சம்பந்தர்அமுதம் - மூப்பின் வலி
🛐🏔️🏰⛺🙏🏻🙇♂️🙆♂️🙆♀️🙇🏻♀️🙏🏔️🏰🗻⛺🛐
🚶இளையோர் ஏற்க,
👵முதியோர் உணர:
🛌மூப்பு எய்தி உடல் சோர்வுற்றிருக்குங்காலை
⛺திருக்கோயிலுக்குச் செல்வதும்,
🗣️திருநாமங்களைச் சொல்வதும்,
👂செவிமடுப்பதும்,
🙆♂️தரிசித்து மகிழ்வதும்,
😖இடர்பாடு உண்டாதலை உணர்த்தி சரியை வழிபாட்டு நிலை
🚶இளமைக் காலத்தில் வலியுறுத்திய பாடல்:
🛐🙏🏼🙇♂️🙆♀️🙆♂️🙇♀️🙏🏻🛐
🕉️ஞானசம்பந்தர் அருளியது.
"பல் நீர்மை குன்றிச் செவி கேட்பிலா
படர் நோக்கில் கண் பவளந் நிற
நல்நீர்மை குன்றித் திரை தோலொடு
நரை தோன்றும் கால நமக்காதன் முன்
பொன் நீர்மை துன்றப் புறந்தோன்று நற்
புனல்பொதிந்த புன்சடையினான் உறையும்
தொல் நீர்க் கடந்தைத் தடங்கோயில் சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே.
(639)
-முதல் திருமுறை
59 - திருத்தூங்கானை மாடம் (திருப்பெண்ணாகடம்)
பாடல் 6.
🛐🙏🏼🙇♂️🙆♀️🙆♂️🙇♀️🙏🏻🛐
☸️பொருள் :
♿பலவிதமான சிறப்புக்கள் குறைவுபடத் தோன்றுமாறு
👂செவிகளின் கேட்கும் திறம் குறையவும்,
👁️கண்கள் மங்கிப் பார்க்கும் திறன் தளர்ச்சி கொண்டும்,
🛌உடல் வலிமை குன்ற
👴 நரையும்,
👓👀திரையும் தோன்றவும்,
ஆகிய யாவும் மூப்பின் வலிமையல் நிகழ்கின்றது.
🙆♀️இந்நிலைக்கு ஆளாகும் முன் 🏔️பொன் மயமாய்ப் பொருந்தி காட்சி நல்கும்,
🗻கங்கை தரித்த சடையை உடையவனாகிய ஈசன் உறையும்,
🏞️நீர்மல்கு கடந்தை நகரில்
⛺தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் சார்ந்து தொழுமின்கள்.🙇♂️🙆♀️
🛐🏔️🏰⛺🙏🏻🙇♂️🙆♂️🙆♀️🙇🏻♀️🙏🏔️🏰🗻⛺🛐
முதியோர் தின வாழ்த்துக்கள்:
(01.10.2020)
🛐🙏🏼🙇♂️🙆♀️🙆♂️🙇♀️🙏🏻🛐
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🛐🏔️🏰⛺🙏🏻🙇♂️🙆♂️🙆♀️🙇🏻♀️🙏🏔️🏰🗻⛺🛐
No comments:
Post a Comment