#மகாராஷ்ட்ரா
#MUMBAI #மும்பை
#ClTY_TOUR
பதிவு - 2
13.10.2022
2. மகாலெட்சுமி ஆலயம்.
🛕அடுத்து நாங்கள் மகாலெட்சுமி ஆலயம் அழைத்துச் செல்லப்பட்டோம்.
🛕மகாலெட்சுமி ஆலயம் மும்பையின் பிரதான சாலையில் உள்ள
சுவாமிநாராயணன் (மகாலட்சுமி) ஆலயம் அருகில் இறங்கி சிறிய சாலையில் செல்லவேண்டும். அங்குள்ள மகாலெட்சுமி ஆலயம் மிகவும் புகழ் பெற்றதும், நம்பிக்கையானதும் ஏராளமான பக்தர்கள் கூட்டத்தை ஈர்க்கும் ஆலயமாகவும் விளங்குகிறது.
🛕சிறிய சாலையில், வழக்கம் போல, சிறுசிறு கடைகள் தாண்டி சென்றால், ஆலயம் முகப்பு வளைவு தாண்டி,
சுமார் 20 படிகள் ஏறி செல்லவேண்டும்.
🛕ஆலயம் வளாகம், பெரிய முன்மண்டபம், அடுத்து உள்ள சற்று சிறிய உள் மண்டபத்தின் உட்புறம் சிறிய கருவரையில், அருள்தரும் மகாலட்சுமி -மலர்களாளும், நகைகளாலும் அலங்கரிக்கப்பட்டு மிக அழகாக காட்சியளிக்கிறார். சிறிய உருவம். முகம் மட்டுமே நன்றாகத் தெரிகிறது.
🛕ஆலய வளாகம் முழுதும் இரும்புக்குழாய் மூலம் வரிசை ஏற்பாடுகள் செய்யப்பட்டு இரண்டு வழிகளில் சென்று சாமி தரிசனம் செய்து கொண்டு திரும்ப வர வேண்டும்.
🛕முழு வளாகமும் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்துள்ளார்கள்.
🛕பக்தர்கள் கூட்டம் மிக அதிகம் இல்லையென்றாலும், மக்கள் வந்து சென்று வணங்கிக் கொண்டு சென்றுகொண்டிருக்கிறார்கள்.
🛕மிகவும் சக்திவாய்ந்தது என்றும், பிரார்த்தனைத் தலம் என்றும் அறிய முடிகிறது.
🛕இங்கு Security Checking செய்து உள்ளே அனுப்பி வைக்கின்றனர். உள்ளே செல்ல படி ஏறி வணங்கிவிட்டு திரும்ப அதே வழியில் வர வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகம்.
🛕குறுகிய பகுதியாக இருப்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமானால், சுவாமிதரிசனம் காலதாமதமாகலாம்.
🛕நாங்கள் சென்ற போது அதிக கூட்டம் இல்லை. எனவே, உடன் அம்பாள் தரிசனம் செய்து கீழே இறங்கி வந்தோம்.
🛕வழியில் இரண்டு மிகப்பழமையான ஆலய சன்னதிகள் இருந்தன.
அவற்றையும் தரிசித்து விட்டு பிரதான சாலையில் எங்கள் பேருந்தை அடைந்தோம்.
🛕நேரம் இருப்பவர்கள், அருகில் உள்ள சுவாமிநாராயண் ஆலயங்களையும், மற்ற சிறுசிறு ஆலயங்களையும் தரிசிக்கலாம்.
🛕இங்கு தனியாக வாகனம் நிறுத்தும்
இடம் எதும் கிடையாது. மிகவும் பரபரப்பான பகுதி. நமது வாகனத்தை வேறு இடங்களில் நிறுத்தி நாம் புறப்படும் நேரத்தில், வந்து நம்மை அழைத்துச் செல்ல வேண்டும். காலதாமதம் செய்ய முடியாது. காவல் கட்டுப்பாடுகள் மிக அதிகம்.
🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼♂️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
13.10.2022
#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️
#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாராஷ்ட்ரா
#மும்பை #MUMBAI
No comments:
Post a Comment