#வினாஉரை_பதிகங்கள்
#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
#சம்பந்தர்அமுதம்:
💥பதிவு :
🙏🎪🙇♂️அன்பு வேண்டுகோள்:🙇♀️🎪🙏
🙆#ஆன்மீகமே_தமிழ்🙆🏼♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.
🙏🙇♂️நன்றி🙇♀️🙏🏻
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
🔱திருஞானசம்பந்தரின்
#வினாஉரை_பதிகங்கள் அமைப்பைப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
🔱பாடல் குறிப்புக்களையும், சிறப்புகளையும் மிகச் சுருக்கமாகவே தந்துள்ளேன்.
🔱ஒவ்வொரு பதிகமும் தனித்தனியாக உணர்ந்து சிந்தித்தால் இறை பேராற்றலும், அருளும் உண்மை பொருளும், தமிழின் கவியின் உயர் சிறப்பும் அவரவர் திறனறிவுக்கு நிச்சயம் உணரலாம்.
🔱எனவே, இப்பதிவு ஒரு அறிமுகமே. பலன் பெற அன்புடன் வேண்டுகிறேன்.
🔱வினாவுரை என்றால் என்ன?
🟩வினவுதல் வழி உரைத்தல்:
பாட்டுடைத் தலைவன் அருட்செயல்களை பல்வேறு
கோணத்தில், கிண்டல், கேலி செய்வது போன்றும், எளிமை செய்தும் தலைவனின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டு அருளப்பட்ட பதிகங்கள்
மேலும், தலத்தின் சிறப்புடன், இறைவரின் சிறப்பு கோலம், பேரருட்டிரன் வெளிப்படுத்தும் பாங்கு வியப்பும், சிறப்பும் மிக்கது.
🔱இந்தத் தொடரில் நாம் சிந்திக்கவிருக்கும் பதிகம்.
🔱முதல் திருமுறை - பதிகம்:1.07.
தலம் : திருநள்ளாறும், திருவாலவாயும்
பண் : நட்டபாடை
பாடல் முதலடி : 'பாடக மெல்லடி'
🔱பதிக சிறப்பு:
மதுரையில் அனல் வாதத்தில் 'போகமார்த்த' என்னும் திருப்பதிகம் பெற்ற திருத்தலமாகிய திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை, ஆலவாயில் அமர்ந்தததை வினவும் வினா உரையாக உடையது.
'...நள்ளாறுடைய நம்பெருமான் இது என் கொல்சொல்லாய்'
என்றும்,
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
என்றும் ஒவ்வொரு பாடலிலும் அமைத்துள்ளார்.
🔱திருநள்ளாற்று சிறப்பும்,
ஆலவாய் சிறப்பும் கூறி நள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை நோக்கி வினவுதல் போன்ற அமைப்பு.
💚
பாடல் : 11
அன்புடை யானை அரனைக் கூடல்
ஆலவாய் மேவியது என் கொல் என்று
நன்பொனை நாதனை நள்ளாற்றானை
நயம் பெறப் போற்றி நலம் குலாவும்
பொன்புடை சூழ்தரு மாடக் காழிப்
பூசுரன் ஞானசம்பந்தன் சொன்ன
இன்புடைப் பாடல்கள் பத்தும் வல்லார்
இமையவர் ஏத்த இருப்பர் தாமே.
🔱பொருள் :
அன்பு கொண்ட அரணைக் கூடல் ஆலவாய் மேவியது என் கொல் என்று திருநள்ளாற்றுப் பதியில் வீற்றிருக்கும் தலைவனை,
விருப்பத்தினால், காழியின் ஞானசந்தப் பெருமான் மொழிந்த இன்பம் பெருகும் பாடல்களை ஏற்றுப் பாடிட, தேவர்கள் போற்றுவார்கள் என்று திருக்கடைக்காப்பில் அருளினார்.
🛐தலச்சிறப்பு :
திருநள்ளாறு:
காவிரி தென்கரை தலம்.
சப்தவிடங்களில் ஒன்று.
சுவாமி : தர்பாரண்யேஸ்வரர்,
நள்ளாற்று ஈசர்.
அம்பிகை: போக மார்த்த பூண்முலையாள்.
தல மரம்: தருப்பை
தீர்த்தம் : நளதீர்த்தம்.
🟩ஞானசம்பந்தர் அனல் வாதத்தில்," போகமார்த்த பூண்முலையாள் " என்றெழுதியிட்ட பதிகம் அனலில் அழியாது, மீண்டதால், பச்சைப் பதிகம் என்று சிறப்பிக்கப்பட்ட பதிகம் இத்தலத்திற்குரியது
(பதிகம் எண் 1.49)
🟪நளச்சக்கரவர்த்தி இத்தலத்தில் வந்து ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரை தரிசிக்க, சனிக்கிரகத்தின் இடர் நீங்கிற்று.
🟩ஸ்ரீ சனிபகவான் இவ்வாலய இறைவரின் கோபுரத்தின் இடதுபுறம், அம்மன் ஆலயத்திற்கு முன்புறமாக இருந்து அருள் தருகிற கோல அமைப்பு.
🔆திரு ஆலவாய் :
சுவாமி : சோமசுந்தரக் கடவுள், சொக்கநாதர்.
அம்பிகை: மீனாட்சி
தலமரம்: கடம்ப மரம்
தீர்த்தம்: பொற்றாமரைத் தீர்த்தம்
🔺பாண்டிய நாட்டுத் தலம்
மதுரை என்பது தடாதகைப் பிராட்டியார் (மீனாட்சி அம்மை)
திருவவதாரம் செய்து பாண்டிய நாட்டை ஆண்டு ஈசனைத் திருமணம் செய்து கொண்ட திருத்தலம்.
♦️ஈசன் செளந்தர பாண்டியனாக வீற்றிருந்து அரசு புரிந்தார்.
💜ஐந்து சபைகளுள் இது வெள்ளிச் சபையுடையது. வெள்ளியம்பலம் எனப்படுகிறது.
💚இறைவன் கால் மாறி ஆடியதலம்.
♾️சிவபெருமான் அறுபத்துநான்கு திருவிளையாடல்கள் புரிந்த இடம். மூன்றாம் (கடை) தமிழ்ச் சங்கம் இருந்த பதி. புலவர்களில் ஈசனும் ஒருவனாய் இருந்து தமிழ் ஆய்ந்த, சங்கத் தமிழ் கண்ட பதி.
💙திருஞானசம்பந்தர் அனல்வாதம் புனல்வாதம் புரிந்து இப்பதியில் சமணர்களை வென்றார்.
❤️கூன்பாண்டியனுடைய வெப்புநோய் திருஞானசம்பந்தரால் தீர்க்கப்பட்ட இடம் இதுவே. பின் அப்பாண்டிய மன்னன் நின்ற சீர் நெடுமாறனாய், கூன் முதுகு சீராகிய சிறப்பு உண்டு.
💚ஆலவாய், கூடல், கடம்பவனம், பூலோக கயிலாயம் என்றும் இவ்வூரைக் குறிப்பிடுவார்கள்.
🔱இவ்வாறு, ஒரே பதிகத்தில், இரு தலங்களின் சிறப்பும், இறைவரின் சிறப்பும் வினாவுரையாக அமைத்து
அருளிய தமிழாகரரின் அருமை தமிழ் பாடல் சிறப்புணர்வோம்.
🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.
☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது.
பருக விரும்புவோர் ,பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.
🔯படித்துப் பலன் பெறுங்கள்.
தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம்..... ......
🙏நன்றி🙇♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
முன்பதிவு : 10
https://m.facebook.com/story.php?story_fbid=6101769073231632&id=100001957991710