Friday, August 27, 2021

வினாவுரை பதிகம்: திருநள்ளாறும், திருவாலவாயும் பதிவு : 10

#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
#சம்பந்தர்அமுதம்:
💥பதிவு : 10
🙏🎪🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♀️🎪🙏
          🙆#ஆன்மீகமே_தமிழ்🙆🏼‍♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும். 
🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.                        
                    🙏🙇‍♂️நன்றி🙇‍♀️🙏🏻 
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
🔱திருஞானசம்பந்தரின்
#வினாஉரை_பதிகங்கள் அமைப்பைப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
🔱பாடல் குறிப்புக்களையும், சிறப்புகளையும் மிகச் சுருக்கமாகவே தந்துள்ளேன். 
🔱ஒவ்வொரு பதிகமும் தனித்தனியாக  உணர்ந்து சிந்தித்தால் இறை பேராற்றலும், அருளும் உண்மை பொருளும், தமிழின் கவியின் உயர் சிறப்பும் அவரவர் திறனறிவுக்கு நிச்சயம் உணரலாம். 
🔱எனவே, இப்பதிவு ஒரு அறிமுகமே. பலன் பெற அன்புடன் வேண்டுகிறேன்.
🔱வினாவுரை என்றால் என்ன?
🟩வினவுதல் வழி உரைத்தல்:
பாட்டுடைத் தலைவன் அருட்செயல்களை  பல்வேறு
கோணத்தில், கிண்டல், கேலி செய்வது போன்றும், எளிமை செய்தும் தலைவனின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டு அருளப்பட்ட பதிகங்கள்
மேலும், தலத்தின் சிறப்புடன்,  இறைவரின் சிறப்பு கோலம், பேரருட்டிரன் வெளிப்படுத்தும் பாங்கு வியப்பும், சிறப்பும் மிக்கது.

🔱இந்தத் தொடரில் நாம் சிந்திக்கவிருக்கும் பதிகம்.

🔱முதல் திருமுறை - பதிகம்:1.07.
தலம் : திருநள்ளாறும், திருவாலவாயும்
பண் : நட்டபாடை
பாடல் முதலடி : 'பாடக மெல்லடி'

🔱பதிக சிறப்பு:
மதுரையில் அனல் வாதத்தில் 'போகமார்த்த' என்னும் திருப்பதிகம் பெற்ற திருத்தலமாகிய திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை, ஆலவாயில் அமர்ந்தததை வினவும் வினா உரையாக உடையது.

'...நள்ளாறுடைய நம்பெருமான் இது என் கொல்சொல்லாய்'
என்றும்,
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
என்றும்  ஒவ்வொரு பாடலிலும் அமைத்துள்ளார்.

🔱திருநள்ளாற்று சிறப்பும்,
 ஆலவாய் சிறப்பும் கூறி நள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை நோக்கி வினவுதல் போன்ற அமைப்பு.

🔱பாடல்:10.

'தடுக்குடைக் கையரும் சாக்கியரும்
சாதியில் நீங்கிய அத்  தவத்தர்
நடுக்குற நின்ற நள்ளாறுடைய நம்பெருமான் இது என்கொல் சொல்லாய்

எடுக்கும் விழவும் நன்னாள் விழவும் இரும்பலி இன்பினோடு எத்திசையும்
அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல்
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே'

🔱பொருள் :
ஓலையால் செய்த தடுக்கில் அமரும் சமனரும், சாக்கியரும், பழம் பெருமை நீக்கி, திரிந்து வாழுபவர்கள். அவர்கள் அதிர்ந்து போக, திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் பெருமானே, 

எல்லாத் திசைகளும் இன்பம் பெருக
திருவிழாக்கள் நடத்தி பெருமையுறும், திருவாலவாய் அமர்ந்தருளும் சிறப்பு என்ன?

🔱பொருள் சிறப்பு:
அடியவர்கள் வேண்டுதலின் பொருட்டும், மற்றும் சுபகாரிய களை மேற்கொள்ளவும் 'எடுக்கும் விழவு' எனவும், இறைவன் திருநட்சத்திரங்களில், நாள்களில் 
(திருவாதிரை, பூசம் மற்றும்  பிரதோஷம் போன்ற நாட்கள்) நடத்தும் திருவிழாக்கள் மக்களைக் காத்தலையொட்டி நடைபெறுவதால் . இரும்பலி இன்பினோடு' எனப்பட்டது. காத்தல் செய்யும் திருவிழாக்கள் இன்பம் தரவல்லது என்பதாம்.

(பொருள் : சாதியில் நீங்கிய = பாரம்பரியத்திலிருந்து மாறிய
நடுக்குற = அதிர்ச்சியுற, 
இரும்பலி இன்பினோடு = இன்பத்தின் அளவு மிகுந்த இன்பம் இரு = பெரிய  பலி = காக்கும் தன்மை   அடுக்கும் பெருமை = பெருமைகளின் திரட்சி)

🔱இவ்வாறு, ஒரே பதிகத்தில், இரு தலங்களின் சிறப்பும், இறைவரின் சிறப்பும் வினாவுரையாக அமைத்து
அருளிய தமிழாகரரின் அருமை தமிழ் பாடல் சிறப்புணர்வோம்.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர் ,பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙇‍♂️🙏🙇‍♂️
பதிவு : 9
https://m.facebook.com/story.php?story_fbid=6080766251998581&id=100001957991710

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...