#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
🙏🏻🙆♀️⚛️❄️🙇♂️🔱🕉️🔱🙇♀️❄️⚛️🙆🏻♂️🙏🏻
#சம்பந்தர்அமுதம்:
💥பதிவு : மூன்று
🙏🙇♂️அன்பு வேண்டுகோள்:🙇♀️🙏
🙆ஆன்மீகமே தமிழ்🙆🏼♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.
🙏🙇♂️நன்றி🙇♀️🙏🏻
🛐🙏🎪🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
🌈#அமுதப்பதிகங்கள்
#அமைப்புச்சிறப்புகள்
🔯திருஞானசம்பந்தரின் பதிக அமைப்பு முறை பற்றிய பொதுவான சில குறிப்புகள்:
🔱திருஞானசம்பந்தர் தம் திருப்பதிகப் பாடல்களில் ஒரு பக்கம் இறையருளின்அருட்செயல்பாடுகளை,அற்புதங்களை உணர்த்தியவர்; மறுபுறம்,
தமிழ் இலக்கியத்திற்கு பல்வேறு புதுமைகளையும் சிறப்புகளையும் கொண்ட புதுமையான பாடல்கள் அமைப்பையும் முதன்முதலில் கொண்டுவந்தார் என்பதும் வரலாறு.
திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய பாடல்களில் தற்காலத்தில் நமக்குக் கிடைக்கப் பெற்றது 4146 பாடல்கள் மட்டுமே.
இவை 226 தலங்கள் பற்றியருளியது.
மொத்தம் 386 பதிகங்கள்.
ஒரு பதிகத்தில் 10, அல்லது 11 அல்லது 12 பாடல்கள் அமையப்பெற்றிருக்கின்றன.
23 பண்களில் அமைக்கப் பெற்றுள்ளது.
🙏🛐🙆♀️⛺🏔️🎎⛰️🕉️🙇♀️🔱🙆🏻♂️🛐🙏
📚
#பாடல்_பொருள்_அமைப்பு:
📚தமிழ் ஞானசம்பந்தர் தம் பதிகங்களில்பெரும்பாலும் 10 முதல் 12 பாடல்களை கொண்டு ஒவ்வொரு பதிகமும் அமைந்துள்ளார் என்று அறிந்தோம்.
அதில் ஏழாவது பாடல்களில் பதியின் சிறப்பு, தல சிறப்பும் பெருமையைக் கூறியும்,
ஏழு அல்லதுபத்தாவது பாடல்களில் பிற மதங்களில் குறிப்பாக சாக்கிய, சமன, மதங்களின் இழிந்தக் கொள்கை, சைவத் தமிழர் வாழ்விற்கு ஏற்க முடியாத அவர்தம் பண்பாடுகள் பற்றியது.
அவர் தம் மதச் செருக்கை அடக்கியது குறித்தது.
எட்டாவது பாடலில் இறைவன் இராவணை ஆணவத்தை அடக்கி அருள் புரிந்தது பற்றியும்;
ஒன்பதாவது பாடலில் நான்முகன் மற்றும் திருமாலின் சிவ பக்தியையும்; அவர்கள் சிவன் அடி முடி தேடியதும்,
பத்தாவது அல்லது பதினொன்றாம் பாடல்களில், அல்லது பதிகத்தின் கடைசி பாடலில் பதிக பயன் பொருளும் அருளும் கொண்டு அமைத்துள்ளார்.
சம்பந்தர் தம் ஒவ்வொரு பதிகத்தின் கடைசிப் பாடலை #திருக்கடைக்காப்பு என்று சிறப்பிக்கப்பட்ட பாடலாகக் கொள்வர் அறிஞர்கள்.
🙆♂️🙇♀️🔱🔯✡️⚛️🕉️🔱⚛️✡️🔱🙇♂️🙆♀️
#திருக்கடைக்காப்பு:
ஒவ்வொரு பதிகத்திலும்,
பத்தாவது அல்லது பதினொன்றாம் பாடல்களில், அல்லது பதிகத்தின் கடைசி பாடலில்
பதிக அமைப்பு,
பாடல் பயன் பொருளும்
சிவஅருள் பெறும் முறையும்
கொண்டு, அமைத்திருப்பது மிகச்சிறப்பு.
#திருக்கடைக்காப்பு பாடலாக
"கடவுள் வழிபாட்டின் பயனைத் தமது அனுபவத்தின் வைத்து ஆசிரியர் செவ்விதினுரைத்தார்''*
'ஒவ்வொரு பதிகத்தின் இறுதிப் பாட்டின்கண் சம்பந்தப்பெருமான் தமது திருப்பெயரை நிறுவியது, காரணம்:
'ஒரு திருப்பதிகத்தையேனுங் கற்பார்க்குந் தமது சிவானுபவப் பயனை நன்கு அறிவுறுத்தக் கருதிய பெருங் கருணையே அன்றி தம்புகழ் விளக்கவன்றும் இறைவர் புகழை ஞால முழுதும் விளக்கக் கருதியே அருளினார்.'
என்பதும்,
'இதனைத் தற்புகழ்ச்சியாகக் கூறுவோர் தமது அறியாமையைப் புலப்படுத்தியவராவர்'. என்பதும் அறிஞர்கள் முடிவு.
மேலும்,
'யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்பதால் ஊர்தோறுஞ் சென்று திருப்பதிகமருளிச் செய்தமையால் ஒவ்வொரு திருப்பதிகத்தையே கற்றவர்க்கும் உண்மை விளங்குதற் பொருட்டு ஒவ்வோர் பதிகத்துஞ் சித்தாந்தப் பொருளையுந் தமது அனுபவப் பயனையும் அறிவுறுத்தினார்",
🙆♂️🙇♀️🔱🔯✡️⚛️🕉️🔱⚛️✡️🔱🙇♂️🙆♀️
🕉️
#சைவசித்தாந்தப்பொருளுணர்வு :
சம்பந்தர் பதிகங்கள் ஞான அருள் தரும் சைவசித்தாந்தத்தின் அங்கமாக, பொருள்கள் நுண்ணுணர்வாக உணர்த்தப் பெற்றுள்ளது என்று ஞான ஆசிரியர்கள் கணிப்பு.
'சித்தாந்த சிவஞானபோதத்தில் பெறப்படும்
1. பிரமாணவியல்
2. இலக்கணவியல்
3. சாதனவியல்
4. பயனியல்
என்ற நான்கியற் பொருள்களும் உணர்த்தப்பட்டுள்ளது'
என்பார் தமிழியல் ஆராய்ச்சியாளரும், சட்ட நூற் புலமையும் பெற்றவருமான பேராசிரியர்
திரு.கா. சுப்பிரமணியம் பிள்ளை அவர்கள்.
💥🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆💥
🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.
🙏நன்றி🙇♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🎪🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்🙇♂️🙏🙇♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🎪🛐
பதிவு : ஒன்று:
https://m.facebook.com/story.php?story_fbid=4497008673707688&id=100001957991710
பதிவு : இரண்டு :
https://m.facebook.com/story.php?story_fbid=4525547420853813&id=100001957991710
No comments:
Post a Comment