Monday, August 17, 2020

திருத்தாளச்சதி பதிவு

#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம் 3.126

#தமிழரின்பொக்கிஷம்
பதிவு : ஆறு 

#திருத்தாளச்சதி பற்றிய பதிவு.

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 
🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
#திருவிராகம்,# வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம்,#முடுக்கியல்,#அடுக்கியல் 
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம். தொடர்ந்து

💠#திருத்தாளச்சதி என்ற இசை வகை பதிகப் பாடல் விளக்கங்களயும், சிறப்புகளையும் இப்பதிவில் பார்ப்போம்.

🔹திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய தேவாரப்பதிகங்கள் பலவகையில் சிறப்புற்றவை.

🌀ஒப்பற்ற பக்தி இலக்கியமாக மட்டும் அமையவில்லை.
🥀வடிவ அமைப்பு, இசைப்பாடல் அமைப்பு, பொருள் அமைப்பு என்று தமிழ் இலக்கியத்தின் ஆதாரமான பல படிகளில் உயர்ந்து தமிழின் பொக்கிஷமாக நிற்கிறது.

🍃இசையமைப்பு முறையில் அமைந்த #திருவிராகம், #வழிமொழிதிருவிராகம், #யாழ்முறி, என்ற வகையில் 

🌹#திருத்தாளச்சதி என்னும் வகைப் பற்றி இப்பதிவில் சிந்திக்கலாம்.
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
மூன்றாம் திருமுறையில் 126 வது பதிகம் திருக்கழுமலம் என்ற சீர்காழிப்பதியில் அருளியது. 

🌺வியாழக்குறிஞ்சி என்ற பண் அமைப்பில் உள்ளது.

🌸இப்பதிகம் 11 பாடல்களைக் கொண்டது.

🏵️21 பண்கள் செறியும் இசையியல்பு கொண்டது.

🌼இசைநயம், தாள அமைப்பிலும், சந்த அமைப்பிலும் மிகச்சிறந்தது.

🌷#வண்ணம் என்ற இலக்கிய வகையில்
இப்பாடலை #அகைப்புவண்ணம் என்று வகைப் படுத்துகிறார்கள்.

🍁#அகைப்புவண்ணம் : ஒரு பக்கம் நெடில் மற்றொரு பக்கம் குறில் பயின்று வந்து ஓசை அறுத்து அறுத்து ஓடுவது என்பதாகும்.
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
பாடல் : 1359
பந்தத்தால் வந்தெப்பால்  பயின்று நின்ற வும்பரப் 
பாலே சேர்வாய் யேனோர்கான்   பயில் கண முனிவர்களும்

சிந்தித்தே  வந்திப்பச்  சிலம்பின்மங்கை  தன்னொடும்
சேர்வார்நானா  ணீள்கயிலைத் திகழ்தரு
பரிசதெலாம்

சந்தித்தே  யிந்தப்பார்  சனங்கள்நின்று  தங்கணால்
தாமேகாணா  வாழ்வாரத் தகவு செய்த வனதுஇடம்

கந்தத்தால்  எண்திக்கும்  கமழ்ந்திலங்கு  சந்தனக் 
காடார்பூவார்  சீர்மேவும்  கழுமல வளநகரே.
                                           - 3.126.1
அமைப்பு விளக்கம்:

இந்தப் பாடலில் முதல் பகுதியில்

பந்தத்தால் வந்தெப்பால் = நெடில் மிகுதியாகவும்

அடுத்த பகுதி
பயின்று நின்ற வும்பரப் = குறில் பெற்றும்

மீண்டும்
பாலே சேர்வாய் யேனோர்கான் = நெடில் மிகுதியாகவும்

பிறகு
பயில் கண முனிவர்களும் = (மீண்டும்) குறில் பெற்றும் வருகிறது

🌟இந்நிலையில் ஓசை விடுபட்டு விடுபட்டு வரும் சந்தவகையும் உணர்ந்து சிந்திக்க வேண்டும்.

💫இவ்வகைப் பாடல்கள் நாட்டிய பாடலுக்குரியன என்றும் பிரிப்பர்.
சதிச் சொற்கட்டுகள் நிறைந்தது.

✨இதையே #அகைப்புவண்ணப் பாடல் என்கிறார்கள் இசை இலக்கிய ஆராய்ச்சியாளர்கள்.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
🌳இப்பதிகத்தின் அணைத்து பாடல்களும் இவ்வகை தாளச் சிறப்பு பெற்று விளங்குகிறது. இதற்கு மகுடம் வைத்து இந்த இசைப்பாட்டு 21 இசையில்பில் வேறுபட்டுள்ளதை தமிழ் ஞானசம்பந்தர்
பெருமான் இதன் திருக்கடைக் காப்பு - 11வது - பாடலில் குறிப்பிடுகிறார்.

அப்பாடல்: 1369
கஞ்சத்தேன் உண்டிட்டே  களித்துவண்டு
சண்பகக்
கானே தேனே போறாரும்  கழுமல நகரிறையைத்

தஞ்சைச்சார்  சண்பைக்கோன்  
சமைத்தநற் கலைத்துறை
தாமேபோல்வார்  தேனேரார்  தமிழ்விர
கனமொழிகள்

எஞ்சத்தேய்  வின்றிக்கே  யிமைத்திசைத்த  மைத்தகொண்டு
ஏழேழே  நாலேமூன்று  இயலிசை இசையியல்பா

வஞ்சத்தேய் வின்றிக்கே  மனம்கொளப்
பயிற்றுவோர்
மார்பே சேர்வாள்  வானோர் சீர் மதிநுதர் மடவரலே.
            
                                          - 03.126.11
💠இப்பாடலின் பொருள் விளக்கம்:

🌿தாமரை மலரில் உள்ள தேனை உண்டு களித்த வண்டானது, சண்பகச் சோலையில் தேன் பருகும் வண்டுடன் பெரும் தன்மை உடைய கழுமல நகர்.
🌿  இங்குள்ள இறைவனை, நன்மை ஆர்ந்த தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் மொழிகள், தேன் போன்று விளங்கி குறைவில்லாது இசையமைத்ததாகிய
🌿இச் சொற்கள் கொண்டு 21 பண் செறியும் இசையின் இயல்பால் வேறுபாடு இன்றி மன விருப்பத்துடன் உரைப்பவர்கள் இதயத்தில் திருமகள் உறைவாள்.

கஞ்சம் = தாமரை
எஞ்ச= விஞ்சி நிற்றல்
வஞ்சம் = வேறுபாடு
இமைத்து = விளங்கும்படி
ஏழேயேழே நாலே மூன்று = 7+7+4+3 = 21.

💠பிற்கால தமிழ் இலக்கியத்தின் சந்த வகை பாடல்களுக்கு அடிப்படையாகவும்,

✳️திருப்புகழ் என்றும்அருள் நூல் தந்த அருணகிரியார் முதலிய ஞானிகள் போற்றிய 

♦️அருட் செல்வர் திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
இசைராகப் பதிகம் பற்றி முன்பதிவுகள்:
https://m.facebook.com/story.php?story_fbid=4188662247875667&id=100001957991710

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...