Monday, August 17, 2020

சம்பந்தர்அமுதம் - அகக்குருடர்களுக்கு எச்சரிக்கை பதிகம். 3.297

அகக் குருடர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் தமிழ் விரகன்:
🙏🙇‍♂️🙏🔱🔯🕉️🛐⚛️🎪🙏🙇‍♂️🙏
சந்துசேனனும் இந்துசேனனும் 
தருமசேனனும் கருமைசேர்
கந்துசேனனும் கனகசேனனும்
முதலதாகிய பெயர்கொளா

மந்திபோல்திரிந்து ஆரியத்தொடு
செந்தமிழ்ப்பயன் அறிகிலா
அந்தகர்க்கு எளியேன் அலேன்திரு
ஆலவாய்அரன் நிற்கவே.
                            (414)
பொருள் :
சந்து சேனன், இந்துசேனன், தருமசேனன், கந்துசேனன், கனகசேனன் முதலாகிய பெயர்களைச் சிறப்பாகத் தாங்கி, எல்லா இடங்களிலும் திரிந்து அலைந்தவர்களாகி வடமொழியும், செந்தமிழும் நவில்கின்ற சிவப்பரம்பொருளையும் அதன் பயனையும் அறியாது, உலகியலில் அகக்குருடர்களாய் விளங்குபவர்களுக்கு, நான் எளியவன் அல்ல. திரு ஆலவாயின் ஈசன் என் முன்னிருந்து நடத்திச் செல்கின்றார். எனவே அச்சத்தை விடுக.
🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏

கூட்டின்ஆர்கிளி யின்விருத்தம்
உரைத்ததோர்ஒலி யின் தொழில்
பாட்டுமெய் சொலிப் பக்கமே செலும்
எக்கர் தங்களைப் பல்லறம்

காட்டியேவரு  மாடெலாங்கவர்
கையரைக்கசி வொன்றிலாச்
சேட்டைகட்கெளி யேனலேன்திரு
ஆலவாய்அரன்  நிற்கவே. 
                    (415)

பொருள் : கூண்டில் இருக்கும் கிளிவிருத்தம் முதலானவைகளை உரைத்து, அக்கிளியினது ஒலித்தன்மையை மெய்யெனக் கூறி

 அறங்களைச் சொல்லுகின்றவர்கள் போல் பேசி, இரக்கம் அற்றவராகி, குற்றங்களைப் புரிபவர்களுக்கு நான் எளிபவன் அல்ல. 
ஆலவாயின்கண் உறையும் ஈசன் என் முன்னின்று நன்று அருள்புரிபவர்.

- தமிழ்நாதன்   ஞானசம்பந்தன்

மூன்றாம் திருமுறை
பதிகம்: 297 தலம் திருஆலவாய்
பாடல். 4, 5
🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏
பகிர்வு:
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...