Sunday, December 27, 2020

இலங்கை பயணம் 2018 பதிவு - 1. சென்னை - இலங்கை

✈️இறையருளால் கயிலாய தரிசனம் முடிந்ததும் இலங்கை சென்று பாடல் பெற்ற தலங்கலான திரிகோணமலை மற்றும் திரு கேதீஸ்வரம் தரிசனம் செய்தும், கதிர்காமம் முருகன் தலம் தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. 
சென்னையை சேர்ந்த SUJANA TOUR திரு S.R. பாலசுப்பிரமணியன் அவர்கள் ஆதரவில் இலங்கை முழுவதும் 8 நாட்கள் சுற்றி வந்து ஏராளமான இந்து மற்றும் பெளத்த புராண இடங்களை தரிசனம் செய்ய வாய்ப்புக் கிடைத்தது. 

13.12.2018 அன்று சென்னையிலிருந்து நன்பகல் புறப்பட்டு  மதியம் இலங்கை கொழும்பு Bandaranaike International Airport அடைந்தோம். அங்கிருந்து பயணம் முழுதும் AC பஸ் பயணம் Star Hotel தங்கல் நல்ல உணவுடன், அருமையான காலநிலை மற்றும் இறையருளால் எல்லா ஆலயங்களிலும் சிறப்பான தரிசனம் கிடைத்தது. வாழ்க்கையின் ஓர் அற்புத அனுபவம்.

கடந்த 13.12 2018ல் புறப்பட்டு 20.12.2018 வரை இலங்கையில் தரிசனம் செய்த இடங்களையும் அனுபவங்களையும் இனிய நம் நன்பர்களிடம் அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.  நன்றி. ✍️🙏https://m.facebook.com/story.php?story_fbid=4929169957158222&id=100001957991710

Wednesday, December 23, 2020

அகத்தியர் மலை / அகத்தியர் கூடம்.பயண அனுபவ குறிப்புகள் .(19.01.2019 முதல் 23.01.2019 வரை)

அகத்தியர் மலை / அகத்தியர் கூடம்.
பயண அனுபவ குறிப்புகள் .
(19.01.2019 முதல் 23.01.2019 வரை)

சிவாய நம . ஓம் அகத்தீசாய நமக

சிவபெருமான் அருள் பெற்ற அகத்திய மாமுனி தெற்கு புறம் வந்து இம்மலையில் தான் தவம் இருந்தார். இம்மலையின் அமைப்பு சிவலிங்கம் போன்றது. எப்புறம் இருந்து பார்த்தாலும் சிவகிரியாய் அற்புத காட்சி கிடைக்கும்.
உச்சி மலையில் பீடத்துடன் அகத்தியருக்கு சிலை உண்டு.
இம்மலையிலிருந்து தான் பல்வேறு ஆறுகள் மேற்கு புறத்திலும், கிழக்கு புறத்திலும் உற்பத்தி ஆகின்றது.

சுமார் 1700 மீட்டர் ( 6000 - 7000) அடி உயரம் உள்ளது.
கடுமையான காட்டு வழிகள், பல்வேறு நீர் அருவிகள், சரிவான சமவெளிப் பகுதிகள் இதை எல்லாவற்றையும் தாண்டி நடந்து சுமார் 18 கீ.மீ மலை ஏறினால் Base Camp அடையலாம். இரவு தங்கி மறுநாள் காலை புறப்பட்டு காலை சுமார் 10.30 க்குள் 7. கி.மீ ஏறி விட வேண்டும். 
உச்சி மலையில் செங்குத்து பகுதிகளில் கயிறு மூலம் ஏற வேண்டும். 

மலை உச்சியில் உள்ள அகத்தியர் தரிசனம் முடிந்த உடன் திரும்பி விட வேண்டும். மலை மீதுள்ள 6வது Base Camb வந்து இரவு தங்கி மீண்டும் மறுநாள் காலை புறப்பட்டு அடிவாரம் Bonacad Base point வந்து விட வேண்டும்

 ஒவ்வாரு மலைக்கும் மலை forest  Camp உண்டு forest officer / Staff உள்ளனர் கண்காணிப்பு உண்டு ஒரு நாளைக்கு 100 பேர் மட்டுமே ஏற அனுமதி இருப்பதால் எத்தனை பேர் எங்குள்ளார்கள் என்று கண்கானித்து கொள்கிறார்கள்.

மேற்கு தொடர்ச்சி மலையில் மிக உயரமான சிகரங்களில் ஒன்று.
தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.
பாபநாசத்திற்கு மேலே சுமார் 40 கீ மீ யில் இருந்தாலும் இதற்கு இப்போது முறையான வழி கேரள அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது.

ஜனவரி 15 முதல் மார்ச் சிவராத்திரி வரையில் இம்மலையில் ஏற அனுமதி உண்டு. ஜனவரி 5ம் தேதியில் Net மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இந்த ஆண்டு முதல் கேரள அரசின் விதிமுறைகள் .

கட்டணம் : ௹ 1000 ஒரு நபருக்கு . 
மலையில் எந்தவித பூசைகளுக்கும் அனுமதி கிடையாது.
பிளாஸ்டிக் பொருட்கள் அறவே எடுத்து செல்லக் கூடாது. தண்ணீர் பாட்டில் எண்ணெய் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் தவிர்க்க முடியாத பிளாஸ்டிக்  container எடுத்து செல்ல வேண்டும் என்றால்
ஒரு Container க்கு ரூ.100 காப்புக் கட்Lணம் கட்டி திரும்பி வரும்போது அந்த பிளாஸ்டிக் container காண்பித்து Deposit Refund பெறலாம். 
பெண்களுக்கும் இந்த ஆண்டு முதல் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 100 நபர் மட்டுமே அனுமதி .
குருப் லீடர் Declaration எழுத்து மூலம் உறுதி மொழி கொடுத்து Permit வாங்க வேண்டும். Camera வுக்கு தனி கட்டணம் உண்டு. 

திருவணந்தபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து BONACAD என்ற ஊர் (50 கீ மீ) செல்லும் பேருந்தில் செல்ல வேண்டும். காலை 5.00 மணிக்கு பேருந்து புறப்படும். தவரவிட்டால் திருவனந்தபுரத்திலிருந்து Nedumangadu சென்று Vithura என்ற ஊர் சென்றால் அங்கிருந்து Bonacad சென்று விடலாம் AUTO மூலம் Forest Check point வரை செல்லலாம். (Rs .600/- VITHURA - Bonacad Chech point வரை).
கார், Two Wheeler, சிறிய வேன்கள் Checkpoint வரை செல்லலாம். Parking Charge தனிக் கட்டணம் உண்டு.

 காலை 10.00 மணிக்குள் Report செய்ய வேண்டும்.
திரும்பி வரும்போது
மாலை 2.30 . 5. 40 க்கு Bonacad விருந்து பஸ் உண்டு.   விட்டால் Auto பிடித்து தான் விதுரா வர முடியும்.  
 Bonacad மலை கிராமம். தங்க எந்த வசதியும் கிடையாது Hotel கிடையாது.

இன்னும் சில குறிப்புகள் அடுத்த பதிவில் தொடர்கிறது . 
ஓம் நமச்சிவாயா
கைலாசநாதர் போற்றி
சுந்தராம்பாள் போற்றி.

1.

2
அகத்தியர் மலை / அகத்தியர் கூடம்.
பயண அனுபவ குறிப்புகள் .
(19.01.2019 முதல் 23.01.2019 வரை)

சிவாய நம . ஓம் அகத்தீசாய நமக

கைலாசநாதர் சுந்தராம்பாள் அருள் பெற்று இந்த வாய்ப்பு க் கிடைத்தது. எங்கள் அருமையான நண்பர்கள் குழுவால் ( திருவாளர்கள் அன்பு சகோதரர்கள் ஆனந்து, முத்துசாமி, ரவிந்தரநாத் மற்றும் கந்தப்பன் சார் சுப்பிரமணியன் சார் இவர்களால் இந்த பயணம் இனிமையாகவும் அமைந்தது.
 ஒற்றுமையாகவும் மிகச் சிறந்த புரிதலோடும்
சிவனருளால் நல்ல பயணம் நல்ல தரிசனம் கிடைத்தது.. வாழ்வின் மறக்க முடியாத ஆண்மீகபயணம். சிவாய நம
ஓம் நமச்சிவாய 
திருச்சிற்றம்பலம்.

கைலாச பயணம் - 2018

#சென்றுவந்தஆண்மீகதலம்:

மனம் விரும்பும் பயணப்பதிவுகள் 
எழுத எழுத அதுவும் ஆண்மீக பயணங்கள் அலுக்காது.

வாழ்க்கையில் மிகப் பெரும்பாலும் எல்லாமே ஏராளமான ஆண்மீக பயணங்கள்தான்.
அவன் அருளாளே அவன் தான் வணங்கி...

பாடல்பெற்ற தலங்கள் 276/276 ம் திவ்யதேசங்கள் 106/108 ம்  ஏராளமான
வைப்புத் தலங்கள், அபிமான சிவன் /பெருமாள்  தலங்கள், இன்னும் அடிக்கடி செல்லும் கிராம சிவன் | பெருமாள் ஆலயங்கள், ஆலய விழாக்கள், எல்லாம் ஒவ்வொரு முறையும், பல முறையும் தரிசனம் செய்யும் பாக்கியம் அவன் அருளாளே கிடைத்தது:

கிடைத்தும் வருகிறது. தலங்கள் எல்லாம் தரிசனம் பெற்றிருந்தும்
கைலாய தரிசனம் சென்றது வாழ்வின் பெரும் பாக்கியமே.
அதுபற்றிய மிகச்சுருக்கப் பதிவது:

கைலாசநாதர் சுந்தராம்பாள் அருளால் கைலாச தரிசன பயணம் இனிதாக நிறைவு பெற்றது.  

20.06. 2018. அன்று விமானம் மூலம் சென்னையிலிருந்து புறப்பட்டு லக்னோ சென்று கார் மூலம் நேப்பாள் கஞ்ச் சென்றடைந்து ஹோட்டல் சித்தார்த் தில் தங்கினோம்.

21. 06. 18. அன்று சிறிய ரக விமnனம் மூலம் சிமிகோட் சென்று  ஹேn ட்டல் மானசரோவரில் தங்கினோம். 

 22.06.18 அன்று ஹில்சா என்ற இடத்திற்கு ஹெலிகாப்டரில் சென்று பின் நேப்பாள் - திபெத் (சீனா)   நட்பு பாலம் தான்டி  பஸ் மூலம் . சீனா Immigration Office checking முடித்து தக்கல் கோட் சென்று  ஹேnட்டலில் தங்கினோம்.

23.06.2018. அன்று முழுதும் தக்கல் கோட்டில்  தங்கி கிரிவலம் செல்ல வேண்டிய பொருள்களை வாங்கிக் கொண்டோம். 

24.06.2018 அன்று கிழக்கு மற்றும்  தென்  முக தரிசனம் பெற்று மாண சரோவர் ஏரி நீரில் குளித்து விட்டு  பஸ்ஸில் 110 கி.மீ மாசை ரோவர் வலம் வந்து  அருகில் உள்ள சியு கொம்பு என்ற இடத்தில் இரவு தங்கினோம். (-10 டிகிரி).

25.06.2018 காலையில் மானசரோவரில்     ஹேnமம் (ஹோம தீப ஆராதணயில் நான் எடுத்தப் படத்தில் நடராஜர் தரிசனம் வீட்டில் வந்து பார்த்த போது தெரிந்தது) செய்து பூசை பின் அங்கிருந்து புறப்பட்டு சென்று கிழக்கு, தெற்கு முகதரிசனம் பெற்று தர்ச்சன் சென்றோம். 

அதிலிருந்து எமதுவார் என்ற இடம் சென்றடைந்தோம். கைலாய மலைக்கு தென்புறம் கிரிவலப் பாதை ஆரம்ப இடம். இங்கு குதிரை வாடகைக்கு பெற வேண்டும்.  குதிரை வாடகை தனி. நம்மிடம் உள்ள சிறிய ஷோல்டர் Bag எடுத்து வருவதற்கு தனி பணம். நம்மால் எதுவும் எடுத்து செல்ல முடியவில்லை.
உண்மையில் என் உடைகளைத் தாண்டி 1 லிட்டர் FLASK வெந்நீர் மற்றும் சிறிய பையில் ஒரு ஆப்பிள் சிறிய water Bottle. 2 சப்பாத்தி உணவுக்காக எடுத்துக் கொண்டேன். இதைக்கூட எடுத்துக் கொண்டு நடக்க சிரமமாக உள்ளது. காரணம் ஆக்ஸிஜன் குறைவதால் ஒரு 10 அடி தூரம் நடந்தவுடன் கழுத்தில் இருக்கும் FLASK ஐ எப்படn கழட்டலாம் என்றிருந்தது. எங்கள் கிரிவலம் முழுதும் மிக மிக நல்ல வானிலை வெயில் தரும் அற்புத வானிலை. இதமான குளிர்.

நானும் சிலரும் நடந்து கிரிவலம் செல்ல முடிவெடுத்து,  எமதுவார் வணங்கி தென் முகதரிசனம் பெற்று பரிகிராமா துவங்கினோம். வழியில் மேற்கு முகதரிசனம் . 
அவ்விடத்தில் வரும் போது கையிலாய மலையின் முன்புறத்தில் உள்ள மலைகள் பல்வேறு காட்சியாய் அமைகிறது. யானை போன்றும், சப்தரிஷிகள் யோகத்தில் உள்ளது போன்றும் மலைகள் அமைப்பு அற்புதம் ஆச்சர்யமூட்டுகின்றன.

 சுந்தரப் பெருமானார் வெள்ளையானையில் கயிலாயம் சென்றது. ரிஷிகளைக் கண்டதாகக் சேக்கிழார் பெருமான் கூறியருளியிருக்கும் காட்சிபோல் இருந்தது. இதெல்லாம் மனபிரமை யில்லை உண்மையாகவே இருந்தது மிகவும் ஆச்சர்யமாகவும், அதிசயமாகவும் இன்றளவும் இருக்கிறது.

(என் அனுபவத்தில் கைலை மலை வலம் வரும் போது வடமேற்கு பகுதியில் யானை, ரிஷிகள் தவம் இருப்பது போன்ற மலையைப் பார்த்தது மிக அற்புதம்.  ஆந்திராவில் உள்ள தர்ஷாராம் என்ற ஆலய கருவறை சுற்றின் வடமேற்கு மேல்பகுதியில் யானை அமைப்பு ஒரு ஆச்சரிய ஒப்புமை இரண்டும் தரிசித்தவர்கள் உணருவார்கள்.

அடுத்து, அகத்தியர் மலை உச்சியில் இருந்து கிழக்கு புறம் பார்க்கும் போது, ரிஷிகள் தவம் செய்யும் கோலத்தில் அந்தப் பகுதியில் மலைகள் தெரியும்.
இதையும் ஒப்புமைக்காகத் நாங்கள் கண்டதைத் தெரிவிக்கின்றேன்.)

பிறகு சற்று திரும்பி மலை சுற்றும் பாதை சென்றால் வடக்கு முகதரிசனமும் கிடைக்கப்பெற்றது.  ஒரு புறம் கையிலாயம் அதைச் சுற்றி அடுக்கடுக்காக சிறிய சிறிய மலைகள் அதன் ஓரத்தில் பாதை அடுத்து நீர் ஓடை / ஆறு  போன்று அமைந்துள்ளது. 

 அன்று மnலை   தோராழிக் என்ற இடத்தை அடைந்தோம். அங்கு Hotel போன்று பெரிய கட்டிடம் உள்ளது. அங்கு சென்றதும் உணவு தருகிறார்கள். அங்கு சென்று தங்கினோம். மnலையில் வடக்கு முகதரிசனத்துடன் பிரதோஷ வழிபாடு செய்து இரவு தங்கினோம். இரவு கடுங் குளிர்.

26.06. 2018  அன்று விடியற்காலையில் பொன்னார் மேனியன் தரிசனம் கிடைக்கப்பெற்றேnம்.
தொடர் பரிகிராமா :

இதன் பின் வடக்கு முகத்திலிருந்து கிழக்கு புறம் கிரிவலம் செய்ய மிக மிகக் கடுமையான கட்டுப்பாடுகள். முதலில் எல்லோருக்கும் அனுமதி கிடையாது என்றனர்.
பரிகிராமn செய்ய வயது மற்றும் உடல் பரிசோதனை தனித்தனியாக செய்த பிறகுதான் மீதி - பரிகிராமா - மலை வலம் செல்ல அனுமதி அளிக்கிறார்கள். அனுமதிக்கப்படாதவர்கள்  அங்கிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இந்த இடத்தில் ஒரு விஷயம் சொல்லத் தோன்றுகிறது. இந்தியாவிலிருந்து வரும் எல்லா Travels ம் நேப்பாள Travels Agent  இடம்  நம்மை ஒப்படைத்துவிடுகிறார்கள். அவர்கள் HILSA என்ற இடம் வரை தான். 
அதற்கு பிறகு திபெத் முழுதும் சீனா கட்டுப்பாடுகள் உள்ளதால் அவர்கள் சீனா ஷர்ப்பா Agent விடம் ஒப்படைத்து விடுகிறார்கள். நம் ஒவ்வொருவரையும் ஷர்ப்பா நம் Tour முழுதும் கவனித்துக்கொண்டே இருக்கிறார்.

 எங்கள் டூர் Leader மிகவும் நல்லவர் Nepal Agent மூலம் ஷர்ப்பாவிடம் program வகுத்து அதன்படி  ஷர்பாவிடம்பேசி  எங்கள் குழுவில் 6 பேருக்கு மட்டும் கிரிவலம் வர (அடியேன் உட்பட) அனுமதி கிடைத்தது. 

26.6.2018
காலையில் 2 கி.மீ நடந்து மலையில் சென்று குதிரை மூலம் 7 கிமீ மலையேற்றம் செய்து 19000 அடி உயர முள்ள டோல்மா பாஸ் என்ற இடத்தை அடைந்தோம். மிகவும் கஷ்ட்டமான பாதை அமைப்பு மலைப்பாதையில் குதிரை மீது பயணம் செல்வதே கஷ்ட்டமாக இருந்தது. அங்கிருந்து ஏழு 
கீ.மீ. மலை இறக்கம்.  நடைபயணம் தான். யாராக இருந்தாலும் நடந்துதான் செல்ல முடியும். குதிரையில் முழு பரிகிராமா செய்பவர்கள் கூட இந்த இடத்தில் நடந்து தான் செல்ல முடியும்.

பௌத்தர்கள் (அபபிரதட்சனமாக) எதிர்புறமாக கிரிவலம் வருகிறார்கள்.

 வழியில் பார்வதிகுளம் என்ற கெளரி குன்ட் மற்றும் ஐஸ் கட்டி பாதையில் இங்கு போர்டு எச்சரிக்கை உள்ளது. ஐஸ்கட்டி உருகி பாதை போல் இருக்கிறது. சில நேரங்களில் ஐஸ் பாதை உருகி விட்டால் நாம் நடக்க முடியாது. நாங்கள் அந்த பாதையில் நடந்தோம். 
பிறகு கடுமையான மலை இறக்கம் மன்சரிவு பாதையில் நடந்தும் கிரிவலப் பாதையின் கிழக்கு புறத்தை அடைந்தோம். வரும் வழியில் கைலாசபர்வதத்தின் கிழக்கு புறம் மிக நீண்ட ஆவுடை பாகம் கண்டோம்.

மேலும், சுமார் 2 கீ.மீ. தூரம் சென்று கிழக்கு புறத்தில் உள்ள பாதையிலேயே நடந்து சென்றோம். கார் செல்லும் பாதை அடைந்து கார் மூலம் ஜூதுல் பாக் என்ற இடத்தை  அடைந்து பின்  தnர்ச் சன் சென்று தங்குமிடத்தை அடைந்தோம்

 எங்களில் எனது உடன் நண்பர் திரு பரணிதரன் மற்றும் திருபாலாஜி இளைஞர்கள் மட்டுமே முழு                பரிகிராமத்தையும் நடைபயணமாகவே வலம் வந்தார்கள். இரவு தார்ச்சன்தங்கினோம்.

27.06.2018 காலை தார்ச்சனிலிருந்து புறப்பட்டு பஸ்ஸில் மானசரோவர் வழி சென்று மீண்டும் தக்கல் கோட் இமிகிரஷன் ஆபீஸ் சென்று China Entry pass மற்றும் Checking முடித்து  நேபாள் பnர்டர்  ஹில்சா   சென்று தங்கும் விடுதியில் தங்கினோம்.

இங்கு HILSA முதல் திபத் பகுதி எல்லாம் மனல் மலைகள் போன்று உள்ள அமைப்பு. எப்போது வேண்டுமானாலும் சருகிவிடும் அமைப்பு. HILSA: இங்கிருந்து தான் நேப்பாளத்தில் உள்ள
 SIMICOT என்ற இடத்திற்கு Helicopter மூலம் மட்டுமே வர போக முடியம் முக்கியமான Stratigic point . நேப்பாள் Chaina Border இடம் கொஞ்சம் கொஞ்சமாக Chaina இடம் பிடித்து வருவது தெரிகிறது. இங்கு இந்தியா நேப்பாள அரசுடன் கூட்டு நடவடிக்கை எடுத்து யாத்ரீகர்களுக்கு கட்டிடம் கட்டிக் கொடுக்கலாம். இன்னும் சில வருடங்களில் HILSA Chana வசம் போக வாய்ப்பிருக்கிறது.

28.06.2018 ஹில்சாவிலிருந்து சிமிகோட்  ஹெலி காப்டர் மூலம் தான் செல்ல முடியும். நாங்கள் HISA  சென்றபோது ஹெலிகாப்டர் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தினால் ஹில்சாவில்  நாள் தங்க வேண்டியதாயிற்று. 

28.06.2018  ஷில்சாவிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிமிகோட் அடைந்து ஹோட்டலில் தங்கினோம். கடுமையான வnணிலை மேக மூட்டத்தினnல் சிமி கோட்டில் தங்க வேண்டிய கட்டாயம். No     0ther transport except Mini Charted Flight.   

சிமிகோட் : சுமார் 500 பேர் தங்கலாம் ஆனால் கைலாஷ் போகிறவர்கள் திரும்பிவருபவர்கள் எல்லோருக்கும் இது Neck Point. சிறிய ஊர் ஆனால் அது ஒரு District head  என்கிறார்கள். இங்கிருந்து நேப்பாள் கஞ்ச் வரலாம் அல்லது காட்மண்ட் செல்லலாம். 
வானிலை காரணமாக சிமிகோட்டிலிருந்து எங்குமே போக முடியாத சூழல். Helicoptor Service மட்டும் Hilsa வுக்கு இருந்தது. இதனால் கைலாஷ் சென்றவர்கள்  Hilsa வழியாக  வர வர சிமிகோட் சிறிய மலை நகரம் என்பதால் தாங்கமுடியவில்லை.
 6 நn ட்கள் ஹோட்டலில் கட்டாயமாக தங்கியிருந்தோம்.  இந்த நாட்கள் மிகவும் பரபரப்பான செய்தியாகி இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் விவாதிக்கப்பட்டு அரசாங்கங்கள் உடனடி நடவடிக்கை எடுத்தார்கள்.

கைலாஷ் யாத்தரா சென்னையில் புறப்பட்டு பரிகிராமா முடித்து சிமி காட் வந்து தங்கும் வரையிலும் மற்றும் இறுதிவரையிலும் Super climate. No one got sick   All are good health. கிரிவலசுற்றுக்காக ஏரளமான எச்சரிக்கைகளில் மருந்து மாத்திரைகள், தின்பண்டங்கள் வாங்கியதை உபயோகப் படுத்தப்படவில்லை. திண்பண்டங்கள் கூட பிறகு எடுத்துக் கொண்டோம்.  இறையருள் இறுதிவரை அனைவருக்கும் துணையிருந்தது.

 3.07.2018 அன்று வானிலை சரியானதும் flight மூலம் நேபாள் கஞ்ச் அடைந்தோம். அங்கிருந்து லக்னோவிற்கு கார் மூலம் சென்று ஹேட்டலில் தங்கினோம்.

 வானிலையால் சிமிகாட்டில் 6 நாள் தங்க நேர்ந்தது. இது மிக இந்தியா, நேப்பாள் பகுதியில் மிகவும் பரபரப்பாகி, தமிழ்நாடு உட்பட, அனைத்து மாநிலம், மற்றும் மைய அரசும் நேபாள அரசும் மிகவும் அக்கரையும் ஆர்வமும் கொண்டு எங்களுக்கு உதவிட முழு ஆதரவு தந்தனர்.   லக்னோ வந்து அடைந்த போது அந்த ஹோட்டல் நிர்வாகத்தினர்கள் மிகுந்த உதவிகள் செய்தார்கள். மறக்க முடியாத அனுபவம்.

 04.07.2018 அன்று    மnலை  Air மூலம் Chennai Airport வந்து 5.07.2018 காலையில் இறைய ருளால் இல்லம் வந்து இனிதாக சேர்ந்தோம்.

(5.07.2018 காலை  காரைக்காலில் என் (சகோதரர்) மகனுக்கு காலை 9.30.க்கு திருமணம் முதல் நாள் வரவேற்பு.
நான் ஊர் சென்றவுடன் முதலில் கைலாசநாதர் ஆலயம் சென்று வணங்கிவிட்டு பிறகு திருமண விழா. எங்கள் குடும்பத்தினர் அனைவரும் என்னை ஆர்வத்துடன் வரவேற்றார்கள்)

பயணம் சிறக்க சென்னையை சார்ந்த மரியாதைக்குரிய  திரு S. பாலசுப்பிரமணியன், சுஜானா டூர்ஸ் மேற்கு மாம்பலம், சென்னை, அவர்கள் மிக அக்கரையுடனும் பாதுகாப்புடனும் வழி நடத்தினார். அவரின் அன்பான  சாதுவான மிக எளிமையான  பன்பு மிகவும் போற்ற தகுந்தது.  
குழுவில் என்னுடன் வந்த சகோதரர் பரணிதரன் மற்றும் அனைத்து சகோதர சகோதரிகளும் மிக மிக அன்பு, மரியாதை பொறுப்பு இருந்தது. ஒரு குடும்ப உறவு போல அமைந்தது இறையருள்.

இறைவனின் அளவற்ற கருணையினால் அற்புத தரிசனம் பெற்றோம். 

இறைவனின் கருணையினால் இனிய பயணமாக அமைந்தது. 
கைலாசநாதரே போற்றி போற்றி சுந்தரம்பாள் தாயே போற்றி போற்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 என்றும் அன்புடன் 
சுப்ராம் அருணாசலம், 
காரைக்கால் 
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Aditional information :
1.
Way to Kailash: Chennai - Lucknow - Nepal Gunji - SIMILCOT - Only transportation is Mini Charted Flight from Nepal Gunji and Only by Helicoptor to reach HILSA-Neapal Tibet Border.
Small Hill town. Said to be the Biggest town in the Biggest District -HUMLA in NEPAL. People are very kind and Cooperative. Hard workers.
2.
Thkkalcot in TIBET (China occupied) - Also called Burang. Some Budda Madalayams are here.   A big town on the way to Kailash. Fully China Controlled.  China's Immigration Office is here. Big shops and hotels are here.  We can purchase some items needs for Parikrama.
3.
SIMICOT to HILSA (On the way to Kailash Manasoravar) ஹில்சா மிக முக்கியமான இடமாக இருக்கிறது. .சுமார் 15-16 ஆயிரம் அடி உயரம் உள்ளது. ஹெலிகாப்டர் மட்டும் தான் செல்கிறது. சைனா தீபத் - வழியாக பாதை அமைத்துள்ளது நேபாள் மற்றும் திபெத் (சைனா) இடையில் இருக்கிறது. கர்நாலி என்ற நதி இரண்டயும் பிரிக்கிறது. சைனா நட்பு பாலம் என்று மிக பெரிய இரும்பு பாலம் ஒன்றும் Truck பாலம் ஒன்றும் அமைத்து ஹில்சாவில் புகுந்துவருகிறது.statistic view வில் மிக நுட்பமான திட்டத்தில் சைனா வளைத்து வருவது போலவே தோணுகிறது. நமக்கு கைலாஷ் செல்வதற்கு மிக முக்கிய வழியாக இருப்பதால், இந்தியா இந்த இடத்தை பற்றி சிந்தனை கொள்வது மிக முக்கியமும் அவசியமும் ஆகிறது. இதனால் நேபாளதிற்கும் நமக்கும் நன்மை ஏற்படும். இந்தியா அரசு இப்போதைக்கு நேபாளத்துடன் MOU செய்து ஒரு நட்பு இல்லம் அமைத்து, இந்திய யாத்ரீகர்களுக்கு உதவவேண்டும். ஹில்சாவில் சைனா அதிகாரிகள் வருகை அதிகரித்து வருகிறது. பாலத்தை தாண்டியவுடன் எதிரில் சீனாவின் இமிக்ரேஷன் அலுவலகம் மிக பிரமாண்டமாக அமைத்துள்ளது குறுப்பிடதக்கது. சீனாவின் இமிக்ரேஷன் முடித்துவிட்டுதான் தக்கல்கோட் (சைனா occupied TIBET) செல்ல வேண்டும். இந்தியா அக்கறை செலுத்தவேண்டும். முக்கியம்

4.
Thkkalcot in TIBET (China occupied) - Also called Burang. Some Budda Madalayams are here. A big town on the way to Kailash. Fully China Controlled. China's Immigration Office is here. Big shops and hotels are here. We can purchase some items needs for Parikrama.


I

II.

Sunday, December 20, 2020

கொளஞ்சியப்பர் கோவில் விருத்தாச்சலம்

கொளஞ்சியப்பர் கோயில் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தின் மேற்கில் 2 கி.மீ.தூரத்தில் சேலம் போகும் பாதையில் வரும் ரயில்வே மேம்பாலம் தாண்டியதும் இடது புறத்தில் அமைந்துள்ளது. பிரார்த்தனை ஸ்தலம். பல குடும்பங்களுக்கு குல தெய்வ ஆலயம். எப்போதும் திறந்து இருக்கும். கார், சிறிய பஸ்கள் ஒரமாக பார்க்கிங் செய்ய வசதி இருக்கிறது.

கருவறையில் வினாயகர் சன்னதி மற்றும் சுயம்பு முருகன் சன்னதி. 
தனி உருவம் இல்லாத அமைப்பு. வேறு எந்த முருகன் தலமும் இப்படி இருக்காது.
குழந்தை வரம் தருவதால் எப்போதும் பக்தர்கள் கூட்டம். 
ஆலயம் சுற்றிலும் பல்வேறு குல தெய்வ சன்னதிகள். 
இங்குள்ள முனிஸ்வரர் சன்னதியில் பிராது எழுதி கட்டிவைத்தால் எண்ணங்களை நிச்சயம் ஏற்று நிறைவேற்றுவார் என்ற ஆண்மீக நம்பிக்கையில் பணம் கட்டி, தனித்தனியாக பிராது விண்ணப்பம் எழுதி கட்டி வழிபாடு செய்து ஏராளமானோர் பலன் பெறுகிறார்கள்.

விருத்தகிரிஸ்வரரை வணங்க வந்த ஞானசம்பந்தருக்கு குழந்தையாக முருகன் வந்து வழிகாட்டிய இடமாக புராணவரலாறு  கூறுகிறது.
- என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
(16.12.20)

Friday, December 18, 2020

நண்டாங்கோவில் 16.12.20

நண்டாங் கோவில்: ஸ்ரீ கற்கடேஸ்வரர் ஆலயம், திருவிசநல்லூர் அருகில்.

திருவரங்கம் - திருக்கோவிலூர் அருகில் 16.10.20

திருவரங்கம்:  திருக்கோவிலூர் - மனலூர்பேட்டை சென்று திருவரங்கம் பெண்ணை ஆறு கரையில் உள்ள ஸ்ரீ ரெங்கநாதர் ஆலயம். பகல் முழுதும் திறந்திருக்கும் ஆலயம். (இரவு 8 மணி வரை).  
பள்ளிகொண்ட பெருமாள் மிக பெரிய சுதை உருவம்.
தாயருக்குத் தனி சன்னதியுடன் கூடிய ஆலயம்.
இவ்வரிய பெருமாளை தரிசிப்போருக்கு மறுபிறவில்லை என்று பட்டாச்சாரியார் கூறி தரிசனம் செய்விக்கிறார்.

முன்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ இராமர் சன்னதியில் உள்ள ஸ்ரீஅனுமனின் பணிவு தோற்றம்  வியக்கத்தது.
ஆலய உள் நுழைவில் கிழக்குப் பார்த்த சிறிய முன் கோபுரம் (இராஜகோபுரம்) தாண்டி வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள  அந்தக்கால தானிய குதிர் அமைப்புக் கட்டிடம் கவனிக்கத்தக்கது.
மனலூர்பேட்டை யிலிருந்து Auto or சிற்றுந்தில் வரலாம். நல்ல பாதை அமைப்பு ஆலயம் வரை இருந்தும், அதிகம் பஸ் போக்குவரத்து கிடையாது. 
(15.12.2020)

அரகண்டநல்லூர் 16.12.20

அரகண்டநல்லூர்: திருக்கோவிலூர் வடகிழக்கில் 5 கி.மீ.
குன்றுக்கோவில், ஒப்பிலாமணீஸ்வரர். பாடல் பெற்ற தலம். சுவாமி மேற்கு நோக்கி தனி ஆலயம், 
செளந்தர அம்பாள் மிக அழகுடன் கிழக்கு நோக்கி தனி ஆலயம். 
இங்கிருந்து
 ஸ்ரீ ரமணர் முனிவர் திருவண்ணாமலையை தரிசித்த இடம்.
பெண்ணயாற்றின் வடகரையில் அமைந்துள்ளது. தென்புறம் பெரிய ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
சில சன்னதிகள் குடவரை அமைப்பின் உள்ளது.
சுவாமி சன்னதி, சுற்றுப் பிரகாரம், கல் மண்பம் உள்ளது.
சிறிய சாய்தள கற்பாறை அமைப்பில் ஏறி சிற்றுந்துகளில் ஆலயம் உள் வரை செல்கிறார்கள்.
(16.12.20)

திருக்கோவிலூர்: உலகளந்த பெருமாள். (16.10.20)

திருக்கோவிலூர். ஸ்ரீ திரிவிக்கிரமர் - 
ஸ்ரீ புஷ்பகவல்லி தாயார் ஆலயம்.
உலகளந்த பெருமாள். ஆலயம்.
மிக உயரமான ராஜகோபுரம் அமைந்த மிகப்பெரிய ஆலயம். பல பகுதிகள் ஆக்கிரமிப்பில் சென்றாலும் புராதானம் மிகுந்த பெரிய தலம். 108 ல் ஒன்று.
இராஜகோபுரம் தாண்டி உள்ளே சென்றால், தாயாருக்கு தனி ஆலயம் பெருமாளுக்கு வலதுபுறம் அமைந்துள்ளது. பெருமாள் ஒரு காலை ஊன்றி மற்றொரு காலை தென்புறம் உயரத்தில் காட்டும்  தோற்றம்.  அருகில் பூமாதேவி. ஊன்றிய கால்பாதத்தைப் பற்றிய படி பக்தர் அமர்ந்துள்ளார்.
அபூர்வ தோற்றம். நிறைய புராணங்கள் உள்ளதும், பலர் வழிபட்டு அருள் பெற்ற,
வைணவர்கள் போற்றும் அற்புத ஆலயம்.
(16.12.20)

எலவனார் சூர்கோட்டை 16.10.20

எலவனார்சூர்கோட்டை :
திருக்கோவிலூர் - கள்ளக் குறிச்சி பிரதான சாலையில் அமைந்துள்ள ஊர். மிக வித்தியாசமான அமைப்பில் உள்ள சிவன் ஆலயம். இரண்டடுக்கு மாடக்கோவில். சுவாமி மேற்கு பார்த்தும். எல்லா நந்திகளும் மேற்கு பார்த்தும் அமைந்துளது.  மேற்கு பார்த்த பெரிய இராஜ கோபுரம் எல்லா சுவற்றிலும் பெரிய எழுத்துகளில் கல்வெட்டுகள் உள்ளது. 
கிழக்குப் பார்த்து அம்பாள் தனிக்கோவில்.
அடுத்து பெரிய கொடிமரம். கொடிமரம் பார்த்து சிறிய மண்டத்தில் நந்திபகவான்.
அடுத்து 3 அடுக்கு இராஜகோபுரம் உள்ளது இங்கும் முழுவதும் கல்வெட்டு எழுத்துகள். உள்ளே நீண்ட மண்டம் எதிரில் கம்பீரமான தனி சன்னதியில் நம்மை நோக்கும் நந்திபகவான். நமக்கு இடது புரம் மண்டபத்தில் கிழக்கு பார்த்து ஒரு சிவலிங்கம். அடுத்தடுத்து பிரகாரத்தின் சுற்றில் பெருமாள்,  முருகன், சன்னதிகள். உள்
நுழைந்து வலது புறத்தில் பெரிய உருவத்தில் தென்மேற்கு மூலையில் வினாயகர்.
சுவாமி கருவரை இரண்டாம் அடுக்கில் உள்ளது. கீழ்பகுதியிலிருந்து இரண்டு பக்கமும் கற்படிகள் ஏறுவதற்கு உள்ளன. மேலே ஏறியதும் நீண்ட மண்டப தூண்கள் முழுதும் அழகான கற்சிற்பங்களில் கவணிக்கத்தக்கவை.
மண்டபம் தாண்டி, உள்புறம் உள்ள மண்டம் நந்திபகவான் நம்மை நோக்கியபடி. அதன் மீது உள்ள தனி மண்டபத்தில் கருவரையில் மிக கம்பீரமான பெரிய அற்புத லிங்கம் வடிவில் சுவாமி. ஆலயம்
கோட்டை அமைப்பில் உள்ளதால் கோட்டைக் கோவில் என்று குறிப்பிடுகிறார்கள்.
சூரர்களை அழித்து கோட்டையில் அருள் தருகிறார். 
கருவரை மேல் கலச பகுதியின் 4 புறமும் நந்திபகவான் ஒரேபுரம் நோக்கிய அமைப்பு.
படியிறங்கி கருவறை கோட்டையை சுற்றில் சண்டிகேஸ்வரர், தட்சினாமூத்தி சன்னதிகள் தரிசித்து அதே வழியில் ஆலயம் முன்புறம் வர வேண்டும்.
வெளிபுற பிரகாரத்தில் தனியாக அம்பாள் சன்னதியும் ஆலயமும் உள்ளது. வட புறத்தில் தனியாக பெரிய மண்டபம் மற்றும் மூலையில் சிறிய கல் படித்துறையுடன் பெரிய தீர்த்தக் கிணறும் உள்ளது
மீண்டும் படி இறந்

பகலில் திறந்தே வைத்திருக்கிறார்கள். எப்போதும் தரிசிக்கலாம். பங்குனி உத்திரத்தில் பிரம்மோர்ச்சவம். புதிய தேர் உள்ளது. ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன.
 விருத்தாச்சலத்திற்கு 27 கி.மீயில்.
(16.12.20)

Saturday, December 12, 2020

சிவபோகசாரம் (98)

சிவபோகசாரம் (98) வினையே அனுதினம் அனுபவம்.

Wednesday, December 9, 2020

சிவபோகசார சிந்தனைகள் (129)

சிவானந்தம் என்பதனை உண்மை மாத்திரையானும் கனவிலும் அறியார்;

அதனை அறிந்தநுபவிக்கும் அநுபூதிமான்களையும் அடையார்;

அதுவேயுமன்றி  
அப்பெரியோர்கள் மேல் இல்லாத குற்றங்களை ஏற்றி எங்கும் தூற்றுவார்;

 இவை அவர்கட்கு விதியாய் அமைந்தன.

- சிவபோகசாரம் (129)
பொருளுரை: மகாவித்வான் அருணை வடிவேல் முதலியார்.

Wednesday, December 2, 2020

வினாவுரை பதிகம் மூன்றம் திருமுறை பதிகம்.

பதிவு: 5.4.
4. #வினாஉரை_பதிகங்கள் 
#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
🙏🏻🙆‍♀️⚛️❄️✡️🙇‍♂️🔱🕉️🔱🙇‍♀️⚛️🙆🏻‍♂️🙏🏻
#சம்பந்தர்அமுதம்:
💥பதிவு : 5.4.
4. #வினாஉரை_பதிகங்கள் : 
🙏🎪🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♀️🎪🙏
          🙆#ஆன்மீகமே_தமிழ்🙆🏼‍♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.                        
                 🙏🙇‍♂️நன்றி🙇‍♀️🙏🏻 
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
பதிவு: 5.4.
4. #வினாஉரை_பதிகங்கள் : 
திருஞானசம்பந்தரின் அற்புத பதிக அமைப்பை ப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
பாடல் குறிப்புக்களையும், பொருளையும், சிறப்புகளையும் மிகச் சுருக்கமாகவே தந்துள்ளேன். ஒவ்வொரு பாடலும் தனித்தனியாக  உணர்ந்து சிந்தித்தால் இறை பேராற்றலும், அருளும் உண்மை பொருளும் அவரவர் திறனறிவுக்கு நிச்சயம் கிட்டும். எனவே, இப்பதிவு ஒரு அறிமுகமே. பலன் பெற அன்புடன் வேண்டுகிறேன்.

பொருள் :
#வினாஉரை_பதிகங்கள் =
வினவுதல் வழி உரைத்தல்:
பாட்டுடைத் தலைவன் அருட்செயல்களை  பல்வேறு கோணத்தில், கிண்டல், கேலி செய்வது போன்றும், எளிமை செய்தும் தலைவனின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டு அருளப்பட்ட பதிகங்கள்.

இந்த பதிவு : மூன்றாம் திருமுறையில் 
வரும் பதிகம்: 296 பாடல் பற்றியது.
🙏
மூன்றாம் திருமுறை:
பதிகம்: 296
தலம்: திருக்கண்டியூர் வீரட்டம்.
பண் : கொல்லி
பதிகம் முதலடி : 'வினவினேன் அறியாமையில் '
 பாடல் சிறப்பு:
1. வினாவுரைத் திருப்பதிகம்.
மாணிக்கவாசகர் திருச்சாழல் பதிகத்தை ஒப்புநோக்கத்தக்கது. மிகச்சிறப்பான பாடல்கள் அமைந்தது.
2.  இறைவரின் பேராற்றலை, அவர்தம் அடியார்களிடம், வினாவுரையாக அமைத்த அற்புத பதிகம்.
3. ஒவ்வொரு பாடலின்
முதலடியும் அடியாரிடம் அவர் பெருமை கூறி இறைவன் செயல் காரணம் வினவுகிறார்.
4.இரண்டாவது வரி தலப் பெருமை கூறுவது.
5.மூன்றாவது வரி இறைவன் சிறப்பை உணர்த்தியது.
4. கடைசி வரியில், இறைவரின்
 அருட்பேராற்றலை வியந்தது.

இப்பதிகத்தின் 11 பாடல்களின் பொருள் விளக்கத்தை சிறிது சிந்திப்போம்.
1️⃣
முதல் பாடல் :
1. அடியவர் பெருமை அமைத்து கேள்வி கேட்கும் விதம்: 'வினவினேன் அறியாமையில் உரை 
செய்ம்மினீர் அருள் வேண்டுவீர்'
2.. தலப் பெருமை:
'கனவிலார் புனல் காவிரிக்கரை மேய கண்டியூர் வீரட்டன் '
3. இறைவர் பெருமை:
'தனமுனே தனக்கு இன்மையோதமர்
ஆயினார் அண்டம் ஆளத்தான்'.
4. பேரருட் திறன் வியப்பு
'வனனில் வாழ்க்கை கொண்டு ஆடிப்பாடி இவ்
வையமாப்பலி தேர்ந்ததே '
பொருள் :
1.முதல்வரி:
ஈசனைத் தொழுது போற்றி அருள் நாடும் அன்பர்களே. அறியாமையால் வினவுகிறேன். உரைசெய்யுங்கள்.
2. இரண்டாவது வரி:
ஆரவாரமிகுந்து செல்லும் காவிரியின் கரையில் மேவும் கண்டியூர் வீரட்டன்
3. மூன்றாவது வரி:
தனக்கு இணையாக ஒருவரும் இல்லாதவரான ஈசன்
4. நான்காம் வரி:
பேராற்றல் வியப்பு: தனக்குவமையில்லாத, இறைவர்
மயானத்தில் ஆடியும் பாடியும் இவ்வுலகில் கபாலம் ஏந்தி பிச்சை கொண்டு விளங்குவது கண்டு வியத்தல்.
2️⃣
பாடல். 2.
1. 'உள்ள வாறெனக்கு உரை செய்மின் உயர்
வாய மாதவம் பேணுவீர்.
2. கள்ள விழிபொழில் சூழும்கண்டியூர்
வீரட்டத்துறை காதலான்.
3. பிள்ளைவான் பிறை செஞ்சடைம் மிசை வைத்ததும் பெரு நீரொலி
4. வெள்ளத் தாங்கியது என் கொலோமிகு
மங்கையான் உடனாகவே '.
பொருள் :
1.உயர்வாகிய மாதவத்தைப் பேணுகின்றவர்களே! உள்ளவாறு உரைப்பீரே.
2.தேன் கமழும் பொழில் சூழும் கண்டியூரில் வீற்றிருக்கும் வீரட்டநாதன், 
3.பிறை சந்திரனை சடையின் மீது வைத்ததும்,
4.பெருநீராகிய கங்கையைத் தாங்கியதும் என் கொல் !
என்று வினவுகிறார்.
3️⃣
பாடல் 3.
1. 'அடியர் ஆயினீர் சொல்லுமின் அறிகின்றிலேன் அரன் செய்கையைப் '
2. 'படியெலாம் தொழுது ஏத்து கண்டியூர் வீரட்டத்துறை பான்மையான்'
3. 'முடிவுமாய் முதலாய் இவ்வைய முழுதுமாய் அழகாயதோர்'
4. 'பொடியதார் திரு மார்பினிற்புரி
நூலும் பூண்டெழு பொற்பதே'

பொருள் :
1.அடியவர்கள் ஆகியவர்களே அரனின் செய்கையைச் சொல்லுங்கள்.
2. உலகமெல்லாம் தொழுது ஏத்துகின்ற கண்டியூரில் வீரட்டானத்தில் உறைகின்ற பெருமான், 
3.அந்தமாக, முதற் பொருளாய் உலகம் முழுதும் ஆகி இருப்பவர்;
4. திருவெண்ணீற்றினைத் திருமார்பில் பூசி, முப்புரி நூல் அணிந்து மேவும் பொற்பு தான் யாது? என்று வினவுகிறார்.
4️⃣
பாடல் 4.
1. 'பழைய தொண்டர்கன் பகருமின் பல
வாயவேதியன் பான்மையைக் '
2. கழையுலாம் புனல் மல்கு காவிரி
மன்னு கண்டியூர் வீரட்டன்.
3. குழையொர் காதினிற் பெய்து கந்தொரு குன்றின் மங்கை வெருவுறப்
4 புழைநெடுங்கைநன் மாவுரித்தது
போர்த்து உகந்த பொலிவதே. 

பொருள் :
1. வாழையடியாக வந்த திருக்கூட்ட  தொண்டர்களே பலவாகிய தன்மைகள் உடைய ஈசன் பாங்கினை பகருங்கள்.
2. காவிரி வளம் பெருகி மேவும் கண்டியூர் வீரட்டன்
3. குழையணிந்த காதிணன், மலைமகளான உமையவளுடன் இருப்பவர் ஈசன்.
 4. மலைமகள்  வெறுவுமாறு யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டது ஏன் என்று வினவுகிறார்.
5️⃣
பாடல்.5.
1. 'விரவிலாது உமைக் கேட்கின்றேன் ஈசன் அடி விரும்பி ஆட் செய்வீர் விளம்புமின்
2. கரையெலாம் திரை மண்டு காவிரிக் கண்டியூர் உறை வீரட்டன்
3. முரவமொந்தை முழாவொலிக்க முழங்கு பேயொடும் கூடிப்போய்ப்
4. பரவுவானவர்க்காக வார் கடல் நஞ்சம் உண்ட பரிசதே'.

பொருள்.
1. ஈசனடி போற்றும் தொண்டர்களே விளம்புங்கள்.
2. காவிரியின் அலைகள் பெருக மேவும் கண்டியூர் உறையும் வீரட்டனார்
3. மொந்தை, முழவு, வாத்தியங்கள் முழங்க பேய் பூத கணங்களும் சூழ நிற்கும் ஈசன்.
4. வாணவர்க்காக கடலில் தோன்றிய நஞ்சினை உடன் பரிசு என் கொல். என்றார்.
6️⃣
பாடல். 6.
1. 'இயலுமாறு எனக்கு இயம்புமின் இறைவனுமாய்
(வன்னுமாய்)  நிறை செய்கையைக்
2. கயல் நெடுங்கண்ணி னார்கள் தம்பொலி
கண்டியூர்உறை வீரட்டன்
3.புயல் பொழிந்திழி வானுளோர்களுக்
காக அன்றயன் பொய்ச்சிரம் 
4. அயல்நகவ்வது அரிந்து மற்றதில்
ஊணுகந்த அருத்தியே'.

பொருள் :
1. ஈசன் திருவடி வணங்கும் பக்தர்களே, நான் அறிந்து கொள்வதற்கு இயலுமாறு இயம்புவீர்
2. கயல் போன்ற கண்ணுடைய மகளிர் பொலிந்து வாழும் கண்டியூரில் உறையும் வீரட்டன்.
3. உலகில் மழை பெய்வித்து நலம்புரியும் தேவர்களுக்காக பிரமனுடைய (ஆணவத்தை) சிரத்தை கொய்த அருட் திறன். 
4. பிரம்மன் தலையைக் கொண்டு, பிச்சை ஏற்று உண்ணும் விருப்பத்தைக் கொண்டது ஏன் என்று வினவுகிறார்.
7️⃣
பாடல்: 7
1. திருந்து தொண்டர்கள் செப்புமின் மிகச்
செல்வன்றன்னது திறமெலாம்
2.கருந்தடங் கண்ணி னார்கள் நாம் தொழு 
கண்டியூர் உறை வீரட்டன்
3.இருந்து நால்வரோடு ஆல்நிழல் அறம் உரைத்ததும்மிகு வெம்மையார்
4. வருந்தவன்சிலை யால் அம்மாமதில்
மூன்றுமாட்டிய வண்ணமே.

பொருள்:
1. நன்கு சிவஞானத்தை உணர்ந்த சிவதொண்டர்களே, சிவபெருமானின் திறம் நன்கு உரை செய்வீராக.
2. மகளிர் கூடி தொழும் கண்டியூரில் உறையும் சிவன்
3. சனகாதி முனிவர்களாகிய நால்வருக்குக் கல்லால மரத்தின் நிழலில் இருந்து அறப்பொருள் உரைத்த திறன்.
4. முப்புர அரசுகளும், அவர்கள் கோட்டை மதில்களும் எரியுமாறு
மேருமலையை வில்லாக கொண்ட திறன் சிறப்பைக் கூறுக.
8️⃣
பாடல் : 8
1. நாவிரித்தரன் தொல்புகழ் பல
பேணுவீர் இறை நல்குமின்
2.  காவிரித்தடம் புனல்  செய்கண்டியூர்
வீரட்டத்துறை கண்ணுதல்
3. கோவிரிப்பயன் ஆன் அஞ்சு ஆடிய
கொள்கையும் கொடி வரை பெற
4. மாவரைத்தலத் தால் அரக்கனை வலியை  வாட்டிய மாண்பதே.

பொருள். 
1. நாவினால் ஈசன் புகழ் போற்றும் அன்பர்களே விடை கூறுங்கள்.
2. காவிரியின் நீர் வளம் பெருகும் கண்டியூர் சிவன்.
3. பசுவிலிருந்து பெறும் பஞ்ச கெளவியத்தை பூசிக்கும் பொருளாக ஏற்றவர்.
4. இரவணன் கயிலைமலையால் நெரியுமாறு விரலை ஊன்றி, வலிமையை அழித்து விளங்கிய மாண்பு யாது என வினவுகிறார்.
9️⃣
 பாடல் : 9
1. பெருமையேசர ணாக வாழ்வுறு மாந்தர்காள் இறை பேசுமின்
2. கருமையார்பொழில் சூழுந்தண்வயற்
கண்டியூர் உறை வீரட்டன்
3. ஒருமையால் உயர் மாலும் மற்றை
மலரவன் உணர்ந்து ஏத்தவே
4. அருமையால் அவருக்கு உயர்ந்து எரி
யாகிநின்ற அத் தன்மையே.

பொருள் :
1. சிவனார் பெரும்புகழ் பரவி சரன் புகுந்து அருளில் திளைக்கும் பக்தர்காள் பகர்வீராக.
2. வளமையான பொழில் சூழ்ந்தும், குளிர்ச்சியான வயல்களும் உடைய கண்டியூர் உறையும் வீரட்டன்.
3.திருமாலும், பிரமனும் ஏத்தி நிற்பவன்.
4. மாலுக்கும், பிரம்மனுக்கும் எட்டாதவனாய் உயர்ந்து, தீத்திரளாய் நின்ற தன்மை தான் யாது?
🔟
பாடல்: 10
1. நமர் ஏழுபிறப்பு அறுக்கு மாந்தர்காள்
நவிலுமின் உமைக் கேட்கின்றேன்
2. கமரழிவயல் சூழுந்தண்புனற்
கண்டியூர் உறை வீரட்டன்
3. தமரழிந்தெழு சாக்கியச் சமண்
ஆதர்ஓதும் அதுகொளா
4. தமரர் ஆனவர் ஏத்த அந்தகன்
தன்னைச் சூலத்தில் ஆய்ந்ததே.

பொருள் :
1. தம்மைச் சார்ந்து விளங்கும் சுற்றத்தினரின் பிறவிப் பிணியை அறுக்கும் அடியவர்களாகிய மெய்த்தொண்டர்களே
2.வரட்சி இல்லாத குளிர்ந்த நீர் பெருகும் வயல்கள் சூழ்ந்த கண்டியூரில் உறையும் ஈசன்.
3. சமணர், சாக்கியர்தம் சொற்களைக் கருத்துடையதாகக் கொள்ளாதது.
4. அந்தகனைச் சூலத்தால் சம்ஹாரம் செய்த அருள்திறன்
என் கொல்.
1️⃣1️⃣
பாடல்.11
1. கருத்தனைப் பொழில் சூழுங் கண்டியூர்
வீரட்டத்துறை கள்வனை
2. அருத்தனைத்திறம் அடியார்பால்மிக்க மிகக்
கேட்டு கந்த விளைவுரை
3. திருத்தமா திகழ் காழி ஞானசம் பந்தன் செப்பிய செந்தமிழ்
4.ஒருத்தராகிலும் பலர்களாகிலும்
உரைசெய்வார்  உயர்ந்தார்களே.

பொருள் :
1. அன்பர்தம் கருத்தாக விளங்கி, கண்டியூரில் உறையும் ஈசன், பிறரால் காணப்பெறாது, மனத்தைக் கவரும் கள்வராகவும்,
சொல்லின் பொருளாகவும் இருப்பவர். அப்பெருமானின் திறத்தினை அடியவர்களிடம் வினாவுரையாகக் கேட்டு மகிழ்ந்த, திருத்தமாய்த் திகழும் காழியின் ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழாகிய இதனை, ஒருவராகத் தனித்தும், பாராகச் சேர்த்தும் பாடுபடுபவர்கள், உயர்ந்தவர்கள் ஆவார்கள்.
சிறப்பு:
திருத்தமாந்திகழ்காழி ஞானசம்பந்தன்:

திருஞானசம்பந்தர், ஈசன் 
அருட்திறத்தை நன்கு உணர்ந்தவர் என்பது இவ்வரிகளால் உணரலாம்.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர் ,பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
முன்பதிவு :
https://m.facebook.com/story.php?story_fbid=4670461403029080&id=100001957991710
மற்றும்
https://subbramarunachalam.blogspot.com/2020/10/53.html?m=1
❤️🙏🔱🔯🕉️📿🕊️🇮🇳🛐☸️🏵️📚🌹

உயிரின் பயணம்

எண்ணமே வாழ்வு

அனுபவக் கருவியே மனம்

அனுபவக் கருவியே மனம்:

வாழ்வியல் அனுபவங்களை ஐம்புலன்களால் பெற்றுணர்ந்து, அதை வெளிப்படுத்துவதும், அதன்படி செயல்பட செய்யவும் உதவும் கருவியே மனம். 

வடிவமில்லாத இயந்திரம்.

இன்பம், துன்பம், நல்லவை, அல்லவை, எல்லாம் மனம் உணருவதே.
எண்ணங்கள் தருவது மனம். 

உணருவதும், உணரச் செய்வதும்,
சிந்திக்கவும், சிந்திக்கச் செய்வதும், செயல்படவும், செயல்பட செய்யவும், செய்யும் மனம்.

மன எண்ணங்களை செயல்படுத்துதலே வினை;
அதன் விளைவின் முடிவில் பெறுவதே அறிவு.

எல்லாம் செய்யும் மனமே.
இதைத் தருவது சிவமே.

சிவமே மனம்; மனமே சிவம் என்றுணர்வோம்.

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...