Sunday, September 19, 2021

SPLENDORS OF INDIA -SABARMATHI MUSEUM

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#AHAMADABAD_GUJARAT
#SABARMATHI_ASHRAMAM
(01.09.2021 - புதன்)
சபர்மதி ஆசிரமம்:
அகமதாபாத் நகரின் நகர மண்டபத்திலிருந்து 4 மைல்கள் தொலைவில் சபர்மதி ஆற்றின் கரையில் புறநகர் சபர்மதியின் புகழ்பெற்ற ஆசிரமம் சாலையில் அமைந்துள்ளது. இது காந்தி ஆசிரமம் என்றும் அரிசன் ஆசிரமம் என்றும் சத்தியாகிரக ஆசிரமம் என்றும் குறிப்பிடப்படுகிறது. 
🌟தேசத் தந்தை மகாத்மா மோகன்தாசு கரம்சந்த் காந்தி அவர்கள் 1918 முதல் 1933 வரை இங்கு வாழ்ந்திருந்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் 1930ஆம் ஆண்டு நடைபெற்ற தண்டி யாத்திரையில் முக்கிய பங்காற்றிய இவ்விடம் இந்திய அரசால் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
♻️இன்றைய நிலையில்.
Gandhi Smarak Sangrahalaya என்ற அமைப்பு இதை பராமரித்து வருகிறது.
🌟ஒரு பெரிய மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது.
10-05-1963ல் பண்டிட் ஜவகர்லால் நேரு அவர்கள் இதைத் திறந்து வைத்துள்ளார்.
✴️புகைப்பட கண்காட்சி:
மகாத்மாவின் வாழ்வில் நிகழ்வுற்ற பல்வேறு நிகழ்வுகளை விளக்கும் ஏராளமான புகைப்படங்கள், நூல்கள் வைக்கப்பட்டுள்ளது.

🔆அரிய பல்வேறு பொருட்கள், கையெழுத்துப் பிரதிகள், புகைப்படங்கள், ஓவியங்கள், நிறைந்துள்ளது.

🔆ஏராளமான வித்தியாசமான அமைப்பில் ராட்டைகள் இயந்திரங்கள் உள்ளன.

🔆மிக அதிகமான வரலாற்று பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

🔆வருடத்திற்கு சுமார் 7 இலட்சம் பேர் வந்து செல்லுமிடமாக உள்ளது.

🔆சபர்மதி ஆற்றின் கரைகள் அழகிய படிகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரமத்திலிருந்து தேவையிருக்கும் போது செல்ல வழி உள்ளது.

🔆ஆசிரமத்தில் அமைதி, புனிதம் நிறைந்துள்ள இடமாக அனுபவத்தில் உணரலாம்.

✡️தேசத்தின் மீது அக்கரையும், மகாத்மாவின் மீது பேரன்பும் கொண்ட பாரதத்தின் புதல்வர்களுக்கு இவ்விடம் ஒரு மதிப்பான ஆலயம். மறக்க இயலாத இடமே.

🔆காலை 8 மணி முதல் மாலை 7 மணிவரை திறந்திருக்கும்.
🔆நுழைவுக்கட்டணமில்லை

 என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...