கொளஞ்சியப்பர் கோயில் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தின் மேற்கில் 2 கி.மீ.தூரத்தில் சேலம் போகும் பாதையில் வரும் ரயில்வே மேம்பாலம் தாண்டியதும் இடது புறத்தில் அமைந்துள்ளது. பிரார்த்தனை ஸ்தலம். பல குடும்பங்களுக்கு குல தெய்வ ஆலயம். எப்போதும் திறந்து இருக்கும். கார், சிறிய பஸ்கள் ஒரமாக பார்க்கிங் செய்ய வசதி இருக்கிறது.
கருவறையில் வினாயகர் சன்னதி மற்றும் சுயம்பு முருகன் சன்னதி.
தனி உருவம் இல்லாத அமைப்பு. வேறு எந்த முருகன் தலமும் இப்படி இருக்காது.
குழந்தை வரம் தருவதால் எப்போதும் பக்தர்கள் கூட்டம்.
ஆலயம் சுற்றிலும் பல்வேறு குல தெய்வ சன்னதிகள்.
இங்குள்ள முனிஸ்வரர் சன்னதியில் பிராது எழுதி கட்டிவைத்தால் எண்ணங்களை நிச்சயம் ஏற்று நிறைவேற்றுவார் என்ற ஆண்மீக நம்பிக்கையில் பணம் கட்டி, தனித்தனியாக பிராது விண்ணப்பம் எழுதி கட்டி வழிபாடு செய்து ஏராளமானோர் பலன் பெறுகிறார்கள்.
விருத்தகிரிஸ்வரரை வணங்க வந்த ஞானசம்பந்தருக்கு குழந்தையாக முருகன் வந்து வழிகாட்டிய இடமாக புராணவரலாறு கூறுகிறது.
- என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
(16.12.20)
No comments:
Post a Comment