#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
#சம்பந்தர்அமுதம்:
💥பதிவு : 7
🙏🎪🙇♂️அன்பு வேண்டுகோள்:🙇♀️🎪🙏
🙆#ஆன்மீகமே_தமிழ்🙆🏼♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.
🙏🙇♂️நன்றி🙇♀️🙏🏻
🔱ஏழாம் நூற்றாண்டில் சைவமும் தமிழும் பிற சமயத்தவா்களால் கடுமை யான நெருக்கடிகளைச் சந்தித்த காலகட்டத்தில் ஈசனுடைய திருவருளால் சீா்காழியில் திருஅவதாரம் செய்தவா் திருஞானசம்பந்தப் பெருமான். தம் உணா்வு சிறிதுமின்றி, ஈசனது பேரறிவினுள் அடங்கி நின்ற சிவஞானிகளுள் முதன்மையானவா் திருஞானசம்பந்தா்.
🔱"வண்டமிழால் எழுதுமறை மொழிந்த பிரான்" என்று சம்பந்தப் பெருமானைப் போற்றுகின்றாா் திருத்தொண்டா்களின் வரலாற்றை அருளிச் செய்த சேக்கிழாா் பெருமான். எல்லாம் வல்ல சிவப்பரம்பொருளை வழிபடுவதற்கு உகந்த மொழியும் ஏற்ற மொழியும் தமிழ் மொழியே என்பதையும் தமிழ்மொழிக்கு அளவற்ற மந்திர ஆற்றல் உண்டு என்றெல்லாம் நிரூபித்துக் காட்டியவா் இவரேயாவாா்.
🔱தமிழராகப் பிறந்த அனைவரும் ஞானசம்பந்தரை எப்போதும் நினைத்துப் போற்றிக் கொண்டாடவேண்டும். "தமிழாகரன்" என்று தம்மைக் கூறிக் கொண்டவா் ஞானசம்பந்தா். "தமிழாகரன்" என்ற சொல்லுக்கு" தமிழே உடம்பாக உடையவா்" என்பது பொருளாகும். இவரது உடல், உயிா் எல்லாம் தமிழால் நிரம்பி இருந்ததால் தமது பதிகங்களில் "தமிழ் ஞானசம்பந்தன்" என்று தம்மைக் கூறிக்கொண்ட முதல் தமிழ்க்குடிமகனும் இப்பெருமானே ஆவாா்.
🔱பெருமைமிக்க திருஞானசம்பந்தரின்
#வினாஉரை_பதிகங்கள் அமைப்பைப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
வினாவுரை என்றால் என்ன?
🟩வினவுதல் வழி உரைத்தல்:
பாட்டுடைத் தலைவன் அருட்செயல்களை பல்வேறு
கோணத்தில், கிண்டல், கேலி செய்வது போன்றும், எளிமை செய்தும் தலைவனின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டு அருளப்பட்ட பதிகங்கள்
மேலும், தலத்தின் சிறப்புடன், இறைவரின் சிறப்பு கோலம், பேரருட்டிரன் வெளிப்படுத்தும் பாங்கு வியப்பும், சிறப்பும் மிக்கது.
🔱இந்தத் தொடரில் நாம் சிந்திக்கவிருக்கும் பதிகம்.
🔱முதல் திருமுறை - பதிகம்:1.07.
தலம் : திருநள்ளாறும், திருவாலவாயும்
பண் : நட்டபாடை
பாடல் முதலடி : 'பாடக மெல்லடி'
🔱பதிக சிறப்பு:
மதுரையில் அனல் வாதத்தில் 'போகமார்த்த' என்னும் திருப்பதிகம் பெற்ற திருத்தலமாகிய திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை, ஆலவாயில் அமர்ந்தததை வினவும் வினா உரையாக உடையது.
'...நள்ளாறுடைய நம்பெருமான் இது என் கொல்சொல்லாய்'
என்றும்,
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
என்றும் ஒவ்வொரு பாடலிலும் அமைத்துள்ளார்.
🔱திருநள்ளாற்று சிறப்பும்,
ஆலவாய் சிறப்பும் கூறி நள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை நோக்கி வினவுதல் போன்ற அமைப்பு.
🔱பாடல் : 7.
கோவண ஆடையும் நீறுப்பூச்சும்
கொடுமழு ஏந்தலும் செஞ்சடையும்
நாவணப் பாட்டு நள்ளாறுடைய
நம்பெருமான் இது என் கொல் சொல்லாய்.
பூவணமேனி இளைய மாதர்
பொன்னும் மணியும் கொழித்தெடுத்து
ஆவண வீதியில் ஆடும்கூடல்
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே.
🔱பொருள் :
கோவண ஆடை, திருநீற்று மேனி, மழு ஆயுதம், செஞ்சடைமுடி, அடியார்நாவினால் பாடப்படும் பல வண்ணப் பாடல் இசை கேட்டுக் கொண்டு விளங்கும், நள்ளாற்று ஈசனே,
பூப்போன்ற மென்மேனி இளம் மகளிர் பொன்னும், மணியும் திரளாகக் சேர்த்து கடைவீதியில் உலவும் கூடல் நகரில் அமர்ந்தவாறு என் கொல் சொல்லாய்?
🔯படித்துப் பலன் பெறுங்கள்.
தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம்..... ......
🙏நன்றி🙇♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇♂️🙏🙇♂️
🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
பதிவு: 6
https://m.facebook.com/story.php?story_fbid=6015305901877950&id=100001957991710
No comments:
Post a Comment