Thursday, August 19, 2021

வினாவுரை பதிகம் - திருநள்ளாறும், திருவாலவாயும் - பாடல் - 8

திருஞானசம்பந்தரின்
#வினாஉரை_பதிகங்கள் அமைப்பைப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
வினாவுரை என்றால் என்ன?
🟩வினவுதல் வழி உரைத்தல்:
பாட்டுடைத் தலைவன் அருட்செயல்களை  பல்வேறு
கோணத்தில், கிண்டல், கேலி செய்வது போன்றும், எளிமை செய்தும் தலைவனின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டு அருளப்பட்ட பதிகங்கள்
மேலும், தலத்தின் சிறப்புடன்,  இறைவரின் சிறப்பு கோலம், பேரருட்டிரன் வெளிப்படுத்தும் பாங்கு வியப்பும், சிறப்பும் மிக்கது.

🔱முதல் திருமுறை - பதிகம்:1.07.
தலம் : திருநள்ளாறும், திருவாலவாயும்
பண் : நட்டபாடை
பாடல் முதலடி : 'பாடக மெல்லடி'

🔱பதிக சிறப்பு:
மதுரையில் அனல் வாதத்தில் 'போகமார்த்த' என்னும் திருப்பதிகம் பெற்ற திருத்தலமாகிய திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை, ஆலவாயில் அமர்ந்தததை வினவும் வினா உரையாக உடையது.

'...நள்ளாறுடைய நம்பெருமான் இது என் கொல்சொல்லாய்'
என்றும்,
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
என்றும்  ஒவ்வொரு பாடலிலும் அமைத்துள்ளார்.

🔱திருநள்ளாற்று சிறப்பும்,
 ஆலவாய் சிறப்பும் கூறி நள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை நோக்கி வினவுதல் போன்ற அமைப்பு.
பாடல்: 8
இலங்கை இரவணன் வெற்பெடுக்க
எழில்விரல் ஊன்றி இசை விரும்பி

நலங்கொளச் சேர்ந்த நள்ளாறுடைய
நம்பெருமான் இது என் கொல் சொலாய்.

புலன்களைச் செற்றுப் பொறியை நீக்கிப்
புந்தியிலும் நினைச் சிந்தை செய்யும்

அலங்கல் நல்லார்கள் அமரும் கூடல்
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே.

🔱பொருள் :
இரவணன், கயிலையை பெயர்த்து எடுத்த போது, அவ்வரக்கன் இசையை விரும்பி, அவனுக்கருள் செய்த பெருமாளே, நள்ளாற்றில் வீற்றிருப்பவரே,

ஐந்து புலன்களையும் அடக்கி, மனத்தினால் எந்நாளும் உன்னை சிந்தித்து மகிழும் அடியார் பெருமை பெற்ற நல்லோர்கள் அமரும் ஆலவாயின் அமர்ந்து அருள்செய்வது என் கொல்? என்றார்.
படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️

முன்பதிவு :
https://m.facebook.com/story.php?story_fbid=6028530850555455&id=100001957991710

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்பதிவு - 15.#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️11.08.2024 /குலசேகரபுரம்.18திருகுலசேகரபுரம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில்,

#KERALAYATRA2024 பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள் பதிவு - 15. #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 11.08.2024 / குலசேகரபுரம். 18 திருக...