Friday, August 5, 2022

அமர்நாத்யாத்ரா 20225-07-2022 to 10-07-2022#பயணஅனுபவக்குறிப்புகள்தொடர்ச்சியில்....


9
#அமர்நாத்யாத்ரா 
#அமர்நாத்_பனிலிங்கம் 
#காஷ்மீர்
#அமர்நாத்யாத்ரா 2022
5-07-2022 to 10-07-2022
#பயணஅனுபவக்குறிப்புகள்

தொடர்ச்சியில்....

எங்களின் ... ...
அனுபவக்குறிப்புக்கள்:

7 & 8.07.2022
அமரநாதரின்  அருள் 
" அவனருளாளே அவன் தாள் வணங்கும்' பாக்கியம் அடைந்தோமே.

அமர்நாத் பனிலிங்கம்

அமர்நாத் புறப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பே, ரயில் Ticket, அமர்நாத் யாத்ரா பர்மிட் முதலியவைகள் பெற்றிருந்தோம்.

Helicopter ticket ம் எடுத்து வைத்துக்கொண்டோம். 
 குளிர் - பனி - மழைக்குத் -தேவையான ஆடைகள், உள்ளன் உடைகள், Shoe, சாக்ஸ், மழைக்கோட்டு, மற்றும் மருந்து மாத்திரைகள் முன்பே தயார் நிலையில்  எடுத்துக் கொண்டோம். 

Shrine Board வெளியிடும் தகவல்கள்  குறித்து எமது மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய,   திரு S.R. பாலசுப்பிரமணியன், அய்யா, Admin., SUJANA TOURS, WEST MAMBALAM,   அவர்கள் எங்கள் அனைவருக்கும் உடனுக்குடன் தெரிவித்துக்கொண்டிருந்தது; பயண ஆர்வத்திற்கும்,  விழிப்புணர்வுக்கும், தூண்டுகோளாகவும் இருந்து வந்தது.

2.
07.07.2022 வியாழன்

விடியற்காலையில் #SRINAGAR லிருந்து TEMPO TRAVELER ல் புறப்பட்டு #Nilgrith என்ற இடத்தை அடைந்தோம்.

 இங்கிருந்துதான் Helicoptor மூலம் #PANJTARANI என்ற இடம் செல்லமுடியும்.

NILGRITH : என்ற இடம் Srinagarலிருந்து, Sonamarg கடந்து, BALTAL என்ற இடத்திற்கு சுமார் 10 கி.மீ. முன்பாக  உள்ள இடம். இங்குதான், அமர்நாத் செல்வதற்கான Helicopter Service உள்ளது.

இங்கு சென்று, முதலில், Registration செய்துகொண்டோம்.

முன்கூட்டியே Helicopter Ticket Reservation செய்து இருந்ததால், அந்த Ticket மற்றும் Aadhaar Card காண்பித்து Register செய்துகொண்டோம். 
ஒரு ID Card Tagவுடன் கொடுத்தார்கள். அதை Yatra முடியும் வரை வைத்துக் கொள்ள அறிவுரை கூறப்படுகிறது.

#panchatarni 

#Nilgrith சென்று, Helicopter மூலம் PANCHATARNI என்ற இடத்திற்கு மாலையில் இறங்கினோம். 

நல்ல இதமான வெய்யில் இரவு வானம் நல்ல நிலவுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.  

 இரவில் குளிர் சற்று அதிகமாக இருந்தது. 

அங்குள்ள #LANKAR ல் இலவச உணவு உண்டு.  இரவு #TENT  ல் தங்கினோம். 

இங்கு பாரத ராணுவமும், BSF ம் செய்துவரும் சேவைகள் போற்றத்தக்கது.

Panchatarni ஒரு மிக முக்கிய இடம். பால்டால் வழியாக, வருபவர்கள் அதுவும் குறிப்பாக Helicopter மூலம் வருபவர்கள் இங்கு வந்து தங்கிக் கொள்கிறார்கள்.

அது போலவே, பகல்காம் மூலம் வருபவர்களும் இங்கு வந்து தங்கி, இங்கிருந்துதான், குதிரை / டோலி மற்றும்  நடந்தும் அமர்நாத் மலைக் குகைக்கு செல்லமுடியும். 

அது போல, தரிசனம் முடித்தவர்கள் இங்கு திரும்பிவந்துதான்,  தங்கள் பயணத்தை தொடர்கிறார்கள்.

Panchatarni யிலிருந்து செல்லும் பாதையும், பால்டால் லிலிருந்து வரும் பாதையும், Sangam என்ற இடத்தில் ஒன்று சேருகிறது.

நடந்து / குதிரை / டோலியில் செல்பவர்கள் , அமர்நாதரை தரிசித்து விட்டு  பால்டால் பகுதிக்கு நேரடியாகவும் சென்று விடலாம்.

Helicopter மூலம் வந்து செல்பவர்கள் மட்டும் தரிசனம் முடிந்து Panchatarni வந்து Baltal அல்லது, பகல்காம் செல்கிறார்கள்.

இது ஒரு centre Point என்பதால், இங்கு தங்குவதற்கு ஏராளமான tent எற்பாடுகளும் LANKAR என்னும் இலவச உணவு விடுதிகளும் ஏற்பாடு செய்துள்ளனர்.  

 இங்கு வரும் பக்தர்களுக்கு உதவி செய்யவே, வருடம் முழுவதும், பொருள் சேர்த்து, இந்த சமயத்தில் பக்தர்களுக்கு உதவுகிறார்கள்.

இந்தப் பகுதிகள் முழுவதும், பனிப்பாறைகளாக மாறிவிடுவதால், ஜூன் - முதல் - ஆகஸ்ட் வரை மட்டுமே இங்கு மனித நடமாட்டம். பிறகு அடுத்த ஆண்டுதான். 

எந்தவிதமான permanent கட்டிடங்களும் கிடையாது.

மேலும், மருத்துவ வசதிகள், கழிப்பறை வசதிகளும் செய்து வைத்திருக்கின்றனர்.

3.
08.07.2022 வெள்ளி

விடியற்காலையில் மழை இருந்ததால், PANCHATRNIயிலிருந்து   சுமார் காலை 10.00 மணி அளவில் அமர்நாத் குகை சென்று வர அனுமதிக்கப்பட்டோம்.

PANCHATARNI யிலிருந்து குகை சுமார் 6 கி.மீ. மலைப்பாதை.

 நடந்து, குதிரைமீது அல்லது, டோலியில் தான் செல்ல முடியும்.

டோலிவாடகை ரூ 6000/- போய் வர என்றும். 

குதிரையில் சென்று வர ரூ3000/- என்றும் வாடகை.

நாங்கள் 8ம் தேதி தரிசனம் செய்ய 7ம் தேதி Panchatarni வந்தோம். 

அதற்கு முன்பாக 4, 5ல் தரிசனம் கால சூழலால் நிறுத்தம் செய்யப்பட்டிருந்து, 

பின் 6ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டதால், மிகுந்த கூட்டம் இருந்தது. 

மேலும், மழையினால் கரடுமுரடான, சேறும், சகதியுமான அந்தப் பாறை பாதையில் நடக்க எங்களால் முடியாது என்று அறிந்ததும்,
நாங்கள் குதிரையில் ஏறி அமர்நாத் குகை அடிவாரம் சென்று திரும்பிவர முடிவு செய்து இருந்தோம். 

தரிசனம் செய்து சென்று திரும்ப வர ஒரு குதிரைக்கு,  ரூ 3000 (1500x2) + Tips. வாடகை  நிர்ணயம் செய்து கொண்டோம்.

நாங்கள் PANCHATARANI யிலிருந்து குதிரை மீது ஏறி அமர்நாத் குகை அருகில் சென்று சுமார் பகல் 10.20 மணி அளவில் இறங்கினோம்.

வழியில் பஞ்சதரணி வழிப்பாதை ஒருபக்க மலையிலும், எதிர்புறம், பால்டெல் பாதையும் உள்ளது.

இரண்டுக்கும் இடையில் மலை உயரத்திலிருந்து வரும் நீர் உரைந்த ஆற்றில் இறங்கி, கடுமையான கட்டுப்பாடுகளையும்  மீறி  ஆங்காங்கே பக்தர்கள் குளிக்கின்றார்கள்!!.   

இது மிகவும் Risk. கடுமையான விளைவுகளைத்தரும் என்பதை மறந்து செயல்படுகிறர்கள்.

இரண்டு பாதைகளும் இணையும் இடத்தில் ஆற்றின் ஒரு புறத்தில்  ஏராளமான தற்காலிக கடைகள் இருக்கின்றன.

LANKERS எனப்படும் இலவச உணவுவிடுதிகளும் உண்டு.

குதிரைக்காரர்கள் இந்த இடத்தில் நம்மை இறக்கிவிட்டுவிடுகிறார்கள்.

திரும்பவும் குதிரை பயணம் செய்யவேண்டியிருந்ததால்,
வாடகை பணம் எங்களிடம், திரும்ப Panchatarani சென்று வாங்கிக் கொண்டார்கள்.

அங்கிருந்த சிறு தற்காலிக கடையில் பை, மொபைல் எல்லாம் வைத்துவிட்டோம்.

பூசை சாமான்கள் என்று விற்கிறார்கள். 

ஒரு தட்டில்  பொரி, இனிப்புகள், ஒரு காவி கலர் துணி எல்லாவற்றையும் அழகிய முறையில் Pack செய்து ரூ 300 க்கு விற்கிறார்கள்.

சில பக்தர்கள், சிறு பைகளில், வில்வம், முந்திரி, திராட்சை முதலிய பொருட்களை ஊரிலிருந்தே கொண்டு வந்திருந்தார்கள்.

டோலியில் வந்திருந்தவர்கள் மட்டும் குகை மிக அருகில் கொண்டு சென்று தரிசிக்க வைத்து திரும்ப டோலியில் வைத்து அழைத்துச் செல்கிறார்கள்.

நாங்கள் சுமார் 1 கி.மீ தூரம், மலைப்பாதை, மற்றும் படிகளில் ஏறி குகை அடைந்தோம். 

அப்பகுதி முழுவதுமே, குகைவாசல் வரையிலும்,  பாரத ராணுவ வீரர்கள் சூழ்ந்து நமக்கு எல்லா வகையிலும் இருந்து பாதுகாத்து, உதவி செய்கிறார்கள்.

குகையின் படிப்பகுதியை அடைந்ததும், காலனிகள் வைக்க தனி இடம் உள்ளது. 

ஏராளமான சிறு சிறு தற்காலிக கடைகளில் பல் வேறு பொருட்கள் விற்பனை செய்கிறார்கள்.

குகை படிகள் இரண்டு பிரிவாகப் பிரிந்து ஒரு புறம் checking செய்து மேலே தரிசனத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.

குகையில், சுவாமியை தரிசனம் செய்த பின் மறுபுறம் இறங்கி வந்து இதே பாதையில் இணைந்து கொள்ளலாம்.

4.
#அமர்நாத்குகை:

இயற்கையான இந்தப் பகுதியை தரிசிக்க இறையருள்,  காலம், சூழல், வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதை நாங்கள் அனைவரும் நன்றாக உணர்ந்தோம்.

காலநிலை, வானிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. 

இந்தப் பகுதியில் Cloud Brust என்ற மேகவெடிப்பு ஏற்பட்டு, பெரும் மழை, வெள்ளம், சேதம் ஏற்படும் சூழல் அதிகம்.

எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் மலை ஏற தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. பாரத ராணுவ வீரர்கள் பெரிதும் உதவுகிறார்கள்.

 ஒவ்வொரு வருடமும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் 40 நாட்கள் வரை அனுமதிக்கப்படுகிறது.

30 X 15x 20அடி நீளம், அகலம் , உட்புற உயரம் அளவுள்ள ஒரு இயற்கையான மலை குகையில் பனியால் ஏற்படும் சுயம்பு லிங்கம் தோன்றுகிறது.  குகையின் ஒரு மூலையில் பகுதியில் ஸ்ரீ அமர்நாத் சுவாமி பனிலிங்க வடிவில், காட்சித்தருகிறார்.

சுயம்பு பனியால் ஏற்பட்ட இயற்கையான லிங்கத்தை சுமார் 7 அடி உயரத்தில் 2 அடி அகலத்தில் 8.07.2022 அன்று பகலில் சென்று கண்டு தரிசனம் கிடைக்கப் பெற்றோம்.

சற்று தள்ளி, இதன் அருகில்  இன்னும், சிறிய வடிவில் மற்றொரு  பனிலிங்க வடிவத்தில் ஸ்ரீபார்வதிதேவியும், இதன் அருகில் இன்னும், சற்று குறுகிய அளவில் ஸ்ரீவிநாயகர் பனிலிங்க வடிவத்திலும், காட்சி தருகிறார்கள்.

அடிப்பகுதி மேடை போன்று பனியால் அமைந்துள்ளது. அதன்
முன்புறம் தனியாக இரும்பு Grill வைத்து, பிரிக்கப்பட்டு பண்டா அல்லது பூசாரிகள் நின்று கொண்டு பூசை செய்கிறார்கள்.  

நாம் கொடுக்கும் பூசை பொருட்கள் அந்த பூசாரிகள் வாங்கி சுவாமியிடம் வைத்துவிட்டு பின் நம்மிடமே கொடுத்து விடுகின்றனர்.

இங்கு பூசை பொருட்களாக, இனிப்பு வகைகள், பொறி, மற்றும் சிறிய காவி துணி, மலர், இவற்றை வைத்துவிட்டு மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

நாங்கள் சுவாமியை வரிசையில் நின்று வணங்கிவிட்டு,  பக்கத்தில் சற்று உயரமான மேடை அமைப்பில் உள்ள பகுதியில் ஏறி நின்று மேலும் சிறிது நேரம் சுவாமியை நன்றாக தரிசித்தோம். பிறகு, குகையை விட்டு மெல்ல நகர்ந்தோம். 

ஒரு வயதான பண்டா ஒருவர், சுவாமியை தரிசித்து வருபவர்களை ஆசீர்வதித்து, இரண்டு சிறு pockets பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்.

ஒன்றில் சிறிய வெள்ளி டாலரும், மற்றொன்றில் இனிப்பும் இருக்கிறது.

மலைக்குகையில், உச்சிப் பகுதியில் இருக்கும், சிறுசிறு பொந்துகளில் புறாக்கள் உள்ளது. 

இவர்கள், சுகரிஷி முனிவர்களாக கருதி வழிபடுகிறார்கள்.

இவற்றையும் தரிசித்தோம். 
அதிலும், வெள்ளை நிறத்தில் சிறு புறாக்கள் இரண்டு கண்டு வியந்து வழிபட்டோம்.

குகை மிகப்பெரிய அகன்ற வாசல் பகுதி. வெளிப்பகுதியிலிருந்து வரும் அற்புதமான இதமான குளிர்ந்த காற்று, 

எதிரில் மிக அற்புதமாக தெரியும் வெள்ளி பனிமலைகள் , சிகரங்கள் ஒரு புறம்;

இன்னொரு பக்கம், கீழ்பகுதியிலிருந்து சுவாமியை ஆர்வத்துடன்  தரிசிக்க வரும் யாத்திரீர்கள் கூட்டம்;

சுவாமியை தரிசித்துவிட்டு செல்லும்  பக்தர்கள் கூட்டம்;

டோலியை துக்கிவரும் ஆட்கள்,  டோலியில் இருந்து மெல்ல இறங்கி வரும் பக்தர்கள்,

 பக்தி கோஷங்கள், 

இவர்கள் அனைவர்களையும் அமைதியாக வரிசைப்படுத்தி பாதுகாக்கும், பாரத ராணுவ வீரர்கள்.  

இன்னும் கீழே, வியாபாரக் கடைகள் அதன் சத்தங்கள்;

இன்னும் பலவிதமான பக்தி கலந்த 
வழிபாட்டு முறைகள்; பெரும் ஒலிகள்.

குகையின் வெளியிலிருந்து வரும்  குளிர்ந்த காற்றை உடல் அனுபவித்துக் கொண்டதும்;

உடல் களைப்பு, பரபரப்பு, ஆர்வம்,  எல்லாம் மனதால் சற்று ஒதுக்கி,  இந்த இயற்கை சூழலில், 

மனம் அமைதியாக குகையில் உள்ள சுயம்பு பனி லிங்கத்தை நினைத்து  சில விநாடிகள், மனம் உருகி வழிபட முயன்றேன்.... 

அந்த பிரமாண்டமான அற்புதமான.... அகன்ற ... குகை;
ஏன் உலக மக்களை இப்படி வசீகரிக்கின்றது.

எதற்காக இவ்வளவு சிரமங்களையும் மீண்டும் மீண்டும், அனுபவத்துக் கொண்டு  இந்த பக்தர்களின் கூட்டம் இங்கே வருகிறது; 

நாளுக்கு நாள் ஏன் அதிகரித்துக் கொண்டே  வருகிறது.

விடைகாண முடியாத ஆன்மீக ஈர்ப்பு.

முயன்றால் விளங்கும் 
முயற்சியே அனுபவம் 
அனுபவமே ஆனந்தம்.

அது ஒரு அற்புத ஆனந்த அனுபவங்கள்...
சிந்தனைக்கு எட்டாத அதிசயங்கள் ...
விளக்க முடியாத உணர்வுகள்...

ஆழ்ந்த நம்பிக்கையும் பயிற்சியும் இருந்தால் கூடலாம்...  அவன் அருளாலே....

ஓம் நமச்சிவாய.....

5.

இன்னும் சில செய்திகள் .....

குகையில்,  சுயம்பு பனிலிங்கமாக இருந்த அமரநாதர்,  நாங்கள் தரிசித்த அன்று,   சுமார் 7 அடி உயரமாகவும், 2 .அடியில் அகலமும் கொண்டு மெல்லியதாகவே இருந்தார்.

இந்த பனி லிங்கம்  இன்னும் குகை முழுதும் பரவி, அதிக அளவில் முன்பு இருந்து தினம் தினம் அளவு குறைந்து கொண்டே வருகிறது என்றனர்.

இதனால் தான் ஒவ்வொரு வருடமும் யாத்ரா தொடங்கிய நாட்களில் மிக அதிக கூட்டம் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்துவிடுகிறார்கள்.

நாட்கள் செல்ல செல்ல சுயம்பு பணிலிங்கம் அளவு குறைந்துவிடுவதால், பக்தர்கள் அளவு குறையும் என்கிறார்கள். 

எப்படியிருப்பினும், வருடாவருடம் தரிசனம் செய்பவரும் பக்தர்கள் எண்ணிக்கை மட்டும் அதிகரித்துக் கொண்டே உள்ளது என்கிறார்கள்.

இந்த மிகப்பெரிய மலைக்குகையின் உச்சியின் வலது புறம் பெரிய அருவியிலிருந்து நீர் விழுந்து,  ஒரு சிற்றாராக மலைப்பாதையில் விருந்து ஒடுகிறது.

நாங்கள் 8.07.2022 அன்று காலையில் தரிசித்து வந்த பிறகு, அன்று மாலை சுமார் 5.30 மணி அளவில், இந்த இடங்களில்  அருகில் Cloud Brust உருவாகி பெருவெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதங்களை உருவாக்கியது.
இந்த விபரங்கள் நாங்கள் பிறகு அறிந்து கொண்டோம்.

இதனால்,
இரண்டு நாட்கள் ஜூலை 9, 10ம் தேதிகள் தரிசனம் தடை செய்யப்பட்டது. பாதை சரி செய்யப்பட்டதும், 11ம் தேதி முதல் தரிசனம் நடைபெற்று வருகிறது.

சுமார், மாலை 3.00 மணி அளவில் குதிரையில் மீண்டும், PANCHATARNI Helicopter Service இடம் வந்து சேர்ந்தோம்.

அங்கிருந்து Helicopter மூலம் புறப்பட்டு,  மாலை 4.00 மணி அளவில் Nilgrith சென்று அடைந்தோம்.  மாலை, 3 மணிக்கு மேல், SRINAGAR உள்ளே நுழைய அனுமதி இல்லாததால், Nilgrith என்ற இடத்தில் உள்ள தனியார் Restaurant ல் தங்கி இரவு உணவு உண்டோம். அங்கு  உள்ள tentல் தங்கினோம்.

9.07.2022 காலையில், புறப்பட்டு Srinagar அருகில் உள்ள கீர் பவானி என்ற முக்கியமான அம்மன் கோவில் சென்றோம்.

பயணங்கள் தொடரும்.....

நன்றி.
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

முன்பதிவுகள்..

பதிவு : 7
https://m.facebook.com/story.php?story_fbid=7910103329064855&id=100001957991710

பதிவு: 8

https://m.facebook.com/story.php?story_fbid=7913499262058595&id=100001957991710

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...