Monday, August 9, 2021

வினாவுரை பதிகம் - திருநள்ளாறும், திருவாலவாயும் - பதிவு - 5

இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.                        
                    🙏🙇‍♂️நன்றி🙇‍♀️🙏🏻 
பதிவு: 5
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
🔱திருஞானசம்பந்தரின்
#வினாஉரை_பதிகங்கள் அமைப்பைப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
🔱பாடல் குறிப்புக்களையும், சிறப்புகளையும் மிகச் சுருக்கமாகவே தந்துள்ளேன். 
🔱ஒவ்வொரு பதிகமும் தனித்தனியாக  உணர்ந்து சிந்தித்தால் இறை பேராற்றலும், அருளும் உண்மை பொருளும், தமிழின் கவியின் உயர் சிறப்பும் அவரவர் திறனறிவுக்கு நிச்சயம் உணரலாம். 
🔱எனவே, இப்பதிவு ஒரு அறிமுகமே. பலன் பெற அன்புடன் வேண்டுகிறேன்.
🔱வினாவுரை என்றால் என்ன?
🟩வினவுதல் வழி உரைத்தல்:
பாட்டுடைத் தலைவன் அருட்செயல்களை  பல்வேறு
கோணத்தில், கிண்டல், கேலி செய்வது போன்றும், எளிமை செய்தும் தலைவனின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டு அருளப்பட்ட பதிகங்கள்
மேலும், தலத்தின் சிறப்புடன்,  இறைவரின் சிறப்பு கோலம், பேரருட்டிரன் வெளிப்படுத்தும் பாங்கு வியப்பும், சிறப்பும் மிக்கது.

🔱இந்தத் தொடரில் நாம் சிந்திக்கவிருக்கும் பதிகம்.

🔱முதல் திருமுறை - பதிகம்:1.07.
தலம் : திருநள்ளாறும், திருவாலவாயும்
பண் : நட்டபாடை
பாடல் முதலடி : 'பாடக மெல்லடி'

🔱பதிக சிறப்பு:
மதுரையில் அனல் வாதத்தில் 'போகமார்த்த' என்னும் திருப்பதிகம் பெற்ற திருத்தலமாகிய திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை, ஆலவாயில் அமர்ந்தததை வினவும் வினா உரையாக உடையது.

'...நள்ளாறுடைய நம்பெருமான் இது என் கொல்சொல்லாய்'
என்றும்,
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
என்றும்  ஒவ்வொரு பாடலிலும் அமைத்துள்ளார்.

🔱திருநள்ளாற்று சிறப்பும்,
 ஆலவாய் சிறப்பும் கூறி நள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை நோக்கி வினவுதல் போன்ற அமைப்பு.
💚
பாடல்:5.
செம்பொன்செய் மாலையும் வாசிகையும்
திருந்து புகையும் அவியும் பாட்டும்

நம்பும் பெருமை நள்ளாறுடைய
நம்பெருமான் இது என் கொல் சொல்லாய்!

உம்பரும் நாதர் உலகம் தானும்
ஒலி கடல் சூழ்ந்த உலகத்தோரும்

அம்புத நால்களால் நீடும் கூடல்
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே.

🔱பொருள் :
பொன்மாலை அலங்காரம், வாசிகை எனும் திருவொலி,  மணம் வீசும் அகிற்புகை, நைவேத்தியம், இசை, பாட்டு என்று பக்தர்கள் வழிபடும், சிறப்புடைய நள்ளாற்று பெருமானே,

தேவரும், நாகரும், கடல்சூழ் உலகத்தாரும் போற்ற 
குளிர் மேகங்கள் நிறைந்த நான் மாடக்கூடல் அமர்ந்த சிறப்பு என்ன?
என்கிறர்.
படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙇‍♂️🙏🙇‍♂️
முன் பதிவு : 4
https://m.facebook.com/story.php?story_fbid=6002020843206456&id=100001957991710

No comments:

Post a Comment

கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - (குலசேகரமுடையார்) - பிரதோஷக்குழு யாத்ரா 17.8.2025

#கல்லிடைக்குறிச்சி -  குலசேகரமுடையார் ஆலயம் 17.8.25 #கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - குலசேகரமுடையார் அம்பாள் = தர்மசவர்த்தினி (அறம...