளது.

🛐இந்தப் பகுதியில் ஏராளமான தமிழர்கள் உள்ளதால், பக்தர்கள் முறையாக வந்து வழிபட்டு செல்கிறார்கள். 

🛐ஆலயம் தனி நிர்வாகக்குழுவின் மூலம் சிறப்பான கட்டுப்பாட்டுடன் நடைபெற்று வருகிறது.

🕉️அன்றாட பூசைகள் மட்டுமல்லாது,   கந்தர் சஷ்ட்டி, தைபூசம், பங்குனி உத்திரம் முதலிய முக்கிய விழாக்கள் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

🛐மும்பை செல்லும் தமிழர்கள் அவசியம் தரிசனம் செய்ய வேண்டிய ஆலயமாக உள்ளது. ஸ்ரீ செம்பூர் முருகன் ஆலயம்.

🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼‍♂️🙏

#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
14.10.2022

#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️
#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாராஷ்ட்ரா
#மும்பை #MUMBAI
🛕#செம்பூர்சுப்பிரமணியசுவாமிஆலயம்
☸️🛐🕉️⚛️☸️🛐🕉️⚛️☸️🛐🕉️⚛️☸️🛐🕉️⚛️☸️🛐

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...