Monday, August 17, 2020

மாலைமாற்று பதிவு: மூன்று

#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்
#தமிழரின்பொக்கிஷம்:
#மாலைமாற்று (பாடல் 6,7, 8 )
பதிவு : மூன்று

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 
🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
 
📚சைவத் திருமுறைகள் தமிழின் பல இலக்கிய வகைகளை உள்ளடக்கியது.
சித்திரக்கவி என்னும் வகையில் சம்பந்தப்பெருமான் அருளிய 
#மாலைமாற்று பதிகம் பற்றி தொடர்ந்து சிந்திக்கும் பதிவு.

☣️ சம்பந்தர் அருளிய  மிக மிக அரியவகை  தமிழ் இலக்கியப் பாடல்களாகும்.

❇️சித்திரக்கவி வரிசையில்  திருஞானசம்பந்தரின்
  #மாலைமாற்று வகை என்பது..

⏺️ஒரு பாடலில் உள்ள இரண்டு அடிகளை முன்னிருந்து பாடினாலும், பின்னிருந்து பாடினாலும், சொல்லும்  பொருளும் மறுபடாமல் இருப்பது.

⏺️மலர்களை கொண்டு மாலை கட்டி முடிக்கும் போது ஆரம்பமும் முடிவும் ஒன்றாக முடியும் அது போல வார்த்தைகளை அடுக்கி வரிகளை முடிக்கும்போது அதே வரிசையில் திரும்ப வாசிக்க அதற்கும் பொருள் வரும்.  மாலை போல முதலும் முடிவும் மாறி மாறி சுற்றிவருவதால் இதை மாலைமாற்று பாடல் என்று அழைக்கப்படுகிறது.

⏺️இவ்வகைக் கவிகளை மிக முயன்று அமைத்துள்ளமையால் இவை மிகைக்கவி என்னும் கூறுவர். எளிதில் பொருள் காணமுடியாத பாடல் என்பது அதன் பொருள்.

🔱தமிழில் இது பற்றிய சில வார்த்தைகள்:

சிவயவசி, விகடகவி, திகதி, குடகு, தாத்தா, காக்கா, பாப்பா, மாமா, கைரேகை, தேருவருதே, மாடுஓடுமா, மோருதாருமோ, தோடுஆடுதோ, மேகராகமே, மேளதாளமே, வைபூவை, மாலாபோலாமா,

❇️இவ்வகையில் ஒரு பாடலில் இரண்டு வரிகளை அமைத்து 11 பாடல்களைக் கொண்ட ஒரு பதிகம் அற்புதமாக இயற்றி அருளிச் செய்துள்ள தமிழ் ஞானசம்பந்தர் சிறப்பு போற்றத்தக்கது. 

✳️ஒரு மெய்யெழுத்து கூட இப் பதினோறு பாடல்களிலும் இல்லை என்பது இன்னும் சிறப்பு.

❇️மூன்றாம் திருமுறையில் அமைந்துள்ள
(117) 375வது சீர்காழி தலத்தில் அருளிய பதிகம்

✳️ #மாலைமாற்றுப் பதிகம் பற்றி மேலும் தொடர்ந்து சிந்திப்போம்.

❇️கெளசிகப் பண் அமைந்த பதிகம்.

📖 முதல்பதிவில் 1, 2, பாடல்களும்
இரண்டாம் பதிவில், 3, 4, 5, பாடல்களையும் பார்த்தோம்
இந்த மூன்றாம் பதிவில்
பாடல்கள் 6,7,8 ஆகியவற்றின்
பாடல் பொருள் உரை பற்றி சிந்திப்போம்.

தொடர்ந்து  அடுத்தடுத்த பதிவுகளிலும் தொடர்ந்தும் சிந்திக்கலாம்).
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
6
பாடல்: 1262
மேலேபோகா  மேதேழீ  காலாலேகா லானாயே
யேனாலாகா  லேலாகா  ழீதேமேகா  போலேமே.

பொருள் :
🏵️முதல் வரி:

மேலேபோகாமே - மார்க்கண்டேயர் மீது எமன் போகாமல். 

தேழீ - கடுங்குரலால் உரப்பினவனாய். 

காலாலே - காலினாலே. 

கால் ஆனாயே - (அவ்வெமனுக்கு) காலன் ஆனவனே. 

🏵️இரண்டாம் வரி:
யேனாலாகா லேலாகா ழீதேமேகா= 
எல் + நால் + ஆகி + ஆல்+ஏலா +காழி + மேகா.

ஏல் - பொருந்திய. 
நால் - சனகர் முதலிய நால்வருக்கும். 
ஆகி - குருவாகிய. 
ஆல் - கல்லால மரத்தில். 
ஏலா - ஏற்றவனே. 
காழீதே - சீகாழியிலுள்ள தெய்வமே. 
மேகா - (திருமால் மேகவடிவங்கொண்டு வாகனமாகி நிற்க) அந்த மேகத்தை வாகனமாகக் கொண்டருளியவனே.

போலேமே - யாங்கள் உமது பல்கணத்தில் ஒருவராக எண்ணப்படுதற்கு அத்திருமாலை ஒத்திலோமோ?

🔱பொருளுரை:

⏺️மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனைக் கடுங்குரலால் கண்டித்தவரே.  உம் திருவடியால் அவனை உதைத்து அக்காலனுக்குக் காலன் ஆகியவரே.

⏺️சனகர் முதலிய நால்வர்க்கும்  சிவகுருவாகிக் கல்லால மரத்தின் கீழ் மெய்ப்பொருள் உபதேசித்து மெய்யுணர்வு பெறச் செய்தவரே.  சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பரம்பொருளே. மேகத்தைப் போல் குளிர்ச்சியாக விளங்கி உயிர்களுக்கு இனிமை செய்பவர். உம் திருக்கூட்டத்தில் ஒருவர் போல் நாம் ஆவோம்.

🙏
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
7
பாடல் 1263

நீயாமாநீ  யேயாமா  தாவேழீகா நீதானே
நேதாநீகா  ழீவேதா  மாயாயேநீ  மாயாநீ .

பொருள் :
🏵️முதல் வரி:

நீயா    மாநீ   ஏயா   மாதா  ஏழீ  கா நீதானே

நீயா - (உம்மை) நீங்குதல் அறியாத 

மான் - மானைப்போன்றவர். 
மாநீ - மானை உடையவன். 
மாநீ (மானீ) - உமா தேவியை உடையவனே. 

ஏயா - ஒப்பற்ற. 

மாதா - தாயே. 

ஏழீ - ஏழிசை வடிவாய் உள்ளவனே. 
ஏழீ - ஏழ்தொகைக் குறிப்பாக இசையை உணர்த்தியது. 

காநீதானே - `அழையாமே அருள் நல்குமே
காநீதானே - நீயே வலியவந்து என்னைக் காப்பாயாக. 
தாநீ - தானத்தை (இடத்தை உடையவனே) எங்களைக் கொல்லும் துன்பத்தை நீ கொல்லமாட்டாயா? என்பது ஓர் நயம்

🏵️இரண்டாம் வரி:

நே   தாநீ  காழிவேதா மாய் ஆநீ  மாயாயே

நே - அன்பார்ந்த இடத்தை.

தாநீ - இடமாக உடையவனே. 

காழிவேதா - சீகாழியில் எழுந்தருளியுள்ள வேத சொரூபியே. 

மாய் - எம்மைக்கொல்லும். 

ஆநீ - துன்பங்களை. 

நீ மாயாயே - நீ கொல்ல மாட்டாயா? 

🔱பொருளுரை:

⏺️மானைக் கரத்தில் வைத்துள்ள ஈசனே, உன்னைவிட்டு நீங்குதலில்லாத உமாதேவியை உடையவனே.  ஒப்பற்ற தாயானவனே. ஏழிசை வடிவானவனே. நீயே வலிய எழுந்தருளி எங்களைக் காத்தருள்வாயாக! 

⏺️பேரன்பு வாய்ந்த நெஞ்சத்தை இடமாகஉடையவனே.  சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுபவர். வேதங்களைஅருளிச்செய்து வேதங்களின் உட்பொருளாக விளங்குபவனே.  எங்களைக் கொல்லவரும் துன்பங்களை நீகொன்று அருள்செய்யாயோ?
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
8
பாடல் : 1264

நேணவராவிழ  யாசைழியே வேகதளேரிய   ளாயுழிகா

காழியுளாயரி  ளேதகவே 
யேழிசை  யாழவி   ராவணனே.

 பொருள் :

🏵️முதல்வரி:

நேணவராவிழயாசைழியே, =
நே +அணவர் +ஆ + விழ  + யா  +ஆசை  + இழியே. 

நே அணவர் - (உமது திருவடியில்) நேயம் பொருந்தும் அடியவராம், 

ஆ - பசுக்கள். 

விழ - தன் வயமற்றுக் கிடக்க. 

யா - (யாத்த) கட்டிய, 

ஆசை - ஆசையாகிய கயிற்றை. 

இழியே - அவிழ்த்து விடுபவனே.

(அடியவரைப் பசுவென்று, ஆசையைக் கயிறென்னாமையால் ஏகதேச உருவகம்.
நேணவர் - நே + அணவர் எனவும், யாசைழியே - யா, அசை, இழியே எனவும் பதம் பிரித்துக் கொள்க. 
யா + ஆசை = வினைத்தொகை.
நேணவர் - யாசைழியே இல்விரு தொடரும் மரூஉ முடிபின)

அன்பான அடியவர்கள் ஈசன் திருவடியின் மீது இருந்து ஆசை முதலிய குற்றங்களைத் துறந்து விளங்குகின்றனர்.

வேகதளேரியளாயுழிகா =
வேக(ம்) + அதரி + ஏரி +அளாய + உழி + கா

வேகம் - விலங்குகளில் வேகமாய் 
                ஓடவல்ல மானின், அதன்
                தோலையணிந்த, 

ஏரி - அழகனே. (ஏர் - அழகு)

அளாய உழி - துன்பங்கள் எம்மைச் 
                          சூழ்ந்தவிடத்து. 

கா - காப்பாற்றுவாயாக.

🏵️இரண்டாம் வரி:

காழியு(ள்)ளாய் = காழியில் உள்ளவரே

அரிளேதகவே =
அரு + இளவு + ஏது + அகவே. 

அருஏதம் = மன்னித்தற்கரிய குற்றங்கள்.
இளவு      = (எமது) சிறுமைத் தன்மையால் 
                    செய்தனவாதலின், 
அஃகவே = அவை மன்னிக்கத்தக்கன  
                    ஆகுக.

ஏழிசை இராவணனே = ஏழிசை பாடிய 
               இராவணனுமல்லவா பெரும் 
               பிழையும் மன்னிக்கப் பெற்றுத் 
               திருவருளுக்குப் 
               பாத்திரமாயினான். 

⏏️செருக்கினால் செய்த பெரும் பிழையை மன்னித்த கருணை, சிறுமையாற் செய்த பிழைகளை மன்னிக்கவும் தகும் என மன்றாடியவாறு.

🔱பொருளுரை:

⏺️இறைவரின் திருவடிகளில் பேரன்பு செலுத்தும் அடியவர் கட்டிய ஆசை என்று சொல்லப்படும் -பெருங்கயிற்றைத்- குற்றங்களைத் துறந்து அவிழ்த்தருள்பவரே. 
   மிக வேகமாக ஓடும் மானின் தோலை   
   அணிந்துள்ள பேரழகு வாய்ந்தவரே. 
   பொறுக்கலாகாத் தீவினைத்   
   துன்பங்கள்  தாக்க வரும்போது  
   காத்தருள்வீராக!

⏺️காழிப்பதியில் வீற்றிருக்கும் நாதனே
   மன்னித்தற்கரிய குற்றங்கள் எங்களின்   
   சிறுமைத் தன்மையால் 
   செய்தனவாகலின் அவற்றைப்  
   பெரியவாகக் கொள்ளாது சிறியவாகக் 
   கொண்டு பொறுத்தருள்வீராக!
   ஏழிசைவல்ல இராவணன்   
   செருக்கினால் செய்த பெரும்பிழையை 
   மன்னித்து அருளியது போல எமக்கும் 
   அருள் புரிவீராக.

🙏
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
இதன் தொடர்பதிவில் அடுத்தடுத்த பாடல்களின் பொருளும் உரையும் பற்றி சிந்திக்கலாம்.

⏺️திருஞானசம்பந்தர் தம் திருப்பதிகப் பாடல்களில் ஒரு பக்கம் இறையருளின் அருட்செயல்பாடுகளை உணர்த்தியதும்,மறுபுறம் தமிழ் இலக்கியத்திற்கு பல்வேறு புதுமைகளையும் சிறப்புகளையும் கொண்ட பா அமைப்பை முதன்முதலில் கொண்டுவந்தார் என்பதும் வரலாறு.

🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏

✳️திருப்புகழ் என்றும்அருள் நூல் தந்த அருணகிரியார், அருட்பிரகாச வள்ளலார் முதலிய ஞானிகள் முருகனின் அவதாரமாய்  போற்றிய  அருட் செல்வர் திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

🙏பல்வேறு வலைதளத்தில் உள்ள இணைப்பில் உள்ள செயலிகள்
(http://thevaaram.org/ta/index.php)
மற்றும் பல்வேறு நூல்களின் அடிப்படையில் இப்பதிவில் குறிப்புக்கள் கொண்டும் தொகுக்கப்பட்டது.

🙏 இது ஒரு அறிமுக பதிவே.
மேற்படி நூல்களையும் அறிஞர்கள் கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை  பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
பதிவு : ஒன்று : பாடல். 1, 2
https://m.facebook.com/story.php?story_fbid=4261517207256837&id=100001957991710

பதிவு : இரண்டு : பாடல், 3, 4, 5.
https://m.facebook.com/story.php?story_fbid=4261528527255705&id=100001957991710
🙏🙇‍♂️🎪🙇‍♂️🙏🙇‍♂️🎪🙇‍♂️🙏🙇‍♂️🎪🙇‍♂️🙏

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...