SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#JAIPUR CITY TOUR
#AMERFORT
4-09-2021
#அமர்கோட்டை / ஆம்பர்கோட்டை💥*
பகுதி - 1
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில்
ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் ஆம்பர் / ஆமேர் எனும் ஊரில், ஆரவல்லி மலைத்தொடரில் மாதோ ஏரியுடன், அரண்மனைகளுடன் கூடிய ஆம்பர் கோட்டை அமைந்துள்ளது. ஜெய்ப்பூர் – தில்லி செல்லும் நெடுஞ்சாலையில் ஆம்பர் கோட்டை உள்ளது.
மலை உச்சியில் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
ஆம்பர் கோட்டை ஒரு முதன்மைத் தொல்லியல் மற்றும் சுற்றுலா இடமாகும்.சுற்றுலா செல்பவர்களின் விருப்பத் தேர்வாக இவ்விடம் இருக்கிறது.
பாம்பு வடிவ படிக கற்களுடன் கூடிய ஆம்பர் கோட்டையின் முன்புறத் தோற்றம்
கட்டிய காலம்1592
மணற்கல் மற்றும் பளிக்குக் கல்
ஆம்பர் கோட்டை பல வடிவ பாதைகளுடன் கூடிய நுழைவாயிற் கதவுகளுடனும் கூடியது.
கோட்டை பல அரண்மனைகளும், ஒரு ஏரியும் கூடியது. இந்த ஏரியின் நீர் ஆதாரத்தை நம்பியே கோட்டையும் அரண்மனைகளும் உள்ளது.
கோட்டையினுள் உள்ள மணற்கற்களாலும், பளிங்குக் கற்களாலும் கட்டப்பட்ட அரண்மனை
திவானி ஆம் எனப்படும் பொது மக்கள் கூடும் மாளிகை,
திவானி காஸ் எனப்படும் எனப்படும் அரண்மனைக் குடும்பத்தினர் மட்டும் கூடும் மாளிகை,
கண்ணாடி மாளிகை எனப்படும் ஜெய் மந்திர் ,
செயற்கை நீரூற்றுகளுடன் கூடிய மாளிகை
என நான்கு அழகியல் சுற்றுப்புறத்தைக் கொண்ட மாளிகைகளுடன் கூடியது.
இந்தக் கோட்டை நான்கு பகுதிகளைக் கொண்டது. நான்கு முக்கிய வாசல்களையும் கொண்டது.
ஆம்பர் கோட்டையின் அரண்மனை இராசபுத்திர குல மன்னர்களும்; குடும்பத்தினரும் வாழிடமாக இருந்தது. கோட்டையில் கணபதி ஆலயம், நுழைவாயில் அருகில் உள்ளது;
சிலா தேவியின் உருவச்சிலை முக்கியமானது.
பவானியின் பல்வேறு காட்சிகளுடன் வெள்ளிக் கதவு இருக்கிறது
பவானி எனும் அம்பாளின் பெயரால் இக்கோட்டைக்கு ஆம்பர் கோட்டை எனும் பெயராயிற்று என்றும் குறிப்பிடுகின்றனர்.
துவக்கத்தில் ஆம்பர் கோட்டை மீனாக்கள் எனும் மீனவ குலத்தவர்களால் சிறிய அளவில் கட்டப்பட்டது. இப்பகுதியை மீன்னாக்களிடமிருந்து கைப்பற்றி முதலாம் ராஜா மேன்சிங் எனும் இராஜபுத்திர மன்னரால் 1550 முதல் 1614 வரை ஆளப்பட்டது.
💥*தகவல்கள் உதவி:
wikipedia, மற்றும் பல வலை தள பதிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.
#பயணஅனுபவக்குறிப்புகள்
அரண்மனை பகுதிகளை முழுதும் சுற்றிக் காட்ட வழிகாட்டிகள் உண்டு. அவர்களுக்கு தனி கட்டணமும் உண்டு.
நுழைவுக்கட்டனம் ரூ 50/ அனைவருக்கும்.
வெளிநாட்டவர் சுற்றிப் பார்க்கத் தனிக்கட்டணம். மாணவர்களுக்கு கட்டண சலுகைகளும் உண்டு.
ஜெய்ப்பூரில் நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து இவ்வூர் வரை பேருந்தில் கொண்டு வந்து விட்டார்கள்.
இவ்வூரிலிருந்து மலைமேல் இருக்கும் கோட்டைப் பகுதிக்கு Share Auto / ஜீப் மூலம் செல்ல வேண்டும். நிறைய Autos / ஜீப் உள்ளது. சுமார் 8 பேர் வரை ஏற்றிச் செல்கிறார்கள். போக வர மொத்தம் 500 ரூபாய்க்கட்டணம். 8 பேரும் பிரித்துக் கொள்ளலாம்.
சுமார் காலை 9.00 மணியிலிருந்து 11.30 வரை சுற்றிப் பார்த்தோம்.
நான்கு மாடிகள் உள்ள கோட்டை.
பகுதி பகுதியாக கீழ்தளம் அமைத்துள்ளார்கள்.
நுழைவு பகுதி, வரவேற்பு பகுதி, பொதுமக்கள் அரங்கு, முக்கிய விருந்தினர் அரங்கு, மகளீர் இருப்பிடங்கள் என்று பல பகுதிகள் உள்ளன. மாடிக்குச் செல்ல குறுகிய படிகள் உள்ளன. சரிவான பாதைகளும் உள்ளன.
எல்லா இடங்களும் சிவப்பு மார்பிள் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.
வண்ண வண்ண ஓவியங்கள், மற்றும் அழகிய அமைப்பில் மார்பிள் கற்கள் ஏராளமாக உள்ளன.
பெண்கள் பகுதியில் தனி துளசி மாடம், வழிபாடு இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சிலாதேவி ஆலயம் என்று முன்புறத்தில் சிறிய ஆலயமும் உள்ளது. வெற்றிக்கு வழிவகுத்ததால், ராஜா இதை வழிபட்டு முக்கியத்துவம் கொடுத்து வழிபட்டு வந்தார்.
எல்லா அறைகளும் காற்றோட்டம், வெளிச்சம் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
கோட்டை வாயில் குறுகிய சிக்கலான அமைப்பில் உள்ளதால், வரும் எதிரிகளை எளிதாக கண்டு, அழிக்க பல வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தப்பித்துச் செல்வதற்கும், குகைகள் இருக்கின்றன.
அக்கால கழிப்பறை கட்டிட அமைப்புகள் உட்பட அனைத்து பகுதிகளும் அப்படியே உள்ளன.
சில இடங்கள் பலவித பழமையான பொருட்களை அப்படியே காட்சிக்கு வைத்துள்ளனர்.
மிகவும் வயதானவர்கள், அரண்மணை பகுதியில் எல்லா இடங்களுக்கும் செல்வது சிரமம்.
எனவே, முன் பகுதியில், தரைத்தளத்தில் உள்ள அரண்மனை Hall முதலியவற்றைப் பார்த்துவிட்டு திரும்புகின்றனர்.
ஆடைகள், மணிகள், பலவிதமான கைவினைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் சிலவும் இருக்கின்றன.
புகழ்பெற்ற ராஜஸ்த்தான் உடைகளை உடுத்தியும், தலைத் தொப்பி முதலியவைகளை அணிந்து கொள்ளச் செய்தும், புகைப்படம் எடுத்துக் கொடுக்கிறார்கள்.
அரண்மனை பின்னனியில் ராஜபுதன ஆடைகளை அணிந்து படம் எடுத்துத் தருவதற்கு ஏராளமானோர் இருக்கின்றனர்.
ரூ 20 முதல் ரூ 200 வரை கட்டணம் செலுத்தி, ஆடைகளையும், தொப்பிகளையும், ஆண்கள், பெண்களுக்கு விதவிதமாக அணிந்து கொண்டு படம் எடுத்துக் கொள்கிறார்கள்.
அதிக வெய்யில் இருப்பதால், சிறிய அழகிய அக்கால அமைப்பில் அழகிய வண்ண குடைகள், வண்ண தொப்பிகள் விற்பனைகளும் நடைபெறுகிறது.
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
No comments:
Post a Comment