எலவனார்சூர்கோட்டை :
திருக்கோவிலூர் - கள்ளக் குறிச்சி பிரதான சாலையில் அமைந்துள்ள ஊர். மிக வித்தியாசமான அமைப்பில் உள்ள சிவன் ஆலயம். இரண்டடுக்கு மாடக்கோவில். சுவாமி மேற்கு பார்த்தும். எல்லா நந்திகளும் மேற்கு பார்த்தும் அமைந்துளது. மேற்கு பார்த்த பெரிய இராஜ கோபுரம் எல்லா சுவற்றிலும் பெரிய எழுத்துகளில் கல்வெட்டுகள் உள்ளது.
கிழக்குப் பார்த்து அம்பாள் தனிக்கோவில்.
அடுத்து பெரிய கொடிமரம். கொடிமரம் பார்த்து சிறிய மண்டத்தில் நந்திபகவான்.
அடுத்து 3 அடுக்கு இராஜகோபுரம் உள்ளது இங்கும் முழுவதும் கல்வெட்டு எழுத்துகள். உள்ளே நீண்ட மண்டம் எதிரில் கம்பீரமான தனி சன்னதியில் நம்மை நோக்கும் நந்திபகவான். நமக்கு இடது புரம் மண்டபத்தில் கிழக்கு பார்த்து ஒரு சிவலிங்கம். அடுத்தடுத்து பிரகாரத்தின் சுற்றில் பெருமாள், முருகன், சன்னதிகள். உள்
நுழைந்து வலது புறத்தில் பெரிய உருவத்தில் தென்மேற்கு மூலையில் வினாயகர்.
சுவாமி கருவரை இரண்டாம் அடுக்கில் உள்ளது. கீழ்பகுதியிலிருந்து இரண்டு பக்கமும் கற்படிகள் ஏறுவதற்கு உள்ளன. மேலே ஏறியதும் நீண்ட மண்டப தூண்கள் முழுதும் அழகான கற்சிற்பங்களில் கவணிக்கத்தக்கவை.
மண்டபம் தாண்டி, உள்புறம் உள்ள மண்டம் நந்திபகவான் நம்மை நோக்கியபடி. அதன் மீது உள்ள தனி மண்டபத்தில் கருவரையில் மிக கம்பீரமான பெரிய அற்புத லிங்கம் வடிவில் சுவாமி. ஆலயம்
கோட்டை அமைப்பில் உள்ளதால் கோட்டைக் கோவில் என்று குறிப்பிடுகிறார்கள்.
சூரர்களை அழித்து கோட்டையில் அருள் தருகிறார்.
கருவரை மேல் கலச பகுதியின் 4 புறமும் நந்திபகவான் ஒரேபுரம் நோக்கிய அமைப்பு.
படியிறங்கி கருவறை கோட்டையை சுற்றில் சண்டிகேஸ்வரர், தட்சினாமூத்தி சன்னதிகள் தரிசித்து அதே வழியில் ஆலயம் முன்புறம் வர வேண்டும்.
வெளிபுற பிரகாரத்தில் தனியாக அம்பாள் சன்னதியும் ஆலயமும் உள்ளது. வட புறத்தில் தனியாக பெரிய மண்டபம் மற்றும் மூலையில் சிறிய கல் படித்துறையுடன் பெரிய தீர்த்தக் கிணறும் உள்ளது
மீண்டும் படி இறந்
பகலில் திறந்தே வைத்திருக்கிறார்கள். எப்போதும் தரிசிக்கலாம். பங்குனி உத்திரத்தில் பிரம்மோர்ச்சவம். புதிய தேர் உள்ளது. ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன.
விருத்தாச்சலத்திற்கு 27 கி.மீயில்.
(16.12.20)
No comments:
Post a Comment