Monday, August 17, 2020

மாலைமாற்று பதிவு - நான்கு

#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்
#தமிழரின்பொக்கிஷம்:
#மாலைமாற்று (பாடல் 9, 10, 11 )
பதிவு : நான்கு

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 
🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
 
📚சைவத் திருமுறைகள் தமிழின் பல இலக்கிய வகைகளை உள்ளடக்கியது.
சித்திரக்கவி என்னும் வகையில் சம்பந்தப்பெருமான் அருளிய 
#மாலைமாற்று பதிகம் பற்றி தொடர்ந்து சிந்திக்கும் பதிவு.

☣️ சம்பந்தர் அருளிய  மிக மிக அரியவகை  தமிழ் இலக்கியப் பாடல்களாகும்.

❇️சித்திரக்கவி வரிசையில்  திருஞானசம்பந்தரின்
  #மாலைமாற்று வகை என்பது..

சித்திரக்கவி வரிசையில்  திருஞானசம்பந்தரின்
#மாலைமாற்று வகை என்பது..

⏺️ஒரு மாலைக்கு அமைந்த இரு தலைப்புக்களுள் எதனை முதலாகக் கொண்டு நோக்கினாலும், அம்மாலை ஒரே தன்மையதாய் தோன்றுவது போல, ஒரு செய்யுளை முதலிலிருந்தோ, இறுதியிலிருந்தோ எவ்வகையில், வாசித்தாலும் அதே செய்யுளாக அமையுமாறு ஒத்த எழுத்துக்களை நிரவப் பெற்றிருப்பதே மாலைமாற்று செய்யுள் என்று இலக்கணவியலார் விளக்கியுள்ளார்கள்.

⏺️ஒரு பாடலில் உள்ள இரண்டு அடிகளை முன்னிருந்து பாடினாலும், பின்னிருந்து பாடினாலும், சொல்லும்  பொருளும் மறுபடாமல் இருப்பது.

⏺️ மாலை போல முதலும் முடிவும் மாறி மாறி சுற்றிவருவதால் இதை மாலைமாற்று பாடல் என்று அழைக்கப்படுகிறது.

⏺️இவ்வகைக் கவிகளை மிக முயன்று அமைத்துள்ளமையால் இவை மிகைக்கவி என்னும் கூறுவர். எளிதில் பொருள் காணமுடியாத பாடல் என்பது அதன் பொருள்.

🔱தமிழில் இது பற்றிய சில வார்த்தைகள்:

சிவயவசி, விகடகவி, திகதி, குடகு, தாத்தா, காக்கா, பாப்பா, மாமா, கைரேகை, தேருவருதே, மாடுஓடுமா, மோருதாருமோ, தோடுஆடுதோ, மேகராகமே, மேளதாளமே, வைபூவை, மாலாபோலாமா,

❇️இவ்வகையில் ஒரு பாடலில் இரண்டு வரிகளை அமைத்து 11 பாடல்களைக் கொண்ட ஒரு பதிகம் அற்புதமாக இயற்றி அருளிச் செய்துள்ள தமிழ் ஞானசம்பந்தர் சிறப்பு போற்றத்தக்கது. 

✳️ஒரு மெய்யெழுத்து கூட இப் பதினோறு பாடல்களிலும் இல்லை என்பது இன்னும் சிறப்பு.

❇️மூன்றாம் திருமுறையில் அமைந்துள்ள
(117) 375வது சீர்காழி தலத்தில் அருளிய பதிகம்

✳️ #மாலைமாற்றுப் பதிகம் பற்றி மேலும் தொடர்ந்து சிந்திப்போம்.

❇️கெளசிகப் பண் அமைந்த பதிகம்.

📖 முதல்பதிவில் 1, 2, பாடல்களும்
இரண்டாம் பதிவில், 3, 4, 5, பாடல்களையும் பார்த்தோம்
மூன்றாம் பதிவில்
பாடல்கள் 6,7,8 மற்றும்
இந்த நான்காவது பதிவில் 9, 10, 11 ஆகியவற்றின் பாடல் பொருள் உரை பற்றி சிந்திப்போம். (நிறைவு பகுதி).
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
9.
பாடல்: 1265:

காலேமேலே  காணீகா  ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா  லேகாழீ   காணீகாலே மேலேகா .

பொருள் :
🏵️முதல்வரி:

காலே - காற்றாகி யெங்கும் கலந்தவனே. மாலே - எவற்றிற்கும் மாயம் செய்பவனே. மால்    - மயக்கம். 
மாயம் - மாயனென்னும் திருமாலுக்கும்
மே       - சிறந்த. 
பூ         - மலர்ந்த. 

🏵️இரண்டாம் வரி:

பூ மேல் ஏ(ய்) - பிரமனும். 
மாலே             - மாலும். 
காலே             - திருவடியையும். |
மேலே            - திருமுடியையும். 

காண்           - காணலை. 
நீ                   - ஒழித்த. 
காழீ              - வைரத்தன்மையனே. 
காழீ! காண் - கடைக்கணி. 
கால் ஈ          - திருவடியைத் தருக.

🔱பொருளுரை:

⏺️காற்றாகி எங்கும் கலந்தருள்பவனே. மறைப் பாற்றலின் வழி எவ்வுயிர்க்கும் மயக்கம் செய்து பின் அருள் புரிபவனே.

⏺️பூக்களில் சிறந்த தாமரைப்பூவில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும், முறையே திருமுடியையும், திருவடியையும் காணுதலை ஒழித்த வைரத் தன்மையுடையவனே! 
சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே.
எங்களைக் கடைக்கணித்தருள்வாயாக. உன் திருவடியைத் தந்தருளுவாயாக!

🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
10.
பாடல்: 1266:

வேரியுமேணவ  காழியொயே யேனைநிணேமடளோ  காதே

தேரக  ளோடம  ணேநினையே 
யேயொழி காவண  மேயுரிவே.

பொருள் :
🏵️முதல்வரி:

வேரியுமேணவ= 
வேரி + ஏண் + நவம் +
வேரி - மணம். 
ஏண் - பெருமை. 
நவம் - புதுமை. 

காழியாயே = காழியில் வீற்றிருப்பவர்

யேனைநிணேமடளோ =
ஏனை+நீள் நேம் + அடு + அள் 

ஏனை     - துன்பத்தையும். 
நீள்நேம் - மிக்க அன்பையும். 
அடு         - முறையே ஒழி(த்தலும்) 
அள்         - அள்ளிக்கொள்ளுதலுமாகிய 
                   செய்கை. 
ஓகரது ஏ - யோகிகளுடைய செய்கையே

🏵️இண்டாம் வரி:
தேரகளோடம னேறினையே யேயொழி =
தேர்களோடு + அமனே + நினை + ஏய்

தேர்களோடு - தேரர்களின்    
                            உபதேசங்களோடு. 
அமணே         - அமணர்களின் 
                           உபதேசங்களையும். 
நினை - நினைத்தலையும். 
ஏய் - அவரோடு பொருந்துதலையும்.
ஒழி - ஒழிப்பீராக. 

காவண மேயுரிவே = காவணமே + உரிவே

காவணமே - அந்நெறிகளிற் 
                         சேராமற்காக்கும் திறம். 
உரிவே - உமக்கு உரியவேயாகும். 

🔱பொருளுரை :

⏺️நறுமணமும், தெய்விக மணமும், பெருமையும், புதுமையும் கலந்து விளங்கும் சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே! துன்பங்களை நீக்கி அருள்பவனே. பேரருள் உடையவனே. அதனை அள்ளிக்கொள்ளல் அகத்தவத்தாராகிய சிவயோகிகளின் செய்கையே. 

⏺️புத்தர், சமணர்களின் மொழிகளை எண்ணுதலையும், நண்ணுதலையும் ஒழித்தருள்வாயாக! இப்புறச் சமயத்தார் பன்னெறிகளில் புகாமல் காத்தருளும் திறம் நின் திருவடிக்கே உரியதாகும்.

🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
11.
பாடல் : 1267:

நேரகழாமித  யாசழிதா  யேனனியேனனி ளாயுழிகா

காழியுளானின யேனினயே தாழிசயாதமி  ழாகரனே .

பொருள் :
🏵️முதல்வரி :

நேரகழாமித= நேர் + அகழ் + ஆம்
நேர்               = நேர்மையை. 
அகழ் ஆம்    = கல்லியெறிவதாகிய. 

யாசழிதா = 
இதய ஆசு - மனத்துக் கண் எழும் (காம 
                      வெகுளி மயக்கம் என்னும்)    
                      முக் குற்றங்களையும். 

அழி            - அழிக்கவல்லவனே. 
                      
தா  யேனனியேனனி = 
தாய் ஏல் நன் நீயே = உலகுக்கெல்லாம் தாயாந் தன்மையை யேற்கத்தக்கவன் நீ ஒருவனே. 

வாழ் + ந் + அன் = வாணன் என்றாகியதுபோல ஏல் + ந + அன் = ஏனன் என்றாகியது. 

நல் - நன்மை புரிவதில். 

நீள் - மிக்கோனே. 

ஆ(ளா)யுழிகா = ஆய் + உழிகா
ஆய் உழிகா - தளர்ந்த இடத்துக் 
                          காப்பாயாக.

🏵️இரண்டாம் வரி:

காழியுளானின யேனினயே தாழிசயாதமி  ழாகரனே

காழி + உள்ளானின்+நையை + நினையே
தாழ்வு + இசையா + தமிழகரனே.

காழியுளானின் - சீகாழிப் பதியானைப்
                                பற்றிய. 
நையே      - கேட்டோர் மனம் குழைப்பதாகி         
                      இப்பாடல்களை. 
நினையே - நினைத்துப் பாடவே. 

தாழிசயா (தமி)= தாழ்வு + இசையா
தாழ்(வு)  = குறைவும் 
இசையா = உண்டாகா

தமிழாகரன் - தமிழே உடம்பாக உடைய 
                         திருஞானசம்பந்தனே. 

🔱பொருளுரை:

⏺️நேர்மையை அகழ்ந்து எறிவதாகிய, நெஞ்சத்தில் நிலைத்து எவரையும் துன்புறுத்தும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் அழித்தருள வல்லவனே. உலகுக்கெல்லாம் தாயாம் தன்மையை ஏற்றருளத் தக்கவன், ஒப்பில்லாத நீ ஒருவனே. நன்மை புரிந்தருளுவதில் உயர்ந்தவனே! நாங்கள் தளர்ந்த இடத்து எங்களைக் காத்தருள்வாயாக!

 ⏺️நற்றமிழுக்கு உறைவிடமாகவுள்ள காழிப்பதியில் வீற்றிருக்கும் பெருமானை நினத்துப் போற்றும்  திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இத்திருப்பதிகத்தை சிவபெருமானைப் போற்றி அருளிய, உள்ளம் குழையச் செய்யும் இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்கு எந்தக் குறைவும் உண்டாகாது.

🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
🙏இத்துடன் #மாலைமாற்று பதிகம் பற்றிய விளக்கம் நிறைவு.

🙏திருஞானசம்பந்தர் தம் திருப்பதிகப் பாடல்களில் ஒரு பக்கம் இறையருளின் அருட்செயல்பாடுகளை உணர்த்தியதும்,மறுபுறம் தமிழ் இலக்கியத்திற்கு பல்வேறு புதுமைகளையும் சிறப்புகளையும் கொண்ட பா அமைப்பை முதன்முதலில் கொண்டுவந்தார் என்பதும் வரலாறு.

🙏திருப்புகழ் என்றும்அருள் நூல் தந்த அருணகிரியார், அருட்பிரகாச வள்ளலார் முதலிய ஞானிகள் முருகனின் அவதாரமாய்  போற்றிய  அருட் செல்வர் திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

🙏பல்வேறு வலைதளத்தில் உள்ள இணைப்பில் உள்ள செயலிகள்
(http://thevaaram.org/ta/index.php)
மற்றும் பல்வேறு நூல்களின் அடிப்படையில் இப்பதிவில் குறிப்புக்கள் கொண்டும்.

🙏மேலும், பேரறிஞர்களாகிய, வ. த. இராமசுப்பிரமணியம்,  முதலிய ஒப்பற்ற பல பேராசிரியர்கள் நூல்களிலிருந்தும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு வழங்கப்பெற்றது.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி நூல்களையும் தொடர் கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
#மாலைமாற்று 
பதிவு : ஒன்று : பாடல். 1, 2
https://m.facebook.com/story.php?story_fbid=4261517207256837&id=100001957991710
பதிவு : இரண்டு : பாடல், 3, 4, 5.
https://m.facebook.com/story.php?story_fbid=4261528527255705&id=100001957991710
பதிவு : மூன்று: பாடல், 6, 7, 8
https://m.facebook.com/story.php?story_fbid=4281187108623180&id=100001957991710
🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...