Friday, September 24, 2021

SPLENDORS OF INDIA - Gujarat - NISHKALANTH MAHADEV

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
- GUJARATH
#nishkalanth_mahadevar

 NISHKALANTH_MAHADEVAR

பதிவு - 3
குஜராத்தில், கட்ச் வளைகுடாவில் அரபிக்கடல் ஒட்டி பவன் நகர் வரை ரயிலில் சென்று அங்கிருந்து பேருந்தில் கடற்கரை ஓரம் உள்ள கோலியாக் என்றும் சிற்றூரில் உள்ள ஆலயம்.

🙏அரபிக் கடலுக்குள் சிவாலயம்🙏

 ✴️எங்கள் அனுபவங்கள்✴️

குஜராத்தில், கட்ச் வளைகுடாவில் அரபிக்கடல் ஒட்டி பவன் நகர் TERMINAL Railway Station வரை ரயிலில் சென்று அங்கிருந்து பேருந்தில் கடற்கரை ஓரம் உள்ள கோலியாக் என்றும் சிற்றூர் செல்ல 1 மணிநேரப் பயணம் செய்து அதன் கடற்கரைப் பகுதி அடைய வேண்டும்.

🔆கடற்கரை ஓரம் இரண்டு மூன்று
சிறிய சிவன் ஆலயம் இருக்கிறது.
வழிபட்டு சென்றோம்.
1.ராதாகிருஷ்ணன் சிவன் ஆலயம்.
2.சந்திரசேகர மகாதேவர் ஆலயம்
3. சிவன் ஆலயம்.
இது பற்றிய தனித்தனியே பதிவுகள் 
இட்டிருக்கிறேன்.

🔆கடற்கறையில் ஏராளமான எளிமையான Tea Shops, இளநீர் கடைகள் ஏராளமாக உள்ளன.
ஒவ்வொரு கடையிலும், நாற்காலிகள், கட்டில்கள் போடப்பட்டுள்ளன. அதில் கடல் நீர் வற்றும் வரை பொதுமக்கள் அமர்ந்து இருக்கிறார்கள்.

💥நாங்கள் கடற்கறையை 2.9.2021 வியாழன் மாலை 3.00 மணி அளவில் அடைந்தோம்
🔆கடல் அலை கரையில் இருந்தது, மிக தூரத்தில் இரண்டு கொடி பறந்து கொண்டிருந்தது. யாரும் கடல் உள்ளே இறங்க முடியாதவாறு அலை வீசிக் கொண்டிருந்தது.

🌀3.30
கரையிலிருந்து அலையின் வீச்சு குறைந்து வடிய ஆரம்பித்தது.
சிறிது சிறிதாகக் கொடி மரமும், கொடி மேடையும், பின் சிறிய தளமும் தெரியத் தொடங்கிற்று.
கரையிலிருந்து கடல் நீர் வற்றிக் கொண்டே சென்றது. சுமார், 2 கி.மீ அளவில் அகலத்தில் நீர்வற்றிக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத் தரைமணல் தெரிய தெரிய மக்கள் நடக்க ஆரம்பித்தனர்.

🌀4.30 
பாதி அளவில் கரையும் பாதி அளவில் அலைகளுடன் ஆலய பீடங்களும் தெரிய ஆரம்பித்தது. உடனேயே சிலர்
மனலில் நடந்து, ஆர்வத்தின் காரணமாக பொறுமை இழந்து கடல் அலையின் ஊடே ஆலயம் அருகில், இடுப்பு அளவு ஆழத்தில் நடந்து சென்று அவ்வாலயத்தில் குழுமியிருந்தனர்.
கடலில் ஆடைகள், பைகள், பொருள்கள், cell முதலியவற்றை நனைத்து வீனாக கஷ்ட்டப்பட்டனர். சிலர் 1 மணி நேரமாக கடல் அலையில் நனைந்து நிற்க முடியாமல் ஆலய வளாகத்தை அருகில் தரிசனம் பார்த்து உடனே திரும்பிவிட்டனர்.

🌀நாங்கள் பொறுமையாக கரையோரம் இருந்த கட்டில்களில் அமர்ந்து இருந்தோம். மிகவும் நீர் அளவு வடிந்த பிறகே, கடல்கரையிலிருந்து மெல்ல நடந்து செல்ல முயன்றோம். 

🌀5 - 6.00
கரையிலிருந்து ஆலயம் நன்றகத் தெரியத் தொடங்கியது. மனற்பரப்பு பாதை நன்றாக இருந்தது.
அலைகள் ஆலயத்தின் படிக்கட்டுகளில் மெதுவாக வீசிக்கொண்டிருந்தது. அதுவரைக் காத்து இருந்து, பின் மனற்பரப்பின் மீது நடந்தோம். ஈரமாக இருந்தது. நீர் வடிந்துவிட்டிருந்தது. சில இடங்களில் மனல் சேறு இருக்கும் இடத்தில் வழுக்குகிறது.
 நீர்வற்ற வற்ற மிக நன்றாக பாதை அமைகிறது.  

🌀நாங்கள் ஆலயப் பகுதியை அடையும் போது, கடல் அலையும், நீரும் ஏரக்குறைய வற்றிவிட்டது. சூரியபகவான் மேற்கில் மறைந்து கொண்டிருக்க. ஆலயத்தில் அடியெடுத்து வைத்தோம்.

🌀5.30 - 6.30
ஒரு பெரிய நீண்ட வெட்டவெளி வளாகம். சற்று உயரமான கருங்கல் பாரை சமதளம். சுற்றிலும் நீர்.  
ஒரு புறம் (கிழக்கு புறம்) கடல் நீரும், அலையும் சூழ்ந்து கொண்டிருக்க, மேற்கு புறம் நீர் வற்றி மணல் மேடாக கரை நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தது.

🌀 ஆலயம் அமைந்துள்ள கற்பாறையில் சமதளத்தில் இரண்டு மூன்று இடங்கள் சிறிய தொட்டிகள் அருகில் தனித்தனியாக, 5 சிவலிங்கங்கள். சுயம்பு லிங்கங்கள். ஒவ்வொரு லிங்கத்தின் முன்பும், சிறிய நந்தி.
பல நூற்றாண்டுகளக நீரில் மூழ்கி மூழ்கி இருந்தாலும், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு சிவலிங்கங்கம், நந்தி மற்று சிறு தொட்டி (நீர் எடுத்து அபிஷேகம் செய்ய) அமைந்துள்ளது.

🌀கொடி மேடை சுமார் 10 அடி உயரமும், பெரிய கலர் கொடியும் பறந்து கொண்டிருந்தது. மிக அருகில் மற்றொரு பெரிய லிங்கம் அதன் அருகில் பழைய கொடிமரமும் அதிலும் அழகிய கலர் கொடி பறந்து கொண்டிருக்கிறது. பூசாரிகள் லிங்கத்தின் அருகில் பூசை செய்கிறார்கள். பக்தர்கள் கொண்டு சென்றிருந்த பால் முதலிய பூசைப் பொருள்களால் பூசை செய்கிறார்கள். பத்தர்களே, சிறிய பாத்திரத்தில் அருகில் உள்ள தொட்டியிலிருந்தும், ஆலய வளாக ஓரத்தில் உள்ள படிகளில் இறங்கி கடல் நீரையும் கொண்டு ஐந்து லிங்கங்களையும் தனித்தனியாகவும் அபிஷேகம் செய்கிறார்கள்.  

🔆6.30 - 7.00
வளாகம் பூராவும் இருந்த பக்தர்கள் கூட்டம் குறைந்து கொண்டிருந்தது. கிழக்கு புறம் ஆலய பாறைகளில் கடல் அலைகள் ஆர்ப்பாட்டம் இன்றி அமைதியாக ஆலயப் படிகளை வருடிக் கொண்டிருந்தன. மேற்கு புறத்தில் சூரியன் மெல்ல மறைந்து கொண்டிருந்தது. கரைவரை நீண்ட மனற்பகுதி பார்க்க அருமையாக இருந்தது. அந்த நீண்ட வெட்டவெளி கருங்கற்களால் உருவாகி இருந்த ஆலய வளாகத்தில் இருந்த லிங்கங்களை அமைதியாக வழிபட்டோம். அற்புதமாக இருந்தது. 

🔆இருள் கவிய ஆரம்பித்து 9.00 மணிவரை நீர்வற்றி பிறகு நீர் சூழ ஆரம்பிக்கும் என்றும், மீண்டும் விடியற்காலையில் 3 மணியிலிருந்து காலை 10.00 மணி வரை நீர் வற்றிவிடும். என்றார்கள் உள்ளூர்வாசிகள். 
இது அப்படியே 15 நாட்களில் மாறி மாறி இரவும், பகலும் நீர் வற்றும் நேரம் மாறிவரும் என்றார்கள். 
பெளர்ணமி, அம்மாவாசை கணக்கிட்டு மாறிமாறி நீர் வற்றி வற்றி ஆலயம் தெரிகிறது.

🔆எந்தவிதமான செயற்கை செயற்பாடுகள் இன்றி, இயற்கையே வந்து வழிபடும் சிவலிங்கங்கள். பல நூற்றாண்டுகளாக நடைபெறுகிறது. மனம் அமைதியாக சென்று வழிபடுங்கள். 

🔆7.00 
ஆலய வளாகம் விட்டு மெல்ல கரை நோக்கி மனலில் கடற்கரை நோக்கி நடந்தோம்.

🔆மனலில் செல்லும் சிறிய அளவிலான, இருவர் பயணிக்கும் மோட்டார் சக்கர ஜிப் உள்ளது. வயதானவர்கள், கரையிலிருந்து, ஆலயம் வரை வந்து செல்ல உதவுகிறார்கள். (கட்டணம் உண்டு).

🔆பெரிய உயர்தர உணவு விடுதியோ, வசதியான தங்கும் விடுதியோ அருகில் இல்லை. தற்போது வசதியான Hotel, தங்குமிடங்கள் ஊர் அருகில் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மேலும், Rest Rooms முதலியவைகள் இன்னும் அமைக்கப்பட வேண்டும்.

💥சரியான, திட்டமிடலோடும், பொறுமையோடும் சென்று தரிசனம் செய்தால், முழு பயனமும் திருப்தியுடன் அமையும்.

🔆கோலியாத் கடற்கறையிலிருந்து பவன் நகர் Railway Terminals க்கு பேருந்தில் பயணம் செய்தடைந்தோம்.

💥உண்மையில் வாழ்க்கையில் மறக்க இயலாத ஒரு ஆன்மீக அனுபவம்.

🙏என்றும் அன்புடன்❤️🙏💜🙏💚🙏
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#NISHKALANTH_MAHADEVAR
#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#nishkalanth_mahadevar 

இதன் முதல் பதிவு :
இரண்டவது பதிவு :

SPLENDORS OF INDIA - Gujarat - NISHKALANTH 2 Nearby temples

#SPLENDORS OF INDIA - GUJARATH
#NISHKALANTH_MAHADEVAR
பதிவு - 2.
கரையில் உள்ள ஆலயங்கள்:

🔯குஜராத்தில், கட்ச் வளைகுடாவில் அரபிக்கடல் ஒட்டி பவன் நகர் வரை ரயிலில் சென்று அங்கிருந்து பேருந்தில் கடற்கரை ஓரம் உள்ள கோலியாக் என்றும் சிற்றூரில் உள்ள ஆலயம்.
🛐அகமதாபாத்திலிருந்து பாவ்நகர் சாலை வழியே 176 கி.மீ. தொலைவிலும், ரயில் பயணத்தின் மூலம் 229 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. பாவ்நகரிலிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் கோலியாக் கடற்கரை கிராமம் அமைந்துள்ளது. கடற்கரையிலிருந்து 1 கி.மீ. கடலுக்குள் நடந்தால் கடவுளை தரிசித்த மெய்சிலிர்க்கும் அனுபவத்தைப் பெறலாம்.

🔯கடற்கரை ஓரம் மூன்று
சிறிய சிவன் ஆலயங்கள் இருக்கிறது.
வழிபட்டு சென்றோம்.

1.ராதாகிருஷ்ணன் சிவன் ஆலயம்.

இந்த ஆலயம் கடற்கரைக்கு முன்னால் 200 மீ.தூரத்தில் உள்ளது.
இரண்டு கோபுரங்கள். சிறிய லிங்கமூர்த்தி ஒரு கருவறையிலும், மற்றொன்றில், ராதாகிருஷ்ணரும் உள்ளார்கள். சிவனுக்கு முன் அழகிய நந்தி. மற்றும் ஒரு புறம் விநாயகர் எதிர்புரம் அனுமார் தனித்தனியாக அமைத்துள்ளார்கள். அழகிய marbles works. புதிய ஆலயம் அழகிய அமைப்பு.
 
2.சந்திரசேகர மகாதேவர் ஆலயம்

இதுவும் கடற்கரை ஒட்டியே உள்ள சிறிய ஆலயம். கருவரையில் சிவலிங்கம், முன்புறம், நந்தியும், ஆமை ஒன்றும் உள்ளது. சிறிய முன்மண்டபம்.
கருவரை முன்புற மண்டபத்தின் சுவற்றின் மாடத்தில், ஒரு புறம் விநாயகர், மறுபுறம் ஆஞ்சனேயர். .

ஒரு சிறிய சுற்று பிறகாரம்.
இங்கிருந்து கடலும், கடல் கோவிலும் நன்றாக தெரியுமாறு உள்ளது.

3. சிவன் ஆலயம்.
இதுவும் கடற்கரை ஒட்டியே உள்ள சிறிய ஆலயம். கருவரையில் சிவலிங்கம், முன்புறம், நந்தியும், ஆமை ஒன்றும் உள்ளது. சிறிய முன்மண்டபம்.
கருவரை உள்ளே ஒரு புறம் விநாயகர், மறுபுறம் ஆஞ்சனேயர். தனி சன்னிதி.

ஒரு சிறிய சுற்று பிறகாரம்.
இங்கிருந்து கடலும், கடல் கோவிலும் நன்றாக தெரியுமாறு உள்ளது.

இவைகள் கடற்கரை ஒட்டி உள்ள ஆலயங்கள்.

🛐இந்த சிறு ஆலயங்கள் தனியாரால் பராமரிக்கப்பட்டு வருவது போல உள்ளது.

☸️இவற்றை தரிசித்து பின் கடலில் உள்ள நிஷ்கலந்மகாதேவர் ஆலயம் செல்லலாம்.

💥உண்மையில் வாழ்க்கையில் மறக்க இயலாத ஒரு ஆன்மீக அனுபவம்.

🙏என்றும் அன்புடன்❤️🙏💜🙏💚🙏
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#NISHKALANTH_MAHADEVAR
#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
இதன் முதல் பதிவு :

Thursday, September 23, 2021

SPLENDORS OF INDIA - GUJARAT - NISHKALANTH MAHADEV

https://m.facebook.com/story.php?story_fbid=6247101808698357&id=100001957991710
#SPLENDORSOF INDIA-GUJARATH
#NISHKALANTH_MAHADEVAR
பதிவு - 1.
குஜராத்தில், கட்ச் வளைகுடாவில் அரபிக்கடல் ஒட்டி பவன் நகர் வரை ரயிலில் சென்று அங்கிருந்து பேருந்தில் கடற்கரை ஓரம் உள்ள கோலியாக் என்றும் சிற்றூரில் உள்ள ஆலயம்.

🙏அரபிக் கடலுக்குள் சிவாலயம்🙏

🕉️உலகிலேயே கடலுக்குள் ஓர் அதிசய சிவாலயத்தைப் பற்றியும், அதில் உறைந்து திருவருள் புரிந்து வரும் அருள்மிகு நிஷ்களங்க மகாதேவர் பற்றியும் கேள்விப்படுவது இதுவே முதல் முறையாகும். பல இயற்கைப் பேரிடர்களால் நிலம், கடலாகவும், கடல் நிலமாகவும், மலை மடுவாகவும், மடு மலையாகவும் மாறியுள்ளன. அவற்றில் அமைந்திருந்த திருக்கோயில்களும் அந்த மாற்றத்தில் மறைந்துபோய் உள்ளன. ஆனால் நிஷ்களங்க மகாதேவர் திருவிடம் மட்டும் எந்தவிதமான பேரிடர்பாடுகளாலும் மாறவில்லை, மறையவில்லை.

🕉️எப்படி எதை வைத்துக் கட்டியுள்ளனர்? கடலுக்குள் திருக்கோயிலா? எதற்காக கடலுக்குள் கட்டினார்கள்? யாரால், எப்பொழுது கட்டப்பட்டது?  நிலை இல்லாத ஒன்று என்றால் அது கடல் தானே? அதற்குள் நிரந்தரமான கோயிலா? நம்ப முடியவில்லை தானே? மண்ணாலும், கல்லாலும், மலை மீதும், மலையைக் குடைந்தும், குகைக்குள்ளும், செங்கல், சுண்ணாம்பாலும் நிலத்தில் கோயில்கள் எழுப்பப்பட்டன. கடலுக்குள் கடலரசனே தனது அலைக்கரத்தால் மாலையிலிருந்து காலை வரைக்கும் கோபுரம், விமானம், மதில்கள் என நித்தம் புத்தம் புதிதாகக் கட்டிக் காத்து வருகின்றான். திருமேனிகள் கடலுக்குள் தீவு திடல் போன்ற இடத்தில் பிரதிஷ்டையாகி உள்ளனர். இந்த திருக்கோயில் எங்கே உள்ளது? கடலுக்குள் சென்று எப்படி தரிசிப்பது? என்ற நியாயமான கேள்விகள் எழும்.

🔯இந்திய திருநாட்டில் அண்ணல் காந்தி அடிகள் பிறந்த புண்ணிய பூமியான குஜராத் மாநிலத்தில், அகமதாபாத் மாவட்டத்தில் பாவ்நகர்  என்னும் ஊருக்கு அருகே கோலியாக் என்னும் கடற்கரை கிராமத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அரபிக்கடலின் நடுமத்தியில் அருள்மிகு நிஷ்களங்க மகாதேவர் (களங்கமற்றச் செய்யும் மகாதேவர்) திருக்கோயில் அமைந்துள்ளது.

⚛️இந்தக் கோயிலுக்குச் சென்று எப்படி சுவாமியை தரிசிப்பது? கடவுள் கடலுக்குள் இருக்கின்றார் என்பது தெரிந்துவிட்டது. இப்பொழுது கேள்வி அவர் கண்ணுக்குத் தெரிவாரா? நம்மை மீறிய சக்தியை நாம் உணரமுடியுமா? நேரடியாகவே அனுபவிக்கவே போகின்றீர்கள். போகலாமா? 

🛐அகமதாபாத்திலிருந்து பாவ்நகர் சாலை வழியே 176 கி.மீ. தொலைவிலும், ரயில் பயணத்தின் மூலம் 229 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. பாவ்நகரிலிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் கோலியாக் கடற்கரை கிராமம் அமைந்துள்ளது. கடற்கரையிலிருந்து 1 கி.மீ. கடலுக்குள் நடந்தால் கடவுளை தரிசித்த மெய்சிலிர்க்கும் அனுபவத்தைப் பெறலாம்.

✡️நம்மைப் போலவே குழந்தைகள், பெரியவர்கள், பசுமாடுகள் என ஒரு பெரிய கூட்டமே கடலை நோக்கியபடி தியானம் செய்தபடி நிற்கின்றனர். எதற்காக நிற்கின்றீர்கள்? எப்படி நாம் கடலுக்குள் போவது? என கூட்டத்திற்கு தலைமை தாங்கி நிற்கும் சிவாச்சாரியரிடம் பணிவுடன் வினவுகின்றோம்.‘‘இந்தக் கடல் அலைகள் உள்வாங்கி நமக்கு வழிவிடுவதற்காக காத்திருக்கின்றோம்"

"தினமும் அதற்குரிய திதி வரும்பொழுது கடல் கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கி கோயிலுக்கு அப்பால் சென்று காத்திருக்கும்.  கடலரசன் நமக்கு வழிவிடுவான். மறுபடி சமுத்திரராஜன்   கோயிலை மூழ்கடித்து கரை வரை வந்து விடுவான். அதற்குள் நாம் கடலுக்குள் நடந்தே சென்று மகாதேவரை வழிபட்டு விட்டு வந்துவிட வேண்டும். தினமும் இத்திருக்கோயிலில் பூஜையும் நடக்கின்றது.’’ என்றார்.

🕉️ஜன நெருக்கடியான நகர்புறத்தில் எத்தனை திருக்கோயில்கள் ஒருவேளை பூஜை கூட இன்றி இருப்பது நமது மனக்கண்முன் வந்து போனது. திருக்கோயில் எங்கிருக்கின்றது என்று நாம் கேட்க கடலுக்குள் தூரத்தில் பறக்கும் இரண்டு கொடிகளைக் காட்டி ‘‘அங்குதான் கோயில் உள்ளது. அவைகளே கோயிலின் கொடி கம்பங்கள்’’ என்றார்.  ஆழ்கடலுக்குள் அனுதினமும் ஆண்டவர் பூஜையை ஏற்றுக் கொண்டு மந்திர ஓசையும், மணி ஓசையும் எழுப்ப அனுமதிக்கின்றார். அதனை விரும்பி கடலும் வழிவிட்டு ஒதுங்கி நிற்கின்றது.

☸️காத்திருக்கும் நேரத்தில் இத்திருக்கோயிலின் தல வரலாற்றினை அறிந்து கொள்வோம். கி.மு. 900த்தில் மகாபாரதத்தில் பாரத போர் நடந்த காலகட்டம். பாண்டவர்கள் போரில் கௌரவர்கள் 100 பேர்களையும் கொன்று விடுகின்றனர். இதனால் பாண்டவர்களை பிரம்மஹஸ்தி தோஷம் பீடித்துக் கொள்கின்றது. இந்த தோஷம் தொலைய புதிதாக சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்வித்து தவமிருந்து வழிபட்டு சிவனருளால் நீங்கப் பெறுவது வழக்கமாக நிலவி வந்தது.

🔱அதன்படிக்கு உறவினர்களைக் கொன்ற தங்களது களங்கம் நீங்க தாங்கள் எங்கிருந்து தவம் செய்து சிவபெருமானை வழிபடுவது? என பாண்டவர்கள், கிருஷ்ண பெருமானிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டனர். கிருஷ்ண பரமாத்மா, அவர்களிடம் ஒரு கருப்பு கொடியினையும், ஒரு கருப்பு பசுவினையும் கொடுத்து, எந்த இடத்தில் பசுவும், கொடியும் வெள்ளை நிறமாக மாறுகின்றதோ அந்த இடத்தில் அவர்கள் சிவனை நோக்கி தவமிருக்க வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தார்.

🔱பல காலம் கொடியை ஏந்தியபடி, பாண்டவர்கள் பசுவின் பின்னாலேயே சென்றனர். கோலியாக் கடற்கரை வந்து சேர்ந்த உடன் கொடியும், பசுவும் வெள்ளை நிறத்திற்கு மாறின. மகாதேவர் அழைப்பிற்கு இணங்கி அவர்கள் இந்தத் திருவிடத்திற்கு வருவதற்கு வசதியாக ஆண்டவன் கட்டளையை ஏற்று கடல் உள்வாங்கி வழிவிட, தீவு திடல் போன்ற இந்த மணல் மேட்டிற்கு வந்தடைந்த ஐந்து பேரும் ஆழ்ந்த தவத்தில் ஆழ்ந்து போயினர்.

🔱அவர்களின் தவக் காலம் முற்றிய வேளையில், சிவ வழிபாடு செய்து அவர்களது களங்கத்தைப் போக்கிக் கொள்வதற்கு தோதாக, அவர்கள் ஐவர் முன்னிலையிலும் சிவபெருமான் ஐந்து சிவலிங்கங்களாகப் பிரசன்னம் ஆனார். இறைவன் சுயம்பாக எழுந்தருளியதால் இன்புற்ற ஐவரும், நந்தி தேவர்களையும் பிரதிஷ்டை செய்வித்து, தமிழ் வருடமாகிய பவ வருடத்தில் ஆகஸ்டு மாதத்தில் கி.மு. 900வாக்கில் அமாவாசை இரவன்று திருக்கோயிலை எழுப்பி வேத ஆகம முறைப்படி வழிபட்டு வரலாயினர். இறைவனுக்கு அபிஷேகிக்க அங்கே ஓர் சுனையைத் தோண்டினார்கள்.

🔱அந்த நீர் உப்பு கரிக்காமல் இனிப்பாக இருக்கும் பேரதிசியம் நிலவி வருகின்றது. அவர்களது மேலான வழிபாட்டினை ஏற்றுக் கொண்ட சிவபெருமான், அவர்களது பிரம்மஹஸ்தி தோஷம் என்னும் களங்கத்தைப் போக்கி அருளியதால், அருள்மிகு நிஷ்களங்க மகாதேவர் என்னும் திருநாமத்தை இத்திருவிடத்தில் ஏற்றுக் கொண்டு இங்கு வந்து வழிபடுபவர்களின் பாவம், சோகம், களங்கம் ஆகியவற்றை நீக்கி அருளுகின்றார்.

🔱தலபுராணத்தைக் கேட்டவண்ணம் இருந்த நம்மை, ‘‘வாருங்கள்! சிவபக்தர்களே! நம்மை நிஷ்களங்க மகாதேவர் அழைக்கின்றார்.’’ என சிவாச்சாரியார் பக்திப் பெருக்கில் அழைப்பது கேட்கின்றது. கடல் அலை கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கத் தொடங்குகின்றது. 
 
✴️தொடர்ந்து கடலுக்குள் நடக்கத் தொடங்குகின்றோம். நீர் மேல் நடப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தணல் மேல் நடப்பதைப் பார்த்திருப்போம்.கனகுளிகைகளைச் சாப்பிட்டு விட்டு கண்ணுக்குத் தெரியாமல் சித்தர்கள் வான்வெளியில் பறப்பதை அறிந்திருப்போம். 300 அடி ஆழக் கடலுக்குள் நாம் நடக்கின்றோம்.

🌟பக்கத்தில் துறைமுகம் இருப்பதால் இங்கு கடலின் ஆழம் 300 அடி. அதுவும் நாம் போவதோ நடுக்கடலுக்கு. ‘‘கற்றூணைக் கட்டி கடலுக்குள் பாய்ச்சினாலும் நற்றுணையாவது நமச்சிவாயமே’’. விழுந்து, எழுந்து பிரம்ம பிரயத்தனப்பட்டுச் சென்றாலும், இன்னும் சற்று தொலைவில் கடவுள் கண்ணுக்குத் தெரியப் போகின்றார் என்ற நினைப்பில் அனைவரும் பரவசத்தோடு போகின்றோம். இதோ! அரபிக் கடலுக்குள் ஓர் அதிசய சிவாலயத்தைக் கண்டு கொண்டோம். 
 
♻️தூரத்தில் இருந்து கொடிகள் மட்டுமே தெரிந்த பிரம்மாண்டமான கொடி கம்பங்களைக் கண்டோம். இந்தக் கொடி கம்பத்தில் சிவராத்திரி அன்று 2900 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணபிரான், பாண்டவர்களுக்கு கொடுத்த தெய்வீகக் கொடி கட்டப் பெற்றது என்று கூறப்படுகிறது.

⚜️இக்கொடியை வருடம் ஒரு முறை கோயில் திருவிழாவின் பொழுது பாவ்நகர் மகாராஜா புதிதாக ஏற்றுவார். இக்கொடி இதுவரை ஒரு முறை கூட அறுந்து விழவில்லை. பறந்து போகவில்லை என்றனர். மற்றோர் கொடி மரத்தின் மாடப் புறைக்குள் சிவபெருமானின் திருமேனி பிரதிஷ்டை ஆகியுள்ளார். கொடி மரத்திற்குள் ஐந்து சிவலிங்கங்கள் பிரதிஷ்டை ஆகியுள்ளனர். மேலே ஐந்து சிவலிங்கங்கள் ஆங்காங்கே நந்திதேவருடன் பிரதிஷ்டை ஆகியுள்ளனர். ஆங்காங்கே திரிசூலங்கள் நடப்பட்டுள்ளன.

⚜️பழமையான விநாயகர் திருமேனியும் திருக்காட்சி நல்குகின்றது. கோயிலுக்குள் வந்த நம்மை பெரும் வியப்பில் ஆழ்த்துவது, 
அருள்மிகு நிஷ்களங்க மகாதேவர், நமது பாவக்கறைகளை, களங்களைப் போக்கி சோகங்களைத் துடைத்து எறிகின்றனர். 

💥அன்று கண்ட திருமேனிகள் அழியாமல் இருப்பதும், ஆழி வழி விடுவதும், கடலில் போட்டால் எந்த ஒரு பொருளும் கரை ஒதுங்கும். அதற்கு மாறாக பக்தர்கள் சமர்ப்பித்த பொருட்கள் இறைவருக்கு அர்ப்பணம் ஆகியிருப்பதும், மந்திர ஓசை கடலுக்குள் ஒளிப்பதும், அறிவியலுக்கே பெரும் சவாலாக அமைகின்றது. எந்த ஒரு ஆய்வும் விளக்க முடியாத ஆன்மிக நிகழ்வுகள். 
 
🛐கடலுக்குள் இருக்கும் இறைசக்தியை விட கரை மேல் நிற்பவர்கள் நம்பிக்கை அளவு கடந்து உள்ளது.

       ✴️எங்கள் அனுபவங்கள்✴️

குஜராத்தில், கட்ச் வளைகுடாவில் அரபிக்கடல் ஒட்டி பவன் நகர் TERMINAL Railway Station வரை ரயிலில் சென்று அங்கிருந்து பேருந்தில் கடற்கரை ஓரம் உள்ள கோலியாக் என்றும் சிற்றூர் செல்ல 1 மணிநேரப் பயணம் செய்து அதன் கடற்கரைப் பகுதி அடைய வேண்டும்.

அடுத்த பகுதியில் தொடருகிறது.

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#splendorsofindia 
#Nishkalant

Sunday, September 19, 2021

SPLENDORS OF INDIA - AKSHARDHAM

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#AHAMADABAD_GUJARAT
#AKSHARDHAM 
#SWAMY NARAYANAN TEMPLE
(01.09.2021- புதன்)

✡️குஜராத், அகமதாபாத், காந்திநகர் Sectorல் அற்புதமான முறையில் வடிவமைக்கப்பட்ட  ஆலயம்.

✴️இவ்வாலயம், ஸ்ரீசுவாமிநாராயனர் அவர்களின் வழி 4வது சீடர் யோகி மகராஜ் மற்றும் பிரமுக் சுவாமி அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அமைக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள பெரிய இந்துக் கோவில், சுமார் 13 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு 1992 அக்டோபர் 30ல் திறக்கப்பட்டது.

 ✴️இவருக்கு பின் வந்த சீடர்களாலால் ஸ்ரீசுவாமிநாராயணர் போதனைகள் உலகம் முழுதும் பரப்பப்பட்டு சுமார் 55000 தன்னார்வலர்கள் தற்போது உள்ளனர். மனிதாபிமானம், உலக சகோதரத்துவம், என பல்வேறு தனித்துவம்மிக்க போதனைகள் ஏற்கப்பட்டு எல்லாமதத்தினரும் வந்து வழிபட்டு வருகின்றனர்.

✴️குரு இல்லாமல் ஒருவன் கடைத்தேற முடியாது. 1971ம் ஆண்டு சாப்பியா கிராமத்தில் ஸ்ரீசுவாமிநாராயணர், உத்திரப்பிரதேசத்தில் பிறந்தவர்.  11 வது வயதில் யோகியானார்.  நாட்டின் பல பகுதிகளையும் சுமார் 12000 கி.மீ பயணம் செய்தார்.

✴️ சுவாமிநாராயணர் ஆலயம் இந்தியாவில் 6 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
✴️மிக பிரம்மாண்டமான மார்பிளால் கட்டப்பட்ட, அழகிய, கலை நுட்பத்துடன் விளங்கும் ஆலயம்.

✴️ ஹரி மண்டபம் என்னும் நடுமண்டபம் மூலஸ்தானம் ஆகும். சுவாமி நாராயணர் என்னும் குருவே மூலஸ்தானத்தில் உள்ளார். அவர் அருகில் பிரதம சீடர்கள் நிற்கிறார்கள். அனைத்தும் தங்க சிலைகள்.
✴️மூலவர் 7 அடி தங்க சிலை.

✴️காந்திநகரில் உள்ளது.
900 சிற்ப கலைஞர்கள் பாடுபட்டு உருவாக்கியுள்ளனர்.

✴️உலகத்தின் பல பகுதிகளிலிருந்து மக்கள் வந்து தரிசனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

✴️வருடத்திற்கு சுமாரக6 மில்லியன் பேர்கள் இங்கு வந்து செல்கிறார்கள்.

✴️சுவாமிநாராயணனின் போதனைகள், அவரின் பற்றாளர்கள் குஜராத்தில் மிகவும் அதிகம்.

✴️6000 மெட்ரிக் டன் அளவில் ராஜஸ்தான் பிங்க் மார்பிள் கற்களால், கட்டபட்டுள்ளது. 7 அடி 
மூல சிலை 1.2 டன்கள் கொண்டது.

✴️உட்கார்ந்திருக்கும் நிலையில் ஸ்ரீ சுவாமிநாராயணரரும், அவர் அருகில் அவர் சீடர்கள் இருபுறமும், நின்ற நிலையில் உள்ளனர்.

✴️108 அடி உயரம், 131 அடி அகலம்,  240 அடி பாதை நீளம். 97 செதுக்கப்பட்ட அழகிய தூண்கள் கொண்டது.

✴️சிவன், பார்வதி, கணேஷ் சிலைக்கும், கிருஷ்ணர் - ராதா, பெருமாள்- லெட்சுமி, சிலைகளும் உண்டு

✴️அபிஷேக மண்டம் 
இங்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்ய தனி சிலை உள்ளது. கட்டணம் செலுத்தி பிரார்த்தனை அபிஷேகம் செய்து கொள்ளலாம்.
 
✴️கண்காட்சி அறைகள்:
5 கண்காட்சி அறைகள், தனித்தனியாக கட்டணத்துடன் ஆலயத்தின் வடபுறத்தில் உள்ள பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

✴️ஸ்ரீசுவாமிநாராயணர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஏராளமாக, உள்ளன.
✴️குஜராத், அகமதாபாத், காந்திநகரில் உள்ளது.

💥நுழைவுக்கட்டணம் கிடையாது.
பலத்த சோதணைகள் உண்டு. Cloak ரூம் தனியாக உள்ளது. Cell முதலிய Electronic பொருள்கள் கொண்டு செல்ல முடியாது. பத்திரமாக வைத்து செல்ல தனி Counters உண்டு.
✴️காலை 9.30 முதல் மாலை 7.30 வரை அனுமதி உண்டு.
✴️கண்காட்சி, முதலியவற்றிற்கு தனித்தனி கட்டணங்கள் உண்டு.
✴️மேலும், நீர் விளையாட்டுகள், ஒலி ஒளி காட்சிகள் முதலியவைகளும் தனிக்கட்டணங்களில் உண்டு.
✴️உணவுக் கூடம் தனியாக உள்ளது.
✴️RESTRooms நிறைய இடங்களில் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு தனித் தனியாக உள்ளன.
✴️புனிதமான இடம் என்பதால், கருவறை மண்டபம் முன்புறம் தனி Cheppal Stand வசதி செய்துள்ளார்கள்.

✴️தனி கார், பஸ் பார்க்கிங் வசதிகள் உண்டு.
✴️ஏராளமான யாத்திரீகர்கள் வருவதால், கட்டுப்பாடுகள் உண்டு.

குறிப்பு..
💥அக்சர்தாம் கோயில் தாக்குதல் (Akshardham Temple Attack), இந்திய மாநிலமான குசராத்தின் தலைநகரான காந்திநகரில் உள்ள அக்சர்தாம் கோயிலில் 24 செப்டம்பர் 2002 அன்று மாலை முதல் 25 செப்டம்பர் 2002 காலை வரை, பாகிஸ்தான் நாட்டு லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது இயக்க தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், குண்டு வீச்சிலும் 29 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 80 பேர் காயமடைந்தனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குஜராத் காவல் துறையினரும், தேசிய பாதுகாப்பு படையினரும் நடத்திய எதிர்தாக்குதலில், லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் சே முகமது இயக்கத்தின் தீவிரவாதிகள் முர்துசா ஹபீஸ் யாசின் மற்றும் அஷ்ரப் அலி முகமது பரூக் ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த எதிர் தாக்குதலில் மூன்று பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டனர்.

🛐Mahalashmi Temple, அகமதாபார்.
நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் இருந்த மகாலெட்சுமி ஆலயம். சுமார் 15 படிகள் கொண்டது. பிராதான சாலையில் உள்ளது.
மூலஸ்தானத்தில், பெரிய அழகிய மகாலெட்சுமி அருமையாக உள்ளது. சுற்றி வருவதற்கு சிறிய பாதையும் உண்டு.   பிரார்த்தனை தலம் என்று கூறுகிறார்கள்.
❤️
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#அக்ஷர்தாம்_குஜராத்

SPLENDORS OF INDIA -SABARMATHI MUSEUM

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#AHAMADABAD_GUJARAT
#SABARMATHI_ASHRAMAM
(01.09.2021 - புதன்)
சபர்மதி ஆசிரமம்:
அகமதாபாத் நகரின் நகர மண்டபத்திலிருந்து 4 மைல்கள் தொலைவில் சபர்மதி ஆற்றின் கரையில் புறநகர் சபர்மதியின் புகழ்பெற்ற ஆசிரமம் சாலையில் அமைந்துள்ளது. இது காந்தி ஆசிரமம் என்றும் அரிசன் ஆசிரமம் என்றும் சத்தியாகிரக ஆசிரமம் என்றும் குறிப்பிடப்படுகிறது. 
🌟தேசத் தந்தை மகாத்மா மோகன்தாசு கரம்சந்த் காந்தி அவர்கள் 1918 முதல் 1933 வரை இங்கு வாழ்ந்திருந்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் 1930ஆம் ஆண்டு நடைபெற்ற தண்டி யாத்திரையில் முக்கிய பங்காற்றிய இவ்விடம் இந்திய அரசால் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
♻️இன்றைய நிலையில்.
Gandhi Smarak Sangrahalaya என்ற அமைப்பு இதை பராமரித்து வருகிறது.
🌟ஒரு பெரிய மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது.
10-05-1963ல் பண்டிட் ஜவகர்லால் நேரு அவர்கள் இதைத் திறந்து வைத்துள்ளார்.
✴️புகைப்பட கண்காட்சி:
மகாத்மாவின் வாழ்வில் நிகழ்வுற்ற பல்வேறு நிகழ்வுகளை விளக்கும் ஏராளமான புகைப்படங்கள், நூல்கள் வைக்கப்பட்டுள்ளது.

🔆அரிய பல்வேறு பொருட்கள், கையெழுத்துப் பிரதிகள், புகைப்படங்கள், ஓவியங்கள், நிறைந்துள்ளது.

🔆ஏராளமான வித்தியாசமான அமைப்பில் ராட்டைகள் இயந்திரங்கள் உள்ளன.

🔆மிக அதிகமான வரலாற்று பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

🔆வருடத்திற்கு சுமார் 7 இலட்சம் பேர் வந்து செல்லுமிடமாக உள்ளது.

🔆சபர்மதி ஆற்றின் கரைகள் அழகிய படிகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரமத்திலிருந்து தேவையிருக்கும் போது செல்ல வழி உள்ளது.

🔆ஆசிரமத்தில் அமைதி, புனிதம் நிறைந்துள்ள இடமாக அனுபவத்தில் உணரலாம்.

✡️தேசத்தின் மீது அக்கரையும், மகாத்மாவின் மீது பேரன்பும் கொண்ட பாரதத்தின் புதல்வர்களுக்கு இவ்விடம் ஒரு மதிப்பான ஆலயம். மறக்க இயலாத இடமே.

🔆காலை 8 மணி முதல் மாலை 7 மணிவரை திறந்திருக்கும்.
🔆நுழைவுக்கட்டணமில்லை

 என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

SPLENDORS OF INDIA- Ahamadabad -Sabarmathi Ashram

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#AHAMADABAD_GUJARAT
#SABARMATHI_ASHRAMAM
(01.09.2021 - புதன்)
சபர்மதி ஆசிரமம்:
அகமதாபாத் நகரின் நகர மண்டபத்திலிருந்து 4 மைல்கள் தொலைவில் சபர்மதி ஆற்றின் கரையில் புறநகர் சபர்மதியின் புகழ்பெற்ற ஆசிரமம் சாலையில் அமைந்துள்ளது. இது காந்தி ஆசிரமம் என்றும் அரிசன் ஆசிரமம் என்றும் சத்தியாகிரக ஆசிரமம் என்றும் குறிப்பிடப்படுகிறது. 
🌟தேசத் தந்தை மகாத்மா மோகன்தாசு கரம்சந்த் காந்தி அவர்கள் 1918 முதல் 1933 வரை இங்கு வாழ்ந்திருந்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் 1930ஆம் ஆண்டு நடைபெற்ற தண்டி யாத்திரையில் முக்கிய பங்காற்றிய இவ்விடம் இந்திய அரசால் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

🌟மகாத்மா காந்தி அவர்கள் தமது மணவியுடன் 12 வருடங்கள் இங்குள்ள வீட்டில் வசித்து வந்திருக்கிறார்கள்.
வீடு அமைப்பு அப்படியே உள்ளது.
 சில வீட்டுப் பொருள்களும் அறைக்களும் அக்கரையுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது.

🌟ஒவ்வொரு நாளும் பகவத்கீதையுடன் வழிபாடு செய்யப்பட்டு வந்ததாக குறிப்புகள் உள்ளன.

🌟உப்பு சத்தியாகிரகம் ஆரம்பிக்க இங்கு முடிவு செய்து, தண்டி யாத்திரைக்கு இந்த இடத்திலிருந்து தான் புறப்பட்டார்.

 🌟36 எக்கர் நிலம் சபர்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

🌟பிரிட்டிஷ் அரசு இந்த இடத்திற்கு வரி விதித்து, வசூலிக்க முடிவெடுத்தது. மக்கள் போராட்டம் நடந்தது.

🌟மகாத்மா 12.3.1930ல் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு நான் இங்கு வருவேன் என்று உறுதி எடுத்திருந்தார்.

♻️இன்றைய நிலையில்.
Gandhi Smarak Sangrahalaya என்ற அமைப்பு இதை பராமரித்து வருகிறது.
🌟ஒரு பெரிய மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது.
10-05-1963ல் பண்டிட் ஜவகர்லால் நேரு அவர்கள் இதைத் திறந்து வைத்துள்ளார்.
 
💥நந்தினி : ஆசிரமத்தின் முன்னாள் விருந்தினர் இல்லம்.
💥வினோபா குடில். வினா பாபா தங்கியிருந்த இடம்.
💥உபாசாணா ஆலயம் : திறந்த வெளி பிரார்த்தனை இடம்.
💥மகன் நிவாஸ்:
காந்தியின் உறவினரும், ஆசிரமத்தின் பாதுகாவலர் இருந்த இடம்.

✴️புகைப்பட கண்காட்சி:
மகாத்மாவின் வாழ்வில் நிகழ்வுற்ற பல்வேறு நிகழ்வுகளை விளக்கும் ஏராளமான புகைப்படங்கள், நூல்கள் வைக்கப்பட்டுள்ளது.

🔆அரிய பல்வேறு பொருட்கள், கையெழுத்துப் பிரதிகள், புகைப்படங்கள், ஓவியங்கள், நிறைந்துள்ளது.

🔆ஏராளமான வித்தியாசமான அமைப்பில் ராட்டைகள் இயந்திரங்கள் உள்ளன.

🔆மிக அதிகமான வரலாற்று பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

🔆வருடத்திற்கு சுமார் 7 இலட்சம் பேர் வந்து செல்லுமிடமாக உள்ளது.

🔆சபர்மதி ஆற்றின் கரைகள் அழகிய படிகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரமத்திலிருந்து தேவையிருக்கும் போது செல்ல வழி உள்ளது.

🔆ஆசிரமத்தில் அமைதி, புனிதம் நிறைந்துள்ள இடமாக அனுபவத்தில் உணரலாம்.

✡️தேசத்தின் மீது அக்கரையும், மகாத்மாவின் மீது பேரன்பும் கொண்ட பாரதத்தின் புதல்வர்களுக்கு இவ்விடம் ஒரு மதிப்பான ஆலயம். மறக்க இயலாத இடமே.

🔆காலை 8 மணி முதல் மாலை 7 மணிவரை திறந்திருக்கும்.

🔆நுழைவுக்கட்டணமில்லை.

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

Friday, September 17, 2021

SPLENDORS OF INDIA - GOLKONDA 3

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#HYDRABAD_TELUNGANA

#கோல்கொண்டா
Golgonda Fort.
(31.08.2021-செவ்வாய்)
பதிவு :3
🌟கோல்கொண்டா அல்லது கோல்கண்டா (Golconda, Golkonda), தென் மத்திய இந்தியாவின் சிதைந்த ஒரு நகரம்.

🌟பத்ராசலம் கோவிலைக் கட்டிய பரம இந்துவான பக்த ராமதாசு என்று பிரபலமாய் அறியப்படும் காஞ்சர்லா கோபண்ணா அப்போது சுல்தானாக இருந்த தானா ஷாவுக்கு தெரிவிக்காமல் அக்கோயிலை கட்டியதால் சிறை தண்டனை பெற்று கோட்டைக்குள் இருந்த ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்தப் பகுதியில் ஒரு பெரிய பண்டசாலை (goodown) ஆக பயன் படுத்தியிருக்கிறார்கள்.
மலையில் கட்டப்பட்டுள்ள இந்த மண்டபம் நீண்டது. ஒரு புறம் பெரிய மேடை அமைப்பும், அதன் மீது ஏற படிகளும் இருக்கின்றன. அதன் சுவற்றில் ஸ்ரீ ஹனுமானின் திரு உருவங்கள், மற்றும் வேறு வேறு கடவுள் உருவங்கள், புடை சிறப்பமாக உருவாக்கப்பட்டுள்ளது. 
ஸ்ரீ ராமதாஸர் வழிபாடு செய்திருக்கலாம். 

🌟நான்கு நூற்றாண்டுகள் பழையதாகி விட்டிருந்தபோதிலும் கட்டுமானக் கலையின் அற்புத அழகு சிதையாமல் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. 

🌟கோல்கொண்டா நகரம் சிறந்து விளங்கிய சமயத்தில் இது வைரத்திற்கு பெயர்பெற்றது என்பதால், உலகப் புகழ் கோஹினூர் வைரம் இந்த கோட்டையில் இருந்து தான் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு கருங்கல் மலையின் (120 மீ உயரம்) உச்சியில் கட்டப்பட்டிருக்கும் இந்த பெரிய கோட்டை கட்டுமானப் பொறியியலின் திட்டத்திற்கும் சிறப்புக்கும் ஒரு சிறந்த உதாரணமாய் திகழ்கிறது.

🌟கோல்கொண்டா வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறம் அனைத்தும் சுமார் 11கிமீ பரப்பளவுக்கு விரிந்து பரந்திருப்பதால், அதன் அனைத்து பகுதிகளையும் காண்பது என்பது நேரம் எடுக்கும் செயலாகும். 

🌟கோட்டைக்கு பார்வையிட வருபவர்கள் வாசல்கள், தளங்கள், நுழைவாயில்கள் மற்றும் கோபுரங்களை கண்டு ரசிக்கலாம். நான்கு தனித்தனி கோட்டைகளாய் அமைந்திருக்கிறது..

 🌟கோல்கொண்டாவில் கட்டுமானக் கலையின் அற்புதம் அதன் ஒவ்வொரு குடியிருப்புகள், அரங்குகள், கோவில்கள், மசூதிகள் மற்றும் அதன் பிற கட்டிடங்களில் காணக்கிடைப்பதாய் இருக்கிறது. 400 வருடங்களுக்கு முன் இருந்த அதே வசீகரத்தை கோட்டையின் தோட்டங்கள் இழந்திருந்தாலும் கோல்கொண்டா கோட்டையின் பழம் பெருமையை புரிந்து கொள்ள தோட்டத்தை நாம் சுற்றிப் பார்த்தால் அவசியமாகும். மீண்டும் நல்ல முறையில் பராமரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

🌟
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

SPLENDORS OF INDIA GOLKONDA 2

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#HYDRABAD_TELUNGANA
#கோல்கொண்டா
Golgonda Fort. 
(31.08.2021-செவ்வாய்)

பதிவு - 3

🌟கோல்கொண்டா அல்லது கோல்கண்டா (Golconda, Golkonda),  பண்டைய கோல்கொண்டா ராச்சியத்தின் (கி.பி. 1364–1512) தலைநகராகவும் இருந்தது. இது ஐதராபாத் நகருக்கு மேற்கே 11கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

🌟குதுப் மன்னரான இப்ராஹிம் குலி குதுப் ஷா வாலி தான் கோல்கோண்டாவைக் கட்டியவர்களில் முக்கியமானவர் ஆவார்.

 🌟வடக்கில் முகலாயர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகத் தங்களது முதலாம் தலைநகரான கோல்கொண்டாவில் கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பினர். 

🌟13 ஆம் நூற்றாண்டு கோல்கொண்டாக் கோட்டை ககாதியா அரசர்களால் கட்டப்பட்டதாகும். அதன்பின் வந்த குதுப் ஷாஹி அரசர்கள் தான் இப்போதிருக்கும் கட்டமைப்பை எழுப்பினர். 16 ஆம் நூற்றாண்டில், ஐதராபாத் அருகே குதுப் ஷாஹி ராச்சியத்தின் தலைநகரம் மற்றும் கோட்டை நகரமாய்க் கோல்கொண்டா திகழ்ந்தது. இந்நகரம் செல்வம் கொழிக்கும் வைர வியாபாரத்திற்கும் மையமாய்த் திகழ்ந்தது. 

🌟1687 ஆம் ஆண்டில் முகலாயச் சக்கரவர்த்தி அவுரங்கசீப் கைப்பற்றும் வரை குதுப் ஷாஹி சுல்தான் ராச்சியம் நீடித்தது. அவுரங்கசீபிற்கு எதிராக ஒன்பது மாதங்கள் தாக்குப் பிடித்த இந்த கோட்டை, நம்பிக்கைத் துரோகத்தின் விளைவாய் முகலாயர்களிடம் வீழ்ந்தது. 

🌟பத்ராசலம் கோவிலைக் கட்டிய பரம இந்துவான பக்த ராமதாசு என்று பிரபலமாய் அறியப்படும் காஞ்சர்லா கோபண்ணா அப்போது சுல்தானாக இருந்த தானா ஷாவுக்கு தெரிவிக்காமல் அக்கோயிலை கட்டியதால் சிறை தண்டனை பெற்று கோட்டைக்குள் இருந்த ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்தப் பகுதியில் ஒரு பெரிய பண்டசாலை (goodown) ஆக பயன் படுத்தியிருக்கிறார்கள்.
மலையில் கட்டப்பட்டுள்ள இந்த மண்டபம் நீண்டது. ஒரு புறம் பெரிய மேடை அமைப்பும், அதன் மீது ஏற படிகளும் இருக்கின்றன.  அதன் சுவற்றில் ஸ்ரீ ஹனுமானின் திரு உருவங்கள், மற்றும் வேறு வேறு கடவுள் உருவங்கள், புடை சிறப்பமாக உருவாக்கப்பட்டுள்ளது. 
ஸ்ரீ ராமதாஸர் வழிபாடு செய்திருக்கிறார்.

🌟கோல்கொண்டா வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறம் அனைத்தும் சுமார் 11கிமீ பரப்பளவுக்கு விரிந்து பரந்திருப்பதால், அதன் அனைத்து பகுதிகளையும் காண்பது என்பது நேரம் எடுக்கும் செயலாகும். 

🌟கோட்டைக்கு பார்வையிட வருபவர்கள் வாசல்கள், தளங்கள், நுழைவாயில்கள் மற்றும் கோபுரங்களை கண்டு ரசிக்கலாம். நான்கு தனித்தனி கோட்டைகளாய் அமைந்திருக்கிறது..

 🌟கோல்கொண்டாவில் கட்டுமானக் கலையின் அற்புதம் அதன் ஒவ்வொரு குடியிருப்புகள், அரங்குகள், கோவில்கள், மசூதிகள் மற்றும் அதன் பிற கட்டிடங்களில் காணக்கிடைப்பதாய் இருக்கிறது. 400 வருடங்களுக்கு முன் இருந்த அதே வசீகரத்தை கோட்டையின் தோட்டங்கள் இழந்திருந்தாலும் கோல்கொண்டா கோட்டையின் பழம் பெருமையை புரிந்து கொள்ள தோட்டத்தை நாம் சுற்றிப் பார்த்தால் அவசியமாகும். மீண்டும் நல்ல முறையில் பராமரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

🌟பால ஹிசார் நுழைவாயில் தான் கிழக்கு பக்கத்தில் கோட்டைக்கான முதன்மை நுழைவாயிலாக இருக்கிறது. இது கூம்பு வடிவ வளைவைக் கொண்டுள்ளது. தூண்களில் யாளிகள் இடம்பெற்றிருக்கின்றன. கதவுக்கு மேலிருக்கும் பகுதியில் அலங்கர வால்களுடனான மயில்கள் இடம்பெற்றுள்ளன. கீழிருக்கும் கருங்கல் கற்களில் யாளிகளின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. மயில்கள் மற்றும் சிங்கங்களின் வடிவமைப்பு இந்து-முஸ்லீம் கட்டிடக் கலையின் கலவையாகும்.

🌟கோல்கொண்டாவின் வெளிப்புறத்தில் அமைந்திருக்கும் இரண்டு தனித்தனி விதானங்கள் கோட்டையின் பெரும் சிறப்புகளாய் இருக்கின்றன. மிகவும் கரடுமுரடான பாறைப் பகுதியில் இது கட்டப்பட்டுள்ளது. கோட்டையில் கலைக் கோயிலும் இடம்பெற்றுள்ளது. கோல்கொண்டா கோட்டையின் உச்சியில் இருக்கும் அரச சபையில் இருந்து இதனைக் காண முடியும்.

🌟கோல்கொண்டா கோட்டையின் அற்புதமான ஒலியமைப்பு முறை கோட்டையின் கட்டிடக் கலை சிறப்பு குறித்து ஏராளமாய் கூறுகிறது. இந்த கம்பீரமான கட்டமைப்பில் அழகிய அரண்மனைகளும் தனித்துவமான நீர் வழங்கு அமைப்பும் இடம்பெற்றுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, கோட்டையின் தனித்துவமான கட்டிடக் கலை சிறப்பம்சம் தனது வசீகரத்தை இப்போது இழந்து கொண்டிருக்கிறது.

🌟கோட்டையின் காற்றோட்ட அமைப்புகள் அற்புதமான வடிவமைப்பு கொண்டுள்ளன. கோடையின் வெம்மையில் இருந்து நிவாரணம் அளிக்கத்தக்க குளிர்ந்த காற்று கோட்டை உள்பகுதிகளுக்கும் எட்டும் வகையில் அவை அற்புதமான வடிவமைப்பைக் கொண்டுள்ளன.

🌟கோட்டையின் பெரும் வாயிற் கதவுகள் பெரிய கூரிய இரும்பு முனைகள் பொதிக்கப் பெற்றுள்ளன. கோட்டையை யானைகள் சேதப்படுத்தாமல் பாதுகாப்பதற்காக இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கோல்கொண்டா கோட்டையைச் சுற்றி 11 கிமீ நீள வெளிச் சுவர் உள்ளது. கோட்டைக்கு உறுதி கூட்ட இது கட்டப்பட்டது.

🌟மலை உச்சியில் அமைந்துள்ள மகாகாளி ஆலயம், அதன் மேல் அமைந்துள்ள வியக்க வைக்கும் இரட்டைப் பாறை அமைப்புக்கள் மிகவும் அற்புதம். 
'
🌟ஒட்டகம் ஒன்று உட்கார்ந்திருக்கும் காட்சிபோல பாறை தென்பட்டது.

🌟அருகில் பீரங்கியும், மேடையும் உள்ளது.

🌟 நுழைவுவாயில் சென்று அதன் அருகில் Ground Level பகுதியின் பல பகுதிகள் உள்ளன.
🌟 கோட்டை மலை மீது உச்சியில் தர்பார்மண்டபம், மகாகாளி ஆலயம், அதன் உச்சியில் அமைந்த இரண்டு பெரிய கற்பாறைகள், பீரங்கிகள் பார்க்கலாம். மசூதி ஒன்றும் பூட்டிய நிலையில் உள்ளது.
🌟ஒரு வழியாக மலை உச்சி வரை சென்று மறுவழியில் வருமாறு பாதைகள் அமைப்பு உள்ளது. 
🌟மலைப் பாதை படிகளும் உண்டு முடிந்தவர் முயற்சி செய்தால் உச்சிவரை சென்று ரசித்து வரலாம்.

🌟கோட்டைக்கு முன்புறம்  பேருந்துகள் நிலையமும், வாகன நிறுத்துமிடம், Bus, Car Parking வசதியுடன் உள்ளது.

🌟நுழைவுக் கட்டணம் ரூ 25/- (அனைவருக்கும்).

என்றும் அன்புடன்❤️🙏💜🙏💚🙏
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)

SPLENDORS OF INDIA - GOLKONDA 1

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#HYDRABAD_TELUNGANA
#கோல்கொண்டா
Golgonda Fort. 
(31.08.2021-செவ்வாய்)

பதிவு - 1.

🌟கோல்கொண்டா அல்லது கோல்கண்டா (Golconda, Golkonda), தென் மத்திய இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமாக இருப்பதுடன், பண்டைய கோல்கொண்டா ராச்சியத்தின் (கி.பி. 1364–1512) தலைநகராகவும் இருந்தது. இது ஐதராபாத் நகருக்கு மேற்கே 11கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. உலகில் முதல்முதலாக வைரங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதி.

🌟குதுப் மன்னரான இப்ராஹிம் குலி குதுப் ஷா வாலி தான் கோல்கோண்டாவைக் கட்டியவர்களில் முக்கியமானவர் ஆவார். 1512 ஆம் ஆண்டு முதல் கோல்கொண்டாவை ஆண்ட குதுப் ஷாஹி அரசர்கள் கட்டிடக் கலையில் மிகச் சிறந்தவர்களாய்த் திகழ்ந்தனர்.

 🌟வடக்கில் முகலாயர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகத் தங்களது முதலாம் தலைநகரான கோல்கொண்டாவில் கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பினர். கோட்டை முன்வாசல்களின் அருகே ஒரு சிறு கைதட்டல் ஒலி கேட்டால் கூட 300 அடி உயரக் கோட்டை கோபுரத்தின் உச்சியில் கேட்கும் வகையில் ஒரு சிறந்த ஒலியமைப்பை அவர்கள் வடிவமைத்து உருவாக்கியிருந்தனர். இது கோட்டையின் சிறப்பான அம்சங்களில் ஒன்றாகும்.