Monday, October 25, 2021

ஜய்ப்பூர் - ஜந்தர்மந்தர் - SPLENDORS OF INDIA

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#JAIPUR
#JANTHARMANDIR
#ஜந்தர்மந்தர்💥* 

1727 மற்றும் 1734 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இரண்டாம் ஜெய்சிங் மகாராஜா கட்டமைக்கப்பட்ட வானவியற் கருவியின் தொகுப்பாகும். நேரத்தைக் கணக்கிடுவது, கிரகணங்களை முன்னறிவிப்பது, விண்மீன்களின் இடத்தை தடமறிவது, கோள்களின் கோணவேற்றங்களை அறிவது மற்றும் அவை தொடர்பான இட அட்டவணைகள் போன்றவற்றிக்காக கணிப்பு கருவிகளை இந்த வான் ஆய்வுக்கூடம் கொண்டுள்ளது. 

ஜந்தர் மந்தர் (Jantar Mantar), 1727 மற்றும் 1734 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இரண்டாம் ஜெய்சிங் என்னும் அரசரால், அவரது அப்போதைய தலை நகரான ஜெய்ப்பூர் நகரத்தில் கட்டமைக்கப்பட்ட வானவியற் கருவிகளின் தொகுப்பாகும். இது அப்போதைய மொகலாய தலைநகரான தில்லியில் அவர் தமக்காக கட்டமைத்ததை ஒட்டி அமைக்கப்பட்டது. தில்லி மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களையும் சேர்த்து, இதைப் போன்று மொத்தமாக ஐந்து இடங்களில் அவர் இத்தகைய கட்டமைப்புக்களை நிறுவினார். இவை அனைத்திலும் ஜெய்ப்பூரில் உள்ள வான் ஆய்வுக்கூடமே மிகவும் பெரியதாகும். 

நேரத்தைக் கணக்கிடுவது, கிரகணங்களை முன்னறிவிப்பது, கதிரவனைச் சுற்றும் புவியின் பாதையில் விண்மீன்களின் இடத்தைத் தடமறிவது, கோள்களின் சாய்மானங்களை அறிவது மற்றும் கோள்களின் கோணவேற்றங்களை அறிவது மற்றும் அவை தொடர்பான இட அட்டவணைகள் போன்றவற்றிற்காக மாபெரும் வடிவவியற் கருவிகளை இந்த வான் ஆய்வுக்கூடம் கொண்டுள்ளது. 

ஒவ்வொன்றும் நிலத்தில் பதிக்கப்பட்ட மற்றும் 'குவிமையப்படுத்தும் கருவி'யாகும். மிகப்பெரும் கருவியான சாம்ராட் இயந்திரம் 90 அடிகள் (27 m) உயரம் கொண்டு, அதன் நிழல் ஒரு நாளின் நேரத்தை மிகத் துல்லியமாக அறிவிக்கும் முறையில் அமைந்துள்ளது. அதன் முகப்புறம் ஜெய்ப்பூர் நகரின் அட்சக்கோடான 27 அலகுக் கோணமாக அமைந்துள்ளது. அதன் உச்சியில் உள்ள இந்து சத்திரி (சிறிய விதானம்) கிரகணங்கள் மற்றும் பருவகாலங்களை அறிவிக்கப் பயன்படுகிறது. 

உள்ளூர்ப் பகுதியில் கிடைக்கும் கல் மற்றும் பளிங்கைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கருவியும், பொதுவாகப் பளிங்கின் உட்புறம் குறித்துள்ள, வான் ஆய்வு வரையறை அளவைக் கொண்டுள்ளது. மிகத் துல்லியமாக அமைந்த வெண்கல வில்லைகளும் பயன்படுத்தப்பட்டன. 1901ஆம் ஆண்டு முழுவதுமாக மறு சீரமைக்கப்பட்ட ஜந்தர் மந்தர் 1948ஆம் ஆண்டு ஒரு தேசியச் நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 

ஜெய் சிங்கின் ஜந்தர் மந்தரின் ஊடாகச் செல்லும் ஒரு சுற்றுலா, திண்மையான வடிவவியற் கருவிகளின் ஊடாக நடந்து சென்று, வானுலகை ஆய்வதற்கான வடிவமைக்கப்பட்ட ஒரு வான் ஆய்வுத் தொகுப்பை அறியும் தனித்துவமான ஒரு அனுபவமாகும். 

இந்தக் கருவிகள் பெரும்பாலும் மிகப் பெரும் கட்டமைப்புகளாக உள்ளன. 

இவை கட்டமைக்கப்பட்டுள்ள வரையறை அளவையே அவற்றின் துல்லியத்தை அதிகரிப்பதாகக் கூறுகிறார்கள். இருப்பினும், கதிரவனின் புற நிழலானது 30 மில்லிமீட்டர் அளவிற்குக் கூட அமைந்து சாம்ராட் இயந்திர சூரியக்கடியாரத்தின் ஒரு மில்லிமீட்டர் அளவிலான அதிகரிப்பிற்கு யதார்த்தமான முக்கியத்துவம் ஏதுமின்றிச் செய்யக்கூடும். மேலும், இத்துணை மாபெரும் அளவிற்குக் கட்டமைக்க, இதனைக் கட்டமைத்த தொழிலாளர்கள் அனுபவமற்று இருந்தனர் மற்றும் அடித்தளத்தின் அமிழ்தல் அவற்றைப் பின்னர் அணிபிறழச் செய்து விட்டது. எடுத்துக் காட்டாக, ஒரு சூரியக் கடியாரமான சாம்ராட் இயந்திரம் ஜெய்ப்பூர் நகரின் பகுதி சார்ந்த நேரத்தை இரண்டு விநாடிகள் வரை துல்லியமாக அறிவிக்கப் பயன்படுகிறது. 

சாம்ராட் இயந்திரம் எனப்படும் ராட்சச சூரியக் கடியாரம் (உச்சக் கருவி) உலகிலேயே மிகப் பெரிதான சூரியக்கடியாரமாக 27 அடி உயரத்தில் நிற்கிறது. பார்வைக்கு இதன் நிழல் ஒரு நொடிக்கு 1 மில்லி மீட்டர் அல்லது ஒரு நிமிடத்திற்கு கையின் பரப்பளவு (ஆறு செண்டிமீட்டர்) அளவு நகர்கிறது. 

பார்வையாளர்கள் பலருக்கும் இது பரவசமான அனுபவமாகும். 

இன்று, இந்த வான் ஆய்வுக்கூடம் புகழ் வாய்ந்து, சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. இருப்பினும், உள்ளூர் வானவியலாளர்கள், அவர்களது இத்தகைய அதிகாரம் கேள்விக்குறியதாக இருப்பினும், உழவர்களுக்குப் பருவ நிலையை முன்னறிவிக்க இன்னமும் இதனைப் பயன்படுத்துகின்றனர். 

வானவியல் மற்றும் வேத காலத்து சோதிடவியல் மாணவர்கள் இந்த ஆய்வுக் கூடத்தில் சில பாடங்களைக் கற்கிறார்கள். வேத உரைகளைத் தவிர, வேத காலத்து கருத்தாக்கத்தின் இன்னமும் நடப்பில் இருப்பதான ஒரே மாதிரிக் கட்டமைப்பு என்றும் இந்த வான் ஆய்வுக் கூடத்தினைக் கூறலாம். 

இராம் இயந்திரம் போன்ற சிறிய கருவிகள் பலவும் குறிப்பிடத்தக்க அளவில் கட்டமைப்பு வடிவமைப்பு புதுமை மற்றும் செய்முறை ஆகியவற்றில் புதுமையைப் பறை சாற்றுகின்றன.
💥*தகவல்கள் உதவி:
wikipedia, மற்றும் பல வலை தள பதிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது. 

பயண அனுபவக் குறிப்புகள்: 

ஜந்தர்மந்தர், HAWA MAHAL, CilTY PALACE இந்த மூன்று இடங்களும் ஒரே இடத்தில் அருகருகே உள்ளன. மூன்றுக்கும் ஒரே இடத்திலோ அல்லது, அந்தந்த கட்டிங்களின் முன்புறமோ
நுழைவு கட்டணம் பெற்றுக் கொள்ளலாம். Aadhaar Card வைத்துக் கொள்வது நலம். City Palace நுழைவுக் கட்டணத்தில் முதியோருக்கு சலுகை உண்டு. 

அருகில்,  Car, Bus பார்க்கிங் ஏரியா இருப்பதால், வாகனங்களை அங்கு நிறுத்திவிட்டு நமக்கு பொது instruction கொடுத்துவிட்டு - எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு - பார்க்கிங் இடத்திற்கு வந்து விடசொல்லு விடுகிறார்கள். நாமும் அனைத்து இடங்களையும் நடந்தே சென்று பார்த்துவிட்டு, City Palace அருகில் உள்ள parking place க்கு வந்துவிடலாம்.  சுற்றிப் பார்த்துவிட்டு சிலர் Auto விலும் வந்து சேர்ந்துவிடுகிறார்கள்.
#ஜந்தர்மந்தர்:
அக்காலத்தில், இந்தியர்களின் வானியல் மதிநுட்பம், திறனை நிச்சயம் நாம் உணர இந்த இடங்களை சென்று அவசியம் காணவேண்டும். 

ஜந்தர்மந்தர் நுழைவுக்கட்டணம் ரூ 50/- அனைவருக்கும். 

கட்டிடங்கள் பல்வேறு கணக்கியல் கோணத்திலும் வடிவங்களிலும் இருப்பதால், நிச்சயம், இளைஞர்கள், மாணவர்கள் அவசியம்  Guide உடன் சென்று பார்க்க வேண்டிய அவசியமான இடம். 

ஒரு சிறிய அலுவலகம், Museum, வழிகாட்டிட Video காட்சிகள் எல்லாம் அமைத்துள்ளனர். 

ஒரு சிறிய காலபைரவர் ஆலயம் ஒன்றும் உள்ளது. 

சுற்றிப் பார்த்து வரும் இடத்தில் ஒரு Restarant மற்றும் Rest Room வசதியும் செய்துள்ளனர். 

இந்தியாவின் பாரம்பரிய முக்கிய சுற்றுலா இடங்களில் இது வியக்க வைக்கும் இடம்.
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்


No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...