Tuesday, August 3, 2021

வினாவுரை பதிகம் - திருநள்ளாறும், திருவாலவாயும் பதிவு - 2

வினாஉரை_பதிகங்கள் 
#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
#சம்பந்தர்அமுதம்:
💥பதிவு : 2
🙏🎪🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♀️🎪🙏
          🙆#ஆன்மீகமே_தமிழ்🙆🏼‍♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும். 
🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.                        
                    🙏🙇‍♂️நன்றி🙇‍♀️🙏🏻 
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
🔱திருஞானசம்பந்தரின்
#வினாஉரை_பதிகங்கள் அமைப்பைப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
🔱பாடல் குறிப்புக்களையும், சிறப்புகளையும் மிகச் சுருக்கமாகவே தந்துள்ளேன். 
🔱ஒவ்வொரு பதிகமும் தனித்தனியாக  உணர்ந்து சிந்தித்தால் இறை பேராற்றலும், அருளும் உண்மை பொருளும், தமிழின் கவியின் உயர் சிறப்பும் அவரவர் திறனறிவுக்கு நிச்சயம் உணரலாம். 
🔱எனவே, இப்பதிவு ஒரு அறிமுகமே. பலன் பெற அன்புடன் வேண்டுகிறேன்.
🔱வினாவுரை என்றால் என்ன?
🟩வினவுதல் வழி உரைத்தல்:
பாட்டுடைத் தலைவன் அருட்செயல்களை  பல்வேறு
கோணத்தில், கிண்டல், கேலி செய்வது போன்றும், எளிமை செய்தும் தலைவனின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டு அருளப்பட்ட பதிகங்கள்
மேலும், தலத்தின் சிறப்புடன்,  இறைவரின் சிறப்பு கோலம், பேரருட்டிரன் வெளிப்படுத்தும் பாங்கு வியப்பும், சிறப்பும் மிக்கது.

🔱இந்தத் தொடரில் நாம் சிந்திக்கவிருக்கும் பதிகம்.

🔱முதல் திருமுறை - பதிகம்:1.07.
தலம் : திருநள்ளாறும், திருவாலவாயும்
பண் : நட்டபாடை
பாடல் முதலடி : 'பாடக மெல்லடி'

🔱பதிக சிறப்பு:
மதுரையில் அனல் வாதத்தில் 'போகமார்த்த' என்னும் திருப்பதிகம் பெற்ற திருத்தலமாகிய திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை, ஆலவாயில் அமர்ந்தததை வினவும் வினா உரையாக உடையது.

'...நள்ளாறுடைய நம்பெருமான் இது என் கொல்சொல்லாய்'
என்றும்,
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
என்றும்  ஒவ்வொரு பாடலிலும் அமைத்துள்ளார்.

🔱திருநள்ளாற்று சிறப்பும்,
 ஆலவாய் சிறப்பும் கூறி நள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை நோக்கி வினவுதல் போன்ற அமைப்பு.
🔱பாடல்: 2.
திங்கள் அம் போதும் செழும்புனலும்
செஞ்சடை மாட்டுஅயல் வைத்து உகந்து

நங்கண் மகிழுநள்ளாறுடைய
நம்பெருமான் இது என்கொல் சொல்லாய்

பொங்கு இளமென் முலையார்களோடும்
புனமயில் ஆட நிலாமுளைக்கும்

அங்கழ கச்சுதை மாடக்கூடல்
ஆலவாயின்கண் அமர்ந்தவாறே.

🔱பொருள் :

திங்களையும், கங்கையையும் சடைமுடியில் தனித்து வைத்து, நம் நெஞ்சத்திலும் இருந்து மகிழும் நள்ளாற்றில் இருக்கும் இறைவரே

இளம் மகளிருடன் மயில்கள் ஆட, நிலவு எழுந்து ஒளிர, சத்சங்கங்கள் இருக்கும் மண்டபங்களும், மாளிகைகளும் நிறைந்த ஆலவாயில் அமர்ந்த விதம் சொல்லாய்! என்கிறார்.

இவ்வாறு, ஒரே பதிகத்தில், இரு தலங்களின் சிறப்பும், இறைவரின் சிறப்பும் வினாவுரையாக அமைத்து
அருளிய தமிழாகரரின் அருமை தமிழ் பாடல் சிறப்புணர்வோம்.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர் ,பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙇‍♂️🙏🙇‍♂️
முன்பதிவு :
https://m.facebook.com/story.php?story_fbid=5971460836262457&id=100001957991710

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...