#HYDRABAD_TELUNGANA
#கோல்கொண்டா
Golgonda Fort.
(31.08.2021-செவ்வாய்)
பதிவு :3
🌟கோல்கொண்டா அல்லது கோல்கண்டா (Golconda, Golkonda), தென் மத்திய இந்தியாவின் சிதைந்த ஒரு நகரம்.
🌟பத்ராசலம் கோவிலைக் கட்டிய பரம இந்துவான பக்த ராமதாசு என்று பிரபலமாய் அறியப்படும் காஞ்சர்லா கோபண்ணா அப்போது சுல்தானாக இருந்த தானா ஷாவுக்கு தெரிவிக்காமல் அக்கோயிலை கட்டியதால் சிறை தண்டனை பெற்று கோட்டைக்குள் இருந்த ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்தப் பகுதியில் ஒரு பெரிய பண்டசாலை (goodown) ஆக பயன் படுத்தியிருக்கிறார்கள்.
மலையில் கட்டப்பட்டுள்ள இந்த மண்டபம் நீண்டது. ஒரு புறம் பெரிய மேடை அமைப்பும், அதன் மீது ஏற படிகளும் இருக்கின்றன. அதன் சுவற்றில் ஸ்ரீ ஹனுமானின் திரு உருவங்கள், மற்றும் வேறு வேறு கடவுள் உருவங்கள், புடை சிறப்பமாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ராமதாஸர் வழிபாடு செய்திருக்கலாம்.
🌟நான்கு நூற்றாண்டுகள் பழையதாகி விட்டிருந்தபோதிலும் கட்டுமானக் கலையின் அற்புத அழகு சிதையாமல் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
🌟கோல்கொண்டா நகரம் சிறந்து விளங்கிய சமயத்தில் இது வைரத்திற்கு பெயர்பெற்றது என்பதால், உலகப் புகழ் கோஹினூர் வைரம் இந்த கோட்டையில் இருந்து தான் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு கருங்கல் மலையின் (120 மீ உயரம்) உச்சியில் கட்டப்பட்டிருக்கும் இந்த பெரிய கோட்டை கட்டுமானப் பொறியியலின் திட்டத்திற்கும் சிறப்புக்கும் ஒரு சிறந்த உதாரணமாய் திகழ்கிறது.
🌟கோல்கொண்டா வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறம் அனைத்தும் சுமார் 11கிமீ பரப்பளவுக்கு விரிந்து பரந்திருப்பதால், அதன் அனைத்து பகுதிகளையும் காண்பது என்பது நேரம் எடுக்கும் செயலாகும்.
🌟கோட்டைக்கு பார்வையிட வருபவர்கள் வாசல்கள், தளங்கள், நுழைவாயில்கள் மற்றும் கோபுரங்களை கண்டு ரசிக்கலாம். நான்கு தனித்தனி கோட்டைகளாய் அமைந்திருக்கிறது..
🌟கோல்கொண்டாவில் கட்டுமானக் கலையின் அற்புதம் அதன் ஒவ்வொரு குடியிருப்புகள், அரங்குகள், கோவில்கள், மசூதிகள் மற்றும் அதன் பிற கட்டிடங்களில் காணக்கிடைப்பதாய் இருக்கிறது. 400 வருடங்களுக்கு முன் இருந்த அதே வசீகரத்தை கோட்டையின் தோட்டங்கள் இழந்திருந்தாலும் கோல்கொண்டா கோட்டையின் பழம் பெருமையை புரிந்து கொள்ள தோட்டத்தை நாம் சுற்றிப் பார்த்தால் அவசியமாகும். மீண்டும் நல்ல முறையில் பராமரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
🌟
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
No comments:
Post a Comment