#SPLENDORS OF INDIA - GUJARATH
#NISHKALANTH_MAHADEVAR
பதிவு - 2.
கரையில் உள்ள ஆலயங்கள்:
🔯குஜராத்தில், கட்ச் வளைகுடாவில் அரபிக்கடல் ஒட்டி பவன் நகர் வரை ரயிலில் சென்று அங்கிருந்து பேருந்தில் கடற்கரை ஓரம் உள்ள கோலியாக் என்றும் சிற்றூரில் உள்ள ஆலயம்.
🛐அகமதாபாத்திலிருந்து பாவ்நகர் சாலை வழியே 176 கி.மீ. தொலைவிலும், ரயில் பயணத்தின் மூலம் 229 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. பாவ்நகரிலிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் கோலியாக் கடற்கரை கிராமம் அமைந்துள்ளது. கடற்கரையிலிருந்து 1 கி.மீ. கடலுக்குள் நடந்தால் கடவுளை தரிசித்த மெய்சிலிர்க்கும் அனுபவத்தைப் பெறலாம்.
🔯கடற்கரை ஓரம் மூன்று
சிறிய சிவன் ஆலயங்கள் இருக்கிறது.
வழிபட்டு சென்றோம்.
1.ராதாகிருஷ்ணன் சிவன் ஆலயம்.
இந்த ஆலயம் கடற்கரைக்கு முன்னால் 200 மீ.தூரத்தில் உள்ளது.
இரண்டு கோபுரங்கள். சிறிய லிங்கமூர்த்தி ஒரு கருவறையிலும், மற்றொன்றில், ராதாகிருஷ்ணரும் உள்ளார்கள். சிவனுக்கு முன் அழகிய நந்தி. மற்றும் ஒரு புறம் விநாயகர் எதிர்புரம் அனுமார் தனித்தனியாக அமைத்துள்ளார்கள். அழகிய marbles works. புதிய ஆலயம் அழகிய அமைப்பு.
2.சந்திரசேகர மகாதேவர் ஆலயம்
இதுவும் கடற்கரை ஒட்டியே உள்ள சிறிய ஆலயம். கருவரையில் சிவலிங்கம், முன்புறம், நந்தியும், ஆமை ஒன்றும் உள்ளது. சிறிய முன்மண்டபம்.
கருவரை முன்புற மண்டபத்தின் சுவற்றின் மாடத்தில், ஒரு புறம் விநாயகர், மறுபுறம் ஆஞ்சனேயர். .
ஒரு சிறிய சுற்று பிறகாரம்.
இங்கிருந்து கடலும், கடல் கோவிலும் நன்றாக தெரியுமாறு உள்ளது.
3. சிவன் ஆலயம்.
இதுவும் கடற்கரை ஒட்டியே உள்ள சிறிய ஆலயம். கருவரையில் சிவலிங்கம், முன்புறம், நந்தியும், ஆமை ஒன்றும் உள்ளது. சிறிய முன்மண்டபம்.
கருவரை உள்ளே ஒரு புறம் விநாயகர், மறுபுறம் ஆஞ்சனேயர். தனி சன்னிதி.
ஒரு சிறிய சுற்று பிறகாரம்.
இங்கிருந்து கடலும், கடல் கோவிலும் நன்றாக தெரியுமாறு உள்ளது.
இவைகள் கடற்கரை ஒட்டி உள்ள ஆலயங்கள்.
🛐இந்த சிறு ஆலயங்கள் தனியாரால் பராமரிக்கப்பட்டு வருவது போல உள்ளது.
☸️இவற்றை தரிசித்து பின் கடலில் உள்ள நிஷ்கலந்மகாதேவர் ஆலயம் செல்லலாம்.
💥உண்மையில் வாழ்க்கையில் மறக்க இயலாத ஒரு ஆன்மீக அனுபவம்.
🙏என்றும் அன்புடன்❤️🙏💜🙏💚🙏
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#NISHKALANTH_MAHADEVAR
#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
இதன் முதல் பதிவு :
No comments:
Post a Comment