Sunday, September 19, 2021

SPLENDORS OF INDIA - AKSHARDHAM

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#AHAMADABAD_GUJARAT
#AKSHARDHAM 
#SWAMY NARAYANAN TEMPLE
(01.09.2021- புதன்)

✡️குஜராத், அகமதாபாத், காந்திநகர் Sectorல் அற்புதமான முறையில் வடிவமைக்கப்பட்ட  ஆலயம்.

✴️இவ்வாலயம், ஸ்ரீசுவாமிநாராயனர் அவர்களின் வழி 4வது சீடர் யோகி மகராஜ் மற்றும் பிரமுக் சுவாமி அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அமைக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள பெரிய இந்துக் கோவில், சுமார் 13 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு 1992 அக்டோபர் 30ல் திறக்கப்பட்டது.

 ✴️இவருக்கு பின் வந்த சீடர்களாலால் ஸ்ரீசுவாமிநாராயணர் போதனைகள் உலகம் முழுதும் பரப்பப்பட்டு சுமார் 55000 தன்னார்வலர்கள் தற்போது உள்ளனர். மனிதாபிமானம், உலக சகோதரத்துவம், என பல்வேறு தனித்துவம்மிக்க போதனைகள் ஏற்கப்பட்டு எல்லாமதத்தினரும் வந்து வழிபட்டு வருகின்றனர்.

✴️குரு இல்லாமல் ஒருவன் கடைத்தேற முடியாது. 1971ம் ஆண்டு சாப்பியா கிராமத்தில் ஸ்ரீசுவாமிநாராயணர், உத்திரப்பிரதேசத்தில் பிறந்தவர்.  11 வது வயதில் யோகியானார்.  நாட்டின் பல பகுதிகளையும் சுமார் 12000 கி.மீ பயணம் செய்தார்.

✴️ சுவாமிநாராயணர் ஆலயம் இந்தியாவில் 6 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
✴️மிக பிரம்மாண்டமான மார்பிளால் கட்டப்பட்ட, அழகிய, கலை நுட்பத்துடன் விளங்கும் ஆலயம்.

✴️ ஹரி மண்டபம் என்னும் நடுமண்டபம் மூலஸ்தானம் ஆகும். சுவாமி நாராயணர் என்னும் குருவே மூலஸ்தானத்தில் உள்ளார். அவர் அருகில் பிரதம சீடர்கள் நிற்கிறார்கள். அனைத்தும் தங்க சிலைகள்.
✴️மூலவர் 7 அடி தங்க சிலை.

✴️காந்திநகரில் உள்ளது.
900 சிற்ப கலைஞர்கள் பாடுபட்டு உருவாக்கியுள்ளனர்.

✴️உலகத்தின் பல பகுதிகளிலிருந்து மக்கள் வந்து தரிசனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

✴️வருடத்திற்கு சுமாரக6 மில்லியன் பேர்கள் இங்கு வந்து செல்கிறார்கள்.

✴️சுவாமிநாராயணனின் போதனைகள், அவரின் பற்றாளர்கள் குஜராத்தில் மிகவும் அதிகம்.

✴️6000 மெட்ரிக் டன் அளவில் ராஜஸ்தான் பிங்க் மார்பிள் கற்களால், கட்டபட்டுள்ளது. 7 அடி 
மூல சிலை 1.2 டன்கள் கொண்டது.

✴️உட்கார்ந்திருக்கும் நிலையில் ஸ்ரீ சுவாமிநாராயணரரும், அவர் அருகில் அவர் சீடர்கள் இருபுறமும், நின்ற நிலையில் உள்ளனர்.

✴️108 அடி உயரம், 131 அடி அகலம்,  240 அடி பாதை நீளம். 97 செதுக்கப்பட்ட அழகிய தூண்கள் கொண்டது.

✴️சிவன், பார்வதி, கணேஷ் சிலைக்கும், கிருஷ்ணர் - ராதா, பெருமாள்- லெட்சுமி, சிலைகளும் உண்டு

✴️அபிஷேக மண்டம் 
இங்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்ய தனி சிலை உள்ளது. கட்டணம் செலுத்தி பிரார்த்தனை அபிஷேகம் செய்து கொள்ளலாம்.
 
✴️கண்காட்சி அறைகள்:
5 கண்காட்சி அறைகள், தனித்தனியாக கட்டணத்துடன் ஆலயத்தின் வடபுறத்தில் உள்ள பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

✴️ஸ்ரீசுவாமிநாராயணர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஏராளமாக, உள்ளன.
✴️குஜராத், அகமதாபாத், காந்திநகரில் உள்ளது.

💥நுழைவுக்கட்டணம் கிடையாது.
பலத்த சோதணைகள் உண்டு. Cloak ரூம் தனியாக உள்ளது. Cell முதலிய Electronic பொருள்கள் கொண்டு செல்ல முடியாது. பத்திரமாக வைத்து செல்ல தனி Counters உண்டு.
✴️காலை 9.30 முதல் மாலை 7.30 வரை அனுமதி உண்டு.
✴️கண்காட்சி, முதலியவற்றிற்கு தனித்தனி கட்டணங்கள் உண்டு.
✴️மேலும், நீர் விளையாட்டுகள், ஒலி ஒளி காட்சிகள் முதலியவைகளும் தனிக்கட்டணங்களில் உண்டு.
✴️உணவுக் கூடம் தனியாக உள்ளது.
✴️RESTRooms நிறைய இடங்களில் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு தனித் தனியாக உள்ளன.
✴️புனிதமான இடம் என்பதால், கருவறை மண்டபம் முன்புறம் தனி Cheppal Stand வசதி செய்துள்ளார்கள்.

✴️தனி கார், பஸ் பார்க்கிங் வசதிகள் உண்டு.
✴️ஏராளமான யாத்திரீகர்கள் வருவதால், கட்டுப்பாடுகள் உண்டு.

குறிப்பு..
💥அக்சர்தாம் கோயில் தாக்குதல் (Akshardham Temple Attack), இந்திய மாநிலமான குசராத்தின் தலைநகரான காந்திநகரில் உள்ள அக்சர்தாம் கோயிலில் 24 செப்டம்பர் 2002 அன்று மாலை முதல் 25 செப்டம்பர் 2002 காலை வரை, பாகிஸ்தான் நாட்டு லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது இயக்க தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், குண்டு வீச்சிலும் 29 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 80 பேர் காயமடைந்தனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குஜராத் காவல் துறையினரும், தேசிய பாதுகாப்பு படையினரும் நடத்திய எதிர்தாக்குதலில், லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் சே முகமது இயக்கத்தின் தீவிரவாதிகள் முர்துசா ஹபீஸ் யாசின் மற்றும் அஷ்ரப் அலி முகமது பரூக் ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த எதிர் தாக்குதலில் மூன்று பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டனர்.

🛐Mahalashmi Temple, அகமதாபார்.
நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் இருந்த மகாலெட்சுமி ஆலயம். சுமார் 15 படிகள் கொண்டது. பிராதான சாலையில் உள்ளது.
மூலஸ்தானத்தில், பெரிய அழகிய மகாலெட்சுமி அருமையாக உள்ளது. சுற்றி வருவதற்கு சிறிய பாதையும் உண்டு.   பிரார்த்தனை தலம் என்று கூறுகிறார்கள்.
❤️
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#அக்ஷர்தாம்_குஜராத்

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...