Tuesday, August 9, 2022

#அமர்நாத்யாத்ரா 20225-07-2022 to 10-07-2022 #KHEER_BHAWANI

10.
அமர்நாத்பனிலிங்கதரிசனம் 
#காஷ்மீர்
#அமர்நாத்யாத்ரா 2022
5-07-2022 to 10-07-2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#KHEER_BHAWANI

அருள்தரும் #கீர்_பவானி அம்மன் ஆலயம்

9.07.2022 சனிக்கிழமை

காலையில் 6 மணிக்கு போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட பிறகு, Nilgrith லிருந்து புறப்பட்டு, வழியில் உள்ள DABA வில் காலை உணவு எடுத்துக்கொண்டு,
SRINAGAR அருகில் உள்ள #KHEER_BHAVANI என்ற புகழ்பெற்ற புராதானமான, சக்தி ஆலயம் சென்று அம்மனை தரிசித்தோம்.

#கீர்பவானி (#KheerBhawani) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள இந்து கோவில் ஆகும்.

இக்கோவில் #கீர்_பவானி எனும் இந்துக் கடவுளுக்கான கோவிலாகும்.

இது Srinagar நகருக்கு வட கிழக்கே 25 கி.மீ தொலைவில் குல்முல் என்ற பகுதியில் அமைந்துள்ளது.

 Kashmir இந்துகளின் வழிபாட்டிடம் ஆகும். கீர் எனும் சொல்லுக்கு கூழ் என்று பொருள்.

இக்கோவிலில் கடவுளுக்கு அரிசிக் கூழ் படைக்கப்படுவதால் கீர் எனும் சொல் கோவிலின் பெயருடன் இணைந்துகொண்டது. 

பால் ஊற்றியும் வழிபாடு செய்கிறார்கள்.

இந்துக்களின் நம்பிக்கையின்படி இக்கோவிலின் கடவுளுக்கு மஹாரக்ஞ தேவி, ரங்ஞ தேவி, ராஞ்சி, பகவதி என மேலும் பல பெயர்கள் உண்டு.

ராஜதாரங்கனியாக இவரை சில நூல்களில் குறிப்பிடுகிறார்கள்.

இலங்கையின் மன்னன் ரவணன், இந்த தேவியை கடும் தவம் செய்து வணங்கியதால், இந்த தேவி, ராவணனுக்கு முன் தோன்றி அனுகிரகம் செய்தார்.

இந்த தேவியின் உருவத்தை இலங்கையில் வடிவமைத்து துர்காவாக (ஷியாமா தேவியாக) வழிபடலானார்.

ஆனாலும், ராவணனின் கொடுங்குனத்தினால், தேவி, ஹனுமன் உதவியால், துல்முல் (இவ்விடம்) வந்தடைந்தர். அவ்வாறு வந்த இரவை ரக்ஞா இரவு என்று விழா அமைத்துள்ளனர். 

ராவணன் துர்க்காவாக (ஷியாமாக) இவரை வழிபட்டாலும், வைஷ்ணவியின் ஒரு அங்கமாகவே திரிபுரசுந்தரியாக இவரை வழிபட வேண்டும் என்பது புராணம். 

இவர் நமக்கு அன்பும் கருணையும் தரக்கூடியவர்.

மேலும்,

காஷ்மீர் மக்கள் இவரை குலதெய்வமாக வழிபடுவதால், உலகின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள்.

ஒரு சிறிய குளத்தினுள், இந்த தெய்வ சன்னதி மண்டபம் உள்ளது. இக்குளம் நீள் சதுர வடிவத்தில் இருப்பினும் 7 கோணங்களில் அமைந்துள்ளது.

 இவ்வாலயத்தில் உள்ள குளம் சிவப்பு, ஆரஞ்சு, பிங், பச்சை, நீலம், வெள்ளை என நிறத்தில் மாறும். ஆனால், கருமை யாக மாறும் பட்சத்தில், தூர் சகுனம் ஏற்படும் என்கிறார்கள். மற்ற வண்ணங்கள் இருக்கும்போது, நிகழ்வுகள் ஒன்றும் இல்லை. 

1886 ல் வால்டர் லாரன்ஸ் என்ற ஆங்கில அதிகாரியின் குறிப்பில், இந்த குளநீர் Violet கலர் இருந்தது என்று உள்ளது. 

மகாராஜா பிரதாப் சிங், மற்றும் ஹரிசிங் இக்கோவிலை 1910 ம் ஆண்டுகளில், புனரமைத்துக் கட்டியுள்ளனர்.

கீர் பவானி மேளா / விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. பக்தர்கள் கூட்டம் மிகப்பெரிய அளவில் வந்து தரிசனம் செய்வார்கள். ஜேஷ்டா அஷ்டமியின் போது இவ்விழா நடைபெறுகிறது.

1990 ல் தீவிரவாதிகளால், மிரட்டல் விடப்பட்டபோது, பாரத ராணுவ ஜவன்களால் எதிர்கொள்ளப்பட்டு, துணை நின்றதும் குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் இந்துக்கள், துராக்கிரமாக, விரட்டப்பட்டபோதும், இவ்வாலயம் பாதுகாக்கப்பட்டு, பூசைகள் செய்து, தொடர்ந்து இந்துகளின், வழிபாட்டில் இருக்கும் முக்கிய ஆயங்களில் இதுவும் ஒன்று.

ஒரு முறை, துல்முலா பகுதி முழுவதும் சேரும் மனலுமாய் மூழ்கி உறைந்தபோது, இவ்வாலயம், குளம் எங்குள்ளது என்பதை தேவி, காஷ்மீர் யோகி கிருஷ்ணா பண்டிட் என்பர் கனவில் தோன்றி, சரியான இடத்தை காட்டினார் என்பதாக ப்ரகு சமிக்தா என்ற நூலில் உள்ளது.

சுவாமி விவேகானந்தர் இவ்வாலயத்திற்கு வந்து தரிசனம் செய்து தங்கியிருந்தார், அவரிடம்,
தாம் சிதலமடைந்த இடத்தில் இருப்பதாகவும், 'இதை நான் விரும்பியவாறு எழு அடுக்கு ஆலயமாக மாற்ற வேண்டும் என்றும், நான் என்ன செய்ய வேண்டும், என்னை நான் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா? அல்லது நான் தங்களை பாதுகாக்க வேண்டுமா? " என்று தேவி கேட்டதாக குறிப்பிடுகிறார்.

சுவாமி ராம தீர்த்தர் இவ்வாலயம் வந்து வழிபட்டதாக குறிப்புள்ளது.

குழந்தை வரம் அருளும் தாய்:

காஷ்மீரில் வாழ்ந்த பண்டிட் பிரசாத் என்பவர், இந்த தேவியை வழிபட்டு குழந்தை செல்வம் பெற்றார் என்றும். தேவியின் அருளால் அவருக்கு மகள் கிடைத்தார் என்பதும், அந்த மகள் ஒரு பண்டிதரை மணந்து 1898ல் ஒரு குழந்தை பெற்றெடுக்க, அக்குழந்தை காஷ்மீரின் மிகப்பெரிய மகான்களில் ஒருவரான பகவான் கோபிநாத் என்பவராவார் என்பதும் வரலாறு.

ஆலய அமைப்பு :

ஆலயம் முன்புறம் சிறிய கார் / வேன் பார்க்கிங் வசதி உள்ளது.

ஆலயம் பாரத ராணுவ ஜவான்கள் பாதுகாப்பில் உள்ளது.
பாதுகாப்புக்காரணங்களால், உள் நுழையும் போது பதிவு செய்து அனுமதிக்கின்றார்கள். 

சினார் மரங்கள் அடர்ந்த தோட்டத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. அமைதியும், தெய்வீகமும் இணைந்து காணப்படுகிறது.

முன்புறம் வாசல் தாண்டியவுடன், இரண்டு புறங்களிலும் அழகிய நீள் சதுரத்தில் இரட்டைக் குளங்கள், அதைக் கடந்து உள் செல்ல வேண்டும்.  

காலனிகள், வைக்க தனி இடம் உள்ளது.

ஆலயத்தின் இடது உள் நுழை பகுதியில் ஒரு பெரிய சினார் மரத்தின் அருகில் ஒரு சிறிய சன்னதியில் கிழக்கு நோக்கிய சிவலிங்கம் அமைந்துள்ளதும், அதன் நேர் பின் பகுதியில் சிறிய தனி சன்னதியில், ஹனுமார் சன்னதியும் சிறிய விநாயகர் உருவம் தனியாகவும் வழிபாட்டில் உள்ளது.

முக்கிய ஆலயம், ஒரு நீள்சதுர வடிவம் உள்ள நீர்த் தொட்டியின் நடுவில் உள்ள சிறிய மண்டபத்தில், மேற்கு நோக்கி கீர்பவானி அம்மன் மற்றும் ஒரு சிவலிங்கமும் இணைந்து உள்ளது. 

எதிர்புறம் பெரிய மண்டபம் ஹோமம் செய்யவும் கீர் பவானியை அங்கு இருந்தபடி கண்டு வழிபடவும் வசதியாக உள்ளது.

சிறிய அளவில், பால், அரிசியில் செய்யப்பட்ட பொருளும் இனிப்பு கலந்த பண்டங்கள் சிலவும் சுவாமிக்கு விளக்கு ஏற்றி வைத்து, பஜனை அல்லது ஸ்தோத்திரங்கள் பாடி வழிபாடு செய்கிறர்கள்.

பால் ஊற்றி வழிபடுவதால், பால் பவானி எனலாம்.

ஆலயத்தின் பின்புறம், பக்தர்கள் வந்து தங்கி வழிபட Hall, Rooms உள்ளன. அன்னதானக் கூடம் ஒன்றும் உள்ளது.

மிகப்பெரிய வளாகம். அடர்ந்த, பெரிய சினார் மரங்கள். அற்புதமான ஆலயம்.
 அமைதியான சூழல். 

விழாக்கால கூட்டம் இல்லையென்றாலும், சாதாரண நாட்களிலும், பக்தர்கள் தொடர்ந்து வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

காஷ்மீர் செல்லும் பக்தர்கள் அவசியம் செல்லலாம். செல்ல முயலுங்கள். தரிசியுங்கள். பலன் பெறுவீர. நிச்சயம்.

இவ்வாலய பயன அனுபவங்கள்:

முதலில், அங்கு செல்ல பல தடைகள். பல சிரமங்கள். 
பொதுவாக, ராணுவம், CRPF, காஷ்மீர் காவல் இவர்கள் காஷ்மீர் முழுவதும் எங்கும் இருக்கிறார்கள்.

போக்குவரத்து முழுவதும் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. எங்கும் நிறுத்தவோ செல்லவோ, நல்லத்திட்டமிடல் வேண்டும். வழியில் அடிக்கடி போக்குவரத்து, நிறுத்தம் செய்ய முடியாது.
 
இவ்வாலயம், Srinagarலிருந்து சற்று தள்ளி உள்ளது தனி ஊரில் உள்ளது. அங்கு செல்லமுடியாது என்று கட்டுப்பாடுகள். எங்கள் VAN ஓட்டுநர்கள் மிகவும் உதவினார்கள்.

இறையருளும், குழு உறுப்பினர்களின் ஆர்வமும், எடுத்துக் கொண்ட நீண்ட முயற்சிகளும் , குறிப்பாக திருவாளர்கள் ராஜு, சந்திரசேகர் முதலியோர்கள், Admin SR. பாலசுப்பிரமணியன் அவர்களின் வழிகாட்டலில், பெரும் முயற்சி செய்து, Special Police Permission பெற்று தரிசிக்க சென்றது அணைவருக்கும் மிகப்பெரிய நல்ல அனுபவம். 

நன்றி🙏

கீர்பவானிஆலயம் ஆலயம் தரிசனம் முடிந்து, சுமார் 2.30 மணி அளவில் SRINAGAR ல் உள்ள நாங்கள் தங்கியிருந்த Hotel TAJ சென்று அடைந்தோம்.

மாலையில், சிலர் மீண்டும் Srinagar Shopping சென்றுவந்தனர். அன்று இரவு உணவு உண்டு தங்கினோம்.

2.

இனிய பயணம் நிறைந்த தரிசனம்

10.09.2022 ஞாயிறு
விடியற்காலையில் Hotel TAJ லிருந்து புறப்பட்டு, SRINAGAR Airport சென்று அங்கிருந்து NEWDELHI சென்றோம்.

ஒரு Hotel லில் தங்கி மதிய உணவுக்குப்பின், சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு, இரவு 9.00 மணி க்குப் புறப்படும் TAMILNADU EXPRESS மூலம் சென்னைப் புறப்பட்டோம்.

11.09.2022 திங்கள்: ரயில் பயணம்

12.09.2022 செவ்வாய்
காலையில், சென்னை வந்தடைந்தோம். பிறகு பஸ் பயணம் மூலம் நான் காரைக்கால் வீடு வந்து சேர்ந்தேன்.

இனிய பக்தி பயணம் அருமையாக நிறைவடைந்தது.

இந்த யாத்ராவில், நான் கண்டு வியந்த மனிதர்கள், இடங்கள், ஏற்பட்ட பல அனுபவங்கள் வாழ்வில் மறக்க இயலாது.

இந்த யாத்ரா முழுவதும் ஏற்பாடு செய்து, நிர்வாகம் செய்து, அனைத்து வசதிகளையும் ஒருங்கிணைத்தும், அனைவரையும் திருப்தி செய்ய அயராத பாடுபட்டு, சிறப்பாக அமைத்துக் கொடுத்தும், எல்லோரிடமும் உள்அன்புடன் பழகி தன் இனிய குணத்தினால் அமைதியான சுபாவம் கொண்ட, திரு S.R.பாலசுப்பிரமணியன், Administrator, SUJANA TOURS, West Mambalam, Chennai அவர்களுக்கு என்றென்றும் என் பணிவான நமஸ்காரங்கள். இதயபூர்வ வணக்கங்களும், நன்றிகளும்.

எப்போதுமே, என்னுடைய எல்ல யாத்திரைகளிலும் தூண்டுதலாகவும், பக்கபலமாகவும், ஆர்வத்துடனும் இருக்கும், உன்மையான உள்ள உணர்வுகளுடனும், பாசத்துடனும் பழகும் அன்பு சகோதரர் திரு பரணிதரன் அவர்களையும் நான் வணங்கி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த யாத்ரா மிகச் சிறப்பாக அமைய பல்வேறு உபகாரங்கள் செய்த, திருவாளர்கள், ஸ்ரீதர், ராஜு , சந்திரசேகர், மணி, அவர்களுக்கும், மற்றும் என் உடன் உதவியாகவும், இருந்து, அன்புடனும் பழகி யாத்திரை சிறப்பாக அமைய உடன் பயணித்த திருவாளர்கள் ரவிக்குமார், Dr.சுமதி, ஜெயராமன், கண்ணன். முதலியோருக்கும்,

இந்த யாத்திரையில் மீண்டும் பங்குபெற வேண்டும் என்ற குறிக்கோளுடன், இலங்கையிலிருந்து வந்து கலந்துகொண்ட Dr.பவானி அவர்கள், எங்களிடம் தங்கள் வாழ்வியல் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். மிகவும் வியப்பான, அனுபவங்கள். சமூகத் தொண்டுகளில் ஆன்மீகக் கடமையாற்றும் அவர் நாம் சந்தித்த அற்புத மனிதரில் ஒருவர்.  

மேலும், யாத்திரையில் பங்குகொண்டு, தங்களின் பல்வேறு அனுபவங்களையும் பகிர்ந்து, உதவியாய், சகோதர பாசத்துடனும், நட்புடனும் பழகிய ஒவ்வொருவருக்கும் என் பணிவார்ந்த நமஸ்காரங்கள்.

அவர்கள் அனைவருக்கும் என் இதயபூர்வ நன்றியும், வணக்கங்களும்.

மீண்டும் அடுத்த பயணங்களில் தொடருவோம்...

தொலைவில் இருந்தாலும் தொடர்பில் இருப்போம்...

நல்லவர்கள் மனங்களில் என்றும் நம்பிக்கையும் நன்றியும் இருக்கும் அல்லவா? 

இறையருள் என்றும் துணையிருக்கும்.

🙏நன்றி, நமஸ்காரம்🙇🏼‍♂️

#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்


https://m.facebook.com/story.php?story_fbid=pfbid034VU5NQQChz4gbXD3mTzavQswCZtc4Lqd6niG4pbEUuaEKfqT6aSbZWXRmme8zrUel&id=100001957991710

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...