Monday, August 17, 2020

மாலைமாற்று பதிவு : ஒன்று

#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்
#தமிழரின்பொக்கிஷம்:
#மாலைமாற்று (பாடல் 1, 2 )
பதிவு : ஒன்று

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 
🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
முதலில் திருஞானசம்பந்தர் பற்றிய சிறு குறிப்பு:

திருஞானசம்பந்தர் :

⚛️கி.பி.6 ம் நூற்றாண்டு இறுதியில் திருஞானசம்பந்தர் அவதரித்தார். இவரின் வருகைக்கு முன்புவரை,  பிற மதங்கள் குறிப்பாக சாக்கியம், சமணம் போன்ற  இறையுணர்வை மறுத்தும், வேறுபட்ட  இறைக் கொள்கைகளையும் கொண்ட, வட ஆதிக்க கலாச்சார பண்புகள் பரவி, சீர்கேடுகள் நிறைந்தும் இருந்து வந்தன.

 🔯இந்த  பிற மதங்களின் பொய்யுரைகளும், போலி வாதங்களையும் கேட்டு அதற்கு கட்டுண்டு கிடந்த மன்னர்களின் அறிவற்ற  அரச நெறிகளையும் நமது பாரம்பரிய தமிழரின் கலாச்சாரங்களும் பண்பாடுகளும் சிதைந்து இருந்ததை மீட்டு சீர்திருத்தியவர், திருஞானசம்பந்தர்.

📝"மூவரருளிய தேவாரக் காலம் பிறகே சிற்றிலக்கியங்கள் எழுந்தன" - பேராசிரியர் மா.ச. அறிவுடை நம்பி.

📚சைவத் திருமுறைகள் தமிழின் பல இலக்கிய வகைகளை உள்ளடக்கியது.
ஏற்கனவே, சம்பந்தர் பாடல்களில் #ஏகபாதம், #எண்ணலங்காரம், 
#மொழிமாற்று, #மடக்கணி, #திருவிராகம், #வழிமொழிதிருவிராகம்,
மற்றும் #திருவெழுக்கூற்றிருக்கை இவை பற்றி ஏற்கனவே சிந்தித்து இருந்தோம் அந்த வகையில் இப்பதிவு #மாலைமாற்று பற்றியது.

'📦தேவாரத்தினை பொக்கிசம் என்று சொல்ல காரணம், அந்த பாடல்களில் தவழும் பக்தி மனம் மட்டுமல்ல படைப்பின் நயமும் தான்'. 

📓'தமிழில் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட அதிசயதக்க செய்யுள் முறைகள் காணப்படுகின்றன. அந்த வகையில்  #சித்திரக்கவி எனப்படும் செய்யுள் வகை மிகச்சிறப்பு'.

📿#மாலைமாற்று 

☣️திருஞானசம்பந்தர் பாடல்களின் அமைப்பு பல்வேறு சிறப்புகள் உண்டு. அதில் சிலவற்றை சித்திரக்கவிகளாக வகைப்படுத்தியிருக்கின்றனர்.   

   #திருவெழுக்கூற்றிருக்கை,
   #மாலைமாற்று, #சக்கரமாற்று.
   #கோமூத்திரி, #கூடச்சதுக்கம், மற்றும்
    இதன் எழுச்சியாக 
    எழுத்து வருத்தனம்(வளருதல்), 
    நாகபந்தம்,  முரசுபந்தம் என்று பல 
    வகைகள் தமிழில் #சித்திரக்கவிகள் 
    இலக்கியத்தில் உண்டு.

⚜️இந்த #சித்திரக்கவி அமைப்பில்,
#திருவெழுக்கூற்றிருக்கை, #சக்கரமாற்று 
#மாலைமாற்று முதலியவை சம்பந்தர் அருளிய  மிக மிக அரியவகை  தமிழ் இலக்கியப் பாடல்களாகும்.

❇️சித்திரக்கவி வரிசையில்  திருஞானசம்பந்தரின்
  #மாலைமாற்று வகை என்பது..

⏺️ஒரு பாடலில் உள்ள இரண்டு அடிகளை முன்னிருந்து பாடினாலும், பின்னிருந்து பாடினாலும், சொல்லும்  பொருளும் மறுபடாமல் இருப்பது.

⏺️மலர்களை கொண்டு மாலை கட்டி முடிக்கும் போது ஆரம்பமும் முடிவும் ஒன்றாக முடியும் அது போல வார்த்தைகளை அடுக்கி வரிகளை முடிக்கும்போது அதே வரிசையில் திரும்ப வாசிக்க அதற்கும் பொருள் வரும்.  மாலை போல முதலும் முடிவும் மாறி மாறி சுற்றிவருவதால் இதை மாலைமாற்று பாடல் என்று அழைக்கப்படுகிறது.

⏺️இவ்வகைக் கவிகளை மிக முயன்று அமைத்துள்ளமையால் இவை மிகைக்கவி என்னும் கூறுவர்.

⏺️சொல்லணியில், #கூடசதுக்கம், #கோமூத்திரி, #மாலைமாற்று இவைகளை மிறைக்கவி என்பர். எளிதில் பொருள் காணமுடியாத பாடல் என்பது அதன் பொருள்.

⏺️இது #வண்ணகம் என்ற அமைப்பு  வகையில்   நெட்டெழுத்து மிகுதியும் பெற்று வரும் 'நெடுஞ்சீர் வண்ணம்"  என்றும் வகைப்படுத்துகின்றனர்: "யாமாமா  நீ  யாமாமா யாழீகா" என்று நெட்டெழுத்து மிகுந்து வருவதை கவணிக்கவேண்டும். 

🔱தமிழில் இது பற்றிய சில வார்த்தைகள்:

சிவயவசி, விகடகவி, திகதி, குடகு, தாத்தா, காக்கா, பாப்பா, மாமா, கைரேகை, தேருவருதே, மாடுஓடுமா, மோருதாருமோ, தோடுஆடுதோ, மேகராகமே, மேளதாளமே, வைபூவை, மாலாபோலாமா,

"பூவாளை நாறு நீ பூ மேக லோகமே
பூநீறு நாளை வா பூ"
இதன் பொருள் :
= பூச்சூடி, திருநீறு கொண்டு, நாளை வா'

🔰ஆங்கிலத்தில் இவ்வகையை PALINDROME என்பர்.
Civic, Radar, Level, Madam, pop, Noon, Refer, Malayalam, Tattarrattat, Anna. Ada, bob, Eve, MAHAMAHAM.
சில வகை சொல்லாடல்களையும் கூட இவ்வகைப் படுத்த முயலுகின்றனர்.
- I am Adam
- A nut for jar  of tuna,
- A Toyota's a Toyota
- Do gees see God, 
- was it a cat I saw

🔱திருஞானசம்பந்தர் அருளிய #மாலைமாற்று பதிகத்தின் எழுச்சியால், பிற்கால அருட்செல்வர்கள் மாதவச்சிவஞானயோகிகள் காஞ்சிப் புராணத்திலும், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை திருநாகைக் காரோணப் புராணத்திலும் இவை போன்ற கவிதைகளை இயற்றி அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

❇️இவ்வகையில் ஒரு பாடலில் இரண்டு வரிகளை அமைத்து 11 பாடல்களைக் கொண்ட ஒரு பதிகம் அற்புதமாக இயற்றி அருளிச் செய்துள்ள தமிழ் ஞானசம்பந்தர் சிறப்பு போற்றத்தக்கது. 

✳️ஒரு மெய்யெழுத்து கூட இப் பதினோறு பாடல்களிலும் இல்லை என்பது இன்னும் சிறப்பு.

❇️மூன்றாம் திருமுறையில் அமைந்துள்ள
(117) 375வது சீர்காழி தலத்தில் அருளிய பதிகம்

✳️ #மாலைமாற்றுப் பதிகம் பற்றி மேலும் சற்று விரிவாக சிந்திப்போம்.

❇️கெளசிகப் பண் அமைந்த பதிகம்.

📖(இந்தப் பதிவில் முதல் இரண்டு பாடல் பொருள் உரை பற்றியும் இந்த பதிவிலும், அடுத்தடுத்த தொடர்ந்தும் சிந்திக்கலாம்).

முழு பதிகம்:
1
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
2
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா
3
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா
4
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ
5
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா
6
மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா பொலேமே
7
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ
8
நேணவரா விழயாசைழியே வேகதளோய ளாயுழிகா
காழியுளாய ளேதகவே யேழிசையாழவி ராவணனே
9
காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா
10
வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே

தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுவே
11
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயா தமிழாகரனே

திருச்சிற்றம்பலம்.

❇️இப்பாடல்களின் பொருளும் உரையும் பற்றி சிந்திப்போம்

✳️*திருநாவுக்கரசரொடு திருக்காழியில் வழிபட்டிருந்து, பிரியாத நண்பொடும் அவர் பலதலங்களைத் தரிசிக்கப் போந்த பின் செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்களை அருளினார் சண்பைவேந்தர். அவற்றுள் ஒன்றாக வந்த சொற்சீர் மாலைமாற்று இத்திருப்பதிகம்.*
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
1
முதல் பாடல்: 1257
முதல் வரி - 1-2.

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

பொருள்:
🏵️முதல்வரி:
யாமாமாநீ   யாமா..
= யாம் ஆமா  நீ ஆம் ஆம்

யாம்  -   ஆன்மாக்களாகிய நாங்கள்         
              கடவுளென்றால். 
ஆமா -  அதுபொருந்துமா? 
நீ        -   நீயே கடவுளென்றால். 
ஆம் ஆம் - முற்றிலும் தகுவதாகும்.  

⏺️ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால் அது பொருந்துமா? நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது முற்றிலும் தகும்

மாயாழீகாமா
= மா+ யாழ்   காமா

மாயாழீ - பேரியாழ் என்னும் வீணையை     
                  வாசிப்பவனே. 
காமா - யாவரும் விரும்பத்தக்க     
              கட்டழகனே. 

⏺️பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே! யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே!

காணாகா
= காண்  +  நாகா

காண் -     (தீயவும் நல்லவாம் சிவனைச் 
                  சேரின் என்பதை யாவரும்) 
                  காணுமாறு பூண்ட. 
நாகா -     பாம்புகளை யுடையவனே.

⏺️(பகைப்பொருள்களும் சிவனைச் சாரின் பகை தீர்ந்து நட்பாகும் என்ற உண்மையினை) யாவரும் காணுமாறு பாம்புகளை உடையவனே.

🔯இதன் பிறகு கடைசி எழுத்திலிருந்து மாற்றி வார்த்தைகளைக் கோத்து  இரண்டாவது வரியாக  அமைத்துள்ளார்.

🔱இது போன்றே எல்லா பாடல்களும் அமைந்துள்ளதை கவணிக்க வேண்டும்.

வரி : 2.

காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

காணாகாமா
= காண (மல்) + காமா =காமன்)

காணாகாமா - கை, கால் முதலிய 
                           அவயவங்கள்     
                           காணாதனவாச் 
                           செய்தகாமனை 
                           உடையவனே. (மன்மதனை
                           அழித்தவனே)

காழீயா - சீகாழிப்பதியில் 
                எழுந்தருளியிருப்பவனே. 

மாமாயா = மா + மாயா
மாமாயா - உயிர்களுக்கு யாவும் 
                    மெய்யென்று தோன்றுமாறு    
                    மாயத்தை புரிபவர்
நீ -     எம்மை விடுவிப்பாயாக.  
மா -       அரியதாகிய. 
மாயா - மாயைமுதலிய 
              மலங்களினின்றும். 

🔱இரண்டாவது வரியின் முழுப் பொருள் :

⏺️மன்மதனை அழித்தவரே
   காழிப்பதியில் விளங்குபவரே
   உயிர்களுக்கு யாவும் மெய்யென்று 
   தோன்றுமாறு மாயத்தை புரிபவரே.
   மாயமலத்திலிருந்து எம்மை  
   விடுவிப்பீராக.
🙏
முழு பொருள் : 1-2 :

⏺️யாம் உயிர்கள். நீவிர் தலைவர்
   யாழ் கொண்டு எம்மை வசீகரிப்பீர்
   
⏺️மன்மதனை காணாமல் செய்தீர்.
   நாகத்தை அணிந்திருப்பவர்.
   காழிப்பதியில் விளங்குவீர்.
   மாயத்தைப் புரிபவர்.
   எம்மை மாயயை மலத்திலிருந்து    
   வீடுவிப்பீராக.

🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
2
பாடல். 1258
🔱இரண்டாம் பாடல்:

யாகாயாழீ  காயாகா  தாயாராரா தாயாயா
யாயாதாரா  ராயாதா காயாகாழீ  யாகாயா

⚜️முதல்வரி.
யாகாயாழீ  காயாகா  தாயாராரா தாயாயா

யாகா + யாழி
யாகா - யாகசொரூபியே. 
யாழீ   - யாழ்வாசிப்பவனே. 

காயா (கா)
காயா - அடியாருக்கு அருள வருகையில் உருவத்திருமேனி கொள்பவனே.

(கா)தாயாராரா = கா+தா+ யார் + ஆர் + ஆ
(கா)தா - துன்பத்தை கொல்பவர்
 (அடியார் துன்பம் நீக்குபவர்).
 (காதுதல் -     கொல்லுதல். வடசொல்)
யார் ஆர் - எவரெவருக்கும். 
ஆ - (பெற்றவள்) ஆகும்.

தாயாயா   = தாய் + ஆயாய் 
தாய் ஆயாய் - தாயானவனே.

🔰முதல் வரி பொருள் :

⏺️வேள்வி வடிவினனே. யாழ் வாசிப்பவனே. அடியார்கட்கு அருள வரும்பொழுது உருவத்திருமேனி கொள்பவனே. துன்பத்தை நீக்கும் கருத்தாவே. அனைத்துயிர்க்கும் தாயானவனே

🔰இரண்டாவது வரி:
யாயாதாரா  ராயாதா காயாகாழீ  யாகாயா

யாயா தாரா = உயிர்களுக்கு ஆதாயம் 
            செய்து நற்கதிக்கு உரித்தாக 
             செய்பவர்
(ஆ) ராயாதா = ஆய்ந்து அறிவதற்கு 
              அப்பற்பட்ட உயர் பொருளாய் 
              விளங்குபவர்.
ஆயா - ஆராய முடியாத. 
தார்    -  மாலை. 
ஆர் ஆயா - ஆத்திப்பூவாகக் 
               கொண்டவனே. (சிவனுக்குரிய 
                மாலைகளில் திருவாத்தியும்       
                 ஒன்று) 
காயா = எல்லா வடிவங்களிலும் விளங்குபவர்
காழீயா = காழியில் வீற்றிருப்பவனே
காயா =கா + ஆய் =-எம்மைக் காப்பாயாக.

🔱இரண்டவது வரிபொருள் :

⏺️ஆத்திப்பூ மாலைஅணிந்துள்ளவனே.
   உயிர்களுக்கு ஆதாயம் தரும் நற்கதி   
   செய்பவர்.  சீகாழி என்னும்      
   திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே.    
   துன்பங்கள் எவற்றினின்றும் எம்மைக் 
   காப்பாயாக.
🙏
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
இதன் தொடர்பதிவில் அடுத்தடுத்த பாடல்களின் பொருளும் உரையும் பற்றி சிந்திக்கலாம்.

⏺️திருஞானசம்பந்தர் தம் திருப்பதிகப் பாடல்களில் ஒரு பக்கம் இறையருளின் அருட்செயல்பாடுகளை உணர்த்தியதும்,மறுபுறம் தமிழ் இலக்கியத்திற்கு பல்வேறு புதுமைகளையும் சிறப்புகளையும் கொண்ட பா அமைப்பை முதன்முதலில் கொண்டுவந்தார் என்பதும் வரலாறு.

🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏

✳️திருப்புகழ் என்றும்அருள் நூல் தந்த அருணகிரியார், அருட்பிரகாச வள்ளலார் முதலிய ஞானிகள் முருகனின் அவதாரமாய்  போற்றிய  அருட் செல்வர் திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

🙏பல்வேறு வலைதளத்தில் உள்ள இணைப்பில் உள்ள செயலிகள்
(http://thevaaram.org/ta/index.php)
மற்றும் பல்வேறு நூல்களின் அடிப்படையில்  குறிப்புக்கள் கொண்டும்
மற்றும் பேரறிஞர்களாகிய, வ. த. இராமசுப்பிரமணியம்,  முதலிய ஒப்பற்ற பல பேராசிரியர்கள் நூல்களிலிருந்தும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு வழங்கப்பெறுகிறது.

🙏 இது ஒரு அறிமுக பதிவே ; மேற்படி நூல்களையும் தொடர் கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...