#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
பதிவு. 7
12.10.2022
12.SANDIPANI ஆஷ்ரமம்.
🛖சந்திப்பானி என்னும் முனிவர் ஆஷ்ரமத்தில் கிருஷ்ணரும், பலராமரும், சுதாமாவும் படித்தனர்.
🛖இந்த இடத்தில், சாந்திப முனிவரின் பெயரால் ஆஷ்ரமம் அமைத்துள்ளது. உஜ்ஜியினியிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் உள்ள முக்கிய இடம்.
✨ஸ்ரீ கிருஷ்ணா சுதாமா பல்ராம் வித்யா ஸ்தலம் என்றும்
✨ஸ்ரீ குண்டேஷ்வர் மஹாதேவ் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
வரலாறு :
🛐சாந்திபனி முனிவர் காசியை சேர்ந்த தவமுனிவர். கும்பமேளாவிற்காக, அவந்தி வந்து மகாகாளர் தரிசனம் பெற்றார்.
🛐இவர் அங்கு சென்று இருந்த போது, அங்கு மழை இல்லாததால், கடுமையான வரட்சியில், மக்கள் துன்பத்தில் வாடியதால், சாந்திபனி முனிவரிடம், வரட்சி போக்க வேண்டும் என்றவேண்டுகோள் வைத்தனர்.
🛐முனிவரும், சிவனை நோக்கி கடும்தவம் மேற்கொண்டார். இவரின் கடும் முயற்சியில் இறைவர் தோன்றினார்.
மக்கள் சுபிட்சத்தை அடைய அருள்பெற வேண்டினார். சிவபெருமானும் அவ்வாறு அருளினார். மேலும், இங்கிருந்து தவச்சாலை அமைத்துச் கொண்டு தொடர்ந்து தவம் செய்து வரவும் அருள் செய்தார்.
🛐தினமும் அபிஷேத்திற்கு கங்கை நீர் வேண்டும் என்று வேண்டவே, அங்கு கோமதி குண்டம் என்ற தடாகம் ஏற்படுத்தி அருளினார்.
🛐துவாபர் யுகத்தில், கன்சனைக் கொன்ற பிறகு, கிருஷ்ணரும் பலராமும் தங்கள் படிப்பைத் தொடங்க விரும்ப, வாசுதேவர், முனிவர் சாந்திபனியின் ஆசிரமத்திற்கு கல்வி பயில அனுப்பிவைத்தார்.
🛐பகவான் கிருஷ்ணர் இங்கு வந்து, தனது குருவிடமிருந்து 16 வித்யாப்பியாசங்களையும் 64 கலைகளையும் கற்றல்களையும் பெற்றார். சாந்தி பானி முனிவர் குருதட்சிணை யாதும் வேண்டாம் என்றார்.
🛐அனைத்து தேவர்களும் தெய்வங்களும் வானத்திலிருந்து மலர்களைப் பொழிந்து குருவை வாழ்த்தினர்.
குரு சாந்திபனி, மற்றும் அனைத்து தெய்வங்களும் ஆசிரமத்தில் நின்று கொண்டிருந்ததைக் கண்டு, தேவாதிதேவர்களும் மகான்களும் இருந்தார்கள்.
🛐குரு சாந்திபனி குருதக்ஷிணையை நிராகரித்தார், ஆனால் ஸ்ரீ கிருஷ்ணரின் தீவிர வேண்டுகோளின் பேரில், ரிஷிபத்னி தனது இறந்த மகனை குருதக்க்ஷிணையாக கேட்டார், பின்னர் ஸ்ரீ கிருஷ்ணர் சௌராஷ்டிரா (குஜராத்) பிரபாஸ் தீர்த்தத்தில் ஷங்காசுரனை போரிட்டு அவரை மீட்டு, குருவின் மகனை பாதாளலோகத்திலிருந்து அழைத்து வந்து, குருமாதாவிடம் அறிமுகப்படுத்தி, குருதக்ஷிணை கொடுத்தார்.
🌟இங்கு தொல் பொருள் கட்டிடங்கள் சில உள்ளன. மிகப்பெரிய வளாகத்தில் உள்ள ஆலயம். இங்குள்ள இடங்கள்.
1.ஸ்ரீ குண்டேஷ்வர் மகாதேவ் கோயில்:
2.ஸ்ரீசாந்தி பானி வழிபட்ட சிவன்
3. கோமதி குண்டம்
4. கோமதி குண்ட வடகரையில் உள்ள 64 கலை காட்சி.
5. ஸ்ரீகிருஷ்ணர் பயின்ற 16 வித்யாப்யாச விளக்கங்கள் ஓவியக் கூடம்.
6. ஸ்ரீசாந்தி பாணி ஆலய கண்காட்சிக் கூடம்.
🛕1.ஸ்ரீ குண்டேஷ்வர் மகாதேவ் கோயில்:
ஒற்றை உயர கருவரை கோபுரமும், முன்மண்டபமும் அமைந்துள்ளது.
கருவரையின் நடுவில், தரைப்பகுதியில் சிறிய சிவலிங்கம்,
கருவறையின் உள் சுவற்றில் ஸ்ரீபாலாஜி, ஸ்ரீ வாமனர், ஸ்ரீ நாராயணர் சிலைகளும், ஒரு விநாயகரும் அமைத்துள்ளனர்.
மிகவும் பழமையான நந்தியின் தனித்துவமான சிலைகள் உள்ளன.
♨️புராதான பாறை ஒன்றும் குண்டேஷ்வர் மகாதேவ் கோயிலில் உள்ளது.
♨️வரலாற்று சம்பவங்கள் அனைத்திற்கும் ஆதாரமாக குந்தேஷ்வர் மகாதேவ் கோவிலில் உள்ளதாக கூறுகிறார்கள்.
♨️பகவான் ஸ்ரீ குண்டேஷ்வர் மஹாதேவ், சுதாம கிருஷ்ணா-குரு சாந்திபனி காடி, பல்ராம் மிகவும் பழமையான அதிசய சிலைகள், தனித்துவமான நிற்கும் நந்திகனா, அதிசய செல்வக் கடவுள் குபேர், கடவுள் விஷ்ணு மற்றும் வாமன் தேவ் மற்றும் பிற கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் அமைந்துள்ளன. கோயிலின் கூரையின் கட்டிடக்கலையும் ஸ்ரீயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது.
2.🛕ஸ்ரீசாந்தி பானி வழிபட்ட சிவன்
♨️சாந்திபனி வழிபட்ட சிவலிங்கம் அமைந்த இன்னொரு ஆலயமும் ஒற்றை உயரக் கோபுரத்துடன் சிறிய முன்மண்டபத்துடன் வளாகத்தின் ஒரு பகுதியில் உள்ளது. இதன் கருவரை சற்று அகலமாக உள்ளது. உள்ளே சென்று அபிஷேகம் செய்யலாம்.
♨️முனிவர் ஆலயத்தில் தற்போதும், பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது
🥏3.கோமதி குண்டம்.
🥏ஆலய வளாகத்தின் ஒரு பகுதியில் உள்ளது. பாதுகாப்பான கட்டுமானத்துடன் பராமரித்து வருகிறார்கள்.
🥏முனிவருக்காக, கிருஷ்ணர், கோமதி நதியிருந்து நீர் வரவழைத்த இடம். கோமதி குண்டம் எனப்படுகிறது.
🥏கோமதி ஆற்றிலிருந்து ஸ்ரீ கிருஷ்ணரால் உருவாக்கப்பட்ட புராதான குளம் கோமதி குண்டம் இந்த இடம் சிறப்பான பராமரிப்பில் உள்ளது.
4.கோமதி குண்ட வடகரையில் உள்ள 64 கலை காட்சி.
♨️கோமதி குண்டம் என்ற சிறப்புவாய்ந்த குளத்தின் கரையில், 64 கலைகளையும், விளக்கும் சிறப்பு கண்காட்சி வளாகம் அமைத்துள்ளனர்.
5. ஸ்ரீகிருஷ்ணர் பயின்ற 16 வித்யாப்யாச விளக்கங்கள் ஓவியங்கள் கூடம்.
🛖முனிவர் செய்த போதனைகளை மிக அருமையான பழமையான மிக ஆகிய ஓவிய காட்சிகளுடன் கூடிய தனி வளாகம் ஒன்றும் உருவாக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஓவியங்களை புகைப்படம் எடுக்க அனுமதியில்லை.
6.. ஸ்ரீசாந்தி பாணி ஆலய கண்காட்சிக் கூடம்.
🛖ஆலய வளாகத்தின் இன்னொரு பகுதியில் சிறிய ஆஸ்ரமம் மண்டபம் அமைந்துள்ளது.
அதன் உள்ளே ஸ்ரீசாந்திப முனிவர் சிலை அமைக்கப்பட்டு கருவரை அமைப்பில் வழிபாடு நடைபெருகிறது.
அதன் உட்புறம் மிக பிரமாண்டமான, கண்காட்சியில், புராதான வரலாறுகள் நிறைந்த, ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
💥சாந்திபானிஆஸ்ரமம் முழுதும் பார்க்க நுழைவுக் கட்டணம் ஏதும் இல்லை.
🌀எல்லா இடங்களுக்கும் சேர்த்து Share Auto per person Rs.250 கொடுத்தோம்.
🌼இந்த ஆலயங்களைத் தரிசித்துவிட்டு அன்று மதியம் Hotel வந்து மதிய உணவு எடுத்துக் கொண்டு உஜ்ஜியினியிலிருந்து 12.10.2022 மாலை மும்பை புறப்பட்டோம்.
🚞இரவில் ரயிலில் உணவு மற்றும் பயணம்.
இத்துடன் மத்தியப் பிரதேச மாநில தலங்களை முடித்து கொண்டோம். மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பைக்கு 13.10.2022 அன்று காலை சென்று அடைந்தோம்.
🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼♂️🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்_காரைக்கால்
12.10.2022
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாகாளேஸ்வரர் #உஜ்ஜியினிஆலயங்கள்
#ஜோதிர்லிங்கம்
#உஜ்ஜியினி , #மத்தியப்பிரதேசம்
🛕#மகாகாலேஸ்வரர்ஆலயம்
No comments:
Post a Comment