Thursday, November 17, 2022

ஜோதிர்லிங்கதரிசனம்#மகாகாளேஸ்வரர் #ஜோதிர்லிங்கம் #உஜ்ஜியினி #மத்தியப்பிரதேசம்

#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாகாளேஸ்வரர்  #ஜோதிர்லிங்கம் #உஜ்ஜியினி #மத்தியப்பிரதேசம்

🛕#மகாகாலேஸ்வரர்ஆலயம் 
#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️
12.10.2022 
⛳ #உஜ்ஜைன்

🌟மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாரதத்தின் மிக முக்கியமான தலம்.

🌟புனிதமான ஷிப்ரா நதி இவ்வூரில் உள்ளது. கரையெல்லாம் பல பல கோவில்கள் உண்டு.  

🌟பல புராண, புராதான ஆலயங்கள் நிறைந்த ஊர். 

🌟சுமார் 84 புராதான லிங்கங்கள் உஜ்ஜியினியில் உள்ளதாக புரான வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அடையாளம் செய்துள்ளனர்.

🌟ஏழு மோட்ச நகரங்களுள் இதுவும் ஒன்று. அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சி, அவந்திகை, துவாரகை. தலங்கள்.

🌟சுதார்வா என்ற ஜைன அரசன் தான் அவந்திகை என்ற இந்த நகருக்கு உஜ்ஜயினி என்று பெயர் வைத்தார்.

🌟முக்கிய தீர்த்தமாகிய சிப்ரா நதியில் மூழ்கி நீராடி மகாகாளரை வணங்க வேண்டும். 

🌟காளிமாதா தரிசனம் செய்ய வேண்டும்.

🌟தேவாமிர்தம் சிந்திய இடங்களில் இதுவும் ஒன்று.

🌟12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளவிழா நடைபெறுவது.

🌟இங்குதான் கிருஷ்ணர், பலராமர், சுதாமர் சாந்தீப முனிவரிடம் கல்வி பயின்றனர்.

🌟இது ஒரு தேவார வைப்புத்தலமாகவும் உள்ளது.

🌟சிவனைக் குறிக்கும் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கத்தைக் கொண்டுள்ள புகழ் பெற்ற சிவன் கோயில் உள்ள இடம் ஆகும்.

💥#மகாகாளேஸ்வரர் - ஜோதிர்லிங்கம்
🔱ஜோதிர்லிங்கம் தோன்றியது குறித்த தகவல். 
💥புராண காலத்தில் அவந்தியின் அருகில் இருந்த இரத்தின மாலை என்ற மலைக்காட்டில் ஒரு சாபத்தால் வேதாளமாக மாறிய தூசனன் என்பவன் இருந்தான். அவன் அவ்வப்போது நகருக்கு வந்து சூறையாடி மக்களுக்கு பெரும் துன்பத்தை இழைத்துவந்தான். 

அப்போது அவந்தி நகரில் வாழ்ந்துவந்த அந்தணரான விலாசனை நகர மக்கள் அணுகி வேதாளத்திடம் இருந்து தங்களைக் காக்குமாறு வேண்டினர். அவரும் அதற்கு சம்மதித்து வேதவிற்பன்னர்களையும்,  துறவிகளையும் அழைத்து வந்து பெரும் வேள்வி ஒன்றை செய்தனர். 

வேள்வியின் முடிவில் வேள்வி குண்டத் தரைவெடித்து அதிலிருந்து  ஒரு சிவலிங்கம்  தோன்றியது. அந்த லிங்கத்தை இரண்டாக பிளந்துகொண்டு ஆவேசத்துடன் மாகாளர் தோன்றி வேதாளத்தை அழித்தார். அதன்பிறகு மக்கள் மாகாளரை அங்கேயே தங்கி தங்களைக் காக்குமாறு வேண்டினர். மாகாளரும் ஆவேசம் தணிந்தார்.

பிளந்த லிங்கம் ஒன்றுசேர மாகாளர் ஜோதிவடிவில் அதில் கலந்து ஜோதிர்லிங்கமானார். 
⚛️ ஆலய வரலாறு:
1234-5ல் உஜ்ஜைனைத் தாக்கியபோது இக் கோயில் வளாகம் சுல்தான் ஷம்ஸ்-உத்-தின் இலுட்மிஷ் அவர்களால் அழிக்கப்பட்டது. படையெடுப்பின் போது திருடப்பட்ட ஜலதரியுடன் (லிங்கத்தின் கீழ் இருக்கும் ஒரு அமைப்பு) கூடிய ஜோதிர்லிங்கம் அகற்றப்பட்டு அருகிலுள்ள ‘கோட்டீர்த்த குந்தா’ என்கிற இக் கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு குளத்தில் வீசப்பட்டதாக நம்பப்படுகிறது.
தற்போதைய கட்டமைப்பு மராட்டிய ஜெனரல் ரனோஜி ஷிண்டே என்பவரால் 1734 இல் கட்டப்பட்டது. மகாத்ஜி ஷிண்டே (1730–12 பிப்ரவரி 1794) மற்றும் தௌலத் ராவ் ஷிண்டேவின் மனைவி பைசா பாய் உள்ளிட்ட அவரது வம்சத்தின் மற்ற உறுப்பினர்களால் இக்கோயிலுக்கு புனரமைப்பு வசதிகள் மற்றும் மேலாண்மை செய்யப்பட்டது. (1827-1863).

 ஜெயாஜிராவ் ஷிண்டேவின் காலத்தில் (1886 வரை), அப்போதைய குவாலியர் மாநிலத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் இந்த கோவிலில் நடத்தப்பட்டன.

உஜ்ஜைனின் நிர்வாகப் பொறுப்பு, முதலாம் பேஷ்வா பாஜிராவிடமிருந்து  அவரின் உண்மையுள்ள தளபதி ரனோஜி ஷிண்டேவுக்கு சென்றது. ரனோஜியின் திவான் சுகதானகர் ராம்சந்திர பாபா ஷெனாவி ஆவார். அவர் மிகவும் செல்வந்தராக இருந்தார், அவர் தனது செல்வத்தை மத நோக்கங்களுக்காக முதலீடு செய்ய முடிவு செய்தார். இதுதொடர்பாக, அவர் பதினெட்டாம் நூற்றாண்டின் 4 முதல் 5 தசாப்தங்களில் உஜ்ஜைனில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஸ்வரர் கோயிலை மீண்டும் கட்டினார்.
சுதந்திரத்திற்குப் பிறகு இக்கோயிலின் தேவஸ்தான அமைப்பு, உஜ்ஜைன் நகராட்சி நிறுவனத்தால் மாற்றப்பட்டது. தற்போது, இந்த அமைப்பு, உஜ்ஜைன் மாகாணத்தின் ஆட்சியாளர் அலுவலகத்தின் கீழ் உள்ளது.

⛳ஆலயஅமைப்பு :

🛕இது இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனில் உள்ள சிப்ரா ஆற்றங்கரையில் அமைந்துள்ள மூன்று அடுக்குகள் கொண்ட கோயிலாகும்.

🛕 சடங்குகள் மூலம் சக்தி கொடுக்கப்பட்டு நிறுவப்படும் படிமங்கள் போலன்றி, இங்குள்ள முதன்மைக் கடவுளான, சிவனின் லிங்க வடிவம் தன்னுள்ளேயே சக்தியோட்டத்தை உள்வாங்கித் தானாகத் தோன்றியதாகக் நம்பப்படுகிறது.

 🛕மகாகாலேஸ்வரருடைய சிலை தெற்குப் பார்த்தபடி இருக்கும் தட்சிணாமூர்த்தி வடிவம் ஆகும். தந்திர மரபுகளில் கூறப்பட்டிருக்கும் இந்தத் தனித்துவமான அம்சம் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இங்கு மட்டுமே காணப்படுகின்றது.
🛕மாகாளர் கோயிலானது உயர்ந்த மதிலால் சூழப்பட்ட பெரிய இடத்தில் அமைந்துள்ளது. ஆலயம் மிகப்பெரிய வளாகம்.  கருவறைக்கு மேல் அமைந்துள்ள சிகரம் அல்லது விமானம் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
🛕 இக்கோயிலின் மூலத்தானமானது மூன்று அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது. தரைமட்டத்துக்கு கீழேயும் ஒரு கருவறை அமைந்துள்ளது. அதற்கு படிக்கட்டுகள்வழியாக சென்று தரிசிக்கவேண்டும். முதன்மைக் கருவறையானது பெரிதாக வட்டவடிவில் உள்ளது. அதில் மாகாளர் பெரிய லிங்க வடிவில் காட்சியளிக்கிறார்.
🛕மகாகாலேஸ்வரர் கருவறைக்கு மேலுள்ள அடுத்த கருவறையில் ஓங்காரேஸ்வரர் லிங்கம் நிறுவப்பட்டுள்ளது. மேலே செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கடுத்த மூன்றாவது தளத்தில் நாகசந்திரேஸ்வரர் சிலை உள்ளது. அங்கு வணங்குவதற்கு நாகபஞ்சமியன்று மட்டுமே அடியார்கள் அநுமதிக்கப்படுகிறார்கள்.
🛕 கருவறைக்கு மேற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய திசைகளில் பரிவார தெய்வங்களாக பிள்ளையார், பார்வதி, கார்த்திகேயன் பைரவர் மற்றும் நவகிரகங்கள், ஆகிய கடவுளர் உள்ளனர். தென்புறம் ஒரு  அழகிய பளிங்குக்கல் நந்தி சிலையும் உண்டு.

#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️
12.10.2022 
🛕இன்று காலையில் உஜ்ஜியின் சென்று மகாகாலேஸ்வரர் ஆலயம் தரிசனம் செய்தோம்.
🛕ஏற்கனவே இரண்டு முறை  2021ல் சிவராத்திரி அன்றும்,  இவ்வாலயம் உட்பட உஜ்ஜியினியில் உள்ள சில முக்கிய ஆலயங்களை தரிசித்து இருந்தோம்.  ஒவ்வொரு முறையும் நிறைய முன்னேற்றங்கள், பராமரிப்புகள் ஏற்பட்டு வருதையும், பல்வேறு மாற்றங்களையும் காணுகிறோம். 
🛕 பொதுவாக, மத்திய பிரதேச மாநிலத்தின் மிகவும் புகழ் பெற்ற முக்கிய ஆலயமாகவும், பக்தர்கள் பெரும் அளவில் கூடும் ஆலயமாகவும், உள்ளது.

🛕மகாகாளேஸ்வரருக்கு மிகவும் சிறப்பான முறையில் பூசைகளும் வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. இவ்வாலயத்தில், இரவில் நடத்தப்படும் விபூதி அபிஷேக பூசை மிகவும் விஷேசமானது.  ஆலயமும் புதிய பொலிவுடன் உள்ளது.

🛕 மகாகாளேஸ்வரர் ஆலயம் 3 அடுக்கு ஆலயம். கீழ்பகுதியில், மகாகாளேஸ்வரர், நடு பகுதியில் ஒங்காளேஸ்வரர், மேல் பகுதியில் நாகநாதர் என்ற  நாகசந்திரேஸ்வரர்  உள்ளார்கள்.
🛕மகாகாளேஸ்வரர் தரிசிக்க மிக நீண்ட Q வரிசை உண்டு, ஆலயம் பக்தர்களால் பெருங்கூட்டமாக நிறைந்திருந்தாலும், தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
🛕பாதுகாப்பிற்காக இரும்பு குழாய்களால் கொண்டு, அமைக்கப்பட்ட வரிசைமுறை, உள்ளதால் உள்நுழைந்து மகாகாளேஸ்வரர் தரிசனம் செய்து வெளிவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
🛕முதலில், ஆலய வளாக தென்புறம் சென்று அங்குள்ள ஆலயம் உள்நுழைவு பாதைப்பகுதிக்கு சென்றால் சாய்தளப்பாதை இருக்கும். அதன்  வழியே  சற்று அடிப்பகுதிக் சென்று, மகாகாளேஸ்வரர் தரிசனம் செய்ய வேண்டிய தனி வழியில் செல்லவேண்டும். 
🛕 இது கருவரைப் பகுதியின் தென்புறம் உள்ள பெரிய உள் மண்பத்திற்குள் செல்லும். பக்தர்கள் இந்த மண்டபத்திலிருந்து கொண்டு, ஸ்ரீ மகாகாளேஸ்வரரை நன்றாக தரிசிக்கலாம்.
🛕சுவாமியின் கருவரை தென்புறம் பார்த்து அமைந்துள்ளது, சிவலிங்கம் மிகப்பெரியது வழுவழுவழுப்பாக உள்ளது. அபிஷேகம் செய்வதும், விதவிதமான அலங்காரங்கள் செய்யப்படுவதும் பிரமிப்பாய் உள்ளது.

🛕  முன்புறம் அழகிய வெள்ளைக் கருங்கல்லால் ஆன நந்தி ஒன்றும் சுவாமி கருவரை நோக்கிய வண்ணம் உள்ளார்.
🛕சில ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் எல்லோரும் மண்டபத்தில் அமர்ந்து நெடு நேரம் அபிஷேக பூசை அலங்காரங்கள் செய்வதை கண்டுவிட்டு, பிறகு, சுவாமியை கருவரையில் சென்று அருகில் இருந்து தொட்டு அபிஷேகம் செய்ய வாய்ப்புக் கிடைத்தது.  
🛕தற்காலத்தில், பல்வேறு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு நெறிப்படுத்தப்படுவதால், தரிசிக்கச் செல்லும் அனைத்து பக்தர்களையும் கருவரை உள்ளே சென்று வழிபாடு செய்ய அனுமதிப்பதில்லை. தனி பூசை வழிபாட்டுக்  கட்டணம் வசூலிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.
🛕முக்கியமான ஆலயமாக இருப்பதால் மிகப்பெரிய பாதுகாப்பு வசதிகள்  கட்டிடத்தில் உள்ளது. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து மக்கள் கூட்டம், சாரி சாரியாக வந்து வழிபடுகிறார்கள். 

🛕இவருக்கு பால் அபிஷேகம், செய்தும், விதவிதமான அலங்காரங்கள் செய்தும் ஆர்த்தி வழிபாடு நடைபெறுகிறது.  சிறப்பு வழிபாடு செய்பவர்கள் தனி பணம் கட்டி கருவரை உள்ளே சென்று தொட்டும் வணங்குகிறார்கள்.
 
🛕பல நிமிடங்கள் தொடர்ந்து பூசை செய்தும், ஆர்த்தி செய்கிறார்கள்.
மக்கள் குரல் ஒலி எழுப்பியும், கைகளைத் தட்டியும் ஒலி எழுப்புவது வித்தியாசமான வழிபாடு.  கைப்பேசி அனுமதிக்கப்படுவதால் எல்லோரும் கைப்பேசியில் புகைப்படம் எடுப்பதும் மற்ற ஆலய தரிசனங்களிலிருந்து, வித்தியாசமாகத் தோன்றுகிறது.

🛕ஆலயம் உள் செல்லவும், வெளியில் வரவும் தனித்தனி பாதைகள்.

🛕இருப்பினும், நாம் வரிசையில் செல்லும்போது கருவறையை நேரடியாகப் பார்க்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
🛕இது மட்டுமல்லாமல், பல இடங்களில் கருவரையை CCT மூலம் நேரடியாகவே புகைப்படம் எடுத்து, பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி பெட்டிகளின் மூலம் நேரடி யாகக் காணும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது' மிகச்சிறப்பு.
சிவராத்திரியில் பிரமிக்கவைக்கும் வகையில், மிகப்பெருங்கூட்டமும், மிகுந்த பாதுகாப்பும், மற்ற வசதிகளும்  செய்யப்பட்டிருந்தது. 

🛕ஆலயம் வளாகம் சுற்றிலும், தொலைக்காட்சிகள் பல இடங்களில் வைக்கப்பட்டு இருந்தன. அதன் முன் விடியவிடிய பக்தர்கள் கூட்டம்.
ஆலயம் வளாகம் முழுதும் சிறப்பு அலங்காரங்கள்.

🛕ஆலய தரிசனம் சிவராத்திரி சமயத்தில் பல லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவதால், உஜ்ஜியினியின் பாதைகளில் போக்குவரத்து மாற்றங்கள். கடும் நெருக்கடி. எல்லா இடங்களிலும், மக்கள் கூட்டம் மிக மிக அதிகம், 10.03.2021ல் நாங்கள் அனுபவத்தோம்.

🛕இம்முறை, பாரத பிரதமர் வருகை தந்திருந்ததால், ஆலயமும், உஜ்ஜியினியும் மிகச்சிறப்பான முறையில் மலர் அலங்காரம், மின் அலங்காரம் மிக அருமையாக இருந்திருந்தது.
🛕கருவரை கீழ்பகுதியில் உள்ள  ஜோதிர்லிங்கமான  ஸ்ரீ மகாகாளேஸ்வரர் தரிசனம் முடிந்ததும், ஆலயம் மேல்புறம் வந்து நடு கருவறையில் உள்ள ஸ்ரீ ஓம்காரேஸ்வர் தரிசனம் செய்தோம்.
இந்தக் கருவரையின் முன் ஒரு பெரிய கற்றுன்களால் கட்டப்பெற்றுள்ள முன்மண்டபமும், முன் மண்டபத்தில் ஒரு அழகிய நந்தியும் உள்ளது.

🛕மகாகாளேஸ்வரர், பாதாள கருவரையில் உள்ளார்; இவரை தரிசித்தபின் கருவரை மேல் பகுதி வந்து, கூட்டம் நெரிசல் இல்லாமல் ஆலய வளாகத்தில் உள்ள மற்ற சன்னதிகளை தரிசித்தோம்.

🛕 இந்த மூலவர் கருவறையை உள்ளிட்டு வலம் வந்தோம், இந்த மூலக்கருவரைப் பகுதியின் பின்புறத்தில், ஒரு 'பாதாள ' லிங்கம், ஸ்ரீ த்ரிவிஷ்டப்ரஸ்வர் மஹாதேவ் ஆலயம் என்ற மிகப் புராதானமான சிறு சன்னதி உள்ளது.  தவிர, மூலவர் புறப்பகுதிகளிலும், புராதானமான சில சிவலிங்கமூர்த்திகளும், விநாயகர், பெருமாள்,  பைரவர், ஹனுமார், முதலிய தெய்வ சன்னதிகளும் உள்ளன.

🛕இந்த வளாகத்தில்  வடபுறம் சில புராதான சன்னதிகளும், தலவிருட்சமும், ஆலய அலுவலகக் கட்டிடங்களும் உள்ளன. ஆலய வளாகத்தில், ஆலயம் சம்பந்தமான, அர்ச்சனை, பூசைக் கட்டண  அறைகள் உண்டு.  பிரசாதப் பொருட்கள் விற்பனைகளும் நடைபெறுகின்றன.

🛕மூலவர் ஆலயத்தின் முன்புறம் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.

🛕தென் பகுதியில் தனியாக அஷ்ட்டலிங்கள், வைத்தும், நவகிரக பரிகாரலிங்கங்களும்  அமைத்து, பூசைகளும், நடைபெறுகின்றன.

🛕இது அல்லாமல், ஆலய வளாக உட்பகுதியிலே, தென் மேற்குப் பகுதியில்  இரண்டு ஆலயங்கள் ஸ்ரீஅனாதி கல்பேஷ்வரர், ஸ்ரீ காலேஸ்வரர்,  உள்ளன.
இவைகளும், கற்றளிகளால் முன்மண்டபத்துடன் கூடிய உயர அமைப்புக் கோபுர அமைப்புடன் உள்ளது.
மேலும், சிறு சிறு சன்னதிகளில் பல்வேறு ரிஷிகள், முனிவர்கள் வழிபட்ட லிங்கங்களும் உள்ளன.

🛕ஆலய வளாக உட்புறம் பக்தர்கள் அதிகமாக பரவலாக  வழிபாட்டில் இருக்கிறார்கள்.  இருப்பினும், ஆலயம் தூய்மையான பராமரிப்பும், பாதுகாப்பும் கொண்டதாக  விளங்குகிறது.

🛕ஆலயம் முழுதும் தரிசனம் செய்துவிட்டு, ஆலயமேல்புறம் வழியாக வெளியேறும் வழி அமைக்கப்பட்டு உள்ளது. ஆலயப் பகுதி உயரம் இதிலிருந்து இறங்க சாய்தளம் அமைத்துள்ளனர். அதன் வழியாக வெளியே வந்தோம்.

🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼‍♂️🙏

#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#பயண_அனுபவக்_குறிப்புகள் 

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 

#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாகாளேஸ்வரர் #உஜ்ஜியினிஆலயங்கள்
#ஜோதிர்லிங்கம்
#உஜ்ஜியினி , #மத்தியப்பிரதேசம்
🛕#மகாகாலேஸ்வரர்ஆலயம்



No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...