திருவரங்கம்: திருக்கோவிலூர் - மனலூர்பேட்டை சென்று திருவரங்கம் பெண்ணை ஆறு கரையில் உள்ள ஸ்ரீ ரெங்கநாதர் ஆலயம். பகல் முழுதும் திறந்திருக்கும் ஆலயம். (இரவு 8 மணி வரை).
பள்ளிகொண்ட பெருமாள் மிக பெரிய சுதை உருவம்.
தாயருக்குத் தனி சன்னதியுடன் கூடிய ஆலயம்.
இவ்வரிய பெருமாளை தரிசிப்போருக்கு மறுபிறவில்லை என்று பட்டாச்சாரியார் கூறி தரிசனம் செய்விக்கிறார்.
முன்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ இராமர் சன்னதியில் உள்ள ஸ்ரீஅனுமனின் பணிவு தோற்றம் வியக்கத்தது.
ஆலய உள் நுழைவில் கிழக்குப் பார்த்த சிறிய முன் கோபுரம் (இராஜகோபுரம்) தாண்டி வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள அந்தக்கால தானிய குதிர் அமைப்புக் கட்டிடம் கவனிக்கத்தக்கது.
மனலூர்பேட்டை யிலிருந்து Auto or சிற்றுந்தில் வரலாம். நல்ல பாதை அமைப்பு ஆலயம் வரை இருந்தும், அதிகம் பஸ் போக்குவரத்து கிடையாது.
(15.12.2020)
No comments:
Post a Comment