அகத்தியர் மலை / அகத்தியர் கூடம்.
பயண அனுபவ குறிப்புகள் .
(19.01.2019 முதல் 23.01.2019 வரை)
சிவாய நம . ஓம் அகத்தீசாய நமக
சிவபெருமான் அருள் பெற்ற அகத்திய மாமுனி தெற்கு புறம் வந்து இம்மலையில் தான் தவம் இருந்தார். இம்மலையின் அமைப்பு சிவலிங்கம் போன்றது. எப்புறம் இருந்து பார்த்தாலும் சிவகிரியாய் அற்புத காட்சி கிடைக்கும்.
உச்சி மலையில் பீடத்துடன் அகத்தியருக்கு சிலை உண்டு.
இம்மலையிலிருந்து தான் பல்வேறு ஆறுகள் மேற்கு புறத்திலும், கிழக்கு புறத்திலும் உற்பத்தி ஆகின்றது.
சுமார் 1700 மீட்டர் ( 6000 - 7000) அடி உயரம் உள்ளது.
கடுமையான காட்டு வழிகள், பல்வேறு நீர் அருவிகள், சரிவான சமவெளிப் பகுதிகள் இதை எல்லாவற்றையும் தாண்டி நடந்து சுமார் 18 கீ.மீ மலை ஏறினால் Base Camp அடையலாம். இரவு தங்கி மறுநாள் காலை புறப்பட்டு காலை சுமார் 10.30 க்குள் 7. கி.மீ ஏறி விட வேண்டும்.
உச்சி மலையில் செங்குத்து பகுதிகளில் கயிறு மூலம் ஏற வேண்டும்.
மலை உச்சியில் உள்ள அகத்தியர் தரிசனம் முடிந்த உடன் திரும்பி விட வேண்டும். மலை மீதுள்ள 6வது Base Camb வந்து இரவு தங்கி மீண்டும் மறுநாள் காலை புறப்பட்டு அடிவாரம் Bonacad Base point வந்து விட வேண்டும்
ஒவ்வாரு மலைக்கும் மலை forest Camp உண்டு forest officer / Staff உள்ளனர் கண்காணிப்பு உண்டு ஒரு நாளைக்கு 100 பேர் மட்டுமே ஏற அனுமதி இருப்பதால் எத்தனை பேர் எங்குள்ளார்கள் என்று கண்கானித்து கொள்கிறார்கள்.
மேற்கு தொடர்ச்சி மலையில் மிக உயரமான சிகரங்களில் ஒன்று.
தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.
பாபநாசத்திற்கு மேலே சுமார் 40 கீ மீ யில் இருந்தாலும் இதற்கு இப்போது முறையான வழி கேரள அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது.
ஜனவரி 15 முதல் மார்ச் சிவராத்திரி வரையில் இம்மலையில் ஏற அனுமதி உண்டு. ஜனவரி 5ம் தேதியில் Net மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இந்த ஆண்டு முதல் கேரள அரசின் விதிமுறைகள் .
கட்டணம் : ௹ 1000 ஒரு நபருக்கு .
மலையில் எந்தவித பூசைகளுக்கும் அனுமதி கிடையாது.
பிளாஸ்டிக் பொருட்கள் அறவே எடுத்து செல்லக் கூடாது. தண்ணீர் பாட்டில் எண்ணெய் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் தவிர்க்க முடியாத பிளாஸ்டிக் container எடுத்து செல்ல வேண்டும் என்றால்
ஒரு Container க்கு ரூ.100 காப்புக் கட்Lணம் கட்டி திரும்பி வரும்போது அந்த பிளாஸ்டிக் container காண்பித்து Deposit Refund பெறலாம்.
பெண்களுக்கும் இந்த ஆண்டு முதல் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 100 நபர் மட்டுமே அனுமதி .
குருப் லீடர் Declaration எழுத்து மூலம் உறுதி மொழி கொடுத்து Permit வாங்க வேண்டும். Camera வுக்கு தனி கட்டணம் உண்டு.
திருவணந்தபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து BONACAD என்ற ஊர் (50 கீ மீ) செல்லும் பேருந்தில் செல்ல வேண்டும். காலை 5.00 மணிக்கு பேருந்து புறப்படும். தவரவிட்டால் திருவனந்தபுரத்திலிருந்து Nedumangadu சென்று Vithura என்ற ஊர் சென்றால் அங்கிருந்து Bonacad சென்று விடலாம் AUTO மூலம் Forest Check point வரை செல்லலாம். (Rs .600/- VITHURA - Bonacad Chech point வரை).
கார், Two Wheeler, சிறிய வேன்கள் Checkpoint வரை செல்லலாம். Parking Charge தனிக் கட்டணம் உண்டு.
காலை 10.00 மணிக்குள் Report செய்ய வேண்டும்.
திரும்பி வரும்போது
மாலை 2.30 . 5. 40 க்கு Bonacad விருந்து பஸ் உண்டு. விட்டால் Auto பிடித்து தான் விதுரா வர முடியும்.
Bonacad மலை கிராமம். தங்க எந்த வசதியும் கிடையாது Hotel கிடையாது.
இன்னும் சில குறிப்புகள் அடுத்த பதிவில் தொடர்கிறது .
ஓம் நமச்சிவாயா
கைலாசநாதர் போற்றி
சுந்தராம்பாள் போற்றி.
1.
2
அகத்தியர் மலை / அகத்தியர் கூடம்.
பயண அனுபவ குறிப்புகள் .
(19.01.2019 முதல் 23.01.2019 வரை)
சிவாய நம . ஓம் அகத்தீசாய நமக
கைலாசநாதர் சுந்தராம்பாள் அருள் பெற்று இந்த வாய்ப்பு க் கிடைத்தது. எங்கள் அருமையான நண்பர்கள் குழுவால் ( திருவாளர்கள் அன்பு சகோதரர்கள் ஆனந்து, முத்துசாமி, ரவிந்தரநாத் மற்றும் கந்தப்பன் சார் சுப்பிரமணியன் சார் இவர்களால் இந்த பயணம் இனிமையாகவும் அமைந்தது.
ஒற்றுமையாகவும் மிகச் சிறந்த புரிதலோடும்
சிவனருளால் நல்ல பயணம் நல்ல தரிசனம் கிடைத்தது.. வாழ்வின் மறக்க முடியாத ஆண்மீகபயணம். சிவாய நம
ஓம் நமச்சிவாய
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment