Saturday, December 25, 2021

பருவதமலை 2021 பயணஅனுபவக்குறிப்புகள்

*#ஆகாயத்தில் ஓர் அதிசய ஆலயம்!*
🏔️
*பாவங்கள் போக்கும் #பருவதமலை #மல்லிகார்ஜுனேஸ்வரர்கோவில்!

#பயனஅனுபவக்குறிப்புகள்:
பதிவு : 1

🌺பருவதமலை சிறப்புகளில் ஒரு சில... 

🏞️திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சிவன் தலம் பர்வத மலை. இம்மலை மிகவும் தொன்மையானது. 

🏵️ கைலாயத்திற்குச் சமமானது என்ற பெயர் பெற்றது. இங்கு அருள்மிகு மல்லிகார் ஜுனரும் அன்னை பிரம்மராம்பிகையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிகிறார்கள். 

🏞️பர்வதமலை கடல் மட்டத் திலிருந்து சுமார் நான்காயிரத்து ஐந்நூறு அடி உயரம் கொண்டது. திருவண்ணாமலையைவிட இந்த மலை உயரம். 

🏞️திரிசூலகிரி', "நவிரமலை', "பர்வதமலை' என்று சொல்லப்படும் இந்த மலை, ஏழை களின் கைலாயம் என்று பெயர் பெற்றதற்கு ஏற்ப, மேகக் கூட்டங்கள் அவ்வப்போது கோவிலின்மீது நின்று மெதுவாக நகரும் காட்சி மிகவும் ரம்மியமாக இருக்கும். 

🛕 மலை உச்சி சிவலிங்க வடிவில் அற்புதமாக காட்சியளிக்கும். 

🌠மேலும் இந்த பர்வதமலைக்கு சஞ்சீவிகிரி, மல்லிகார்ஜுன மலை, கந்தமலை, தென் கயிலாயம் என்றும் பல பெயர்கள் உண்டு. 

🏞️*சிவபெருமான் கைலாயத்திலிருந்து அண்ணாமலைக்கு வந்தபோது அவர் தம் முதல் காலடியை பர்வதமலையில் வைத்தாராம். அதனைத் தாங்க முடியாமல் இந்த மலை அழுந்தியதால் தனது இரண்டாவது அடியை திருவண்ணாமலையில் வைத்ததாகச் செவிவழிச் செய்திகள் உள்ளன. 

🏔️இம்மலைப் பகுதியில் அற்புதமான மூலிகைகள் பல உள்ளன. சித்தர் பெருமக்கள் வாழ்ந்த குகைகளும் உள்ளன. அந்தக் குகை களில் தற்போதும் சித்தர் பெருமக்கள் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

🌸ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவி மலையை எடுத்துவரும் போது விழுந்த ஒரு துளி. 7 சடைப்பிரிவுகள் கொண்ட மலை. 

🌼மூலிகை காற்று எப்போதும் வீசும். 

🔥இரவிலே ஜோதி தரிசனம் காணும் மலை. 
🌺சிவன் கருவறையிலிருந்து கோயிலை சுற்றி மலர்கள் வாசனை வரும்.
🌺அம்மன் பேரழகு அம்சம் வேறெங்கும் இல்லாதது.
🔱மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது.
❄️தலைக்கு மேலே மேகம் தவழ்வதைக் காணலாம். 

🏔️கி.பி.3ம் நூற்றாண்டில் மாமன்னர் 
நன்னன் என்னும் அரசன் இங்கு வந்து இறைவனை வணங்கியதாக மலைபடுகடாம் என்னும் நூலில் உள்ளது. 

⚜️அக்காலத்தில், இவ்வாலயம் கட்டப்பட்டு மலைபடிகளும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். 

⚜️இயற்கை சீற்றத்தாலும், அன்னிய படையெடுப்புகளாலும், வழிபாடுகள் குறைந்துபோய், மிகவும் சிதலமடைந்து, பராமரிப்பு இல்லாமல் சென்று விட்டது.

🌼பருவதமலைக்கோவில்
அமைவிடம்: 

போளுர் - கலசப்பாக்கம் - கடலாடி - செங்கம் சாலையில், 
மலை ஏறவும், கிரிவலம் செல்லவும்இரண்டு வழிகள் உண்டு. 

🌸1. தென்மாதிமங்கலம்
என்ற ஊரிலிருந்தும், 

🌺2. கடலாடி என்ற ஊரிலிருக்கும், மெளன யோகி மகான் மடத்திலிருந்தும் 
பயணம் தொடங்கலாம். 

🌟தென்மாதிமங்கலம்:
இவ்வூரில் கிழக்கில் 500 மீ. தூரத்தில் ஒரு பழம்பெரும் புராதான கரை கண்டேஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோவில் சுவாமி அம்பாள் உற்சவர்கள் மார்கழி முதல் நாள் கிரிவலம் செல்கிறார்கள். 

🌄மலைப்பாதை 

*திருவண்ணாமலை மாவட்டம், போளூரிலிருந்து செங்கம் செல்லும் வழியில் தென்மாதி மங்கலம் என்னும் கிராமம் உள்ளது. அங்கிருந்து மலை ஏறத் துவங்கினால் பத்து கிலோமீட்டர் தூரம். 

❄️தென்மாதிமங்கலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் சென்றால் கடலாடி கிராமம் வருகிறது. அங்கிருந்து மலை உச்சிக்கு எட்டு கிலோமீட்டர் தூரம்.* 

தென்மாதிமங்கலம் என்ற கிராமத்தில் மேற்கில் செல்லும் சிறிய சாலைகளின் வழியாக, பருவதமலை அடிவாரம் செல்லலாம்.
அடிவாரத்தில், வாகன நிறுத்துமிட வசதிகள், கழிப்பிட வசதிகள் செய்துள்ளார்கள். ஆலய கட்டிட அலுவலகமும் உள்ளது. 

🛕மலை அடிவாரத்தில் மிகவும் பழமையான பச்சையம்மன் கோவில்... இந்தக் கோவிலின் வெளிப்புறத்தில் சப்த முனிகள் கம்பீரமாக எழுந்தருளியிருக்கிறார்கள். இத்திருக்கோவிலில் பச்சையம்மன் என்ற திருப்பெயரில் அன்னை பார்வதி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்கள். இவரை வணங்கி,
மலையேற்றத்தை துவக்கலாம். 

❄️வனத்துறை சோதனைக்கு பின் பாதை தொடக்கத்தில், நமக்குத் தரிசனம் தருபவர்: ஸ்ரீஹனுமர். சுமார் 10 அடி உயரம் கிழக்கு நோக்கி உள்ளார். 

🛕மலையேறினால் வீரபத்திரர், துர்க்கையம்மன், ரேணுகாதேவி, சப்தகன்னியர் போன்றோரை தரிசிக்கலாம். 

🏔️விசுவாமித்திரர் குன்று என்ற பாறையிலிருந்து மேல்நோக்கிப் பார்த்தால், மலை உச்சியில் உள்ள கோவில் நன்கு தெரியும். மலையில் உள்ள சுனையிலிருந்து பெருகி வரும் நீர்வீழ்ச்சியின் அழகையும் காணலாம். 

🏔️இந்த மலைப் பாதையின் இருபுறமும் இரும்பு கடப்பாறைகள் பாறைக்குள் ஊன்றப்பட்டுள்ளன. அவற்றைப் பிடித்துக் கொண்டுதான் மேலே செல்ல வேண்டும். 

🛕மலை உச்சியில் மெளன யோகி ஆஸ்ரம மடம் ஒன்று உள்ளது. அதனுள் உள்ளே சித்தர் தவம் இருந்த குகைப் பாறை ஒன்றும் உள்ளது. 

🏔️ஆஸ்ரம மடத்தில் அன்னதானம் செய்கிறார்கள் விசடே நாட்களில்,
சாது ஒருவர் மடத்தில் இருந்து வரும் பக்தர்களுக்கு உதவுகிறார். 

🌼பாதி மலைக்கு பிறகு குரங்குகள் தொல்லை மிகவும் அதிகம். கையில் கம்பு இருத்தல் நலம். 

🏵️அதிக சுமை எடுத்து செல்லுவது கடினம். 

🌟பகலில்,வெயில் நேரத்தில், ஏறுவதற்கு சிரமமமாக இருப்பதாலும், குரங்குகள் தொல்லை மிக அதிகம் இருப்பதாலும், பல பக்தர்கள், இரவில் மலை ஏறுகிறார்கள். 

🌟உச்சிப்பாறை செங்குத்தாகவும், மிகக்கடினமான இரும்பு பாரைகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 

🔥மிகவும் கவனம் தேவையே.
பகலில் ஏணியில் ஏறும்போது குரங்குகள் தாவி வருகின்றன. எச்சரிக்கை அவசியம். 

🌼மிகவும் சிரமப்பட்டு ஆபத்தான பாதையில் நடந்து வந்த களைப்பெல்லாம் நீங்கிட மலைமேல் கோவில் கொண்டுள்ள இறைவனும் இறைவியும் அருள்புரிகிறார்கள்.

முதல் பதிவு :

*#ஆகாயத்தில் ஓர் அதிசய ஆலயம்!*
🏔️
*பாவங்கள் போக்கும் #பருவதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில்!* 

#பயனஅனுபவக்குறிப்புகள்:
பதிவு : 2. 

🏔️மலைக்கோவில் : 

🏵️*உச்சி மலைமேல் உள்ள கோவிலில் தனிச் சந்நிதியில் சிவலிங்கமாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ள மல்லிகார்ஜுனரை காரியாண்டிக் கடவுள் என்றும் அழைப்பர். 

🌸மல்லிகார்ஜுனருக்கு இடப்புறம் அன்னை பிரம்மராம்பிகா தனிச் சந்நிதியில் எழுந்தருளியுள்ளாள். சிவன் சந்நிதிக்கு வலப்புறம் உள்ள சிறிய சந்நிதியில் விநாயகப் பெருமா னும் வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியரும் அருள்புரிவதைத் தரிசிக்கலாம். 

💫மலை உச்சியானது சிவலிங்க அமைப்பில் உள்ளதால், அதன் மீது தனி ஆளாக ஏறுவதற்கே மிகுந்த சிரமமாக இருக்கிறது. ஆனாலும், இறையருளால், இப்படி ஒரு ஆலயம் கட்டப்பட்டு வழிபாட்டில் உள்ளது.  
மிக உயரமான, உச்சியின் மீது சிறிய சன்னதிகளுடன் ஒரு முழுக் கோவிலும் கட்டப்பட்டுள்ளது; மிகவும் வியப்பாகவே உள்ளது. 

🌟கோவிலுக்கென்று தனியாக அர்ச்சகர்கள் கிடையாது. 

🌸பூக்களைச் சூட்டி மகிழும் பக்தர்கள், சிவலிங்கத்தைத் தொட்டு வணங்கலாம். அதனால் சிவலிங்கத்தை மறைக்கும் அளவிற்குப் பூக்குவியலுக்குள் இறைவன் உறைந்துள்ளார். கருவறை மிகவும் சிறியதாக இருப்பதால் பக்தர்கள் நெருக்கியடித்துக் கொண்டு தரிசிக்கிறார்கள். 

🔱இங்கு எழுந்தருளியிருக்கும் ஈசனை தேவேந்திரன் பௌர்ணமி நாட்களில் வந்து வழிபடுவதாக நம்பிக்கை. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சிறப்புப் பூஜை நடைபெறும் இந்தக் கோவிலில் யாகங்களும் விடிய விடிய நடைபெறுவது தனிச்சிறப்பு ஆகும். சித்ரா பௌர்ணமி, ஆடிப் பதினெட்டு, ஆடிப் பூரம், புரட்டாசி மாதப் பிறப்பு, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மார்கழி மாதப் பிறப்பு, சிவராத்திரி, பிரதோஷ நாட்கள், பங்குனி உத்திரம் முதலிய சிறப்பு நாட்களில் இக்கோவில் விழாக்கோலம் காணும். 

⚜️பாவங்கள் போக்கும் பர்வதமலை ஈசன் நினைத்ததை நிறைவேற்றித் தருவான் என்பது நம்பிக்கை. இம்மலைக்கு வருபவர்கள் மிகவும் பக்தியுடன் விரதம் கடைப்பிடித்து வருவது நல்லது. 

🛕மலைக்கு வரும் பக்தர்கள் மலைமேல் தங்குவதற்கு இப்போது வசதி உள்ளதால், பௌர்ணமி இரவில் இம்மலை விழாக் கோலம் காணும். 

🌟பர்வத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம், ஆராதனை செய்தால், கீழே தரைமட்டத்தில் வருடம் முழுவதும் பூஜை செய்த பலன் கிட்டும்." 

💫அடிக்கொரு லிங்கம் திருவண்ணாமலை' என்று சொல்வதுபோல், "பிடிக்கொரு லிங்கம் பர்வதமலை' என்பர். இந்த மலையில் அமர்ந்து தியானம் செய்தால் தியானம், ஞானம் கைகூடும்; திரிகால ஞானயோகம் கிட்டும் வாய்ப்பு உண்டு என்பது நம்பிக்கை. 

⚜️வெயிலின் கடுமை குறை யட்டும் என்று காத்திருந்து, மாலை வேளையில் மலை ஏறும் பக்தர்கள் வழி தடுமாறும் நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு உறுதுணையாக பைரவர் (நாய்) முன்னால் நடந்து சென்று வழிகாட்டும் அதிசயத்தை இங்கு காணலாம் என்கிறார்கள் கோவிலுக்கு வந்த பக்தர்கள். 

🔥இம்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது தனிச் சிறப்பினைப் பெறுகிறது. பக்தர்கள் கொண்டு வரும் நெய், நல்லெண் ணெயை பெரிய கொப்பறையில் இட்டு காடா துணியில் பெரிய திரி தயார் செய்து பக்தர் களே சூடம் ஏற்றி, தீபம் ஏற்றுகிறார்கள். மேலும் கோவிலைச் சுற்றி பெரிய அகல் விளக்குகளில் பக்தர்கள் விளக்கு ஏற்றுவதால் தீப ஒளியில் சுவர்க்க லோகம்போல் காட்சி தரும். 

💫கிரிவலம்: 

🏵️தற்காலத்தில், ஸ்ரீகாஞ்சி சங்கராச்சாரியர் இவ்வூர் வந்து மலையைப் பார்த்து அதிசியத்து, இம்மலைக்கோவில் பெருமைகளை மக்களிடம் உணர்த்தியதும், மீண்டும் இம்மலைக் கோவில் பிரபலமடைந்து வருகிறது. 

⚜️ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்தமிழ் மாதமாகிய மார்கழி முதல் தேதியில் இம்மலையை கிரிவலம் சுற்றிவர வேண்டிய ஏற்பாடுகளை முன்னின்று தொடங்கிவைத்தார்கள். 

* திருவண்ணாமலையை கிரிவலம் வரும் தூரம் 14 கிலோமீட்டர். ஆனால், பர்வதமலை கிரிவலப் பாதையின் தூரம் 26 கிலோமீட்டர்.* 

🏵️அடிவாரத்தில் உள்ள, தென்மாதிமங்கலம் கரைகண்டேஸ்வரர் ஆலய சுவாமி இம்மலையை மார்கழி முதல் நாள் கிரிவலம் வருவது தொடர்கிறது. 

🏵️இது இப்போதும் தொடர்ந்து மார்கழி முதல் நாள் பெருங்கூட்டமாக, அருகில் உள்ள எல்லா கிராம மக்களும் கிரிவலம் வருகிறார்கள். அன்று எல்லாப் பகுதி மக்களும் தங்கள் பகுதிகளையும், வீடுகளையும் பக்தர்கள் வலம் வர வசதியாக பெரிய விழாவாகக் கொண்டாடி வருகிறார்கள். 

🔥ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று பர்வத மலையை கிரிவலம் வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. வலம் வர சுமார் ஆறு மணியிலிருந்து எட்டு மணி நேரம் ஆகலாம். 

🌼கடலாடி ஆஸ்ரமத்திலிருந்து சுமார் 4 கி.மீ. வயல் பகுதிகளில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. 

🌸ஆஸ்ரமம் தாண்டி 1 கி.மீ தூரத்தில் ஒரு முனீஸ்வர், பச்சயம்மன் ஆலயம் உண்டு. 

🏵️சுற்றுப்பாதையில் உள்ள சில பழமையான ஆலயங்களும் புனரமைக்கப்பட்டு வருகிறது. 

🔥மலையிலும், கிரிவலப் பாதையிலும் சிலபகுதிகள் சிறிது சிறிதாக பிற மதத்தவர்களால் சிறிது சிறிதாக இடம்பிடித்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதும் உண்மையே. 

🛕பருவத மலையை புனரமைத்து, பொலிவுடனும் இருந்து வருவதற்கும்,
பராமரிப்பதற்காகவும்,
கடலாடியில் உள்ள மகான் மௌன யோகி மடத்தின் அடியார்களும், 

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ஸ்ரீ பருவதமலை அடியார்கள் திருப்பணி சங்கத்தின் மூலம், பக்தர்களின் தொண்டும், பங்களிப்பும் மிகச்சிறப்பானது. 

🛕பருவதமலை மகான் மெளனயோகி மடம்: 

🛕ஸ்ரீவிட்டோபானந்தர் குருஜி தவமிருந்த குகை மலைமேல் உள்ளது.
⚜️மலை அடிவாரத்தில் கடலாடியிலிருந்து 1 கி.மீ.தூரத்தில், ஆசிரமம் அமைந்துள்ளது. 

⚜️இங்கு மலையேறும் பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கிறார்கள். இரவில் இங்கு தங்கிச் செல்லவும் வசதி உண்டு. அன்னதானமும் செய்யப்படுகிறது. 

⚜️மலை உச்சியிலும் ஆஸ்ரம மடம் உள்ளது. தேவையான வசதிகள் செய்து தருகிறார்கள். 

🙇🏼‍♂️🙏🏻மலை ஏறி இறைவனையும் அம்பாளையும் தரிசித்து, கிரிவலம் வந்தால், மறுபடியும் பக்தர்கள் மனம் இறைவனை நாடிச் செல்லும் என்பது மறுக்க முடியாத உண்மை.

🔱திருவல்லிக்கேணியை சேர்ந்த ஸ்ரீ பருவதமலை அடியார்கள் திருப்பணி சங்கம்: 

🌟மேற்படி சங்கத்தைச் சேர்ந்த பக்த அடியர்கள் உதவியினால்,
சுமார் 600 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் சிறப்பாக திருப்பணிகள் செய்து, ஆலயம் பொலிவுற வைத்துள்ளார்கள். 

🔥இத்திருப்பணி வியக்கவைக்கும் முயற்சியாகும். அனைத்துப் பொருள்களும் 4560 அடி உயரமுள்ள மலை உச்சிக்கு தலை சுமையாக எடுத்துச் சென்று தான் இதை செய்தார்கள். இது ஒரு சாதனை முயற்சியாகும். 

🙏🏻🙇🏼‍♂️இதற்காக அவர்கள் எடுத்த முயற்சிகள் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்களும், அப்பகுதி மக்களும் என்றென்றும் நன்றியுடன் நினைவில் கொள்வர்கள்; கொள்ள வேண்டும். 

நன்றி:🙏🏻 

இறையருளால்,
 15, 16 டிசம்பர் 2021 கிரிவலம் வந்தோம்.

இம்மலை பயணம் ஒவ்வொரு முறையும் வெற்றியடைய வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருந்து வரும்,
 அன்பு நன்பர், திரு M. சக்திவேல் அவர்களுக்கு என்றும் நன்றிகள் பலபல .... கோடிகள்.🙏🏻🙇🏼‍♂️🙏🏻

🙏🏻நன்றி
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

முதல் பதிவு :

பதிவு: 2


Sunday, November 21, 2021

உதயப்பூர் - MAHARANA PRATAP SMARK SAMITI பதிவு - 4 SPLENDORS OF INDIA

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#UDAYAPUR
6-09-2021 
பதிவு - 5 - 4
உதயப்பூர்:
#MAHARANA PRATAP SMARAK SAMITI
MOTI NAGAR, UDAIPUR 

மகாராணா பிரதாப் நினைவுச் சின்னம்💥* 

#மஹாராணா பிரதாப் சிங் வரலாறு சில குறிப்புகள் தொடர்ச்சி....

பகுதி - 5
❄️
⚜️🏹யுத்தத்தின் விளைவுகள்:

மொகலாய ராணுவத்தில் குறிப்பிடத்தக்க முறையில் பாதித்தது. எண்ணற்ற முகலாய போர் வீரர்கள் மாண்டனர். பிரதாப் பக்கம் நின்ற சுற்றுப்புற குன்றுகளில் வாழும் பில் பூர்வீக மக்கள் பலமாக அம்புகள் ஏவியதால் மொகலாயப் படையினர் அதிகம் பாதிப்படைந்தனர். அவர்களது பங்களிப்புக்கு மதிப்பளிக்கும் வகையில், ஒரு பில் போர்வீரன் மேவாரில் உள்ள அரசகுடும்ப அணிகல வரிசையில் பிரதாபிற்கு அடுத்ததாக அமர்த்தப்பட்டார். 

⚜️போரின் பின்விளைவுகள் 

👑பிரதாப் ஆரவல்லி மலைத்தொடர் வனப்பகுதிகளில் பின்வாங்கிக் கொண்டு தனது போராட்டத்தைத் தொடர்ந்தார். அவரது ஒரு முயற்சியான நேருக்குநேர் மோதல் தோல்வி கண்டமையால், பிரதாப் கொரில்லாச் சண்டை யுக்திகளை மேற்கொண்டார். தனது குன்றுகளைத் தளமாகப் பயன்படுத்தி, பிரதாப் முகாமிட்டிருந்த மொகலாயப் படையினரை பெருமளவில் அலைக்கழிக்கத் தொடங்கினார்.
அவர் மேவாரில் உள்ள மொகலாயப் படையினர்கள் ஒருபோதும் சமாதானம் காணக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்தார்: அக்பர் மூன்று படைஎழுச்சிகள் நடத்தி பிரதாப்பை மலையில் மறைவிடங்களில் தேடிப்பார்த்துக் கண்டுபிடிக்க முயற்சிகள் செய்தும் பலனளிக்கவில்லை. 

⚜️ஆரவல்லி குன்றுகளில் வாழும் பில் பூர்வீகக் குடிகள் பிரதாப்பிற்கு சண்டைக்காலத்தில் ஆதரவும் மற்றும் சமாதான நாட்களில் காடுகளில் வசிக்க உரிய வழிமுறைகள் கூறியும் உதவி செய்தனர். இவ்விதமாக பல்லாண்டுகள் கழிந்தன. 

பகுதி - 6
⚜️மகாராணாவிடம் அக்பரின் தோல்விகள் 

⚜️அக்பரோ மஹாராணா பிரதாப்பை எதிர்த்து படையெடுப்பு ஒன்றன்பின் ஒன்றாக நடத்திக்கொண்டே இருந்தார், ஆனாலும் ஒருபோதும் அவர் வெற்றி பெறவில்லை. ஏராளமான அளவில் அவர் பணச்செலவு செய்தும் மஹாராணா பிரதாபைத் தோற்கடிக்க முடியவில்லை. முப்பது ஆண்டுகள் மேலாக பிரதாப் அக்பரை விஞ்சியே இருந்தார் மற்றும் அவரது வாழ்க்கையில் கடைசி பத்தாண்டுகள் தனது ராஜ்யத்தின் பெரும்பகுதியை விடுவித்திருந்தார். அவரால் பிடிக்க முடியாதவைகள் சித்தூர் மற்றும் மண்டல் கர்ஷ் இரண்டுமேதான் அவரை அவைகள் அதிகம் வருத்தம் அடையச் செய்தது. 

பகுதி - 7
⚜️மகாராணாவின் இறுதி நாட்கள் 

மஹா ராணா பிரதாப் வேட்டையாடும் பொழுது ஏற்பட்ட விபத்தால் மரணம் அடைந்தார். அவர் சாவண்டில் ஜனவரி 29, 1597, நாளன்று மரணம் அடைந்தார், அப்பொழுது அவருக்கு வயது ஐம்பத்து-ஆறாகும். 

⚜️மரணம் அடையும் தருவாயில் தனது மகன், அமர்சிங்கை அவருக்கு அடுத்த வாரிசாக்கி தொடர்ந்து நிரந்தரமாக மொகலாயர்களுடன் போரிட்டுக்கொண்டே இருக்கும்படி பிரமாணம் எடுத்துக்கொள்ளச் செய்தார். இவ்வாறாக, அவரது சிரமமான சூழ்நிலைகள் அவரது சரிவடைந்த வருடங்களில் அதிகவலுப்பெற வைக்கவில்லை; 
இறுதிவரை துணிச்சலாகவே நிமிர்ந்து இருந்தார். அவர் படுக்கையில் தூங்காமலேயே வாழ்ந்து வந்தார், அக்பரிடம் இருந்து மொத்த ராஜ்ஜியம் மீட்டு கைவரப் பெற்றும் அவரது சபதம் சித்தூரைக் கைப்பற்றும் வரை தரையில்தான் தூங்குவது மற்றும் ஒரு குடிலில் தான் வாழ்வது என்பதைக் காத்து வந்தார். 

⚜️மஹாராணா பிரதாப்பின் மகன், அமர்சிங், மொகலாயர்களுடன் பதினேழு முறைகள் யுத்தங்கள் செய்தார் ஆனாலும் அவர் நிபந்தனையின் பேரில் அவர்களை ஆட்சி யாளர்கள் என்று ஒப்புக்கொண்டிருந்தார். 

⚜️அந்த நேரத்தில், மகாராணா பிரதாப்பின் நம்பகத்துக்குரிய ராஜபுத்திரர்கள் சரணடைதல் என்ற மாயையில் இருந்து விடுபட்டு ராஜஸ்தானில் இருந்தே வெளியேறினர். அவர்கள் "ரோர்கள்" என்று அழைக்கப்படுவர் ஹரியானாவில் குடியமர்ந்தனர், ஒருசிலர் மட்டுமே உத்திர பிரதேசத்தில் இடம்பெயர்ந்தனர். இன்றைய தினம் கூட, அவர்கள் பிற ராஜபுத்திரர்களுடன் மணம்புரிந்து கொள்வது கிடையாது. 

பகுதி- 8 

இந்திய சுதந்திரத்திற்குப் பின்... 

⚜️இந்தியாவின் சுதந்திரம் 1947இல், பெற்றதைத் தொடர்ந்து, மகாராணா பூபால்சிங் (பதவிக் காலம் 1930-1955) என்பவர் மகாராஜ் பிரமுக் ராஜஸ்தான் மாநில (~ ஆளுநர் ) 1952-1955 –அந்த பதவி இந்தியக் குடியரசு மேவாருக்காக ஏற்படுத்தியுள்ளது. 

⚜️மகாராணா பூபால்சிங் தான் முதன்முதல் தனது மாநிலத்தை சுதந்திர இந்தியாவுடன் (18 ஏப்ரல், 1948)இணைத்துக் கொண்ட மன்னராவார். 

⚜️இந்தியாவின் முதல் யூனியன் உள்துறை அமைச்சர் (லோஹ் புருஷ் - இரும்பு மனிதர்) சர்தார் வல்லபாய் படேல் யூனியனில் சேரத் தயங்கிய ஹைதராபாத் மற்றும் பிற மாகாணங்களை வன்மையாகக் கடிந்துரைக்கும் கண்டனம் தெரிவித்துக் கூறினார்,:
"இந்தியாவில் எந்த ஒரு சுதேச சமஸ்தானம் சுதந்திரம் கோரும் உரிமை பெற்று உள்ளது என்றால் அது மேவார் ஒன்றுதான், ஆனால் அதுவோ சந்தோஷமாகவும், சம்மதமாகவும் இந்திய தேச யூனியனுடன் சேர்ந்து கொள்ள விரும்புகின்றது, அதன் கூற்றுப்படி, அவர்களின் பதிமூன்று நூற்றாண்டுகள் மேற்கொண்ட தூதுக்குழுவின் முயற்சிகள் முழுப்பலன் தந்துள்ளது...மேவாரைத் தவிர்த்து மற்ற எந்த ஒரு சுதேச சமஸ்தான மன்னர்களுக்கு உரிமையேதும் கிடையாது..." 

⚜️சுதந்திரம் பெற்ற பிற்காலத்தில் கூட, இந்தியாவின் பொதுமக்கள், இந்தியாவின் ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகள், மற்றும் அரசியல் வாதிகள் யாவரும், எவ்வகையிலும் பிரதிபலன் எதிர்பாராமல் மேவாருக்கு மதிப்பும், மரியாதையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வந்தனர். 

⚜️மேலும் குறிப்பிடத்தக்க இந்திய சுதந்திரப் போராளியும், யூனியன் அமைச்சரும் மற்றும் பாரதிய வித்யா பவன் நிறுவனரும், நவீன காலத்து இந்தியாவின் பெருமைக்குரிய மனிதர்களில் ஒருவருமான, கே.எம். முன்ஷி (1887-1971) எழுதியுள்ளதாவது, "மேவாரின் மகாராணாக்கள் ஹிந்துப் பண்பாடு மற்றும் ஆட்சிஅமைப்பு ஒழுங்கு இரண்டையும் சிறப்பாகவும், உயர்குடிப்பிறப்பாகவும் வெளிப்படுத்திக் காட்டினார்கள். ராம்ராஜ்ஜியம் என்பதன் புராணியக் கோட்பாட்டை நடைமுறையில் அமுல்படுத்தி வைத்தார்கள். 

பகுதி - 9
மகாராணாவின் சிறப்புகள் 

👑மஹாராணா பிரதாப் ஒருபெரும் நாயகனாக இந்தியர்களின் பார்வையில் விளங்குகிறார், அவர்தன் மக்களால் அதிகம் மதிப்பும் மற்றும் அன்பும் செலுத்தப் படுகின்றவராகவே விளங்குகிறார். இந்து வரலாற்றில் ஒரு இருளான அத்தியாயத்தில், பிரதாப் மட்டுமே தன் கெளரவம் மற்றும் கண்ணியம் கருதி தன்னந்தனியானாக உறுதிபட நின்றார்; தனது கௌரவத்தை சுயபாதுகாப்பிற்காக ஒருபோதும் அவர் விட்டுக்கொடுத்ததே இல்லை. அவர் ஒரு பெருமைக்குரிய மற்றும் சுதந்திரமான மனிதராகவே இறந்தார். 

⚜️மஹாராண பிரதாப் இந்தியாவில் மிகுந்த உயர்வான மதிப்பு கொண்டவராகவும் மற்றும் தேசப்பற்று மற்றும் சுதந்திரப்போர் மொகலாய ஆட்சியைத் துணிந்து எதிர்த்து நிகழ்த்தியதில் ஒரு முன்மாதிரியாகவும் சித்திரிக்கப்பட்டுக் கொண்டு வரப்படுகின்றார். 

⚜️பிரதாப் மற்றும் சேடக் பெயர்கள், அப்பொலிகுதிரை, யாவுமே பிரசித்திப் பெற்றதாகும் மற்றும் இந்தியக் குடியரசு அரசாங்கம் அவைகளின் நினைவாக தபால் தலைகள் (1967, 1998) மற்றும் நாணயங்கள் (2003) வெளியிட்டு இந்தியாவின் மிகப்பெரும் மகனாரை கௌரவப்படுத்தியது. 

⚜️நன்றியோடு நாடானது, சேடக் மீது ஏறி உள்ள பிரதாப்பின் சிலையை அவரது கூட்டுப் பணியாளர்களான-ஜ்ஹல மான், பிலு ராஜா (மலைவாழ் மக்கள் முதல்வன்), பாமா ஷா, ஹக்கீம் கான் சூர், மற்றும் ஒரு காலாட்படை-வீர-சேவகன் அனைவரது சிலைகளுடன் புது டெல்லியில் பாராளுமன்ற இல்லத்தின் முன்னால் ஆகஸ்ட் 21, 2007இல் நிறுவி அஞ்சலிசெலுத்தி வருகின்றது 

பகுதி - 10.

#மோடிமக்ரி | #மோடிமகால் | #முத்துமலை 

⚜️மஹாராணா பிரதாப்பின் வெண்கலச் சிலை மற்றும் அவரது விருப்பமான, உண்மையான புரவி, வீரமாகப் போராடி தனது எஜமானைக் காத்து வந்ததாலும் உயிர்பிரியும் வரை உடன் இருந்ததாலும், மோடி மக்ரியின் உச்சியில் (முத்து மலை) பதெஹ் சாகரில் கம்பீரமான குதிரைச் சிலையும் உள்ளது. 

⚜️உள்ளூர் மக்கள் அந்தக் குன்றின்மீது ஏறிச் சென்று மஹா ராணா பிரதாபிற்கும் மற்றும் அவரது உண்மையான புரவி 'சேடக்'கிற்கும் அது ஹல்டிகாடி யுத்தத்தில் கொல்லப் பட்டதால் அதற்கும் சேர்த்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

⚜️அங்கே மேலும் முதல் உதய்புரின் அமைதியான அரண்மனையின் சிதலங்கள் காணலாம். 

⚜️மற்றும் ஓர் அழகான ஜப்பானிய பாறைத் தோட்டம் ஒன்று அதிக தூரம் இல்லாமல் அமைந்துள்ளது. 

⚜️அந்த நினைவகமானது முதல்ஒளி மற்றும் ஓலிஅமைப்பு ஏற்படுத்தப்பட்டு ராஜஸ்தானில், மேவாரின் 1400 வருடங்களான கீர்த்திமிகு வரலாற்றை பறைசாற்றிக் கொண்டு வருகின்றது. 

நன்றி:🙏
⚛️தகவல்கள் உதவி:✍️📚📝🇳🇪
wikipedia, மற்றும் பல வலை தள பதிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது) 

🌼#பயணஅனுபவக்குறிப்புகள் 2. 

❄️மலைக்கு செல்லுமுன், உதயப்பூர் ஏரி மற்றும் படகுத்துறையும் அமைந்துள்ளது. 

❄️படகுத்துறைக்கு எதிரில் நினைவகம் செல்லும் முன்வாசல் உள்ளது. தனி நுழைவுக் கட்டணம் செலுத்தி மேலே செல்ல வேண்டும். வாகனத்திற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும். 

❄️நடந்தோ Auto விலோ, செல்லலாம். 

❄️நினைவிடம் முன் பகுதியில்
சேடக் மீது ஏறி உள்ள பிரதாப்பின் சிலையை அவரது கூட்டுப் பணியாளர்களான-ஜ்ஹல மான், பிலு ராஜா (மலைவாழ் மக்கள் முதல்வன்), பாமாஷா, ஹக்கீம் கான் சூர், மற்றும் ஒரு காலாட்படை-வீர-சேவகன் அனைவரது சிலைகளுடன் அமைத்துள்ளது மிக அருமையாக உள்ளது. 

❄️நினைவிடம் மிக அருமையாக அமைத்துள்ளார்கள்.
நினைவகத்தில் மஹாராணா பிரதாப் வரலாறு, மற்றும், புகழ்பெற்ற ராஜபுத்ர அரசர்கள் பற்றிய குறிப்புகள் படங்களுடன், விளக்கத்துடன், அழகாக, அமைத்துள்ளனர். 

❄️அரசர் காலத்தில் இருந்தவாறு, அளவில் மேவார் ராஜ்யப்பிரதேசம் முழுமையாக, ராணவின் ஆளுமைக்குட்பட்ட கோட்டைகள், மலைகள் வடிவமைப்பு செய்து வைத்திருக்கின்றார்கள். 

❄️சன்டை நடந்தஹல்டிகாடி போர் காட்சிகள் மிக அருமையாக, நுனுக்கமாக அமைத்துள்ளது சிறப்பு. 

❄️சித்தூர் கோட்டை, உதயப்பூர் அரண்மனை இவைகளையும் மிக அற்புதமாக அமைத்துள்ளார்கள். 

❄️அக்கால ஆயுதங்கள், கவசஉடைகள், வரலாற்று படங்கள் பொக்கிஷம் போல பாதுகாப்புடனும், விளக்க உரைகளுடனும் வைத்துள்ளனர். 

❄️உதயப்பூரில் மலைமீது உள்ள மஹாராணா பிரதாப் நிணைவிடத்திருந்து சற்று உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. Auto, Car, bus ல் செல்லலாம், நடந்தும் செல்ல முடியும். 

❄️சிறிய பாதையும் உள்ளது. உச்சியில் சிதலமடைந்த அரன்மனையின் மிச்சங்கள் உள்ளன. வந்து வழிபட்டு செல்கிறார்கள். 

❄️சிறிய தோட்டம் தனியாக உள்ளது. 

❄️மஹாராணாவின் வெற்றிக்குத் துணை செய்தவர்களுக்கும் தனித்தனி சிலைகளும் வைத்து சிறப்பு செய்துள்ளார்கள். 

❄️தற்போது ஒலி ஒளி காட்சி நடத்தப்படுவதில்லை.

❄️இந்த இடம் பார்த்து விட்டு மலையிலிருந்து கீழே இறங்கி, எதிரில் உள்ள போட்House சென்று பார்த்தோம். சிலர் போட்டில் ஏறி அந்தப் பெரிய ஏரியில் சற்று நேரம் உலா வந்தார்கள். 

❄️இதன் பின் நாங்கள் ரயில்வே ஸ்டேஷன் சென்றோம் குஜராத்தில் உள்ள படேல் சிலை பார்க்க, KEVADIA செல்ல ஆயத்தமானோம்😀

நன்றி🙏🏻
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

பதிவு : 1
https://m.facebook.com/story.php?story_fbid=6563865670355301&id=100001957991710
பதிவு : 2
https://m.facebook.com/story.php?story_fbid=6563885047020030&id=100001957991710
பதிவு : 3
https://m.facebook.com/story.php?story_fbid=6569184126490122&id=100001957991710

உதயப்பூர் - MAHARANA PRATAP SMARK SAMITI பதிவு - 3 SPLENDORS OF INDIA

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#UDAYAPUR
6-09-2021 
பதிவு - 5 - 3
உதயப்பூர்:
#MAHARANA PRATAP SMARAK SAMITI
MOTI NAGAR, UDAIPUR 

மகாராணா பிரதாப் நினைவுச் சின்னம்💥* 

#மஹாராணா பிரதாப் சிங் வரலாறு சில குறிப்புகள் தொடர்ச்சி....

பகுதி - 3.
⚜️⚔️ஹல்டிகாட் போர்: 

⚜️ஹல்டிகாட் யுத்தம் மொகலாயர்களிடம் ஒரு முதல் யுத்தமாகும், 1527 ஆம் ஆண்டில், இரண்டாம் கான்வா யுத்தமும் ராஜபுத்திரர்களுக்குச் சாதகமாக அமைந்தது, அந்த இரண்டாம் கான்வா யுத்தம் மஹாராணா பிரதாப்பின் பாட்டனர் ராணா சங்காவிற்கும், அக்பரின் பாட்டனார் பாபருக்கும் இடையே நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். பல ராஜபுத்திர குடும்பங்களில் இந்த யுத்தம் ஒரு குறிப்பிடத்தக்க முறையில் பெருமையாகக் கருதப்படுகிறது. 

👑மஹாராணா பிரதாபை, அம்பரின் குன்வர் (இளவரசர்) மான்சிங், மொகாலய பேரரசர் அக்பரின் தூதுவராகச் சந்தித்து, வீம்பு முனைப்பாக இல்லாமல், மஹாராணா பிரதாப்பை உடன்படிக்கைக் குறிப்புகளைக் கைவிட்டு, அவருக்கு மதிப்பளிக்க விருந்தில் வந்து கலந்துகொள்ள வற்புறுத்தினார். 

⚜️ பிரதாப் மற்றும் மான்சிங் இருவரும் ஒரேதலைமுறையைச் சார்ந்தவர்களாவர், ஆனால் பிரதாப் அரசராகிட மான்சிங் இளவரசானார். பிரதாப், உடன்படிக்கைக் குறிப்புகள் பின்பற்றி, தனது மகன் குன்வர் அமர்சிங்கை அந்த விருந்தில் அக்பரின் தூதுவராக வந்த குன்வர் மான்சிங்குடன் பங்கேற்கச் செய்தார். இந்த நிகழ்ச்சி மொகல்-மேவார் முரண்பாட்டை மேலும் அதிகப்படுத்தியது. 

⚜️மான்சிங் ஒரு குன்வராக இருந்தமையால், அவரது தந்தை ராஜா பகவன்தாஸ் மற்றுமொருமுறை ஒரு சமாதானத் தூதுக்குழுவை நடத்தித் தோல்வி கண்டார், அக்டோபர் 1573இல் நடந்த நிகழ்வில் ராணா பிரதாப் உடன் இருந்தார். 

👑ஜூன் 21, 1576 தேதி இரண்டு ( மொகல்-மேவார்) படைகளும் ஹல்டிகாட்டில் சந்தித்தன. 

⚜️மொகலாயப் படைகள் அதிக அளவில் பிரதாப்பின் வீரர்களைக் காட்டிலும் விஞ்சி இருந்தன. ஹல்டிகாடி யுத்தம், ஒரு பெரும் வரலாற்று நிகழ்ச்சியாகும். 

👑பிரதாபின் வீரர்கள் பலதுணிகர சாகசங்களை களத்தில் நிகழ்த்திக் காட்டினார்கள். பிரதாப் தனியாக மான்சிங்கைத் தாக்கினார்: அவரது சேட்டக் குதிரை தனது முன்னங்காலை மான்சிங்கின் யானையின் மீது வைத்தது மற்றும் பிரதாப் தனது ஈட்டியை எறியும் சமயம் மான்சிங் திடுமெனக் குனிந்து தலைதாழ்த்தியதால், பாகன் இறந்தார்.
எனினும், மொகலாயப் படையின் எண்ணிக்கை மேம்பாடும், மற்றும் அவர்களது பீரங்கிப்படையும் போர்க்களத்தில் விஞ்சியது. 

பகுதி - 4

மகாராணாவிற்கு உதவியாக இருந்தவர்கள்: 

1. படைத்தலைவர்: ஜால மான்சிங்: 

⚜️மஹாராணா பிரதாப் காயம் அடைந்தார். வாள், ஈட்டி, மற்றும் துப்பாக்கிக் குண்டு ஆகிய மூன்றினால் காயங்கள் ஏற்பட்டது. பிரதாபின் தளபதிகள் களத்தை விட்டு அவரை ஓடிவிட வற்புறுத்தினார்கள் (அப்பொழுது தான் அவரால் மீண்டும் போர் தொடுக்க இயலும்.) புராணக் கதைகளின்படி, பிரதாப் தப்பிச் செல்வதை வசதிப்படுத்த,
அவரது படைத்தலைவர்களில் ஒருவர்,
ஜால மான்சிங், அச்சமயம் பிரதாப்பின் அங்கி, மகுடம், மற்றும் ராஜ முத்திரைச் சின்னங்கள் யாவையும் களைந்து அவைகளை தானே அணிந்து கொண்டு தான் தான் பிரதாப் என்று மொகலாயப் படைகளை நம்பவைத்து அவர்களின் தாக்குதல்கள் எதிர்கொண்டார். இறுதியாக அவர் தன இன்னுயிர் பிரதாபிற்காகவும் மற்றும் நாட்டு விடுதலைக்காகவும் நீத்து அரிய தியாகம் புரிந்தார். 

(இந்த தியாகத்தினால்தான் பிரதாப் தொடர்ந்து மொகலாயர்களுடன் போரிட்டு மேவாரை மீட்டு, சித்தூர் நீங்கலாக, மீண்டும் தன்ஆட்சியை நிலைநாட்ட முடிந்தது) 

2. சேத்தக்:
⚜️🐴🎠இதற்கிடையில், தனது நம்பகமான குதிரை சேத்தக் மீது சவாரி செய்து, பிரதாப் குன்றுகள் நோக்கி தப்பிச் சென்றார். ஆனால் சேத்தக் தனது இடது தொடையில் ஒரு மர்தானா மூலம் (யானைத் தும்பிக்கையில் உள்ள உறைவாள்) பிரதாப் மான் சிங்கைத் தாக்க முற்படும் போது ஆபத்தான காயம் ஏற்பட்டது. அதிகக் குருதி வெளிவரவே சேடக் ஒரு சிற்றோடையைத் தாண்டும் பொழுது அதுவும் போர்க்களத்தில் சில கிலோ மீட்டர்கள் தூரத்தில் இறந்து போனது. 

⚜️🦄சேத்தக்
கத்தியவார் பகுதியின் வெள்ளை நிறக் குதிரையாகும். (இந்திய இனம் சார்ந்த திணைத் தோன்றலாகும்) அது குள்ளமான கழுத்து, அடர்ந்து செறிந்த முடிகொண்ட வால், குறுகலான முதுகு, பெரிய விழிகள், கட்டு மஸ்தான தோள்கள், அகன்ற நெற்றி மற்றும் பரந்த நெஞ்சம் கொண்டதாகும். மேலும் பார்வைக்கு வனப்பு மிகுந்ததாகவும், செய்யுள் நடையில் புனிதமாகவும் அது கருதப்பட்டு வந்தது, இப்புரவி ஒரு சமச்சீரான தசைநார் கொண்ட உடலமைப்பு அதற்கு கவர்ச்சிகரமான தோற்றத்தை அளித்தது, அதனுடைய "பறக்கும்" பாதங்கள் அதற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
அதுபற்றி மேலும் விளக்குகையில் ஓர் அபூர்வமான, துல்லியமான நுண்ணறிவு படைத்தது என்றும், மேலும் கட்டுப்பாடு மற்றும் துணிவு இரண்டும் ஒருசேர பெற்றதென்பதும், தனது எஜமானிடம் பின்வாங்காத நம்பகமும் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

🦄சேடக், மகாராணா பிரதாபின் குதிரை, ஹல்டிகாட் போர்முனையில் கருணைமறம் (வீரம்) காட்டி இறந்த தருணம், அவர் கூக்குரலிட்டு மற்றும் அவரது கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்தார். 

⚜️🐴🦄சேடக்கிற்காக ஒரு கல்லறை மாடம் அதன் மரணமுற்ற அதே இடத்தில் அதன்நினைவாக அமைத்தது. 

3. சகோதரர் ஷக்தி சிங்:
⚜️🦄பிரதாப்பின் படைத்தலைவன் அவர் போல உடையும் ஆயுதமும் தரித்து இடமாற்றம் செய்தது யுத்தத்தில் குழப்பங்களிடையே கண்டுகொள்ள முடியாமல் போனது, ஆனாலும் மொகலாயப் படையில் இரண்டு துருக்கிய வீரர்கள் மட்டும் உண்மையையைக் அறிந்துகொண்டனர். அவர்கள் குழுவில் அதை மற்றவர்களிடம் கூற முடியவில்லை, ஏனெனில் மொழி பேசுவதில் உள்ள தடையே (பாரசீகம், மார்வாரி, அல்லது அரபி மொழிகள் மட்டுமே மொகலாயப் படையில் வழக்கத்தில் இருந்தன). ஆயினும் அவர்கள் பிரதாபைப் நேரத்தை வீணாக்காமல் பின்தொடர்ந்தனர். அவர்கள் பிரதாபைப் பின்தொடர்ந்த தருணம், அவரது இளைய சகோதரர், ஷக்திசிங், அதாவது அவர் மொகலாயர் பக்கமாக இருந்து போரிடுபவர், (பிரதாப் முடிசூட்டு விழாவில் அவருடன் ஏற்பட்ட சச்சரவால் அக்பர் பக்கம் கட்சி மாறியவர்) அந்த நேரம் தனது சொந்த சகோதரர் ஆபத்தில் சிக்கியுள்ளதை உணர்ந்தார். 

👑பிரதாபின் படைத்தலைவர் அவருக்காக உயிர் துறந்ததை அவர் கண்டார். அவரால் உதவ முடியவில்லை எனினும் அவர் தனது சொந்த சகோதரர் ஆபத்தில் உள்ளதை அறிந்து உடனடியாகச் செயல்படத் தொடங்கினார். அவர் அந்த துருக்கியர்களுடன் ஒற்றை ஆளாகப் போரிட்டு, அவர்களைக் கொன்றார். 

👑இதற்கிடையில், சேடக் மரணமடைந்தது மற்றும் பிரதாப் தனது சகோதரர் ஷக்திசிங், அந்த இரு மொகலாய குதிரை வீரர்களைக் கொல்வதை நேரில் கண்டார். தனது அன்பிற்கினிய படைத்தலைவன் மற்றும் குதிரை இரண்டின் இழப்பால் துக்கமுற்ற பிரதாப், தனது சகோதரரைக் கண்ணீர் மல்கக் கட்டித் தழுவினார். சக்திசிங் கூவி அழுது தனது சகோதரரின் எதிரியாக மாறியதற்கு மன்னிப்பைக் கோரினார். பிரதாப் அவரை மன்னித்தருளினார் (பின்னாளில் அவருக்கு சித்தூர் அருகே ஒரு பெரிய பண்ணைத் தோட்டத்தை வழங்கினார்). சக்திசிங் அதன்பின் தனது குதிரையை சகோதரருக்கு அளித்து ஒரு பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல தயவுடன் கேட்டுக்கொண்டார். 

4. 👑பாமா ஷா (அல்லது பாமாஷா) 

👑பாமாஷா மேவாரின் வரலாற்றில் ஓர் அடையாளம் ஏற்படுத்தியர் ஆவார். 450 ஆண்டுகள் முன்னதாக, பார்மல் கவாடியாவின் மகனாகபிறந்த அவர் நேர்மை, திட நம்பிக்கை, மற்றும் கடமை உணர்வு மூன்றிலும் சீரிய எடுத்துக் காட்டாக விளங்கினார். 

👑அவர் பிரதாபின் பொருளாளர் மட்டுமல்ல, ஒரு வீரனாகி தேவை ஏற்படும் போது போரிட்டவரும் ஆவார். மகாராணா பிரதாப் பன்னிரண்டு வருடங்களாக 25,000 வீரர்கள் அடங்கிய ஒரு படையை நன்கு பராமரித்து வந்ததற்கு உகந்த காரணம், பாமாஷா தனது சொத்தை நன்கொடையாக அளித்தது மட்டுமல்ல, இருபத்தைந்து லட்சம் ரூபாய் நிதிஉதவி, மற்றும் இருபதாயிரம் தங்கக் காசுகள் மால்புராவிலிருந்து தொகையாக வழங்கியதும் ஆகும். மேலும் பாமாஷா மஹாராணா அமர்சிங்கிடமும் பணிபுரிந்தவர் ஆவார். அதன்பிறகு அவரது மகன் ஜீவ் ஷா மஹாராணாவின் பொருளாளர் ஆனார். அவர் மரணம் அடைந்த வேளையில் பாமா ஷா தனது மனைவியிடம் அரசரின் பொக்கிஷ விபரங்கள் அடங்கிய விளக்கமான பதிவேடுகளை மஹாராணா அமர்சிங் வசம் ஒப்படைக்கக் கேட்டுக்கொண்ட பிறகே விண்ணுலகு ஏய்தினார். 

5. படைத் தலைவர்
👑ஹக்கீம் கான் சூர் பதான் 

👑ஹக்கீம் கான் சூர் பதான் ஆப்கன் ஷெர் ஷா சூரி வம்சாவளியைச் சார்ந்தவராவார். அவர் தனது முன்னோர்களின் வீழ்ச்சியை முன்னிட்டு அதற்குக் காரணமான மொகலாயர்களை பழி வாங்க பிரதாபுடன் சேர்ந்தார். 

⚜️மொகலாயர்கள் திட்டமிட்டு பல கோவில்களை அழித்தார்கள். 
பிரதாப்பும் மற்ற ராஜபுத்திரர்களும் தங்கள் மதம் காத்திடவே போரிட்டனர். ராஜபுத்திரப் படைகளில் சில முஸ்லிம் கூலிப்படையினர் இருந்ததும், மொகலாயர்களோடு உள்ள முரண்பாடும், ஹிந்து மதம் காப்பதற்காக அல்ல என்பது நன்கு புலனாகும்.

தொடருகிறது .....
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

பதிவு : 1
https://m.facebook.com/story.php?story_fbid=6563865670355301&id=100001957991710
பதிவு : 2
https://m.facebook.com/story.php?story_fbid=6563885047020030&id=100001957991710

உதயப்பூர் MAHARANA PRATAP SMARAK SAMITI பதிவு - 2 SPLENDORSOFINDIA 6.9.2021

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#UDAYAPUR
6-09-2021 
பதிவு - 5 - 2
உதயப்பூர்:
#MAHARANA PRATAP SMARAK SAMITI
MOTI NAGAR, UDAIPUR 

மகாராணா பிரதாப் நினைவுச் சின்னம்💥* 

#மஹாராணா பிரதாப் சிங் வரலாறு சில குறிப்புகள் தொடர்ச்சி....

பகுதி - 2 

மகாராணா பிரதாப்பும், மொகலாய அரசர் அக்பரும் 

⚜️மஹாராணா பிரதாப் அக்பரை இந்தியாவின் அரசராக ஒருபோதும் மனதார ஏற்றுக் கொள்ளவில்லை, மற்றும் தனது வாழ்நாள் முழுதும் அக்பரை எதிர்த்துக் கொண்டே வாழ்ந்தார். 

⚜️ அக்பர் முதலில் ராஜதந்திர முறையில் மஹாராணா பிரதாப் சிங்கை ஈர்க்க முயன்றார் ஆனாலும் எதுவும் பலன்தரவில்லை. பிரதாப் அக்பரோடு போரிடுகின்ற நோக்கம் தனக்கில்லை என்ற நிலையில் நின்றாலும், அவரிடம் தலைதாழ்ந்து நிற்கவும் மற்றும் அவரை அரசராக ஏற்கவும் விரும்பவில்லை. 

⚜️சித்தூர் கோட்டை முற்றுகையின் போது, 27,000 பெண்கள் கூட்டுத் தீக்குளிப்பு செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டது, அவரது மனதை உறுத்தியது. இது மஹாராணாவின் மனதில் ஓர் ஆழமான வடுவை ஏற்படுத்தியதால் அவர் அத்தகைய அநீதிக்கும் மற்றும் கொடுமைக்கும் ஒத்துப்போக மறுத்தார். 

👑மொகலாயர்களின் சூழ்ச்சியினால் அவர்களின் நல்லாதரவு பெற ஏற்ற வழியாகக் கருதிக் கொண்டு, பல
ராஜபுத்திர அரசர்கள் தங்கள் மகள்களை திருமணம் செய்விப்பதை பிரதாப் தடுத்து நிறுத்தினார். 

👑இந்த சபலத்தில் இருந்து மீள முடியாத வகையில் ராஜஸ்தான் சிறுபான்மை முதல்வர்கள் அடிமைகளாக, குடியாண்மை ஊழியம் கொண்டவர்களாக டெல்லியின் கீழ்பணியும் சத்திரபதிகள் ஆக மாறினார்கள் 

⚜️மொகலாயர்களுக்கு தங்களது பெண்களை கொடுப்பது என்ற திருமண கொள்கை மேற்கொண்டதால் ராஜபுத்திரர்களுக்கு இடையே, நூறு வருடங்களுக்கு மேலாக ஒற்றுமை இல்லாத ஓர் நிலைமையை உருவாகிவிட்டது. 

👑இப்படி ராஜஸ்தான் இளவரசர்கள் பாரபட்சமாக, முகலாயர்களுக்கு கீழ் படிந்தமைக்காக, ராணா பிரதாப் அவர்களுடன் கூடிய உறவுகளை முறித்தார். மார்வார் மற்றும் அம்பர் போன்ற சகோதர இளவரசர்கள் செய்த உறவினையும் ஏற்கவில்லை. 

👑இவர்கள் யாவரும் பிரதாப்பைக் கண்டு பயந்தார்கள். போர் வீரர்கள் வெகுண்டு எழுந்தார்கள், தன் மானக் குறைவு அவர்களை வாட்டி எடுத்தது, ஆனால் அவரைப் போல் துணிந்து செயல்பட மனோதைரியம் இடம் கொடுக்காததால் அவர்கள் வெறுப்பும் கோபமும் கொண்டு, பொறாமையால் செயலிழந்து நின்றார்கள். 
🌼
⚜️🏤சித்தூர் கோட்டை, பிரதாப்பின் பூர்வீக இல்லமாகும், அது மொகலாயர் வசமிருந்தது. சித்தூரைக் கைப்பற்றும் கனவை (மற்றும் அதனால் மேவாரின் கீர்த்தியை மீட்பது) பிரதாப், நனவாக்குவதே லட்சியமாகக் கொண்டிருந்தார். அவரது எதிர்கால முயற்சிகள் இந்த இலக்கை நோக்கியே அமைந்திருந்தது. 

👑ஏறத்தாழ பிரதாப்பின் சகராஜபுத்திர முதல்வர்கள் மொகலாயர்களுடன் குடியாண்மை ஊழியம் மேற்கொள்ள ஒப்புக்கொண்டனர் பிரதாப்பின் சொந்த சகோதரர்களான, சக்திசிங் மற்றும் சாகர் சிங், இருவரும் அக்பருக்குப் பணிபுரிந்தனர். 

⚜️ உண்மையில், பல ராஜபுத்திர முதல்வர்கள், உதாரணம், அம்பரின் முதல்வர் மான் சிங் போன்றோர் (பின்னாளில் அம்பர் ஜெய்பூர் என்றானது) அக்பரின் படைகளில் தளபதிகளாக பணியாற்றினார்கள் மற்றும் ராஜா தோடர்மால் போன்றவர்கள் அவரது அவையில் நிதிஅமைச்சராக இடம்பெற்றிருந்தனர். 

⚜️அக்பர் மொத்தத்தில் ஆறு ராஜதந்திர தூதுக்குழுக்கள் அனுப்பி, சமாதான உடன்பாடு எப்படி பிற ராஜபுத்திரர்கள் செய்து கொண்டனரோ அதேபோல் பிரதாப்பையும் செய்து கொள்ள வலியுறித்தினார். பிரதாப் ஒவ்வொரு முறையும் முழுக்கமுழுக்க மறுதலித்தார், அதன்மூலம் தனது தற்பெருமையை வெளிப்படுத்தினார். 

⚜️புதிய தலைநகர்-உதய்பூர் உருவாக, மஹாராணா உதய்சிங் ஒரு நீர்த்தேக்கம்-உதய்சாகர் எனும் பெயரில் 1565 ஆம் ஆண்டில், கட்டிமுடித்தார். '

தொடரும்....
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

சென்ற பதிவு:
https://m.facebook.com/story.php?story_fbid=6563865670355301&id=100001957991710

உதயப்பூர் MAHARANA PRATAP SMARAK SAMITI பதிவு - 1 SPLENDORS OF INDIA 6.9.2021

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#UDAYAPUR
6-09-2021 
பதிவு - 5 - 1
உதயப்பூர்:
#MAHARANA PRATAP SMARAK SAMITI
MOTI NAGAR, UDAIPUR 

மகாராணா பிரதாப் நினைவுச் சின்னம்💥* 

⚜️நினைவுச் சின்னம் ஒரு மகத்தான அரசரான மகாராணா பிரதாப்பிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது ஒரு வரலாற்று தளம் ஆகும். மோதி மார்க் அல்லது முத்து மலை எனப்படும் சிறிய மலைமீது அமைந்துள்ளது. மகாராண பிரதாப்க்கு நினைவு அஞ்சலி செலுத்துவதற்கு இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர். 

🌼#பயணஅனுபவக்குறிப்புகள் 1 

🛕இந்த இடத்திற்கு செல்வதற்கு முன்பாகவோ, அல்லது அங்குள்ள வரலாற்றுக் குறிப்புகளை முழுவதுமாகப் படித்து அறிந்து கொண்டால் தான், இந்த முழு மலையின் சிறப்பு, பெருமை, நமது நாட்டின் பெருமை மிக்க அரசர்களின் வரலாற்று சிறப்புகளை முழுமையாக உணர முடியும். 

🌼குறைந்தபட்சம், மேவார் ராஜபுதன அரசரான மகாராணா பிரதாப் சிங் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பை அவசியம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். 

🌼நான், இந்த இடத்தின் வரலாற்றுப் பெருமைகளையும் , இந்த மலையின் பெருமைகளும், அறிந்து கொண்டபோது, என் தாய்நாடான பாரத தேசத்தில், இப்பகுதியில் வாழ்ந்தவர்களின் ஆன்மிக, மத, இன, தேச பற்று பற்றி அறிந்து, இப்பாரத மக்களிடம் இருந்த பழம் பெருமையை எண்ணி வியப்பும், பெருமிதமும் கொள்ள முடிந்தது. 

🌼பதிவுகளை தொடர்ந்து படிக்கும் முன் மகாராணா பிரதாப்பின் பெரும் வரலாற்றில் சில குறிப்புகளை மட்டும் சுருக்கமாகத் தொகுத்து தருகிறேன். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன். 

நன்றி:🙏
⚛️தகவல்கள் உதவி:✍️📚📝🇳🇪
wikipedia, மற்றும் பல வலை தள பதிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது 

#மஹாராணா பிரதாப் சிங் 

பகுதி - 1 

👑மகாராணா பிரதாப் அல்லது மேவார் பிரதாப் சிங் (Maharana Pratap), மே 9, 1540 - ஜனவரி 29, 1597) வட மேற்கு இந்தியாவில் அமைந்திருந்த மேவார் இராச்சியம் எனப்படும் உதய்பூர் இராச்சியத்தின் இந்து அரசராவார். 

👑 ராஜபுத்திரர்கள் தொன்று தொட்டு போற்றிவரும் வீரம், நாட்டுப்பற்று மற்றும் சுய மரியாதை ஆகிய அருங்குணங்களுக்கு ஒரு மிகவும் சிறந்த எடுத்துக் காட்டாக மகாராணா பிரதாப் சிங் விளங்கினார்.
👑அவரது பெற்றோர்கள் மஹாராணா உதய்சிங் II மற்றும் சன்கார மகாராணி ஜவந்தபாய் ஆவார்கள். 

⚜️1568 ஆம் ஆண்டில், உதய்சிங் II அவர்கள் ஆண்ட காலத்தில், சித்தூரை, மொகலாயப் பேரரசர் அக்பர் கைப்பற்றினார். சித்தூரின் மூன்றாவது ஜௌஹர் கோட்டையில் இருந்த பெண்மணிகள் தன் மானம் காக்க உடன் கட்டை ஏறித் தீ குளித்து வீர மரணமடைந்தார்கள். மேலும் எஞ்சிய வீரர்கள் எதிரிகளை போரில் சந்தித்து மாண்டார்கள். 

👑இந்தப் பேரிடருக்கு முன்னரே, உதய்சிங் II மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள குன்றுகளுக்கு இடம்பெயர்ந்தார். அதன்பின் அவர் ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில் தமது புதிய அரசை அமைத்தார்.
இந்தப் புதியதளம் பிறகு படிப்படியாக உதய்பூர் என, அவரது பெயரிலேயே அழைக்கப்பெற்றது. 

👑உதய்சிங், அவருக்குப் பிறகு அவருடைய செல்ல மகனான ஜக்மால் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைத்தார் ஆனால் அரசவையில் இருந்த மூத்த மேன்மக்கள் அவரது மூத்த மகன் ராணா பிரதாப் அரசராக வருவதையே விரும்பினார்கள். தந்தையின் விருப்பத்திற்கு மாறாக பிரதாப், தாம் அரசராக வருவதை விரும்பவில்லை. எனினும் 
ராஜபுத்திர உயர்குடிமக்கள் ஜக்மால் அன்றைய சங்கடமான தருணங்களில் அரசாளக்கூடிய தகுதிபடைத்தவர் இல்லை என்று கூறி பிரதாப்பை ஒப்புக்கொள்ளச் செய்தனர். அதுவே அவரது வாழ்க்கையின் போராட்டங்களும் பெரும் துயரங்களும் நிறைந்த அரசியல் வாழ்க்கையின் தொடக்கமாக திகழ்ந்தது 

👑அதன்பின் ராஜபுத்திர அரசர், ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில் தமது புதிய அரசை அமைத்தார். இந்தப் புதியதளம் பிறகு படிப்படியாக உதய்பூர் என, அவரது பெயரிலேயே அழைக்கப்பெற்றது. 

தொடரும்.....
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

Sunday, November 14, 2021

உதயப்பூர் - Garden of the Maids of Honor🔥* Sahelion-Ki-Bariஷலோன் கீ பாரி அருங்காட்சியகம் - SPLENDORS of INDIA

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#UDAYAPUR
6-09-2021 
பதிவு - 4
உதயப்பூர்: 

Garden of the Maids of Honor🔥* 
Sahelion-Ki-Bari
ஷலோன் கீ பாரி அருங்காட்சியகம் 💥*
#பயணஅனுபவக்குறிப்புகள். 

❄️இராஜஸ்தான் அரசால், தற்போது நிர்வாகத்தில் உள்ள இந்த கண்கவர் நீர்த்தோட்டம், முன் Maharana Sangram Singh II என்னும் அரசர் சீதனமாகப் பெற்றது. 

💐பதேசாகர் ஏரியிலிருந்து சாலையின் கீழ் பகுதியில் அழகிய தாமரைக்குளம், சில அரங்குகள், மற்றும் யானை வடிவிலான சிலைகள் உள்ள நீருற்றுகள், புல்வெளித் தோட்டங்களும் அமைந்துள்ளன. 

💮நகரத்தை விட்டு சற்று தூரத்தில் உள்ளது.
🥀நடுநாயகமாக அமைந்துள்ள குளம் மற்றும் நீரூற்றுகள் மார்பிள் கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

🍁நீரூற்றுப்பகுதிகளுக்கு அப்பால் சுற்றிலும், அழகிய புல்வெளிகள், மிகவும் அழகாக, கண்கவரும் வண்ணம் மலர் தோட்டங்கள். மிக அற்புத காட்சிகள். 

🌼நுழைவுக் கட்டனம் உண்டு. 

🌹ஏராளமானவர்கள் வருகிறார்கள்.
மிக அழகிய சுற்றுலா இடமாகப் பராமரித்து வருகிறார்கள். 

இதை கண்டு களித்து விட்டு, மதிய உணவிற்காக நாங்கள் தங்கியிருந்த இடம் சென்று உணவு முடித்து, மீண்டும் ஏற்பாடு செய்திருந்த பேருந்தில் பயணம் செய்து மகாராண பிரதாப் நினைவுச் சின்னம் 💥* சென்றடைந்தோம். 

என்றும் அன்புடன்,
சுப்ராம். அருணாசலம், காரைக்கால். 

#உதயப்பூர்
#GardenoftheMaidsofHonor🔥* 
#Sahelion-Ki-Bari
#ஷலோன்கீபாரிஅருங்காட்சியகம் 💥*

Friday, November 12, 2021

உதயப்பூர் - CITY PALACE - SPLENDORS OF INDIA

உதயப்பூர்: 
#நகரஅரண்மனை  (CITY PALACE)💥* 
பகுதி - 1.

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#UDAYAPUR
6-09-2021 
பதிவு - 3 
உதயப்பூர்: 

#நகரஅரண்மனை  (CITY PALACE)💥* 
Part 1.

⚜️ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள
ராஜஸ்தானில்,  உதய்பூர் நகரில் அமைந்திருக்கும் அரண்மனையாகும். இது மேவார் வம்சத்தின் பல ஆட்சியாளர்களிடமிருந்து நன்கொடைகளைக் கொண்டு கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்டது. 

⚜️1553இல் கட்டுமானம் தொடங்கியது. சிசோடியா ராஜபுத குடும்பத்தின் மஹாராணா உதய் சிங் இரண்டாம் தலைமுறையினரால் தொடங்கப்பட்டது. அவர் தனது தலைநகரான சிட்டோரியிலிருந்து உதய்பூரிலுள்ள புதிய நகரமான நகரத்திற்கு மாற்றினார். 

⚜️ பிகோலா ஏரியின் கிழக்கு கரையில் இந்த அரண்மனை அமைந்துள்ளது. உதய்பூரில் உள்ள பெருநகர அரண்மனை ஒரு அழகிய பாணியில் கட்டப்பட்டுள்ளது.  இது ராஜஸ்தான் மாநில கட்டிடங்களிலேயே மிகப்பெரியதாக கருதப்படுகிறது.
முன்னாள் பேரரசரான மேவாரின் ராஜ்புட்டனாவின் கடைசி தலைநகராகவும் இருந்தது. 

⚜️இது ராஜஸ்தானிய மற்றும் முகலாய கட்டிடக்கலை பாணியில் (Marble and masonry) கட்டப்பட்டதாகும். இது ஒரு மலை உச்சியில் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து பார்க்கும் போது நகரின் மற்றும் அதன் சுற்றியுள்ள பரந்த இடங்கள் காட்சியளிக்கிறது. ஏரி பிகோலாவைத் தவிர, ஏரி அரண்மனை, ஜாக்கோவில், ஜாக்டிஷ் கோயில், மன்ஸோன் அரண்மனை, போன்ற பல வரலாற்று நினைவுச்சின்னங்கள் அரண்மனை வளாகத்தின் அருகே உள்ளன. 
⚛️தகவல்கள்:
wikipedia, மற்றும் பல வலை தள பதிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது) 

❤️🙏💙🙏💜🙏💚
#பயணஅனுபவக்குறிப்புகள். 

🌟மிகப்பெரிய அரண்மனை வளாகம். நல்ல பாதுகாப்புடனும், தூய்மையுடனும், கட்டுப்பாட்டுடனும் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

🌟நுழைவுக்கட்டணம்  ₹300/ senior citizens ₹200/  (மட்டும்) உண்டு. 

🌟Guide வைத்துக் கொள்ளலாம். மிகச் சிறப்பாக ஒவ்வொறு இடங்களையும் விளக்கி கூறுகிறார்கள். தனி கட்டணம் உண்டு. 

🌟ஒவ்வொறு இடங்களிலும், அவ்விடங்களைப்பற்றிய குறிப்புகள் மற்றும், உள்ளே சென்று வெளியே வரும் வரை பாதை குறியீடுகளும் வைத்திருக்கிறார்கள். 

🌟மிகப்பெரிய வளாகம் என்பதால், நாங்கள் சுமார் 10 மணி முதல் 11.40 வரை பார்த்தோம். மிக அதிக நேரம் இருந்தால்தான் முழுமையாக ஒவ்வொன்றாக பார்க்க முடியும். 
மேலும், Guide வைத்தால், நேரம் அதிகம் ஆகும் என்பதால், நாங்கள் அங்கே உள்ளக் குறிப்புகளை வைத்து பார்த்துவந்தோம். 

🌟முன்புறம் பெரிய இரும்பு கேட்  அக்கால மற்றும் இக்கால காவல் அமைப்பு.

🌟நீண்ட உயரமான 3 அடுக்கு கொண்ட அரண்மனை. மாடிப்படிகள் குறுகிய அமைப்பு. மாடி நுழைவுப்பகுதியில் குனிந்துதான் செல்ல முடியும்.

🌟அரண்மணையின் மேற்குப் பகுதி முழுதும் மிகப்பெரிய ஏரி. 

🌟ஏரிகள் : உதயப்பூர் நகருக்கே ஏரி நகரம் என்று கூறுகிறார்கள். ஏராளமான ஏரிகள் உள்ளன. ஒரு ஏரி நிறைந்ததும், அடுத்த ஏரிக்குச் நீர் செல்ல அமைப்பு அக்காலத்திலேயே அமைக்கப்பட்டுள்ளதால், எல்லா ஏரிகளிலும் நீர் நிறைந்தே உள்ளன. 

🌟அரண்மனையின் உள்ளே அரசர்கள் வாழ்ந்த இருப்பிடங்களை அவ்வண்ணமே காட்சிப்படுத்தியுள்ளார்கள். அரசர்கள் பூசை அறைகள், நூல் நிலையம், முதலியவைகள். அரண்மனை பகுதிகள் அருங்காட்சியகமாகவும் வைத்திருப்பதால், அக்கால ஓவியங்கள், உபயோகித்த ஆடை வகைகள், வாகனங்கள், ஆயுதங்கள், ஆசனங்கள், படுக்கைகள், சமையல் பொருட்கள், பிற்காலத்தில் உபயோகித்த பொருட்கள் என பல்வேறு விஷயங்களிலும் கவனமாக தனித்தனியாகக் காட்சி படுத்தியுள்ளது சிறப்பு. 

🌟எந்தந்த அரசர்கள் எந்த எந்த இடங்களை சிறப்புடன் அமைத்தார்கள் என்ற குறிப்புகளுடன், வளாகத்தை அமைத்து இருக்கிறார்கள். 

🌟கட்டிட அமைப்புகள் பிரமிக்க வைக்கிறது. வண்ண வண்ண சித்திரங்கள், கண்ணாடி அறைகள், அழகிய கலை நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பல அறைகள். 

🌟வெளிப்புறம் தனித்தனி நீண்ட Halls மற்றும் பெரிய அழகிய மண்டபங்கள் உள்ளன. சில இடங்களில், ராஜபுதன ஆடைகளுடன் நகைகள் அழகுபடுத்தியுள்ளனர். 

🌟ஒரு சிறிய கலைப்பொருள் விற்பனையகமும் உள்ளது. 

🌟அரண்மணையிலிருந்து நகரின் காட்சிகள் மிக அருமையாக தெரிகிறது.
பல இடங்களில் இருந்து, உதயப்பூர் ஏரிகளையும், நகரின் அமைப்பும் பார்க்க மிக மிக அற்புதமான இடமாக உள்ளது. 

🌟அரண்மணைக்கு உள் / வெளி நுழைவு வாயில் இரண்டு உள்ளது போல் இருக்கிறது. பொதுமக்கள் வரபோக ஒரு வழியை பயன்படுத்துகிறார்கள். 

🌟இந்த வளாகம் முழுதும் பார்த்து விட்டு வெளியேறி Auto மூலம் பஸ் நிற்குமிடம் வந்து, அங்கிருந்து சகிலோன்கீ பாரி என்ற சுற்றுலா இடத்திற்கு சென்றோம்.

🌟இதன் தொடர் பகுதியில் மேலும் படங்கள் இணைத்துள்ளேன்.

❤️🙏💙🙏💜🙏💚
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

Wednesday, November 10, 2021

உதயப்பூர் - பதிவு - 2 ஜெகதீஸ்வரர் ஆலயம் (SPLENDORSOFINDIA - 29-Au...)

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#UDAYAPUR
6-09-2021 
பதிவு - 2
உதயப்பூர்: 
JAGADEESWAR MANDHIR, UDAYAPUR 
ஜெகதீஸ் டெம்பிள் 1651ல் கட்டி முடிக்கப்பட்டது.இதன் சன்னதியை அடைய 32 பளிங்குபடிகள் ஏற வேண்டும். இது உதயப்பூரின் மிக பெரிய விஷ்ணு கோவில் ஆகும்.  கருவறையில் விஷ்ணு இது ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டுள்ளது. 

#பயணஅனுபவக்குறிப்புகள். 

🔆நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து குலாப் என்ற இடம் வரை பஸ்ஸில் கொண்டு வந்து விட்டார்கள்.
அதன் பிறகு, பாதைகள் Auto மட்டுமே செல்லக்கூடியதாக குறுகியதாக வளைந்து வளைந்து உயரமான இடமாக இருப்பதால், ஜகதீஸ்வர் ஆலயம் மற்றும் நகர அரண்மணை இவற்றை நடந்தோ அல்லது Auto மூலமாகவோ சென்று பார்த்து வரலாம் என்றார்கள். 

🌟காலை நேரமாக இருந்ததால்,  நாங்கள் நடந்தே செல்ல முடிவெடுத்தோம்.
♻️குறுகிய, சற்று உயரமான வழியாக இருந்தது.  இருபுறங்களும், கடைகளும், வீடுகளும், கட்டிடங்களுடன் அமைந்திருந்தது. வழியில் சிறுசிறு ஆலயங்கள் நிறைய இருந்தது. அதில் சிலவற்றையும் சென்று தரிசித்துக் கொண்டே,
ஜகதீஸ்வரர் ஆலயம் சென்றோம். 

🔱இது ஒரு புராதானமான பெருமாள் ஆலயம். ஆலயம் அமைந்துள்ள இடம் 4 தெருக்கள் சந்திக்கும் நெருக்கடியை இடமாக உள்ளது.  ஆலயம் உயரமான அமைப்பு. 32 படிகள் இருபுறமும் இரண்டு யானைகள் அழகான சிலைகள். படியேறினால், ஆலயம்; உள்நுளைந்து வெளியே வர ஒரே வழிதான். சற்று சிறிய ஆலயம் ஆனாலும், சிற்ப அற்புதங்கள் ஏராளம். Archaeology Department ன் பாதுகாப்புக் கட்டிடமாகும். 

🔱3 மாடிக்கட்டிட அமைப்பு.
1652 ல் மகாரானா ஜகத்சிங் I அவர்களால் கட்டப்பட்டுள்ளது. மார்பிள் கல் கொண்டு மிக அற்புதமாக இருக்கிறது. ஆலயம் முழுதும் மிக நுட்பமான, சிற்ப வேலைப்பாடுகள் பிரமிக்கவைக்கின்றது. 

🔱ஆலயப்பிரகாரத்தில் சூரியன், கனேஷ், சிவன், சுவாமிகளுக்குத் தனித்தனி சிறிய ஆலயங்கள் உள்ளன. எல்லா கட்டிடங்களும் மிக அற்புதம். 

🔱32 படிகள் ஏறிய பிறகு முன்புறம், தனியாக உயரமான அழகிய சிறிய கல் மண்டபத்தில் உலோகத்தால் ஆன கருடாழ்வார் வித்தியாசமாக அமைப்பில் இருக்கிறார். 

🔱அடுத்து மாடக்கோவில் அமைப்பில் பெருமாள் ஆலயம். முன் மண்டபம் உட்புறம் வட்ட அமைப்பு உயரமாக உள்ளது.  அடுத்து ஒரு நுழைவு வாயில் தாண்டினால் சிறிய கருவரையுடன் கூடிய நீண்ட உள்மண்டபம். மண்டபம் நடுப்பகுதி மிக உயரம். வட்ட வடிவமானது.
கருவறை நுழைவு அருகில் உள்ள ஒரு தனி விநாயகர் , அடுத்து கருவரை மண்டபத்தில், சாளக்கிராமத்தில் செய்யப்பட்ட பெருமாள் நின்ற கோலம். 

🔱நாங்கள் சென்றபோது பூசை ஆரம்பித்து செய்து கொண்டிருந்தார்கள். இருந்து தரிசித்தோம். மண்டபம், தூண்கள்,  விதானம் எல்லாம் சிற்பங்கள் அற்புதமான முறையில் இருக்கின்றது.  கிழக்குப் பார்த்த ஆலயம். கருவறை முன்மண்டத்திலிருந்து தென்புறம் இரும்புப்படிகள் கீழ் பிரகாரம் செல்ல ஒரு வழியும் அமைக்கப்பட்டுள்ளது.  ஒரே பிரகாரம். மண்டபங்கள், கருவறையுடன் இணைந்த அமைப்பு.  கருவரையின் கோபுரம் மிக மிக உயரமானது. அற்புத கற்சிற்பங்கள் நிறைந்தது. ஆலயம் எல்லா இடங்களிலும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள். 

🔱ஏராளமான மக்கள் வழிபாடு செய்ய வந்து செல்கிறார்கள். இதன் அருகிலேயே சுற்றிலும் பலவேறு ஆலயங்கள் உள்ளன. 
ஆனாலும், நாங்கள் சென்றபோது , ஜகதீஸ்வரர் ஆலயம் அளவிற்கு பிற ஆலயங்களில் அதிகக் கூட்டம் இல்லை. 

🔱இவ்வாலயத்தின் முன்புறம் நெருக்கடியான போக்குவரத்து உள்ளது.
ஆலயத்தின் தென்புறம் உள்ள சரிவான, மேடான பாதையில் 500 மீ.தூரத்தில் நகர அரண்மணை அமைந்துள்ளது.
வழியில் ஒரு சிவன் ஆலயம் கற்றளி தனியாக கிழக்குப் பார்த்து உள்ளது.
வழியெங்கும் ஏராளமான கடைகள் உள்ளன.
💜
🔱இவ்வாலயம் தரிசித்துவிட்டு அரண்மனைக்கு சென்றோம்.
திரும்ப இந்த வழியில் வந்து Auto பிடித்து, பஸ் நிற்கும் இடம் சென்று பஸ்ஸில் சகிலோன் கீ பாரி அருங்காட்சியகம் என்ற சுற்றுலா இடம் சென்றோம்.

❤️🙏💜🙏💙🙏💚
என்றும் அன்புடன்
# சுப்ராம் அருணாசலம், காரைக்கால்
❤️🙏💜🙏💙🙏💚

உதயப்பூர் - பதிவு - 1 SPLENDORS OF INDIA

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#UDAYAPUR
5 -6.09.2021 
உதயப்பூர்: 
பதிவு : 1
இந்தியாவின் இராஜஸ்தான்  மாநிலத்திலுள்ள ஒரு நகராட்சியாகும். இது உதயப்பூர் மாவட்ட தலைநகராகவும் விளங்குகிறது. இராஜபுத்திர அரசான மேவாரின் தலைநகராகவும் விளங்கியது. இந்நகரில் ஏராளமான ஏரிகள் உள்ளதால் இது ஏரி நகர் எனவும் அழைக்கப்படுகிறது.  இந்நகரம் ஆரவல்லி மலை தொடரில் அமைந்துள்ளது. 

உதயப்பூரை உருவாக்கியவர் மேவார் அரசர் மகாராணா உதய் சிங் ஆவார். 

ஏரிகள்:
இந்நகரில் ஏராளமான ஏரிகள் உள்ளதால் இது ஏரி நகர் எனவும் அழைக்கப்படுகிறது
பாதே சாகர் ஏரி (Fateh Sagar Lake) - 1678 இல் இதை உருவாக்கியவர் மகாராணா ஜெய் சிங். பின்பு மகாராணா பத்தே சிங் இதை விரிவாக்கி மீள்கட்டமைத்தார்.
பிச்சோலா ஏரி (Lake Pichola )- இதை உருவாக்கியவர் மகாராணா இரண்டாம் உதய் சிங் ஆவார். இந்த ஏரிக்கு நடுவில் ஜாக் நிவாஸ் & ஜாக் மந்திர் என்ற 2 தீவுகள் உள்ளன.

#பயணஅனுபவக்குறிப்புகள் 

5.09.2021 அன்று ஜெய்ப்பூர் -
Durga pura railway station லிருந்து மதியம்
12.00 மணிக்குப் புறப்பட்டோம். ரயிலில் உணவு முடிந்தது. அன்று இரவு சுமார்
8.30 மணி அளவில் உதயப்பூர் City ரயில்வே நிலையம் அடைந்தோம்.
City Railway station
மிகவும் நேர்த்தியான முறையில், மிக அழகிய வடிவில்,  ராஜஸ்த்தான் மாநில கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், உதயப்பூர் நகரின் பாரம்பரிய வரலாற்று சின்னங்களை சுவரில் சிற்பங்களாக பிரமிக்கும் வகையில் அமைத்துள்ளார்கள். 

இரவு 9.30 மணி அளவில் உதயப்பூரில் உள்ள  Gujarat Samaj Trust கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பெரிய HOTEL லில் சென்று தங்கினோம்.
இங்கு தங்குவதற்கு பெரிய Halls உள்ளன. Rs.300/- முதல் பல்வேறு வாடகையில் வசதிக்கு ஏற்ப வாடகைக்கு அறைகள் உள்ளன. நாங்கள் Hallலிலேய தங்கிக் கொண்டோம். தனித்தனி மெத்தை தலையணி கொடுக்கின்றனர். வசதியாக  இருக்கிறது. வாடகை அறையிலும் தங்கிக் கொள்ளலாம்.
❤️💜💚❤️💜
இங்கிருந்து உதயப்பூரில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களை சென்று பார்த்துவந்தோம்.
6.09.2021 அன்று காலையில் மேலும் சில இடங்களைப் பார்த்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு  Durga pura railway station சென்று உணவு முடித்துவிட்டு, Kwdia புறப்பட்டோம்.

உதயப்பூர்
சுற்றுலா இடங்களை பற்றி தனிதனி பதிவுகள் தொடரும்.

⚛️தகவல்கள்:
wikipedia, மற்றும் பல வலை தள பதிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது)
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்


Monday, October 25, 2021

ஜய்ப்பூர் - ஜந்தர்மந்தர் - SPLENDORS OF INDIA

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#JAIPUR
#JANTHARMANDIR
#ஜந்தர்மந்தர்💥* 

1727 மற்றும் 1734 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இரண்டாம் ஜெய்சிங் மகாராஜா கட்டமைக்கப்பட்ட வானவியற் கருவியின் தொகுப்பாகும். நேரத்தைக் கணக்கிடுவது, கிரகணங்களை முன்னறிவிப்பது, விண்மீன்களின் இடத்தை தடமறிவது, கோள்களின் கோணவேற்றங்களை அறிவது மற்றும் அவை தொடர்பான இட அட்டவணைகள் போன்றவற்றிக்காக கணிப்பு கருவிகளை இந்த வான் ஆய்வுக்கூடம் கொண்டுள்ளது. 

ஜந்தர் மந்தர் (Jantar Mantar), 1727 மற்றும் 1734 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இரண்டாம் ஜெய்சிங் என்னும் அரசரால், அவரது அப்போதைய தலை நகரான ஜெய்ப்பூர் நகரத்தில் கட்டமைக்கப்பட்ட வானவியற் கருவிகளின் தொகுப்பாகும். இது அப்போதைய மொகலாய தலைநகரான தில்லியில் அவர் தமக்காக கட்டமைத்ததை ஒட்டி அமைக்கப்பட்டது. தில்லி மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களையும் சேர்த்து, இதைப் போன்று மொத்தமாக ஐந்து இடங்களில் அவர் இத்தகைய கட்டமைப்புக்களை நிறுவினார். இவை அனைத்திலும் ஜெய்ப்பூரில் உள்ள வான் ஆய்வுக்கூடமே மிகவும் பெரியதாகும். 

நேரத்தைக் கணக்கிடுவது, கிரகணங்களை முன்னறிவிப்பது, கதிரவனைச் சுற்றும் புவியின் பாதையில் விண்மீன்களின் இடத்தைத் தடமறிவது, கோள்களின் சாய்மானங்களை அறிவது மற்றும் கோள்களின் கோணவேற்றங்களை அறிவது மற்றும் அவை தொடர்பான இட அட்டவணைகள் போன்றவற்றிற்காக மாபெரும் வடிவவியற் கருவிகளை இந்த வான் ஆய்வுக்கூடம் கொண்டுள்ளது. 

ஒவ்வொன்றும் நிலத்தில் பதிக்கப்பட்ட மற்றும் 'குவிமையப்படுத்தும் கருவி'யாகும். மிகப்பெரும் கருவியான சாம்ராட் இயந்திரம் 90 அடிகள் (27 m) உயரம் கொண்டு, அதன் நிழல் ஒரு நாளின் நேரத்தை மிகத் துல்லியமாக அறிவிக்கும் முறையில் அமைந்துள்ளது. அதன் முகப்புறம் ஜெய்ப்பூர் நகரின் அட்சக்கோடான 27 அலகுக் கோணமாக அமைந்துள்ளது. அதன் உச்சியில் உள்ள இந்து சத்திரி (சிறிய விதானம்) கிரகணங்கள் மற்றும் பருவகாலங்களை அறிவிக்கப் பயன்படுகிறது. 

உள்ளூர்ப் பகுதியில் கிடைக்கும் கல் மற்றும் பளிங்கைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கருவியும், பொதுவாகப் பளிங்கின் உட்புறம் குறித்துள்ள, வான் ஆய்வு வரையறை அளவைக் கொண்டுள்ளது. மிகத் துல்லியமாக அமைந்த வெண்கல வில்லைகளும் பயன்படுத்தப்பட்டன. 1901ஆம் ஆண்டு முழுவதுமாக மறு சீரமைக்கப்பட்ட ஜந்தர் மந்தர் 1948ஆம் ஆண்டு ஒரு தேசியச் நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 

ஜெய் சிங்கின் ஜந்தர் மந்தரின் ஊடாகச் செல்லும் ஒரு சுற்றுலா, திண்மையான வடிவவியற் கருவிகளின் ஊடாக நடந்து சென்று, வானுலகை ஆய்வதற்கான வடிவமைக்கப்பட்ட ஒரு வான் ஆய்வுத் தொகுப்பை அறியும் தனித்துவமான ஒரு அனுபவமாகும். 

இந்தக் கருவிகள் பெரும்பாலும் மிகப் பெரும் கட்டமைப்புகளாக உள்ளன. 

இவை கட்டமைக்கப்பட்டுள்ள வரையறை அளவையே அவற்றின் துல்லியத்தை அதிகரிப்பதாகக் கூறுகிறார்கள். இருப்பினும், கதிரவனின் புற நிழலானது 30 மில்லிமீட்டர் அளவிற்குக் கூட அமைந்து சாம்ராட் இயந்திர சூரியக்கடியாரத்தின் ஒரு மில்லிமீட்டர் அளவிலான அதிகரிப்பிற்கு யதார்த்தமான முக்கியத்துவம் ஏதுமின்றிச் செய்யக்கூடும். மேலும், இத்துணை மாபெரும் அளவிற்குக் கட்டமைக்க, இதனைக் கட்டமைத்த தொழிலாளர்கள் அனுபவமற்று இருந்தனர் மற்றும் அடித்தளத்தின் அமிழ்தல் அவற்றைப் பின்னர் அணிபிறழச் செய்து விட்டது. எடுத்துக் காட்டாக, ஒரு சூரியக் கடியாரமான சாம்ராட் இயந்திரம் ஜெய்ப்பூர் நகரின் பகுதி சார்ந்த நேரத்தை இரண்டு விநாடிகள் வரை துல்லியமாக அறிவிக்கப் பயன்படுகிறது. 

சாம்ராட் இயந்திரம் எனப்படும் ராட்சச சூரியக் கடியாரம் (உச்சக் கருவி) உலகிலேயே மிகப் பெரிதான சூரியக்கடியாரமாக 27 அடி உயரத்தில் நிற்கிறது. பார்வைக்கு இதன் நிழல் ஒரு நொடிக்கு 1 மில்லி மீட்டர் அல்லது ஒரு நிமிடத்திற்கு கையின் பரப்பளவு (ஆறு செண்டிமீட்டர்) அளவு நகர்கிறது. 

பார்வையாளர்கள் பலருக்கும் இது பரவசமான அனுபவமாகும். 

இன்று, இந்த வான் ஆய்வுக்கூடம் புகழ் வாய்ந்து, சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. இருப்பினும், உள்ளூர் வானவியலாளர்கள், அவர்களது இத்தகைய அதிகாரம் கேள்விக்குறியதாக இருப்பினும், உழவர்களுக்குப் பருவ நிலையை முன்னறிவிக்க இன்னமும் இதனைப் பயன்படுத்துகின்றனர். 

வானவியல் மற்றும் வேத காலத்து சோதிடவியல் மாணவர்கள் இந்த ஆய்வுக் கூடத்தில் சில பாடங்களைக் கற்கிறார்கள். வேத உரைகளைத் தவிர, வேத காலத்து கருத்தாக்கத்தின் இன்னமும் நடப்பில் இருப்பதான ஒரே மாதிரிக் கட்டமைப்பு என்றும் இந்த வான் ஆய்வுக் கூடத்தினைக் கூறலாம். 

இராம் இயந்திரம் போன்ற சிறிய கருவிகள் பலவும் குறிப்பிடத்தக்க அளவில் கட்டமைப்பு வடிவமைப்பு புதுமை மற்றும் செய்முறை ஆகியவற்றில் புதுமையைப் பறை சாற்றுகின்றன.
💥*தகவல்கள் உதவி:
wikipedia, மற்றும் பல வலை தள பதிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது. 

பயண அனுபவக் குறிப்புகள்: 

ஜந்தர்மந்தர், HAWA MAHAL, CilTY PALACE இந்த மூன்று இடங்களும் ஒரே இடத்தில் அருகருகே உள்ளன. மூன்றுக்கும் ஒரே இடத்திலோ அல்லது, அந்தந்த கட்டிங்களின் முன்புறமோ
நுழைவு கட்டணம் பெற்றுக் கொள்ளலாம். Aadhaar Card வைத்துக் கொள்வது நலம். City Palace நுழைவுக் கட்டணத்தில் முதியோருக்கு சலுகை உண்டு. 

அருகில்,  Car, Bus பார்க்கிங் ஏரியா இருப்பதால், வாகனங்களை அங்கு நிறுத்திவிட்டு நமக்கு பொது instruction கொடுத்துவிட்டு - எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு - பார்க்கிங் இடத்திற்கு வந்து விடசொல்லு விடுகிறார்கள். நாமும் அனைத்து இடங்களையும் நடந்தே சென்று பார்த்துவிட்டு, City Palace அருகில் உள்ள parking place க்கு வந்துவிடலாம்.  சுற்றிப் பார்த்துவிட்டு சிலர் Auto விலும் வந்து சேர்ந்துவிடுகிறார்கள்.
#ஜந்தர்மந்தர்:
அக்காலத்தில், இந்தியர்களின் வானியல் மதிநுட்பம், திறனை நிச்சயம் நாம் உணர இந்த இடங்களை சென்று அவசியம் காணவேண்டும். 

ஜந்தர்மந்தர் நுழைவுக்கட்டணம் ரூ 50/- அனைவருக்கும். 

கட்டிடங்கள் பல்வேறு கணக்கியல் கோணத்திலும் வடிவங்களிலும் இருப்பதால், நிச்சயம், இளைஞர்கள், மாணவர்கள் அவசியம்  Guide உடன் சென்று பார்க்க வேண்டிய அவசியமான இடம். 

ஒரு சிறிய அலுவலகம், Museum, வழிகாட்டிட Video காட்சிகள் எல்லாம் அமைத்துள்ளனர். 

ஒரு சிறிய காலபைரவர் ஆலயம் ஒன்றும் உள்ளது. 

சுற்றிப் பார்த்து வரும் இடத்தில் ஒரு Restarant மற்றும் Rest Room வசதியும் செய்துள்ளனர். 

இந்தியாவின் பாரம்பரிய முக்கிய சுற்றுலா இடங்களில் இது வியக்க வைக்கும் இடம்.
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்


ஜெய்ப்பூர் - ஜல்மகால் - SPLENDORS OF INDIA

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#JAIPUR
#JALMAHAL
#ஜல்மகால் 💥* 

#ஜல்மகால் அல்லது நீர் அரண்மனை :

 இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான செய்ப்பூர் நகரத்தின் மன் சாகர் ஏரியின் நடுவில் அமைந்த அழகிய அரண்மனை ஆகும். ஜல் மகாலை ஜெய்பூர் இராச்சிய மன்னர் இரண்டாம் ஜெய்சிங் 18ம் நூற்றாண்டில் நிறுவினார். 
ஜெய்ப்பூர் - தில்லி நெடுஞ்சாலையில், ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 4 கிமீ தொலைவில் ஜல் மகால் உள்ளது.
300 ஏக்கர் பரப்பளவு கொண்ட மன் சாகர் ஏரியில் அமைந்த நீர் அரண்மனை, இராசபுத்திர - முகலாயக் கட்டிடக் கலையில் கட்டப்பட்டது. 

ஐந்து அடுக்குகள் கொண்ட ஜல் அரன்மனை சிவப்பு மணற்கல்லால் கட்டப்பட்டது. 300 ஏக்கர் பரப்பளவும், அதிக பட்சமாக 15 அடி ஆழம் கொண்ட ஏரியில் நீர் முமுமையாக நிரம்பும் போது, ஜல் மகாலின் முதல் நான்கு அடுக்குகள் நீரில் மூழ்கிவிடும். ஐந்தாம் அடுக்கு மட்டும் வெளியே காட்சியளிக்கும். 

ஏரியில் திடக்கழிவுகள் கொட்டப்படுவதால் ஏரியின் நீர் மாசடைந்தும், நீரடைப்புகளால் ஏரிக்கு வரும் நீரும் குறைந்து விட்டது. தற்போது இராஜஸ்தான் அரசு ஏரியை சுத்தப்படுத்தி வருகிறது. 

ஜெய்ப்பூரின் வடகிழக்கில் அமைந்த ஆரவல்லி மலைத்தொடர்களின் அடிவாரத்தின், 23.5 சகிமீ பரப்பு கொண்ட நிலப்பரப்பே, ஜல் மகால் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியாகும்.
ஜல் அரண்மனையின் மேற்கூரையின் நான்கு முனைகளில் உள்ள அரை - எண்கோண வடிவ விதானங்கள் நேர்த்தியாக, அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

#பயணஅனுபவக்குறிப்புகள் 
4-9-2021

மிகப்பெரிய எரியின் நடுவில் அமைக்கப் பட்டுள்ள அரண்மணை என்பதால் அங்கே செல்ல முடியவில்லை.

கரையிலிருந்து படம் மட்டும் எடுத்துக் கொள்ள முடியும். நடுவில் உள்ள அரண்மனைக்கு செல்ல அனுமதியும் இல்லை.
கரை ஓரம் மிகப்பெரிய சுற்றுலா இடமாக உள்ளது, அரண்மனையை பின்னால் வைத்து உடனடி புகைப்படம் எடுத்துத் தருவதற்கு ஏராளமானோர் உள்ளனர். 

ராஜபுதன ஆடைகள், வண்ணத் தொப்பிகள் அணிந்து அனைவரும் படம் எடுத்துக் கொள்கின்றன.  
சாலை ஓரக்கடைகள் ஏராளம். பலவித பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சுமார் ஒரு கிலோமீட்டர் அளவில் நீள பாதை ஓரத்தில் இவைகள் நடைபெறுகின்றன. 

பிரதான சாலையை ஒட்டியே இருப்பதால், வாகனங்களை ஓரமாக நிறுத்தி விடுகிறார்கள். நல்ல சுற்றுலா இடமாக உள்ளது. 

இதைப் பார்த்துவிட்டு City யில் உள்ள பிரதான Hand Crafts கட்டிடத்தின் உள்ளே சென்று மதிய உணவு உண்டோம். 

பளிங்கு கற்களால் ஆன சிலைகள் விற்கப்படும் இடம். இந்த செய்யப்படும் விதம் கண்டோம்.
Screen Print செய்யும் பகுதி, விற்பனை பகுதியில் பெரிய அளவில் கைவினை பொருட்கள், துணிகள் கடை இருந்தது.
சால்வைகள், போர்வை, கம்பளி ஆடைகள், வேட்டி, புடவைகள், துண்டு, சிறிய பெரிய கைவினைப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. 

💥*தகவல்கள் உதவி:
wikipedia, மற்றும் பல வலை தள பதிவுகளிலிருந்தும் தொகுக்கப்பட்டது.

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

ஜெய்ப்பூர் - அமர்கோட்டை - SPLENDORS OF INDIA - Part 2.

SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#JAIPUR  CITY TOUR
#AMERFORT
4-09-2021 

#அமர்கோட்டை   / ஆம்பர்கோட்டை💥* 
பகுதி - 1

இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில்
ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் ஆம்பர் / ஆமேர் எனும் ஊரில், ஆரவல்லி மலைத்தொடரில் மாதோ ஏரியுடன், அரண்மனைகளுடன் கூடிய ஆம்பர் கோட்டை அமைந்துள்ளது. ஜெய்ப்பூர் – தில்லி செல்லும் நெடுஞ்சாலையில் ஆம்பர் கோட்டை உள்ளது. 

மலை உச்சியில் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 

ஆம்பர் கோட்டை ஒரு முதன்மைத் தொல்லியல் மற்றும் சுற்றுலா இடமாகும்.சுற்றுலா செல்பவர்களின் விருப்பத் தேர்வாக இவ்விடம் இருக்கிறது. 

பாம்பு வடிவ படிக கற்களுடன் கூடிய ஆம்பர் கோட்டையின் முன்புறத் தோற்றம்
கட்டிய காலம்1592 

மணற்கல் மற்றும் பளிக்குக் கல்
ஆம்பர் கோட்டை பல வடிவ பாதைகளுடன் கூடிய நுழைவாயிற் கதவுகளுடனும் கூடியது. 

கோட்டை பல அரண்மனைகளும், ஒரு ஏரியும் கூடியது.   இந்த ஏரியின் நீர் ஆதாரத்தை நம்பியே கோட்டையும் அரண்மனைகளும் உள்ளது. 

கோட்டையினுள் உள்ள மணற்கற்களாலும், பளிங்குக் கற்களாலும் கட்டப்பட்ட அரண்மனை 

திவானி ஆம் எனப்படும் பொது மக்கள் கூடும் மாளிகை,
திவானி காஸ் எனப்படும் எனப்படும் அரண்மனைக் குடும்பத்தினர் மட்டும் கூடும் மாளிகை, 
கண்ணாடி மாளிகை எனப்படும் ஜெய் மந்திர் , 
செயற்கை நீரூற்றுகளுடன் கூடிய மாளிகை 

என நான்கு அழகியல் சுற்றுப்புறத்தைக் கொண்ட மாளிகைகளுடன் கூடியது. 

இந்தக் கோட்டை நான்கு பகுதிகளைக் கொண்டது. நான்கு முக்கிய வாசல்களையும் கொண்டது. 

ஆம்பர் கோட்டையின் அரண்மனை இராசபுத்திர குல மன்னர்களும்; குடும்பத்தினரும் வாழிடமாக இருந்தது. கோட்டையில் கணபதி ஆலயம், நுழைவாயில் அருகில் உள்ளது; 
சிலா தேவியின் உருவச்சிலை முக்கியமானது. 

பவானியின் பல்வேறு காட்சிகளுடன் வெள்ளிக் கதவு இருக்கிறது
பவானி எனும் அம்பாளின் பெயரால் இக்கோட்டைக்கு ஆம்பர் கோட்டை எனும் பெயராயிற்று என்றும் குறிப்பிடுகின்றனர். 

துவக்கத்தில் ஆம்பர் கோட்டை மீனாக்கள் எனும் மீனவ குலத்தவர்களால் சிறிய அளவில் கட்டப்பட்டது. இப்பகுதியை மீன்னாக்களிடமிருந்து கைப்பற்றி  முதலாம் ராஜா மேன்சிங் எனும் இராஜபுத்திர மன்னரால்  1550 முதல் 1614 வரை ஆளப்பட்டது. 

💥*தகவல்கள் உதவி:
wikipedia, மற்றும் பல வலை தள பதிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது. 

#பயணஅனுபவக்குறிப்புகள் 

அரண்மனை பகுதிகளை முழுதும் சுற்றிக் காட்ட வழிகாட்டிகள் உண்டு. அவர்களுக்கு தனி கட்டணமும் உண்டு. 

நுழைவுக்கட்டனம் ரூ 50/ அனைவருக்கும்.
வெளிநாட்டவர் சுற்றிப் பார்க்கத் தனிக்கட்டணம். மாணவர்களுக்கு கட்டண சலுகைகளும் உண்டு. 

ஜெய்ப்பூரில் நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து இவ்வூர் வரை பேருந்தில் கொண்டு வந்து விட்டார்கள். 

இவ்வூரிலிருந்து மலைமேல் இருக்கும் கோட்டைப் பகுதிக்கு Share Auto / ஜீப் மூலம் செல்ல வேண்டும். நிறைய Autos / ஜீப் உள்ளது. சுமார் 8 பேர் வரை ஏற்றிச் செல்கிறார்கள். போக வர மொத்தம் 500 ரூபாய்க்கட்டணம். 8 பேரும் பிரித்துக் கொள்ளலாம். 

சுமார் காலை 9.00 மணியிலிருந்து 11.30 வரை சுற்றிப் பார்த்தோம்.
நான்கு மாடிகள் உள்ள கோட்டை.
பகுதி பகுதியாக கீழ்தளம் அமைத்துள்ளார்கள். 

நுழைவு பகுதி, வரவேற்பு பகுதி, பொதுமக்கள் அரங்கு, முக்கிய விருந்தினர் அரங்கு, மகளீர் இருப்பிடங்கள் என்று பல பகுதிகள் உள்ளன. மாடிக்குச் செல்ல குறுகிய படிகள் உள்ளன. சரிவான பாதைகளும் உள்ளன. 

எல்லா இடங்களும் சிவப்பு மார்பிள் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.
வண்ண வண்ண ஓவியங்கள், மற்றும் அழகிய அமைப்பில் மார்பிள் கற்கள் ஏராளமாக உள்ளன.  

பெண்கள் பகுதியில் தனி துளசி மாடம், வழிபாடு இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சிலாதேவி ஆலயம் என்று முன்புறத்தில் சிறிய ஆலயமும் உள்ளது. வெற்றிக்கு வழிவகுத்ததால், ராஜா இதை வழிபட்டு முக்கியத்துவம் கொடுத்து வழிபட்டு வந்தார். 

எல்லா அறைகளும் காற்றோட்டம், வெளிச்சம் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

கோட்டை வாயில் குறுகிய சிக்கலான அமைப்பில் உள்ளதால், வரும் எதிரிகளை எளிதாக கண்டு, அழிக்க பல வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தப்பித்துச் செல்வதற்கும், குகைகள் இருக்கின்றன. 

அக்கால கழிப்பறை கட்டிட அமைப்புகள் உட்பட அனைத்து பகுதிகளும் அப்படியே உள்ளன. 
சில இடங்கள் பலவித பழமையான பொருட்களை அப்படியே காட்சிக்கு வைத்துள்ளனர். 

மிகவும் வயதானவர்கள், அரண்மணை பகுதியில் எல்லா இடங்களுக்கும் செல்வது சிரமம். 

எனவே, முன் பகுதியில், தரைத்தளத்தில் உள்ள அரண்மனை Hall முதலியவற்றைப் பார்த்துவிட்டு திரும்புகின்றனர். 

ஆடைகள், மணிகள், பலவிதமான கைவினைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் சிலவும் இருக்கின்றன. 

புகழ்பெற்ற ராஜஸ்த்தான் உடைகளை உடுத்தியும், தலைத் தொப்பி முதலியவைகளை அணிந்து கொள்ளச் செய்தும், புகைப்படம் எடுத்துக் கொடுக்கிறார்கள். 

அரண்மனை பின்னனியில் ராஜபுதன ஆடைகளை அணிந்து படம் எடுத்துத் தருவதற்கு ஏராளமானோர் இருக்கின்றனர். 

ரூ 20 முதல் ரூ 200 வரை கட்டணம் செலுத்தி, ஆடைகளையும், தொப்பிகளையும், ஆண்கள், பெண்களுக்கு விதவிதமாக அணிந்து கொண்டு படம் எடுத்துக் கொள்கிறார்கள். 

அதிக வெய்யில் இருப்பதால், சிறிய அழகிய அக்கால அமைப்பில் அழகிய வண்ண குடைகள், வண்ண தொப்பிகள் விற்பனைகளும் நடைபெறுகிறது.

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்


ஜெய்ப்பூர் - SPLENDORS OF INDIA - Part 1

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#JAIPUR
4.9.2021 
பகுதி - 1

ஜெய்ப்பூர்💥* 

செய்ப்பூர் அல்லது ஜெய்ப்பூர் (Jaipur) இந்திய நாட்டின் மேற்கிந்தியப் பகுதியில் அமைந்த இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகும். இது சிவப்பு நகரம் என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. மேலும் ஜெய்ப்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமாகும். ஜெய்ப்பூர் மாநகராட்சி, இந்நகரத்தை நிர்வகிக்கிறது. 

முகலாயப் பேரரசு வீழ்ச்சியடைந்த காலத்தில் ஆம்பர் இராச்சிய மன்னர் இரண்டாம் மான் சிங் ஆட்சிக் காலத்தில், 1727ல் ஜெய்ப்பூர் நகரம் நிறுவப்பட்டது. 

ஜெய்பூர் இராச்சியம் (Jaipur State) 1128ல் நிறுவப்பட்டது. பிரித்தானிய இந்தியா ஆட்சியில் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. பின்னர் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஜெய்பூர் இராச்சியத்தை ஆம்பர் இராச்சியம், தூந்தர் இராச்சியம் மற்றும் கச்வாகா இராச்சியம் என்றும் அழைப்பர். 

ஜெய்பூர் இராச்சிய மன்னர்கள் முதலில் ஆம்பர் கோட்டையைக் கட்டி இராச்சியத்தை நிர்வகித்தனர். இராச்சியத்தின் பாதுகாப்பிற்காக, பின்னர் தலைநகரத்தை செய்ப்பூர் 
நகரத்திற்கு மாற்றி ஜெய்ப்பூர் அரண்மனை, ஜெய்கர் கோட்டை மற்றும் நாகர்கர் கோட்டைகளை கட்டினர். மேலும் ஹவாமஹால், ஜல்மகால் மற்றும் ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்) முதலிய அழகிய கட்டிடங்கள் நிறுவினர்.
மேற்கு இந்தியாவில் பெரும்பான்மையானவர்கள் இந்து மதத்தைப் பின்பற்றுகிறார்கள். 

#பயணஅனுபவக்குறிப்புகள் 

4.09.2021 2.30.AM.
DURGAPURA Railway Station
#GEETHABHAWAN
3.09.2021 அன்று ஜோத்பூரிலிருந்து புறப்பட்டு 4-09-2021 அன்று விடியர்காலை 2.30 மணி அளவில் ஜெய்பூர் மிக அருகில் உள்ள DURGAPURA Railway Station வந்து சேர்ந்தோம். 

இங்கிருந்து #கீதாபவன் GEETHA BHAWAN என்ற இடத்திற்கு பஸ்ஸில் வந்தோம். 

இது ஒரு Trust க்கு சொந்தமான இடம். இங்கு வந்து தங்கினோம். 
இங்கு சுமார் 3 பெரிய Hall கள் உள்ளன. 
இங்குதான் அனைவரும் தங்கவைக்கப்பட்டனர். 

10 தனி அறைகளும் இருக்கின்றன.
அதில் ரூ 1500 கொடுத்து 4 பேர் தங்கிக்கொண்டோம். 

காலையில் எழுந்து குளித்து 8.30 மணி அளவில் ஜெய்ப்பூரில் உள்ள சுற்றுலா இடங்களான,
1. #அமர்கோட்டை/ஆம்பர்கோட்டை💥*
2. #ஜல்மகால்
முதலிய இடங்களைப் பார்த்துவிட்டு நகர் பகுதியில் உள்ள Handicrafts வளாகத்தில் மதிய உணவு முடித்துவிட்டு மீண்டும் மதியம் முதல் மாலை வரை
3. #ஜந்தர்மந்தர்
4. #ஹவாமஹால்
5. #நகரஅரண்மனை
முதலிய இடங்களைப் பார்த்துவிட்டு
மீண்டும் Geethamahal வந்து இரவு தங்கி 5.09.2021 காலை 8.30 அளவில் புறப்பட்டு ஜெய்ப்பூரில் உள்ள
#பிர்லா மந்திர்,
#கணேஷ்மந்திர் , #துர்க்காமந்திர்
முதலிய இடங்களைப் பார்த்துவிட்டு,
DURGAPURA Railway Station வந்து மதியம் #உதயப்பூர் புறப்பட்டோம். 

பொதுவாக ஜெய்பூர் நகரத்தில் காணப்படும் பெரும்பாலான கட்டிடங்கள் வீடுகள், வணிகக் கட்டிடங்கள் அப்பகுதியில் கிடைக்கும் சிவப்பு மார்பிள் கற்களால் கட்டப்பட்டுள்ளது. எங்கு சென்றாலும், சிவப்பு மார்பிள் கற்களால் இருப்பதால், இவ்வூரை Pink City என்று கூறிப்பிடுவது பொருந்தும்.
இந்து வழிபாட்டு ஆலயங்கள் சிறிய பெரிய அளவில் ஏராளமாக இருக்கின்றன.
பிரதான மற்றும் குறுகிய சிறிய சாலைகளிலும் சிறிய சிறிய இந்து வழிபாட்டு ஆலயங்கள் இருப்பதையும், மக்கள் வழிபாடு செய்து வருவதையும் கண்டோம்.

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

Wednesday, October 13, 2021

ஜோத்பூர் சுற்றுலா- பதிவு - 4 உமைத்பவன் அரண்மனை

ஜோத்பூர் சுற்றுலா 
பதிவு: 4
03.09.2021 FRIDAY
#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#Rajasthan
#JODHPUR

பயண அனுபவ குறிப்புகள்:

மெஹ்ரென்கார்ஹ் கோட்டை சுற்றிப் பார்த்த பின் அருகாமையில் உள்ள ஜஸ்வந்த்தாடா என்ற இடங்களையும் பார்த்தோம் அன்று மதியம்:
3.9.2021 மாலை: 3.00 - 5.30
மதிய உணவிற்குப் பிறகு அடுத்து சென்ற இடம்:
*⚛️
#உமைத்பவன் அரண்மனை:

🏢இந்தியாவின் அதிக கம்பீரமான அரண்மனைகளில் ஒன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அரண்மனைகள் பலவற்றுள் மிகவும் அண்மைகாலத்ததாகவும் இருக்கிறது. இதன் ஏராளமான கலை வேலைப்பாடு நினைவுச்சின்னமானது.

💒தற்போதும் அங்கு ஒரு அரசர் வாழ்ந்து வருவது போன்ற கற்பனையை நமக்கு ஏற்படுத்துகிறது.

⛪ஒரு நீண்ட பஞ்ச காலத்தின் போது பொது நிவாரணம் மற்றும் பணியாளர் செயல்திட்டமாக இந்த அரண்மனைக் கட்டப்பட்டது.

🏢அரண்மனையின் கட்டுமானப் பணியின் போது ஒரு மில்லியன் சதுர அடிக்கு (90,000 m²) மேலான தரமான சலவைக்கற்கள் பயன்படுத்தப்பட்டன. சிட்டார் மணற்கல் என அழைக்கப்படும் ஒரு சிறப்புவகை மணற்கல் அரண்மனைக் கட்டுமானப் பணியில் பயன்படுத்தப்பட்டதன் மூலம் அது ஒரு சிறப்பான விளைவைக் கொடுத்தது. இந்தக் காரணத்திற்காக உள்ளூர் மக்களால் இது சிட்டார் அரண்மனை எனவும் அழைக்கப்படுகிறது.

💒இதன் கட்டமைப்பின் பாணியானது அழகான மேல்மாடம், கவர்ச்சிமிக்க முற்றங்கள், பசுமைத் தோட்டங்கள் மற்றும் மதிப்புவாய்ந்த அறைகளுடன், இந்தோ-சாராசெனிக் கட்டடக்கலைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது.

🏬இந்தச் செயல்திட்டத்திற்கு 15 ஆண்டு காலங்களுக்கு மேல் (1929-1943) 3,000 கலைஞர்கள் பணியமர்த்தப்பட்டனர். இந்த அரண்மனையைக் கட்டிய மகாராஜா உமைத் சிங்கின் (1876-1947) பெயரே பிறகு இதற்கு இடப்பட்டது.

⛪இவர் கட்டடக் கலைஞர்களுக்கான பிரிட்டிஷ் ராயல் கல்வி நிறுவனத்தின் அவைத்தலைவராகவும் இருந்தார். 1977 ஆம் ஆண்டில் இந்த அரண்மனையானது அரசக் குடியிருப்பு, பாரம்பரியமானத் தங்கும் விடுதி மற்றும் அருங்காட்சியகம் எனப் பிரிக்கப்பட்டது. இது மொத்தமாக 347 அறைகளைக் கொண்டுள்ளது. இது உலகத்தின் மிகப்பெரிய தனியாளர் குடியிருப்பாகும். பழங்கால அறைக்கலனுடன் இங்குள்ள 98 குளிர்சாதன அறைகளும் நேர்த்தியாக அழகுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் ஐந்து நட்சத்திரத் தங்கும் விடுதியில் உள்ளதைப் போன்று அனைத்து வசதிகளும் இக்குடியிருப்பில் உள்ளன.

#பயணஅனுபவக்குறிப்புகள்

♻️ரயில்வே நிலையத்திலிருந்து இந்த அரண்மனைக்கு Bus ல் சென்றோம்.
🔆சாலையிலிருந்து உயரமானப் பகுதியில் இந்த அரண்மனைக் கட்டிடம் உள்ளது.
🔆இங்கிருந்து ஜோத்பூர் நகர் மிக அழகியதாக தெரிகிறது.
🔆அரண்மனையின் ஒரு சிறுபகுதி மட்டும் Museum ஆக மாற்றப்பட்டுள்ளது.

நுழைவுக் கட்டணம் ரூ 30 சிறுவர்களுக்கு ரூ 10ம் வசூலிக்கப்படுகிறது.

🔆அரண்மனையில் ஒரு பெரிய Hall மற்றும் ஒரு பகுதியில், அரசர்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தி வைத்துள்ளார்கள்.
🔆அரண்மனையின் பெரும்பாலான பகுதிகள், முக்கியமான நடுவாயில் உட்பட TAJ COROMANDEL HOTEL நிறுவனத்திடம் உள்ளது.
🔆சுற்றிக் காண்பிக்க Guideகளும் இருக்கிறார்கள். Guide charges தனி.
🔆வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள 🔆பெரிய புல் தரை அழகியாய் பராமரிக்கப்படுகிறது.
🔆அரசர்கள் உபயோகித்த பல்வேறு, பழமையான கார்களை அணிவகுத்து வைத்துள்ளார்கள்.
🔆ஒரு சிறிய உணவுக் கடையும் உள்ளது.

💥இதைப் பார்த்தபின்பு ரயில்வே நிலையம் வந்து அன்று மாலை ஜெய்ப்பூர் புறப்பட்டோம்.

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்.

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
JODHPUR

*⚛️தகவல்கள்:
wikipedia, மற்றும் பல வலை தள பதிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.

https://m.facebook.com/story.php?story_fbid=6352697404805463&id=100001957991710


ஜோத்பூர் சுற்றுலா - பதிவு - 3 JASWANTTHADA - ஜஸ்வந்தாடா

ஜோத்பூர் சுற்றுலா  
பதிவு: 3
03.09.2021 FRIDAY
#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#Rajasthan
#JODHPUR 

பயண அனுபவ குறிப்புகள்:

மெஹ்ரென்கார்ஹ் கோட்டை சுற்றிப் பார்த்த பின் அருகாமையில் உள்ள ஜஸ்வந்த்தாடா என்ற இடத்திற்கு சென்றோம். 

#JASWANTTHADA
*⚛️
#ஜஸ்வந்த்தாடா 

⚜️'ஜோத்பூரின் தாஜ்மகால்',  என்று அழைக்கப்பட்டு வரும் இவ்விடம் ஒரு கட்டடக்கலை சார்ந்த
ஒரு நினைவுச்சின்னம் 1895 ல் காலம் சென்ற மகாராஜா இரண்டாம் ஜஸ்வந்த்சிங் என்பவருக்காக, அவர் மகன் மகராஜா சர்தார் ஆட்சிகாலத்தில் வெள்ளை  பளிங்குனால் கட்டப்பட்ட மிக அழகிய, பிரமிப்பான நினைவிடமாகும்.
1899 - 1906ல் கட்டப்பட்டது. 

⚜️இந்த நினைவுச்சின்னம் முழுவதும் கடுஞ்சிக்கலான சிற்பப் படைப்புகளுடன் சலவைக்கல்லினால் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கற்கள் மிகவும் மெலிதாகவும் சிறப்பாகப் பளபளப்பாக்கப்பட்டும் உள்ளன. அதனால் சூர்யோதயத்தின் போது அதன் மேற்பரப்பு முழுவதும் நடனத்தைப் போன்ற மிதமான அழகொளியை பிரதிபலிக்கின்றன. 

🔆இந்த நினைவுச்சின்னத்தினுள் இரண்டு சமாதிகளும் உள்ளன. மகாராஜாக்களின் படங்கள் வைக்கப்பட்டும், வணங்கப்பட்டும் வருகின்றன. 

⚜️ஒரு குன்று போல இருக்கும் இடத்தில் அமைந்துள்ளது. நல்ல சாலை வசதி நுழைவிடம் வரை உள்ளது. 

⚜️மேற்கு புறத்தில் சிறிய குளம் ஒன்றும் உள்ளது. 

⚜️இந்த இடங்களை அழகிய பூங்கா போன்று வடிவமைத்துப் பராமரித்து வருகிறார்கள். 

⚜️ராஜபுதன மகாராஜாவின் வாரிசுகளும் இங்குதான் அடக்கம் செய்யப்படுகிறார்கள். இங்கிருந்து, மெகரான்கார்க் கோட்டையும் காட்சியளிக்கின்றது. 

⚜️இந்த ஜஸ்வந் தாடா என்னும் இடத்தின் நுழைவுவாயிலில், குதிரையுடன் இருக்கும் மகாராஜா சிலை அற்புத வடிவமைப்பு. 

⚜️தற்போது உள்ள இந்த மகாராஜாவின் அரச வாரிசு குடும்பம் இதை பராமரித்து வருகிறது. 

⚜️1995 வரை மாநில அரசின் கட்டுப்பாடுகளில் இருந்த இவ்விடத்தை மெகரான் கார்க் மியூசியம் டிரஸ்ட் அமைப்பு  தற்போது எடுத்து பாதுகாத்து வருகிறது. 

⚜️நுழைவுக்கட்டணம் உண்டு ரூ 30/- அனைவருக்கும். Guide வேண்டுமென்றால் தனி கட்டனம் கட்ட வேண்டும். 

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால். 

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
JODHPUR

ஜோத்பூர் சுற்றுலா - பதிவு - 2. மெஹ்ரென்கார்ஹ் கோட்டை

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#Rajasthan
#JODHPUR 
(03.09.2021 FRIDAY)
பதிவு : 2
ஜோத்பூர் நகர் சென்று நாங்கள் கண்ட சுற்றுலா இடங்கள்:
*⚛️
1. மெஹ்ரென்கார்ஹ் கோட்டை
MEHRANGARH FORT and MUSEUM 

⚜️சோத்பூர் நகரத்தின் புறநகர்பகுதியில் 125 மீ உயர மலைக்குன்றின் மீது தடித்த சுவர்களால் கட்டப்பட்டுள்ளது. அமைந்துள்ளது. சிறப்புவாய்ந்த மெஹ்ரன்காஹ் கோட்டையானது (சோத்பூர் கா கிலா), இந்தியாவின் மிகவும் கம்பீரமான மற்றும் பெரிய கோட்டைகளில் ஒன்றாகும். 

⚜️ கோட்டையின் உட்புறம் ஏராளமான அரண்மணைக் கட்டிடங்கள் மிக அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது. 

⚜️ இந்தக் கோட்டை முதலில் ரத்தோர் குலத்தலைவர் ஜோத்பூரை நிறுவிய ராவ் ஜோதாவால் 1460ல் தொடங்கப்பட்டது. எனினும் பெருமளவில் இந்தக் கோட்டையானது ஜஸ்வந் சிங்கின் (1638-78) காலத்தில் கட்டப்பட்டது.
இந்தக் கோட்டையின் சுவர்கள் 36 மீ உயரம் வரையிலும் 21 மீ அகலத்திலும் உள்ளன. இவை கொஞ்சம் நேர்த்தியான அழகுடையக் கட்டமைப்பைக் கொண்டுள்ளன. 

⚜️இந்தக் கோட்டையின் அருங்காட்சிய இல்லங்களானது; மூடு பல்லக்குகள், அம்பாரிகள், அரச தொட்டில்கள், நுண்ணிய ஓவியங்கள், இசைசார் கருவிகள், ஆடைகள் மற்றும் அறைகலன்களுடன் ஒரு நேர்த்தியான தொகுப்புகளைக் கொண்டுள்ளன. 

⚜️ மெஹ்ரன்காஹ் கோட்டையின் மதிற்சுவர்கள் மிகச்சிறந்த காப்பக பீரங்கிகளைக் கொண்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் அது நெஞ்சை அள்ளும் நகரத்தின் இயற்கைக்காட்சியையும் கொண்டுள்ளது. 

#பயணஅனுபவக்குறிப்புகள்
🔆நாங்கள் ரயில்வே நிலையத்திலிருந்து தனித்தனி பேருந்துகளில் இந்த இடத்திற்கு சென்றோம். இது ஒரு உயரமான மலைக்குன்று பகுதி பேருந்துகள், மற்ற வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் ஒழுங்குமுறையில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

🔆பொதுவாக, இந்த வளாகம் முழுவதும்,
security நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
எல்லா சுற்றுலாத்தலங்களும் அந்தந்த Trust மூலம் தனியார் Security வசதியுடன் கட்டுப்பாட்டுடன்தான் உள்ளது. 

🔆அரண்மனை வாசல், Car/Bus parking Area விலிருந்து சுமார் 100 அடி தூரத்திற்கு சாய்தள மலைப்பாதையில் சென்று, நுழைவு வாயிலை அடைய வேண்டும். 

🔆நுழைவுக்கட்டணம் இந்தியர்களுக்கு ரூ200/- . Sr. Citizen, மற்றும், மாணவர்கள் Concession, உண்டு.
ஆதார் கார்டு காண்பித்து ரூ 100/ நுழைவுக் கட்டணம் செலுத்தினோம்..
கோட்டையின் உச்சிக்கு செல்ல Elevator வசதி செய்யப்பட்டுள்ளதால், அதற்கு ரூ50/- தனிக்கட்டணம் செலுத்தினோம்.
Guide வேண்டுமென்றால் தனி கட்டனம் கட்ட வேண்டும். 

🔆நடந்தும் கோட்டையின் உச்சிவரை செல்லலாம். 

🔆உச்சி சென்றடைந்ததும். கோட்டையிலிருந்து ஜோத்பூர் நகரம் காட்சிகள் ரம்மியமாக இருக்கிறது. 

🔆உச்சியில் கோட்டையில் விளிம்புப் பகுதிகளில் பலவித பீரங்கிகள் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

🔆அரண்மனை உட்பகுதிகள் ஏராளமான அறைகள் நேர்த்தியாக பராமரித்து வருகிறார்கள்.
🔆பெரும்பாலான அறைகளில், அரசர்கள்
பயன்படுத்திய பலவிதமான பொருட்களையும், அவைகளின் உபயோகத்திற்கு தக்கவாறு, தனித்தனியாக, வரிசைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

🔆ஏராளமான அறைகள், அனைத்தும் அழகிய மார்பில் கற்கள். நுணுக்கமான வேலைப்பாடுகள். கண்டு மிகவும் வியப்படைந்தோம். 

🔆ஒவ்வொரு அறையாக, ஒவ்வொரு தளமாக (மாடியாக) ப் பார்த்து விட்டு கீழே இறங்கினோம். 

🔆படிகள் குறுகியதாக இருப்பதால், பல இடங்களிலும் நிதானமாக, பார்த்து வர வேண்டும். 

🔆கீழ்புறத்தில், தனித்தனிப் பகுதிகளில் 3 ஆலயங்களும் உண்டு. அவைகள் தனித்தனி Hall போன்றும் மற்றும் கருவரைகளும் அமைக்கப்பட்டுள்ளது. 

🔆கைவினைப் பொருள்கள், கலைப்பொருட்கள், துணி வகைகள், மணிமாலைகள் என வகைப்படுத்தப்பட்டு சிறிய கடைகளும், ஒரு சிறிய உணவு கூடமும் இருக்கிறது. 

🔆கோட்டை மிக நீண்டதாகவும், உயரமாகவும், பெரியதாகவும் உள்ளது. 

🔆மலைக்குன்று முழுவதும் கோட்டையின் மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக மிகவும் கடினமான பணியை மேற்கொண்டிருக்கிறார்கள். 

🔆அனைத்துப்பகுதிகளும், தூய்மையாகவும், பழமை மாறாத அமைப்பிலும், அருமையாக கட்டுப்பாட்டுடன் வைத்துள்ளனர். 

🔆உச்சியில் உள்ள அறைகளை சுற்றிப் பார்த்து கீழ் தளம், தரைத்தளம் வந்தோம்.
நுழைவு வாயில், அமைப்பு, கதவுகள், மிக பிரமாண்டம், மிக சிக்கலான, குறுகிய நுழைவாசல்கள், எதிரிப்படைகள் உள்ளே
நுழைவதை கட்டுப்படுத்த இவ்வாறு, அமைத்துள்ளார்கள். 

🔆அக்கால அரசர்கள் வாழுமிடங்களைப் பார்த்து வியந்தோம். 

♻️அடுத்து இக்கோட்டையின் அருகாமையில் உள்ள ஜஸ்வந்த்தாடா என்ற இடத்திற்கு சென்றோம். 
❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
JODHPUR 

*⚛️தகவல்கள்:
wikipedia, மற்றும் பல வலை தள பதிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...