Friday, September 24, 2021

SPLENDORS OF INDIA - Gujarat - NISHKALANTH MAHADEV

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
- GUJARATH
#nishkalanth_mahadevar

 NISHKALANTH_MAHADEVAR

பதிவு - 3
குஜராத்தில், கட்ச் வளைகுடாவில் அரபிக்கடல் ஒட்டி பவன் நகர் வரை ரயிலில் சென்று அங்கிருந்து பேருந்தில் கடற்கரை ஓரம் உள்ள கோலியாக் என்றும் சிற்றூரில் உள்ள ஆலயம்.

🙏அரபிக் கடலுக்குள் சிவாலயம்🙏

 ✴️எங்கள் அனுபவங்கள்✴️

குஜராத்தில், கட்ச் வளைகுடாவில் அரபிக்கடல் ஒட்டி பவன் நகர் TERMINAL Railway Station வரை ரயிலில் சென்று அங்கிருந்து பேருந்தில் கடற்கரை ஓரம் உள்ள கோலியாக் என்றும் சிற்றூர் செல்ல 1 மணிநேரப் பயணம் செய்து அதன் கடற்கரைப் பகுதி அடைய வேண்டும்.

🔆கடற்கரை ஓரம் இரண்டு மூன்று
சிறிய சிவன் ஆலயம் இருக்கிறது.
வழிபட்டு சென்றோம்.
1.ராதாகிருஷ்ணன் சிவன் ஆலயம்.
2.சந்திரசேகர மகாதேவர் ஆலயம்
3. சிவன் ஆலயம்.
இது பற்றிய தனித்தனியே பதிவுகள் 
இட்டிருக்கிறேன்.

🔆கடற்கறையில் ஏராளமான எளிமையான Tea Shops, இளநீர் கடைகள் ஏராளமாக உள்ளன.
ஒவ்வொரு கடையிலும், நாற்காலிகள், கட்டில்கள் போடப்பட்டுள்ளன. அதில் கடல் நீர் வற்றும் வரை பொதுமக்கள் அமர்ந்து இருக்கிறார்கள்.

💥நாங்கள் கடற்கறையை 2.9.2021 வியாழன் மாலை 3.00 மணி அளவில் அடைந்தோம்
🔆கடல் அலை கரையில் இருந்தது, மிக தூரத்தில் இரண்டு கொடி பறந்து கொண்டிருந்தது. யாரும் கடல் உள்ளே இறங்க முடியாதவாறு அலை வீசிக் கொண்டிருந்தது.

🌀3.30
கரையிலிருந்து அலையின் வீச்சு குறைந்து வடிய ஆரம்பித்தது.
சிறிது சிறிதாகக் கொடி மரமும், கொடி மேடையும், பின் சிறிய தளமும் தெரியத் தொடங்கிற்று.
கரையிலிருந்து கடல் நீர் வற்றிக் கொண்டே சென்றது. சுமார், 2 கி.மீ அளவில் அகலத்தில் நீர்வற்றிக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத் தரைமணல் தெரிய தெரிய மக்கள் நடக்க ஆரம்பித்தனர்.

🌀4.30 
பாதி அளவில் கரையும் பாதி அளவில் அலைகளுடன் ஆலய பீடங்களும் தெரிய ஆரம்பித்தது. உடனேயே சிலர்
மனலில் நடந்து, ஆர்வத்தின் காரணமாக பொறுமை இழந்து கடல் அலையின் ஊடே ஆலயம் அருகில், இடுப்பு அளவு ஆழத்தில் நடந்து சென்று அவ்வாலயத்தில் குழுமியிருந்தனர்.
கடலில் ஆடைகள், பைகள், பொருள்கள், cell முதலியவற்றை நனைத்து வீனாக கஷ்ட்டப்பட்டனர். சிலர் 1 மணி நேரமாக கடல் அலையில் நனைந்து நிற்க முடியாமல் ஆலய வளாகத்தை அருகில் தரிசனம் பார்த்து உடனே திரும்பிவிட்டனர்.

🌀நாங்கள் பொறுமையாக கரையோரம் இருந்த கட்டில்களில் அமர்ந்து இருந்தோம். மிகவும் நீர் அளவு வடிந்த பிறகே, கடல்கரையிலிருந்து மெல்ல நடந்து செல்ல முயன்றோம். 

🌀5 - 6.00
கரையிலிருந்து ஆலயம் நன்றகத் தெரியத் தொடங்கியது. மனற்பரப்பு பாதை நன்றாக இருந்தது.
அலைகள் ஆலயத்தின் படிக்கட்டுகளில் மெதுவாக வீசிக்கொண்டிருந்தது. அதுவரைக் காத்து இருந்து, பின் மனற்பரப்பின் மீது நடந்தோம். ஈரமாக இருந்தது. நீர் வடிந்துவிட்டிருந்தது. சில இடங்களில் மனல் சேறு இருக்கும் இடத்தில் வழுக்குகிறது.
 நீர்வற்ற வற்ற மிக நன்றாக பாதை அமைகிறது.  

🌀நாங்கள் ஆலயப் பகுதியை அடையும் போது, கடல் அலையும், நீரும் ஏரக்குறைய வற்றிவிட்டது. சூரியபகவான் மேற்கில் மறைந்து கொண்டிருக்க. ஆலயத்தில் அடியெடுத்து வைத்தோம்.

🌀5.30 - 6.30
ஒரு பெரிய நீண்ட வெட்டவெளி வளாகம். சற்று உயரமான கருங்கல் பாரை சமதளம். சுற்றிலும் நீர்.  
ஒரு புறம் (கிழக்கு புறம்) கடல் நீரும், அலையும் சூழ்ந்து கொண்டிருக்க, மேற்கு புறம் நீர் வற்றி மணல் மேடாக கரை நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தது.

🌀 ஆலயம் அமைந்துள்ள கற்பாறையில் சமதளத்தில் இரண்டு மூன்று இடங்கள் சிறிய தொட்டிகள் அருகில் தனித்தனியாக, 5 சிவலிங்கங்கள். சுயம்பு லிங்கங்கள். ஒவ்வொரு லிங்கத்தின் முன்பும், சிறிய நந்தி.
பல நூற்றாண்டுகளக நீரில் மூழ்கி மூழ்கி இருந்தாலும், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு சிவலிங்கங்கம், நந்தி மற்று சிறு தொட்டி (நீர் எடுத்து அபிஷேகம் செய்ய) அமைந்துள்ளது.

🌀கொடி மேடை சுமார் 10 அடி உயரமும், பெரிய கலர் கொடியும் பறந்து கொண்டிருந்தது. மிக அருகில் மற்றொரு பெரிய லிங்கம் அதன் அருகில் பழைய கொடிமரமும் அதிலும் அழகிய கலர் கொடி பறந்து கொண்டிருக்கிறது. பூசாரிகள் லிங்கத்தின் அருகில் பூசை செய்கிறார்கள். பக்தர்கள் கொண்டு சென்றிருந்த பால் முதலிய பூசைப் பொருள்களால் பூசை செய்கிறார்கள். பத்தர்களே, சிறிய பாத்திரத்தில் அருகில் உள்ள தொட்டியிலிருந்தும், ஆலய வளாக ஓரத்தில் உள்ள படிகளில் இறங்கி கடல் நீரையும் கொண்டு ஐந்து லிங்கங்களையும் தனித்தனியாகவும் அபிஷேகம் செய்கிறார்கள்.  

🔆6.30 - 7.00
வளாகம் பூராவும் இருந்த பக்தர்கள் கூட்டம் குறைந்து கொண்டிருந்தது. கிழக்கு புறம் ஆலய பாறைகளில் கடல் அலைகள் ஆர்ப்பாட்டம் இன்றி அமைதியாக ஆலயப் படிகளை வருடிக் கொண்டிருந்தன. மேற்கு புறத்தில் சூரியன் மெல்ல மறைந்து கொண்டிருந்தது. கரைவரை நீண்ட மனற்பகுதி பார்க்க அருமையாக இருந்தது. அந்த நீண்ட வெட்டவெளி கருங்கற்களால் உருவாகி இருந்த ஆலய வளாகத்தில் இருந்த லிங்கங்களை அமைதியாக வழிபட்டோம். அற்புதமாக இருந்தது. 

🔆இருள் கவிய ஆரம்பித்து 9.00 மணிவரை நீர்வற்றி பிறகு நீர் சூழ ஆரம்பிக்கும் என்றும், மீண்டும் விடியற்காலையில் 3 மணியிலிருந்து காலை 10.00 மணி வரை நீர் வற்றிவிடும். என்றார்கள் உள்ளூர்வாசிகள். 
இது அப்படியே 15 நாட்களில் மாறி மாறி இரவும், பகலும் நீர் வற்றும் நேரம் மாறிவரும் என்றார்கள். 
பெளர்ணமி, அம்மாவாசை கணக்கிட்டு மாறிமாறி நீர் வற்றி வற்றி ஆலயம் தெரிகிறது.

🔆எந்தவிதமான செயற்கை செயற்பாடுகள் இன்றி, இயற்கையே வந்து வழிபடும் சிவலிங்கங்கள். பல நூற்றாண்டுகளாக நடைபெறுகிறது. மனம் அமைதியாக சென்று வழிபடுங்கள். 

🔆7.00 
ஆலய வளாகம் விட்டு மெல்ல கரை நோக்கி மனலில் கடற்கரை நோக்கி நடந்தோம்.

🔆மனலில் செல்லும் சிறிய அளவிலான, இருவர் பயணிக்கும் மோட்டார் சக்கர ஜிப் உள்ளது. வயதானவர்கள், கரையிலிருந்து, ஆலயம் வரை வந்து செல்ல உதவுகிறார்கள். (கட்டணம் உண்டு).

🔆பெரிய உயர்தர உணவு விடுதியோ, வசதியான தங்கும் விடுதியோ அருகில் இல்லை. தற்போது வசதியான Hotel, தங்குமிடங்கள் ஊர் அருகில் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மேலும், Rest Rooms முதலியவைகள் இன்னும் அமைக்கப்பட வேண்டும்.

💥சரியான, திட்டமிடலோடும், பொறுமையோடும் சென்று தரிசனம் செய்தால், முழு பயனமும் திருப்தியுடன் அமையும்.

🔆கோலியாத் கடற்கறையிலிருந்து பவன் நகர் Railway Terminals க்கு பேருந்தில் பயணம் செய்தடைந்தோம்.

💥உண்மையில் வாழ்க்கையில் மறக்க இயலாத ஒரு ஆன்மீக அனுபவம்.

🙏என்றும் அன்புடன்❤️🙏💜🙏💚🙏
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#NISHKALANTH_MAHADEVAR
#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#nishkalanth_mahadevar 

இதன் முதல் பதிவு :
இரண்டவது பதிவு :

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...