Sunday, November 21, 2021

உதயப்பூர் MAHARANA PRATAP SMARAK SAMITI பதிவு - 1 SPLENDORS OF INDIA 6.9.2021

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#UDAYAPUR
6-09-2021 
பதிவு - 5 - 1
உதயப்பூர்:
#MAHARANA PRATAP SMARAK SAMITI
MOTI NAGAR, UDAIPUR 

மகாராணா பிரதாப் நினைவுச் சின்னம்💥* 

⚜️நினைவுச் சின்னம் ஒரு மகத்தான அரசரான மகாராணா பிரதாப்பிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது ஒரு வரலாற்று தளம் ஆகும். மோதி மார்க் அல்லது முத்து மலை எனப்படும் சிறிய மலைமீது அமைந்துள்ளது. மகாராண பிரதாப்க்கு நினைவு அஞ்சலி செலுத்துவதற்கு இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர். 

🌼#பயணஅனுபவக்குறிப்புகள் 1 

🛕இந்த இடத்திற்கு செல்வதற்கு முன்பாகவோ, அல்லது அங்குள்ள வரலாற்றுக் குறிப்புகளை முழுவதுமாகப் படித்து அறிந்து கொண்டால் தான், இந்த முழு மலையின் சிறப்பு, பெருமை, நமது நாட்டின் பெருமை மிக்க அரசர்களின் வரலாற்று சிறப்புகளை முழுமையாக உணர முடியும். 

🌼குறைந்தபட்சம், மேவார் ராஜபுதன அரசரான மகாராணா பிரதாப் சிங் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பை அவசியம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். 

🌼நான், இந்த இடத்தின் வரலாற்றுப் பெருமைகளையும் , இந்த மலையின் பெருமைகளும், அறிந்து கொண்டபோது, என் தாய்நாடான பாரத தேசத்தில், இப்பகுதியில் வாழ்ந்தவர்களின் ஆன்மிக, மத, இன, தேச பற்று பற்றி அறிந்து, இப்பாரத மக்களிடம் இருந்த பழம் பெருமையை எண்ணி வியப்பும், பெருமிதமும் கொள்ள முடிந்தது. 

🌼பதிவுகளை தொடர்ந்து படிக்கும் முன் மகாராணா பிரதாப்பின் பெரும் வரலாற்றில் சில குறிப்புகளை மட்டும் சுருக்கமாகத் தொகுத்து தருகிறேன். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன். 

நன்றி:🙏
⚛️தகவல்கள் உதவி:✍️📚📝🇳🇪
wikipedia, மற்றும் பல வலை தள பதிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது 

#மஹாராணா பிரதாப் சிங் 

பகுதி - 1 

👑மகாராணா பிரதாப் அல்லது மேவார் பிரதாப் சிங் (Maharana Pratap), மே 9, 1540 - ஜனவரி 29, 1597) வட மேற்கு இந்தியாவில் அமைந்திருந்த மேவார் இராச்சியம் எனப்படும் உதய்பூர் இராச்சியத்தின் இந்து அரசராவார். 

👑 ராஜபுத்திரர்கள் தொன்று தொட்டு போற்றிவரும் வீரம், நாட்டுப்பற்று மற்றும் சுய மரியாதை ஆகிய அருங்குணங்களுக்கு ஒரு மிகவும் சிறந்த எடுத்துக் காட்டாக மகாராணா பிரதாப் சிங் விளங்கினார்.
👑அவரது பெற்றோர்கள் மஹாராணா உதய்சிங் II மற்றும் சன்கார மகாராணி ஜவந்தபாய் ஆவார்கள். 

⚜️1568 ஆம் ஆண்டில், உதய்சிங் II அவர்கள் ஆண்ட காலத்தில், சித்தூரை, மொகலாயப் பேரரசர் அக்பர் கைப்பற்றினார். சித்தூரின் மூன்றாவது ஜௌஹர் கோட்டையில் இருந்த பெண்மணிகள் தன் மானம் காக்க உடன் கட்டை ஏறித் தீ குளித்து வீர மரணமடைந்தார்கள். மேலும் எஞ்சிய வீரர்கள் எதிரிகளை போரில் சந்தித்து மாண்டார்கள். 

👑இந்தப் பேரிடருக்கு முன்னரே, உதய்சிங் II மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள குன்றுகளுக்கு இடம்பெயர்ந்தார். அதன்பின் அவர் ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில் தமது புதிய அரசை அமைத்தார்.
இந்தப் புதியதளம் பிறகு படிப்படியாக உதய்பூர் என, அவரது பெயரிலேயே அழைக்கப்பெற்றது. 

👑உதய்சிங், அவருக்குப் பிறகு அவருடைய செல்ல மகனான ஜக்மால் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைத்தார் ஆனால் அரசவையில் இருந்த மூத்த மேன்மக்கள் அவரது மூத்த மகன் ராணா பிரதாப் அரசராக வருவதையே விரும்பினார்கள். தந்தையின் விருப்பத்திற்கு மாறாக பிரதாப், தாம் அரசராக வருவதை விரும்பவில்லை. எனினும் 
ராஜபுத்திர உயர்குடிமக்கள் ஜக்மால் அன்றைய சங்கடமான தருணங்களில் அரசாளக்கூடிய தகுதிபடைத்தவர் இல்லை என்று கூறி பிரதாப்பை ஒப்புக்கொள்ளச் செய்தனர். அதுவே அவரது வாழ்க்கையின் போராட்டங்களும் பெரும் துயரங்களும் நிறைந்த அரசியல் வாழ்க்கையின் தொடக்கமாக திகழ்ந்தது 

👑அதன்பின் ராஜபுத்திர அரசர், ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில் தமது புதிய அரசை அமைத்தார். இந்தப் புதியதளம் பிறகு படிப்படியாக உதய்பூர் என, அவரது பெயரிலேயே அழைக்கப்பெற்றது. 

தொடரும்.....
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...