#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#UDAYAPUR
6-09-2021
பதிவு - 2
உதயப்பூர்:
JAGADEESWAR MANDHIR, UDAYAPUR
ஜெகதீஸ் டெம்பிள் 1651ல் கட்டி முடிக்கப்பட்டது.இதன் சன்னதியை அடைய 32 பளிங்குபடிகள் ஏற வேண்டும். இது உதயப்பூரின் மிக பெரிய விஷ்ணு கோவில் ஆகும். கருவறையில் விஷ்ணு இது ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டுள்ளது.
#பயணஅனுபவக்குறிப்புகள்.
🔆நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து குலாப் என்ற இடம் வரை பஸ்ஸில் கொண்டு வந்து விட்டார்கள்.
அதன் பிறகு, பாதைகள் Auto மட்டுமே செல்லக்கூடியதாக குறுகியதாக வளைந்து வளைந்து உயரமான இடமாக இருப்பதால், ஜகதீஸ்வர் ஆலயம் மற்றும் நகர அரண்மணை இவற்றை நடந்தோ அல்லது Auto மூலமாகவோ சென்று பார்த்து வரலாம் என்றார்கள்.
🌟காலை நேரமாக இருந்ததால், நாங்கள் நடந்தே செல்ல முடிவெடுத்தோம்.
♻️குறுகிய, சற்று உயரமான வழியாக இருந்தது. இருபுறங்களும், கடைகளும், வீடுகளும், கட்டிடங்களுடன் அமைந்திருந்தது. வழியில் சிறுசிறு ஆலயங்கள் நிறைய இருந்தது. அதில் சிலவற்றையும் சென்று தரிசித்துக் கொண்டே,
ஜகதீஸ்வரர் ஆலயம் சென்றோம்.
🔱இது ஒரு புராதானமான பெருமாள் ஆலயம். ஆலயம் அமைந்துள்ள இடம் 4 தெருக்கள் சந்திக்கும் நெருக்கடியை இடமாக உள்ளது. ஆலயம் உயரமான அமைப்பு. 32 படிகள் இருபுறமும் இரண்டு யானைகள் அழகான சிலைகள். படியேறினால், ஆலயம்; உள்நுளைந்து வெளியே வர ஒரே வழிதான். சற்று சிறிய ஆலயம் ஆனாலும், சிற்ப அற்புதங்கள் ஏராளம். Archaeology Department ன் பாதுகாப்புக் கட்டிடமாகும்.
🔱3 மாடிக்கட்டிட அமைப்பு.
1652 ல் மகாரானா ஜகத்சிங் I அவர்களால் கட்டப்பட்டுள்ளது. மார்பிள் கல் கொண்டு மிக அற்புதமாக இருக்கிறது. ஆலயம் முழுதும் மிக நுட்பமான, சிற்ப வேலைப்பாடுகள் பிரமிக்கவைக்கின்றது.
🔱ஆலயப்பிரகாரத்தில் சூரியன், கனேஷ், சிவன், சுவாமிகளுக்குத் தனித்தனி சிறிய ஆலயங்கள் உள்ளன. எல்லா கட்டிடங்களும் மிக அற்புதம்.
🔱32 படிகள் ஏறிய பிறகு முன்புறம், தனியாக உயரமான அழகிய சிறிய கல் மண்டபத்தில் உலோகத்தால் ஆன கருடாழ்வார் வித்தியாசமாக அமைப்பில் இருக்கிறார்.
🔱அடுத்து மாடக்கோவில் அமைப்பில் பெருமாள் ஆலயம். முன் மண்டபம் உட்புறம் வட்ட அமைப்பு உயரமாக உள்ளது. அடுத்து ஒரு நுழைவு வாயில் தாண்டினால் சிறிய கருவரையுடன் கூடிய நீண்ட உள்மண்டபம். மண்டபம் நடுப்பகுதி மிக உயரம். வட்ட வடிவமானது.
கருவறை நுழைவு அருகில் உள்ள ஒரு தனி விநாயகர் , அடுத்து கருவரை மண்டபத்தில், சாளக்கிராமத்தில் செய்யப்பட்ட பெருமாள் நின்ற கோலம்.
🔱நாங்கள் சென்றபோது பூசை ஆரம்பித்து செய்து கொண்டிருந்தார்கள். இருந்து தரிசித்தோம். மண்டபம், தூண்கள், விதானம் எல்லாம் சிற்பங்கள் அற்புதமான முறையில் இருக்கின்றது. கிழக்குப் பார்த்த ஆலயம். கருவறை முன்மண்டத்திலிருந்து தென்புறம் இரும்புப்படிகள் கீழ் பிரகாரம் செல்ல ஒரு வழியும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே பிரகாரம். மண்டபங்கள், கருவறையுடன் இணைந்த அமைப்பு. கருவரையின் கோபுரம் மிக மிக உயரமானது. அற்புத கற்சிற்பங்கள் நிறைந்தது. ஆலயம் எல்லா இடங்களிலும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள்.
🔱ஏராளமான மக்கள் வழிபாடு செய்ய வந்து செல்கிறார்கள். இதன் அருகிலேயே சுற்றிலும் பலவேறு ஆலயங்கள் உள்ளன.
ஆனாலும், நாங்கள் சென்றபோது , ஜகதீஸ்வரர் ஆலயம் அளவிற்கு பிற ஆலயங்களில் அதிகக் கூட்டம் இல்லை.
🔱இவ்வாலயத்தின் முன்புறம் நெருக்கடியான போக்குவரத்து உள்ளது.
ஆலயத்தின் தென்புறம் உள்ள சரிவான, மேடான பாதையில் 500 மீ.தூரத்தில் நகர அரண்மணை அமைந்துள்ளது.
வழியில் ஒரு சிவன் ஆலயம் கற்றளி தனியாக கிழக்குப் பார்த்து உள்ளது.
வழியெங்கும் ஏராளமான கடைகள் உள்ளன.
💜
🔱இவ்வாலயம் தரிசித்துவிட்டு அரண்மனைக்கு சென்றோம்.
திரும்ப இந்த வழியில் வந்து Auto பிடித்து, பஸ் நிற்கும் இடம் சென்று பஸ்ஸில் சகிலோன் கீ பாரி அருங்காட்சியகம் என்ற சுற்றுலா இடம் சென்றோம்.
❤️🙏💜🙏💙🙏💚
என்றும் அன்புடன்
# சுப்ராம் அருணாசலம், காரைக்கால்
❤️🙏💜🙏💙🙏💚
No comments:
Post a Comment