#திருமுறைகளில்தமிழமுதம்:
பதிவு : ஒன்று.
🙏🎪🙇♂️அன்பு வேண்டுகோள்:🙇♀️🎪🙏
🙆ஆன்மீகமே தமிழ்🙆🏼♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.
🙏🙇♂️நன்றி🙇♀️🙏🏻
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
#சைவத்திருமுறைகள்:
🔱கி.பி. 300 முதல் கி.பி. 600 வரையில் சைவசமயம் பல்லவர், சோழர் காலத்தில் கோலோய்ச்சியது. இந்தக் காலகட்டத்தில் இறையருள் பெற்ற ஞானிகளான அப்பரும், சம்பந்தரும் தோன்றி சைவ சமயம் பரவ வழி செய்தார்கள்.
💥#பிறமத_செருக்கு_நீக்கம்:
🔱 இவர்களின் வருகைக்கு முன்புவரை, பிற மதங்கள் குறிப்பாக சாக்கியம், சமணம் போன்ற இறையுணர்வை மறுத்தும், வேறுபட்ட கொள்கைகளையும் கொண்ட, பிற மத ஆதிக்க கலாச்சார பண்புகள் பரவி, சீர்கேடுகள் நிறைந்தும் இருந்து வந்தன. இதனால் நமது பாரம்பரிய தமிழ் கலாச்சாரங்களும், சைவ இறை நம்பிக்கைகளும் பக்தியும் உயர் பண்புகளும் கெட்டு தமிழகம் ஒரு பிற்போக்கான சூழலில் அமைந்திருந்தது.
🎪பிற மதங்களின் பொய்யுரைகளும், போலி வாதங்களையும் கேட்டு அதற்கு கட்டுண்டு கிடந்த மன்னர்களின் அறிவற்ற அரச நெறிகளையும் நமது பாரம்பரிய தமிழரின் கலாச்சாரங்களும் பண்பாடுகளும் சிதைந்து இருந்ததை மீட்டு சீர்திருத்தியவர்கள் தேவார ஆசிரியர்களே.
#தமிழ்வேத_மந்திரங்கள்:
📚தேவார ஆசிரியர்கள் நம் ஒப்பற்ற தெய்வத் தமிழ்ப் பதிகங்கள் பல இயற்றி, பிறமத ஆதிக்கங்களை வெளிப்படையாக எதிர்த்து, அவர்தம் மதச் செருக்கு அடக்கி, மக்களுக்கு அற்புதங்கள் பல நிகழ்த்தி சைவத் திருவருட் செயலாக்கத்தின் மேன்மையை, உலகத்தாருக்கு அழகு தமிழில் புதிய பண், பாடல் வகையில், இசை அமைப்பில் பதிகங்கள் இயற்றி பாடிஉணர்த்தி சைவை சமயத்தை அமுதத் தமிழால் போற்றியவர்கள்.
❄️எனினும், காலச்சூழலில், இந்த சைவத் திருமுறைகள் தமிழ் வேத மந்திர நூல்களாகவே எண்ணி பாதுகாத்து, மறைத்து வைக்கப்பட்டு விட்டது.
🗃️#திருமுறைபொக்கிஷம்:
📦இராஜ இராஜ சோழர் காலத்தில், உண்மை உணர்ந்து, இந்த தமிழ் திருமுறைகளை மீட்டெடுக்கப்பட்டது. இறையருள் பெற்ற சைவத் தமிழ் பொக்கிஷமாகப் போற்றப்பட்டது. மேலும் இதன் சிறப்புகளை பெருமைகளை கருதி இது போன்று ஏராளமான இறை அருளாளர்களின் சைவத் தமிழ் பாடல்கள் அனைத்தும் தொகுத்து பன்னிரு திருமுறைகளாக வகுத்து, பாதுகாத்து, சிறப்பு செய்து, தமிழ் பரவ, தமிழர் பண்பாடு, கலாச்சாரம் மிகவும் சிறப்புற, அனைத்து ஆலய வழிபாடுகளிலும் தமிழ் வேதத் திருமுறைகள் ஓதப்பட்டு, தமிழகம், பக்தி இலக்கிய காலமாய் திகழ்ந்து, தமிழகம் ஒரு பொற் காலமாக விளங்கிற்று. இதுவே, வரலாற்று உண்மை.
#தமிழ்அமுதமறைகள்:
💥திருமுறைகள் மூலம், தமிழின் ஒப்பற்ற உயர்வை, இலக்கண, இலக்கிய, இசை நுணுக்க சிறப்புகளை, தமிழனின் கலாச்சார செருக்கை, பண்பாடுகளின் சிறப்பை வெளிப்படுத்தி, இழந்த தமிழரின் பெருமையை, பக்தியுடன் கூடிய நல்ல பண்பாட்டை, நம் நல்லத் தமிழ் இறை அருளாலர்கள், இறையருள் நம்பிக்கைக் கொண்டு மீட்டு வளர்த்தார்கள், என்றால் அது மிகையாகாது.
📚இன்றும், இந்த சைவத்தமிழமுத திருமுறைப் பாடல்கள் அனைத்தையும் முறையாகப் பரவ வழிசெய்து, போற்றி வழிபாடு செய்யப்படும் அளவில், தமிழகமும், தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும், மேம்பாடும், மேலும், மேலும் வளரும்; என்பது வரலாற்றின் மூலம் நிறுபிக்கப்பட்ட உண்மையாகும்.
🙏🏻🙆♀️⚛️❄️✡️🙇♂️🔱🕉️🔱🙇♀️✡️❄️⚛️🙆🏻♂️🙏🏻
மூல நூல்கள்:
***(34. திருஞானசம்பந்த நாயனார் புராணம்.
6. வம்பறா வரிவண்டுச் சருக்கம்.
இரண்டாம் காண்டம்)
திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம்**
*1.சமயக்குரவர் நால்வர் வரலாறு
- பேராசிரியர் கா.சுப்ரமணியம் பிள்ளை
**2. திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் -
பேராசிரியர் புலவர் அ. மாணிக்கம் - உரையாசிரியர்.
மேலும், பல்வேறு வலைதளத்தில் கிடைக்கப்பெற்ற ஒப்பற்ற பல பேராசிரியர்கள் நூல்கள், கட்டுரைகளிலிருந்தும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு வழங்கப்பெறுகிறது.
🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.
🙏நன்றி🙇♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்🙇♂️🙏🙇♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
No comments:
Post a Comment