#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
12.04.2022
#ராணிகட் - #RANIKHET
#ராணிகட் - #RANIKHET
#ராணிகட் : இந்தியாவின் உத்திரகாண்ட் மாநிலத்தில், அல்மோரா மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய நகர்.
💥அருமையான இமயமலைப் பிரதேசமாகும். சுமார் 6,132 அடி
(1869 மீட்டர்) உயரத்தில் உள்ளது.
💥பாரத ராணுவத்தின் இரண்டு முக்கிய பிரிவுகளான, குமான் மற்றும் நாகா ரெஜிமென்ட்கள் இந்தப் பகுதியில் உள்ளது.
💥இந்த இடத்தில், பாரத ராணுவத்தின் முக்கிய மருத்துவ முகாம் உள்ளது.
💥ராணிகட் அல்மோராவிலிருந்து சுமார் 50 கி.மீ.தூரத்திலும், நைனிட்டாலிலிருந்து 60 கி.மீ.தூரத்திலும், புதுடெல்லியிலிருந்து சுமார் 270 கி.மீ.தூரத்திலும், உள்ளது.
💥பைன், ஓக் மரங்கள் அடர்ந்துள்ள பகுதி.
💥மார்ச் முதல் அக்டோபர் வரை இந்தப் பகுதியில் பயணம் செய்யலாம். டிசம்பர் முதல் பிப்ரவரி வரை உறைபனி அதிகம்.
💥கட்யூரி அரச வம்சத்தின் மன்னர் சுதர்தேவ் தன் பாசத்திற்குரிய மனைவி ராணி பத்மனி வசித்ததால் இந்த ஊருக்கு ராணிகட் என்ற பெயர் அமைத்ததாக வரலாறு. ஆனால், ஊரில் எந்த அரண்மனை கட்டிடங்களும் இல்லை.
💥மிக முக்கிய நகரான ராணிகட், முன்பு நேப்பாளியர்கள் ஆளுமையில் இருந்து, அதை குமானியர்கள், காசிநாத் அதிகாரி என்ற தளபதியின் தலைமையில், வென்றார்கள். (காசிப்பூர் என்ற பெயர் இந்த வெற்றி தளபதியின் பெயரில் பின்னாளில் அமைக்கப்பட்டது)
💥பிறகு பிரிட்டன் ஆளுமையில் இருந்து வந்தது. இந்திய- நேப்பாள் எல்லைக்கு முக்கிய இடம் என்பதால், கூர்க்கா படை இங்கேயே இருந்தது.
💥பிரிட்டன் ஆளுமையில், இப்பகுதிகளில், தேயிலை தோட்டங்கள் அமைக்கப்பட்டன.
💥பிரிட்டன் அரசில் பெரும் ராணுவ அனுப்புக்களை இங்கேயே வைத்திருந்தார்கள்.
💥இந்தியாவின் கோடை காலத் தலைநகராக, சிம்லாவுக்கு பதிலாக, ராணிகட்டை வைக்க பிரிட்டானிய அரசில் கருத்துரு வைக்கப்பட்டது.
💥ராணிகட் சுற்றுப் பகுதிகளில், காடுகள் அதிகம் இருந்தது. இதனால், இந்த காடுகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது.
💥சுதந்திர பாரதத்தில், ராணிகட் பகுதிகள் விரிவடைந்து தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரிக்கைகள், போராட்டங்கள் நடந்து வருகின்றன, அரசாங்கங்கள் மேல் நடவடிக்கைகள் எடுத்துவருகிறது என்று தெரிய வருகிறது.
💥ஒரு கோல்ஃப் விளையாட்டரங்கமும் உள்ளது. இது ஆசியாவில் உள்ள மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள இடமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
#பயணஅனுபவக்குறிப்புகள்
💥காலையில் பாபாஜி குகை தரிசித்து விட்டு, 12.04.2022 மாலை ராணிகட் சென்று சேர்ந்தோம். Hotel Rajdeep என்ற Hotel லில் தங்கினோம்.
இந்த ஊரின் எல்லாப் பகுதிகளிலும், பாரத ராணுவத்தினரைப் காணமுடிந்தது.
நீண்ட ஊர் ஒரு புறம் சற்று உயரமாகவும், இன்னொருபுறம் குறுகிய பாதைகள் உள்ள மலைப் பிரதேசமாகவும் காணப்பட்டது.
💚ஊரில், சில முக்கிய இடங்களில் View Point அமைத்துள்ளார்கள். இங்கிருந்து பார்த்தால், இமயத்தின், பனி மலைப்பகுதிகள், சிகரங்கள், மிக ரம்ய காட்சிகளைக் காணலாம்.
❤️ஊரின் முக்கிய இடங்கள் எல்லாமே பாரத ராணுவம் சம்பந்தப்பட்ட இடங்கள் தான் அதிகம் இருக்கிறது. Trainning School, Musume முதலிய பல இடங்களும், சில ஆலயங்கள் உட்பட எல்லாம் ராணுவக் கட்டுப்பாட்டிலும், பராமரிப்பிலும் உள்ளன.
🛕நாங்கள் இங்கிருந்து 500 மீ.தூரத்தில், ஊருக்கு நடுவில், முக்கிய இடத்தில் உள்ள மன்மகேஸ்வரர் ஆலயம் சென்றோம். அங்கிருந்து ஒரு வாடகைக் கார் பிடித்து ஜூலா தேவி ஆலயம் தரிசித்துவந்தோம்.
நாங்கள் சென்றுவந்த இடங்கள்..
மன் காமேஸ்வரர் ஆலயம்..
🛕குமான் ராணுவ ரெஜிமெண்ட் பராமரிப்பில், மன்காமேஷ்வர் என்று ஒரு ஆலயம் கட்டி, பராமரித்து வருகிறது.
🛕இது, ராணிகட் நகரின் முக்கியப்பகுதியில் பாதுகாப்புடன் உள்ளது. இந்தக் கோவில் 1978 கண்டோன்மன்ட்டால் கட்டப்பட்டது. இதன் எதிர்புறத்தில் ஒரு குருதுவாரா என்னும் சீக்கியர் மத வழிபாட்டுக் கூடமும் அமைத்துள்ளனர்.
🛕இங்கு, விநாயகர், லெட்சுமி நாரயணர், துர்காதேவி, அழகிய சிறிய சிவலிங்கம், தனித்தனியாக உள்ளது. ஆலயம் முழுவதும் தூய்மையாகவும், அழகாகவும் உள்ளது. ராணுவத்தினரால் பராமரிக்கப்படுகிறது. இங்குள்ளோர் வந்து பிரார்த்தனை செய்ய குருக்கள் என்ற பண்டாக்கள் இவ்வாலயத்தில் உள்ளனர்.
ஜூலா தேவி ஆலயம் :
🛕மிகவும் புகழ் பெற்ற ஜூலா தேவி ஆலயம் ராணிகட் நகரத்திலிருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு வசித்து வந்த கிராம மக்களின் கால்நடைகளையும், வாழ்வாதராங்களையும், அருகில் உள்ள அடர்ந்த காடுகளிலிருந்த கொடிய விலங்குகள் அழித்து வந்ததால், மக்கள் தங்களைப் பாதுகாக்க வேண்டி, துர்க்கா மாதாவை வேண்டினார்கள். அன்னையும்,
ஒரு நாள் இடையர் ஒருவர் கனவில் வந்து தன்னுடைய சிலை இருக்கும் இடத்தை அறிவித்தார். இடையர், கிராம மக்கள் அனைவரையும் அழைத்து சிலை இருக்கும் இடத்தை கண்டு எடுத்து வைத்து அங்கேயே வழிபாடுகள் செய்ய ஆரம்பத்தினர்.
🛕அந்த இடத்தில், புதிய ஆலயம் கட்டி வழிபாடுகளை செய்து வருகின்றனர்.
மேலும், தங்களைக் காத்து வரும் கடவுளாக அன்னை துர்க்காதேவியைப் போற்றி வணங்குகிறார்கள்.
தங்களின் கோரிக்கைகளை இவ்வாலத்திற்கு வந்து மணிகட்டி வழிபாடு செய்து, பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
🛕அருகில் உள்ள ராமர் ஆலயத்தில் மாணவர்களும் இளைஞர்களும் வேதபாடம் பயின்று வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
13.04.2022 காலையில்
நாங்கள் தங்கியிருந்து ஹோட்டலுக்கு வெகு அருகில் இருந்த மற்றொரு சிவன் ஆலயம் சென்று வழிபட்டு வந்தோம்.
சிவன் ஆலயம் - ராணிகட்
இந்த ஆலயம் மிக அழகிய அமைப்பில் வடிவமைப்பில் இருக்கிறது. ஆலயத்தின் மையத்தில், சற்று உயரமான கருவரை மன்டபத்தின் உள்ளே, அழகிய
சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
கருவறை முன்புறம். சிறிய அழகிய நந்தி..
மேலும், இரண்டு தனித்தனி கருவறைகளில் லெட்சுமிநாராயணர் துர்க்கா தேவி, ஹனுமான் உள்ளார்கள்.
ராணுவ கண்காட்சிக் கூடம்:
💒பாரத ராணுவம், ஒரு கண்காட்சிக்கூடம் அமைந்துள்ளனர்.
⚔️பாரத ராணுவத்தினரின் அருமையான கண்காட்சிக் கூடம் என்கிறார்கள். அதில் ராணுவத்தில் பயன்படும் ஆயுதங்கள் மற்ற பொருட்களையும் வைத்துள்ளர். மேலும், இதுவரை,ராணுவப் போரில் பங்குகொண்ட தியாகிகளைப் போற்றும் விதமாக அவர்களை நினைவுக் கூறும் விதமாக, அவர்கள் செய்த சாதனைகளை விளக்கி வைத்து உள்ளர்கள். அனைவரும் காண வேண்டிய இடம்.
எங்களுக்கு போதிய கால அவகாசம் இல்லாமல், காலதாமதமாக சென்றதால். இதைப் பார்க்கும் வாய்ப்பு இல்லாமல் போயிற்று.
13.04.2022 புதன் காலை உணவு தயார் செய்துகொண்டு, காலையில் ராணிகட்டை விட்டுப்புறப்பட்டு, புகழ்பெற்ற ஜிம்கார்பெட் தேசிய பூங்கா, மற்றும் ராம்நகர் வழியாக, ஹரிதுவார் மாலை வந்துசேர்ந்தோம்.
பயணங்கள் தொடரும்...
நன்றி,
(12.4.2022)
🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼♂️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#UTTARAKANNT_TOUR_2022
#Ranikhet
No comments:
Post a Comment