Monday, August 23, 2021

வினாவுரை பதிகம் - திருநள்ளாறும், திருஆலவாயும் - பதிவு : 9

#வினாஉரை_பதிகங்கள் 
#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
#சம்பந்தர்அமுதம்:
💥பதிவு : 9
🙏🎪🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♀️🎪🙏
          🙆#ஆன்மீகமே_தமிழ்🙆🏼‍♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும். 
🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.                        
                    🙏🙇‍♂️நன்றி🙇‍♀️🙏🏻 
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
🔱திருஞானசம்பந்தரின்
#வினாஉரை_பதிகங்கள் அமைப்பைப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.

🔱வினாவுரை என்றால் என்ன?

🟩வினவுதல் வழி உரைத்தல்:
பாட்டுடைத் தலைவன் அருட்செயல்களை  பல்வேறு
கோணத்தில், கிண்டல், கேலி செய்வது போன்றும், எளிமை செய்தும் தலைவனின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டு அருளப்பட்ட பதிகங்கள்
மேலும், தலத்தின் சிறப்புடன்,  இறைவரின் சிறப்பு கோலம், பேரருட்டிரன் வெளிப்படுத்தும் பாங்கு வியப்பும், சிறப்பும் மிக்கது.
வினாவுரை என்றால் என்ன?

🟩முதல் திருமுறை - பதிகம்:1.07.
தலம் : திருநள்ளாறும், திருவாலவாயும்
பண் : நட்டபாடை
பாடல் முதலடி : 'பாடக மெல்லடி'

🔱பதிக சிறப்பு:
மதுரையில் அனல் வாதத்தில் 'போகமார்த்த' என்னும் திருப்பதிகம் பெற்ற திருத்தலமாகிய திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை, ஆலவாயில் அமர்ந்தததை வினவும் வினா உரையாக உடையது.

'...நள்ளாறுடைய நம்பெருமான் இது என் கொல்சொல்லாய்'
என்றும்,
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
என்றும்  ஒவ்வொரு பாடலிலும் அமைத்துள்ளார்.

🔱திருநள்ளாற்று சிறப்பும்,
 ஆலவாய் சிறப்பும் கூறி நள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை நோக்கி வினவுதல் போன்ற அமைப்பு.

🔱பாடல்:9
பணியுடை மாலும் மாலரினோனும்
பன்றியும் வென்றிம் பறவையாயும் 

நணுகல் அரிய நள்ளாறுடைய
நம்பெருமான் இது என் கொல் சொல்லாய்.

மணியொலி சங்கொலி யோடு மற்றை
மாமுரசின் ஒலி என்றும் ஓவாது

அணிகிளர் வேந்தர் புகுதும்கூடல்
ஆலவாயின்கண் அமர்ந்தவாறே.

🔱பொருள் :
திருமால் பன்றி வடிவத்திலும், நான்முகன் பறவை வடிவத்திலும், அடிமுடிகாண முடியாத இறைவா, நீ எழுந்தருளி வீற்றிருக்கும் நள்ளாற்றானே,

தேரின் மனிஒலி, படைகள் சூழ்ந்து முழங்கும் சங்கொலி, முரசொலியும், விளங்கும், என்னாளும் பல்நாட்டு வேந்தர்களும் சாரும் ஆலவாயில் அமர்ந்தது என் கொல்?

🔱இவ்வாறு, ஒரே பதிகத்தில், இரு தலங்களின் சிறப்பும், இறைவரின் சிறப்பும் வினாவுரையாக அமைத்து
அருளிய தமிழாகரரின் அருமை தமிழ் பாடல் சிறப்புணர்வோம்.

🔱படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, 
பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 🔱தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
   🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
பதிவு : 8
https://m.facebook.com/story.php?story_fbid=6057290567679483&id=100001957991710

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...