திருக்கோவிலூர். ஸ்ரீ திரிவிக்கிரமர் -
ஸ்ரீ புஷ்பகவல்லி தாயார் ஆலயம்.
உலகளந்த பெருமாள். ஆலயம்.
மிக உயரமான ராஜகோபுரம் அமைந்த மிகப்பெரிய ஆலயம். பல பகுதிகள் ஆக்கிரமிப்பில் சென்றாலும் புராதானம் மிகுந்த பெரிய தலம். 108 ல் ஒன்று.
இராஜகோபுரம் தாண்டி உள்ளே சென்றால், தாயாருக்கு தனி ஆலயம் பெருமாளுக்கு வலதுபுறம் அமைந்துள்ளது. பெருமாள் ஒரு காலை ஊன்றி மற்றொரு காலை தென்புறம் உயரத்தில் காட்டும் தோற்றம். அருகில் பூமாதேவி. ஊன்றிய கால்பாதத்தைப் பற்றிய படி பக்தர் அமர்ந்துள்ளார்.
அபூர்வ தோற்றம். நிறைய புராணங்கள் உள்ளதும், பலர் வழிபட்டு அருள் பெற்ற,
வைணவர்கள் போற்றும் அற்புத ஆலயம்.
(16.12.20)
No comments:
Post a Comment