உதயப்பூர்:
#நகரஅரண்மனை (CITY PALACE)💥*
பகுதி - 1.
#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#UDAYAPUR
6-09-2021
பதிவு - 3
உதயப்பூர்:
#நகரஅரண்மனை (CITY PALACE)💥*
Part 1.
⚜️ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள
ராஜஸ்தானில், உதய்பூர் நகரில் அமைந்திருக்கும் அரண்மனையாகும். இது மேவார் வம்சத்தின் பல ஆட்சியாளர்களிடமிருந்து நன்கொடைகளைக் கொண்டு கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்டது.
⚜️1553இல் கட்டுமானம் தொடங்கியது. சிசோடியா ராஜபுத குடும்பத்தின் மஹாராணா உதய் சிங் இரண்டாம் தலைமுறையினரால் தொடங்கப்பட்டது. அவர் தனது தலைநகரான சிட்டோரியிலிருந்து உதய்பூரிலுள்ள புதிய நகரமான நகரத்திற்கு மாற்றினார்.
⚜️ பிகோலா ஏரியின் கிழக்கு கரையில் இந்த அரண்மனை அமைந்துள்ளது. உதய்பூரில் உள்ள பெருநகர அரண்மனை ஒரு அழகிய பாணியில் கட்டப்பட்டுள்ளது. இது ராஜஸ்தான் மாநில கட்டிடங்களிலேயே மிகப்பெரியதாக கருதப்படுகிறது.
முன்னாள் பேரரசரான மேவாரின் ராஜ்புட்டனாவின் கடைசி தலைநகராகவும் இருந்தது.
⚜️இது ராஜஸ்தானிய மற்றும் முகலாய கட்டிடக்கலை பாணியில் (Marble and masonry) கட்டப்பட்டதாகும். இது ஒரு மலை உச்சியில் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து பார்க்கும் போது நகரின் மற்றும் அதன் சுற்றியுள்ள பரந்த இடங்கள் காட்சியளிக்கிறது. ஏரி பிகோலாவைத் தவிர, ஏரி அரண்மனை, ஜாக்கோவில், ஜாக்டிஷ் கோயில், மன்ஸோன் அரண்மனை, போன்ற பல வரலாற்று நினைவுச்சின்னங்கள் அரண்மனை வளாகத்தின் அருகே உள்ளன.
⚛️தகவல்கள்:
wikipedia, மற்றும் பல வலை தள பதிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது)
❤️🙏💙🙏💜🙏💚
#பயணஅனுபவக்குறிப்புகள்.
🌟மிகப்பெரிய அரண்மனை வளாகம். நல்ல பாதுகாப்புடனும், தூய்மையுடனும், கட்டுப்பாட்டுடனும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
🌟நுழைவுக்கட்டணம் ₹300/ senior citizens ₹200/ (மட்டும்) உண்டு.
🌟Guide வைத்துக் கொள்ளலாம். மிகச் சிறப்பாக ஒவ்வொறு இடங்களையும் விளக்கி கூறுகிறார்கள். தனி கட்டணம் உண்டு.
🌟ஒவ்வொறு இடங்களிலும், அவ்விடங்களைப்பற்றிய குறிப்புகள் மற்றும், உள்ளே சென்று வெளியே வரும் வரை பாதை குறியீடுகளும் வைத்திருக்கிறார்கள்.
🌟மிகப்பெரிய வளாகம் என்பதால், நாங்கள் சுமார் 10 மணி முதல் 11.40 வரை பார்த்தோம். மிக அதிக நேரம் இருந்தால்தான் முழுமையாக ஒவ்வொன்றாக பார்க்க முடியும்.
மேலும், Guide வைத்தால், நேரம் அதிகம் ஆகும் என்பதால், நாங்கள் அங்கே உள்ளக் குறிப்புகளை வைத்து பார்த்துவந்தோம்.
🌟முன்புறம் பெரிய இரும்பு கேட் அக்கால மற்றும் இக்கால காவல் அமைப்பு.
🌟நீண்ட உயரமான 3 அடுக்கு கொண்ட அரண்மனை. மாடிப்படிகள் குறுகிய அமைப்பு. மாடி நுழைவுப்பகுதியில் குனிந்துதான் செல்ல முடியும்.
🌟அரண்மணையின் மேற்குப் பகுதி முழுதும் மிகப்பெரிய ஏரி.
🌟ஏரிகள் : உதயப்பூர் நகருக்கே ஏரி நகரம் என்று கூறுகிறார்கள். ஏராளமான ஏரிகள் உள்ளன. ஒரு ஏரி நிறைந்ததும், அடுத்த ஏரிக்குச் நீர் செல்ல அமைப்பு அக்காலத்திலேயே அமைக்கப்பட்டுள்ளதால், எல்லா ஏரிகளிலும் நீர் நிறைந்தே உள்ளன.
🌟அரண்மனையின் உள்ளே அரசர்கள் வாழ்ந்த இருப்பிடங்களை அவ்வண்ணமே காட்சிப்படுத்தியுள்ளார்கள். அரசர்கள் பூசை அறைகள், நூல் நிலையம், முதலியவைகள். அரண்மனை பகுதிகள் அருங்காட்சியகமாகவும் வைத்திருப்பதால், அக்கால ஓவியங்கள், உபயோகித்த ஆடை வகைகள், வாகனங்கள், ஆயுதங்கள், ஆசனங்கள், படுக்கைகள், சமையல் பொருட்கள், பிற்காலத்தில் உபயோகித்த பொருட்கள் என பல்வேறு விஷயங்களிலும் கவனமாக தனித்தனியாகக் காட்சி படுத்தியுள்ளது சிறப்பு.
🌟எந்தந்த அரசர்கள் எந்த எந்த இடங்களை சிறப்புடன் அமைத்தார்கள் என்ற குறிப்புகளுடன், வளாகத்தை அமைத்து இருக்கிறார்கள்.
🌟கட்டிட அமைப்புகள் பிரமிக்க வைக்கிறது. வண்ண வண்ண சித்திரங்கள், கண்ணாடி அறைகள், அழகிய கலை நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பல அறைகள்.
🌟வெளிப்புறம் தனித்தனி நீண்ட Halls மற்றும் பெரிய அழகிய மண்டபங்கள் உள்ளன. சில இடங்களில், ராஜபுதன ஆடைகளுடன் நகைகள் அழகுபடுத்தியுள்ளனர்.
🌟ஒரு சிறிய கலைப்பொருள் விற்பனையகமும் உள்ளது.
🌟அரண்மணையிலிருந்து நகரின் காட்சிகள் மிக அருமையாக தெரிகிறது.
பல இடங்களில் இருந்து, உதயப்பூர் ஏரிகளையும், நகரின் அமைப்பும் பார்க்க மிக மிக அற்புதமான இடமாக உள்ளது.
🌟அரண்மணைக்கு உள் / வெளி நுழைவு வாயில் இரண்டு உள்ளது போல் இருக்கிறது. பொதுமக்கள் வரபோக ஒரு வழியை பயன்படுத்துகிறார்கள்.
🌟இந்த வளாகம் முழுதும் பார்த்து விட்டு வெளியேறி Auto மூலம் பஸ் நிற்குமிடம் வந்து, அங்கிருந்து சகிலோன்கீ பாரி என்ற சுற்றுலா இடத்திற்கு சென்றோம்.
🌟இதன் தொடர் பகுதியில் மேலும் படங்கள் இணைத்துள்ளேன்.
❤️🙏💙🙏💜🙏💚
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
No comments:
Post a Comment