ஜோத்பூர் சுற்றுலா
பதிவு: 3
03.09.2021 FRIDAY
#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#Rajasthan
#JODHPUR
பயண அனுபவ குறிப்புகள்:
மெஹ்ரென்கார்ஹ் கோட்டை சுற்றிப் பார்த்த பின் அருகாமையில் உள்ள ஜஸ்வந்த்தாடா என்ற இடத்திற்கு சென்றோம்.
#JASWANTTHADA
*⚛️
#ஜஸ்வந்த்தாடா
⚜️'ஜோத்பூரின் தாஜ்மகால்', என்று அழைக்கப்பட்டு வரும் இவ்விடம் ஒரு கட்டடக்கலை சார்ந்த
ஒரு நினைவுச்சின்னம் 1895 ல் காலம் சென்ற மகாராஜா இரண்டாம் ஜஸ்வந்த்சிங் என்பவருக்காக, அவர் மகன் மகராஜா சர்தார் ஆட்சிகாலத்தில் வெள்ளை பளிங்குனால் கட்டப்பட்ட மிக அழகிய, பிரமிப்பான நினைவிடமாகும்.
1899 - 1906ல் கட்டப்பட்டது.
⚜️இந்த நினைவுச்சின்னம் முழுவதும் கடுஞ்சிக்கலான சிற்பப் படைப்புகளுடன் சலவைக்கல்லினால் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கற்கள் மிகவும் மெலிதாகவும் சிறப்பாகப் பளபளப்பாக்கப்பட்டும் உள்ளன. அதனால் சூர்யோதயத்தின் போது அதன் மேற்பரப்பு முழுவதும் நடனத்தைப் போன்ற மிதமான அழகொளியை பிரதிபலிக்கின்றன.
🔆இந்த நினைவுச்சின்னத்தினுள் இரண்டு சமாதிகளும் உள்ளன. மகாராஜாக்களின் படங்கள் வைக்கப்பட்டும், வணங்கப்பட்டும் வருகின்றன.
⚜️ஒரு குன்று போல இருக்கும் இடத்தில் அமைந்துள்ளது. நல்ல சாலை வசதி நுழைவிடம் வரை உள்ளது.
⚜️மேற்கு புறத்தில் சிறிய குளம் ஒன்றும் உள்ளது.
⚜️இந்த இடங்களை அழகிய பூங்கா போன்று வடிவமைத்துப் பராமரித்து வருகிறார்கள்.
⚜️ராஜபுதன மகாராஜாவின் வாரிசுகளும் இங்குதான் அடக்கம் செய்யப்படுகிறார்கள். இங்கிருந்து, மெகரான்கார்க் கோட்டையும் காட்சியளிக்கின்றது.
⚜️இந்த ஜஸ்வந் தாடா என்னும் இடத்தின் நுழைவுவாயிலில், குதிரையுடன் இருக்கும் மகாராஜா சிலை அற்புத வடிவமைப்பு.
⚜️தற்போது உள்ள இந்த மகாராஜாவின் அரச வாரிசு குடும்பம் இதை பராமரித்து வருகிறது.
⚜️1995 வரை மாநில அரசின் கட்டுப்பாடுகளில் இருந்த இவ்விடத்தை மெகரான் கார்க் மியூசியம் டிரஸ்ட் அமைப்பு தற்போது எடுத்து பாதுகாத்து வருகிறது.
⚜️நுழைவுக்கட்டணம் உண்டு ரூ 30/- அனைவருக்கும். Guide வேண்டுமென்றால் தனி கட்டனம் கட்ட வேண்டும்.
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்.
#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
JODHPUR
No comments:
Post a Comment