#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#HYDRABAD_TELUNGANA
#SALAR_JUNG_MUSEM
(30.8.2021 - MONDAY)
பதிவு: 3
சார்லர்ஜங் அருங்காட்சியகம் :
(1889 - 1949)
🌟இந்தியாவில் உள்ள முக்கிய 3 தேசிய அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்று. உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் சேகரிக்கப்பட்ட கலைப் பொருள்கள் ஏராளமாக உள்ளது.
🌟ஐதாராபாத் ஏழாவது நிஜாமின் பிரதம அமைச்சரான மூன்றாம் நவாப் பீர் யூசுஃப் அலி கான் சார்லர்ஜங் என்பவர் தமது வருமானத்தின் மூலம் 35 ஆண்டுகள் முயன்று அரும் பொருட்களை சேகரித்தார்.
🌟உலோக சிற்பங்கள் சலவைக்கல் சிற்பங்கள், ஓவியங்கள் தந்தப் பொருட்கள், விதவித ஆடை அணிகலன்கள், பீங்கான் பொருட்கள், விதவித கடிகாரங்கள், இருக்கைகள் என சுமார் 42000 பொருட்கும், 6000 சால்கள், 950 கையெழுத்துப் பிரதிகள், ராஜா ரவிவர்மா ஓவியங்கள், முகம்மதிய மன்னர்கள் காலத்திய ஆயுதங்கள், அங்கி, தலப்பாகைகள், உள்ளன.
சூரிய கடிகாரம் உள்ளது.
🌟ஒரு அதிசிய வேலைப்பாடுகள் நிறைந்த கடிகாரம் முக்கியத்துவம் பெற்றது. ஒவ்வொரு வினாடிக்கும், முரசு அறையும் பொம்மையும், மனிக்கு ஒரு முறை ஒரு சிப்பாய் பொம்மை கதவு திறந்து மனியை ஒலித்து பின் செல்வது போல உருவாக்கப்பட்டிருந்தது. சிறிய உருவம் உள்ள பொம்மைகள் செய்வதை மணி அடிப்பதை ஒளிக்காட்சியாகத் திரையில் நேரடியாகக் காணலாம். நாங்கள் நேரில் கண்டு வியந்தோம்.
🌟இக்காட்சியகத்தை 1951ம் ஆண்டு,
பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் திறந்து வைத்துள்ளார்.
🌟பெரிய வளாகம் cell camera பணம் கட்டி எடுத்துச் சென்றால் புகைப்படம் எடுக்கலாம்.
🌟பெரிய Bag, Cell முதலிய மின்னனு சாதனங்களை Cloak Room ல் வைத்து விட்டு செல்ல வேண்டும்
🌟இங்கிருந்து Charminar செல்ல Share Auto 20 மட்டுமே (30.8.2021).
🌟நுழைவுக்கட்டணம் 25 (அனைவருக்கும்)
Mobil Camera வுக்கு 25 ரூ தனி
Cloak Room உண்டு.
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
No comments:
Post a Comment