Friday, September 17, 2021

SPLENDORS OF INDIA - GOLKONDA 1

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#HYDRABAD_TELUNGANA
#கோல்கொண்டா
Golgonda Fort. 
(31.08.2021-செவ்வாய்)

பதிவு - 1.

🌟கோல்கொண்டா அல்லது கோல்கண்டா (Golconda, Golkonda), தென் மத்திய இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமாக இருப்பதுடன், பண்டைய கோல்கொண்டா ராச்சியத்தின் (கி.பி. 1364–1512) தலைநகராகவும் இருந்தது. இது ஐதராபாத் நகருக்கு மேற்கே 11கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. உலகில் முதல்முதலாக வைரங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதி.

🌟குதுப் மன்னரான இப்ராஹிம் குலி குதுப் ஷா வாலி தான் கோல்கோண்டாவைக் கட்டியவர்களில் முக்கியமானவர் ஆவார். 1512 ஆம் ஆண்டு முதல் கோல்கொண்டாவை ஆண்ட குதுப் ஷாஹி அரசர்கள் கட்டிடக் கலையில் மிகச் சிறந்தவர்களாய்த் திகழ்ந்தனர்.

 🌟வடக்கில் முகலாயர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகத் தங்களது முதலாம் தலைநகரான கோல்கொண்டாவில் கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பினர். கோட்டை முன்வாசல்களின் அருகே ஒரு சிறு கைதட்டல் ஒலி கேட்டால் கூட 300 அடி உயரக் கோட்டை கோபுரத்தின் உச்சியில் கேட்கும் வகையில் ஒரு சிறந்த ஒலியமைப்பை அவர்கள் வடிவமைத்து உருவாக்கியிருந்தனர். இது கோட்டையின் சிறப்பான அம்சங்களில் ஒன்றாகும்.

🌟13 ஆம் நூற்றாண்டு கோல்கொண்டாக் கோட்டை ககாதியா அரசர்களால் கட்டப்பட்டதாகும். அதன்பின் வந்த குதுப் ஷாஹி அரசர்கள் தான் இப்போதிருக்கும் கட்டமைப்பை எழுப்பினர். 16 ஆம் நூற்றாண்டில், ஐதராபாத் அருகே குதுப் ஷாஹி ராச்சியத்தின் தலைநகரம் மற்றும் கோட்டை நகரமாய்க் கோல்கொண்டா திகழ்ந்தது. இந்நகரம் செல்வம் கொழிக்கும் வைர வியாபாரத்திற்கும் மையமாய்த் திகழ்ந்தது. 

🌟1687 ஆம் ஆண்டில் முகலாயச் சக்கரவர்த்தி அவுரங்கசீப் கைப்பற்றும் வரை குதுப் ஷாஹி சுல்தான் ராச்சியம் நீடித்தது. அவுரங்கசீபிற்கு எதிராக ஒன்பது மாதங்கள் தாக்குப் பிடித்த இந்த கோட்டை, நம்பிக்கைத் துரோகத்தின் விளைவாய் முகலாயர்களிடம் வீழ்ந்தது. 

🌟பத்ராசலம் கோவிலைக் கட்டிய பரம இந்துவான பக்த ராமதாசு என்று பிரபலமாய் அறியப்படும் காஞ்சர்லா கோபண்ணா அப்போது சுல்தானாக இருந்த தானா ஷாவுக்கு தெரிவிக்காமல் அக்கோயிலை கட்டியதால் சிறை தண்டனை பெற்று கோட்டைக்குள் இருந்த ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்தப் பகுதியில் ஒரு பெரிய பண்டசாலை (goodown) ஆக பயன் படுத்தியிருக்கிறார்கள்.
மலையில் கட்டப்பட்டுள்ள இந்த மண்டபம் நீண்டது. ஒரு புறம் பெரிய மேடை அமைப்பும், அதன் மீது ஏற படிகளும் இருக்கின்றன.  அதன் சுவற்றில் ஸ்ரீ ஹனுமானின் திரு உருவங்கள், மற்றும் வேறு வேறு கடவுள் உருவங்கள், புடை சிறப்பமாக உருவாக்கப்பட்டுள்ளது. 
ஸ்ரீ ராமதாஸர் வழிபாடு செய்திருக்கலாம். 

🌟நான்கு நூற்றாண்டுகள் பழையதாகி விட்டிருந்தபோதிலும் கட்டுமானக் கலையின் அற்புத அழகு சிதையாமல் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. 

🌟கோல்கொண்டா நகரம் சிறந்து விளங்கிய சமயத்தில் இது வைரத்திற்கு பெயர்பெற்றது என்பதால், உலகப் புகழ் கோஹினூர் வைரம் இந்த கோட்டையில் இருந்து தான் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு கருங்கல் மலையின் (120 மீ உயரம்) உச்சியில் கட்டப்பட்டிருக்கும் இந்த பெரிய கோட்டை கட்டுமானப் பொறியியலின் திட்டத்திற்கும் சிறப்புக்கும் ஒரு சிறந்த உதாரணமாய் திகழ்கிறது.

🌟கோல்கொண்டா வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறம் அனைத்தும் சுமார் 11கிமீ பரப்பளவுக்கு விரிந்து பரந்திருப்பதால், அதன் அனைத்து பகுதிகளையும் காண்பது என்பது நேரம் எடுக்கும் செயலாகும். 

🌟கோட்டைக்கு பார்வையிட வருபவர்கள் வாசல்கள், தளங்கள், நுழைவாயில்கள் மற்றும் கோபுரங்களை கண்டு ரசிக்கலாம். நான்கு தனித்தனி கோட்டைகளாய் அமைந்திருக்கிறது..

 🌟கோல்கொண்டாவில் கட்டுமானக் கலையின் அற்புதம் அதன் ஒவ்வொரு குடியிருப்புகள், அரங்குகள், கோவில்கள், மசூதிகள் மற்றும் அதன் பிற கட்டிடங்களில் காணக்கிடைப்பதாய் இருக்கிறது. 400 வருடங்களுக்கு முன் இருந்த அதே வசீகரத்தை கோட்டையின் தோட்டங்கள் இழந்திருந்தாலும் கோல்கொண்டா கோட்டையின் பழம் பெருமையை புரிந்து கொள்ள தோட்டத்தை நாம் சுற்றிப் பார்த்தால் அவசியமாகும். மீண்டும் நல்ல முறையில் பராமரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

🌟பால ஹிசார் நுழைவாயில் தான் கிழக்கு பக்கத்தில் கோட்டைக்கான முதன்மை நுழைவாயிலாக இருக்கிறது. இது கூம்பு வடிவ வளைவைக் கொண்டுள்ளது. தூண்களில் யாளிகள் இடம்பெற்றிருக்கின்றன. கதவுக்கு மேலிருக்கும் பகுதியில் அலங்கர வால்களுடனான மயில்கள் இடம்பெற்றுள்ளன. கீழிருக்கும் கருங்கல் கற்களில் யாளிகளின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. மயில்கள் மற்றும் சிங்கங்களின் வடிவமைப்பு இந்து-முஸ்லீம் கட்டிடக் கலையின் கலவையாகும்.

🌟கோல்கொண்டாவின் வெளிப்புறத்தில் அமைந்திருக்கும் இரண்டு தனித்தனி விதானங்கள் கோட்டையின் பெரும் சிறப்புகளாய் இருக்கின்றன. மிகவும் கரடுமுரடான பாறைப் பகுதியில் இது கட்டப்பட்டுள்ளது. கோட்டையில் கலைக் கோயிலும் இடம்பெற்றுள்ளது. கோல்கொண்டா கோட்டையின் உச்சியில் இருக்கும் அரச சபையில் இருந்து இதனைக் காண முடியும்.

🌟கோல்கொண்டா கோட்டையின் அற்புதமான ஒலியமைப்பு முறை கோட்டையின் கட்டிடக் கலை சிறப்பு குறித்து ஏராளமாய் கூறுகிறது. இந்த கம்பீரமான கட்டமைப்பில் அழகிய அரண்மனைகளும் தனித்துவமான நீர் வழங்கு அமைப்பும் இடம்பெற்றுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, கோட்டையின் தனித்துவமான கட்டிடக் கலை சிறப்பம்சம் தனது வசீகரத்தை இப்போது இழந்து கொண்டிருக்கிறது.

🌟கோட்டையின் காற்றோட்ட அமைப்புகள் அற்புதமான வடிவமைப்பு கொண்டுள்ளன. கோடையின் வெம்மையில் இருந்து நிவாரணம் அளிக்கத்தக்க குளிர்ந்த காற்று கோட்டை உள்பகுதிகளுக்கும் எட்டும் வகையில் அவை அற்புதமான வடிவமைப்பைக் கொண்டுள்ளன.

🌟கோட்டையின் பெரும் வாயிற் கதவுகள் பெரிய கூரிய இரும்பு முனைகள் பொதிக்கப் பெற்றுள்ளன. கோட்டையை யானைகள் சேதப்படுத்தாமல் பாதுகாப்பதற்காக இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கோல்கொண்டா கோட்டையைச் சுற்றி 11 கிமீ நீள வெளிச் சுவர் உள்ளது. கோட்டைக்கு உறுதி கூட்ட இது கட்டப்பட்டது.

🌟மலை உச்சியில் அமைந்துள்ள மகாகாளி ஆலயம், அதன் மேல் அமைந்துள்ள வியக்க வைக்கும் இரட்டைப் பாறை அமைப்புக்கள் மிகவும் அற்புதம். 
'
🌟ஒட்டகம் ஒன்று உட்கார்ந்திருக்கும் காட்சிபோல பாறை தென்பட்டது.

🌟அருகில் பீரங்கியும், மேடையும் உள்ளது.

🌟 நுழைவுவாயில் சென்று அதன் அருகில் Ground Level பகுதியின் பல பகுதிகள் உள்ளன.
🌟 கோட்டை மலை மீது உச்சியில் தர்பார்மண்டபம், மகாகாளி ஆலயம், அதன் உச்சியில் அமைந்த இரண்டு பெரிய கற்பாறைகள், பீரங்கிகள் பார்க்கலாம். மசூதி ஒன்றும் பூட்டிய நிலையில் உள்ளது.
🌟ஒரு வழியாக மலை உச்சி வரை சென்று மறுவழியில் வருமாறு பாதைகள் அமைப்பு உள்ளது. 
🌟மலைப் பாதை படிகளும் உண்டு முடிந்தவர் முயற்சி செய்தால் உச்சிவரை சென்று ரசித்து வரலாம்.

🌟கோட்டைக்கு முன்புறம்  பேருந்துகள் நிலையமும், வாகன நிறுத்துமிடம், Bus, Car Parking வசதியுடன் உள்ளது.

🌟நுழைவுக் கட்டணம் ரூ 25/- (அனைவருக்கும்).

என்றும் அன்புடன்❤️🙏💜🙏💚🙏
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...