Wednesday, August 3, 2022

அமர்நாத்பனிலிங்கதரிசனம் #காஷ்மீர்#அமர்நாத்யாத்ரா 20225-07-2022 to 10-07-2022#பயணஅனுபவக்குறிப்புகள்#அமர்நாத்_பனிலிங்கம்

8
அமர்நாத்பனிலிங்கதரிசனம் 
#காஷ்மீர்
#அமர்நாத்யாத்ரா 2022
5-07-2022 to 10-07-2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#அமர்நாத்_பனிலிங்கம்

அமர்நாத் பனிலிங்க குகை:
தரிசனம் கானும் முன் அறிந்து கொள்ள வேண்டிய சில அனுபவக் குறிப்புகள்.

முக்கிய தகவல்கள்

அமர்நாத் குகை 3888 மீட்டர் உயரத்தில் உள்ளது. பகல்காம் என்ற இடத்திலிருந்து 46 கி.மீட்டர் தூரத்திலும், பால்டால் என்ற இடத்திலிருந்து 14 கி.மீட்டர் தூரத்திலும் உள்ளது.

ஸ்ரீநகரிலிருந்து முறையான பயணம் துவங்குகிறார்கள்.
இருப்பினும், சந்தன்வாடியிலிருந்து சென்று வர  5 நாட்கள் தேவைப்படுகிறது.
ஸ்ரீநகரிலிருந்து பகல்காம் 96 கி.மீ. தூரத்தில் உள்ளது

இந்த ஆலயம்  ஜம்மு காஷ்மீர் UT யின்  ஆளுநர் தலைமையில், இயங்கும் தனி அமைப்பின் - (Shri Amarnathji Shrine Board (SASB) - கட்டுப்பாடுகளில் உள்ளது.

இவர்களே இந்த யாத்திரையின் முழு பொறுப்பேற்று, வழிகாட்டி நடத்திட பல்வேறு நிலைகளில் உயர் IAS அதிகாரிகளையும் நியமித்து செயலாற்றி வருகின்றனர்.

எப்படிப் போகவேண்டும்?

முதலில் தம்மை மனதளவிலும், உடலளவிலும் தயார் செய்துகொள்ள வேண்டும்.

மார்ச் - ஏப்ரல் மாதத்தில் Shrine Board அறிவிப்பை கவனித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Shrine Boardல் அங்கிகரிக்கப்பட்ட  /
குறிப்பிடப்பட்ட, தகுந்த மருத்துவர் மூலம் பெற்ற சான்றிதழுடன், Shrine Board ல் குறிப்பிடும் வங்கிக் கிளையில் சென்று முறையான விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்து Shrine Board மூலம், online ல் யாத்ரா பர்மிட் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு ரூ 300 அளவில் செலவு மட்டுமே. இந்த யாத்ரா அனுமதி சீட்டை யாத்திரை முழுதும் வைத்திருக்க அறிவுருத்தப்படுகிறார்கள்.  இத்துடன்,
ஆதார் அட்டை Copy எப்போதும் கையில் வைத்துக் கொள்வது மிக மிக அவசியம்.

போக்குவரத்து :
ரயில் :
சென்னை- ஜம்மு வரை சென்று அங்கிருந்து FLIGHT or Road மூலம் Srinagar செல்லவேண்டும்.

விமானம்.
சென்னை - Srinagar விமானம் உள்ளது.
பிறகு Road வழி: Srinagar -பகல்காம் 95 கி.மீ. அல்லது பால்டல் 60 கி.மீ. வழியில் சென்று அமர்நாத் செல்ல முடியும்.

வழி - 1.
Srinagarலிருந்து பகல்காம் 95 கி.மீ. கார் | வேன் / பஸ் மூலம்  சென்று, அமர்நாத் குகை 45 கி.மீ குதிரை  / நடந்து மூலம் செல்லலாம். மொத்தம் 5 நாட்கள் பயணம். 3 இரவு மலையில் Tentல் தங்கி செல்ல வேண்டும்.

வழி - 2. 
Srinagarலிருந்து பால்டல் 60 கி.மீ  பஸ் |கார்/வேன் மூலம் சென்று, அங்கிருந்து 14 கி.மீ. குகை அடையலாம்.
பால்டால் சென்று குதிரை / டோலி /நடந்து மூலம் ஒரே நாளில் சென்று தரிசித்து வந்துவிடலாம்.

பால்டல் வழியில் செல்வதால்,  
தூரம் 14 கி.மீ.  காலம் குறைவு என்பதால், சற்று ஏற்றமாக இருப்பினும்,  பெரும்பாலோனர் இவ்வழியில் செல்ல முயல்கின்றனர்.

பகல்காம் வழி கடினமானது 47 கி.மீ தூரம்,  2 இரவுகள் தங்கி செல்ல வேண்டியிருக்கிறது. ஆனாலும், பாரம்பரியம், இயற்கை காட்சிகள் கண்டு செல்ல இவ்வழியை தேர்வு செய்கின்றனர். 

Helicopter மூலம்  செல்ல வேண்டுமானால்,
Shrine Board மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 
Shrine Board மூலம் மட்டுமே  Helicopter Book online ல் செய்து கொள்ள முடியும்.

1. பகல்காம் சென்று அங்கிருந்து
 Panchatarni வரை Helicopter வசதி உண்டு.

2. . பால்டால் என்ற இடத்திற்கு 10 கி.மீ. முன்பாக உள்ள Nilgrith    என்ற இடத்திலிருந்து, Panchatarni என்ற இடம் வரை Helicoptor ல் சென்று பின்  9 கி.மீ மலை ஏற்றம் இருப்பதால்,  குதிரை / டோலி / நடந்து செய்தும் Sangam என்ற இடத்திலிருந்து நடந்தும், படிகள் ஏறியும் சென்று தரிசித்து வரலாம். டோலியில் செல்பவர்கள். குகைப் படிகளின் மிக மிக அருகில் கொண்டு சென்று தரிசனம் செய்விக்கின்றனர். 

HELICOPTER பயணம் செய்பவர்கள் முக்கிய கவனம்கொள்ள வேண்டிய விஷயங்கள்:

பிரயாணம் புறப்படுவது முதல் தரிசனம் முடிந்து திரும்பும் வரை நாட்களை நன்கு திட்டமிட்டு பயண ஏற்பாடுகள் செய்து கொள்வது மிக அவசியம்.

1.Shrine Board அறிவிப்பில் கவனம் செலுத்தி, ஆலயம் தரிசனத்திற்காக திறக்கப்படும் முதல் வாரத்திலேயே தரிசனம் செய்ய முயற்சி செய்வதே மிக நன்று.  பிறகு, வரும் நாட்களில், பனிலிங்கம் வெகு விரைவில் கரைந்துவிடுவதால், நாட்கள் தள்ளிப் போக, போக பனிலிங்கத்தின் அளவு வேகமாக குறைந்துவிடுகிறது என்பதை கவனம் வைத்துக்கொள்ளுங்கள்.

2. Shrine Board Website மூலம் ticket ஒருவர் 6 ticket மட்டும் பதிவு செய்து கொள்ள முடியும்.

3. குறிப்பிட்ட நாளில் இதற்கென time open செய்யும் போது உள் நுழைந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

4. ஒரு Helicopter ticket கட்டாயம் அச்சுப்பதிவு கையில் கண்டிப்பாக ஒவ்வொரு நபரிடமும்  இருக்க வேண்டும். Group ஆக இருப்பினும் தனியாக ticket Copy வைத்துக் கொள்வது நன்று. Group உடன் சேர்ந்து பயணித்தால் சேர்ந்தே Check செய்வார்கள். எனவே, Grop நபர்கள் Helicopter ல் ஏறும் வரை இணைந்து இருக்கவும்.
5.  தனிநபர், மற்றும் உடமைகள், Weight Check செய்து Helicopter ல் அனுமதி செய்யப்படுவதால். Grop ticket எடுத்தால் சேர்ந்து Check செய்யப்பட வேண்டியதிருக்கிறது.

6.உடமைகள் Bags தனியாக Helicopter ல் பயணம் செய்வதால் Bags பூட்டி பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

7. ஒரு Helicopter ல் 6 பேர் மட்டும் பயணம் செய்யலாம். கூட்டம் அதிகமாக இருந்தால், தாமதம் ஆகின்றது.

8. காலநிலைக்கு ஏற்ப Helicopter சேவை அனுமதிப்பார்கள். எப்போது வேண்டுமானாலும், ரத்து செய்யவும் வாய்ப்பு உண்டு. 

9. ரீபண்டு செய்து பணம் பெற வழிமுறைகள் உண்டு. பயணம் செய்யும் நாட்களுக்கு சில நாட்கள் கழித்து mail செய்து பெற்றுக் கொள்ள வேண்டும். மிக கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் சில பொது தகவல்கள்:

ஜம்மு காஷ்மீர் முழுவதும் பொதுவாக எல்லா இடங்களிலும் நமது பாரத ஜவான்களின் சேவை மிக மிக உண்ணதமானது. இதை நேரில் அனுபவபூர்வமாக உணரலாம். சிவகணங்கள் போல நம்மை எப்போதும், எங்கும் காத்து நிற்பார்கள்.

யாத்ராவின் எல்லாப் பகுதிகளும் பாரத ராணுவ சேவை மூலமே பாதுகாப்புடன் நடைபெறுகிறதை அனைவரும் நன்றியுடன் உணருவார்கள்.

ஜவான்கள் அணைவரும் மிக மிக மென்மையாகவும், பண்புடனும் பழகுவதை கண்டு மனம் நெகிழ்ச்சி அடைகிறோம்.

காஷ்மீரில் போக்குவரத்துகள் முழுவதும் அனைத்தும் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு வாகனமும் கண்காணிப்பில் தான் செல்ல முடியும்.

ஒவ்வொரு இடங்களுக்கும் முன் அனுமதியுடன் தான் செல்கிறார்கள்.

Srinagar Cityக்கு மாலை 3 மணி முதல், மறுநாள் காலை 6 மணி வரை  உள்ளே செல்ல வாகனங்கள் அனுமதி இல்லை.
Srinagar Cityயிலிருந்து வெளியே வரலாம்.
Srinagar City க்குள் செல்ல எந்த வாகனத்திற்கும் அனுமதி கண்டிப்பாகக் கிடையாது.
இதை மிக மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதிக குளிர், மழை எப்போதும் வரும் சூழல் உள்ளதால், அவரவர் உடல் தகுதிக்கு ஏற்றவாறு, கம்பளி உடைகள், கால், கை உரைகள், காலனிகள் Shoe, மழைக்கோட்டு, மற்றும் தேவையான மாத்திரைகள் கையில் கொண்டு வைத்திருக்கவேண்டியது மிக அவசியம்.

பஞ்சதரனி 12900 அடி உயரத்தில் உள்ளது. அதற்கு மேல் அமர்நாத் குகை உள்ளதால்,
முறையான உடல் தகுதிக்கு தயார் செய்து கொள்வது நல்லது. High altitude ல், oxygen குறைவதால், அதற்குத் தகுந்தவாறு பயிற்சிகளும், மருந்துகளும் கட்டாயம் தேவை.
பெரும்பாலும், பாதைகள், மிகவும், சேறும் சகதியும், கரடு முறடாகவும் உள்ளது. oxygen வேறு குறைவாக உள்ளதால், மிக நல்ல வலிமையான உடல் நிலையும், நல்ல கால சூழல் நிலைகளும் அமைந்தால் மட்டுமே நடப்பது நன்று.

அல்லது, குதிரை, டோலி மூலம் சென்று, தரிசனம் செய்து வருவது மிக நன்று.

குறைவான சுமை;  நிறைவான பயணம்  என்பதால், அவசிய தேவைக்கு ஏற்ப உடைகள் போதும்.
பால்டால் சென்று தரிசனம் முடிந்து வரும் வரை ஒரே வெளி உடையே நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். 

இயற்கை உபாதைகள் சரி செய்துகொள்ள  Tent இருக்கும் இடங்களில், பல்வேறு தற்காலிக இடங்களை அமைத்துள்ளனர்.

பால்டால், பகல்காம் முதலிய இடங்களிலிருந்து குகைப் பகுதி வரை  அனத்து இடங்களிலிலும் LANKAR என்ற இலவச உணவுக்கூடங்கள் ஏராளமாக உள்ளதால், விதவிதமான உணவுப் பொருட்கள் தாராளமாகவும், சேவை மனப்பான்மையுடனும் தருகிறார்கள்.

அளவுடன் உட்கொண்டு, பயணத்தை பக்தியுடனும், உடல் நலத்துடனும் வைத்துக் கொள்ள வேண்டும்.

இறையருள் என்றும் துணையிருக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்று தரிசித்து வருவோம். 

பயண அனுபவங்கள்... தொடரும்

நன்றி.
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

முன்பதிவு ....

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...