#JAIPUR
#JALMAHAL
#ஜல்மகால் 💥*
#ஜல்மகால் அல்லது நீர் அரண்மனை :
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான செய்ப்பூர் நகரத்தின் மன் சாகர் ஏரியின் நடுவில் அமைந்த அழகிய அரண்மனை ஆகும். ஜல் மகாலை ஜெய்பூர் இராச்சிய மன்னர் இரண்டாம் ஜெய்சிங் 18ம் நூற்றாண்டில் நிறுவினார்.
ஜெய்ப்பூர் - தில்லி நெடுஞ்சாலையில், ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 4 கிமீ தொலைவில் ஜல் மகால் உள்ளது.
300 ஏக்கர் பரப்பளவு கொண்ட மன் சாகர் ஏரியில் அமைந்த நீர் அரண்மனை, இராசபுத்திர - முகலாயக் கட்டிடக் கலையில் கட்டப்பட்டது.
ஐந்து அடுக்குகள் கொண்ட ஜல் அரன்மனை சிவப்பு மணற்கல்லால் கட்டப்பட்டது. 300 ஏக்கர் பரப்பளவும், அதிக பட்சமாக 15 அடி ஆழம் கொண்ட ஏரியில் நீர் முமுமையாக நிரம்பும் போது, ஜல் மகாலின் முதல் நான்கு அடுக்குகள் நீரில் மூழ்கிவிடும். ஐந்தாம் அடுக்கு மட்டும் வெளியே காட்சியளிக்கும்.
ஏரியில் திடக்கழிவுகள் கொட்டப்படுவதால் ஏரியின் நீர் மாசடைந்தும், நீரடைப்புகளால் ஏரிக்கு வரும் நீரும் குறைந்து விட்டது. தற்போது இராஜஸ்தான் அரசு ஏரியை சுத்தப்படுத்தி வருகிறது.
ஜெய்ப்பூரின் வடகிழக்கில் அமைந்த ஆரவல்லி மலைத்தொடர்களின் அடிவாரத்தின், 23.5 சகிமீ பரப்பு கொண்ட நிலப்பரப்பே, ஜல் மகால் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியாகும்.
ஜல் அரண்மனையின் மேற்கூரையின் நான்கு முனைகளில் உள்ள அரை - எண்கோண வடிவ விதானங்கள் நேர்த்தியாக, அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
#பயணஅனுபவக்குறிப்புகள்
4-9-2021
மிகப்பெரிய எரியின் நடுவில் அமைக்கப் பட்டுள்ள அரண்மணை என்பதால் அங்கே செல்ல முடியவில்லை.
கரையிலிருந்து படம் மட்டும் எடுத்துக் கொள்ள முடியும். நடுவில் உள்ள அரண்மனைக்கு செல்ல அனுமதியும் இல்லை.
கரை ஓரம் மிகப்பெரிய சுற்றுலா இடமாக உள்ளது, அரண்மனையை பின்னால் வைத்து உடனடி புகைப்படம் எடுத்துத் தருவதற்கு ஏராளமானோர் உள்ளனர்.
ராஜபுதன ஆடைகள், வண்ணத் தொப்பிகள் அணிந்து அனைவரும் படம் எடுத்துக் கொள்கின்றன.
சாலை ஓரக்கடைகள் ஏராளம். பலவித பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சுமார் ஒரு கிலோமீட்டர் அளவில் நீள பாதை ஓரத்தில் இவைகள் நடைபெறுகின்றன.
பிரதான சாலையை ஒட்டியே இருப்பதால், வாகனங்களை ஓரமாக நிறுத்தி விடுகிறார்கள். நல்ல சுற்றுலா இடமாக உள்ளது.
இதைப் பார்த்துவிட்டு City யில் உள்ள பிரதான Hand Crafts கட்டிடத்தின் உள்ளே சென்று மதிய உணவு உண்டோம்.
பளிங்கு கற்களால் ஆன சிலைகள் விற்கப்படும் இடம். இந்த செய்யப்படும் விதம் கண்டோம்.
Screen Print செய்யும் பகுதி, விற்பனை பகுதியில் பெரிய அளவில் கைவினை பொருட்கள், துணிகள் கடை இருந்தது.
சால்வைகள், போர்வை, கம்பளி ஆடைகள், வேட்டி, புடவைகள், துண்டு, சிறிய பெரிய கைவினைப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
💥*தகவல்கள் உதவி:
wikipedia, மற்றும் பல வலை தள பதிவுகளிலிருந்தும் தொகுக்கப்பட்டது.
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
No comments:
Post a Comment